PDA

View Full Version : பட்டிமன்றம் போடலாம் வாங்கோ....



செல்வா
20-08-2009, 03:18 PM
நண்பர்களே…
மன்றத்தில் பலவிதமான விவாதங்களில் நாம் இதுவரைப் பங்கெடுத்து வருகிறோம். இப்போது புதிய வடிவில்… எழுத்து வடிவில் பட்டி மன்றம் என்ற விவாதக்களம் ஒன்று அறிமுகப் படுத்துவோமா?

விதிகள்:
பட்டி மன்ற நடுவர் ஒருவர் இருப்பார்.


நடுவர் பட்டிமன்றத் தலைப்பைத் தேர்வு செய்து நிர்வாக அனுமதியுடன் (நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு தனிமடலில் அனுப்பி) புதிதாகத் திரி ஒன்றைத் துவக்குவார்.


கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் தங்கள் விருப்பத்தைத் தனிமடலில் தெரிவிக்க வேண்டும். அதோடு எந்தப் பக்கத்தில் வாதிட விரும்புகிறீர்கள் என்பதையும் தெரிவிக்கலாம்.


எந்தப்பக்கம் நீங்கள் வாதிட வேண்டும் என்பதை நடுவர் தான் இறுதி செய்வார்.


கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அணிகளின் உறுப்பினர் எண்ணிக்கை இருக்கும்.


ஒற்றைப் படையாக இருக்கும் பட்சத்தில் நடுவர் விருப்பப்படி புதிதாக ஒருவரை அழைக்கவோ அல்லது ஒருவரை விலக்கவோ செய்யலாம்.


நடுவர் முதலில் அறிமுகவுரை கொடுத்துவிட்டு எழுதவேண்டிய நபரை அழைப்பார்.


தொடர்ந்து அழைக்கப்பட்டவர் தனது பக்க விவாதத்தை வைப்பார்.


ஒருவரை அழைக்கும் போது அவர் தனது விவாதத்தைப் பதிய வேண்டிய அவதியும் நடுவரால் கொடுக்கப்படும்.


அதில் எதேனும் மாற்றம் வேண்டும் என்றால் நடுவருக்குத் தனிமடலில் தெரிவிக்க வேண்டும்.


குறிப்பிட்ட நாளுக்குள் அவர் கருத்துப் பதியவில்லை என்றால் நடுவரின் விருப்பத்திற்கேற்ப அடுத்த அணிக்கோ அல்லது அதே அணியின் அடுத்த நபருக்கோ அல்லது புதிதாக யாரையேனும் சேர்த்துக் கொள்ளவோ செய்யலாம்.


மொத்தம் இரண்டுச் சுற்றுகள் விவாதம் வரும்.


ஒருவருக்கு ஒரு சுற்றுக்கு ஒரு பதிவுக்கு மட்டுமே அனுமதி.


அணி விவாதகர்கள் ஒவ்வொருவரின் பதிவுக்கு அடுத்து நடுவர் அடுத்த பதிவரை அழைப்பார்.


நடுவரின் அழைப்பிற்குப் பிறகு தனது பதிவைத் திருத்திப் பதிதல் கூடாது. எழுத்துப் பிழைகளை பொறுப்பாளர்கள் வாயிலாக நீக்கலாம்.


மன்ற விதிகளுக்கு கட்டுப்படாத வாதங்களை நீக்கும் உரிமை நடுவருக்கும் நிர்வாகத்திற்கும் உண்டு.


தவறான கருத்துக்களை பதித்து திருத்த இயலாதோர் தனது அணியின் அடுத்தப் பதிவாளருக்கு தனி மடலிட்டு அவரது பதிவில் தெரிவிக்கச் சொல்லலாம்..


தனது அணியின் பிற உறுப்பினர்களுக்கு வழங்கும் ஆலோசனைகள் அனைத்தும் தனிமடல் மூலமாகவே இருக்கவேண்டும். திரியில் இடம்பெறக் கூடாது.


இறுதியாக எல்லோருடைய பதிவுகளின் தொகுப்புரைக்குப் பின் நடுவர் தனது தீர்ப்பை வழங்குவார்.


ஒரு பட்டி மன்றத்தின் இறுதியில் அடுத்த நடுவர் தேர்ந்தெடுக்கப் படுவார். அவர் அடுத்தப் பட்டிமன்றத்தைத் தொடர்வார்.


இதற்குப் பின்னரே மற்றவர்கள் அந்தத் திரியில் பின்னூட்டமிட அனுமதிக்கப் படுவீர்கள்.



என்ன நண்பர்களே களத்தில் இறங்கத் தயாரா ?

இது தொடர்பான உங்களது ஆலோசனைகளை முன்வையுங்கள்.

இளசு
20-08-2009, 07:48 PM
நல்ல முயற்சி செல்வா..

கொஞ்சம் புரிந்துணர்வும் பொறுப்புணர்வும் இருந்தால்
சரளமாய்க் கொண்டு செல்லலாம்..

கால அவகாசமும் அவசியம்.

வெற்றிக்கு என் முன் வாழ்த்துகள்!

ஆதவா
21-08-2009, 01:54 AM
இனியா என்ற உறுப்பினர், பட்டிமன்றம் போல ஒன்று ஆரம்பித்து, அது திரி பூட்டலில் முடிந்தது.


அதற்குப் பிறகு நான் ஆரம்பித்த பட்டிமன்றத்தை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13162) பலர் பார்த்ததோடு சரி...

இந்த பட்டிமன்றமாவது நீடித்திருக்கட்டும்

aren
21-08-2009, 01:55 AM
நடுவருக்கு திரியை மாற்றயமைக்கவோ அல்லது நீக்கவோ அதிகாரம் இருக்கவேண்டும். அதற்கு உடன்படுபவர்கள் மட்டுமே இந்த பட்டிமன்றத்தில் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கவேண்டும், இதனால் பின்னால் வரும் பிரச்சனைகளை தடுத்துநிறுத்தமுடியும்.

நல்ல ஐடியா செல்வா. பாராட்டுக்கள்.

தாமரை
21-08-2009, 05:15 AM
1. பின்னூட்டம் இடத்துடிக்கும் கைகளை கட்டுப் படுத்த அல்லது வேறு வடிகால் தர திட்டம்?

2. வாதாடுபவர்களின் வேலை கொஞ்சம் அதிகம்தான்... சொன்னதுக்கு உடனே பாராட்டு வேணும்னு எதிபார்ப்பாங்க... அந்த அங்கீகாரத்தாகத்துக்கு தண்ணீர் எங்க?

செல்வா
21-08-2009, 05:57 AM
விமர்சனத்திரி தனியேக் கொளுத்திவிடலாமா?

samuthraselvam
21-08-2009, 06:33 AM
இதுக்கு தலைவர் யாரென்று எனக்கு தெரிந்துவிட்டது.....:icon_shades::Christo_pancho: :sprachlos020::sprachlos020:

யார் யார் என்னென்ன பாடு படப்போறாங்களோ... :icon_shok::icon_shok::062802sleep_prv::icon_wacko:

இந்த தலைவர்கிட்ட..... :icon_tongue::icon_tongue::icon_cool1:

ஆனா இவர் வாதாடுவோரா வந்திட்டா::icon_nono::icon_nono::sport009::sport009::torsten_violent-smi :ohmy:

எதிர்ப்பக்கம் வாதாடுரவங்க நிலைமை....:icon_hmm::medium-smiley-100::medium-smiley-100: அவ்வளவுதான்...:eek::eek:

அதனால இந்தத்திரி சுவாரசியமாக இருக்கும்..... எல்லோரும் எழுத்துக்களால சண்டை பிடிக்கிறதா நான் பார்த்ததே இல்லை...:icon_rollout::icon_rollout::lachen001:

ஆதி
21-08-2009, 08:11 AM
பட்டிமன்ற தலைப்பு யாரையும் புண்படுத்தாத வண்ணம் இருக்க்க வேண்டும்.. நடுவர் நிர்வாத்துடன் ஒப்புதல் பெற்று தலைப்பை இடுவது நல்லது..

நகைச்சுவை கலந்து பட்டிமன்றம் செல்வது நல்ல சுவையாக இருக்கும் என்றாலும் அடுத்தவரை காயப்படுத்தாமல் நையாண்டி செய்வது நலம்..

//ஒற்றைப் படையாக இருக்கும் பட்சத்தில் நடுவர் விருப்பப்படி புதிதாக ஒருவரை அழைக்கவோ அல்லது ஒருவரை விலக்கவோ செய்யலாம்.
//

இது வேண்டாமே, இதனால் ஆர்வமுள்ளவர்களின் ஆசைகள் காயப்படலாம்.. அதற்கு பதிலாக பொறுப்பாளர்கள் யாரைவாவது அழைத்து வாதிட சொல்ல வேண்டியதுதான்..

இத்திரி வெற்றியை சூட வாழ்த்துகள் டா..

தாமரை
21-08-2009, 08:22 AM
இதுக்கு தலைவர் யாரென்று எனக்கு தெரிந்துவிட்டது.....:icon_shades::Christo_pancho: :sprachlos020::sprachlos020:

யார் யார் என்னென்ன பாடு படப்போறாங்களோ... :icon_shok::icon_shok::062802sleep_prv::icon_wacko:

இந்த தலைவர்கிட்ட..... :icon_tongue::icon_tongue::icon_cool1:

ஆனா இவர் வாதாடுவோரா வந்திட்டா::icon_nono::icon_nono::sport009::sport009::torsten_violent-smi :ohmy:

எதிர்ப்பக்கம் வாதாடுரவங்க நிலைமை....:icon_hmm::medium-smiley-100::medium-smiley-100: அவ்வளவுதான்...:eek::eek:

அதனால இந்தத்திரி சுவாரசியமாக இருக்கும்..... எல்லோரும் எழுத்துக்களால சண்டை பிடிக்கிறதா நான் பார்த்ததே இல்லை...:icon_rollout::icon_rollout::lachen001:


என்னதான் என்பேரில் பாதியை வச்சிருந்தாலும்:icon_ush::icon_ush::icon_ush: செல்வாவை இப்படியெல்லாம் வாரக்கூடாது..:rolleyes::rolleyes::rolleyes:

அமரன்
21-08-2009, 08:26 AM
1. பின்னூட்டம் இடத்துடிக்கும் கைகளை கட்டுப் படுத்த அல்லது வேறு வடிகால் தர திட்டம்?

2. வாதாடுபவர்களின் வேலை கொஞ்சம் அதிகம்தான்... சொன்னதுக்கு உடனே பாராட்டு வேணும்னு எதிபார்ப்பாங்க... அந்த அங்கீகாரத்தாகத்துக்கு தண்ணீர் எங்க?

நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லுன்னு சொல்லவும் சந்தர்ப்பம் வழங்கிட்டாப் போச்சு. தாமதமாக் கிடைச்சாலும் தரமாக் கிடைச்சால் போதுமில்ல.

பட்டி'மன்றம் ஆகாதிருக்கட்டும். விதிகள் வலிதாகட்டும். வலிகள் தராதிருக்கட்டும்.

samuthraselvam
21-08-2009, 08:38 AM
என்னதான் என்பேரில் பாதியை வச்சிருந்தாலும்:icon_ush::icon_ush::icon_ush: செல்வாவை இப்படியெல்லாம் வாரக்கூடாது..:rolleyes::rolleyes::rolleyes:

செல்வத்தை வாரினா அது நம்மை வாரிவிட்டுடும்ன்னு எனக்கு தெரியாதா என்ன?:aetsch013::aetsch013:

ஆனாலும் வாரிவிடுவமிள்ள...... :sport-smiley-018::sport-smiley-018:

அதுவொரு இனிய உணர்வு அது மத்தவங்களுக்கு புரியாது..... :medium-smiley-088:

ஹா ஹா ஹா.....:medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-075::medium-smiley-080:

அமரன்
21-08-2009, 08:39 AM
நடுவரின் அழைப்பிற்குப் பிறகு தனது பதிவைத் திருத்திப் பதிதல் கூடாது. எழுத்துப் பிழைகளைதல் நீங்கலாக.


எழுத்துப்பிழைகளை பொறுப்பாளர் மூலம் திருத்தச் சொல்லலாமோ.

தாமரை
21-08-2009, 08:44 AM
செல்வத்தை வாரினா அது நம்மை வாரிவிட்டுடும்ன்னு எனக்கு தெரியாதா என்ன?:aetsch013::aetsch013:

ஆனாலும் வாரிவிடுவமிள்ள...... :sport-smiley-018::sport-smiley-018:

அதுவொரு இனிய உணர்வு அது மத்தவங்களுக்கு புரியாது..... :medium-smiley-088:

ஹா ஹா ஹா.....:medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-075::medium-smiley-080:

சிறப்பாக வாதிடுபவர்களுக்கு இ-பணம் பரிசு கொடுக்கலாம் என இன்னொரு செல்வம் (செல்வத்தை வாரி விடலாம் என்று சொல்லி தன்னைத் தானே வாரி விட்டுக் கொள்ளும் சமுத்ராசெல்வம்) சொல்லி இருப்பதாக எடுத்துக் கொள்வோம்..:icon_b:

samuthraselvam
21-08-2009, 09:13 AM
சிறப்பாக வாதிடுபவர்களுக்கு இ-பணம் பரிசு கொடுக்கலாம் என இன்னொரு செல்வம் (செல்வத்தை வாரி விடலாம் என்று சொல்லி தன்னைத் தானே வாரி விட்டுக் கொள்ளும் சமுத்ராசெல்வம்) சொல்லி இருப்பதாக எடுத்துக் கொள்வோம்..:icon_b:

எப்போதுமே பரிசுகளை தலைவர்தான் வழங்குவார்.... :icon_wink1:

செல்வதை வாரிவழங்கலாம்... அப்படியே தாமரைசெல்வதையும் வாரலாம்....:icon_shout::icon_shout: ஹி ஹி...:aetsch013::aetsch013:

பட்டிமன்றத்தில் முதலில் நடுவரை வாரிவிவது தானே அதில் பங்கேற்போரின் முதல் வேலை...

அதனால் இது உண்மையே தான்.... சிறப்பாக வாதாடுபவர்களுக்கு ஆளுக்கு 100 காசுகள் பரிசளிக்க போகிறேன்.....(முதல் சுற்றில் மட்டும்....):icon_clap::icon_clap:

என் வங்கியில் கொஞ்சம் தான் சேர்த்து வைத்திருக்கிறேன்... ஏழையாக்கி விடாதீர்கள்.....

இதன் மூலம் அடுத்தடுத்த சுற்றுக்களின் நம்ம தாமரைசெல்வர் தன்னிடம் உள்ள இருப்புக்கு ஏற்ப மின்பணத்தை அள்ளி அள்ளி தருவார் அவரே என்று கூறுகிறார்.... :music-smiley-012::music-smiley-012::music-smiley-012:என்று எடுத்துக் கொள்வோம்..:icon_b:

தாமரை
21-08-2009, 11:49 AM
தலைப்புகள் ரொம்பவே இருபக்கமும் பேச வாய்ப்புள்ளதாக இருக்க வேண்டும்.

அரசியல் வேண்டாம்..
மதம் ...??? கத்தி மீது நடப்பது போன்றது
ஆண் - பெண் பற்றிப் பேசும் பொழுது கூட சற்று எச்சரிக்கை தேவை..

செல்வா
21-08-2009, 11:55 AM
உங்கள் ஆதரவுக்கு நன்றி..
உங்கள் ஆலோசனைகளையும் ஏற்று விதிகளில் திருத்தங்கள் செய்திருக்கிறேன். இன்னும் தொடரும் போது வரும் விலக்குகளையோ புதிய விதிகளையோ சேர்த்துக் கொள்ளலாம்.

முதல் பட்டிமன்றத்தின் நடுவராக நமது பொறுப்பான பொறுப்பாளர்.... நடுநிலை நாயகன் அமரனே தகுதியானவர் எனப்படுகிறது.
நண்பர்களுக்கும் அப்படியே என நினைக்கிறேன்...
சரிதானே அமரன் ?

தாமரை
21-08-2009, 11:58 AM
இதை நான் வழிமொழிகிறேன்...

ஆதி
21-08-2009, 11:59 AM
சரியான தேர்வு டா.. விடாத கோணியோட தயாரா இரு.. அமர் எஸ்கேப் ஆக முயற்சிப்பார்.. :D

செல்வா
21-08-2009, 12:45 PM
சரியான தேர்வு டா.. விடாத கோணியோட தயாரா இரு.. அமர் எஸ்கேப் ஆக முயற்சிப்பார்.. :D
இரு அல்ல இருப்போம் :)

பரஞ்சோதி
21-08-2009, 04:33 PM
நல்லதொரு ஆலோசனைகள்.

பட்டிமன்ற விவாதங்களில் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கவும், பிறரை வருத்தா நகைச்சுவைகளையும் கொண்டதாக கொண்டு சென்றால் எல்லோரையும் கவரும்.

உடனே ஆரம்பிச்சிட வேண்டியது தானே.

- ஆலமர நிழலில் துண்டு போட்டு இடம் பிடித்த

தாமரை
21-08-2009, 04:58 PM
அடடா நல்லதொரு நாட்டாமையை மிஸ் பண்ணிட்டமே

மதுரை மைந்தன்
22-08-2009, 03:00 AM
இது ஒரு நல்ல முயற்சி. இதில் பங்கு கொள்ள விரும்புகிறேன். பட்டி மனறம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

தாமரை
22-08-2009, 03:14 AM
அமரன் தலைப்பை யோசிச்சு ஒரு திரி ஆரம்பிங்க...

இரண்டு வாதங்களில் எதை எடுத்து வாதாட விருப்பம் என்பதை தனிமடலில் அனுப்பச் சொல்லுங்க..

4 நாள் நேரம் கொடுங்க.. அதன் பின் அணியை அறிவித்து முதலாவது வாதத்தை வைக்க அழையுங்கள்.

ஒருவருக்கு தன் வாதத்தை வைக்க 24 மணிநேரம் வாய்ப்பு கொடுப்போம். அவர் வேலையாக இருந்தால் தன் அணியின் இன்னொருவரை பதிய வைப்பது அவரின் கடமை.. மௌனமும் ஒரு வாதமே!!! அதனால் வாய்ப்பிழப்புதான், சும்மா இருக்கறதை விட எதையாவது நாலுவரி எழுதைனா நல்லது என்பது தான் சரி..

மாற்றி மாற்றி வாதங்கள் முடிந்தவுடன் நடுவர் ஒரு தொகுப்புரை வழங்கணும். அதில அர்த்தமுள்ள வாதங்கள் மட்டும் இருக்கணும்...

அடுத்து இரண்டாவது சுற்று..

இது முடிந்தவுடன் மறுபடி தொகுத்து நாட்டாமை தீர்ப்பு சொல்லலாம். நாட்டாமையின் தீர்ப்பு விமர்சிக்கப்படலாமா என யோசிச்சுப் பார்த்தா, நாட்டாமை வாதத்தை மட்டுமே வைத்து தீர்ப்பு சொல்றாரா இல்லை தன்னோட கருத்தையும் வச்சு சொல்றாரான்னு பார்க்கணும்

இப்படித்தான் அதிகம் பொய் சொல்வது ஆண்களா பெண்களா என்ற ஒரு பட்டி மன்றத்தில் நடுவருக்கு குழப்பமே வந்திருச்சி...வாதம் செய்தவர் கிட்ட என்ன தீர்ப்பு சொல்ல என்று கேட்டு க்ளூ வாங்கிகிட்டு அதை வச்சு தீர்ப்பு கொடுத்தார்னா பார்த்துக்குங்க.

நடுவர் வாதங்களை எடைபோட்டு தீர்ப்பு வழங்கிட்டு வேணும்னா மற்றவர்களின் வாதங்களில் விட்டுப் போனதையும் தன் சுய கருத்தையும் விமர்சனத் திரியில் தீர்ப்புக்கு அப்புறம் சொல்லலாம்.

samuthraselvam
22-08-2009, 05:53 AM
அடடா நல்லதொரு நாட்டாமையை மிஸ் பண்ணிட்டமே

அதே......!!!:traurig001: நடுவர் அமர் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...!:icon_b:

அமரன்
22-08-2009, 08:43 AM
இது முடிந்தவுடன் மறுபடி தொகுத்து நாட்டாமை தீர்ப்பு சொல்லலாம். நாட்டாமையின் தீர்ப்பு விமர்சிக்கப்படலாமா என யோசிச்சுப் பார்த்தா, நாட்டாமை வாதத்தை மட்டுமே வைத்து தீர்ப்பு சொல்றாரா இல்லை தன்னோட கருத்தையும் வச்சு சொல்றாரான்னு பார்க்கணும்


அண்ணா... நடுவராக முன்மொழிய நான் நினைச்சது உங்களை. பங்காளியும் அப்படித்தான் கத்தைச்சான். இடையில என்ன நடந்துச்சோ.... இப்படிக் கவுத்துட்டான் பாவி.. ந*டுவ*ரை நிறைய* எழுத*வைக்க* நிறைய* யோசிச்சு வைச்சிருன்தேன். (உங்க*ளை தூண்ட*னுமே). இப்போ க*ப்சிப்.

வாதங்களை வைச்சு நாட்டாமை தீர்ப்புச் சொல்றதுதான் சரியானதாகப்படுகிறது. நடுவர் கொண்ட வாத மன்றங்களின் விதி அதுதானே. தீர்ப்பில் திருப்தி இல்லாதவிட்டால் வேறு ஒரு இடத்தில் மேன்முறையீடு செய்யட்டும். அங்கே மன்ற மறவர்கள் அனைவரும் கருத்துச் சொல்லட்டும். (உங்க*ளுக்கும் இன்னும் நான் நினைச்ச நடுவர்களுக்கும் வேலை வந்தாச்சே).

மஞ்சுபாஷிணி
22-08-2009, 07:04 PM
அருமையான திரி... வாழ்த்துக்கள் நண்பர்களே... அசத்துங்கள்...

கலைவேந்தன்
22-08-2009, 07:54 PM
புதிய பட்டிமனறம் நெடிது வளர வாழ்த்துகள்...!

-கடைசிவரிசையில் துண்டு போட்ட

தமிழநம்பி
28-08-2009, 12:52 PM
மேடைப் பட்டிமன்றங்கள் நாடக மேடைகளாகி சலிப்படையச் செய்கின்றன.

இங்குப் பட்டிமன்றம் எப்படி அமைகின்றதென்று பார்க்க ஆவலாகவே உள்ளது.

தாமரை
03-09-2009, 04:16 AM
பட்டி மன்றத்திற்கு கால் முளைப்பதற்குள் ஆரம்பித்து விடவும்..
(பாட்டி மன்றம்)

(மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு : திரி செயல்பாட்டுக்கு வந்தவுடன் இப்பதிவை நிக்கி விடவும்.

samuthraselvam
03-09-2009, 05:32 AM
பட்டி மன்றத்திற்கு கால் முளைப்பதற்குள் ஆரம்பித்து விடவும்..
(பாட்டி மன்றம்)

(மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு : திரி செயல்பாட்டுக்கு வந்தவுடன் இப்பதிவை நிக்கி விடவும்.

எப்படி எங்க பக்கத்து வீட்டு பையன் நிக்கியோட பேர் உங்களுக்கு தெரிந்தது? :icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

அமரன்
03-09-2009, 09:35 AM
இதுவரை மூன்று பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அதனால் விருப்பம் தெரிவுக்கும் தேதியை இரு நாட்களால் நீட்டிப்புச் செய்கிறேன்.

அமரன்
03-09-2009, 09:55 AM
வாழ்க்கையில் வெற்றி தோல்வி இல்லை.. என வாதாட இருவரும்..
வாழ்க்கையில் வெற்றிக்கு தோல்விக்கு சூழலே காரணம் என ஒருவரும்..
வாழ்க்கையில் வெற்றி தோல்விக்கு அவரே காரணம் என ஒருவரும்..
வாதாட முன்வந்துள்ளார்கள்..

மீதி இருவர்.....?

சிவா.ஜி
03-09-2009, 01:58 PM
அப்ப மொத்தம் நாலு பேர் இருக்காங்களே பாஸ்?

அமரன்
03-09-2009, 10:31 PM
நான்காமவர் முதல் பதிவுக்குப் பிறகு விருப்பம் தெரிவித்தார் தலைவா. இன்னும் இருவர் இருந்தால் போதும். கச்சேரி களை கட்டிடிடும்.

அமரன்
05-09-2009, 07:53 AM
பட்டி மன்றம் திங்கள் தொடங்கும்..

சிவா.ஜி
05-09-2009, 11:27 AM
ஆஹா...தொடங்கட்டும் கச்சேரி.....முதல் வரிசையில் துண்டுபோட்டு இடம் பிடிச்சிட்டோமில்ல.....

பால்ராஜ்
05-09-2009, 02:18 PM
சுத்தத் தமிழில் தான் வாதாட வேண்டுமா...!
கொஞ்சம் இசகு பிசகாக இருந்தால் பரவாயில்லையா...

பல வருடங்களாக கையாளாமல் இருந்ததால் 'துரு'ப் பிடித்து விட்டது...
தீட்ட வேண்டியிருக்கலாம்////

aravinthan21st
06-09-2009, 03:14 PM
நல்ல முயற்சி , விரைவில் தொடங்குங்கள். எனக்கும் ஆர்வம் உண்டு பங்கு கொள்ள(இடம் தந்தால்).

சிவா.ஜி
06-09-2009, 04:10 PM
நீங்களும் பங்குபெறலாம் அரவிந்தன். நடுவருக்கு(அமரன்) தனிமடல் அனுப்புங்கள் இன்றைக்குள்.

(அதற்குமுன் உங்களைப் பற்றி ஒரு அறிமுகத்தை பதிந்துவிடுங்கள். நாங்களும் தெரிந்துகொள்ளலாமில்லையா?)

அய்யா
07-09-2009, 10:46 AM
சட்டுன்னு ஆரம்பிங்கப்பா!

samuthraselvam
07-09-2009, 11:11 AM
சட்டுன்னு ஆரம்பிங்கப்பா!

ஆரம்பிக்கசொல்லிட்டு எங்கே ஓடுறீங்க அய்யா...:D

பால்ராஜ்
08-09-2009, 08:01 AM
சும்மா போய் ஒரு லுக் விட்டு விட்டு வந்தேன்...

யார் வேண்டுமானாலும் பதிவு செய்யும் நிலையில் உள்ளதே...!!

சாலமன் பாப்பையா ராஜா அவர்களைக் கூப்பிட்ட பிறகு சபையில் பார்க்க வந்த யார் வேண்டுமானாலும் மேடையில் சென்று கலாய்க்கலாமா??

அமரன்
08-09-2009, 09:07 AM
திரியில் பிற்சேர்க்கை செய்யப்பட்டது பாரா.

அய்யாவுக்கும் அச்சேர்க்கை பதிலாக அமையும் என்று நம்புகிறேன்.

தாமரை
08-09-2009, 09:27 AM
எப்படி எங்க பக்கத்து வீட்டு பையன் நிக்கியோட பேர் உங்களுக்கு தெரிந்தது? :icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

இன்னும் நிறைய பேரைத் தெரியும், உங்க ஊரில் அதுவும் நீங்க இருக்கிற ஏரியாவில். :D :icon_rollout: :D

வரத்தான் சான்ஸ் கிடைக்க மாட்டேங்குது....

samuthraselvam
08-09-2009, 09:43 AM
இன்னும் நிறைய பேரைத் தெரியும், உங்க ஊரில் அதுவும் நீங்க இருக்கிற ஏரியாவில். :D :icon_rollout: :D

வரத்தான் சான்ஸ் கிடைக்க மாட்டேங்குது....

ஓஓ அப்படியா? வாங்க வாங்க....

ஆதவா
08-09-2009, 09:55 AM
பட்டிமன்றம் போடலாம் வாங்கோ....

எனக்கு ஒரு டவுட்டு..... பட்டிமன்றத்தைப் போட்டா ஒடைஞ்சிடாது???

தாமரை
08-09-2009, 10:07 AM
ஆம்லெட்டை போட்ட ஆதவன் பட்டிமன்றத்தைப் போட்டா ஒடைஞ்சிடாதா என்று சட்டை போட்டுகிட்டு சத்தம் போட்டுக் கேட்கிறார்.

ஓ உடையைப் போடுவதால் அது உடைந்து விடும். அதனால்தான் அதற்கு உடை என்ரு பெயர் வச்சிருக்காங்க

ஆதவா
08-09-2009, 10:31 AM
ஆம்லெட்டை போட்ட ஆதவன் பட்டிமன்றத்தைப் போட்டா ஒடைஞ்சிடாதா என்று சட்டை போட்டுகிட்டு சத்தம் போட்டுக் கேட்கிறார்.

ஓ உடையைப் போடுவதால் அது உடைந்து விடும். அதனால்தான் அதற்கு உடை என்ரு பெயர் வச்சிருக்காங்க

இதுக்குப் பேருதான் போட்டு வாங்கறதா? :traurig001:

samuthraselvam
08-09-2009, 10:57 AM
இதுக்குப் பேருதான் போட்டு வாங்கறதா? :traurig001:

இல்ல போட்டு போட்டு வாங்கிக் கட்டிக்கிறது...:aetsch013:

தாமரை
09-09-2009, 02:02 AM
சமுத்ராசெல்வம், உங்கள் வாக்குறுதியின் படி முதல் வாதம் பதிந்த மதுரை மைந்தன் ஐயா அவர்களுக்கு பொன்முடிப்பை வழங்கலாமே!

கஜானா காலியாகி விடும் எனக் கவலைப் படாதீர்கள்.. இறைக்க இறைக்க ஊரும்.

samuthraselvam
09-09-2009, 08:17 AM
சிறப்பாக வாதாடுபவர்களுக்கு ஆளுக்கு 100 காசுகள் பரிசளிக்க போகிறேன்.....(முதல் சுற்றில் மட்டும்....):icon_clap::icon_clap:

என் வங்கியில் கொஞ்சம் தான் சேர்த்து வைத்திருக்கிறேன்... ஏழையாக்கி விடாதீர்கள்.....

இதன் மூலம் "அடுத்தடுத்த சுற்றுக்களின் நம்ம தாமரைசெல்வர் தன்னிடம் உள்ள இருப்புக்கு ஏற்ப மின்பணத்தை அள்ளி அள்ளி தருவார் அவரே என்று கூறுகிறார்".... :music-smiley-012::music-smiley-012::music-smiley-012::icon_b:



சிறப்பாக வாதாடுபவர்களுக்குன்னு போட்டிடுக்கேனே.....:sauer028:

ஏழையாக்குறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களா?:traurig001:

தாமரை
09-09-2009, 08:26 AM
ஆதவா அமரன் இரண்டு பேர்கிட்டயும் இருந்து வாங்கிக்கலாம்.. சேர்த்து குடுத்து வச்சிருக்கமில்ல

:D :D :D

மதுரை மைந்தன்
09-09-2009, 10:35 AM
எங்கே பரிசு! எங்கே பரிசு!

பொன் முடிப்பை சீக்கிரம் கொடுங்களய்யா (முதல்ல இந்த பால்காரன் கணக்கை தீர்கணும்)

அமரன்
09-09-2009, 10:55 AM
எங்கே பரிசு! எங்கே பரிசு!

பொன் முடிப்பை சீக்கிரம் கொடுங்களய்யா (முதல்ல இந்த பால்காரன் கணக்கை தீர்கணும்)

ஆமாம்.. சீக்கிரம் கொடுங்க..

- பால்கார*ன்

தாமரை
09-09-2009, 12:51 PM
சிறப்பாக வாதாடுபவர்களுக்குன்னு போட்டிடுக்கேனே.....:sauer028:

ஏழையாக்குறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களா?:traurig001:

கொடுத்தால் இந்த மன்றத்தில் என்றுமே பணம் சேரும்...

கொடுத்து கொடுத்து பணக்காரியாகிடலாம்..

(அந்த ரகசியம் அறிந்த பூமகள், யவனிகா, மலர் எல்லாம் இப்ப அதிகம் தலைகாட்டறதில்ல!! அவங்க பணமும் வாங்கித்தர்ரேன்)

ஆதவா
09-09-2009, 01:08 PM
ஆதவா அமரன் இரண்டு பேர்கிட்டயும் இருந்து வாங்கிக்கலாம்.. சேர்த்து குடுத்து வச்சிருக்கமில்ல

:D :D :D

:eek::eek::eek:

யாரப்பா அது... இந்த ஐகேஷ் வெளியே தெரியறதால எனக்கு பல பிரச்சனைகள் இருக்கு... மறைக்கறமாதிரி ஏதாச்சும் வழியிருந்தா சொல்லிருங்க.... :rolleyes:

ஆதவா...:sprachlos020:

சிவா.ஜி
09-09-2009, 04:43 PM
ஆமா....அதெப்படி ஆதவாகிட்டயும், அமரன்கிட்டயும் இம்புட்டு துட்டு சேந்துச்சி...?

புலன்விசாரனைக்கு கோரிக்கை வைக்கும்

மன்றக்குடிமகன்

samuthraselvam
10-09-2009, 06:56 AM
பட்டிமன்றம் சிறப்பாக நடை பெற தாமரை அண்ணா எனக்கு பரிசளித்திருக்கிறார்.... (எதுக்கு?!?!?:confused:)என்பதனை நான் புரியாமல் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.....!! வாரி வாரி வழங்கும் பொது வள்ளலாகலாம்....:sport-smiley-018::sport-smiley-018:ஹா ஹா......!!

அமரன்
10-09-2009, 07:06 AM
ஆமா....அதெப்படி ஆதவாகிட்டயும், அமரன்கிட்டயும் இம்புட்டு துட்டு சேந்துச்சி...?

புலன்விசாரனைக்கு கோரிக்கை வைக்கும்

மன்றக்குடிமகன்

கஷ்டப்பட்டு தட்டிப் பறிச்ச காசுங்க இது.

வருமான வரில்லாம் கட்டுறேன். இது பற்றிப் பேசி மான நஷ்ட வழக்குப் போட வைச்சுடாதீங்க.

எப்பூடி...:)

ஆதவா
10-09-2009, 07:08 AM
பட்டிமன்றம் சிறப்பாக நடை பெற தாமரை அண்ணா எனக்கு பரிசளித்திருக்கிறார்.... (எதுக்கு?!?!?:confused:)என்பதனை நான் புரியாமல் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.....!! வாரி வாரி வழங்கும் பொது வள்ளலாகலாம்....:sport-smiley-018::sport-smiley-018:ஹா ஹா......!!

முன்ன மாதிரி நான் பொறுப்பாளனா இருந்திருந்தா, மலருகிட்ட காசை லவட்டினமாதிரி உங்ககிட்டையும் லவட்டியிருக்கலாம்...

தாமரை
10-09-2009, 08:22 AM
பட்டிமன்றம் சிறப்பாக நடை பெற தாமரை அண்ணா எனக்கு பரிசளித்திருக்கிறார்.... (எதுக்கு?!?!?:confused:)என்பதனை நான் புரியாமல் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.....!! வாரி வாரி வழங்கும் பொது வள்ளலாகலாம்....:sport-smiley-018::sport-smiley-018:ஹா ஹா......!!

இதுக்குத்தான்...

பாரபட்சமில்லாமல் பொதுவா கொடுக்கணும் என்று உணர்ந்து கொண்ண்டு சொல்லி இருக்கீங்க. அதை முதலிலேயே நான் அறிந்து கொண்டதால்தான் கொடுத்தேன்.

மஸாகி
10-09-2009, 09:09 AM
நம்ம பட்டிமன்றத்தில ஒரே '' ஐகேஷ்.. ஐகேஷ்.. '' என்று சப்தமா கிடக்கே, ஏதோ கொடுங்கிறாங்க போல - என்று எட்டிப் பார்க்கலாமென்டு வந்தா, கடைசியில ஆள் தெரியாம என்னோட காசை ஆதவா லவட்டினாலும் லவட்டுவாரு போல கிடக்கே.. எஸ்கேப்..

நட்புடன்-மஸாகி
10092009

samuthraselvam
10-09-2009, 10:03 AM
இதுக்குத்தான்...

பாரபட்சமில்லாமல் பொதுவா கொடுக்கணும் என்று உணர்ந்து கொண்ண்டு சொல்லி இருக்கீங்க. அதை முதலிலேயே நான் அறிந்து கொண்டதால்தான் கொடுத்தேன்.

நல்லா அழுத்தமா உணர்ந்து கொண்ண்டீங்க...

சிவா.ஜி
10-09-2009, 05:32 PM
ம்ஹீம்....இதான் மேட்டரா....பாஸ் என்னடான்னா கஷ்டப்பட்டு தட்டிப்பறிச்சதுன்னு சொல்றார்....ஆதவா அதுக்கும் மேல போய்....லவட்டிக்குவோம்ன்னு சொல்றார்....விடக்கூடாது.....

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் எசமான்....நான் பொறுப்பாளரா இருந்தப்ப எனக்கு ஏன் இந்தக் கலையை யாருமே சொல்லிக் கொடுக்கல....?

தும்பைவிட்டு வாலை பிடிக்கும்

ஏமாளி

பால்ராஜ்
16-09-2009, 05:34 AM
பட்டிமன்றம் பற்றிய திரி இ-காசு (இல்லாத .:icon_ush:.. காசு??) பற்றி சற்றே திசை திரும்பி விட்டாலும் எல்லோரும் புன்முறுவலுடன் உரையாடிக் கொண்டிருப்பது பசுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது....:):)

"மொத்தம் இரண்டுச் சுற்றுகள் விவாதம் வரும்" என்பது சரிதானா??

தாமரை
16-09-2009, 05:39 AM
ஆமாம் கடைசியா வாதாடினவர் சொன்ன கருத்துக்கு முதலாக வாதாடினவர் பதில் சொல்ல வாய்ப்பளிக்க வேணாமா?

இரண்டாவது சுற்றில் புதுக் கேள்வி எதுவும் வேணாம் வேணாம் வேணாம்னு சொல்லிடலாம்.. அதனாலதான் முதல் சுற்றின் இறுதியில் நடுவர் வாதங்களைத் தொகுத்து அளிப்பார்.

மொத்த உறுப்பினர்கள் : 6,407 இதில் இங்க வாதாட முன் வந்து உரை தயார் செய்து பதிபவர்கள் 6 பேர். நடுவர் ஒருவர்,

அதனால் யாரையும் வெறுங்கையோடு அனுப்ப வேணாம்னு தங்கை கிட்ட அன்பா கேட்டுக்கறேன்.

samuthraselvam
16-09-2009, 11:30 AM
ஒரு சுற்று முடியட்டும் அண்ணா.... எல்லோரும் வாதாட வரட்டும் அண்ணா.. பரிசு வழங்குவதில் ஏற்ற தாழ்வு நிச்சயம் இருக்காது... கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தாலும் அதில் பயன் இருக்க வேண்டுமில்லையா?

கண்மணி
18-09-2009, 02:52 AM
அம்மாடி இவங்களை சன் டி.வி. பட்டிமனறத்தில் பேச அழைத்தால் தீபாவளிக்கு ஆரம்பிச்சு பொங்கல் வரை பேசிக்கிட்டே இருப்பாங்க. :lachen001:

அதாவது ஒரு பொறி கிடைச்சா, பட்டாசா சரவெடியா வெடிச்சு, மத்தாப்பா ஒளிர்ந்து, வாண வேடிக்கை நடத்தி,(தீபாவளி)

கடைசியில் சுவைபட (பொங்கல்) வாதத்தை முடிப்பாங்க என்று பாராட்டியிருக்கீங்க.

ரொம்பவே நன்றி மதுரை மைந்தன் ஐயா!!!

கண்மணி
19-09-2009, 02:33 AM
நான் ஒரு முடிவு எடுத்து விட்டேன், இனிமேல் வெற்றிக்கனி தொடர்ந்து சுவைக்க, நான் கண்மணி அவர்கள் வாதிடும் அணியுடன் சேர்ந்து வாதிட இருப்பது தான். இது தான் சூழ்நிலையை பயன்படுத்தி வெல்வது என்பது :)

அண்ணா, நடுவர் வாதாடுங்க அப்படின்னு கேட்டார்.. சரின்னு சொன்னேன். இந்தத் தலைப்பில தான் பேச ஆள் பத்தலை இதைப் பேசுங்க என்றார்.. பேசினேன்..

இனிமேலும் அப்படியே செய்வதாகத்தான் உத்தேசம், அதனால நீங்க நடுவர்களைத்தான் காக்கா பிடிக்கணும்னு நினைக்கிறேன்

கண்மணி
19-09-2009, 02:47 AM
கண்மணி.... சூழல் சூழல் அப்படிங்கறது மட்டும் தான் மனசில் எதிரொலிக்குது...

அக்கா, தியானம் என்பது இதுதான். ஒரு சொல்லை எடுத்துகிட்டு அதைப்பற்றி ஆழ்மனசில் முழுசா அசை போட்டா, அதைப்பற்றி பல விதங்களில் பல கோணங்களில் அலசினா, மெல்ல மெல்ல அந்தச் சொல் நம்மை முழுசா ஆக்ரமிக்கும்.

இன்னும் குழம்ப அல்லது தெளிய எண்ணங்களும் மின்சாரமும் படிங்க...
(அதான் என் கையொப்பத்திலேயே சுட்டி இருக்கே)

பால்ராஜ்
19-09-2009, 06:38 AM
நம்ம டீம் ஆளைக் காணோமே என்று வேண்டுமானால் நான் ஒன்ஸ் மோர் ஆடுகிறேன் என்று நடுவருக்கு தனி மடல் அனுப்பியிருந்தேன்.. பார்த்தாரா தெரியவில்லை...!

ஒரே இன்னிங்ஸ்-இல் ஒரே ஆள் இரண்டு தடவை பேட்டிங் செய்வது முறையா தெரியவில்லை..

வேறு ஆள் வரவில்லை என்றால் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கி விடலாம்.. லாஸ்ட் ஓவர் பேட்டிங் செய்வதில் ஒரு வச்தி ஆஸ்க்கிங் ரேட் எல்லாம் கணக்கு போட்டு ஒரு வழி பண்ணி விடலாம்.

அமரன்
19-09-2009, 07:30 AM
கிடைத்தது பாரா. முடிவெடுக்க அவகாசம் தேவைப்பட்டது. இரு சுற்றிலும் நீங்களே தனியாக கம்பு சுற்றுவதா அல்லது ஒருவருக்கு ஒரு சுற்றில் ஒரு முறை என்ற விதிவழி கொண்டு செல்வதா என்று இங்கேயே கலந்தோசித்து விடுவோமா.

பால்ராஜ்
19-09-2009, 07:36 AM
வேறு ஒரு அப்ரோச்... நான் ரன்னர் ஆகவும் தயார்... விக்ரம் பேரில் பாட்டிங்க் நடக்கட்டும்... ரன்களும் அவர் பேரில் குவியட்டும்... (எப்படியாவது மாட்ச் முடிய வேண்டாமா???)

ஆஹ்ஹா குழப்புவதில் நீ மன்னன் தான் என்று எனது மனச்சாட்சியே உறுத்து(!)கிறது..

கீழே கடைசிவரை Scroll செய்து போனதில் விக்ரம் இந்த இரண்டு திரிகளையுமே பார்க்கவில்லையோ என்றும் ஒரு சிறிய ஐயம்...??

பி.கு..
ஒருவிதத்தில் சொல்லப் போனால் என்னைப் பொறுத்தவரை இரண்டாவது இன்னிங்க்ஸ் தேவை இல்லை... கடைசி ஒரு ஓவர் கிடைத்தால் போதும்..!!:mini023:

பால்ராஜ்
19-09-2009, 03:46 PM
அடுத்த இன்னிங்ஸ் தொடங்கியது நல்ல தொடக்கம்..
சூழல்களைப் பற்றி அதிகம் கவலைப் படாமல் 'நமது' நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற படிப்பினையும் உள்ளதோ???

கண்மணி
20-09-2009, 01:51 AM
பால்ராஜ் அண்ணன் ஓவர் ஓவர்னு சொல்றார். ஒரே ஓவரா? ரொம்ப ஓவரா? எல்லாமே ஓவரான்னுதான் புரியலை.

அதிருக்கட்டும். இரண்டாவது இன்னிங்ஸையே தொகுப்புரையாக்கிட்டா என்ன?

இரண்டு பேரில் ஒருத்தர் மற்ற அணியினர் வாதாடியது தவறு, அது ஏன் தவறு, தன் வாதம் ஏன் சரி என்று தொகுத்து வழங்கட்டுமே!

பால்ராஜ்
22-09-2009, 08:09 AM
செஸ்... சதுரங்கம் விளையாடும்போது... ஸ்டேல்மேட்.. என்ற ஒரு நிலை உண்டு..
கிரிக்கெட்டில் 'டை" TIE .. எப்பொழுதாவது நிகழ்வது உண்டு...

ஒவர் ஒன்றா ... ஒவரே ஒவரா.. இப்படி கேள்வி எழுப்பிக் கொண்டே போகலாம்..

ஆனால் வெட்டியாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதோ என்ற கேள்வி மனதுக்குள் குடைந்து கொண்டே இருக்கிறது...

தாமரை
24-09-2009, 04:00 PM
பட்டி மன்றம் அம்போன்னு நிக்கிதே... யாராவது கவனிங்க

அமரன்
25-09-2009, 06:55 AM
பாரா எங்கே போனீங்க.

தாமரை
25-09-2009, 06:56 AM
நீங்கா பாரு பாரு என்று சொல்லி இருந்தா பார்த்திருப்பார். பாரா பாரான்னு சொல்றதால பாராமுகமாவே இருக்காருன்னு நினைக்கிறேன்.

பால்ராஜ்
25-09-2009, 06:58 AM
இரண்டு இன்ஸ்டால்மெண்ட்-ஆக போட அனுமதி உண்டு என்றால் முதல் பகுதி ரெடி...

பால்ராஜ்
25-09-2009, 07:02 AM
முதல் சுற்றின் முறையில் வருவது என்றால் 'இல்லை'வாதிகளுக்கு முதல் ஃப்ரிஃபரன்ஸ் கொடுப்பது முறையாக இருக்கும்..

எப்படியும் இன்று இரவுக்குள் என் வேலையை முடிக்க முயலுகிறேன்..

பால்ராஜ்
26-09-2009, 02:20 AM
ஒரு வகையாக இரவு முழுவதும் ஒரு சைட்-இல் மாட்சையும் பார்த்து ஒரு பக்கம் டைப்பும் செய்து முடித்து விட்டேன்..
சற்று பூசி மெழுக அவகாசம் இல்லை..
இனி செய்தால் விதிமுறை மீறலாக இருக்காது என்று நம்புகிறேன்..

செல்வா
04-10-2009, 11:01 AM
அடுத்தப் பட்டிமன்றம் யார் தலைமை ஏற்பது...?

வியாசன்
05-11-2009, 06:43 PM
பட்டி மன்றம் அம்போன்னு நிக்கிதே... யாராவது கவனிங்க

நீங்கள் நடுவராக இருப்பதாக இருந்தால் விஞ்ஞான வளர்ச்சி மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்றதா அல்லது சீரழிக்கின்றதா?
என்ற தலைப்பில் வாதாடலாம்.