PDA

View Full Version : இடைத்தேர்தலில் தேமுதிக இரண்டாம் இடம்



ஆதி
21-08-2009, 11:05 AM
இடைத்தேர்தலில் தேமுதிக இரண்டாம் இடம் *- கட்டு தொகை இழந்தன மற்ற கட்சிகள்


சென்னை: தமிழகத்தில் நடந்த இடைத் தேர்தலில் 5 தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது. தேமுதிகவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

பர்கூர், தொண்டா முத்தூர், இளையான்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தேர்தல் புறக்கணிப்பு வேண்டுகோளையும் மீறி 69.4 சதவீத ஓட்டுகள் பதிவாயின.

இன்று காலை ஓட்டு எண்ணிக்கை நடந்தது. முதல் சுற்றிலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக-காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்றனர்.

பர்கூர், இளையான்குடி, கம்பம் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களும், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும் வென்றுள்ளனர்.

அனைத்துத் தொகுதிகளிலும் விஜய்காந்தின் தேமுதிக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இடதுசாரிகளும் பாஜகவும் அனைத்திலும் டெபாசிட் இழந்துள்ளன.

தொண்டாமுத்தூரில் போட்டியிட்ட கொங்குநாடு முன்னேற்ற கழகம் கட்சியும் டெபாசிட்டை இழந்தது.

அதேபோல 5 தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து சுயேட்சைகளும் டெபாசிட் இழந்துள்ளனர்.

தொண்டாமுத்தூர் தொகுதி வாக்குகள் கோவை தடாகம் சாலை அரசு தொழில்நுட்ப கல்லூரியிலும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி வாக்குகள் சாயர்புரம் போப் கல்லூரியிலும்

பர்கூர் தொகுதி வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், இளையாங்குடி தொகுதி வாக்குகள் இளையாங்குடி மேல்நிலைப் பள்ளியிலும், கம்பம் தொகுதி வாக்குகள் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியிலும் நடந்தன.



நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

ஆதி
21-08-2009, 11:15 AM
அதிமுக ஓட்டுக்கள் பெரும்பாலும் திமுக தேமுகவுக்கே பிரிந்து போயுள்ளது

சென்னை : சட்டசபை இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக ஜெயலலிதா அறிவித்தாலும் அதிமுகவினர் பெருமளவில் ஓட்டுப் போட்டுள்ளனர். அதிமுகவின் வாக்குகளை திமுகவும், தேமுதிகவும் பெருமளவில் பங்கிட்டுக் கொண்டுள்ளது தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வருகிறது.

குறிப்பாக தேமுதிகவுக்கு அதிமுக ஓட்டுக்கள் கணிசமாக கிடைத்துள்ளன. திமுகவுக்கும் ஒரு பகுதி ஓட்டுக்கள் போயுள்ளன. ஆனால், அதிமுக ஓட்டுக்களால் இடதுசாரிகளுக்கோ, பாஜகவுக்கோ பெருமளவில் பலன் கிடைக்கவில்லை.

கம்பம்...

கம்பத்தில் தேமுதிகவின் வாக்கு வங்கி அப்படியே இரட்டிப்பாகியுள்ளது.

கடந்த தேர்தலில் தேமுதிகவுக்கு இங்கு 12,360 ஓட்டுக்கள் கிடைத்தன. ஆனால் இந்த முறை போட்டியிட்ட அருண்குமார் 24,142 வாக்குகளைப் பெற்றுள்ளார். இங்கு தேமுதிகவுக்கு வாக்கு பலம் அப்படியே இரட்டிப்பாகியுள்ளது

அதிமுகவிலிருந்து கணிசமான வாக்குகள் தேமுதிகவுக்குப் போயுள்ளதையே இது காட்டுகிறது.

அதேபோல, திமுக வேட்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் கடந்த முறை மதிமுக சாகர்பில் போட்டியிட்டு வாங்கியதை விட இம்முறை கூடுதலான ஓட்டுக்களைப் பெற்றுள்ளார்.

கடந்த முறை மதிமுக சார்பில் போட்டியிட்ட அவர் 50,761 வாக்குகளைப் பெற்றார். இம்முறை கூடுதலாக 30,754 வாக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன.

கடந்த பொதுத் தேர்தலில் திமுகவுக்கு இங்கு 48,803 ஓட்டுக்கள் கிடைத்தன. இம்முறை 81,515 வாக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் திமுகவுக்கும் இங்கு வாக்குகள் இரட்டிப்பாகியுள்ளன.

ஸ்ரீவைகுண்டம் ...

கடந்த பொதுத் தேர்தலில் இங்கு வென்ற காங்கிரஸ் கட்சிக்கு 38,188 வாக்குகள் கிடைத்தன. ஆனால் இம்முறை, 53,827 வாக்குகள் கிடைத்துள்ளன.

தேமுதிக கடந்த தேர்தலில் வெறும் 3,166 வாக்குகளையே பெற்றது. ஆனால் இம்முறை 22,468 வாக்குகளை அள்ளியுள்ளது. கிட்டத்தட்ட 7 மடங்கு அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இதில் பெரும்பாலானவை அதிமுக வாக்குகளே.

காரணம், கடந்த தேர்தலில் அதிமுக இங்கு 36,556 வாக்குகளைப் பெற்றது. கிட்டத்தட்ட இதில், முக்கால்வாசி ஓட்டுக்கள் தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பர்கூர்..

பர்கூரிலும் அதிமுக வாக்குகளை அமோகமாக அள்ளியுள்ளது தேமுதிக. கடந்த முறை இங்கு தேமுதிக வேட்பாளர் கோவிந்தராஜ் 11,157 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.

ஆனால் இம்முறை போட்டியிட்ட வி.சந்திரன் 30,378 வாக்குகளைக் குவித்திருக்கிறார்.

திமுகவும் இங்கு தனது வாக்குகளை அதிகரித்துள்ளது. கடந்த முறை போட்டியிட்ட வெற்றிச் செல்வனுக்கு 58,091 வாக்குகள் கிடைத்தன. ஆனால் இம்முறை திமுக வேட்பாளர் நரசிம்மனுக்கு 89,481 வாக்குகள் கிடைத்துள்ளன.

கடந்த முறை அதிமுக பர்கூரில் 61,299 வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலை விட இம்முறை திமுகவுக்கு 30,228 வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் அதிமுக வாக்குகளே.

இதன்மூலம் அதிமுகவின் வாக்குகளை திமுகவும், தேமுகவும் கிட்டத்தட்ட சமமாக பகிர்ந்து கொண்டுள்ளன.

இளையான்குடியி்ல்..

இளையான்குடி தொகுதியில் அதிமுக வாக்குகளை அப்படியே அள்ளிவிட்டது தேமுதிக. கடந்த தேர்தலில் வெறும் 2,705 ஓட்டுக்களை வாங்கிய அக் கட்சி இப்போது 10 மடங்கு அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இவை அப்படியே அதிமுக வாக்குகளே ஆகும்.

தொண்டாமுத்தூரி்ல்..

தொண்டாமுத்தூர் தொகுதியில் கடந்த தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்ட மு.கண்ணப்பன் 1,23,490 ஓட்டுக்கள் வாங்கினார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் 1,13,596 ஓட்டுக்கள் பெற்றார். ஆனால், இம்முறை காங்கிரஸ் வேட்பாளரால் அந்த அளவுக்கு ஓட்டுக்களைப் பெற இயலவில்லை.

கடந்த தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது காங்கிரஸ் கட்சிக்கு 1,246 வாக்குகள் குறைந்துள்ளன. தேமுதிகவும் தொண்டாமுத்தூர் தொகுதியில் பெரிய அளவில் வாக்குகளை அதிகரிக்கவில்லை.

இந்தத் தொகுதியில் போட்டியிட்ட கொங்கு நாடு கட்சியும் பெரிய அளவில் வாக்குகளைப் பெறவில்லை.

இடைத் தேர்தல் நடந்த 5 தொகுதிகளில் தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும்தான் திமுக கூட்டணியோ, தேமுதிகவோ கடந்த தேர்தலை விட அதிகளவில் கூடுதல் வாக்குகளைப் பெறவில்லை.

மொத்தத்தில திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு கடந்த தேர்தலை விட அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. அதிமுக வாக்காளர்களில் கணிசமானவர்கள் திமுக-காங்கிரசுக்கும், தேமுதிகவுக்கும் வாக்களித்துள்ளனர்.

அதிமுக வாக்குகளை திமுக-காங்கிரஸ் கூட்டணியும், தேமுதிகவும் பங்கு போட்டுக் கொண்டுள்ளன.

இது தேர்தலை புறக்கணித்த ஜெயலலிதாவுக்குக் கிடைத்த மாபெரும் தோல்வியாகவே கருதப்படுகிறது. அவர் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்றாகிவிட்டது.

இந்தமுறையும் வாக்கு எந்திரத்தைக் குறை கூறிவிட்டு தப்பிக்க முயலாமல் கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் அவர் இறங்க வேண்டி நேரம வந்துவிட்டது. இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் அவர் திமுகவுடன் அல்ல, தேமுதிகவின் இடத்தைப் பிடிக்க போட்டி போட வேண்டி வரலாம்.


நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

தாமரை
21-08-2009, 11:37 AM
வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள்.

ஒரு ஜனநாயகத்திற்கு எதிரான காரியம் நடக்கிறது என்றால் அதை களைய முற்படுவதே சரி. அதை விட்டு விட்டு பிறர் மீது குற்றம் சுமத்தல் அரசியல் கட்சிக்கு அழகல்ல என மக்கள் சொல்லி இருக்கிறார்கள்

பரஞ்சோதி
21-08-2009, 11:56 AM
வெற்றியாளர்களுக்கு என் வாழ்த்துகள்.

புதிய பரிமாணத்தில் மக்கள் பயணிப்பது ஜனநாயகத்திற்கு நல்லது.

ஆதி
21-08-2009, 12:03 PM
வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...

இந்த தேர்தல் முடுவுகள் விஜய்காந்த் மற்ற இருக்கட்சிகளுக்கும் மாற்று என்று மக்கள் திண்ணமாக நம்புகிறார்கள் என்பதை உறுதி செய்கிறது..

அறிஞர்
21-08-2009, 03:11 PM
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்..

தேமுதிகவின் முன்னேற்றம் இதர கட்சிகளுக்கு பயத்தை கொடுக்கும்

ஜாதி கட்சிகள் டெபாஸிட் இழப்பது நல்ல விசயம்.

கலைவேந்தன்
21-08-2009, 04:45 PM
இடைத்தேர்தலை வைத்து எந்தவித கொள்கை முடிவும் எடுத்துவிடக்கூடாது.

இடைத்தேர்தல் என்பது தூசுக்காற்றே தான் ஒழிய பருவக்காற்று இல்லை.

தூசுக்காற்று இடம் மாறி மாறி வீசும். நிலையில்லாதது.

திமுக இதனால் நல்ல பிள்ளை என்று பெயர் பெற்றுவிட்டது என்று நினைப்பது குருட்டு நம்பிக்கைதான்.

காலம் தான் பதில் சொல்லும்.

mgandhi
21-08-2009, 05:25 PM
இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி

கம்பம்
தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணன் 81,515
தே.மு.தி.க. வேட்பாளர்ஆர்.அருண்குமார் 24,142

பர்கூர்
தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.கே.நரசிம்மன் 59,103
தே.மு.தி.க. வேட்பாளர் சந்திரன் 30,378



இளையான்குடி
தி.மு.க. வேட்பாளர் சுப.மதியரசன் 41,456
தே.மு.தி.க. வேட்பாளர் அழகுபாலகிருஷ்ணன் 19,628
பா.ஜ.க. வேட்பாளர் ராஜேந்திரன் 1,487


ஸ்ரீவைகுண்டம்
காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி 31,359
தே.மு.தி.க. வேட்பாளர் சவுந்திரபாண்டியன் 22,468
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் தனலட்சுமி 3,407



தொண்டாமுத்தூர்
காங்கிரஸ் வேட்பாளர் எம்.என்.கந்தசாமி 71,487
தே.மு.தி.க. வேட்பாளர் கே.தங்கவேலு 40,863
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பெருமாள் 9,126
கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளர் ஈஸ்வரன் 19,558
பா.ஜ.க. வேட்பாளர் சின்னராஜ் 9,045

aren
22-08-2009, 07:27 AM
அதிமுக போட்டியிடவில்லையாததால் திமுகவின் வெற்றி எளிதானது. விஜயகாந்திற்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது பற்றி சந்தோஷம், ஆனால் மக்கள் இன்னும் முழுமையாக நம்பவில்லை என்றே இந்த ஓட்டுவிகிதம் தெரிவிக்கிறது. அதிமுகவினர் பலர் திமுக பக்கம் வந்திருப்பது தெரிகிறது. ஜெயலலிதா அவர்கள் இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு தொண்டர்களுக்கு ஊக்கம் அளித்தால் மட்டுமே அடுத்த பொதுத்தேர்தலை எதிர்கொள்ளமுடியும்.

கம்யூனிஸ்டுகளின் வாக்குகளைப் பார்க்கும்பொழுது எதற்காக மற்ற கட்சிகள் இவர்களுக்கு இவ்வளவு சீட்டுகள் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இனி வரும் தேர்தல்களில் இதில் மாற்றம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

பாஜக என்ன சொல்வது. ஹூம். அவ்வளவுதான்.

அய்யா
07-09-2009, 12:18 PM
திமுகவுக்கு மாற்று, அதிமுக. அதிமுகவுக்கு மாற்று திமுக.
அவ்வளவே. தேமுதிக இவ்விரு கட்சிகளுக்கும் மாற்றாய் வர இயலாது. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில வெற்றிகளை ருசிக்கலாம்.

arun
09-09-2009, 07:08 AM
தேமுதிக மெல்ல மெல்ல முன்னேறி வருவது போல தெரிகிறது ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை தனியாக நின்றால் வெற்றி கிடைக்கும் என்பது கடினமான காரியம்

தேமுதிக கூட்டணி அமைத்தால் இந்த அளவுக்கு ஓட்டு கிடைக்கும் என்பது சந்தேகமே

ஏனெனில் தேமுதிகவின் ஓட்டுக்கள் அனைத்தும் எதிர்ப்பலைகளின் ஓட்டு என்பதே எனது கருத்து

aren
09-09-2009, 08:17 AM
தேமுதிக என்பது அனைத்து எதிர்பாளிகளின் ஓட்டுக்களின் கூட்டு. அவர்கள் திமுகவுடன் கூட்டணி வைத்தால் திமுக எதிர்ப்பாளர்களின் ஓட்டு விழாது. இப்பொழுது அவர்களுக்கு கிடைக்கும் ஓட்டுகள் அனைத்தும் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள்தான்.

நேசம்
09-09-2009, 08:34 AM
தேமுதிகவுக்கு கிடைக்கும் ஒட்டுகள் பெரும்பாலும் வெறுப்பின் அடிப்படையில் அமைந்தவை.அடுத்து விஜய் வரபோகிறார்.

virumaandi
09-09-2009, 08:53 AM
முன்பு இப்படி சொல்லி சொல்லியே.. ம.தி.மு.கவிற்கும், பா.ம.க. விற்கும் ஆப்பு வைத்தார்கள்..
இப்ப பாவம் விஜயகாந்திற்கு ஆப்பு..
கனக்குகளை சரியா போட்டால்.. அக்கட்சி வான்க்கிய ஓட்டுக்கள்.. மிக மிக குறைவு..
எல்லா இடத்திலும்.. டெபாசிட்டை திரும்ப பெற்றது.. 100 ல் இருந்து 1000 ஓட்டுக்களில் தான் டெபாசிட் கிடைத்தது..
பதிவானது 70 சதம் வரை.. அதாவது எப்பொழுதும் பதிவாகும் அளவு பதிவானது..
இதில் அ.தி.மு.க விற்கு வாக்கு அளித்தவர்கள் கூட.. விஜயகாந்துக்கு வாக்கு அளிக்க வில்லை என்பது தெளிவாகிறது..
அ.தி.மு.க வின் ஓட்டுக்களை கெஞ்சி கூத்தாடினார் விஜயகாந்த்..
இருந்தும்.. 5000 லிருந்து.. 15000 வரை வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டிய இடத்தில்... 40,000 லிருந்து 60,000 வரை வித்தியாசத்தில் தி.மு.க ஜெயிக்கிறது..

இதனால்.. விஜயகாந்த் சாதிக்க தவறி விட்டார்..
இனி கூட்டணியில் போய் விழ வேண்டும்.. அவ்வளவே..
அவரின் பேச்சுக்கள்.. ஜய லலிதாவை போல.. மகா மோசமாக இருக்கு... அதுவும் பொய்களை அதிகமாக அள்ளி விடுகிறார்..
மக்களுக்கு கூட தெரிந்த விஷயத்தில் அவரின்.. சினிமா வில் வரும் வசனங்களை பேசுகிறார்..
மொத்தத்தில்.. அ.தி.மு.க ஓட்டுக்களும்.. தே.மு.தி.க.. ஓட்டுக்களும் ஒன்று சேர்ந்தாலும்.. டெபாசிட் தான் பெற முடிகிரது...விஜயகாந்தால்..

டெபாசிட் வாங்கவில்லையென்றாலும்.. அவர் தான் இரண்டாம் இடம்.. 7000 ஓட்டுக்கள் வாங்கியிருந்தாலும் அவர் தான் இரண்டாம் இடம்...

நேசம்
09-09-2009, 08:59 AM
விருமாண்டி அய்யா மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்று சொன்னதற்கு நன்றி