PDA

View Full Version : ஊழிக் காலம்



M.Rishan Shareef
18-08-2009, 02:13 PM
ஊழிக் காலம் (http://mrishanshareef.blogspot.com/2009/08/blog-post_15.html)

காய்ந்துபோன ஏரிகளில்
காலம் தன் முகம் பார்த்துக் கொண்டது
சுருக்கங்களின்றி
பருவம் பூரித்துச் செழித்த தன்
முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றி
பார்த்திருந்த வானத்திடம்
தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும்
ஒருசேரக் கொடுத்தது

எதையும் கண்டுகொள்ளாச் சூரியன்
வழமைபோலவே
காற்றைச்சுட்டெரித்தது
இருக்கும் விருட்சங்களை வெட்டியபடியும்
பிளாஸ்டிக் குப்பைகளைப் புதைத்தபடியும்
எதுவுமே செய்யாதவன் போல
முகம்துடைத்துப் போகிறேன் நான்
உங்களைப் போலவே வெகு இயல்பாக

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# பூவுலகு - ஜூன்,2009 இதழ்
# உயிர்மை

வெற்றி வாசன்
18-08-2009, 03:08 PM
கவிதை மிக மிக அருமை . உண்மை கவிதை. பகிர்தலுக்கு நன்றி.

அமரன்
18-08-2009, 04:21 PM
வளமான கற்பனையில் வளம் குன்றலைப் பற்றிய கவிதை.

மரங்களை வெட்ட வேண்டிய தேவையும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த வேண்டிய தேவையும் தவிர்க்க முடியாததாகவிடும் காலம் வரத்தான் போகிறது. இதனைத் தவிர்க்க ஒரு தீர்வினை முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது.

எடுத்துக் காட்டாக.. ஜேர்மயினில் தண்ணிப்போத்தல் விற்பனை நிலையங்களிலுள்ள இயந்திரத்தினுள் வெறும் போத்தலைப் போட்டால் தண்ணிப்போத்தலின் கொள்வனவு விலையின் முக்கால் பங்கை மீளப்பெற இயலும்.

மாசு களைய முனையும் கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷான்.

செல்வா
19-08-2009, 08:13 AM
வெட்டப்படும் வனங்கள்
மலடாகும் மேகங்கள்...

வாழ்வின் தேவைக்கு வாழ்வின் இருத்தலுக்கு
இயற்கையைக் கொய்யும் மனிதன்...

துளிர்க்கும் இலைகளைப் பற்றி கவலைப்படவில்லை...

அல்லது துளிர்க்க வைக்கவில்லை...

காலத்தின் தேவையை வலியுறுத்தி வந்த கவிதை
வாழ்த்துக்கள் நண்பரே...

இளசு
24-08-2009, 09:49 PM
சூழல் அழியும் வேகம் கண்டால்
ஊழிக்காலம் உற்று வந்து விரைவில் ஊட்டுமோ
என்ற சஞ்சலம் எனை உறுத்தும்...

அன்பு ரிஷான்
சொற்கள் உங்கள் தொகுப்பில் அடையும் வீரியம் - அழகான ரசவாதம்!
பாராட்டுகள்..

M.Rishan Shareef
05-09-2009, 06:17 PM
அன்பின் வெற்றி வாசன்,

//கவிதை மிக மிக அருமை . உண்மை கவிதை. பகிர்தலுக்கு நன்றி//

தமிழ்மன்றத்துக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
கவிதை குறித்த உங்கள் கருத்து கண்டதில் மகிழ்ச்சி.
நன்றி நண்பரே !

M.Rishan Shareef
05-09-2009, 06:21 PM
அன்பின் அமரன்,

//வளமான கற்பனையில் வளம் குன்றலைப் பற்றிய கவிதை.

மரங்களை வெட்ட வேண்டிய தேவையும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த வேண்டிய தேவையும் தவிர்க்க முடியாததாகவிடும் காலம் வரத்தான் போகிறது. இதனைத் தவிர்க்க ஒரு தீர்வினை முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது.

எடுத்துக் காட்டாக.. ஜேர்மயினில் தண்ணிப்போத்தல் விற்பனை நிலையங்களிலுள்ள இயந்திரத்தினுள் வெறும் போத்தலைப் போட்டால் தண்ணிப்போத்தலின் கொள்வனவு விலையின் முக்கால் பங்கை மீளப்பெற இயலும்.//

அருமையான கருத்து.
மிக நல்ல ஒரு முன்னெடுப்பு. சுழற்சி முறையில் இப்பாவனை நிகழ்வதால், புதிய போத்தல்களின் உற்பத்தி கட்டுப்படுத்தப்படும். எல்லா நாடுகளும் இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டால் ப்ளாஸ்டிக் பாவனையை வெகுவாகக் குறைத்துவிடலாம் அல்லவா நண்பரே?

//மாசு களைய முனையும் கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷான். //

பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef
05-09-2009, 06:24 PM
அன்பின் செல்வா,

//வெட்டப்படும் வனங்கள்
மலடாகும் மேகங்கள்...

வாழ்வின் தேவைக்கு வாழ்வின் இருத்தலுக்கு
இயற்கையைக் கொய்யும் மனிதன்...

துளிர்க்கும் இலைகளைப் பற்றி கவலைப்படவில்லை...

அல்லது துளிர்க்க வைக்கவில்லை... //

மனிதன் சுயநலவாதியாகிவிட்டான். இயற்கையை வஞ்சிக்கிறான்.
அருமையான, அழகான கருத்து.

//காலத்தின் தேவையை வலியுறுத்தி வந்த கவிதை
வாழ்த்துக்கள் நண்பரே... //

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef
05-09-2009, 06:26 PM
அன்பின் இளசு,

//சூழல் அழியும் வேகம் கண்டால்
ஊழிக்காலம் உற்று வந்து விரைவில் ஊட்டுமோ
என்ற சஞ்சலம் எனை உறுத்தும்... //

ஆமாம் நண்பரே..நிச்சயமாக சூழல் அழியும் வேகம் பெரிதும் அச்சுறுத்துகிறது. வருங்கால சந்ததியினருக்கு நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம்? :(

//அன்பு ரிஷான்
சொற்கள் உங்கள் தொகுப்பில் அடையும் வீரியம் - அழகான ரசவாதம்!
பாராட்டுகள்.. //

அழகிய கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !

ஆதவா
06-09-2009, 01:28 AM
அன்பு ரிஷான்...

வழக்கம் போல உங்கள் கவிதை நடை மிகப் பிரமாதம்.. கருவை முன்வைத்து, நீங்கள் எடுத்திருக்கும் சமூகப் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை... ஏன், எனக்கும் கூட...

வாழ்வியல் தடயங்கள் பதிக்க, இயற்கையைக் மொட்டையாக்கி காகிதமாக்குகிறானோ என்று மிகுந்த அச்சம் எழும்... நாளை...

வாழ்த்துகள் ரிஷான்... கவிதைக்கும்.. அது உயிர்மையில் பிரசுரமானமைக்கும்...

M.Rishan Shareef
07-09-2009, 10:48 AM
அன்பின் ஆதவா,

//அன்பு ரிஷான்...

வழக்கம் போல உங்கள் கவிதை நடை மிகப் பிரமாதம்.. கருவை முன்வைத்து, நீங்கள் எடுத்திருக்கும் சமூகப் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை... ஏன், எனக்கும் கூட...

வாழ்வியல் தடயங்கள் பதிக்க, இயற்கையைக் மொட்டையாக்கி காகிதமாக்குகிறானோ என்று மிகுந்த அச்சம் எழும்... நாளை...

வாழ்த்துகள் ரிஷான்... கவிதைக்கும்.. அது உயிர்மையில் பிரசுரமானமைக்கும்... //

உங்கள் கருத்தினைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன்.
நீண்ட நாட்களின் பின்னர் வந்திருக்கிறீர்கள்...நலமா நண்பரே?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !