PDA

View Full Version : **கவிக்குள் கவி***:ஒரு கவிதை விளையாட்டு..



Pages : 1 [2]

Nivas.T
05-08-2010, 09:51 AM
சொல்லவோ இல்லை மறைக்கவோ ?
மறைத்தால் பாவம் நான்
சொல்லிவிட்டால் பாவம் நீ...என்ன செய்ய நான்?

இன்பக்கவி
06-08-2010, 11:58 AM
என்ன செய்ய நான்
பிரிந்து சென்றது நீ
பிரிய மறுக்கிறேன் நான்
உன்னை நேசித்த இதயத்திற்கு
புரியவில்லை
நீ என்னை பிரிந்ததை..
புரியாமல் தொடர்கிறது
உன்னை நேசிப்பதை

Nivas.T
06-08-2010, 12:45 PM
மறுக்கிறேன் என்கிறாய்
என்னையா? இல்லை என் காதலையா?
வெறுக்கிறேன் என்றாலும் பரவாயில்லை
மறுக்கிறேன் என்கிறாயே
அதுதான் புரியவில்லையடி... எனக்கும் :confused:

குணமதி
06-08-2010, 12:56 PM
மறுக்கிறேன்... வெறுக்கிறேன்.

இப்போது எதற்கு

இந்த விழா?

தமிழுக்கன்று...

தன்னல நோக்கிற்கே என உலகமே கூறுகிறதே!

விழாவெடுத்து மகிழும் நேரமா இது?

ஒரு வீட்டில் இழவு என்றால்,

பக்கத்து வீட்டுக்காரன்... குருதித் தொடர்புள்ளவன்...

விழா எடுப்பானா?

ஊரும் உலகமும் புரிந்துகொண்டு தானிருக்கிறது.

வரலாற்றுக் களங்கத்தைப் போக்க வழியே இல்லை!

வருங்காலத் தமிழினம் மட்டுமன்று...

மாந்த நேயமுள்ள எவரும்...

மன்னிக்கப் போவதில்லை.

உன் நாடகங்களுக்கு இனி என்றும் தோல்வியே!

உய்யும் வழியுண்டா என

உனக்குள் நீ எண்ணிப்பார்!

Nivas.T
07-08-2010, 12:06 PM
உனக்குள் நீ எண்ணிப்பார்!
எவ்வளவு உண்மையானவன் என்று!
பிறரைக் குறை சொல்லாதே!
உன்னை முதலில் நீ மாற்றிக்கொள்!
உலகம் மாறும் தாமாகவே!

ஆர்.ஈஸ்வரன்
13-08-2010, 10:33 AM
உலகம் மாறும் தாமாகவே
நாம் மாறவேண்டும் சுயமாகவே
சிந்தித்துச் செயல்பட்டால்....

சரண்யா
26-08-2010, 01:29 PM
சிந்தித்துச் செயல்பட்டால்....
வாழ்க்கையின் பல மாறுதல்கள்
எதிர்க் கொள்ளலாம்...
சிந்தித்துச் செயல்பட்டால்....
வருந்த வேண்டாமென்றும்
நினைத்து கொள்ளலாம்...

இன்பக்கவி
21-11-2010, 06:20 AM
சிந்தித்துச் செயல்பட்டால்....
வாழ்க்கையின் பல மாறுதல்கள்
எதிர்க் கொள்ளலாம்...
சிந்தித்துச் செயல்பட்டால்....
வருந்த வேண்டாமென்றும்
நினைத்து கொள்ளலாம்...

நொடியில் தீர்மானித்த
வாழ்வும், சாவும்
இரெண்டுமே தோல்வியில்..
நடைபிண வாழ்க்கை...

கீதம்
21-11-2010, 06:38 AM
வாழ்வும் சாவும் நாளெதுவோ?
வெட்கமின்றி, மானமின்றி,
வேண்டியவை பெறவே
வேண்டாதவர் கால் பற்றி வாழும்
வாழ்வும் சாவும் நாளெதுவோ?
அதுவரையிலும்...
நானும் வாழ்வதாய் சொல்லிக்கொள்கிறேன்.

கேசுவர்
23-11-2010, 09:40 AM
நாளெதுவோ? நமது
பிரிவை முறிக்கும் நாளெதுவோ ?
பொழுதெதுவோ? நம்மை
ஒன்று சேர்க்கும் பொழுதெதுவோ?
கருவளையமும் கவலைக்கோடுகளும்
கருகிச்சாகும் நாளெதுவோ?
முத்தங்களும் முனகல்களும்
முறுக்கித்தழுவும் பொழுதெதுவோ?

இராஜிசங்கர்
28-06-2012, 04:54 PM
மன்றத்தில் உள்ள அனைவருக்கும் வணக்கங்கள்
உங்கள் அன்பொடும், மன்றத்தில் உள்ளவர்களின் அனுமதியோடும் ஒரு விளையாட்டு போட இருக்கிறேன்...

ஒரு கவிதை விளையாட்டு..

ஒருவர் ஒரு கவிதை போட்டுவிட்டு...
"அடுத்த தலைப்பு" என்று
ஒரு தலைப்பை விட்டு செல்ல வேண்டும்...

அடுத்து வருபவர்
அந்த தலைப்புக்கு கவிதை போட்டுவிட்டு
அவர் ஒரு "தலைப்பை" விட்டு செல்ல வேண்டும்...

இல்லை எனில்
உங்கள் கவிதையில் வரும் ஒரு சொல்லையோ...
அல்லது வரியையோ தலைப்பாக கொடுக்கலாம்.......
கடைசி வரி தான் போடணும் என்று இல்லை...
கவிதையில் உள்ள எந்த வரியானாலும்..அல்லது வேற சொல்..தரலாம்...

இது தான் விளையாட்டு....

இதோ நான் ஆரம்பித்து வைக்கிறேன்...


நித்தம் உனை நினைத்தேன்..
நெருங்கிவரத் துடித்தேன்...
கைக்கு எட்டாத பொருள்ளாய் நீ...
உன்னை பார்த்து வளர்ந்தவள் நான்
நான் உன்னிடம் வர கூடாதா??
என் கையில்...
நீயாவது வந்து விடு
நிலவே....


அடுத்த தலைப்பு.....

நிலவே.......

அண்ணன்மார்களே அக்காமார்களே,
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். முந்தைய கவிதையில் இருந்து ஒரு சொல்லை எடுத்து அதை அடுத்த கவிதைக்கு தலைப்பாக கொடுக்கணும். அப்படித் தானே? இங்கே ஏன் எல்லாரும் அந்த சொல்லில் இருந்தே ஆரம்பித்திருக்கிறார்கள் கவிச்சமர் மாதிரி. அல்லது நான் தான் தவறாக புரிந்திருக்கிறேனா? விளக்கம் சொன்னால் நலம்.

கீதம்
29-06-2012, 12:21 PM
அண்ணன்மார்களே அக்காமார்களே,
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். முந்தைய கவிதையில் இருந்து ஒரு சொல்லை எடுத்து அதை அடுத்த கவிதைக்கு தலைப்பாக கொடுக்கணும். அப்படித் தானே? இங்கே ஏன் எல்லாரும் அந்த சொல்லில் இருந்தே ஆரம்பித்திருக்கிறார்கள் கவிச்சமர் மாதிரி. அல்லது நான் தான் தவறாக புரிந்திருக்கிறேனா? விளக்கம் சொன்னால் நலம்.

ராஜி, நல்ல அவதானிப்பு உங்களுக்கு. திரியின் திசை மாற்றப்பட்டுதான் இருக்கிறது. இன்பக்கவியும் திரியின் போக்கிலேயே போக முடிவு செய்துவிட்டது போல் இருக்கிறது. எனக்கு அப்படிதான் தோன்றுகிறது.

இன்பக்கவி வரும் நாளில் உங்கள் சந்தேகத்தைப் போக்கக்கூடும்.

இராஜிசங்கர்
29-06-2012, 01:52 PM
ராஜி, நல்ல அவதானிப்பு உங்களுக்கு. திரியின் திசை மாற்றப்பட்டுதான் இருக்கிறது. இன்பக்கவியும் திரியின் போக்கிலேயே போக முடிவு செய்துவிட்டது போல் இருக்கிறது. எனக்கு அப்படிதான் தோன்றுகிறது.

இன்பக்கவி வரும் நாளில் உங்கள் சந்தேகத்தைப் போக்கக்கூடும்.

சரிங்க அக்காவ் :icon_b:

கும்பகோணத்துப்பிள்ளை
15-08-2013, 03:22 AM
சரிங்க அக்கா

அத்தானின் ஆசையையும்
அப்பாவின் பர்சையும் ஒருங்கே
காலிசெய்து சரியாக்கினாள்
ஆடிக்கு வந்த அக்காள்!


அடுத்த தலைப்பு: அத்தான்

அனுராகவன்
05-09-2013, 08:23 PM
மிக்க நன்றி