PDA

View Full Version : கால இயந்திரம்!!!



தாமரை
22-08-2009, 04:26 AM
பரஞ்சோதி கேட்ட கேள்வி...

கால இயந்திரம் உங்க கிட்ட இருந்தா எங்க போவீங்க என்ன செய்வீங்க?


அதுக்கு இந்தப் பதிலை அங்கயே போடலாம்னு இருந்தேன்.. ஆனால் இது மக்களை துள்ளலுக்கு உண்டாக்குகிற கேள்வி என்பதால்...

இங்க போடறேன்..

தனியா எந்தக் காலத்துக்குப் போகவும் யாருக்கும் பிடிக்காது..

ஒருத்தரை தவிர.. தாமரை.. இவர் இருந்தாதான் ஆச்சு இல்லைன்னா போச்சு என்ற எண்ணம் எனக்குக் கிடையவே கிடையாது,.. அதான் எங்க அப்பா அம்மா கஷ்டப்பட்ட காலத்திற்கு போகலை.. மனசை குறுக்கிக்க விரும்பலை. நிறைய இருக்கு,.. எதைச் செய்யணும் எனத் தேர்வு செய்வதில் அவரவர் மனசுக்கேற்ப செயல்படலாம்.. வேணும்னா இப்ப இருக்கிற தங்கம் வைரம் எல்லாத்தையும் மூட்டை கட்டிக் கொண்டுபோய் அம்மாவுக்குக் கொடுத்திட்டு போயிடலாம்னு இருக்கேன். :D :D :D:rolleyes::rolleyes::rolleyes:

அதனால் முதல்ல கால இயந்திரம் கிடைச்ச உடனே :auto003: அதை வச்சு கொஞ்சம் வருங்காலத்துக்குப் போய் அதைப் பெரிசா செஞ்சுகிட்டு..

பூத்துக்குலுங்கிய அந்த மன்ற காலத்துக்கு வந்து எல்லோரையும் ஏத்திகிட்டு காலங்களைச் செலக்ட் பண்ணிகிட்டு எல்லோரையும் அழைச்சிகிட்டுப் போய் கலக்கலாம் என்று இருக்கேன்..

கால இயந்திரம் ரெடி... யார் யார் எங்கெங்க போலாம் என்ன செய்யலாம்னு சொல்லுங்களேன். :music-smiley-009:

ரெடி ஜூட்..:icon_b:

ஓவியன்
22-08-2009, 04:31 AM
ஹா, ஒன்றா இரண்டா...??
எல்லாம் சொல்லவே ஒரு நாள்தான் போதுமா..?? :D:D:D

அக்னி
22-08-2009, 06:03 AM
அப்போ.., முதல்ல... காலம் செய்யும் இயந்திரத்துக்கிட்ட சொல்லி,
ஓவியனுக்குக் கொஞ்சக் (:liebe028:) காலம் வாங்கிக் கொடுங்க...

ஓவியன்
22-08-2009, 06:05 AM
அப்போ.., முதல்ல... காலம் செய்யும் இயந்திரத்துக்கிட்ட சொல்லி,
ஓவியனுக்குக் கொஞ்சக் (:liebe028:) காலம் வாங்கிக் கொடுங்க...

யோவ், உம்மோட பதிவாலே இந்த திரி பண்பட்டவர் பகுதிக்குப் போகப் போவுது..!!:rolleyes:

அக்னி
22-08-2009, 06:14 AM
யோவ், உம்மோட பதிவாலே இந்த திரி பண்பட்டவர் பகுதிக்குப் போகப் போவுது..!!:rolleyes:
ஏன்... ஏன்... ஏன்... :confused:

:eek:

அட... யாரது என்னோட பதிவுக்கு நடுவில ஸ்மைலி போட்டது... :confused:
அறிஞரே கண்டுபிடிச்சுச் சொல்லுங்கோ...

ஓவியன்
22-08-2009, 06:30 AM
அட... யாரது என்னோட பதிவுக்கு நடுவில ஸ்மைலி போட்டது... :confused:
அறிஞரே கண்டுபிடிச்சுச் சொல்லுங்கோ...

அமரனாகத்தானிருக்கும்.!! :aetsch013:

அமரன்
22-08-2009, 08:47 AM
அமரனாகத்தானிருக்கும்.!! :aetsch013:
ப்ஆவி...

அக்னி
22-08-2009, 09:25 AM
ப்ஆவி...
அப்போ அமரனேதான்... :cool:

ஓவியன்
22-08-2009, 09:40 AM
அப்போ அமரனேதான்... :cool:

:lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001:

___________________________________________________________________________________

நாங்க இங்கே அடிக்கிற கும்மாளத்துக்கு செல்வண்ணா தடியுடன் தான் வரப் போறார்...!!:cool:

அன்புரசிகன்
22-08-2009, 10:22 AM
கால இயந்திரம் ரெடி... யார் யார் எங்கெங்க போலாம் என்ன செய்யலாம்னு சொல்லுங்களேன். :music-smiley-009:


யாழ்ப்பாணம் போகவேணும். மீண்டும் அமிதக பாடசாலையில் ஆண்டு 1 லிருந்து படிக்கவேண்டும்... இந்தமுறை கஷ்டப்பட்டாவது புலமைப்பரிசில் பரீட்சையில் (ஆண்டு 5) சித்தியடைந்திடவேண்டும். :D

(எங்கும் போகலாம். யாழ்ப்பாணம் போறத்துக்கான வீசா கொழும்பிலிருந்து எடுக்கிறது ரொம்ப கடினமாக இருக்கிறது.:lachen001:)

பரஞ்சோதி
22-08-2009, 10:54 AM
ஆஹா!

நான் என்ன எதிர்பார்த்தேனோ அதை நீங்க செய்தீங்க தாமரை.

நீங்க தொடங்கலைன்னா, நானே கேட்க நினைச்சேன்.

எனக்காக இல்லாவிட்டாலும் என் அன்னைக்காக, என் தந்தையார் விபத்தில் இறக்கும் கணத்தில் சென்று காப்பாற்ற...

தாமரை
22-08-2009, 11:31 AM
அடப்பாவிகளா!!... கண்ணை நல்லா துடைச்சிகிட்டுப் படிங்கப்பா.. இது கால் டாக்ஸி இல்லை.. கால இயந்திரம்.. எல்லோரும் ஒண்ணா ஒரு டூர் போகலாம்னா அவனவன் பிக்கம் டிராப் சர்வீஸ் கேட்கறதிலியே இருக்கறீங்களே!!!

கவலைப் படாதீங்க பரம்ஸ் போற வழியில நீங்க சொன்ன வேலையையும் செஞ்சிருவோம்...

ஓவியன்
22-08-2009, 11:44 AM
எனக்கு ஒரு ஜன்னலோர சீட் செல்வண்ணா, அப்போதான் என்னென்ன நடக்குதுனு பார்த்துட்டே வரலாம்.... :)

மஞ்சுபாஷிணி
22-08-2009, 06:31 PM
ஆஹா!

நான் என்ன எதிர்பார்த்தேனோ அதை நீங்க செய்தீங்க தாமரை.

நீங்க தொடங்கலைன்னா, நானே கேட்க நினைச்சேன்.

எனக்காக இல்லாவிட்டாலும் என் அன்னைக்காக, என் தந்தையார் விபத்தில் இறக்கும் கணத்தில் சென்று காப்பாற்ற...

நெகிழ வைத்த வரிகள் பரஞ்சோதி...

பரஞ்சோதி
22-08-2009, 06:48 PM
நன்றி அக்கா.

வேற ஏதாச்சும் சொல்லியிருந்தால், முதுகில் நீங்க டின் கட்டியிருப்பீங்கன்னு எனக்கு தெரியும்.

அதான் கிளியோபாட்ரா, மர்லின் மன்றோ எல்லோரையும் மறந்துட்டேன், மறைச்சிட்டேன்.

பரஞ்சோதி
22-08-2009, 06:51 PM
அடப்பாவிகளா!!... கண்ணை நல்லா துடைச்சிகிட்டுப் படிங்கப்பா.. இது கால் டாக்ஸி இல்லை.. கால இயந்திரம்.. எல்லோரும் ஒண்ணா ஒரு டூர் போகலாம்னா அவனவன் பிக்கம் டிராப் சர்வீஸ் கேட்கறதிலியே இருக்கறீங்களே!!!

கவலைப் படாதீங்க பரம்ஸ் போற வழியில நீங்க சொன்ன வேலையையும் செஞ்சிருவோம்...

நன்றி தல,

நாம வேண்டும் என்றால் ஆதாம் ஏவாள் காலம் போய், அவங்க ஆப்பிள் சாப்பிடுவதை தடுக்கலாமா?

- இங்கிலிஸ்காரன் படத்தில் வடிவேலுக்கு ஐடியா கொடுக்கும் ஐடியாசாமி

மஞ்சுபாஷிணி
22-08-2009, 06:53 PM
ஹை இது கூட நல்லா இருக்கே..... :)

கலைவேந்தன்
22-08-2009, 08:07 PM
நான் அந்த பாரதியின் அகால மரணக்காலத்துக்குப் போகவேண்டும். அந்த மகாகவியின் மரணத்தைத் தடுக்கவேண்டும். இன்னும் பல எழுச்சிப்பாடல்கள் தமிழுக்குக்கிடைக்கச் செய்யவேண்டும்.

வரும் வழியில் சில்க் ஸ்மிதாவின் மரணத்தையும் தடுக்கவேண்டும். தவறாகப்ப்புரிந்துகொள்ளப்ப்பட்ட ஓர் அப்பாவி ஜீவனைககாக்கவேண்டும்.

அக்னி
22-08-2009, 10:29 PM
:icon_clap::icon_clap::icon_clap:

வரும் வழியில் சில்க் ஸ்மிதாவின் மரணத்தையும் தடுக்கவேண்டும்.
:icon_shades:
:sprachlos020: :sprachlos020: :sprachlos020: பார்ரா...

தவறாகப்ப்புரிந்துகொள்ளப்ப்பட்ட ஓர் அப்பாவி ஜீவனைககாக்கவேண்டும்.
நான் நம்பிட்டேன்... :rolleyes:
எல்லாரும் நம்பிடுங்க... :cool:

அன்புரசிகன்
22-08-2009, 11:35 PM
அடப்பாவிகளா!!... கண்ணை நல்லா துடைச்சிகிட்டுப் படிங்கப்பா.. இது கால் டாக்ஸி இல்லை.. கால இயந்திரம்.. எல்லோரும் ஒண்ணா ஒரு டூர் போகலாம்னா அவனவன் பிக்கம் டிராப் சர்வீஸ் கேட்கறதிலியே இருக்கறீங்களே!!!


என்னைச்சொல்றீங்களா...??? :icon_rollout:
(யாழ்ப்பாணம் செல்லவேண்டும் என்பதன் அர்த்தம் அங்கிருந்த காலத்திற்கு செல்லவேண்டும் என்று நினைத்து பதிந்தேன் :lachen001:)

பரஞ்சோதி
23-08-2009, 05:49 AM
நான் அந்த பாரதியின் அகால மரணக்காலத்துக்குப் போகவேண்டும். அந்த மகாகவியின் மரணத்தைத் தடுக்கவேண்டும். இன்னும் பல எழுச்சிப்பாடல்கள் தமிழுக்குக்கிடைக்கச் செய்யவேண்டும்.

வரும் வழியில் சில்க் ஸ்மிதாவின் மரணத்தையும் தடுக்கவேண்டும். தவறாகப்ப்புரிந்துகொள்ளப்ப்பட்ட ஓர் அப்பாவி ஜீவனைககாக்கவேண்டும்.


:icon_b::icon_b:

அருமையான யோசனைகள்.

தலை வணங்குகிறேன் அய்யா.

அக்னி
23-08-2009, 07:22 AM
:icon_b::icon_b:

அருமையான யோசனைகள்.

சிலுக்கு சிலுக்குத்தான்... :grin:
பேரச் சொன்னாலே இப்பவும் எல்லாருக்கும் உற்சாகம் பீறிடுது... :huepfen024:

இத்தனை பேரு சொன்ன யோசனைகளை விட, வேந்தர் சொன்ன யோசனை பிடிச்சிருக்குன்னா, அதுக்கு ஒரே ஒரு காரணம்.., :icon_shades:
பாரதியார் பற்றிச் சொன்னதுதான் என நம்பிடலாம்தான்... :icon_cool1:

ஆனால்,
:icon_hmm: ‘கள்’ போட்டதால யோசிக்க வேண்டிக்கிடக்கு... :sport-smiley-018:

:D

கலைவேந்தன்
23-08-2009, 07:56 AM
ஒரு நல்ல யோசனையை நாலு பேரு பாராட்டினா தாங்காதா அக்னி..? :)

பி கு : பரம்ஸ் = நாலுபேர்

நேசம்
23-08-2009, 08:06 AM
:icon_hmm: ‘கள்’ போட்டதால யோசிக்க வேண்டிக்கிடக்கு... :sport-smiley-018:

:D

ஒரு வேலை அதனால் தான் இருக்கும் அக்னி :icon_blush:

மஞ்சுபாஷிணி
23-08-2009, 09:19 AM
கலை நீ கேட்ட கால யந்திரம் ரெடியாம் வந்து எடுத்துட்டு போக சொன்னாங்க... பில்லு பரஞ்சோதிக்கு அனுப்பட்டுமான்னு கேட்டாங்க.. நான் டபுள் ஓக்கே சொல்லிட்டேன்பா... துணிமணி எல்லாம் தயாரா வெச்சுக்கோ...:)

தாமரை
27-08-2009, 09:48 AM
பாரதியும் சில்க் ஸ்மிதாவும் மட்டும் நீண்ட நாட்கள் வாழணும் என்கிற விஷயத்துக்கு எல்லோரும் போக வேண்டிய அவசியமில்லையே.. !!!

ம்ம் மன்றம் கூடி கும்மியடிக்க கடைச் சங்க காலத்துக்குப் போய் அந்த சங்கத்துக்கு எதிரில் கடை விரிச்சா என்ன?

பரஞ்சோதி
27-08-2009, 04:44 PM
சொன்னா மட்டும் போதாது கும்மி அடிக்க ஆரம்பிங்க..

- காலில் சலங்கை கட்டியப்படி

தாமரை
28-08-2009, 02:01 AM
சங்க காலத்தில் நிறைய தாமரை - சாம்பவி மாதிரி உரையாடல்கள் நடந்திருக்காமே,.. அதனால் சொற்சிலம்பத்தை எல்லாம் அங்கே கொட்டி கீரனோட தலையைச் சுற்ற வைத்து...

ஏற்கன்வே அவர் தருமியோட மேட்டர்ல ஓவர் உஷாரா இருப்பாரு.. அதனால இதையெல்லாம் அவர் நல்ல கவிதைதான் என டமார்னு ஒத்துக்குவாரு. அதனால சங்க காலத் தமிழில் தமிழ் மன்ற முத்திரையை ஸ்ட்ராங்காப் பதிச்சிரலாம்..

அப்படியே நம்ம கவிச்சமர் புலிகள் அக்னி, அமரன், ஆதவா, பூமகள், யவனிகா இப்படிப் பலபேரோட கவிச்சமர்ல சங்கப் புலவர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிடுவாங்க. அப்புறம் சங்கத்தின் விதிமுறைகளைத் தளர்த்தி.. சங்கத்தில ஒரு சர்வர் வச்சி.. அனைவரின் கவிதைகளும் தரம்பிரித்து பிரசுரிக்கப்படும். தேர்ந்தெடுக்கப் படும் கவிதைகள் மின்னிதழாய் 56 நாடுகளுக்கும் புறாக்கள் மூலம் ஓலையாய் அனுப்பபடும் என ரூல்ஸை மாத்திடுவோம். கோடிக்கணக்கான இலக்கியங்கள் அதிகமா கிடைக்கும் இல்லையா?

அங்கிருந்து கிளம்பினா நேரா சோமநாதபுரம். கஜினி படையெடுப்புக்குச் சற்று முந்தின பீரியட்..

(ஆமாங்க தங்கம் விக்கிற விலையில அந்தத் தங்கத்தை எல்லாம் கைப்பற்றி நம்ம மன்ற மகளிருக்கு வாங்கிக் கொடுக்கலாம்னு இருக்கேன்)

தாமரை
28-08-2009, 02:21 AM
கஜினி முகம்மதுவை எப்படி நம்மன்றத்து மக்களை வச்சி சோமநாதபுரப் படையெடுப்பை தடுக்கிறது?

இதுக்கு லொள்ளு வாத்தியார், இதயம், விக்ரம், சிவா.ஜி போன்றவர்கள் தலைமையில் ஓவியன், பூமகள், மலர், சுகந்தப்பிரீதன், யவனிகா, அமரன், செல்வா, அன்புரசிகன் போன்றவர்களின் படையும்

மறுபுறம், பரஞ்சோதி, சமுத்ராசெல்வம், தக்ஸ், மதி, கண்மணி, மணியா, மன்மதன், பிரதீப், இராகவன், மைதிலி, தேம்பா, சுவேதா போன்றோர் கொண்ட அணியும் உண்டாக்கப்படும்.

இந்த இரண்டு அணியும் ஒருவருக்கு எதிரே ஒருவர் என வாய்ப்போரில் ஈடுபடும்..

இந்தப் போரில் சொக்கிப் போய் கஜினி முகம்மதுவோட படைகள் மேலே முன்னேறவே முன்னேறாது. இதில் எந்த அணி கை மேலோங்கி இருக்குன்னு அவங்களுக்குள்ளயே போட்டி வந்திடும். அது பெரும் கலவரமாக மாற கஜினி முகம்மதுவை அவங்க படை அம்போன்னு விட்டுட்டுப் போயிடும்.

தனியா மாட்டிகிட்ட கஜினி முகம்மதுவை அறிஞர், பென்ஸ், இராசகுமாரன் போன்றவர்கள் மடக்கி கைது செய்து சௌராஷ்டிர மன்னனிடம் ஒப்படைக்க.. அங்கிருக்கும் தங்கத்தையெல்லாம் அவர் மன்றத்தினருக்கு வாரி வாரிக் கொடுப்பாரு...

அதையெல்லாம் அள்ளிகிட்டு அடுத்து போகப்போறது எங்க மக்கா?

அக்னி
28-08-2009, 05:49 AM
இப்பிடியே நடந்ததைப் பார்த்துக்கிட்டு கடந்தகாலத்தில உலாவினா மட்டும் போதுமா...
அள்ளிக்கிட்டு அடுத்த மிலேனியத்துக்குப்
(ரொம்ப ஓவராப் போச்சுதோ... அப்பிடீன்னா, 2020க்குப்) போனா என்னா...
அப்போ தமிழ்மன்றம் எப்பிடி இருக்கும்...
தமிழ் மன்றத்தில யாரெல்லாம் இருப்பாங்க...
இணையத் தமிழ் எப்படி இருக்கும்...

இவற்றையெல்லாம் சொல்ல, ஓவியன் வந்துட்டேயிருக்காரு...
(அ அ அ திரிக்காக ஒரு சின்ன அன்பளிப்பு...)

தாமரை
28-08-2009, 06:05 AM
பத்த வச்சா வெறும் தீக்குச்சி தான்
எரிஞ்சா தான் அக்னி!

தாமரை
01-09-2009, 05:10 AM
அக்னியும் எழுதலை.. ஓவியனும் எழுதலை.. சிவா.ஜி தான் வந்து எழுதணும் போல

ஓவியன்
01-09-2009, 05:16 AM
அக்னியும் எழுதலை.. ஓவியனும் எழுதலை.. சிவா.ஜி தான் வந்து எழுதணும் போல

ஆமா நான் இன்னா எழுதணும் ....?? :confused:

தாமரை
01-09-2009, 05:47 AM
இப்பிடியே நடந்ததைப் பார்த்துக்கிட்டு கடந்தகாலத்தில உலாவினா மட்டும் போதுமா...
அள்ளிக்கிட்டு அடுத்த மிலேனியத்துக்குப்
(ரொம்ப ஓவராப் போச்சுதோ... அப்பிடீன்னா, 2020க்குப்) போனா என்னா...
அப்போ தமிழ்மன்றம் எப்பிடி இருக்கும்...
தமிழ் மன்றத்தில யாரெல்லாம் இருப்பாங்க...
இணையத் தமிழ் எப்படி இருக்கும்...

இவற்றையெல்லாம் சொல்ல, ஓவியன் வந்துட்டேயிருக்காரு...
(அ அ அ திரிக்காக ஒரு சின்ன அன்பளிப்பு...)


இதைத்தான்

ஓவியன்
01-09-2009, 05:52 AM
இந்த விடயமே இன்னிக்குத்தானே எனக்குத் தெரிஞ்சிச்சு, சரி சரி விரைவில் வருகிறேன்... :D:D:D

தாமரை
01-09-2009, 05:57 AM
டயம் மெஷினைப் பத்தி பேசற வி-டயம் இப்பதான் தெரியுதா?

அக்னி
01-09-2009, 06:16 AM
பத்த வச்சா வெறும் தீக்குச்சி தான்
எரிஞ்சா தான் அக்னி!
இத எப்ப போட்டீக செல்வரே...

நான் பத்த வச்சா,
ஊதி எரிய வைக்கிறது ஓ கே...
இப்பிடி ஊதி அணைக்கவெல்லாம் கூடாது...

ஓவியன்
01-09-2009, 06:20 AM
இத எப்ப போட்டீக செல்வரே...

நான் பத்த வச்சா,
ஊதி எரிய வைக்கிறது ஓ கே...
இப்பிடி ஊதி அணைக்கவெல்லாம் கூடாது...

இப்படி தொடர்ந்து ஊதிட்டிருந்தீக, கடைசியில் வில்லங்கம்தான் வரும்...:D:D:D

மந்திரம்..!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=430038#post430038)

தாமரை
01-09-2009, 06:25 AM
இத எப்ப போட்டீக செல்வரே...

நான் பத்த வச்சா,
ஊதி எரிய வைக்கிறது ஓ கே...
இப்பிடி ஊதி அணைக்கவெல்லாம் கூடாது...

நான் ஊதி எரிய வைக்கணுமா? அப்ப நீங்க அக்னி இல்லை. அக்லி!!!:icon_rollout:

பரஞ்சோதி
05-09-2009, 08:02 PM
என்ன வண்டி இன்னுமா கிளம்பலை?

வாங்கிய வேர்கடலையும், வெள்ளரிக்காயும் தீர்ந்து போச்சுது.

ஆதவா
06-09-2009, 01:06 AM
உண்மையிலேயே கால இயந்திரம் இருந்தால், நிச்சயம் எங்கும் போகப் பிடிக்காது.. வேண்டுமானால், ஒன்றிரண்டு வருடங்கள் பின்னே செல்ல பிரியப்படலாம்..

நான் இராஜராஜ காலத்திற்குப் போய், செல்போன் டவரைத் தேடுவேன்.. நீங்க, லேப்டாப்பைத் தேடுவீங்க, இப்படி ஒவ்வொருத்தரும் ஒண்ணொன்னா....... இருக்கிறதை விட்டுட்டுத் தேடுவோம்..... ஆனா வேற வேற புதுசா கிடைக்கலாம்....

ஆதவா
06-09-2009, 01:16 AM
இந்த விடயமே இன்னிக்குத்தானே எனக்குத் தெரிஞ்சிச்சு, சரி சரி விரைவில் வருகிறேன்... :D:D:D

இதுக்குத்தான் உங்களையெல்லாம் நம்பக்கூடாதுன்னு அக்னி சொன்னாரு.... :aetsch013:

தாமரை
06-09-2009, 02:25 AM
உங்களை மாத்திரம் நம்பலாமாக்கும்?