PDA

View Full Version : ஒரு ஆலோசனை - ஆக கடைசியாக உள்ளே வந்த தகவல்ஓவியா
20-08-2009, 11:42 PM
வணக்கம் தமிழ்மன்றம்.

எனக்கு ஒரு ஆலோசனை இருக்கின்றது, அதாவது ஒரு உருப்பினர் எப்பொழுது முதன் முதலில் தமிழ்மன்றத்திற்க்கு வந்தார் என்பதை காட்டும் இடத்திலேயே, ஆக கடைசியாக எப்பொழுது வந்தார் என்று ஒரு டேட்டா வைத்தால் நன்றாக இருக்குமே?


Join Date: 06 Jul 2009
Last Activity: 28-07-2009
Location: இங்கிலாந்து
Posts: 13
iCash Credits: 209.9 [Donate]


இது நம்முடைய டேட்டாபெசையும், ப்ரோபைலையும் காட்டும் முகப்பு இடத்தை கொஞ்சம் கூடுதலாக இது எடுத்தாலும், புதிதாக வருபரவர்கள் எப்படி தங்களுடைய வருகையை இங்கு பதிக்கிறார்கள் என்று ஒரு அளவுகோல் இருக்கும். 'அக்டீப்ஃபா' இருக்கும் புதிய உருப்பினர்களுக்கு கால தாமதமாகவும் அறிமுக வாழ்த்து போடலாம், மற்றும் அவருடைய திரிகளுக்கு சென்று பின்னூட்டமிட்டு ஆதரவு வழங்கலாம், அதுமட்டுமின்றி அவர்கள் எவ்வளவு உற்சாகமாக பங்களிக்கின்றார்கள் என்றும் நமக்கு தெரிய வாய்ப்பிருக்கின்றது.

மற்றும் நமது நண்பர்களும் எப்பொழுது ஆக கடைசியாக உள்ளே வந்து சென்றார்கள் என்று அவரிகளின் ப்ரோபைலுக்கு செல்லாமலே உடனே தெரிந்துக்கொள்ளலாம்.

நண்பர்கலே, யாரேனும் இது ஒரு வரவேற்க்கத்தக்க விசயமென்றால் உங்கள் பின்னூட்டத்தை இங்கு பதியுங்கள், அப்படி மாற்று கருத்து இருந்தால் தாமதிக்காமல் உடனே இங்கு பின்னூட்டமிடுங்கள்.

இது ஒரு ஆலோசனைதான், மன்றத்தின் முடிவே இறுதியானது.

நன்றி.


பின் குறிப்பு,
தேவைப்பட்டால் மேலிடம் இந்தத் திரியை நீக்கிவிடலாம்.

ஆதவா
21-08-2009, 02:01 AM
நல்ல ஐடியா..
ஆதரிக்கிறேன்!!

aren
21-08-2009, 02:05 AM
இது இடவசதியைப் பொருத்தது. தலைவர் ராஜகுமாரன் அவர்கள் இந்த வசதியை செய்யமுடிந்தால் நிச்சயம் செய்துதருவார் என்றே நம்புகிறேன்.

Ranjitham
21-08-2009, 04:24 AM
இது இடவசதியைப் பொருத்தது. தலைவர் ராஜகுமாரன் அவர்கள் இந்த வசதியை செய்யமுடிந்தால் நிச்சயம் செய்துதருவார் என்றே நம்புகிறேன். மனமிருந்தல் மார்கம் உண்டு.எனது ஓட்டு ஓவியா அவர்களுக்கு.

ஆதி
21-08-2009, 04:48 AM
Last Activity: 28-07-2009

User profile-ல் இதை காண முடியுமே..

தாமரை
21-08-2009, 05:29 AM
ஓவியாவோட எண்ணம் எப்படின்னா .. ஒருத்தர் பதிவைப் படிக்கும் போது அவர் வந்து ரொம்ப நாளாச்சுன்னு உடனே தெரிஞ்சா சரி யாரையாவது என்னாச்சு அவருக்கு என்று தொல்லை பண்ணலாம்..

இல்லைன்னா புரஃபைல்ல போய் பார்க்கணும்னு தான்,, அது மூக்கச் சுத்தி வாயைச் சுத்தி கண்ணைச் சுத்தி..

நெத்தியில பொட்டு வைக்கிற வேலைன்னு நினைக்கிறாங்க

ஆமாம் ஒவியா உங்க வைராக்கியம் என்னாச்சு?:icon_rollout:

praveen
21-08-2009, 05:30 AM
Last Activity: 28-07-2009

User profile-ல் இதை காண முடியுமே..

நானும் இதைத்தான் பதிக்க நினைத்தேன், திரியின் முதல் பதிவில் இதனை குறிப்பிட்டிருப்பதால் தவிர்த்து விட்டேன்.

இந்தமாதிரி ஒருவரின் ஒவ்வொரு பதிவின் ஓரத்திலும் இன்னும் நிறைய பதிக்கலாம்.
அவர் ஆரம்பித்த திரி மற்றும் பதிப்புகள் எண்ணிக்கை, அவர் தளத்திற்கு எத்தனை பேரை ரெபர் செய்தார், அவர் எத்தனை புத்தகம் மன்றத்தில் ஏற்றியிருக்கிறார் இப்படி அனுமார் வால் போல நீண்டு கொண்டே செல்லும்.

இதனால் பெரிதாக பயன் இல்லை, இம்மாதிரி தனிப்பட்ட விவரம் மேலே ஆதி அவர்கள் சொன்னது போல புரபைல் கண்டு தெரிந்து கொள்ளலாம்.

இப்படி வைப்பதில் என்ன சிரமம் என்றால், தேவையில்லாமல் அந்த வரிகள் கூடுவதால் நிறைய வெற்றிடம் அவதார்(வைத்திருந்தாலும்) எதிர்பக்கம் தெரியும்.

ஏற்கெனவே அவார்ட் மற்றும் எச்சரிக்கை புள்ளிகள்(பெற்றிருந்தால்) அவை அங்கே தெரியும் போது இன்னும் கூடுதல் வரிகள் அவசியமற்றது.

ஆரென் அவதார் நேராக அவர் தகவல் கச்சிதமாக இருக்கிறது, ஆனால் ஓவியா மற்றும் ஆதி அவதாருக்கு நேராக அதிக வரிகள் இருப்பதால் பதிப்புகளின் தலைப்பட்டை அதிக இடம் எடுத்திருக்கிறது பாருங்கள்.

இவ்வளவு நீள பட்டை தலைப்பாக இருக்கும் போது இதில் நம் நண்பர்கள் ஒருவரி பதிவு செய்தால் பார்க்க நன்றாக இராது.

இது எனது தனிப்பட்ட கருத்து, அதுவும் ஒவியா மாற்றுக்கருத்து வரவேற்றதனால் தான் பதிந்தேன்.

தாமரை
21-08-2009, 05:43 AM
வயசு அங்க வருதே... அதுவும் அனாவசியமான ஒண்ணுதான்..(என்னுடைய பட்டைக்கு நேரா பாருங்க))

அது ப்ரொஃபைல்ல மட்டும் இருந்தால் போதுமே...

ஓவியாவின் (உள்)நோக்கம் நல்லாத்தான் இருக்கு, ஆனால் அதுவே எதிர் மறை விளைவையும் ஏற்படுத்தும்.. இரண்டையும் ஆராய்ந்தால் எதிர்மறை விளைவு கொஞ்சம் அதிகம்தான்..

அதனால்.. வேணாம்.. வேணாம்.. வேணாம்..

தீபா
21-08-2009, 06:45 AM
நல்லாத்தான் இருக்கு....
எதுக்கும் ஒரு ஓட்டுப் பெட்டி வையுங்க.
மக்கள் தீர்மானிக்கட்டும்!

தீபா
21-08-2009, 06:46 AM
வயசு அங்க வருதே... அதுவும் அனாவசியமான ஒண்ணுதான்..(என்னுடைய பட்டைக்கு நேரா பாருங்க))உங்களுக்கே இப்படின்னா, என்னையெல்லாம் என்னன்னு சொல்றது...

ஓவியன்
21-08-2009, 07:24 AM
ஆதி கூறியது போல யூசர் புரபைலில் பார்த்துக்கலாம், அத்துடன் மன்றத்தில் நெருக்கமாக இருப்பவர்களுக்கு யார் எப்போது வந்தார், வருகிறாரென்பது தெளிவாகத் தெரியும்.....

என்னைப் பொறுத்த வரை பதிவுகளைப் பார்த்தால் போதுமானது, பதிந்தவரைப் பார்க்கத் தேவையில்லை... .

அன்புரசிகன்
21-08-2009, 07:29 AM
ஆவியாக வந்து சென்றால் இறுதியாக வந்தது சரியாக வராது. அது பொறுப்பாளர் மற்றும் நிர்வாகியால் தான் சரியாக பார்க்கமுடியும். online ல் கடசியாக வந்ததையே சாதாரண உறுப்பினர்களால் காணமுடியும்...

தாமரை
21-08-2009, 07:36 AM
இது நல்லா இருக்கே இது நல்லா இருக்கேன்னு எல்லாத்தையும் வாங்கி பீரோவில வச்சிக்க முடியாது இல்லையா?

1. அதன் அவசியம் என்ன?
2. நன்மைகள் என்ன?
3. தீமைகள் என்ன?

இதையெல்லாம் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கணும்.

குணம்நாடி குற்றமும் நாடி அவற்றில்
மிகைநாடி மிக்கக் கொளல்.

ஃபீலிங்க்ஸ்லயே பேசவேணாமே!!!

தகுந்த தகவல்களோட பேசலாமே...

இதை இங்கே கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?
நன்மைகள் என்ன?