PDA

View Full Version : **கவிக்குள் கவி***:ஒரு கவிதை விளையாட்டு..



Pages : [1] 2

இன்பக்கவி
20-08-2009, 11:24 AM
மன்றத்தில் உள்ள அனைவருக்கும் வணக்கங்கள்
உங்கள் அன்பொடும், மன்றத்தில் உள்ளவர்களின் அனுமதியோடும் ஒரு விளையாட்டு போட இருக்கிறேன்...

ஒரு கவிதை விளையாட்டு..

ஒருவர் ஒரு கவிதை போட்டுவிட்டு...
"அடுத்த தலைப்பு" என்று
ஒரு தலைப்பை விட்டு செல்ல வேண்டும்...

அடுத்து வருபவர்
அந்த தலைப்புக்கு கவிதை போட்டுவிட்டு
அவர் ஒரு "தலைப்பை" விட்டு செல்ல வேண்டும்...

இல்லை எனில்
உங்கள் கவிதையில் வரும் ஒரு சொல்லையோ...
அல்லது வரியையோ தலைப்பாக கொடுக்கலாம்.......
கடைசி வரி தான் போடணும் என்று இல்லை...
கவிதையில் உள்ள எந்த வரியானாலும்..அல்லது வேற சொல்..தரலாம்...

இது தான் விளையாட்டு....

இதோ நான் ஆரம்பித்து வைக்கிறேன்...


நித்தம் உனை நினைத்தேன்..
நெருங்கிவரத் துடித்தேன்...
கைக்கு எட்டாத பொருள்ளாய் நீ...
உன்னை பார்த்து வளர்ந்தவள் நான்
நான் உன்னிடம் வர கூடாதா??
என் கையில்...
நீயாவது வந்து விடு
நிலவே....


அடுத்த தலைப்பு.....

நிலவே.......

தீபா
20-08-2009, 11:44 AM
என்னவோ சொல்ல வர்றீங்க... ஆனா என்னன்னுதான் என் மரமண்டைக்குப் புரியலை.

கவிதையின் கடைசி வரி எடுத்து கவிதை எழுதியாச்சு,
ஒருவர் தொடர, அதைத் தொடர்ந்தும் கவிதை எழுதியாச்சு
கவிதை வகையறாக்கள் (பதில், எதிர்வினை, விமர்சனம்) எழுதியாச்சு
படக்கவிதையும்...
இப்போது இது..

உங்க கவிதைக்கு கொஞ்சம் ஒட்டி வரும்படியான (Similiar) கவிதை ஒண்ணு கீழே...

அவள் கண்ணுக்குள்
வந்தது எப்படி
(என்) கைக்கெட்டாத நிலவே!!??

இப்படி தொடரலாம் என்று நினைக்கிறேன்.!!
உங்க கருத்து??

- தீபா

இன்பக்கவி
20-08-2009, 12:36 PM
ஐயோ...என்னையே குழப்பி விட்டீங்கள்...:confused::confused:
நான் சரியாக புரியும் படித்தான் போட்டு இருக்கேன் என்று நினைக்கிறேன்...:traurig001:

கடைசி வரி தான் போடணும் என்று இல்லை...
கவிதைக்குள் வரும் எந்த சொல்லாக இருந்தாலும் சரி.....
அல்லது வேற சொல்.. தரலாம்...

தீபா
20-08-2009, 03:21 PM
ஆமாவா??
குழப்பிட்டேனா?

சரி விடுங்க... அடுத்த கவிதை கொடுங்க.

அமரன்
21-08-2009, 08:09 AM
இது பாட்டுக்குப் பாட்டு வகையறாவைச் சேர்ந்தது. நிலவேயில தொடருங்கன்னு கவிதா சொல்லி இருக்காங்க..

நிலவே
தேய்ந்து காணாமல் போய்
வளர்ந்து முழுமையாகி
உருவஜாலம் காட்டுகிறாயே..
உன்னைப் பார்த்துத்தான்
என்னவளைப் படைத்தானோ
பிரம்மன்..

இப்போ அடுத்தவர் உன்னை"யில தொடரலாம்.. இப்படித்தானே கவிதா.

கா.ரமேஷ்
21-08-2009, 08:38 AM
உன்னை என்னவென்று சொல்லி அழைப்பது
இதயத்திற்குள் இல்லாத காதலியென்றா..?
இனிப்பிற்க்குள் இல்லாத சர்க்கரைபோல் - என்
கனிபிற்க்கு அடங்காத நேசமென்றா...?
இல்லையென்று நீ சொன்னபோதும்
இருக்குமென்ற இயலாத கானலென்றா...?

என்னவளை படைத்த பிரம்மனே
ஏதாவது பதில் இருந்தால் சொல்லிவிட்டு போ...

இன்பக்கவி
21-08-2009, 06:42 PM
சொல்லிவிட்டு போ..
உன்னை எண்ணி வாழும்
எனக்கு இல்லை..
உன்னை நினைத்து துடிக்கும்
இதயத்திற்கு....

அக்னி
22-08-2009, 05:57 AM
இதயத்திற்கு
வேலை மாற்றம்...
சுத்திகரிக்கும் வேலையிலிருந்து,
சுத்தி வரும் வேலைக்கு...
எனக்குக் காதல் வந்ததே...

இதயத்திற்கு
வேலை மாற்றம்...
இரத்தம் பாய்ச்சும் வேலையிலிருந்து,
இரத்தம் காய்ச்சும் வேலைக்கு...
உனக்கும் காதல் வந்ததே...

இன்பக்கவி
24-08-2009, 06:48 AM
மாற்றம்
எனக்குள் வந்தது..
உன்னை பார்த்த கணத்தில்
என் நெஞ்சம் துடித்தது
எனக்காய் பிறந்தவன் நீயோ...
என்னை உன் பார்வையால்
கட்டி இழுத்தாய்....
இன்றுவரை விடுபட இயலவில்லை
என்னால்...

samuthraselvam
25-08-2009, 06:29 AM
எனக்காய் பிறந்தவன் நீயோ...
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாய்
வாழ்ந்த வாழ்க்கை...!
வாழும் வாழ்க்கை முழுதும் நீ அருகிலிருக்க
நான் உன் துணையாக இருப்பேன் என்ற கனவு...!
இன்று நினைத்தாலும் என் உடல் சிலிர்க்கிறதே....
கற்பனை தான் என எண்ணும் அளவிற்கு
என் நிகழ்காலம் உன் நினைவுகளை மட்டும்
தந்துவிட்டு சென்ற இறந்தகாலம் ஆகிவிட்டதே....?!
என் நினைவு என்னும் நீரூற்று உள்ள வரை
அது என்றுமே பசுமையான சோலையில்
தென்றலாக வீசிக்கொண்டு இருக்கும்
உன்னை சந்திக்கும் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து.......!!!!!!!!!!!!!

இன்பக்கவி
25-08-2009, 11:38 AM
தென்றலாக வீசிக்கொண்டு இருந்த
என்னுள் புயலாய் வந்தவனே...
மின்னலாய் மறைந்து போய் விடாதே....
உன்னை பிரிந்தால் உயிர் வாழ இயலாது
என்னால்

அமரன்
26-08-2009, 08:16 AM
மின்னலாய் சன்னலால்
தென்றல் காற்று.

சாத்தப்பட்டது கதவு..

கதவிடுக்கில்
சிக்கிக்கொண்டது மனசு..!

கசியும் குருதியின்
ஜதிகளுக்கு
உதறும் உடலின்
நாட்டியம்..

அக்கம் பக்கங்களின்
சொண்டாட்டம்
பக்க வாத்தியம்..

அரங்கேறுகிறது
ஜெய சாம்ராய்யம்..
கரகோஷம் நிச்சயம்.

கா.ரமேஷ்
26-08-2009, 09:41 AM
காற்று பெறுவோரெல்லாம்
கருணை கற்று இருந்திருந்தால்...?
கல்நெஞ்ச மனங்களில் கூட
இனம் இருந்திருக்காது...
பணம் சேர்ந்திருக்காது...
குணம் குறைந்திருக்காது...

தனக்கென வாழும் உலகமே
உறவுகள் மறப்பது கொடுமையே
உணவின்றி உயிர் சரியும் - நம்
உறவுகளை மறப்பதும் கொடுமையே...!

இன்பக்கவி
26-08-2009, 07:37 PM
உறவுகள் இல்லாத உலகம் இல்லை..
கிடைத்த உறவுகள்
எல்லாம் நிலை இல்லை..
நிலைத்த உறவுகள்
எல்லாம் உண்மையாக இல்லை...
உண்மையாய் உண்மையை நேசிக்கும்
உள்ளம் வேண்டும்
என் இறுதி மூச்சு உள்ள வரை

மஞ்சுபாஷிணி
29-08-2009, 02:50 PM
இறுதிமூச்சு
உனக்காக காத்திருந்து
துடித்துக்கொண்டு....

மெல்ல நீ எடுத்துவைக்கும்
உன் காலடிச் சத்தத்துக்காக
காத்திருக்கும் என்
இறுதிமூச்சு

உன்னோடு வாழாது போனாலும்
எந்தன் மூச்சு மட்டுமாவது
உன்னுடன் கலந்துவிட
காத்திருக்கும் என்
இறுதிமூச்சு

இன்பக்கவி
29-08-2009, 05:52 PM
இறுதிமூச்சு
உனக்காக காத்திருந்து
துடித்துக்கொண்டு....

மெல்ல நீ எடுத்துவைக்கும்
உன் காலடிச் சத்தத்துக்காக
காத்திருக்கும் என்
இறுதிமூச்சு

உன்னோடு வாழாது போனாலும்
எந்தன் மூச்சு மட்டுமாவது
உன்னுடன் கலந்துவிட
காத்திருக்கும் என்
இறுதிமூச்சு

உன் காலடிச் சத்தத்துக்காக
காத்திருந்தேன்...
உன் காலடியை மட்டுமே
பதித்து விட்டு சென்றாய்....
உன்னை தொடரும் என் நினைவுகள்...
உயிர் கரைகிறேன்
உன்னை தொடருவேன்...
நிழலாக இல்லை நிஜமாக
உன்னைச் சேரும் வரை....

அக்னி
29-08-2009, 06:51 PM
நினைவுகள்
ஒருபோது...
காதற்பட்டுக் களித்திருந்தேன்...

நினைவுகல்
இப்போது...
காயப்பட்டுக் கற்கின்றேன்...

சொல் மீண்டும் காதல்...
சொன்னால் மீளும் காதல்...

மஞ்சுபாஷிணி
29-08-2009, 09:42 PM
மீளும் காதல்
மாண்டுப்போவதில்லை

மீட்டக்காதல்
மக்கிப்போவதுமில்லை

மீட்டியக்காதல்
மண்ணாய் போவதில்லை

காதலித்து காதலித்து
நேசத்தை உயிராய்
நீயும் வளர்த்து

பொய்யாய் போகாது
இந்த அன்புக்காதல் என்றும்

சிவா.ஜி
30-08-2009, 05:44 AM
பொய்யாய் போகாது என் காதல்
நீ சொன்ன பொய்யால்......
உன் உதடுகள் சொன்னது பொய்யென
கண்களில் வழியும் காதல் சொல்கிறது
இன்னும் ஏன் தயக்கம்
எதனால் இந்த மயக்கம்?

என்மேல் காதலில்லை எனும் பொய்யை
நீர்மேல் எழுதிய எழுத்தாய் நினைத்து என் காதல்
வேர்மேல் நீர் பாய்ச்சு......

கலைவேந்தன்
30-08-2009, 06:55 PM
நீர் மேல்எழுதிய காதலை
நீர்மேல் எழுதியதாகக் கொள்வேன்...
நீர் மேல்(male) அல்லவா....
அப்படித்தானே சொல்வீர்...?

நீர் மேலே மேலே சொல்லிப்போம்...
நீர் மேலான காதலைச் சொன்னதால்
நீர்மேல் எழுத்தாய்க் கொண்டேன்...

நீர்மேல் இருந்து (மப்புல) போதையில் சொன்னதோ..?
நீர் மேலாய் உமை நினைத்தீரோ..?
நீர் மேல்உயர்ந்தால் கமலமும் உயரும்..
நீர் மேலே உயர்ந்தால் நானும் மகிழ்வேன்...!

நீர்மேல் வசிப்போர் தாகம் கொள்வரோ...?
நீர் மேல் மேல் உயர்வீர்..
நீர்மேல் வேண்டாமே மோகம்....!

நீர் மேல் தெள்ளும் மிதக்கும் கண்டீர்
நீர்மேல் எழுதும் காதல் வேண்டாம்..
நீர் மேல்எழுதிய கடிதமும் வேண்டாம்....!

மஞ்சுபாஷிணி
30-08-2009, 07:43 PM
கடிதமும் வேண்டாம்
அது சொல்லும்
மன்னிப்பும் வேண்டாம்

காதலால் நீ என்னிடம்
வதைபட வேண்டாம்
உன் மௌனம் உரைக்கும்
மொழியும் வேண்டாம்

பிணக்கம் தீர்த்துவிட
உன் புன்னகை மட்டும்
அன்புடன் சிந்திவிடு
அதுவே எனக்கு போதும்

பாலகன்
30-08-2009, 09:26 PM
உன் மெளனம் உரைக்கும்
நீ என் மெளனம் கலைத்தவள் என்று
என் இறுதி மெளன ஊர்வலத்தில் மெளனமாய் நீ

ஆதி
31-08-2009, 11:16 AM
நீ என் மௌனம்
கலைத்தவள் என்று
உனக்கு தெரியாதா ?

உன்
வாய்ச்சிலம்பிலிருந்து தெறித்த
கோப பரல்கள்
"யானோ அரசன் ?
யானே கள்ளவன்" என
உன் முன் தலைகுனிய வைத்தது..

உன் விழி மார்ப்பிலிருந்து
நீ திருகி எரிந்த கண்ணீர் முலை
எரித்து போட்டது
என் இறுமாப்பு மதுரையை..

என் கர்வ மகுடத்தை கலட்டி
திருவோடாய் என் இதயத்தை ஏந்தி
காதலை உன்னிடம் யாசிக்க
கலைந்தது என் மௌனம்..

தாமரை இலையும்
தண்ணீருமாய் இருந்த
நம் இதழ்கள்
ஒட்டிக் கொண்டன காதல் பிசினால்..

சிவா.ஜி
01-09-2009, 04:48 PM
இதழ் வழி கசியும்
ஒரு புன்னகையை காண
முதல்முறை வாய்ப்பு கிட்டியது

நுணல் அதன் வாயால் கெடுவதைப்போல
பதில் புன்னகையால் என்
உடல் நொறுங்கியது உன்
உடன் பிறப்பால்.....

samuthraselvam
02-09-2009, 09:00 AM
புன்னகையால் பூக்களையும் மலரவைக்கும்
வசீகரம் எனக்கிருக்கிறது...

இருந்தும் ஏனடா பொன்னகையை கேட்கிறாய் நம் திருமணத்திற்கு?

அமரன்
02-09-2009, 09:04 AM
ஏனடா கேட்டாய்
சோடி வளையல்..
தூரத்தே கேட்கிறது பார்
காவலின் உறுமல்..

இன்பக்கவி
02-09-2009, 09:20 AM
வளையல் ஓசைக்கூட
இனிமை தான் உணர்ந்தேன்
காதலியே நீ என் அருகில்
இருக்கும் பொழுதுகளில்...
உன் கைகளில் இருப்பதால்
வளையல் அழகாய் தெரிகிறதோ...

மஞ்சுபாஷிணி
02-09-2009, 11:02 AM
நீ என் அருகில்
இருக்கும் நேரம்
என்னை மறக்கிறேன்
என்பது உண்மை
என் துன்பங்கள்
என்னை விட்டு
தூரப்போவதும் உண்மை
என் சந்தோஷங்கள்
மொத்தவடிவாய்
உன்னுருவில்
வந்தது உண்மை
அது என்றும் நிலைத்திருக்க
நீ என் அருகில்
என்றுமிருக்க
என் வேண்டுதல்
உன்னிடத்து
அதுவும் உண்மை

சிவா.ஜி
02-09-2009, 01:15 PM
என் சந்தோஷங்கள்
என் தாய்வீட்டு சீதனமாய்
என்னோடு கொண்டுவரப்பட்டவை

உன்வீட்டு விளக்காய்தான்
உன்னால் அழைத்து வரப்பட்டேன்
உன்னோடு சேர்ந்து
உன் உறவுகளும்
நல்லெண்ணைக்கு பதிலாய்
மண்ணென்னை ஊற்றீனீர்கள்

இருந்தும் எனக்கே எனக்காக
நான் கொண்டு வந்த என் சந்தோஷங்களை
மண்ணென்னை புண்ணுக்கு
மருந்தாக்கி இட்டுக்கொள்கிறேன்

பொன்னகைகள் பறிக்கப்பட்டாலும்,
புன்னகைகள் நிலைத்திருப்பது
உள்ளே ஊன்றி வைத்த
என் சந்தோஷ விதைகளால்தான்.

கலைவேந்தன்
02-09-2009, 06:19 PM
உன்வீட்டு ஜன்னலுக்குவந்து சேர்ந்த யோகமென்ன
முன் தாடை ஏந்திநாளும் நீ நின்ற கோலமென்ன
பின்னழகு சுவர் பார்க்க முன்னழ்கை ஜன்னல் தாங்க
என்னை எண்ணி நாளும்நீ நிலாவாய் தேய்ந்ததென்ன?

மஞ்சுபாஷிணி
02-09-2009, 06:56 PM
நாளும் நீ நிலாவாய்
நான் கண்ட கனாவாய்
கண்டெடுத்த என் பாவாய்
உன் காதலை என்னிடம் பகிர்வாய்

கீதம்
03-09-2009, 01:18 AM
கண்டெடுத்த முத்தொன்றுக்கு
காதலென்றே பெயரிட்டேன்;
அழகு மணியாரத்தில் பதித்து
மார்பினிலே தவழவிட்டேன்;
உரசும் ஒவ்வொரு பொழுதும்
உருவிச் செல்கிறது எந்தன் உயிரை!
கழற்றி வீசவும் மனந்துணியாது
காவு கொடுக்கிறேன் என்னை நானே!

இன்பக்கவி
03-09-2009, 06:27 PM
காவு கொடுக்கிறேன் என்னை நானே!
கூடாது காதல் என்ற போதும்
காத்திருக்கிறேன் தினமும்...
என் முடிவு இதுதான் அறிவேன்...
முடிவை மற்ற மனம் இல்லை..
மரணம் கூட அழகுதான்..
உன்னை நேசித்த பிறகு உணர்கிறேன்...

மீரா
03-09-2009, 07:52 PM
மரணம் கூட அழகுதான் - வலியில்லாமல் வரும்போது
சிரமம் ஏதுமில்லாமல் சிறுமூச்சை விடும்போது
கரங்களைப் பற்றிய உறவுகள் அழும்போது
மரத்துப் போன மனமும் அமைதி கொள்ளும்போது
மரணம் கூட அழகுதான்....

மஞ்சுபாஷிணி
03-09-2009, 08:06 PM
கரங்களைப் பற்றிய உறவுகள்
என்னெதிரில் அன்பு பகர்ந்து
முதுகுவழி புறம்பேசி சிரித்து
குழைவாய் பாசம் உரைத்தாலும்
எல்லாம் அறிந்தும் அறியாதவன்போல்
உண்மை அன்பையே தருகிறேன்
என்றும் அவர்க்கு நானும்

கா.ரமேஷ்
04-09-2009, 10:09 AM
எல்லாம் அறிந்தும்
எதற்காக என் மனகுளதில் கல்லெறிந்தாய்..?
செதில்களாய் செல்லுகையில்
சேரபோகிறாய் என நினைத்தேன்
அலைகளை என்னுள் ஏற்படுத்தி - நீ
ஆழ் களிமண்ணில் மறைந்தாய்...
இன்னும் என்னில் இருக்கிறாய் என
குளிர்ச்சி தந்து கொண்டாடுகிறேன் - நீயோ
மீன்வீசி வந்தவன் வலையில்
தேன்பூசி சென்றதேனோ...?
கலங்கியது என்ன (மன)குளம் மட்டுமா...?

தமிழநம்பி
04-09-2009, 11:44 AM
இறுதிமூச் சுள்ளவரை இன்னினியள் உன்னல்

நிறுத்தலுற நெஞ்சத்தில் நிற்கும்! - பொறுத்திருப்பேன்!

சென்றாள் வருவள்! செழுமையுற பேரன்பில்

நின்றிங்கு வாழ்வோம் நிலைத்து.
_______________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்து விடாதேநீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்து விடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

சிவா.ஜி
04-09-2009, 12:59 PM
(மன்னிக்கவும் தமிழ்நம்பி, முந்தைய கவிதையில், கவிஞர் குறிப்பிட்ட வார்த்தைகளிலிருந்துதான் அடுத்த கவிதை ஆரம்பிக்க வேண்டும்.)

மீன்வீசி வந்தவன் வலையில்
ஊணுடல் ஊசிய நிலையில்
வீணான மீனொன்று
தானே வந்து வீழ்ந்தால்
வந்தவன் வயிறு நிறையுமா?

ஊசிய மீனுடனே மீண்டும்
வீசிய வலையில்
வீழுமோ வளமான வேறு மீன்...?

தமிழநம்பி
04-09-2009, 05:54 PM
[QUOTE=சிவா.ஜி;430867](மன்னிக்கவும் தமிழ்நம்பி, முந்தைய கவிதையில், கவிஞர் குறிப்பிட்ட வார்த்தைகளிலிருந்துதான் அடுத்த கவிதை ஆரம்பிக்க வேண்டும்.)[QUOTE]

நான் பார்த்தபோது 'இறுதி மூச்சு' என்று முடிந்திருந்ததால், அதையே கொண்டு எழுதினேன்!

மீரா
04-09-2009, 07:17 PM
வயிறு நிறையுமா ஒருவேளைச் சோற்றிலேனும்
தயிர்ச்சோறோ பழங்கஞ்சியோ கடுங்காப்பி யானாலும்
உயிர்பிழைக்க மட்டுமேனும் தவறாது கிட்டுமோ
சயின்ன்ஸ் பாட வேளையில் சிந்திக்கிறேன் இறைவா...!

மஞ்சுபாஷிணி
04-09-2009, 07:31 PM
உயிர்பிழைக்க மட்டுமேனும்
என்னை நீ காதலிப்பதாய்
பொய்சொல்லிவிடு ஒரே ஒருமுறை

உன்புன்னகையால் என்னை உயிர்ப்பிக்க
காட்டிவிடு உன் அன்புமுகத்தை
என்னெதிரே ஒரே ஒருமுறை...

உறக்கத்திலாவது உன்னைத்தழுவ
கனவாய் என் கண்ணில்
மலர்ந்துவிடு ஒரே ஒருமுறை

சோகங்களை உன்னுடன் பகிர்ந்துவிட
உயிர்த்தோழியாய் என்னுடன்
பழகிவிடு ஒரே ஒருமுறை

இரக்கமற்ற உலகில் அனாதையாய்
வாழவிரும்பாத என்னுடன் இணைந்துவிடு
என்னவளாய் ஒரே ஒருமுறை

உன்மடி என்னை தாங்கிவிட
உரிமையாய் படுக்கவிடு
உன்னவனாய் ஒரேஒருமுறை

அக்னி
04-09-2009, 07:51 PM
உன்னவனாய் ஒரே ஒரு முறை,
உன்னைக் காதலிக்கலாமென்றால்,
உன் அவன் என்னைப் பலமுறை
முறைக்கின்றானே...

இளசு
04-09-2009, 08:24 PM
உன்னைக் காதலிக்க...என்
கண்களைத் தூதுவிட்டேன்..
என் சேதிக்குப் பதிலாய்
நாணிக் கண் புதைத்தாய்...

இன்பக்கவி
05-09-2009, 04:01 AM
நாணிக் கண் புதைத்தாய்...
என் பார்வை நாணம் கொள்ள
செய்ததோ..
உன்னை பார்த்து பேச முடியாமல்
பார்வையால் பேசினேன்
உன் நாணத்தின் மொழி
சொல்லும் அர்த்தம் விளங்கவில்லை..
உன் பார்வையை காட்டிலும்
உன் நாணம் என்னை
உயிரோடு வருத்தும் மாயம் என்ன?
வேண்டாம் கண்ணே!
என் முன் நாணம்...

மஞ்சுபாஷிணி
05-09-2009, 06:36 AM
வேண்டாம் கண்ணே
நமக்குள் புரிதலின்மை
வேண்டிய உன்னிடம்
வேண்டாத குணங்கள்
எத்தனை இருந்தாலும்
அத்தனையும் எந்தன்
மனம் நிறைக்கும் உந்தன்
செல்லக்குறும்பாகவே
எடுத்துக்கொள்வேன்
என் அன்பை நீ
அப்பொழுதாவது
அறிவாயோ கண்ணே?

சிவா.ஜி
05-09-2009, 06:53 AM
என் அன்பை நீ
எடுத்தெறிந்துவிட்டதாய்
எண்ணிவிடாதே.....

எங்கும் போய்விடாமல்
உன்னுள் விதையாய் விழுந்திருக்கிறது..
என்றோ ஒருநாள்
விழித்தெழும் காதல் விருட்சமாய்.....

அக்னி
05-09-2009, 11:01 AM
என்றோ ஒருநாள்
நம் நிலம் செல்ல முடிந்தால்,
இங்கேதான் வாழ்ந்திருந்தோம்
என்பதா...
இங்கேதான் இறந்திருந்தோம்
என்பதா...

சிவா.ஜி
05-09-2009, 11:16 AM
இங்கேதான் இறந்திருந்தோம்...
எம் அம்மையும் அப்பனும்,
எம் உடன்பிறப்பும், உற்றோரும்
உயிர்நீத்த உடல்களின் உட்துகள்கள்
உயிர் வாழ்ந்த அடையாளமாய்
இங்கேதான் இன்றும் பிறந்திருக்கிறோம்...

இறக்கும்போது அடிமைகளாய்..
பிறக்கும்போது தனிக் குடிமைகளாய்
அரக்கம் அழித்து, அடிமை
உறக்கம் கலைத்து....
மீண்டும் உயிர்த்தெழுந்தோம்....

கலைவேந்தன்
05-09-2009, 11:34 AM
உறக்கம் கலைத்துப்பின் முன்னுச்சி தானொதுக்கி
கிறக்கம் தந்தவன் முகம்பார்த்து வெட்கமுற்று
கறக்கும் பாலதுவை முகத்தில் வழியவிட்டு
பறக்கும் மனதைத் தன்வசத்தில் ஆக்கிநானும்
பிறக்கப் போகுமுன் குழந்தையை எண்ணி எண்ணி
உறக்கம் விதைத்து கனவுகள் தான்முளைக்க
சிறக்கும் நம்பந்தம் தொடர்ந்திட விரும்புவேனே...!

மஞ்சுபாஷிணி
05-09-2009, 05:52 PM
உறக்கம் விதைத்து நெருக்கம் குறைத்து
உயிரே உன்னை நானும் சுமந்தேன்
பிறக்கும் முன்பே உன்னையழிக்க
விஷமாய் தொடர்ந்த கள்ளிப்பாலை
அமுதாய் உனக்கு கொடுக்க வைத்திருப்பதை
உறக்கத்தில் நானும் அறியாது போனேனே...

கலைவேந்தன்
05-09-2009, 10:08 PM
உயிரே உன்னை நானும் சுமந்தேன்
வயிரம் போலுனைக் கண்ணுள் காத்தேன்
வெயிலும் மழையும் உனைத்தொடத் தடுத்தேன்
துயிலிலும் நினைவிலும் கனவிலும் மகிழ்ந்தேன்...!

பெட்டக மாய் உனை அனுதினம் காத்தேன்
ஒட்டகமாய் உன்கனவுகள் சுமந்தேன்
வட்டக மாய்பல அரண்களை அமைத்தேன்
சுட்டக மென்னையும் சடுதியில் பிரிந்தாய்...!

பெற்றவர் எண்ணம் துளிய்தை உணர்ந்தால்
உற்றவர் சுட்டிடும் உழலினைத தந்துனைச்
சுற்றிய கயவனின் பசப்பினை நம்பியே
சிற்றினம் போல்நடந் திடுவையோ மகளே...?

மஞ்சுபாஷிணி
06-09-2009, 04:50 PM
கயவனின் பசப்பினை
அறியா சீதையவள்
முதிர்ந்த முனிவரின்
வேடத்தில் வந்த
ராவணனைக் கண்டு
இளகிய மனதுடையவள்
அன்னமிட போனாள்
பதிவிரதை மண்டோதரி
அன்பினை அறியாத
பொல்லாத ராவணன்
ராமனின் மனைவி
சீதையை ஆசைப்பட்டு
கொடுஞ்செயல்கள்
எல்லாம் புரிந்து
இறுதியில் உலகுக்கு
பாடமாகி அவனும்
மண்ணுக்கு பாடமாகி
அடங்கிப்போனான்....

இன்பக்கவி
07-09-2009, 04:58 PM
அன்பினை அறியாத பேதையாய்
என் உள்ளம்
அன்பு இல்லா மிருகங்களின்
வலையில் சிக்கினேன்
ஆறுதல் இல்லாமல் அலைந்தேன்
எல்லாம் இழந்து உன்
அன்பை அறிந்து என்ன பயன்??

சிவா.ஜி
07-09-2009, 05:12 PM
வலையில் சிக்கினேன்...
பாசவலையா...மோசவலையா
இல்லை என்னை வளைக்க
வீசிய வேசவலையா?

எப்படியோ சிக்கிக்கொண்டேன்...
அப்படியே போகட்டும்
சிக்கலான வாழ்க்கை....
சிக்கலறுக்க யாரும்
பக்கம் வராதீர்கள்.....

பாழ்பட்ட என் வாழ்க்கையை
பார்த்தாவது திருந்தட்டும்
பாதிப்பெண்கள்....!!!

இன்பக்கவி
10-09-2009, 11:02 AM
என் வாழ்கையை உன்னிடம் தந்தேன்
என்னை விட உன் பாசம் ஏன்
என்னுடன் வந்த சீதனத்தில் குறியாய் இருந்தது
பணத்தை நேசிப்பதை மாற
என்னும் கொஞ்சம் நினை

கா.ரமேஷ்
10-09-2009, 11:31 AM
சீதனத்தில் நம்பிக்கை இல்லை
உன்னை பெறுவதே சீதனம்தானே
வெந்துபோன சாசனத்தை வைத்துகொண்டு
உன்னை வேண்டாம் என சொல்ல - என்
உளரலுக்கு கூட மனமில்லை
என் உள்மனசீ தனமே வா
மணவறைக்கு அழைக்கிறேன் வா...
மறுபிறவி எடுக்கிறேன் வா...

ஆதி
10-09-2009, 11:33 AM
கா.ரமேஷ் அவங்க பெயர் தனமா ? சொல்லவே இல்ல !!

கா.ரமேஷ்
10-09-2009, 11:40 AM
எல்லாம் கவிதை தானுங்க... பெயரும் கூட...

சிவா.ஜி
12-09-2009, 05:15 PM
தனமே வா....
என்றழைத்ததும் வந்துவிட
பணமென்ன பழகிய நாயா?

கணமேனும் துயிலுறங்காமல்
மனமோடு உடலும்
தினந்தோறும் உழைத்திட
மணமான மணப்பெண்ணாய்
பணமே வருமே...
அளவாய் இருக்கும்வரை உனக்கது
அடிமையாய் இருக்குமே....

வானதிதேவி
12-09-2009, 05:50 PM
நன்றாகச் சொன்னீர்கள் அண்ணா.ஆனால் செல்வர்கே செல்வம் தகைத்து என்பதை
மறுப்பதற்கில்லை.

சரண்யா
14-09-2009, 01:03 PM
இருக்கும்வரை.....
எல்லாம் இருக்கும் வரை தான்
எது இருக்கும்வரை....
பந்தமா..
பாசமா..
பணமா....
புகழா...
ஜிவனுள் வாழும்
ஆனால் சப்தமின்றி உளவும்
மூச்சு இருக்கும் வரை தானே!

மஞ்சுபாஷிணி
14-09-2009, 04:52 PM
சப்தமின்றி வந்தது மரணஓலை
சாபமாய் கதவை தட்டியது காலை
இருள் சூழ்ந்த பொல்லாத வேளை
போராடினாலும் காணக்கிடைக்காது நாளை

சரண்யா
15-09-2009, 03:02 AM
காணக்கிடைக்காது காற்று
தன்னை உணர மட்டுமே
செய்யும்...
ஆனால் சில நேரத்தில்
நம்மையும் தள்ளிவிடும்
சக்தி இருந்தால் எதிர்த்து
கூட நின்று பார்க்கலாம்
அதுவோ பீறிட்டு எழுந்து
புயலாய் மாறுவதேனோ?

அக்னி
15-09-2009, 05:59 AM
புயலாய் புழுதிகிளப்பிப்
போனது ஓர் ரதம்...
அதன் சில்லுகளிடைச் சிக்கி
நசிந்த பூக்களின் கண்ணீர்,
புழுதியை அடக்க முயன்று
தோற்றன...
பூக்களின் சிதைவுகளில்
புயல் சிரிக்கின்றது...

மஞ்சுபாஷிணி
15-09-2009, 06:27 AM
பூக்களின் சிதைவுகளில் வலியைக் கண்டேன்
குருதியில் நனைந்த உயிர்களின் ஓலம் கேட்டேன்
மனம் துடிக்க செய்வதறியாது தவித்தேன்
தொடரும் தொலைக்காட்சியில் கண்டு நிகழ்காலம் வந்தேன்

சரண்யா
15-09-2009, 07:24 AM
தொலைக்காட்சியில்
நிகழ்ச்சியை உற்று மட்டுமே
பார்தத சிறுமி
கண்களில் பார்வை மங்கியதோடு
கண்ணாடி போட்டு கொண்டு
தவிப்பதை பார்த்து
மனம் வாடுகிறதே...
பள்ளியில் நீ புதிதாய்
தோன்றியவள் போல
தோழிகள் உன்னை
பார்தத அவளம்.

மஞ்சுபாஷிணி
15-09-2009, 07:30 AM
கண்ணாடியில் தெரிவதில்லை எண்ணங்கள்
பூட்டிவைத்த நினைவுகளின் ரகசியங்கள்
மலரும் அழகான பூக்களின் வண்ணங்கள்
உணரமட்டுமே முடிந்த அழகு ஜாலங்கள்

சரண்யா
15-09-2009, 11:12 AM
நினைவுகளின் ரகசியங்கள்
நம்மை வேறொரு உலகத்தில்
தள்ளிச் செல்லும் கனாக்கள்....
கனவை நினைவில் கொண்டு
சில நேரங்களில் இன்னல்கள்.

மஞ்சுபாஷிணி
15-09-2009, 11:25 AM
உலகத்தில் அமைதி காணவில்லை
எவரின் உள்ளத்திலும் மனிதநேயமில்லை
எவரின் கண்களிலும் கருணையில்லை
சமாதானம் எங்கும் நிலவவில்லை
ஏன் இந்த அவலநிலை?

சரண்யா
15-09-2009, 11:39 AM
அவலநிலை
ஆம் வறுமை ஒழிய
ஒர் வழி இல்லாமல்
தவிக்கும் மக்கள்....
கண்டும் காணாமல்
ஒர் பக்கம்...
கண்டும் உதவாததால்
ஒர் தாக்கம்..

கலைவேந்தன்
15-09-2009, 11:42 AM
அவலநிலையை அதிகவிலை கொடுத்து வாங்கி
கவலை நிலை கண்ணுக்குள்ளே கோர்த்தெடுத்து
துவண்டு நிற்கும் மனித இனம் பரிதாபம் தான்
உவந்து வாழ அறிந்திடாத உன்மத்தம் சோகம்...!

மஞ்சுபாஷிணி
15-09-2009, 11:58 AM
மிக அருமையான வரிகள் கலை....

உவந்து வாழ அறிந்திடாத பிறவிகள்
உலகத்தில் வாழத் தகுதி இல்லாதவர்கள்
பிறர் வெற்றிக் காண பொறுக்காதவர்கள்
தன் தோல்வி ஒப்புக்கொள்ளா மூடர்கள்
மனிதம் மறந்த மஹா மனிதர்கள்
பிறர்இன்பம் கண்டு சகிக்காதவர்கள்
இத்தகைய பிறவியெடுத்து
என்ன சாதிக்கப் போகிறார்கள்?

சிவா.ஜி
27-09-2009, 05:50 PM
பிறவியெடுத்து வர விருப்பம்
மற்றொரு பிறவியெடுத்து வர விருப்பம்
இப்பிறவி கண்ட அவலங்கள் இல்லா,
இப்பிறவி கண்ட கொடுமைகள் இல்லா
இப்பிறவி கண்ட வலிகள் இல்லா
மற்றொரு பிறவியெடுத்து வர விருப்பம்...
அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும்
அன்றாவது திருந்தியிருந்தால்....
மறு பிறவியெடுத்து வர விருப்பம்....

சரண்யா
29-09-2009, 08:13 AM
பிரவத்தில்......
அவளோ குழந்தையை ஈன்ற
தருணத்தில்.......
தன் தாயின் வலிகள் உணர்ந்தவளாய்....
வலிகள் இல்லா பிரசவம் இருந்தால்
தாய்மையில் தாய்க்கும் கூட
ஓர் சுமை இல்லாத காலம்...
அன்னையின் அன்னைக்கும் கூட
ஓர் சஞ்சலம் இல்லாத காலம்....

மஞ்சுபாஷிணி
29-09-2009, 01:01 PM
வலிகள் உணர்ந்தவளாய்
துன்பங்கள் மறைத்தவளாய்
புன்னகை புரிந்தவளாய்
இருப்பவள் நம் தாய்...

சரண்யா
29-09-2009, 02:12 PM
துன்பங்கள் மறைத்தவளாய்
துவளாமல் என்றென்றும்
தன்னுள்ளே ரகசியமாய்
தன்னம்பிக்கையான தாயாம்

மஞ்சுபாஷிணி
29-09-2009, 06:02 PM
தன்னுள்ளே ரகசியமாய்
வளர்த்த கனவுகள்
நாட்கள் நகர்ந்தாலும்
கனவுகள் மங்கவில்லை
பிரிவு துன்பமானாலும்
இணையும் நாளை
மறக்கவில்லை

சரண்யா
30-09-2009, 01:07 AM
கனவுகள் மங்கவில்லை
தோல்வி அடைந்தாலும்
உழைப்பு குறையவில்லை
வெற்றி கிடைக்காதபோதும்
ஆர்வம் தளரவில்லை
குறிக்கோளை எண்ணியே....

மஞ்சுபாஷிணி
30-09-2009, 04:26 AM
வெற்றி கிடைக்காதபோதும்
முயற்சியை கைவிடவில்லை
தோல்விகள் தொடர்ந்தாலும்
நம்பிக்கையை கைவிடவில்லை....

சரண்யா
30-09-2009, 06:20 AM
நம்பிக்கையை கைவிடவில்லை
போட்டியில் பங்கு கொண்ட போது
தன்னம்பிக்கையை கைவிடவில்லை
கலந்து கொண்டு வெற்றி அடைந்த போது...

கா.ரமேஷ்
30-09-2009, 06:35 AM
போட்டியில் பங்கு கொண்ட போது
பாட்டியின் ஞாபகம் வரவில்லை
வென்று முடித்து
வீரனாய் வந்தபோது
கொண்டை நரைத்த அந்த
கோதை வந்தாள்
நெச்சில் அனைத்து
நெற்றியில் இதழ் பதித்தாள்

வெற்றி கதைகளை நெஞ்சில்
விதையாய் ஊன்றியவளின் நம்பிக்கை
வீண்போய்விடுமா என்ன...?

சரண்யா
30-09-2009, 06:45 AM
விதையாய் மண்ணுள் புகுந்து
செடியாய் வளர்ந்து
மரமாய் எழுந்து
காற்றாய் புகுந்தாய்
இதமாய் இருந்தது
ஆனால் புயலாய்
மாறியது ஏனோ!

அமரன்
30-09-2009, 09:32 AM
காற்றாய் புகுந்தாய்
அனலாய் எரிந்தாய்
புனலாய் படர்ந்தாய்
மணலாய் படுத்தாய்
வானமாய் உயர்ந்தாய்...

என்றும் நீ எனக்கு
எட்டாம் ஜென்மம் தானடி
என்மனமே..

சரண்யா
30-09-2009, 10:35 AM
என்றும் நீ எனக்கு
குழந்தை தான்...
என்னை அம்மா என்று
உயர்ந்த தாய்மைக்கு
எட்டி செல்ல வைத்தாயே!
நீ அம்மாவானாலும்
எனக்கு நீ குழந்தை தானே
என்னை வந்து பாராயோ?
ஏக்கத்துடன் ஓரு தாய்......

மஞ்சுபாஷிணி
02-10-2009, 03:59 PM
ஏக்கத்துடன் ஒரு தாய்
தன்னை தாயென அழைக்க
வெறுக்கும் மகவை
சுமந்தாள் அன்று
ஒன்பது திங்கள்
ஊண் உறக்கம் மறந்தாள்
தன் நலன் காக்க தவறினாள்
தன் வயிற்றில் பூத்த உயிருக்காக
தன் உயிரையே பணையம்
வைத்தாள்
எல்லாம் மறந்த மகவை
இன்று வளர்ந்து
பெற்றுவளர்த்த தாயை
அம்மாவென கூப்பிட
கூசுகிறான் ஏசுகிறான்
அனைத்தும் கேட்டு
அமைதியாய்
கண்ணீர் வடித்து
காத்திருக்கிறாள்
அம்மாவென்று
அழைக்கும் ஒரு குரலுக்காய்
ஏக்கத்துடன் ஒரு தாய்

சரண்யா
03-10-2009, 07:51 AM
தன் நலன் காக்க தவறினாள்
தாயாக அவள் துடித்தாள்
திசைகளெல்லாம் நோக்கி கதறினாள்
தீமை ஒன்றும் நினைகாதவள்
துச்சம் என மதித்தால் தாங்கமாட்டாள்
தூக்கத்தையும் மறந்து விழித்திருப்பாள்
தென்னம்பிள்ளை நட்டு வைத்தவள்
தேரோடுவதை பார்க்காமல் இருந்தாள்
தைத்த சட்டை அணிந்து பார்த்தவள்
தொட்டில் கட்டி பெயர் சூடியவள்
தோடு போட்டு அழகு பார்த்தவள்
தௌகித்திரன் வரவை எதிர்பார்கிறாள்

மஞ்சுபாஷிணி
03-10-2009, 07:58 AM
திசைகளெல்லாம் நோக்கி கதறினாள்
இதுவா நான் வேண்டிய பாரதம்
ரத்தவெறியரின் பாரம் தாங்காது
பூமி ரத்தம் ஆறாவதை கண்டு துடித்து
சமத்துவமும் சமாதானமும்
மறைந்த மாயம் கண்டு சோர்ந்தாள்
அமைதியும் அன்பும்
கனவாய் இருந்துடுமோ என்று
கண்ணீர்மல்கினாள் பாரதத்தாய்

சரண்யா
03-10-2009, 12:02 PM
சமத்துவமும் சமாதானமும்
சாலையோர சண்டையை
சமாளிக்கும் வரைத்தான்
வெறும் பேச்சில் மட்டுமே
வெள்ளை புறா வருகி்றதே
தண்ணீர் தாகத்தை என்று
தான் தீர்ப்பாயோ இறைவா...

ஜெயாஸ்தா
03-10-2009, 01:22 PM
வெறும் பேச்சில் மட்டுமே
நதிகள் பல பாய்கின்றன
தமிழத்தில்...!
தேர்தல் நேரத்து அரசியல்வாதிகளின்
நிறைவேறாத வாக்குறுதிகளால்...!
வியர்வையால் மட்டும்
விவசாயம் செய்யமுடியாதென்பதையும்
வெறும் திட்டங்கள் தாகங்தீர்காதென்பதையும்...
பிஸ்லெரிவாட்டரில் குடி(ளி)க்கும் -இந்தப்
பரதேசிகளுக்கு தெளிய வைப்பதெப்போது?

சரண்யா
04-10-2009, 02:27 AM
வியர்வையால் மட்டும்
உணரக்கூடிய உழைப்பு
ஊரிலே மின்சாரத்துண்டிப்பு
என்பதாலும் என்று உணர்வாயா?
சுதந்ததிரம் கிடைத்தது ஆனா
சுகமாக வாழ்வது எப்பொழுது?
சீரமைப்பு பணி என்று சொல்லி
சொல்லியே ஏமாற்றுவது ஏனோ.....

சிவா.ஜி
05-10-2009, 01:20 PM
சுகமாய் வாழ்வதெப்போது?
சுமைகள் இறங்கிய பிறகா?
காயங்கள் உலர்ந்த பிறகா?
வலிகள் மறைந்த பிறகா? இல்லை
எல்லாவற்றையும் ஏந்திக்கொண்டு...
இல்லா நிலையிலும் இன்பமுணர்ந்து
வாழ பழகிக் கொண்டா?

aren
05-10-2009, 01:29 PM
வாழ பழகிக்கொண்டால்
வாழ்க்கையில் வெற்றி பெறலாம்!!!

எதையும் எதிர்கொள்ளும்
மனோ பலம் பெறலாம்!!!

மனோ பலம் பெற்றால்
வாழ்க்கையில் முன்னேறலாம்!!!

அடுத்த கவிதை
வாழ்க்கை என்று ஆரம்பிக்கலாம்.

அக்னி
07-10-2009, 08:34 AM
வாழ்க்கை
எதுவெனத் தெரியாத
எனது வாழ்க்கை,
உனக்கானது
என நான் அறிந்துபோதும்,
உனது வாழ்க்கையில்
நான் உள்ளேனா எனத் தெரியாமலே
வாழ்கின்றேன்...
இப்போது மீண்டும் தெரியவில்லை,
வாழ்க்கை எதுவென...

aren
07-10-2009, 04:17 PM
உள்ளேனா எனத் தெரியாமல்
என் மனதில் உன்னை நினைத்து
தினமும் பாட்டு படித்தாலும்
உன் மனதில் நான் உள்ளேனென்று
ஒரு நாள் நான் நினைத்து
தினம் தினமும் பாட்டு படிக்கின்றேன்!!!

பாடல் நினைவாகுமா
என் வாழ்வு வளம்பெருமா
உன் கையில் என் வாழ்க்கை
உன் கையில் என் லட்சியம்
உன் கையில் என் உயிர்
என் மனதில் என்றென்றும் நீ!!!

சரண்யா
08-10-2009, 09:11 AM
என் மனதில் என்றென்றும் நீ!!!
வாழ்வாய் ஆபத்தில் உதவினாய்
வாழ்வு தனை மீட்டு கொடுத்தாய்
என்னவென்று சொல்லுவது உமக்கு
"நன்றி" என்ற மூன்றெழுத்தை மட்டுமா?

சிவா.ஜி
09-10-2009, 05:07 PM
நன்றி என்ற மூன்றெழுத்தை மட்டுமா எதிர்பார்த்தேன்?
ஒன்றி உடனிருந்து,
என்றும் அருகிருந்து
நன்றும் தீதும்
ஒன்றாய் அனுபவித்து
வென்றாக வேண்டும் வாழ்வை...
உதவியது மாற்றானாய் இருந்தல்ல
உன் மீது காதலை மாற்றானாய் இருந்துதான்.....

சரண்யா
11-10-2009, 02:00 AM
என்றும் அருகிருந்து
எதுவுமே பேசாமல்
அதுவும் வெளிச்சத்தில்
கூடவே வருகிறாய்
சில நேரம் பெரியதாய்
பல நேரம் சிறியதாய்
உன்னிடம் பிடித்தது
என்னிடம் மட்டுமல்ல
அனைவரிடமும் நீ
கருப்பாய் தெரிவது
நிறம் மாறாமல்
இருப்பது நிழலே...

இன்பக்கவி
06-11-2009, 05:11 AM
என்றும் அருகிருந்து
எதுவுமே பேசாமல்
அதுவும் வெளிச்சத்தில்
கூடவே வருகிறாய்
சில நேரம் பெரியதாய்
பல நேரம் சிறியதாய்
உன்னிடம் பிடித்தது
என்னிடம் மட்டுமல்ல
அனைவரிடமும் நீ
கருப்பாய் தெரிவது
நிறம் மாறாமல்
இருப்பது நிழலே...



சரண்யா நீங்கள் எந்த வார்த்தை என்று சொல்லாமல் சென்று விட்டிர்கள்
உங்கள் கவிதையின் கடைசி வரிகளை கொண்டு தொடங்குகிறேன்...
நிறம் மாறாமல்
இருப்பது நிழலே...
நிஜம்தான்..
உன் நினைவுகளால்
உன் நிழல் போல
மாறாமல் வருவேன் இறுதிவரை
அப்போது உணர்வையா
என் நிஜமான காதலை

மன்மதன்
11-11-2009, 10:24 AM
என் நிஜமான
காதலை
உன் நிழலில்
விட்டுச்சென்றேன்..
பொழுது சாய்வதற்குள்
அள்ளி எடுத்து விடு..

அதிக நேரம் தங்காது
போகலாம் நிழல்..
என் மௌனத்தை
போல..

சரண்யா
11-11-2009, 11:03 AM
என் மௌனத்தை
பல அர்த்தங்கள்
பொதிந்துள்ளதை
உண்ர்ந்து கொள்ள
மட்டுமே இயலும்..
வார்த்தையால் அல்ல..

மன்மதன்
11-11-2009, 11:24 AM
பல அர்த்தங்கள்
பொதிந்த உன் புன்னகையில்
எனக்கான ஒரு இடம்
என்றும் இருக்கத்தான் செய்கிறது
என்பதை உணர்த்துகிறது
உன் உதட்டு சுளி...

பல அர்த்தங்கள்
ஒளிந்திருக்கிறது
உன் பேச்சில்
உன் பார்வையில்
உன் புன்னகையில்..

எனக்கு தேவையானதை
மட்டுமே எடுத்துக்கொள்ளும்
அன்னப்பறவையாக நான்..

என் எதார்த்தங்கள்
உன்னை பொசுக்குகையில்
பீனிக்ஸாய் நீ.

சரண்யா
11-11-2009, 03:03 PM
உன் புன்னகையில்..
யதார்த்தம் இருந்தாலும்
என் புன்னகையை
வெளிக்காட்டியது
மழலையின் அன்பால்..

மன்மதன்
12-11-2009, 01:39 PM
யதார்த்தம் இருந்தாலும்
நமக்குள் எழுகிற
சிறுசிறு உரசல்களை
பலூன்களில் கட்டி
பறக்க விட்டு
வேடிக்கை பார்க்கிறது
நம் நட்பு..

இன்பக்கவி
12-11-2009, 02:11 PM
யதார்த்தம் இருந்தாலும்
நமக்குள் எழுகிற
சிறுசிறு உரசல்களை
பலூன்களில் கட்டி
பறக்க விட்டு
வேடிக்கை பார்க்கிறது
நம் நட்பு..

நம் நட்பு
வாடி போகும் மலர் அல்ல
வசந்தம் வீசும் தென்றலாய்
வலம் வருவோம் எந்நாளும்

மன்மதன்
12-11-2009, 03:40 PM
எந்நாளும்
கைகள் உரச
நடந்து சென்ற
கொண்டிருந்த நாம்
இன்று
இடைவெளி விட்டு நடக்க
விலகி சென்றது
நம் நட்பு மட்டுமல்ல..

சரண்யா
13-11-2009, 12:46 AM
விலகி சென்றது
சூழ்நிலையால்
நட்பு என்றதும்
மாற வாய்ப்பு
இல்லையே...

குணமதி
13-11-2009, 01:02 AM
விலகிச் செல்லல் எப்போதும் நல்லதில்லை.

நானும் இம் மக்கள் திரளில் உள்ளடங்கியவன்.

இன்றைக்கு அடுத்தவர்க்கு நேர்ந்தது நாளை எனக்கும் நேரலாம்.

தான், தன்பெண்டு, தன்பிள்ளை, தன்குடும்பம் என்று நினைப்பது கடுகுள்ளம்.

தீயவரை மோதி மிதிக்கவும் அவர் முகத்தில் உமிழவும் அஞ்சக்கூடாது.

நல்லாரைப் போற்றவும் பணிந்து நடக்கவும் தயங்கக்கூடாது.

ஓர் உண்மை மாந்தனாக நான் என் கடமையைச் செய்ய வேண்டும்.

சரண்யா
13-11-2009, 01:08 AM
நல்லாரைப் போற்ற
நல்ல மனசு வேண்டும்
நல்லெண்ணம் வேண்டும்
நல்ல நட்புவட்டம் வேண்டும்
நல்ல சுற்றமும் பெற வேண்டும்
நல்லது அல்லாதவை விலக வேண்டும்

இன்பக்கவி
16-11-2009, 11:38 AM
நல்லாரைப் போற்ற
நல்ல மனசு வேண்டும்
நல்லெண்ணம் வேண்டும்
நல்ல நட்புவட்டம் வேண்டும்
நல்ல சுற்றமும் பெற வேண்டும்
நல்லது அல்லாதவை விலக வேண்டும்
நல்ல நட்பு வட்டம் வேண்டும்
ஆக்குதளுக்காய் இருக்கட்டும்
அழிக்க கூடிய நட்பு வேண்டாம்
எப்போதும்

சரண்யா
17-11-2009, 02:49 AM
நீங்கள் பாதியில் விட்டுவிட்டீரோ கவியை..

குணமதி
17-11-2009, 11:22 AM
வேண்டாம்!

வேண்டவே வேண்டாம்!

வெறுப்பும் பகையும் வேண்டவே வேண்டாம்!

பிரிவும் ஒதுக்கமும் வேண்டவே வேண்டாம்!

பிறப்பில் உயர்வு தாழ்வும் வேண்டாம்!

எல்லாரும் ஓர்நிறை!

எல்லாரும் உலக மக்கள்!

எண்ணத்தில் முதலில் ஒன்றென நினைப்போம்!

சரண்யா
17-11-2009, 11:26 AM
எல்லாரும் உலக மக்கள்!
எல்லாரும் அன்பின் மக்களாய்
எம் பாரதத்தின் மக்களாய்
என்றுமே உயர்ந்து வாழ்க!

வானதிதேவி
17-11-2009, 12:03 PM
உன் காலடி ஓசைக்காக தவமிருக்கும்
காதல் யோகியாய் நான்
வந்து உன் ஒளி முகத்தை காட்டிடு
உடலை உயிர் பிரியாதிருக்க

குணமதி
17-11-2009, 05:25 PM
பிரியாதிருக்க வேண்டும்!

அன்பும் அருளும் மாந்த நேயமும்

இம்மாந்தரை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்!

பிரிய வேண்டும்!

வறுமையும் இன்னல்களும் இயற்கை இடர்களும்

இம்மாந்தரை விட்டுப் பிரிய வேண்டும்!

நிலைக்க வேண்டும்!

அமைதியும் நல்லிணக்கமும் மாந்தரிடம்

நிலைக்க வேண்டும்!

மாந்தனே அதற்கென முயற்சி செய்! உழை!

சரண்யா
18-11-2009, 06:34 AM
முயற்சி செய்! உழை!
சேமித்து வை!உதவு!
உயர்வு பெற!உன்னாலே!
வாழ்த்துகள்!சிறக்க..

குணமதி
19-11-2009, 10:54 AM
வாழ்த்துக்கள். சிறக்க, உயர, ஒளிவீச!

உண்மை உழைப்பும் ஈடுபாடும் வெல்வது உறுதி!

சரண்யா
19-11-2009, 10:59 AM
உழைப்பும் ஈடுபாடும்
இருந்தும் வாய்ப்பும்
சிபாரிசும் அவசியம்
என்றே தோன்றுகிறது
திறமையால் வெற்றி
வருவது உறுதியே
ஆனால் வாய்ப்பு
கொடுப்பது எங்கே?

ஆ.ஜெயஸ்ரீ
20-11-2009, 03:25 PM
உன் காலடி சத்தத்திலும்
உன் கை வளையோசை கேட்டும்
உயிர் கொண்டது என் இதயம்
உறங்காமல் உன்னை நினைத்த
இரவுகள் என் மலரும் நினைவுகள்
உன் நினைவுகளில் விடியும் பொழுதுகள்
உன் கனவுகளோடே முடிகிறது
உன்னை நினைத்தே இயங்கும் இதயம்
உன்னோடு சேர்ந்து இயங்க
இணைக்கட்டும் நம் இருவரையும் காதல்

குணமதி
20-11-2009, 03:32 PM
மலரும் நினைவுகள்.

மனம் மகிழ்விப்பன.

மெல்லிய பூங்காற்றில் மிதந்துவரும் சந்தன மணம்போல்...

இன்றைய இன்னலை மறக்கடிப்பன.

நினைவுகளிலேயே வாழ்ந்துவிடுவேன்.

ஆனால்-

நீ எங்குள்ளாயோ?

எப்படி இருக்கிறாயோ?

மலரும் நினைவுகளின் ஊடேயும்...

மனக்கலக்க மின்னல் கீற்று தோன்றத்தான் செய்கிறது.

சரண்யா
21-11-2009, 01:45 AM
மின்னல் கீற்று
ஓவியத்தில் தீட்டு
மின்னி மின்னி
கண்களை கூச
வைக்கும் அது
கருப்பில் வெள்ளை
தோன்றுவதிலும் அழகு!

மன்மதன்
21-11-2009, 04:13 AM
கருப்பில் வெள்ளை
கண்டது தென்னாப்ரிக்கா
சிறைச்சாலை..

கருப்பே வெள்ளையை
வென்றது அமெரிக்க
குடவோலை..

கருப்பு என்றாலே
ஒதுக்கும் குணத்தை
உலகுக்கு கற்றுத்தந்த அமெரிக்க
இன்று
கருப்பையே தன்
வெள்ளை மாளிகையில்
வைத்து அழகு பார்க்கிறது
கண்கள் பனிக்க...

குணமதி
21-11-2009, 02:19 PM
சிறைச்சாலை!

குற்றவாளிகள் மட்டும் தங்கிடமன்று.

அஞ்சாத விடுதலை மறவர்களும்,

தலைவணங்கா சிந்தனையாளர்களும்,

ஆண்மையுள்ள எழுத்தாளர்களும்,

பாவலர்களும்,

நாவலர்களும்,

தங்கிய இடம்.

அவ்வகையில் -

சிறைச்சாலைகள் நினைவிடங்கள்!

மன்மதன்
21-11-2009, 05:56 PM
நினைவிடங்கள்
செல்லும் போது
மட்டும் நினைவுக்கு
வருவதில்லை..
நிலையற்ற இந்த வாழ்வில்
இது மட்டுமே
நிரநதரம் என்று..

சரண்யா
22-11-2009, 10:01 AM
நினைவுக்கு வந்துவிட்டால்
பரிட்சையில் மதிப்பெண்
பார்த்தவருக்கு மதிப்பு
பழகியவரிடம் சிறப்பு
நன்றியில் உயர்ந்து
தவற்றை மறந்து
நினைவலைகளில்
புகைப்படமும் பேசுமோ?

சிவா.ஜி
29-11-2009, 11:51 AM
பழகியவரிடம்
பட்டென்று சொல்ல இயலுமா
பேச்சில் குற்றமென்று....?
வார்த்தைகளை அடுக்கி
கவிதையென சொல்வோர்
தெரிந்தவரெனில்
தெளிவாக்க இயலுமோ
அது தெளிவில்லா பதிவென....?

சரண்யா
29-11-2009, 12:16 PM
தெளிவாக்க இயலுமோ
பெண் என்பவள்
புகுந்த வீட்டிற்கு
சென்றவுடன் பெரியதாய்
மாற்றம் அடைவது
பொறுப்பில் வந்ததா...
மனமாற்றத்தால் வருவதா...
இயல்பானதது தானோ...
சமுகத்தின் நியதியோ...

குணமதி
29-11-2009, 03:05 PM
பெண் என்பவள் -

தெய்வமுமில்லை; அவள் கூறியபடியே எல்லாம் நடப்பதுமில்லை.

அவளும் மாந்தப்பிறவி.

அப்படி இப்படி ஆ! ஊ! என்று பாராட்டிவிட்டு -

ஆண்டாண்டு காலமும் அறிவியல் முறையில் -

அடிமையாக்கி வைத்திருக்கும் நிலை -

படிப்படியாகவேனும் ஒழிக்கப்பட வேண்டும்.

ஆண் பெண் சமம் என்பது செயலளவில் மெய்ப்பிக்கப்பட வேண்டும்.

அந்த நிலை ஏற்படாதவரை -

இந்த உலகில் அறம், ஞாயம் இருப்பதாகச் சொல்வது பொய்யே!

சிவா.ஜி
29-11-2009, 04:10 PM
ஆண்டாண்டு காலமும் தொடரும் இந்த
அபத்தம் அவசியமா....?
காதல் வந்தால் கவிதை,
காதலி போனால் தாடி...!!
ராமன் போனால் சோமன்
ராதா போனால் சீதா....
காதல் போவதில்லையே...!!!

குணமதி
29-11-2009, 04:30 PM
காதல் வந்தால் -
முதலில் அச்சம்,
பின் ஆர்வம்
குறுகுறுப்பு
தயக்கம்
கொஞ்சம் துணிவு
உறுதி
போராட்டம்
வெற்றி அல்லது மனமாற்றம்.
இதுவே வழிமுறையாகும்.
சில முடிவுகள் தேவையின்றி -
துயரமாக்கப் படுகின்றன.

சிவா.ஜி
29-11-2009, 04:33 PM
குறுகுறுப்பு.....
உள்மனதின் ஒரு ஓரத்தில்
கண்டெடுத்தக் காசை
சட்டைப்பையில் இட்டபோது...!!

சரண்யா
30-11-2009, 01:59 AM
உள்மனதின் உயர்ந்தே
உறவுகள் இருக்கிறதே
உள்ளமதை புரிந்தே
உண்மைதனை உரைத்தே
உரிமையால் பெற வைத்தே
உங்கள் மனம் என்றுமே...
உள்மனம் இறைவனுக்கும்
நன்றி சொல்லுமே!

குணமதி
26-12-2009, 03:51 AM
உள்ளமதை உண்மையாய் உள்ளி உணர்ந்துவிடின்

உள்ளுவரோ பூசல் உரை.

____________________________________________

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

சரண்யா
27-12-2009, 11:33 AM
உரை எழுதுபவரின்
உண்மையான எண்ணம்
அதனை உணர்ந்தால்
அறியலாம் பலவற்றை

குணமதி
27-12-2009, 03:51 PM
உணர்ந்தால் உய்வுண்டே உய்த்துணர்ந்தார் கூற்றை
உணரார்க்கிங் குண்டே இடர்.

_______________________________________
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை.

சரண்யா
28-12-2009, 02:44 AM
இடர் தரும் மாந்தர்
அவர் செயலை துச்சம்
என மதித்தால் இல்லை
வாழ்வில் இன்னல்கள்..

குணமதி
28-12-2009, 03:04 AM
வாழ்வின் பயன்தெரிந்து வாழ்வார் வழியேகல்
தாழ்நிலை போக்கும் தனி.

சரண்யா
28-12-2009, 03:15 AM
தனிமை என்பதை
உணர்ந்தால் உறவு
என்பதின் வலிமை
பெருகும் வருத்தம்
என்பதின் வலியும்
பெற்றிடும் மனது

குணமதி
28-12-2009, 03:24 AM
உறவுபகை நட்பெல்லாம் உண்டோ உலகில்
அறவே பொருளற்றக் கால்.

சரண்யா
01-01-2010, 01:29 PM
கால் பார்த்தே மனிதனை
எடைப் போடுவதும்
உண்டு...
கால் மனிதனின் காலென்றால்
சுத்தம் என்பது முகத்திற்கு
மட்டுமா...கால்களும் பாதை
தன்னை காட்டிடுதே...அதன்
பளிச்சில் தெரியுமே...மனம்.
கால் மிஸ்டுகால் என்றால்
கஞ்சம்...

இன்பக்கவி
04-01-2010, 02:27 AM
கால் பார்த்தே மனிதனை
எடைப் போடுவதும்
உண்டு...
கால் மனிதனின் காலென்றால்
சுத்தம் என்பது முகத்திற்கு
மட்டுமா...கால்களும் பாதை
தன்னை காட்டிடுதே...அதன்
பளிச்சில் தெரியுமே...மனம்.
கால் மிஸ்டுகால் என்றால்
கஞ்சம்...
சுத்தமான காற்று சுவாசித்து
நெடுநாள் ஆகிற்று...
கரும் புகையும்...
பெட்ரோல் வாசனையும்
கலக்காமல் காற்று இல்லை
எங்கள் நகரத்தில்...
ஆசைப் படுகிறேன்
ஆனந்தமாய் அன்னை மடியில்
கயிறு கட்டிலில்
நிலா சோறு சாப்பிட்டு
சுத்தமான காற்றை
சொர்க்கமாய் அனுபவிக்க
ஆசைபடுகிறேன்...

சரண்யா
14-01-2010, 07:16 AM
ஆசைபடுகிறேன்
பறவைகளின் கீதத்தை இசையாய்
கேட்க
மழலையின் சிரிப்பில் கவலைகள்
மறக்க
இறைவனின் அருளில் நிம்மதியாய்
வாழ

சிவா.ஜி
14-01-2010, 11:13 AM
எந்த வார்த்தையென்று சொல்லவில்லையே சரண்யா......

சரண்யா
14-01-2010, 11:17 AM
இப்போ பாருங்க...
நன்றி...

சிவா.ஜி
14-01-2010, 11:29 AM
மழலைச் சிரிப்பு,
மழலை மொழி
மழலை முத்தம்
மழலை ஸ்பரிசம்
மயங்காத மானிடர்
மண்ணில் இல்லை
பளிங்கையும் பனியையும் போல
பரிசுத்தம்....
முகம் நோக்கின்
ஓடி மறையும்
வலி மொத்தம்....

அடுத்த வார்த்தை....மண்ணில்

சரண்யா
14-01-2010, 11:48 AM
மண்ணில் வாழும்
உயிரில் விதை
கண்ணில் படாமல்
செடியாய் மாறும்
மாயம் என்னவோ
ஆண்டவன் உயிர்
கொடுத்ததோ இல்லை
என்றால் மனிதன் தான்
உயிர் கொடுத்தானோ...
எனினும் இம்மனிதமும்
மண்ணுக்குள் ஒரு நாள்
செல்ல வேண்டுவது மாற
வழியில்லை எந்நாளுமே.

கலைவேந்தன்
14-01-2010, 11:55 AM
மண்ணில் நீநில் ஆயினும் வானம் பார்த்துவெல்
எண்ணில் ஆயுளைக் கணித்திடாமல் நீயும்
எண்ணிப்பார் என்ன் செய்தாய் உலகுக்கென்று
விண்ணில் ஒளிர்வாய் ஓர்தாரகையாய்....!

சிவா.ஜி
14-01-2010, 02:50 PM
ஓர் தாரகையாய்
என் இருண்ட வானத்துக்கு
ஒரு துளி ஒளிதர வந்தாய்...

ஓர் காதலியாய்
என் வறண்ட வாழ்வுக்கு
வளம் தர வந்தாய்....

ஓர் தோழியாய்
ஒன்றுமற்ற எனக்கு
எல்லாமுமாய் நின்றாய்...!!


வார்த்தை*_ ஒன்றுமற்ற

சரண்யா
20-01-2010, 05:56 AM
ஒன்றுமற்ற மனிதமாக
மண்ணில் சேர்வதற்குள்
ஓராயிரம் இன்பத்துன்பம்
நடுவே எட்டி பார்க்கும்
இறையின் அருள் என
காலத்தின் சுழற்சியில்
செல்கிறது நாட்கள்..

அக்னி
20-01-2010, 06:27 AM
இறையின் அருள் எது...???
என் வாழ்க்கைக்குள்ளேயே தேடினேன்.

சாக்லெட்,
பள்ளிவிடுமுறை,
அம்புலிமாமா கதைப்புத்தகம்
இவையெல்லாம் கிடைத்தபோது
சிறுவயதில் இறை அருள் கிடைத்தது...

அழகுப் பெண்களின் கடைப்பார்வை,
ஊரின் வெளியே திருட்டுத் தம்,
நிறையப் ‘பாக்கட்மணி’
மீசை அரும்பும் வயதில்,
இவையெlல்லாம்தான் இறையின் அருள்...

நல்லதொரு வேலை,
கைநிறையச் சம்பளம்,
அழகான குடும்பம்,
இறையின் அருள்
இப்படியானது இந்த வயதில்...

மரணம்
இறையின் அருள் ஆகும்வரைக்கும்,
மாறிக்கொண்டேதானிருக்கும்
இறையின் அருள்...

(எதையோ பதிவு செய்துவிட்டேன். அதனாற்தான் மீளவும் அதே சொற்களைத் தந்துள்ளேன்...)

சிவா.ஜி
20-01-2010, 07:39 AM
இறையின் அருள்....
இப்போது தரகர்கள்
வாங்கித்தருவதாய்
விளம்பரம் செய்யும் பொருள்....

அம்மாக்களும், பாபாக்களும்
இறையிடம் மொத்தமாய் வாங்கி
சில்லறையாய் விற்கும் பொருள்...

இவர்களை நம்பினால்
வாழ்க்கையில் சூழும் இருள்...!!!



தொடங்கவேண்டிய வார்த்தை,

சில்லறையாய்......

muthuvel
20-01-2010, 11:05 AM
தனிமை என்பதை
உணர்ந்தால் உறவு
என்பதின் வலிமை
பெருகும் வருத்தம்
என்பதின் வலியும்
பெற்றிடும் மனது

வாய் பேச இரு உதடுகள் தேவை,
ஓசை எழுப்ப இரு கைகள் தேவை ,
சுமையை தாங்க இரு தோள்கள் தேவை,
பூமியில் தாங்க இரு பாதங்கள் தேவை ,
அன்பு மலர இரு உள்ளங்கள் தேவை ..

சரண்யா
20-01-2010, 11:12 AM
சில்லறையாய் அன்பின்
இல்லையே
சில்லறையாய் பாசம்
இருப்பதில்லை
சில்லறையாய் இருந்தாலும்
மனநிறைவை தருமே.

சரண்யா
20-01-2010, 11:13 AM
முத்துவேல் அவர்களே..நீங்க தொடங்கும் போது எந்த வார்த்தையை bold ஆக கொடுத்தார்களோ அதில் தொடங்குங்க..சரியா...
நன்றி

இன்பக்கவி
20-01-2010, 02:32 PM
மன நிறைவை தேடி
அலைகிறேன் அனுதினமும்
எங்கும் கிடைக்கவில்லை..
குழந்தையாய் மாற
துடிக்குது மனம்..
வேண்டாம் இப்பருவம்...
ஏதும் அறியா மழலையாய்
மாறும் வரம் வேண்டும் இறைவா

muthuvel
21-01-2010, 01:20 AM
மழலையாய் நான் செய்த குறும்புகள் அறியவில்லை எனக்கு ,
அறிந்து கொண்டேன் அதை என் மழலை குறும்பு செய்தபோது ...

சரண்யா
21-01-2010, 01:37 AM
மழலையாய் சிரித்து
வாழ்வில் மகிழ்ந்து
புன்னகை பூத்த மலர்
போல அனுதினமும்
பூக்கட்டும் மனமது
மழலையாய் மாறிட.

இன்பக்கவி
21-01-2010, 02:52 AM
மலர் உனது வாசம் அடி
மேகம் உந்தன் கூந்தலடி
உன் செவ் வாய் உதிர்க்கும்
வார்த்தை தனில்
தொலைந்து போனது என் சிந்தையடி
கூர்விழி பார்வை அம்பாய்
என் இதயத்தை கிழித்திவிட
சிந்தும் குருதியில்
வரைந்த ஓவியம் நீயடி..

muthuvel
21-01-2010, 04:38 AM
மலர் வாடியது ,
மணாளன் மறைந்ததால் ,
மறுபடியும் மலர் சூட ஆசை ,
மனம் காயம்பட்டது ,சுற்றத்தின் கடுன் சொற்களால் ,
மலருக்கு ...

சிவா.ஜி
21-01-2010, 05:22 AM
முத்துவேல்....முன் கவிதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தையிலிருந்து தொடங்கும் கவிதையைத்தான் இங்கு பதிக்க வேண்டும்.

உதாரணமாக..இன்பக்கவி அவர்கள் 'ஓவியம்' என்ற வார்த்தையைக் குறிப்பிட்டுள்ளார்..நீங்கள் சம்பந்தமே இல்லாமல் ஏதோ வார்த்தையில் தொடங்கி இருக்கிறீர்கள்.

தயவுசெய்து விதிமுறைகளுக்கு கட்டுப்படுங்கள்.

சரண்யா
21-01-2010, 06:46 AM
ஓவியம் அது
காவியத்தையும்
தன்னுள் அடக்கி
கண்களுக்கு விருந்தாய்
வண்ணக் கலவையில்
ஓர் சிந்தனைத் துளிகள்.

அக்னி
21-01-2010, 07:05 AM
விருந்தாய்த்
தம்மைப் படைக்கின்ற
தேகங்களுக்குள்ளும்
ஓர் மனம் இருக்கும்.
அந்த மனதில்,
காமம் மட்டும்
நிச்சயமிருக்காது.
ஏதோ ஓர் சாபம்,
உயிர்ச் சவங்களாய்
இவர்கள்...
சவங்களை விருந்தாய்ச்
சுவைப்போர் பணம்,
இவர்கள் மனங்களுக்கு
மருந்து தரா...

muthuvel
21-01-2010, 07:09 AM
விருந்தாய் அமைந்தது கழுகுகளுக்கு,
என் தமிழன் இறந்துகிடப்பதால் ...

muthuvel
21-01-2010, 07:16 AM
உயிர்ச் சவங்களாய் இருந்த உலக நாடுகள்,
தமிழன் உயிர்விடும் நேரதிலும் ....

சிவா.ஜி
21-01-2010, 08:23 AM
தமிழன்......
அம்மணமான அன்றைய உலகில்
அரையில் பட்டுடுத்திய பெருமகன்

ஆடைகட்டிய இன்றைய உலகில்
கோவணத்துக்கு கையேந்தும் தரித்திரன்

அன்று நாகரீகத்தின் காவலாளி
இன்று நாகரீகக் கோமாளி...

இலவசங்களைக் கொண்டு வாழும்
இவன் இன்று சவம்...!!!



"கையேந்தும்....."

சரண்யா
21-01-2010, 01:56 PM
கையேந்தும் பிள்ளைகளை
கையில் வைத்துக் கொண்டு
கேட்கும் அவலம் என்று
ஒழியுமோ அன்று தான்
இந்தியா வளமிக்க நாடாக
மாறுமென மாற்றம் நிகழுமோ...

சிவா.ஜி
21-01-2010, 03:51 PM
இந்தியா.....

ஊழலில் நிக்குது முந்தியா...
உழைப்பவர் முன்னேற்றத்தில் பிந்தியா...

சந்தேகம் தோணுது....
நாம சுதந்திரம் அடைஞ்சது
ரத்தம் சிந்தியா.....?



அடுத்த வார்த்தை...'ரத்தம்'

அக்னி
21-01-2010, 04:08 PM
ரத்தம் தோய்ந்த
முற்றக் கறைகள் மட்டும்தான்,
நம் நிலத்தில், நாம் வாழ்ந்ததன்
அடையாளங்கள்...

இன்பக்கவி
21-01-2010, 08:36 PM
அடையாளங்கள்
அழிக்க நினைத்து
அவசரமாய் கொன்று குவித்தது
எம் தமிழரை...
இன்றுவரை முடியவில்லை
முழுவதுமாக...
அழிக்க அழிக்க பிறப்போம் நாங்கள்
அழிவது மக்களாக இருந்தாலும்
என்றும் அழியாததும் எம் தமிழ்..

அக்னி
22-01-2010, 12:31 PM
எம் தமிழ்
குதறப்படுவது எம்மாற்தான்...
ஆங்கிலம் தெரிந்திருப்பது,
தப்பல்ல.
ஆனால்,
தமிழிற்குள் ஆங்கிலம்
தெரிவதுதான் தப்பு.

குறிப்பு: தேவையற்ற ஆங்கிலக் கலப்பைத் தமிழினின்றும் களைவோம்.

சிவா.ஜி
22-01-2010, 01:44 PM
தமிழிற்குள் ஆங்கிலம்
உணவுக்கிடையில் கல்
கடின*ப்பட்டு அரைப்பதிலும்
களைந்துவிடுவதே மேல்...

தமிழ்த்தாய்க்கு
ஆங்கில ஆடை அவசியமா?
அணிந்திருக்கும் சேலையே அழகுதானே...!!



களைந்துவிடுவதே.......

சரண்யா
23-01-2010, 01:56 AM
களைந்துவிடுவதே
மன நலம் குன்றியவரின்
மனமும் மூளையும்-என்
பாவம் செய்து இத்துயர்
அனுபவிக்கின்றனரோ
அப்பாவம் மறையப்படு்வது
என்றோ..

சிவா.ஜி
24-01-2010, 10:48 AM
மனமும் மூளையும்
மரத்துதான் போய்விட்டது
மரணமடைந்த சில*
உயிரில்லா கவிதைவரிகளை
கண்டு கண்டு...!!

வாசித்ததும், விரல்களில்
எண்ணங்களை ஊறவைக்கும்
வரிகளை வாசித்துதான்
மூளையையும், மனதையும்
மீண்டும் உணர்விக்க வேண்டும்..!!


அடுத்த கவிதைக்கான வார்த்தை_எண்ணங்களை....

சரண்யா
24-01-2010, 03:37 PM
அட டா..இது என்னோட வரிகள் தங்களை இப்படி செய்கிறதா....
எனினும் முயற்சி செய்கிறேன்...

எண்ணங்களை கொண்ட
மனம் என்ற ஒரு தனி
இடமில்லாத இடமே
ஓர் காற்றாடி போன்று
காற்றுக்கு தகுந்த போல்
மனம் மாறுவதும்,நூலின்
நீளத்திற்கு தகுந்தார் போல்
சலனமும் அடையும்
ஓர் புதைக்குழி நம்மில்
புதைந்து கிடைக்கும்
ஓர் உருவமற்றது
அதனை வென்றால்
வாழ்வில் வெற்றியே.

இன்பக்கவி
25-01-2010, 10:02 AM
சரண்யா வார்த்தை தராததால் கடைசி வார்த்தை கொண்டு ஆரம்பிக்குறேன்

வெற்றியே!!
எங்கே இருக்கிறாய்??
உன்னைத் தேடி அலைகிறேன்
தோல்வியை நேசிக்கிறேன்..
நீ தர போகின்ற சந்தோஷத்திர்காய்
வெற்றியே வந்துவிடு
பல தோல்விகள் பார்த்தாகிவிட்டது...
என்னிடம் வர விருப்பம் இல்லையா உனக்கு???

அக்னி
25-01-2010, 10:44 AM
தோல்விகள் வேள்விகளாக,
வெற்றிகள் கேள்விகளாகும்...
அக்கணம்,
மனக்கனம் மாறும்.
தலைக்கனம் மாற்றப்படும்.
மாற்றி எழுதப்படும் விடை,
நீதிக்குச் சான்று சொல்லும்.

சிவா.ஜி
25-01-2010, 11:05 AM
வெற்றிகள்....
தோல்விப் பாலை பயணத்தில்
இளைப்பாறல் சோலைகள்
மயக்கத்திலாழ்ந்து
சோலையில் தேங்கிவிட்டால்
பாலையே நிரந்தரம்...!!!




மயக்கத்திலாழ்ந்து....

இன்பக்கவி
25-01-2010, 12:03 PM
மயக்கத்திலாழ்ந்து....
மதி இழந்து
வாழ்வை இழந்து
இழந்து போன
வாழ்வை எண்ணி வருந்தி
நிம்மதி இன்றி
நித்தமும் மறக்க முடியாமல்
நினைக்க வைக்கும் நினைவே
உனக்கு பெயர் தான்
காதலோ??

அக்னி
25-01-2010, 12:04 PM
மயக்கத்திலாழ்ந்து
இயக்கம் தொலைத்தேன்...
தயக்கத்திலாழ்ந்து
உன்னையே தொலைத்தேன்...

வானதிதேவி
25-01-2010, 04:12 PM
சில்லறையாய் மாறி போன
ஆயிரம் ருபாய் நோட்டுகள்
அழகிய யுவதியின் கரங்களில்
வீதியில் உணவுக்காக கையேந்தும்
சிறுமி தட்டில் செல்லா காசு

அக்னி
25-01-2010, 05:37 PM
உணவுக்காக ஏங்கும்
தீப்பிடித்த வயிறுகளும்,
உலைவைக்கின்றன..,
தம் உயிருக்கு...

(இடையில் என் தாமதப் பதிவு சொற்களை மாற்றிவிட்டது. இருந்தும் வானதிதேவி அவர்கள் சுட்டிய சொல்லிற் தொடர்கின்றேன்.)

சரண்யா
26-01-2010, 02:58 PM
அக்னி அவர்கள் சொல் கொடுக்கவில்லையே..சரி முடித்த சொல்லில் ஆரம்பிக்கிறேன்..
முன்பு எழுதியதை சிவா அவர்கள் பதில் சொல்லாததால் எழுதவும் யோசனையாக உள்ளது ..எனினும் முய்ற்சி செய்கிறேன்.
உயிருக்கு உயிராக
என ஏங்கும் அளவில்
பற்று இருந்தால் அதில்
ஆசை ஒளிந்து உள்ளது.

சிவா.ஜி
26-01-2010, 03:46 PM
பரவாயில்லை சரண்யா...தொடருங்கள்....

ஒளிந்து கொண்டிருக்கும் சாத்தான்
ஓய்வு நேரத்தில் உலாவர வெளி வருகிறது
வழியில் காணும் அப்பாவிகளின் உள்ளத்தை
குதறிக் கூறு போடுகிறது....
தேவதைகளின் இருப்பை இருட்டடிப்புச் செய்து
தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறது



அடுத்த வார்த்த: கூறு போடுகிறது..

இன்பக்கவி
26-01-2010, 04:22 PM
கூறு போடுகிறது
எங்கள் நாட்டை
பாழாய் போன அரசியல்..
தெலுங்கனா வேண்டுமாம்...
கேரளாவும், கர்நாடகவும்
ஆழ்ந்த சிந்தனையில்
ஆயத்தம்மாகி
அடுத்த கட்ட நடவடிக்கை
எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்
ஆள் ஆளுக்கு கூறு போட்டு
தனி தனி சுதந்திர தினம் கொண்டடுவர்களோ???

சரண்யா
27-01-2010, 12:35 AM
சுதந்திர தினம் பள்ளியில்
சிறப்பு விருந்தினர் கொடியை
ஏற்ற வணக்கத்தோடு பாடல்
பாடிய மாணவர்களின் திறமையை
வெளிக்கொணர்ந்து ரசிக்கும்
பார்வையாளரின் ஊக்கம் அது
பெருமை சேர்க்கும் நல்விருந்து.

சிவா.ஜி
27-01-2010, 08:21 AM
ஊக்கம்....
விழியில்லாதோரைப் பார்க்க வைக்கும்
காலில்லாதோரை ஓட வைக்கும்...
துவண்டு தளர்ந்த இதயத்தை
தட்டியெழுப்பி துள்ள வைக்கும்..
வெற்றிக்கனியை பறிக்க
துரட்டிக்கோலாய் துணை நிற்கும்....!!!

அடுத்த வார்த்தை: இதயத்தை...

ஆர்.ஈஸ்வரன்
27-01-2010, 09:22 AM
இதயத்தை....
இதயத்தை வைத்திரு பத்திரமாய்
எப்போதும் வைத்திரு சொந்தமாய்
வேலைகள் செய்திடு எந்திரமாய்
வியக்கப்போகும் வாழ்க்கை உன்னதமாய்
வெற்றிக் கிட்டும் சத்தியமாய்

இன்பக்கவி
27-01-2010, 11:30 AM
வெற்றி கிட்டும்
என்ற அற்ப ஆசையில்
எல்லோரும் இருக்க..
கிடைத்தது என்னவோ
பெரிய நாமம் தான்..
இரு கொடூரன்கள் போட்டியிட்டு
ஒரு கொடூரன் வென்றான்..
தர்மத்தின் வாழ்வுதனை சூது
கவ்வும்
ஆனால் மறுபடியும் அதர்மமே வென்று
ஏளன சிரிப்பு சிரிக்கிறதே???

ஆதி
27-01-2010, 12:32 PM
ஏளன சிரிப்பின்
நிசப்தமான அரக்க ஓசைகள்
செவிப்பறை கிழிய
அதிர்ந்தது அன்றொரு நாள்..

அந்த சிரிப்புக்கான காரணம்
என் இலாமையாகவோ
என் அறியாமையகவோ
என் ரசனையின்மையாகவோ
என் கவனமின்மையாகவோ
என் தவறுதலாகவோ
ஒரு தர்ம சங்கடமான சம்பவமாகவோ
இன்னப் பிற
எதுவாகவும் இருக்கலாம்..

தப்புரைக்க சாத்தியமற்ற
காரணமாயினும்
தலை குனிவோடான
காயத்தை வழங்கிய அச்சிரிப்புக்கு
என்றைக்கும் தெரிய போவதில்லை
எச்சமாதான*த்துக்கும் ஆறாத என் வலிகளை..

சிவா.ஜி
27-01-2010, 01:20 PM
என்றைக்கும் நீ தெரிந்துகொள்ளப்போவதில்லை...

காக்காக் கடி காலத்திலிருந்து
கல்லூரிவரை இணைந்திருந்தும்,
இதயம் பரிமாறிக்கொள்ள*
உத்தேசிருந்த அந்த ஒரு நொடியை....!

உன் இதயம் இடம் மாறியதை
தெரிந்துகொள்ளுமுன்பான*
அந்த ஒரு நொடியை......!!


அடுத்த வார்த்தை: பரிமாறிக்கொள்ள...

மன்மதன்
27-01-2010, 02:12 PM
பரிமாறிக்கொள்ள
அன்பை தவிர
எதுவுமில்லாத
நட்பில்
பகிர்ந்து கொள்ள
அனைத்துமே
சாத்தியமாகிறது..

சிவா.ஜி
27-01-2010, 02:20 PM
அருமை மன்மதன்...

அன்பைத்தவிர
ஏதுமில்லை என்
ஏனைய மக்களுக்குத் தர..
ஆயினும்....
அன்பைத்தவிர
அனைத்தும் கிடைக்கிறது
அதிர்ஷ்டமில்லா எனக்கு..

அடுத்த வார்த்தை: ஏதுமில்லை....

இன்பக்கவி
27-01-2010, 02:23 PM
ஏதுமில்லை....
என்னிடம்...
உனக்காக தர
அன்பை தவிர
ஒன்றும் இல்லை
என் அன்பையும்
என் காதலையும்
உன் இதயத்தோடு
பத்திரமாய் வைத்துகொள்
என் உயிரே..

ஆதி
27-01-2010, 02:31 PM
பரிமாறிக்கொள்ள
பிரிவதற்கு முந்தையதோ
பிரிவிற்கு பிந்தையதோவான*
நினைவுகள் நம்மிடம்
எதுவும் இருந்திருக்கவில்லை
அந்த சந்திப்பில்..

என் புது உறவுகளைப் பற்றிய*
பெருமித வார்த்தைகளோ
ஏகாந்த காலங்களில் உற்ற*
வலி துயரைங்களையும்
பகிர்ந்து கொள்ளவில்லை..

மௌனத்தின் கதவுகளை பலமாய்
உட்புறம் தாழிட்டுக் கொண்டு
நம்மில் ஒருவர் உதிர்க்கப் போகிற*
முதல் வார்த்தைக்காக*
காத்து கிடந்திருதோம்..

உன் எதிர்ப்பார்ப்புக்கள் என்னுடையதையும்
என் எதிர்ப்பார்ப்புக்கள் உன்னுடையதையும்
எதிர்நோக்கி ஏக்கத்தவமிருந்ததை உணர்ந்திருந்தம்
இருவரும் நம் ஆங்கார அரியனையில்
அமர்ந்திருந்தோம்..

இதே ஆகாரந்தான்
அன்றொரு பிரிவுக்கு ஆதாரமாய் இருந்தது..
இன்றும் நம் களையாத மௌனத்தின்
கதவாய் இருக்கிறது..

நாம் நிறைய மாறி இருக்கிறோம்
தோழி..
உருவத்திலும்..
வாழ்விலும்..
என்றாலும்
மாறாமல் இருக்கிறது
நம் ஆங்காரங்கள்
நம் காதலைப் போல்..

ஆதி
27-01-2010, 02:44 PM
பத்திரமாய் வைத்துக்கொள்
இந்த தழுவலின் ஸ்பரிசத்தை
ததும்பும் இமைகளின் துளியை
கடைசியாய் சிந்த போகும் மௌனத்தோடான தலையசைப்பை
கடைசிவரை பகிராமல் போகிற நம் மனதின் எண்ணத்தை..

நாளை வாழ்வின்
ஒரு திருப்புமுனையில்
நிகழ நேரலாம்
நம் சந்திப்பு..

பகிர்ந்து கொள்ளலாம்
இவை யாவையும் அத்தருணத்தில்
தனிமையாகவோ
சுற்றத்தார்களோடோ..

பா.ராஜேஷ்
27-01-2010, 03:14 PM
யாவையும் இருந்தும்
யாதுமற்றவன் போல்,
யாதுமாகிய உன் தயவிருந்தால்
யாவும் எமக்கு எளிதே !

சிவா.ஜி
27-01-2010, 03:28 PM
எமக்கு எளிதே
என எதைச் சொல்லுவது?
மூச்சு விடுதலையே இப்போது
சிரமத்துடன் செய்யும்
சூழலை அடைந்த பின்....


அடுத்த வார்த்தை: எதைச் சொல்லுவது....

இன்பக்கவி
27-01-2010, 03:37 PM
எதை சொல்லுவது
புரிதல் இல்லாததால்
பிரிந்ததையா
பிரிந்த பின் வருந்துவதையா
என் பிரிவு உனக்கு
சந்தோசம் என்றால்
பிரிந்தே இருப்பேன்
உன்னை நினைத்து
தனித்தே இருப்பேன்...

பா.ராஜேஷ்
28-01-2010, 09:23 AM
தனித்தே இருப்பேன் - ஆனால்
தவித்தே இருப்பேன் - அறிந்திருந்தால்
தவிர்த்தே இருப்பேன் - சந்தேகத்தை
தவற விட்டிருக்க மாட்டேன் - சந்தோஷத்தை

இன்பக்கவி
28-01-2010, 09:42 AM
சந்தேகத்தை கொண்டு
என்ன சரித்திரம் எழுத போகிறாய்
உன்னை நேசித்த
என் மனதை நீ சந்தேகிக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஆயிரம் தேள்கள்
கொட்டும் வேதனை
சந்தேகத்தை விட்டு
உன்னையே சுவாசிக்கும்
என்னை நேசி..

ஆதி
28-01-2010, 11:22 AM
சரித்திரம் எழுதுதல்
சுலபப்பட்டுவிட்டது
தற்பொழுது..

பிறருக்கு ரணங்கள் ஏற்படுத்த
ஒரு ஆயுதம்..

ரத்தக்கறை படிந்து நிலம்..
மாமிசப்பிண்டங்களாக
அதில் சிதறிக் கிடக்கிற சடலங்கள்..

நீங்காது கேட்கும் துயர ஓலங்கள்..

நிதம் வெளியேறும் அகதிகள்..

இவை போது, சுலமபாய்
எழுதிவிடலாம் சரித்திரங்கள்..

அக்னி
28-01-2010, 11:32 AM
அகதிகள்..,
அவதிவிட்டு
அமைதிதேடி
அவதியுறும்
அதிதிகள்...

சிவா.ஜி
28-01-2010, 11:33 AM
அகதிகள்....
வேரோடு பிடுங்கி
வேறுநிலத்தில் நடப்பட்ட
தாவரங்கள்...
மண்மாறிய நிலையிலும்
மனம் மாறா நிலை...
எவரோ சிலரின் ஆதிக்கத்துக்கு
அவை கொடுக்கும் அநியாய விலை....!!

அடுத்த வார்த்தை: மாறா நிலை

ஆர்.ஈஸ்வரன்
29-01-2010, 09:59 AM
மாறா நிலை......
துன்பம் வந்தபோதும் வேண்டும் மாறாநிலை
இன்பம் வந்தபோதும் வேண்டும் மாறாநிலை
லாபம் வந்துபோதும் வேண்டும் மாறாநிலை
நட்டம் வந்தபோதும் வேண்டும் மாறாநிலை
தன்நிலைமறந்தபோதும் வேண்டும் மாறாநிலை

அடுத்த வார்த்தை நிலைகெட்ட.....

சிவா.ஜி
30-01-2010, 11:28 AM
கொடுக்கப்பட்ட வார்த்தைக் கவிக்குள் இல்லாததால்....கவிக்குள்ளிருந்து எடுத்துக்கொண்ட வார்த்தையுடன் தொடர்கிறேன்.....


துன்பம் வந்தபோதும் துவளவில்லை
சோதனை நேர்ந்த போதும் கலங்கவில்லை
வேதனையில் வாடியபோதும் வருந்தவில்லை
இலவசங்களால் தாழ்ந்துவிட்ட தமிழனென்று
வேறொருவன் என்னைச் சொன்னபோது...
தமிழனாய் தலைகுனிந்தேன்....!!!




அடுத்த வார்த்த:தாழ்ந்துவிட்ட....

இன்பக்கவி
30-01-2010, 05:36 PM
தாழ்ந்து விட்ட
என் நிலைக் கண்டு
கவலை வேண்டாம்
தாழ்ந்து தாழ்ந்து
உயரப் பறக்கும்
காத்தாடி நான்...
மீண்டும் வருவேன்...
மீண்டு வருவேன்.:icon_b:

Ravee
31-01-2010, 01:38 AM
மீண்டும் வருவேன்...
மீண்டு வருவேன்.
துயரத்தில் என்னை
புறம் தள்ளி போனவளே
அந்தப்புரம் இனி வேன்டாம்
அகம் புறம் அறிந்தேன்
நான் நானாக
மீண்டு வருவேன்.

சிவா.ஜி
31-01-2010, 08:09 AM
அந்தப்புரம் இனி வேண்டாம்
அரசகுமாரியாகவும் இருக்க வேண்டாம்
அரண்மனை வாசம் வேண்டாம்...
வெளியே வா...வெளியைப் பார்....
பரந்த உலகத்தில்...என்னையும் பார்
உனக்காக வாழும் என்னுடன்
நமக்கான ராஜ்ஜியத்தில்
என்றும் மகாராணியாய் என்னையும் ஆள்!


அடுத்த வார்த்தை: உனக்காக வாழும்

இன்பக்கவி
31-01-2010, 08:56 AM
உனக்காக வாழும்
என்னை வதைத்து விடாதே
வதைக்காமல் காதல் இல்லை
நீ இல்லாமல் வாழ்வும் இல்லை
உன்னோடு கைபிடித்து
உன் வாழக்கை தடத்தில் இணைய ஆசை எனக்கு
உன் வழித்தடத்தில் இணையவே
எனக்குள் போராட்டம்...:)


அடுத்து
எனக்குள் போராட்டம்...

சிவா.ஜி
01-02-2010, 08:19 AM
எனக்குள் போராட்டம்
விடுவதா....விழுவதா...
அவளைக் கைவிடுவதா
காதலில் விழுவதா..
அவள் எண்ணத்தை சொல்ல
எடுத்துக்கொண்ட நேரம்...
என் எண்ணத்தை மாற்றிக்கொள்ள
நான் எடுத்துக்கொண்ட நேரத்தைவிட
அதிகமானதால்....விடுவதாய் முடிவு..!!


அடுத்தது...
எண்ணத்தை சொல்ல.....

ஆதி
01-02-2010, 08:43 AM
எண்ணத்தை சொல்ல
கவனமாய் தெரிவு செய்கிறேன்
சொற்களை..

உச்சரிக்கும் முன்
மீள்பரிசோதனைக்கு உட்படுத்தி
உறுதிப்படுத்திக் கொள்கிறேன்
உள்ளர்த்தங்களை...

இல்லாத அர்த்தத்தையும்
கண்டறிகிற உன் சாதுர்யத்தின் மேலான
பயம் தானென்றாலும்
எனை அறியாமலும்
உனை காயப்படுத்திவிட கூடாதெனும்
அக்கறையும் தான்
இவ்வதிகப்படியான கவனத்திற்கு
காரணமாய் அமைகிறது...

பா.ராஜேஷ்
01-02-2010, 12:30 PM
உறுதிப்படுத்திக் கொள்கின்றேன்
உன்னை பார்த்த நிமிடத்தில்
இறக்கை எவ்வாறு முளைக்கின்றதென்று?
இயற்கை எவ்வாறு மாறுகிறது?
இதயத்துடிப்பு எவ்வாறு எகிறுகிறது?
இந்த மாற்றம் அணைத்தும்
உன்னுள்ளும் நிகழ்கிறதோ?

சிவா.ஜி
01-02-2010, 12:34 PM
இந்த மாற்றம் என்பது
என்றுமே மாறாது என்பதைப்போல*
என் ஏமாற்றமும்
என்றாவது மாறுமா?
என் வேண்டுதல்
காதல் கடவுளின்
காதுகளில் ஏறுமா?
அவளின் இதயத்தோடு
என் இதயம் சேருமா?


அடுத்தது: என்றாவது மாறுமா?

ஆதி
01-02-2010, 03:27 PM
என்றாவது மாறுமா ?
என்று
சோகம் தோய்ந்த குரலோடு
நேற்று எவரேனும்
ஏங்கி இருக்கலாம்..

கவலை அளாவிய குரலோடு
இன்றொருவம் சலித்து கொள்ளலாம்..

விரத்தி விளாவிய குரலோடு
நாளை எவராவது வாழ்க்கையின் மேலார்ந்த
நம்பிக்கை இழக்கவும் கூடும்..

நேற்று, இன்று, நாளைகளில்
நிகழ்கிற அற்புதங்களில் மாறிவிடுவதல்ல
வாழ்க்கை..
அது ஒவ்வொரு கணமும்
மாறிக் கொண்டே இருக்கிறது
கட்புலனாகாமல்.....

Ravee
01-02-2010, 06:20 PM
உனக்கும் என் மேல் நம்பிக்கை இல்லை
அன்பே நம்பு நான் அதிகம் காதலிக்கும் பெண் நீ
கல்யாணத்திற்கு பின் பெண்களே
இல்லாத பூமிக்கு எப்படி போவது
என் தாயும் தமக்கையும் பெண் தானே
பெண்ணே பெண்களை வெறுக்கும்
காரணம் என்ன ? ? ?
உன் தாயும் பெண் தானே- அவள் மட்டும்
எப்போது தெய்வ நிலை அடைந்தாள்.

ஆர்.ஈஸ்வரன்
02-02-2010, 09:28 AM
உறுதிப்படுத்திக் கொள்கிறேன்
இந்த உலகம்
உழைப்பில் இயங்க வேண்டும்
மாறவேண்டும் மயக்கம்
அதற்தெதற்கு தயக்கம்

சிவா.ஜி
02-02-2010, 11:15 AM
தெய்வநிலை என்றால்
தெய்வத்தின் நிலையா?
தெய்வத்தின் நிலையென்றால்
எதுவும் தெரியாத நிலையா?

அடித்த சரக்கின் வீரியத்தில்
ஆற்றில் இறக்கி
பேருந்து பிள்ள*களைக் கொல்லும்
ஓட்டுநரும், உரிமையாளரும்,

தடுப்பூசியில்
கலப்படம் செய்து
சின்னக் குழந்தைகளை
கொல்லும் நிறுவனமும்,

பூகம்ப இடிபாடுகளிலும்
பொருளுக்காக குற்றுயிரை
கொலை செய்யும் கொடுமையாளர்களும்
கண்ணுக்கு தெரியாத நிலையா?


அடுத்த வார்த்தை....
தெரியாத நிலையா?

பா.ராஜேஷ்
02-02-2010, 02:10 PM
தெரியாத நிலையா
அறியாத நிலையா
புரியாத நிலையா
ஒரே குழப்பம்...
விடை சொல்ல
விரைந்து ஓடி வா!!!
உன் வார்த்தையில்
விளக்கம் பெற காத்திருக்கிறேன் ...

இன்பக்கவி
02-02-2010, 03:44 PM
விடை சொல்ல
முடியாத கேள்வியாய்
நீ பார்க்கும் பார்வை
இருக்கும் பொழுது
என்னிடம் மட்டும்
என்ன பதிலை நீ
எதிர் பார்க்கிறாய்
ஒவ்வொரு முறையும்
உன்னருகில் ஊமையாய்
வார்த்தையின்றி தவிக்கிறேன்

ஆதி
04-02-2010, 11:38 AM
ஊமையாய் இறுகிவிட்டிருந்தது
உன் வார்த்தையின் வலியக்கரங்கள்
என் உயிரின் குரல்வலையை நெரித்த
அத்தருணம்...

அது ஒரு மரணத்தைப் போல
தற்செயலான நேர்ச்சி அல்ல..

ஒரு படுகொலையை போல
திட்டமிட*ப்பட்ட நிகழ்வு..

என்றாலும்,
அதை நீ செய்திருக்க வேண்டாம்
உன் பூ உதடுகளால்..

குணமதி
04-02-2010, 12:44 PM
யார் பொறுப்பு?

உதடுகள்...

ஒப்புவமையற்ற வாயிற் கதவுகள்!

அன்பு, காதல், அருள், சினம், வெறுப்பு...

பல்வேறு உணர்வுகளைச் -

சொற்களாய் வெளிப்படுத்தும் வாயிற் கதவுகள்!

நன்மையும் தீமையும் உருவாக்கும்

மொழிகளை உதிர்க்கும் வாயிற் கதவுகள்!

உறிஞ்ச, பருக, உண்ண உதவும் வாயிற் கதவுகள்!

'கழிபேரிரையர்' கண்டதையும் விழுங்கும் வாயிற் கதவுகள்!

உலகையே ஈர்க்கும் ஒப்புயர்வற்ற கருத்துக்களை

உதிர்த்தோரின் முகத்திருந்த ஒருதனிச் சிறப்பான வாயிற் கதவுகள்!

நன்மைக்கும் தீமைக்கும் -

தடையின்றி வழிவிடும் வாயிற் கதவுகள்!

ஓ! அவை தானே இயங்காவே!

அவற்றை இயக்குவாரன்றோ பொறுப்பு!

இன்பக்கவி
04-02-2010, 05:43 PM
வார்த்தையின் வலியகரங்கள்
கொண்டு அடித்து விட்டாய்..
என் மனதில்..
ரணமாகி குருதியில்
நனைகிறது என் இருதயம்...
இன்பம் பெற்றாயோ
என்னை வருத்திவிட்டு..
நீ இன்பமாய் இருப்பாய் என்றால்
வருத்திக் கொண்டே இரு.
கலங்கமாட்டேன்..
என் காதலால் உனக்கு
காதலை புரியவைப்பேன்...

சிவா.ஜி
06-02-2010, 01:25 PM
புரியவைப்பேன் நாளை....
அரியமுடியா அனுபவமின்மையால்
சிறிய தவறை செய்து,
பெரிய இழப்பில் இருந்தபோது
எள்ளிநகையாடிய எல்லோருக்கும்
புரியவைப்பேன் நாளை....
வெற்றிக்கோட்டைக் கடந்து..
வியர்வை வழிய வழிய...!!!



அடுத்த வார்த்தை:எள்ளிநகையாடிய...

இன்பக்கவி
06-02-2010, 03:30 PM
எள்ளிநகையாடிய
நாட்கள் மறக்க முடிவதில்லை
கல்லூரி நாட்களில்
நான் பேருந்துக்காய்
காத்துக்கொண்டு இருக்கையில்
என் முன் உன் வீரத்தை கண்பிப்பதாய்
நீ செய்யும், குறும்புகள் ஒன்றா இரெண்டா
எதை சொல்ல??
ஓடும் பேருந்தில் ஏறி
நடத்துனரிடம் எக்கச்சக்கமாய்
திட்டு வாங்கி அசடு வழிந்து
நீ நிற்கையில்
பொங்கும் சிரிப்பை அடக்குவது
சிரமம் என்றாலும்
சிறு புன்னகையில்
என் சிரிப்பை புதைத்தேன்
இன்றும் மறக்க முடியவில்லை..
என்னால்..:icon_b::D

சிவா.ஜி
07-02-2010, 08:06 AM
பொங்கும் சிரிப்பையே
அவளின் சொத்தாய் வைத்திருந்தாள்
எங்கும் அதனை வெளிப்படுத்தி
இன்பத்தை இறைத்திருந்தாள்..
இல்லறம் புகுந்தபின்
இறுக்கிய துன்பங்களால்
சிரிப்பை தொலைத்துவிட்டாள்.


அடுத்து: இறுக்கிய துன்பங்களால்

இன்பக்கவி
09-02-2010, 08:43 AM
இறுக்கிய துன்பங்களால்
சறுக்கியது நம்பிக்கை ..
தீராத துன்பம்
எனக்கு மட்டுமே..
வலியை மறக்கும்
வழியை தேடினேன்
அம்மா எங்கே நீ...
அதிர்ஷ்டம் இருந்தால்
ஆண்டியும் அரசன்தான்..
நீ தானே என் அதிர்ஷ்டம்எங்கே சென்றாய்...
நீ இல்லாமல் நான்
ஆண்டியாய் ஆனேன்..
பாசம் தேடும் பாவியாய் ஆனேன்

ஆர்.ஈஸ்வரன்
09-02-2010, 08:58 AM
அதிர்ஷ்டம் எங்கே சென்றாய்
நீதானே என் அதிர்ஷ்டம்
தன்னம்பிக்கையே
நீதானே
என் அதிர்ஷ்டம்
ஒருபோதும் வீணாகாது
தன்னம்பிக்கை
சரிதானே

குணமதி
13-02-2010, 07:08 AM
தன்னம்பிக்கை...

தலிநமிர, தலையெடுக்க, தலைமையேற்க -

அடிப்படை!

தன்னம்பிக்கை அற்றவர் -

தம் வாழ்க்கையையே இழக்கிறார்!

தம் வாழ்க்கையைத் தாமே

முடித்துக் கொள்கிறார்!

எல்லா மாந்தர்க்கும் அவரவர்க்குரிய வகையில் -

திறமுண்டு!

அறிவுண்டு!

தன்னம்பிக்கை வாழவைக்கும்!

வாழ்வில் உயரவைக்கும்!

அஃதில்லார் -

அரைகுறை மாந்தரே!

சிவா.ஜி
13-02-2010, 10:47 AM
எந்த வார்த்தை எனக் குறிப்பிடாததால், கடைசி வார்த்தையை எடுத்துக்கொள்கிறேன்.

அரைகுறை மாந்தரே..
விழி விரித்திருங்கள்
வழி அறிந்திடுங்கள்
நுனிப்புல் மேயலில்
கணிப்புகள் தவறலாம்
ஆழ அறிந்திடுங்கள்
வாழ விளைந்திடுங்கள்.



அடுத்து: கணிப்புகள் தவறலாம்

இன்பக்கவி
13-02-2010, 01:53 PM
கணிப்புகள் தவறலாம்
காலத்தின் சூழலை
கணிக்க முடியுமோ??
கணிப்புகள் ஒரு மாயை..
மாயை நம்பி
ஐந்து வருடத்திற்கு ஒர் முறை
ஏமாறும்
வாக்களர்கள் நாங்கள்..

சிவா.ஜி
13-02-2010, 02:21 PM
வாக்களர்களென*
வாக்காளரின் கால்கள்
முறிக்கப்பட்டு முடமானால்
வாக்களிக்க வருவாரா..
அராஜக அரசியலில்
அச்சமின்றி வாக்களிக்கும்
அந்தநாள் வந்திடுமோ....
வாக்குத் தவறாதவருக்கு
வாக்களிக்க இயன்றிடுமோ...?


அடுத்து: அந்தநாள் வந்திடுமோ....

குணமதி
14-02-2010, 02:49 AM
அந்தநாள் வந்திடுமோ? ஆக்கம் கருதியே

எந்த வினையும் இனிதாற்றிச் - செந்தமிழர்

வாழ்ந்திருந்த செஞ்சிறப்பும் வஞ்சமிலா நல்லுளமும்

சூழ்ந்திட வாய்த்திடுமோ சொல்.

இன்பக்கவி
15-02-2010, 04:18 AM
சொல்
உனக்காக காத்திருக்கும்
எனக்கு ஆறுதலான
ஒரு வார்த்தை சொல்...
பல மைல்களுக்கு அப்பால் நீ
கை பேசியை மார்போடு அணைத்து
கவலை மறைத்து
உன்னை நினைத்து
இளமை தொலைத்து
நிம்மதியான வாழ்விற்காய்
போராடும் உன்னை
பிரிந்து போராடும்
என் மனதிற்கு
ஆறுதலாய் ஒரு வார்த்தை சொல்..
பணத்திற்காய் வாழும் வாழ்க்கை..
பணத்தை வெறுக்கிறேன்
உன்னையும் என்னையும்
பிரிக்கும் பணத்தை வெறுக்கிறேன்...
வந்துவிடு... போதும்
தேடி அலையும் வாழ்க்கை
பணத்தை தேடி நீயும்
உன்னை தேடி நானும்..
வருத்ததோடு வாழும்
நரகம் வேண்டாம்...:traurig001:

குணமதி
17-02-2010, 02:18 PM
பணத்தைத் தேட வேண்டியதே!

பகைவர் இறுமாப்பை அறுக்கும் வாள் அது!

வாழ்க்கை வசதிகள் வேண்டியதே!

எல்லையற்ற காலம் போல் நீளும்

அவற்றிற்கு வரம்பு கண்டால்தான்

வாழ்க்கை என்ன எதற்கு எப்படி

என்று தெரியும்! எல்லை யில்லாப்

பணச் சேர்ப்பு எந்திரமா மாந்தன்?

இன்னும் எத்தனையோ இருக்கிறதே!

அவை யெதையும் அறியாமலே

இந்தப் பணச் சேர்ப்பு எந்திரம்

பழுதாகித் தூக்கி எறியபட்டுவிடக் கூடாதே!

இன்பக்கவி
19-02-2010, 11:25 AM
தூக்கி எறிய குப்பை அல்ல..
தூக்கி எறிய பழுதாகி போன
பண்டம் அல்ல
தூக்கி எறிய வேண்டாப் பொருளா
குழந்தை ஒன்றும் உயிர் இல்லா
ஜடம் அல்ல...
குப்பை தொட்டியிலும்,
கழிவு நீர் ஓடையிலும்
தூக்கி எறியும் மாந்தரே
வழி தவறிய உன்னால்
வழி இன்றி தவிக்கும்
சேயை மறப்பது ஏன்???
சந்தோசம் உனக்கு
தண்டனை மழலைக்கோ??

இன்பக்கவி
23-02-2010, 01:45 AM
தண்டனை எனக்கு தந்துவிடு..
உன் இன் சொல்லால்
மதி மயங்கி
வாழ்க்கைக்கு ஆதாரம் இன்றி
வாழ்வை தொலைத்து
வழி தேடும் எனக்கு
தண்டனை தந்துவிடு..
பெற்றோர் செய்த பாவம்
எனக்கு இந்நிலை என்று
பிறர் கூற
பழி சொல்லை கேட்டு
கலங்கி போகும்
என்னை சார்ந்தவர்களுக்கு
வேண்டாம் தண்டனை....

Ravee
23-02-2010, 02:34 AM
பெற்றோர் செய்த பாவம்
என்று பேசி திரியாமல்
உன்னால் முடிந்ததை செய்து
வாழ்க்கையில் முன்னேறப் பார்
உனக்கு பிள்ளைகள் பிறக்கும் முன்னே
பின் அவனும் சொல்வான் எல்லாம்
என் பெற்றோர் செய்த பாவம் என்று

குணமதி
23-02-2010, 02:44 AM
பெற்றோர் செய்த பாவம்...

அவன் அவர்களுக்குப் பிள்ளையாய் வந்தது.

அன்பாய் வளர்த்து... அறிவு செழிக்கக் கல்வி தந்து...

அவனின் விருப்பங்களை நிறைவேற்றித்தான்

வளர்த்தார்கள்!

இன்றோ...

பெரிய படிப்பாளி... பெரிய வேலை வெளிநாட்டில்!

அங்கேயே காதலித்து மணந்து கொண்ட மனைவி!

அப்பா அம்மாவை மறக்கவில்லையாம்!

அதனால்தான் மாதந்தோறும் அனுப்புகிறாராம் தொகையை!

அவர்கள்...

அந்தக் காப்பு இல்லத்து உள்ளங்களோடும்...

ஆற்ற இயலா ஏக்கத்தோடும்!

இன்பக்கவி
25-02-2010, 03:50 AM
அவர்கள்..
வீழ்கின்றபோது எள்ளி நகையாடி
துன்பம் வருபோது தோள் கொடுக்காது
இருப்பதை இல்லாததாகவும்
இல்லாததை இருப்பதாகவும்
பிறர் கதை பேசி
தன் முதுகை பார்க்க மறந்த
அவர்களின் பெயர் சொந்தக்காரர்கள்....

குணமதி
26-02-2010, 01:37 AM
சொந்தக்காரர்கள்...

கறிவேப்பிலையாக நம்மைப் பயன்படுத்தித்
தூக்கி எறிபவர்கள்.

வாயினிக்கப் பேசி
வஞ்சத்தை நெஞ்சில் தேக்கியிருக்கும்
ஏமாற்று விலங்குகள்.

வீழ்ந்தால் மகிழ்ந்து
வாழ்ந்தால் வயிறெரியும்
விந்தைப் பிறவிகள்.

நன்மையே எண்ணி நல்லதே செய்யும்
சொந்தக்காரரைப் பெற்றவர்கள்
கொடுத்துவைத்தவர்கள்!

சரண்யா
23-03-2010, 12:13 PM
நன்மையே எண்ணினால் தானம்
உண்மையே எண்ணினால் நேர்மை
துன்பத்தை எண்ணினால் சோகம்
இன்பத்தை எண்ணினால் நன்மை

சிவா.ஜி
23-03-2010, 01:00 PM
நேர்மையாகத்தானிருந்தன...
எனது எல்லா அவயங்களும்
நேற்றுவரை...உன்னைக் காணும்வரை...!!
நேர்மாறாய் நடக்கின்றன
உன்னைக் கண்ட பிறகு...
உன்னைத்தவிர யாரையும்
பார்க்க மறுக்கும் கண்கள்
வேறு எதையும்
கேட்க மறுக்கும் செவிகள்
உன் வாசமன்றி வேறெதையும்
நுகர மறுக்கும் நாசி...
அனைத்தையும் சரியாக்கும்,
சிகிச்சையாய் எனை நீ நேசி..!!

மன்மதன்
23-03-2010, 03:05 PM
பார்க்க மறுக்கும்
கண்கள்
காண துடிக்கும்
இதயம்..

பேச மறுக்கும்
உதடுகள்
பேசிக்கொள்ளும்
மௌனம்..

கேட்க மறுக்கும்
செவிகள்
ஒரு வார்த்தைக்காக
காத்திருக்கும் மனசு..

காதலின்
முதற்கட்ட
போராட்டங்கள்..!!!

சிவா.ஜி
23-03-2010, 03:27 PM
அசத்தல் கவிதை மன்மதன்.

(அடுத்தக் கவிதைக்கு எந்த வார்த்தையை எடுத்துக் கொள்வது என்று குறிப்பிடவில்லையே...)

சரண்யா
03-04-2010, 03:32 PM
வாங்க மன்மதன் அவர்களே...
நீங்க எதிர்ப்பார்க்கும் வார்த்தையை கொடுங்க...

அமரன்
01-07-2010, 09:13 PM
அசத்தல் கவிதை மன்மதன்.

(அடுத்தக் கவிதைக்கு எந்த வார்த்தையை எடுத்துக் கொள்வது என்று குறிப்பிடவில்லையே...)

இதயத்தில் துவங்குவோம் சிவா!

இதயம்
இருளடைந்து கிடந்தாலும்
நன்றி சொல்கிறது..

ஆதவா நீ
மறைந்ததால்தானே
மதி
தோன்றியது...!!

குணமதி
02-07-2010, 03:38 AM
மதி
மதிக்கத் தக்காரை!

மிதி
கொடுமைகள் செய்வாரை!

பொதி
பாடல்களில் நற்கருத்தை!

உதி
அறிவு விளக்கோடு அறியாமை இருளுலகில்!

பதி
வாழ்வாங்கு வாழ்ந்தார் பட்டியலில் உன் பெயரை!

சிவா.ஜி
02-07-2010, 10:14 AM
இந்தக் கவிதையிலும் குணமதி வார்த்தை எதுவும் கொடுக்காததால்...கடைசி வார்த்தையை எடுத்துக்கொள்கிறேன்.


உன் பெயரை
உலகம் உரத்து சொல்லட்டும்
உன் நினைவை
உலகம் உய்யும்வரை வைக்கட்டும்
உன் செயலை
உலகம் உயர்த்தி நிறுத்தட்டும்
உன் எண்ணத்தை
உலகம் உரமாய் இறைக்கட்டும்

அமரன்
02-07-2010, 08:34 PM
நிறுத்தட்டும் பேய்கள்
ஊருக்குள் உலவுவதை.

சொன்ன கணத்தில்
பட்டென்று அறைந்தது
காற்று..

மனிதர்களால்
நிறைந்து விட்டனவாம் சுடுகாடுகள்.

குணமதி
03-07-2010, 02:48 AM
காற்றே!

வீசிச் சுழன்றடித்து
இவ்வுலகினின்றும்
கேடுகளை அப்புறப்படுத்த மாட்டாயா?

மெல்லிய தென்றலாய்
மெல்லத் தவழ்ந்து வந்து
நல்லோரின் உள்ளங்களை மகிழ்விக்க மாட்டாயா?

புழுக்கத்தால் அழுகின்ற குழவிக்குப்
புதிதாக வந்து
அளவோடு வீசி
அழுகையை நிறுத்துவாயா?

எரிச்சலால் வலியால்
துன்புறும் நோயர்
இன்புற இனிதாக வீசாயா?

இதையெல்லாம் செய்தால்... நீ
தெய்வக் கூட்டத்தைச் சேர்ந்ததாகக்
கூறும் கதையை
யாரும் மறுக்கத் துணியார்!

சரண்யா
03-07-2010, 03:44 AM
மறுக்கத் துணியார்!
மனசாட்சியில்லாமல்
கண் முன்னே நிகழும்
மனிதாபிமானமில்லாமல்
நடக்கும் நிகழ்வுகளை
கண்டும் காணாத செல்லும்
மனிதத்தை மனிதன்
என்று சொல்லவோ...