PDA

View Full Version : வீரகுமாரன்!தாமரை
18-08-2009, 04:56 AM
தை பிறந்திட்டா மக்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம். ஆனா எங்களுகெல்லாம் இரட்டைக் கொண்டாட்டம்.

புரியலைதானே, புரிகிற மாதிரி சொல்றேன்.

எங்க குலதெயவம் சௌடேஸ்வரிக்கு, பொங்கலோட சேர்த்துதான் பண்டிகை,

சுத்துபட்டு கிராமங்களில் அம்மன் கோயில் இருக்கும் ஊர்ல வருஷா வருஷம் பண்டிகை இருக்கும்.

கோயில் இல்லைன்னா நாலு வருஷத்துக்கு ஒரு முறை வெல்லத்தால் சுவரெழுப்பி, கரும்பால் பந்தலிட்டு அம்மனை கொலு வைத்து பண்டிகை நடத்துவாங்க.

http://www.kannadadevangachettiar.com/News_files/image004.jpg

பண்டிகை கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கும். மக்களோட வசதிக்கு தகுந்த மாதிரி ஒரு நாள் பண்டிகை, மூணு நாள் பண்டிகை, அஞ்சு நாள் பண்டிகை அப்படின்னு கொண்டாடுவாங்க.

இதில ஸ்பெஷல் ஐட்டம் என்னான்னா, வீரகுமாரர்கள், அப்புறம் வீரமுட்டி அப்படின்னு அழைக்கப்படற வீரபத்திரர்.

வீரபத்திரர் வேஷம் போடறவர் நல்லா குண்டா உயரமா பெரிய கண்களோட இருப்பார். அவருக்கு தலைப்பாகை கட்டி உடலெல்லாம் ரோஸ் பவுடர் போட்டு பெரிய மீசை, நெத்தியில பட்டை, இடுப்பில ஆஞ்சநேயர் மாதிரி பளபளன்னு மின்னுற கச்சை கட்டி, காலில சலங்கை முதுகுல பெரிசா லிங்க வடிவத்தில ஒரு பாய்மரம் மாதிரி ஒண்ணைக் கட்டி கையில் பெரிய வாளும், வாயில் ஒரு எலுமிச்சம் பழமும் கொடுத்திருப்பாங்க. சிவப்பு லிப்ஸ்டிக் போட்ட வாய் கோரைப்பல். சிவப்பு கருப்பு வெள்ளையில் உடலில் முகத்தில் வண்ண வண்ண அலங்காரம் பண்ணி பார்க்கவே முனியப்பன் மாதிரி ஒரு கம்பீரமா இருப்பார்.

இவர் அம்மனோட தளபதியாம். வீர குமாரர்களுக்கு தலைவராம். அவர் எலுமிச்சம் பழத்தைக் கடிச்சிகிட்டு ஒரு முறை முறைச்சார்னா, குழந்தைகள் எல்லாம் அலறும். பெண்கள் பயந்து ஒளிய ஆரம்பிச்சிருவாங்க.. அவருக்கு ராஜ மரியாதைதான். இவர் கையில் குழந்தையைக் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினா குழந்தை வீரமா வளரும்னு ஒரு நம்பிக்கை.


http://i326.photobucket.com/albums/k413/stselvan/veeramutti.jpg


ஆனால் ஒரு ரகசியம் சொல்றேன் கேட்டுக்கோங்க. இவருடைய முக்கிய வேலைகள் கூட்டத்தை உற்சாகப்ப்டுத்தறது, யாராவது செருப்பு போட்டுகிட்டு இருந்தாலோ, கருப்பு டிரஸ் போட்டிகிட்டு இருந்தாலோ அவரை சாமி வர்ர வழியில இருந்து அப்புறப்படுத்த வைப்பது அப்புறம் முக்கியமா சாமிக் கரகம் எடுத்தவர் வரமாட்டேன் என அடம் பிடிக்கும் போது தண்டகம் சொல்லி வீரகுமாரர்கள் அழைத்தும் சாமி முன்னே வரலைன்னா போய் சாமியை அழைக்க வேண்டியது.

வீரகுமாரர்களும் சரி வீரபத்திரரும் சரி 48 நாட்கள் விரதம் இருந்து கத்தி போட பிராக்டீஸ் செய்வாங்க. கத்தி போடறது - மொக்கையா பேசறது இல்லைங்க. நிஜமாவே இருபக்கம் கூரான கத்தி. மேல செவ்வகமா கைப்பிடி இருக்கும்.(அருங்க்காட்சியகங்களில் திப்ப்பு சுல்தான் காலத்து குத்து வாள் பார்த்திர்ப்பீங்களே)

http://www.tipusultan.org/images/photo/dagger.JPG


அதில சலங்கை எல்லாம் கட்டி இருக்கும். கத்தியின் கூரான பகுதியை நெஞ்சில அடிச்சிக்கிறதுதான் கத்தி போடறது.


வாழக்காயை வயித்து மேல வச்சி சதக்குன்னு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா ஆக்கறது ஒரு பயிற்சி. இதனால வீரகுமாரர்கள் நெஞ்சு வயிறு எல்லாம் வீரத்தழும்புகள் இருக்கும். மஞ்சள் மட்டுமே மருந்து.

http://i326.photobucket.com/albums/k413/stselvan/vazai.jpg

கத்தி போடுவதையே நளினமா டான்ஸ் மாதிரி ஆடுவாங்க இந்த வீரகுமாரர்கள். இதைப் பாக்க கன்னிப் பெண்கள் கூட்டம் அலைமோதும். அதே மாதிரி பெண்கள் கூட்டம் இருக்கும் எடம்னா ஸ்டைலா, ஆவேசமா, ஃபாஸ்ட் பீட்டு அடிக்கச் சொல்லி கத்திப் போடும் பல மன்மதன்கள் இருப்பாங்க.. இடுப்பில் மஞ்சள் துண்டு மட்டும் கட்டி தங்கள் புஜபல பராக்கிரமங்களை ரேம்பில் நடக்கும் மாடல்கள் போல பலர் கண்களுக்கு விருந்தாக்குவாங்க.

http://i326.photobucket.com/albums/k413/stselvan/veerakumar.jpg


நம்ம கதாநாயகன் சரவணனும் இப்படிப் பட்ட ஒரு வீரகுமாரன் தான். நல்ல வாலிப் முறுக்கு.. இருபத்திரெண்டு வயசு.. நண்பர்கூட்டம்.. பண்டிகைக்காக கங்கணம் கட்டியாச்சி, இதைக் கட்டிட்டா ஊர்விட்டுப் போகக்கூடாது, வெளி இடத்தில சாப்பிடக் கூடாது. செருப்பு போடக் கூடாது இப்படிப் பயங்கரக் கட்டுப்பாடுகள் உண்டு.

பண்டிகை ஆரம்பிச்சிருச்சி. முதல் நாள் தை 1. சக்தி அழைப்பு. சரவணனும் தன் கடமையே கண்ணா கத்தி போட்டுகிட்டு இருந்தப்பத்தான் அவளைக் கவனித்தான். கூடவே அவனையும்.

தொடரும்

ஓவியன்
18-08-2009, 05:02 AM
அடடா, வித்தியாசமான கதைக் களத்தில் வித்தியாசமான ஒரு கதையா...???

இப்பவே விறு, விறுப்பாக இருக்குண்ணா, தொடருங்க - ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

தாமரை
18-08-2009, 06:07 AM
படங்களுடன்... :D :D :D

ஓவியன்
18-08-2009, 06:09 AM
படங்களுடன்... :D :D :D

பார்த்தேன்....!!

அப்படியே கதை நாயகனின் படத்தையும் போடுங்கோ..!! :D:D:D

அக்னி
18-08-2009, 06:39 AM
திருவிழா ஒன்றைப்பற்றி விளக்குகின்றார் செல்வர் என்றெண்ணிவிட்டேன்.
வித்தியாசமாக, மிக வித்தியாசமாக ஒரு தொடர்கதை...

வழமையான மர்மங்கள், திருப்பங்கள் இந்தக் கதையிலும் வித்தியாசமான பாணியில் இருக்கும் என நினைக்கின்றேன்...

என்ன அண்ணா நாஞ் சொல்றது சரிதானே...

பரஞ்சோதி
18-08-2009, 08:00 AM
அருமையான துவக்கம்

படங்களும் அசத்தல், இதுவரை அறியாத தகவல்களும் இருக்கின்றன.

தொடருங்கள் நண்பரே!

(பொதுவாக தொடர்க்கதை, கவிதை பக்கம் தலைவச்சி படுக்க மாட்டேன்)

தாமரை
18-08-2009, 08:02 AM
திருவிழா ஒன்றைப்பற்றிய விளக்குறார் செல்வர் என்றெண்ணிவிட்டேன்.
வித்தியாசமாக, மிக வித்தியாசமாக ஒரு தொடர்கதை...

வழமையான மர்மங்கள், திருப்பங்கள் இந்தக் கதையிலும் வித்தியாசமான பாணியில் இருக்கும் என நினைக்கின்றேன்...

என்ன அண்ணா நாஞ் சொல்றது சரிதானே...

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா...

பரஞ்சோதி
18-08-2009, 08:06 AM
ஒரு கூடை மாங்கா கிடைச்சாலும் கொண்டாட்டம் எங்களுக்கு தான்.

நல்லா கல்லு வீசுங்கப்பூ.

- தலை கவசத்துடன்

கா.ரமேஷ்
18-08-2009, 08:30 AM
ஆஹா திருவிழா பாக்க போறோமா....

ம்ம்ம் தொடருங்கள்..

தாமரை
18-08-2009, 08:58 AM
இந்தப் பண்டிகைக்கு பின்னால ஒரு கதை இருக்காம். ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு காலத்தில எங்க குல மக்கள் எல்லாம் சொந்த ஊரை விட்டு வேற ஊருக்கு குடி போனாங்களாம். அப்போ அந்த ஊரில் குடியிருந்த அம்மனை அழைச்சுகிட்டு வரவேண்டிய பொறுப்பை குலகுரு எடுத்துகிட்டு இருந்தாராம்.

அம்மன் குலகுருகிட்ட நீங்க முன்னால நடந்து போங்க.. நான் பின்னாடியே வருவேன். என் மேல் நம்பிக்கை வைத்து போங்க அப்படின்னு சொல்லிட்டாங்களாம். குரு முன்னால் நடக்க அம்மன் பின்னாலேயே வந்தாங்களாம்.

http://3.bp.blogspot.com/_5qrrVukeElY/RmENYWrmbZI/AAAAAAAAAAM/B1rCKOu-i3k/s400/1.jpg

(ஹி ஹி .. மன்னிச்சுக்கோங்க.. சங்கரர் - மூகாம்பிகை கதை படம் போட்டதுக்கு)

அம்மனோட சலங்கை ஒலி குருவின் காதில் விழுவதால் குரு சந்தோஷமா வேகவேகமா எட்டு வச்சு நடந்து போனாராம்.. வழியில ஒரு ஆறு வந்தது.

குரு நதியைக் கடந்தார். அம்மனின் சலங்கை ஒலி நின்னுபோச்சாம். குருவிற்கு சட்டுன்னு சந்தேகம். அம்மன் நின்னிருச்சோ அப்படின்னு, யோசிக்காம சட்டுன்னு திரும்பிப் பார்க்க, அம்மன் அந்த ஆத்தோடு கலந்திட்டாங்களாம்.

குருவுக்கு அப்பதான் தன்னுடைய மடத்தனம் புரிந்தது, என்ன செய்வது என்று புரியாமல் ஊர்மக்களிடம் போய் தலையில அடிச்சிகிட்டு தான் செய்த முட்டாள்தனத்தையும், அதனால் அம்மன் ஆத்தில கலந்துட்டதையும் சொன்னார்..

உடனே ஊர்மக்கள், அவர் மேல வருத்தமிருந்தாலும் அடுத்தது ஆக வேண்டிய காரியம் என்னன்னு யோசிச்ச்டாங்களாம். அம்மன் சரணாகதியைத் தவிர வேற வழியில்லைன்னு முடிவெடுத்து ஊரே திரண்டு ஆத்துக்குப் போய் அம்மனை பல விதங்களிலும் போற்றி துதிச்சாங்களாம்.

அம்மன் மனமிரங்கலை. இதைக் கண்டதும் இளைஞ்சர்களால பொறுக்க முடியலையாம். தங்கள் இடுப்பிலிருந்த ஜந்தாடி கத்தி என்ற ஆயுதத்தை எடுத்து தங்கள் கைகள் கால்கள் நெஞ்சுகளில் வெட்டிக் கொண்டு தாயே நீ வரலைன்னா இங்கேயே உயிரை விடுகிறோம் என்று கதறினாங்களாம். இதனால் மனமிரங்கிய அம்மன் நீர் நிலையில் இருந்து வெளிப்பட்டாங்களாம்.


அன்னையின் கருணைப் பார்வை பட்டதும் அந்த இளைஞர்கள் உடலில் இருந்த காயங்கள் எல்லாம் மறைந்திடுச்சாம். அம்மன் காட்சி கொடுத்ததும் தங்கள் ஊருக்கு வரவேண்டும் என்ற விண்ணப்பத்தோட இளைஞசர்கள் துதி பாட அம்மன் ரொம்பவே பிகு பண்ணிகிட்டு மெது மெதுவா ஒவ்வொரு அடியா எடுத்து வச்சாங்களாம்.

முதல் நாள் முழுக்க அம்மன் கால்வாசி தூரம் கூட வரலை. இருட்டிடுச்சி. மக்களும் அம்மனும் வழியிலே தங்கினாங்க. மறுநாள் வேகமாப் போகணும் அப்படிங்கற ஆசையில் அம்மனை குதிரை மேல ஏற்றி அழைச்சிகிட்டுப் போனாங்களாம். அப்படியும் ஊர் போய்ச் சேர முடியாம, அன்று இரவு பயணத்தை நிறுத்தாம தொடர அம்மன் ஜோதியா அனைவருக்கும் ஒளி கொடுத்து ஊர் வந்து சேர்ந்தாங்களாம்.

இதை நினைவில் வச்சுக்கற மாதிரிதான் முதல் நாள் சக்தி அழைப்பு, இரண்டாம் நாள் சாமுண்டி அழைப்பு (குதிரை மேல்) மூணாம் நாள் ஜோதி அழைப்பு அப்படின்னு நீர்நிலைகள்ல இருந்து அம்மனை அழைச்சிகிட்டு கோவிலுக்கு வர்ரது, இளைஞர்கள் கத்தி போடறது எல்லாமே.

சரவணன் பார்த்தது மல்லிகாவையும் செந்திலையும்தான். இரண்டுபேரும் அத்தைப் பொண்ணு மாமன் பையந்தான். ஒரு காலத்தில மூணு பேரும் ஒண்ணா விளையாடினவங்க. ஆனால் சீர் செனத்தி, மரியாதை கௌரவம் அப்படின்னு பிரச்சனைகள் முளைச்சி ஒருத்தர் இருக்கிற தெரு பக்கமே இன்னொருத்தர் போகாத அளவிற்கு பகை வள்ர்ந்து இருந்தது.

பகையெல்லாம் பெரியவங்களுக்கு மட்டும்தான் போல இருக்கு. சின்னஞ்சிறுசுக, அந்தக்காலத்து கொஞ்சல்கள், சீண்டல்கள் எல்லாம் மனசில உறுத்த பெரியவங்களோட கட்டுப் பாட்டையும் தாண்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்தக் கண்களில் இப்போ எதோ உறுதி தெரியுது,

http://i326.photobucket.com/albums/k413/stselvan/sakthi.jpg

என்னவோ திட்டம் இருக்கு என்று புரிஞ்சது சரவணனுக்கு. அம்மனைப் பார்த்தான், ஆவேசமான ஆட்டம்தான். இந்த வருடம் பண்டிகை குழப்பத்தில் முடியலாம் என்ற பயம் வந்து அடிவயிற்றில் பிசைந்தது.

தொடரும்

தாமரை
18-08-2009, 09:54 AM
இந்த மக்களுக்குத் தான் அம்மன் மேல் எவ்வளவு பக்தி, பாசம். காரணம் இல்லாம இருக்குமா?

ஈசன் விஷ்ணு, பிரம்மன் ஆகியோரை உருவாக்கினாராம். படைக்கிறதுக்கு பிரம்மன், காக்கிறதுக்கு விஷ்ணு. அழிக்கிற வேலையை தன்னிடமே வச்சுகிட்டாராம்.

காரணம் என்னன்னா, தண்டிக்கும் அதிகாரம்தான் காட்டாட்சிக்கு அடிப்படையாம். அதனால அதை மட்டும் யாருக்கும் கொடுக்கலயாம்.

பிரம்மன் படைச்ச அத்தனை படைப்புகளும் சரி, தேவர்கள், விஷ்ணு, பிரம்மா, சிவன் ஆகிய அத்தனை கடவுள்களும் சரி, அப்போ ஆடையில்லாம தான் இருந்தாங்களாம். யாகம், வேதகோஷம் ஒண்ணும் கிடையாதாம். ஏன்னு புரியாத பிரம்மன் சிவன் கிட்ட வந்து குழப்பமா கேட்க, சிவன் சிரிச்சாராம். அவரோட நெற்றிக்கண்ணில இருந்து ஒரு தீப்பொறி கிளம்ப அதில இருந்து ஒரு முனிவர் பிறந்தாராம்.

அவருக்கு தேவலர் அப்படின்னு பேர் வச்ச சிவன் விஷ்ணுகிட்ட போய் நூல் வாங்கி ஆடை நெய்து அத்தனை பேருக்கும் கொடுன்னு சொல்ல, தேவலர் வைகுண்டம் போனாராம்.


http://moralstories.files.wordpress.com/2006/08/bharata-1.jpg


வைகுண்டம் போன தேவர் விஷ்ணுவோட தொப்புளில் இருந்து பிறந்த தாமரைத் தண்டோட நாரை நூலாக வாங்கினாராம். (நம்ம தொப்புளில் கூட பஞ்சு கட்டி இருக்கறதை பாக்கறப்போ இதாங்க ஞாபகம் வருது)

அதை அவர் கொண்டு வரும்போது சண்டன் முண்டன் அப்படிங்கற இரண்டு இராட்சஸர்கள் வழிமறிச்சாங்களாம். தேவலர் என்ன செய்வது எனப் புரியாம அம்மான்னு கத்த, கோடி சூரியப் பிரஹாசத்தோட அவரிடமிருந்து ஒரு அம்மன் வெளிப்பட்டாங்களாம். சிம்ம வாஹனம் எட்டு கை. பாசம், அங்குசம், வில், வாள், கேடயம், சூலம், கதை, சக்கரம் இப்படி பல வித ஆயுதங்களோட வெளிப்பட்ட அந்த அம்மன் அந்த அசுரர்களை தாக்கி அழிச்சு தேவலரைக் காப்பாத்தினாளாம்.

http://2.bp.blogspot.com/_C6oiEs8AQC0/Sh1oea5hvqI/AAAAAAAAANU/h_lAYP0LDME/s400/durga1.jpg

கோடிச் சூர்ய பிரஹாசமா இருந்ததால சூடேஸ்வரி அப்படின்னும், சண்ட முண்டர்களை அழிச்சதால சாமுண்டி அப்படின்னும் பேர் சொல்லி அம்மனை துதிச்சாராம் தேவலர்.

http://sathyasaibaba.files.wordpress.com/2008/10/vishvarupa-devi.jpg


அம்மன் அந்த அசுரர்களோட இரத்ததில் அவரிடம் இருந்த நூலைத் தோய்ச்சி ஐந்து வண்ண நூல்களாக மாத்திக் கொடுத்தாராம். நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், கருப்பு என்ற அந்த ஐந்து வண்ண நூல்களைக் கொண்டு தேவலர் மும்மூர்த்திகள், தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் இப்படி சகலமானவர்களுக்கும் ஆடை கொடுத்தாராம்...

அதில பைரவருக்கு முரட்டுத் தனமான ஆடையைக் கொடுக்க, பைரவன் தனக்கு பட்டாடைகள் தான் வேணும் அப்படின்னு அடம் பிடிச்சு சிவன் கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ண, சிவன் தேவலர் நேர்மையா இருந்ததால பைரவனை, உனக்கு ஆடையே கிடையாதுன்னு சபிச்சுட்டாராம்.

http://www.astroved.com/news/newsletter/images/pappy.gif

ஆடையெல்லாம் நெய்த பின்னாலும் நூல் பாக்கி இருக்க, சிவன் அதைக் கொண்டு தேவலரை சூத்திரங்கள் செய்யச் சொல்ல தேவலர் ஐந்து சூத்திரங்கள் செஞ்சாராம். அதுதான் பூணூல், கங்கணம், அரைஞாண் கயிறு, தாலி, கடிசூத்திரம் அப்படிங்கற கர்ப்பிணிகளுக்கு கட்டுற கயிறு..


அமாவாசை அன்று தோன்றிய அந்த சூடேஸ்வரி தேவியை தேவலர் வழி வந்த மக்கள், தங்கள் வீட்டு மூத்த மகளாகவும், அதே சமயம் தெய்வமாவும் ஏத்துகிட்டாங்களாம்.


மாலை ஆறுமணிக்கு சக்தி கோயில் சேர்ந்ததும் சரவணன் பண்ணிய முதல் காரியம் செந்திலைப் பார்க்க ஓடினதுதான். செந்தில் ரொம்பக் குழப்பமாவும் அதே சமயம் முகத்தில் எதோ உறுதியும் இருந்தது..

சரவணன் செந்திலை தனியா கூப்டுகிட்டு போய் பேச ஆரம்பிச்சான். செந்தில் அழ ஆரம்பிச்சான். தனக்கும் மல்லிகாவுக்கும் இருக்கிற காதல், பெரிசுகளோட கௌரவப் பிரச்சனை.. ஓடிப்போக முடிவு பண்ணி இருப்பது இப்படி சகல விஷயங்களும் சொன்னான்,

சரவணன் ரொம்ப நேரம் செந்திலோட பேசினான். கடைசியா என்னை நம்பு நான் சொன்னதைச் செய்தா அது பல விஷயங்களில் நல்லது. அப்படின்னு சொன்னான்.

செந்தில் குழப்பத்தோட யோசிக்க ஆரம்பிச்சிருந்தான்.

தொடரும்.

த.ஜார்ஜ்
18-08-2009, 03:47 PM
தாமரை ஒரு பதிவை செய்ய எந்த அளவுக்கு மெனக்கெடுகிறார் என்று நினைக்க பிரமிப்பாக இருக்கிறது.
விவரங்கள், விளக்கங்கள்,பொருத்தமாய் [புரிய வைக்கிற] படங்கள்.மர்ம முடிச்சுகளுடன் அற்புதமாகவே நகருகிறது கதை

தாமரை
19-08-2009, 06:04 AM
இரவு சர்வாலங்கார பூஜை. அதுக்கு பின்னாலதான் ஆரம்பிச்சது கச்சேரி. நிஜமாத்தாங்க. சூலமங்கலம் சகோதரிகள் எதிரொலி தங்கம்மாள் - சுபாஷிணி பாட்டுக்கச்சேரிதான், கோயில் பந்தலுக்குக் கீழ பெரியவங்க, இசைஞானம் இருக்கறவங்க, பொடிப்பசங்க இப்படி கூட்டம். வாசல் படிகளில் உட்கார்ந்து பாட்டை ரசிக்கிற குமரிப்பெண்கள் கூட்டம், கட்டிலில் உட்கார்ந்து பாட்டுக்கு காதையும் குமரிகளுக்கு கண்ணையும் கொடுத்திருக்கிற வாலிபர் கூட்டம், கட்டிலைக் கவிழ்த்துப் போட்டு அதில உட்கார்ந்து கதை பேசற வயதான பெண்கள் இப்படி சர்வ ஜனமும் எதாவது ஒண்ணில பிஸியா இருந்துகிட்டு, பாட்டையும் கேட்டுகிட்டு இருந்தாங்க.

சூலமங்கலம் சகோதரிகளோட கந்தர் சஷ்டி கவசம் கேட்டிருக்கீங்களா?


http://i.raaga.com/Catalog/CD/T/TD00931.jpg

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=TD00931

http://ww.smashits.com/music/tamil/songs/3752/bakthi-paadalgal-soolamangalam-sisters.html

http://www.raaga.com/channels/tamil/singers/Soolamangalam+Sisters.html

http://www.savevid.com/video/devi-stotramala-by-soolamangalam-sisters-with-lyrics-in-english.html

http://www.esnips.com/doc/d07b38e6-a990-4628-8d0a-04afc96b21fb/MahishasuraMardhiniSthotram---01-Soolamangalam-Sisters


கேட்டுப்பாருங்க. பாடுவது ஒருத்தரா இரண்டுபேரா, ஸ்டீரியோ டிராக் ரிகார்டிங்கோ அப்படின்னு டௌட்டே வரும். காதி ரீங்காரமிடும் தேனிசை அப்படிம்பாங்காளே அதுதாங்க இது. பக்திப் பாடல்கள், கர்நாடகச் சங்கீத என ஆரம்பிச்சு, கிளாசிக்கலில் கலக்கி இதை அனுபவிக்க கொடுத்து வச்சிருக்கணும்.

ஆனால் இதையெல்லாம் ரசிக்க சரவணனுக்கு பொழுதில்லை, நிறைய ஏற்பாடுகள் செய்யவேண்டி இருந்தது. நிறைய பேரோட பேச வேண்டி இருந்தது. யாரையும் இந்த பண்டிகை நேரத்தில தனியாப் பார்த்து பேசரது என்பது கஷ்டம். ஆனா இந்த விஷயத்தைத் தனியாத்தானே பேசி ஆகணும்.


தொடரும்

பரஞ்சோதி
19-08-2009, 08:16 AM
அருமையான பதிவுகள்.

பக்தியோடு கதையும் பயணிப்பது சிறப்பு.

கடுமையான உழைப்பில் உருவாகும் இத்தலைப்பு சிறப்பான இடத்தை பெற என் வாழ்த்துகள்.

கந்த சஷ்டி கவசம் கேட்டால் கவலைகள் எல்லாம் பறந்தோடும்.

அமரன்
19-08-2009, 08:51 AM
வீரகுமாரர்கள் கவர்கிறார்கள். இதில் கலந்திருக்கும் புராணங்கள், ஊர் வழக்குகள் உண்மையா கற்பனையா அண்ணா. இன்னொரு சந்தேகம். நான் பார்த்தமட்டில் கிராமப் பக்கங்களில்தான் வீரபத்திரர், பைரவர், காளி போன்றோர் அதிகமாக கோயில் கொண்டிருப்பார். ஏன்?

தாமரை
19-08-2009, 09:00 AM
நானே ஒரு வீரகுமாரன் தான்.. அதாவது இந்த தேவாங்கர்கள் என்னும் இனத்தைச் சேர்ந்தவந்தானே அமரா!

ஏறக்குறைய ஒரு இருபது இலட்சம் மக்கள் இருக்கலாம் தமிழ்நாட்டில். இவர்களின் பண்டைய இடம் காசி... காசி யில் இருந்து உஜ்ஜயினிக்கு நகர்ந்த இவர்கள்.. பின்னர் கர்நாடக நாட்டினது ஹம்பி பகுதியில் சேர்ந்தனர். விஜய நகரப் பேரரசு காலத்தில் இவர்கள் மிகவும் மதிக்கப்பட்டனர். விஜய நகரப் பேரரசின் இறுதிக் காலத்தில் கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் ஆகியப் பகுதிகளில் விரவிப் பரவினார்கள்..

கன்னடம் பேசுபவர்கள், தெலுகு பேசுபவர்கள் என இரு வழி இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் உண்டு.


இந்த ஊர் வழக்குகள் இன்னும் உண்டு.. வாய்ப்பு கிடைத்தால் பொங்கல் சமயத்தில் எங்க ஊரு பக்கம் வாங்க. பண்டிகையை முழுசா அனுபவிக்கலாம்,

கிராம தெய்வங்கள் பற்றி தனித் திரி ஆரம்பித்து விளக்கமாச் சொல்றேன்..

நகரங்களில் இந்த தெய்வங்கள் உண்டு,,, ஆனால் நமக்குத் தான் தெரிவதில்லை.. :D :D :D

அமரன்
19-08-2009, 09:02 AM
/நகரங்களில் இந்த தெய்வங்கள் உண்டு,,, ஆனால் நமக்குத் தான் தெரிவதில்லை../

நீங்க ரவுடிகளையும் அரசியல்வாதிகளையும் சொல்லலையே..

பரஞ்சோதி
19-08-2009, 11:15 AM
வீரகுமாரர்களின் வரலாற்றை இப்போ தான் படித்து தெரிந்து கொண்டேன்.

அடுத்த சிறப்பு பண்டிகை எப்போ வரும் என்று சொல்லுங்க வீரகுமாரரே!

நாங்க குடும்பத்தோடு வந்து விடுகிறோம்.

தாமரை
20-08-2009, 12:38 AM
சாமுண்டி அழைப்புக்கு பூவும் எலுமிச்சம் பழமும் ஒரு செண்டாக்கி ஊர்கிணத்தில போட்டிருப்பாங்க. அது முழுகிடும். காலையிலப் பார்த்தீங்கன்னா அந்தச் செண்டு மேல மிதந்துகிட்டு இருக்கும். அதை வாளியில் எடுத்து சிவப்புத் துண்டு போட்ட மூங்கில் புட்டியில் அம்மன் சில, கத்திகள் மஞ்சள் எல்லாம் வச்சு பூவால் அலங்கரிச்சி குதிரை மேல் பூஜை செய்து ஆரோகணம் செஞ்சு அம்மனை அழைக்க தண்டகம் சொல்ல ஆரம்பிச்சாச்சு.

http://i326.photobucket.com/albums/k413/stselvan/Chamundi.jpg

ஆதி சவுடம்ம நீனு
அத்து சாவர குலவனு
ஆதரிசிதவளு நீனு,,

ஆமாங்க இந்த சமூகத்தில பத்தாயிரம் குலமாம். 700 கோத்ரமாம். என்னடா குலக் கணக்கும் கோத்ரக் கணக்கும் ஒத்துவரலியேன்னு ஓவியன் குழம்ப ஆரம்பிச்சாச்சா?

அது வேற ஒண்ணுமில்லை. தேவலருக்கு மொத்தம் ஏழு பிறவிகளாம். அதில ஒரு பிறவியில ஆமோத நாடு என்ற ஆட்சி செய்தாராம். அப்பொ அவருக்கு 3 மனைவிகள். சூரியனின் தங்கை தேவதத்தை. அக்னியின் மகள் அக்னிதத்தை. நாகராசன் ஆதிசேடனின் மகள் நாகதத்தை,

இவங்களுக்கு மொத்தம் 10000 குழந்தைகளாம். அவர்கள் வழியா உண்டானதுதான் 10000 குலங்களாம். இந்த 10000 பேருக்கும் 700 ரிஷிகள் பாடம் சொல்லிக் கொடுத்தார்களாம். இந்த 700 ரிஷிகள் வழியே உண்டானது தான் 700 கோத்ரம்.

இத்தனைப் பிரிவினையா? வீட்ல கத்தி வேற வச்சிருக்காங்க. அப்ப அப்பப்ப இரத்த ஆறு ஓடும்னு குழம்பறது யாரது? அதாம்ப அந்த முன்வரிசையில.. ஆ.. பரஞ்சோதி!

அப்படியில்லை பரஞ்சோதி! என்னதான் இத்தனை பிரிவுன்னாலும் ஏற்றத்தாழ்வு கிடையாது, அதான். வேதம் படிச்சு அதற்குரிய கிரியைகள் செஞ்சா பிராம்மணன். வியாபரம்னா வைசியன். அரசியல்னா ஷத்ரியன் .. இப்படி ரொம்பவே ஃபிளக்சிபிள்.

ஆமாம் குலம் கோத்ரமே தெரியாட்டின்னா என்ன செய்யறதாம்?

அதான் சிவகோத்ரம். இவர்கள் சிவனில் இருந்து வந்தவர்கள் என்பதற்கான அடையாளம்.

பங்காளி, சம்பந்தம் தவிர இந்தக் கோத்ரத்திற்கு என்ன வேலை இருக்குன்னு அமரன் கேக்கிறது புரியுது. அதை இன்னும் வரும் பாகங்களில் பார்க்கலாம்.

இப்படி பழைய சரித்திரத்தை மறக்காம இருக்க இந்தப் பண்டிகை ரொம்பவே உபயோகமா இருக்கு,

சரி சரி பாருங்க சாமுண்டி அழைப்பு ஆரம்பிச்சாச்சு.. வரிசையா படுத்திருக்கிற வீரகுமாரர்களை மிதிக்காம தாண்டித்தாண்டி அம்மன் குதிரை நகர ஆரம்பிச்சாச்சி.. (மிதிக்காதான்னு அக்னி கேட்கறது புரியறது. இதுவரை மிதிச்சதில்லை.. அவ்வளவுதான்,)

அம்மனை அழைப்பது போலத்தான்.. வருந்தி வருந்தி அழைச்சுதான் சில விஷயங்களைச் செய்ய வேண்டியதா இருக்கு, என்ன செய்ய..

கூடவே போலாம் வாங்க,

தொடரும்

தாமரை
20-08-2009, 01:12 AM
ஜந்தாடி கத்தியும், கையில் கட்டிய கங்கணமும் (ஒரு மஞ்சள் கொம்பை கயிற்றில் கட்டி, பூஜித்து கட்டுவது ) எப்படி ஒரு வீரகுமாரனுக்கு அடையாளமோ அப்படித்தான் லிங்க வடிவில் முதுகுக்கு பின்னால் கட்டிய படலைபோன்ற அமைப்பும் அந்தப் படலையில் லிங்கம், சூரியன், சந்திரன் உருவங்களும் அதன் மேல பறக்கிற நந்திக் கொடியும் வீரபத்திரருக்கு அடையாளம்..

http://i326.photobucket.com/albums/k413/stselvan/sow2.jpg

அந்த நந்திக் கொடிக்கும் ஒரு கதை இருக்கு.

சகர நாட்டை ஆண்ட தேவலரோட தலைநகரம் ஆமோத நகரம். அனைத்துலகோர்க்கும் ஆடை கொடுத்த தேவலருக்கு சிவபெருமான் சபாஷ் சொல்லி பரிசா கொடுத்ததுதான் சுசந்திரகம் என்னும் வாளும், நந்திக் கொடியும். எல்லோருக்கும் ஆடை கொடுத்த தேவலர் அரக்கர்களுக்கு ஆடை கொடுக்கல. ஆடை இல்லாத அரக்கர்களை தேவர்கள் கிண்டல் செய்தாங்க. இதனால அரக்கர்கள் அடிக்கடி தேவலோகத்தின் மீது போருக்கு போனாங்க.

அரக்கர்களால் இந்திரனுக்கு தொல்லை வரும் பொழுதெல்லாம் தேவலர் தன்னோட திவ்ய ஆயுதங்களோட உதவியால அரக்கர்களை ஜெயித்து உதவினார். அப்போ அரக்கர் தலைவனான வச்சிரதந்தன், தேவலரோட வெற்றிக்குக் காரணம் நந்திக் கொடிதான் அப்படின்னு தெரிஞ்சுகிட்டு தன்னோட மைத்துனன் மாயாவி வித்யுந்தேசன் கிட்ட ஆலோசனை கேட்க..

மாயாவி ஒரு தேவகுமாரன் வேஷத்தில் போய் தேவலரிடம், அரக்கர்கள் மீண்டும் படையெடுத்து வந்துவிட்டார்கள். உங்களை அடிக்கடி கஷ்டப்படுத்த இந்திரன் நந்திக்கொடியை மட்டும் வாங்கிகிட்டு வரச்சொன்னார்னு சொல்லி அப்பாவி தேவலரை ஏமாற்றி கொடியை வாங்கி வந்துட்டான்..

அதன் பின்னால் தேவலோகத்தின் மேல அரக்கர்கள் மறுபடியும் படையெடுத்தாங்க, தேவர்கள் வெற்றி மப்பில இருந்தாங்க. நந்திக் கொடியை வச்சிரதந்தன் ஏவினதும் ஒன்றும் செய்ய முடியாமல் தேவலருக்கு மீண்டும் தூது பறந்தது.

தேவலர் ஏதோ சூது நடந்ததை புரிஞ்சுகிட்டார். இருந்தாலும் போருக்கு புறப்பட்டார். அனைத்து தேவர்களும் ஓடிப்போயிட தேவலர் மட்டும் வீராவேசமா போரிட.. கடைசியா நந்திக்கொடியின் உதவியால அரக்கர்கள் தேவலரை சிறைபடுத்தினான்.

தோல்வி நிச்சயம் தெரிஞ்சாலும் வீரமா சண்டை போட்ட தேவலரை வச்சிரதந்தனுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.(தேவர்களுக்கும் தேவலருக்கும் இதாங்க மிகப் பெரிய வித்தியாசம்) அவரை தனக்குச் சமமா நடத்தி தன் வளர்ப்பு மகள் அக்னிதத்தையை அவருக்கு திருமணம் செய்து வைத்தான். (அக்னியோட மகளைத்தான் வச்சிரதந்தன் வளர்த்து வந்தான்)

அக்னிதத்தைக்கும் தேவலருக்கும் மூணு குழந்தைகள் பிறந்தன, அவர்களுக்கு ஆடை நெய்யும் வித்தையைக் கற்றுக் கொடுத்து அசுரர்களுக்கும் ஆடை கொடுத்தார் தேவலர்.

தேவலரோட பெருந்தன்மையையும், வீரத்தையும் பார்த்து மகிழ்ந்த வச்சிரதந்தன் சகல மரியாதையோட நந்திக் கொடியை கொடுத்து அவரை சகர நாட்டுக்கு திருப்பி அனுப்பினான்.

ஆக நந்திக் கொடி வீரத்திற்கும் பெருந்தன்மைக்கும் சகலரையும் சமமா கருதுவதற்குமான எங்கள் குல அடையாளம். பல்லவர் கொடி நந்திக் கொடின்னு சொல்லுவாங்க. ஆனால் கிருஷ்ண தேவராயர் காலத்தில நல்ல மதிப்போட நடத்தப்பட்ட இம்மக்க்ள் அவரோட ஆட்சிக்காலத்தில பல் இடங்களுக்கும் பரவி இருக்காங்க.

இவர்களுக்குள்ள மிகச் சிறந்த கட்டுப்பாடு இருக்கு. செட்டிக்காரர், தாய்மனை செட்டிக்காரர், பங்களம், இப்படி கட்டுப்பாடான குலம்.

அந்தக் கட்டுப்பாடு பண்டிகை கொண்டாட்வதிலும் மிக மிக அதிகமா இருக்கும். 700 குலம்னாலும் முஸ்லீம்கள் பிரச்சனைகள் வந்தப்ப நான்கு குலத்தவர்கள் அம்மன் சிலைகளை பத்திரமா பாதுகாத்தனர்..

சதானந்த மஹரிஷி கோத்திரம் - இருமனேரு
கௌசிக மஹரிஷி கோத்திரம் - ஏந்தேலாரு
அகஸ்திய மகரிஷி கோத்திரம் - லத்திகாரரு
வரதந்து மகரிஷி கோத்திரம் - கப்பேலாரு

அதற்குரிய மரியாதையாக நான்கு நாள் திருவிழாவுக்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு குலமக்கள் வீட்டு மரியாதை நடக்கும்.


இன்னிக்கு ஏந்தேலார் வீட்டு அம்மன் அழைப்பு..

இருமனேரு என்பவர்கள்தான் 10000 பேரில் மூத்தவர் என்பதால் அவர்கள்தான் செட்டிக்காரர்கள். எந்த விழாவும் அவர்கள் குலத்தில் ஒரு ஆள் கலந்துக்காமல் நடக்காது.

சக்தி அழைப்பை விட சாமுண்டி அழைப்பு கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.

மனிதருக்கு அருள் வந்து பார்த்திருக்கோம். அறிவியல்காரங்க அது ஒரு ஹிஸ்டீரியா அப்படிம்பாங்க, ஆனா குதிரைக்கும் அப்பப்ப அருள் வந்திடும். அதைச் சமாளிச்சு அழைத்துவருவது அவ்வளவு சுலபமில்லை..

மனிதர்கள் கடவுளைச் சுமக்கும் போது இல்லாத பக்தி, குதிரை சுமக்கும்பொழுது மக்களுக்கு அதிகமாவே வருது. எக்கச்சக்கமான பூஜை.. மனுஷனை மனுஷன் எந்த அளவுக்கு மதிக்கிறான் என்பதற்கு உதாரணம் மாதிரி,,

பானகம் கொடுத்து வீர குமாரர்களை உற்சாகப்படுத்துவது.. மஞ்சள் நீர் ஊத்தி குளிர்விக்கிறது இப்படி மக்களின்ன் வரவேற்பு சாமுண்டி அழைப்புக்கு அதிகம்தான்.

எல்லாத்தையும் விடுங்க..

கடைசியா அம்மன் கோவில் சேரும் போது வரிசையா வீரகுமாரர்கள் படுத்து வாழைக்காய் வெட்டி அனைவரையும் அம்மன் தாண்டிச் சேரும் போது ஏற்படும் ஆவேசம் இருக்கே.. அதற்கு இணையா எதையுமே சொல்ல முடியாது. தேர்தலில் 234 தொகுதியையும் ஜெயிச்சவங்க கூட அவ்வளவு உணர்ச்சிகரமா கொண்டாட மாட்டாங்க..


http://i326.photobucket.com/albums/k413/stselvan/banana.jpgசாமுண்டி அழைப்பு தரும் மிகப் பெரிய களைப்பு. அது முடிஞ்சி இரவு பூஜை முடிஞ்சதும் ஆர்க்கெஸ்ட்ரா..

எல்லா ஏற்பாடும் இன்றைய இரவே நடந்தாகணும். சரவணன் அரக்க பரக்க செயல்பட்டான். நாளை இரவுதான் ஜோதி அழைப்பு.. இரவு உற்சவம்... அதனால இன்னிக்கே எல்லாம் செய்து விடுவது நல்லதில்லையா?

தொடரும்.

தாமரை
20-08-2009, 02:54 AM
வீரகுமாரர்களின் வரலாற்றை இப்போ தான் படித்து தெரிந்து கொண்டேன்.

அடுத்த சிறப்பு பண்டிகை எப்போ வரும் என்று சொல்லுங்க வீரகுமாரரே!

நாங்க குடும்பத்தோடு வந்து விடுகிறோம்.


தை பிறந்திட்டா மக்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம். ஆனா எங்களுகெல்லாம் இரட்டைக் கொண்டாட்டம்.

புரியலைதானே, புரிகிற மாதிரி சொல்றேன்.

எங்க குலதெயவம் சௌடேஸ்வரிக்கு, பொங்கலோட சேர்த்துதான் பண்டிகை,இந்தப் பதிவில் இருந்தே நீங்க எவ்வளவு ஆழமா படிக்கிறீங்கன்னு தெரியுது,..

:sauer028::sauer028::sauer028::sauer028:

:sport-smiley-002::sport-smiley-002::sport-smiley-002:

:violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:

ஓவியா
20-08-2009, 03:05 AM
சரித்திரமும், கதையும் பிணைய என்ன ஒரு அர்ப்புதமான திரி, உங்களால் மட்டுமே இதெல்லாம் முடியுது அண்ணா. பல புதிய விசயங்களை அறிந்துக் கொண்டேன். நன்றி.

முன்பு மலேசியாவில் ஜாதிகளின் அட்டூழியத்தால் பல உயிர்கள் பரிக்கப்பட்டுள்ளன, அதனால் தற்ப்பொழுது வரும் புதிய தலைமுறையினரின் தலையீட்டால் இங்கு இப்பொழுது ஜாதி ஒழிப்பு நடந்துக்கொண்டிருக்கிறது, :redface::redface:ஆனாலும் பல வருடங்களுக்கு முன்பே இந்த குலம், கோத்திரம் என்ற விசயத்தை ஒழித்து கட்டி விட்டார்களாம். இங்கு அனைவரும் சமம் என்ற எண்ணம் வரவே இப்படி மூத்தோர்கள் செய்தார்களாம். பெரியவங்க சொல்லி கேட்டிருக்கிறேன். இங்கு வாழும் பெரும்பாலான மக்களுக்கு குலம்,, கோத்திரம் தெரியாது.


வீரகுமாரன் தாமரை அவர்களுக்கு, என்னிடமிருந்து சில கேள்விகள், கோபம் வேண்டாம்.


1. கடிசூத்திரம் கர்ப்பிணிகளுக்கு எப்போ கட்டுவாங்க?


2. //தேவலர் அப்படின்னு பேர் வச்ச சிவன் விஷ்ணுகிட்ட போய் நூல் வாங்கி ஆடை நெய்து அத்தனை பேருக்கும் கொடுன்னு சொல்ல, தேவலர் வைகுண்டம் போனாராம்.//

மனிதர்களுக்கு ஆடை கொடுத்த தேவலருக்கு அத்தனை பேர் என்றால் அரக்கர்களுக்கும் சேர்த்தே அல்லவா கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் போனதா என்ன? தேவலர், அரக்கர்களுக்கும் சேர்த்தே அல்லவா ஆடை கொடுத்திருக்க வேண்டும்!!! ;)


3.//எல்லோருக்கும் ஆடை கொடுத்த தேவலர் அரக்கர்களுக்கு ஆடை கொடுக்கல//

எல்லோரும் என்றால் அரக்கர்களும் அதில் சேர்ந்த்தே அல்லவா வரவேண்டும்..இது ஒரு தலைபட்சமா இருக்கே!


4.//சிவன் தேவலர் நேர்மையா இருந்ததால பைரவனை, உனக்கு ஆடையே கிடையாதுன்னு சபிச்சுட்டாராம்//

எல்லோருக்கும் ஆடை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை நிரைவேற்றாத தேவலர், அரக்கர்களுக்கு ஆடைக்கொடுக்காமல் விட்டதால் எப்படி நேர்மையாக நடந்தார் என்று சொல்ல முடியும்???


5. //ஆடை இல்லாத அரக்கர்களை தேவர்கள் கிண்டல் செய்தாங்க//

அந்த காலத்திலே ஏற்ற தாழ்வு பார்வை, தேவர்கள் மத்தியிலும் இருந்ததா?

தாமரை
20-08-2009, 04:26 AM
சரித்திரமும், கதையும் பிணைய என்ன ஒரு அர்ப்புதமான திரி, உங்களால் மட்டுமே இதெல்லாம் முடியுது அண்ணா. பல புதிய விசயங்களை அறிந்துக் கொண்டேன். நன்றி.

முன்பு மலேசியாவில் ஜாதிகளின் அட்டூழியத்தால் பல உயிர்கள் பரிக்கப்பட்டுள்ளன, அதனால் தற்ப்பொழுது வரும் புதிய தலைமுறையினரின் தலையீட்டால் இங்கு இப்பொழுது ஜாதி ஒழிப்பு நடந்துக்கொண்டிருக்கிறது, :redface::redface:ஆனாலும் பல வருடங்களுக்கு முன்பே இந்த குலம், கோத்திரம் என்ற விசயத்தை ஒழித்து கட்டி விட்டார்களாம். இங்கு அனைவரும் சமம் என்ற எண்ணம் வரவே இப்படி மூத்தோர்கள் செய்தார்களாம். பெரியவங்க சொல்லி கேட்டிருக்கிறேன். இங்கு வாழும் பெரும்பாலான மக்களுக்கு குலம்,, கோத்திரம் தெரியாது.


வீரகுமாரன் தாமரை அவர்களுக்கு, என்னிடமிருந்து சில கேள்விகள், கோபம் வேண்டாம்.


1. கடிசூத்திரம் கர்ப்பிணிகளுக்கு எப்போ கட்டுவாங்க?


2. //தேவலர் அப்படின்னு பேர் வச்ச சிவன் விஷ்ணுகிட்ட போய் நூல் வாங்கி ஆடை நெய்து அத்தனை பேருக்கும் கொடுன்னு சொல்ல, தேவலர் வைகுண்டம் போனாராம்.//

மனிதர்களுக்கு ஆடை கொடுத்த தேவலருக்கு அத்தனை பேர் என்றால் அரக்கர்களுக்கும் சேர்த்தே அல்லவா கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் போனதா என்ன? தேவலர், அரக்கர்களுக்கும் சேர்த்தே அல்லவா ஆடை கொடுத்திருக்க வேண்டும்!!! ;)


3.//எல்லோருக்கும் ஆடை கொடுத்த தேவலர் அரக்கர்களுக்கு ஆடை கொடுக்கல//

எல்லோரும் என்றால் அரக்கர்களும் அதில் சேர்ந்த்தே அல்லவா வரவேண்டும்..இது ஒரு தலைபட்சமா இருக்கே!


4.//சிவன் தேவலர் நேர்மையா இருந்ததால பைரவனை, உனக்கு ஆடையே கிடையாதுன்னு சபிச்சுட்டாராம்//

எல்லோருக்கும் ஆடை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை நிரைவேற்றாத தேவலர், அரக்கர்களுக்கு ஆடைக்கொடுக்காமல் விட்டதால் எப்படி நேர்மையாக நடந்தார் என்று சொல்ல முடியும்???


5. //ஆடை இல்லாத அரக்கர்களை தேவர்கள் கிண்டல் செய்தாங்க//

அந்த காலத்திலே ஏற்ற தாழ்வு பார்வை, தேவர்கள் மத்தியிலும் இருந்ததா?

குலம் கோத்ரம் போன்றவை தலைமுறைகளை அடையாளம் காட்ட உதவுபவை. அவற்றிற்கும் சாதிக்கும் சம்பந்தம் கிடையாது... அண்ணன் யாரு மாமன் யாருன்னு தெரிஞ்சுக்க இவை உதவுகின்றன.. அப்படிப் பாக்கப் போனா மதம், மொழி, பண்பாடு எல்லாத்தையும் ஒழிக்கணும்..

தேவலர் ஆடை கொடுத்த முறை எப்படின்னு பார்க்கணும். அவர் பாட்டுக்கு ஒரு கடை ஓபன் பண்ணி விக்கலை.. அவரவர் இருப்பிடத்திற்குச் சென்று தேவைக்கேற்ப ஆடைகளை வழங்கினார்..

ஆடைகள் பூணூலின் தேவை, வேதம் ஓதல், யாகம் இத்யாதி போன்ற வைதீக கருமங்களுக்கு என்பதால் அவற்றை விரும்பிச் செய்வோருக்கு ஆடைகள் கிடைத்தன. ஆனால் அவற்றை விரும்பாத அசுரர்களுக்கு ஆடை கிடைக்கவில்லை. ஆக தகுதி, தேவை இவற்றின் மீதான வரையறைக்குட்பட்டே தேவலர் ஆடை வழங்கினார் என்பதை உணர்ந்தால் இந்தக் கேள்விகள் எழாது.

ஏற்றதாழ்வுகளும் கிண்டல் கேலிகளும் வன்மங்களும் படைப்புகள் தொடங்கிய உடனே தொடங்கி விட்டன.. இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

கடி சூத்திரம் பற்றி இரவு எழுதுகிறேன்.

கீதம்
20-08-2009, 08:04 AM
தொடரின் ஆரம்பம் முதலே மாறாத பிரமிப்புடன் படித்து வருகிறேன். எல்லா செய்திகளும் எனக்குப் புதியவையே. ஒரு முறைக்கு இருமுறை படித்தால்தான் புரிந்துகொள்ள முடிகிறது. சுவை குன்றாமல் அரிய படங்களுடன் கதையை நகர்த்திச் செல்லும் விதம் அருமை. பாராட்டுகள்.

தாமரை
20-08-2009, 02:18 PM
பல பேருக்கு இவை தெரியாதுதான். அதனாலதான் எழுத நினைத்தேன் கீதம்..

ஒரு சமூகத்தின் அறிமுகம்.. அதன் பண்பாடுகள்.. வரலாறு... பழக்க வழக்கங்கள் என சொல்ல ஆசை...

அதுக்குத்தான் இது...

பரஞ்சோதி
20-08-2009, 02:23 PM
இந்தப் பதிவில் இருந்தே நீங்க எவ்வளவு ஆழமா படிக்கிறீங்கன்னு தெரியுது,..

:sauer028::sauer028::sauer028::sauer028:

:sport-smiley-002::sport-smiley-002::sport-smiley-002:

:violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:

அது எப்போவுமே என்னை ஒரு சந்தேக கண்ணோடு பார்க்கிறீங்கப்பூ. :lachen001:

நாலு வருடத்திற்கு ஒருமுறை சிறப்பு பொங்கல் வருமுன்னு சொன்னீங்க தானே, அந்த வருடத்தை தான் கேட்டேன். :smilie_abcfra:

தாமரை
20-08-2009, 02:28 PM
அது எப்போவுமே என்னை ஒரு சந்தேக கண்ணோடு பார்க்கிறீங்கப்பூ. :lachen001:

நாலு வருடத்திற்கு ஒருமுறை சிறப்பு பொங்கல் வருமுன்னு சொன்னீங்க தானே, அந்த வருடத்தை தான் கேட்டேன். :smilie_abcfra:

கோயில் இல்லைன்னா நாலு வருஷத்துக்கு ஒரு முறை வெல்லத்தால் சுவரெழுப்பி, கரும்பால் பந்தலிட்டு அம்மனை கொலு வைத்து பண்டிகை நடத்துவாங்க.

இப்ப எல்லா ஏரியாவிலும் கோவில் வந்தாச்சு பரம்ஸ்... :sauer028::sauer028::sauer028:

ஓவியா
21-08-2009, 12:03 AM
குலம் கோத்ரம் போன்றவை தலைமுறைகளை அடையாளம் காட்ட உதவுபவை. அவற்றிற்கும் சாதிக்கும் சம்பந்தம் கிடையாது... அண்ணன் யாரு மாமன் யாருன்னு தெரிஞ்சுக்க இவை உதவுகின்றன.. அப்படிப் பாக்கப் போனா மதம், மொழி, பண்பாடு எல்லாத்தையும் ஒழிக்கணும்..

தேவலர் ஆடை கொடுத்த முறை எப்படின்னு பார்க்கணும். அவர் பாட்டுக்கு ஒரு கடை ஓபன் பண்ணி விக்கலை.. அவரவர் இருப்பிடத்திற்குச் சென்று தேவைக்கேற்ப ஆடைகளை வழங்கினார்..

ஆடைகள் பூணூலின் தேவை, வேதம் ஓதல், யாகம் இத்யாதி போன்ற வைதீக கருமங்களுக்கு என்பதால் அவற்றை விரும்பிச் செய்வோருக்கு ஆடைகள் கிடைத்தன. ஆனால் அவற்றை விரும்பாத அசுரர்களுக்கு ஆடை கிடைக்கவில்லை. ஆக தகுதி, தேவை இவற்றின் மீதான வரையறைக்குட்பட்டே தேவலர் ஆடை வழங்கினார் என்பதை உணர்ந்தால் இந்தக் கேள்விகள் எழாது.

ஏற்றதாழ்வுகளும் கிண்டல் கேலிகளும் வன்மங்களும் படைப்புகள் தொடங்கிய உடனே தொடங்கி விட்டன.. இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

கடி சூத்திரம் பற்றி இரவு எழுதுகிறேன்.

சரி, ஏதோ சொல்லறீங்கனு கேட்டுக்கொள்கிறேன், ஆனாலும் சிவன் அனைவருக்கும் உடை வழங்கச்சொன்னார் என்றுதான் நீங்க எழுதியிருக்கீங்க ;).... அதன் அடிப்படையில்தான் கேட்டேன்.

ஆனாலும் வைதீக கருமங்கள் செய்பவர்களுக்கு மட்டுமே ஆடை என்பது, கொஞ்சம் வியக்கத்தான் வைக்கின்றது. .... ஆக, அப்பவே XYZDCV இவங்களோட போலிடீக்ஸ் ஆரம்பிச்சாச்சு :D

சரியா புரியலையே! சோ, சாமி கும்பிடலனா உடையில்லை அப்படியா!! இல்ல வைதீக தகுதி உள்ளவங்களுக்கு மட்டும்தான் உடையா!! சரி, நல்ல திரிய கேள்விக்கேட்டு குழப்ப வேண்டாம். நீங்க எழுதிகிட்டே போங்க, நாங்க படிச்சுகிட்டே பின் தொடர்ந்து வாரோம். :)
கேள்விக்கு பதிலளித்தமைக்கு நன்றி.

தாமரை
21-08-2009, 01:21 AM
சரி, ஏதோ சொல்லறீங்கனு கேட்டுக்கொள்கிறேன், ஆனாலும் சிவன் அனைவருக்கும் உடை வழங்கச்சொன்னார் என்றுதான் நீங்க எழுதியிருக்கீங்க ;).... அதன் அடிப்படையில்தான் கேட்டேன்.

ஆனாலும் வைதீக கருமங்கள் செய்பவர்களுக்கு மட்டுமே ஆடை என்பது, கொஞ்சம் வியக்கத்தான் வைக்கின்றது. .... ஆக, அப்பவே XYZDCV இவங்களோட போலிடீக்ஸ் ஆரம்பிச்சாச்சு :D

சரியா புரியலையே! சோ, சாமி கும்பிடலனா உடையில்லை அப்படியா!! இல்ல வைதீக தகுதி உள்ளவங்களுக்கு மட்டும்தான் உடையா!! சரி, நல்ல திரிய கேள்விக்கேட்டு குழப்ப வேண்டாம். நீங்க எழுதிகிட்டே போங்க, நாங்க படிச்சுகிட்டே பின் தொடர்ந்து வாரோம். :)
கேள்விக்கு பதிலளித்தமைக்கு நன்றி.


எதையும் பின்னால இருந்து பார்த்தா இப்படித்தான் குழப்பிக்கத் தோணும்.. முன்னால இருந்து பாருங்க...

பிரம்மா ஏன் சிவனிடம் வந்தார் என்ற காரணம்!!!

வேதம் ஓத முடியவில்லை என்றுதானே? அதற்குத்தானே ஆடையும் பூணூலும் வேண்டுமெனத்தானே தேவலரே படைக்கப்பட்டார்?

ஆகவே காரணங்களைப் பொறுத்து எல்லோர் என்ற சொல்லிற்கு வரையறை மாறிவிடுகிறது..

வேதங்களை ஓதப் போகின்ற எல்லோர்... என்பதே சிவனின் குறிப்பாகும்.

ஒவ்வொரு உயிரினத்துக்கும் கொடு என்றுச் சொன்னதாகச் சொன்னால்தான் நீங்கள் நினைக்கின்ற பொருள்..

பல சமயம் வாழ்க்கையில் நீங்களே எல்லோர் என்பதை இப்படி வரையறைக்குள் உபயோகிப்பீர்கள்...

தமிழர்கள் எல்லோரும், மனிதர்கள் எல்லோரும், இந்தியர் எல்லோரும், நம் குடும்பத்தவர் எல்லோரும் என எல்லோரும் என்பதற்கு முன்னால் ஒரு வரையறை என்றுமே இருக்கும். எல்லோரும் என்பதை என்றுமே தனிமையாக உரைத்தல் போலித்தனமானதாகும். அதே போல் எல்லோரும் என்ற வார்த்தையை கேட்கும் பொழுது அதற்கு முன்னரான வரையறை அறியப்பட்டால்தான் ஏமாற்றங்கள் வராது..

இவர்களுக்கு மட்டும் கொடு என்பதற்கும் எல்லோருக்கும் கொடு என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதே.. இவர்களுக்கு மட்டும் கொடு என்று ஏன் சொல்லவில்லை என்று கேட்கிறீர்களா?

இறைவன் அப்படிச் சொல்லி இருந்தால் வேதம் பாடாத எவருக்கும் கொடுக்கவே கூடாது என்று ஆகி இருக்கும், அப்படியானால் உற்பத்தி பெருகியவுடன் மற்றவர்களுக்கு கிடைத்திருக்காது..

சட்டத்திற்கும் வழிமுறைகளுக்கும் வித்தியாசம் இருக்கும், இறைவன் தேவலருக்கு கட்டளை இடவில்லை. வழிமுறையைச் சொன்னார். தேவைக்கு மிஞ்சி இருப்பதை தேவலர் யாருக்கு கொடுக்கிறார் என்பதை கட்டுப்பாடு செய்ய இறைவன் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. தேவலர் அந்தப் பாகுபாட்டைக் காட்டவில்லை என்பதையே நீங்க போத்தீஸில் வாங்கும் அத்தனை பட்டுப் புடவைகளும் நிரூபிக்கின்றன.
:eek::eek::eek:

அசுரர்கள் ஏன் தேவலர் கிட்டச் சண்டைக்குப் போகாம ஏன் தேவர்கள் மேல் சண்டைக்குப் போனாங்க? தேவலரின் நியாயங்களை அவர்கள் ஒப்புக் கொண்டதையே அது காட்டுது...


உற்பத்தி குறைவாய் இருக்கும் பொழுது வழிமுறைகளின்படியும், உற்பத்தி அதிகரித்தவுடன் விதிமுறைகளைத் தளர்த்தி அனைவருக்கும் தரவும் வேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்துவதே இறைவனின் "எல்லோருக்கும்" என்ற சொல்லின் பொருள்...

எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் வேலை என எந்த எல்லோருக்கும் திட்டத்தை எடுத்தாலும் இப்படி முதலில் அத்தியாவசியத் தேவை உள்ளவர்கள்..என ஆரம்பித்து எல்லைகளை விரிப்பதே முறை..

ஒரு முறை ஒரு ஆடை ஒருவருக்கு கொடுத்தால் போதும் என்பது இல்லையே ஓவியா.. தேவலருக்கு ஆயிரக்கணக்கான சந்ததிகள் ஏற்பட்டது உற்பத்தி பெருக்கத்திற்காகவே..


குடும்பத்தில் எல்லோரும் சாப்பிடணும். ஆனால் முதலில் குழந்தைகள். அடுத்து முதியவர்கள், மூணாவதா இளைஞர்கள் நாலாவதா நடுத்தர வயதினர் என ஒரு வரிசை இருக்கு,, இருக்கும் உணவின் அளவைப்பொறுத்து நடுத்தர வயதினர்கள் பட்டினியாவோ அல்லது குறைவாகவோ சாப்பிடுவாங்க... இவை எல்லாம் சாத்திரத்தின் அடிப்படைகள்...

ஆகவே சுருக்கத்திற்காக உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகளின் ஆழத்தை மூழ்கிப் பார்த்தா அதை அங்க உள்ளயே வச்சிருக்கேன் என்பது தெரியும்.

தேவலர் தன்சந்ததிகளைப் பெருக்கி, பலருக்கும் நெசவையும் தறிகளின் நுட்பங்கள், இழைகளைத் தயாரித்தல் எல்லாம் சொல்லித்தந்து ஏழு அவதாரங்கள் எடுத்து தன் பணியை நிறைவேற்றினார் என்று சொல்ல் ஆரம்பிச்சா அது சின்னச் சின்னக் கதையா இல்லாம ஒரு பெரிய நெடுந்தொடரா மாறிடும்.. அதான் பிரச்சனை.. எல்லாக்கதையையும் சொல்ல நேரமில்லையே...

ஒவ்வொரு பதிவிலும் ஒரு சின்னக் கதையா கொடுப்பதால் அதை எல்லாம் கோர்த்தா இப்படித்தான் பிரச்சனை வரும்..

சரி உங்களுக்கு ஒரு கேள்வி...

முருகன் அண்ணனா? இல்லை பிள்ளையார் அண்ணனா?

முருகன் பிறப்பையும், விநாயகர் பிறப்பையும்

நல்லா படிச்சிட்டு வந்து பதில் சொல்லுங்க.. :D:icon_b::icon_b::icon_b:

அக்னி
21-08-2009, 06:30 AM
(மிதிக்காதான்னு அக்னி கேட்கறது புரியறது. இதுவரை மிதிச்சதில்லை.. அவ்வளவுதான்,)
:eek: :sprachlos020: :frown: :sauer028:

ஏன்... ஏன்... ஏன்...

மிதிக்கலையா என்று கேட்டிருக்கணுமோ... :confused: :rolleyes:

கலைவேந்தன்
22-08-2009, 09:18 PM
அழகான பாரம்பரியக் கதையை இங்கே வழங்கி வருவது பெருமையாக இருக்கிறது தாமரை.

பழனியிலும் இன்னும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் சாலியர் இனத்தினர் கூட இவ்வாறாக வழிபாடு நடத்தி வருகின்றனர்.

சாலியர் அதாவது தெலுங்கு சாலியரைக்கேட்டால் அவர்கள் ஒரு கதை சொல்வர்கள்.

எப்படி தேவாங்க கன்னடியருக்கு ஒரு தேவலர் குருவாகி ஆடை நெய்யப் பணிக்கப்பட்டாரோ அவ்வாறே தெலுங்கு சாலியரும் ( பத்ம சாலியர் பட்டு சாலியர் என்று அதிலும் குட்டிப்பிரிவுகள்) தமக்கு குருவாக மார்க்கண்டேய மகரிஷி என்ற குருவை ஏற்று அவர் முதன்முதலாக துணிநெய்யும் தொழிலைத் தொடங்கியதாக அவர்கள் கூறுகின்றனர். எதை நம்புவது எதை விடுவது என்பது ஒருபுறமிருக்கட்டும்.

வேதிய வைதிகருக்கு முதன்மை தந்து ஆடைகள் தந்ததாக தேவலர் செய்த இந்த ’நடு நிலையான’ பாகுபாடு அப்போதே நால்வகை வருணத்தையும் அதில் முதன்மையான வேதியரையும் அடிபிடிக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக அமைகிறதே.

என்னதான் வேதியருக்கும் வேத விற்பன்னர்களுக்கும் பதாகை தாங்கி இடையிலிருக்கும் இந்த திரிசங்கு இனத்தினர் குற்றேவல் புரிந்து வந்தாலும் அந்த மேற்படி வேத விற்பன்னர்கள் அன்று தொட்டு இன்றுவரை இந்த இடைப்பிரிவினரையும் சரி கடைப்பிறவியினரையும் சரி ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை என்பது கசப்பான உண்மை.

எது எப்படி எனிலும் சொல்ல நினைக்கும் கருத்துக்களை அழகுபட விவரிக்கும் உங்கள் கதைத்திறமையை மெச்சுகிறேன்.

எனது கருத்துக்கள் புண்பட வைப்பதற்காக வைக்கப்படவில்லை. பண்படுமென்றால் மகிழ்வேன். கண்படுமென்றால் கவலையுமில்லை.

பாராட்டுக்கள் நண்பரே...!

- துரதிருஷ்டசாலியன்

இளசு
23-08-2009, 03:35 PM
தாமரை

சிரத்தை, நேர்த்தியான தொகுப்பு... தொன்மப் பதிவு..

அந்த வகையில் - கவர்கிறது.

உழைப்பும் திறனும் பளிச்சிடுகிறது. பாராட்டுகள்.

ஆனாலும் சரவணன் பாடு பாவம்...
விழாச் சத்தத்தில் அவன் முனகல் அவ்வப்போது மட்டுமே லேசாய்...


( குலம், கோத்திரம், அம்மனே தோன்றுவது, அக்னியின் மகளை மணப்பது,
தொப்புள் தாமரைத் தண்டு, ஒருவர் மட்டும் நெய்வது, 10000 பிள்ளைகள் --

இவை அறிவு கொண்டு அணுக வேண்டியவை அல்ல என்பது என் கருத்து..

இவை அன்றைய காலத்தில் மக்களை அவர்கள் மனதை நிலைப்படுத்த
அன்றைய அறிவார்ந்தோர் அளித்த விளக்கக்கதைகள்.. அவ்வளவே..


இன அடையாளம் என மனதில் ஆரமாய் இன்றைக்கு இருத்தலாம்.
கால் சங்கிலியாய் இந்த மரபுச்சங்கிலி முன்னோக்கிய மனிதப் பயணத்தை
பின்னோக்கி இழுக்காது என நம்புவோம்..)

தாமரை
24-08-2009, 02:45 AM
இவங்களுக்கு மொத்தம் 10000 குழந்தைகளாம். அவர்கள் வழியா உண்டானதுதான் 10000 குலங்களாம். இந்த 10000 பேருக்கும் 700 ரிஷிகள் பாடம் சொல்லிக் கொடுத்தார்களாம். இந்த 700 ரிஷிகள் வழியே உண்டானது தான் 700 கோத்ரம்.

இத்தனைப் பிரிவினையா? வீட்ல கத்தி வேற வச்சிருக்காங்க. அப்ப அப்பப்ப இரத்த ஆறு ஓடும்னு குழம்பறது யாரது? அதாம்ப அந்த முன்வரிசையில.. ஆ.. பரஞ்சோதி!

அப்படியில்லை பரஞ்சோதி! என்னதான் இத்தனை பிரிவுன்னாலும் ஏற்றத்தாழ்வு கிடையாது, அதான். வேதம் படிச்சு அதற்குரிய கிரியைகள் செஞ்சா பிராம்மணன். வியாபரம்னா வைசியன். அரசியல்னா ஷத்ரியன் .. இப்படி ரொம்பவே ஃபிளக்சிபிள்.ஆமாம் குலம் கோத்ரமே தெரியாட்டின்னா என்ன செய்யறதாம்?

அதான் சிவகோத்ரம். இவர்கள் சிவனில் இருந்து வந்தவர்கள் என்பதற்கான அடையாளம்.

பங்காளி, சம்பந்தம் தவிர இந்தக் கோத்ரத்திற்கு என்ன வேலை இருக்குன்னு அமரன் கேக்கிறது புரியுது. அதை இன்னும் வரும் பாகங்களில் பார்க்கலாம்.

இப்படி பழைய சரித்திரத்தை மறக்காம இருக்க இந்தப் பண்டிகை ரொம்பவே உபயோகமா இருக்கு,
[/COLOR][/B]


கலை இதைப் படித்தீர்கள் அல்லவா? நீங்கள் சொல்லும் அந்த ஆதிக்கத்திற்கு உட்படாத ஒரு சமூகத்தை அடையாளம் காட்டும் பொழுது ஏன் தவறான கருத்து எழுகிறது என்றுதான் புரியவில்லை. யாரும் வேதம் ஓதலாம், யாரும் எந்த கோத்திரத்திலும் மணம் செய்யலாம் என்பதும் எந்த ஆதிக்கம் கலை? நல்லதா? கெட்டதா?

வேதம் என்றால் உடனே வர்ணாஸ்ரம தர்மம் என்பதை மனதிற்குள் எழுப்பாதீர்கள். அப்படி இல்லாதவர்களும் வாழ்கிறார்கள் என்பதைக் காட்டத்தான் இந்தக் கதையே!..


வேதம் எல்லோருக்கும் பொது எல்லோரும் வேதம் ஓதுதல் வேண்டும்.. இதையே இறைவனின் விருப்பம்.. என்பதைக் காட்டினேன்..

வேதம் ஓத பூணுலும் உடையும் தேவைப்பட்டது. அதை உற்பத்தி செய்ய தேவலரை உண்டாக்கினார் சிவன். வேதம் ஓதுவதில் விருப்பம் செலுத்தியவர்களுக்கு முதலில் ஆடைகள் வழங்கத் தொடங்கிய அவர்.. ஏழு அவதாரங்கள் எடுத்து அனைவருக்கும் ஆடை வழங்கினார் என்பதையும் விளக்கினேன்..

பசியோடு இருப்பவர்க்கு முதலில் உணவு என்பது எவ்வளவு சரியோ அதேபோல் அவவளவு சரி தேவலர் எடுத்த முடிவும் என நான் கருதுவதால்தான் எழுதினேனே தவிர பிராமணன் தான் வேதம் ஓத வேண்டும் என ஒரு இடத்தில் கூட எழுதவில்லை என்பதைக் கவனிக்கவும்.

கண்களில் வண்ணக் கண்ணாடிகள் அணிந்தால் கண்டிப்பாய் தவறாய்த்தான் தோன்றும்..

குலம் கோத்ரத்தின் பயனை ஏற்கனவே சொன்னேன். இரத்த சம்பந்தம் அறிய..

இப்படி நெசவுத் தொழில் செய்யும் அனைவருக்கும் ஒரு புராணம் கண்டிப்பாக இருக்கும். ஏறத்தாழ ஒரே மாதிரியான கதைகள்தான்.
பட்டு நூல்காரகள் எனப்படும் சௌராஷ்டிராப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இதே போல் கதைகள் உண்டு,,, தெலுங்கு பேசுபவர்களும் உண்டு என்பதையும் அவர்களுக்கும் இவர்களுக்கும் மண உறவு கூட உண்டு என்பதையும் நான் சொல்லியே இருக்கிறேன்.

நல்ல கருத்துகள் என்று தோன்றுவதை மட்டுமே என்றுமே நான் இங்கே கொடுக்கிறேன்.. ஆகவே வண்ணக் கண்ணாடிகளை கழற்றி விடலாம்...

கட்டுக் கோப்பான சமூக அமைப்பினால் எப்படி ஒரு நல்வாழ்க்கை அமைகிறது என்பதைச் சொல்வதே இக்கதையின் கரு..

வேதிய வைதிகருக்கு முதன்மை தந்து ஆடைகள் தந்ததாக தேவலர் செய்த இந்த ’நடு நிலையான’ பாகுபாடு அப்போதே நால்வகை வருணத்தையும் அதில் முதன்மையான வேதியரையும் அடிபிடிக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக அமைகிறதே.

இதில் நீங்கள் புரிந்து கொண்டது தவறு... வேதம் ஓத ஆசைப்பட்டவர்கள்.. என்பதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். யார் வேண்டுமானாலும் ஓத ஆசைப்படலாம். அப்படி ஓத ஆசைப்படுபவர்களுக்கு ஆடை தருவதில் ஆரம்ப காலத்தில் முன்னுரிமை என்பது தவறில்லை. இதை ஓவியாவுக்கு அளித்த பதிலில் விளக்கி இருக்கிறேன்.

என்னதான் வேதியருக்கும் வேத விற்பன்னர்களுக்கும் பதாகை தாங்கி இடையிலிருக்கும் இந்த திரிசங்கு இனத்தினர் குற்றேவல் புரிந்து வந்தாலும் அந்த மேற்படி வேத விற்பன்னர்கள் அன்று தொட்டு இன்றுவரை இந்த இடைப்பிரிவினரையும் சரி கடைப்பிறவியினரையும் சரி ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை என்பது கசப்பான உண்மை.

இந்த அவலம் இல்லாத சமூகத்தைக் கூட பார்க்க விடாமல் வேதம் என்ற ஒரு வார்த்தை உங்கள் கண்களை மறைக்கிறதே என வருந்துகிறேன்...

தயவு செய்து கவனியுங்கள்..

இன்னார் மட்டுமே வேதம் ஓத வேண்டும் என்ற பாகுபாடு இந்த சமுதாயத்தில் இல்லவே இல்லை.. இன்றும்..

இந்த கோத்ரத்தவர் உயர்ந்தவர்.. இந்த கோத்ரத்தவர் தாழ்குலம் என்ற பாகுபாடு இல்லை.. இன்றும்..

ஒருவர் சமூகத்திற்கு ஆற்றிய பங்கினைக் கொண்டு மரியாதை அளிக்கப் படுகிறது..

இவையெல்லாம் ஒரு சமூகத்தின் நல்ல பண்புகள் என்றுதான் இதுவரை நான் கருதி வந்திருக்கிறேன்..

ஆனால் வேதம் ஓதல் என்ற வார்த்தை வந்தவுடன் பிராமணன், தாழ்த்தப்பட்டவன் என்ற அச்சம் வந்து விடுகிறதே! ஏன்?

ஓவியாவிடம் நான் வித்தியாசமாக உணரவில்லை. ஏனென்றால் அவர் சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்..

கலை சொல்லும் பொழுது யோசிக்க வேண்டியதானது...

இளசு சொல்லும் பொழுது....

கண்டிப்பாக நான் வெட்கப்படத்தான் வேண்டும்..

ரொம்ப நாட்களுக்கு முன்னால் தேடிக்கொண்டிருக்காதே திரியில் சொன்னதை இளசுவிற்கு நினைவூட்ட விழைகிறேன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7248

மேலும்

700 பிரிவினர் கொண்ட ஒரு சமூகம் சம அந்தஸ்துடன் உயர்வு தாழ்வு பாராட்டாமல் வாழ்வதை எடுத்துச் சொல்லவே இதை எழுத ஆரம்பித்தேன்..

கலை சொன்ன

வேத விற்பன்னர்கள் அன்று தொட்டு இன்றுவரை இந்த இடைப்பிரிவினரையும் சரி கடைப்பிறவியினரையும் சரி ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை என்பது கசப்பான உண்மை

என்பதை நான் வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பவன் என்பது பலருக்கும் தெரியும்...

அது நம் கையில்தான் இருக்கு கலை... நமக்கு கீழ இருக்கறவங்க நமக்கு கொடுக்கிற மரியாதையை விட நமக்கு மேல் இருக்கறவங்க நமக்கு கொடுக்கிற மரியாதை நமக்கு கர்வம் தருது..

அந்த மனப்பான்மைய என்னளவில் நான் ஒழித்துக் கொண்டு விட்டேன் என்றே சொல்லலாம். என்னை மதிப்பவனை நான் மதிக்கிறேன் கவனிக்கிறேன்.. நம்மை மதிக்காதவரை நாம் மதிக்கவேண்டிய அவசியம் இல்லை..

அங்கீகாரத் தாகம் இருக்கே அது நமக்கு மட்டும் இல்லை. அவர்களுக்கும் உண்டு... பரஸ்பர மரியாதை என்பது கொள்கையானால் தனிப்பட்டு செல்பவர் யார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

அதனால் இன்னார் நம்மை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒழித்துவிட்டு... தற்பொழுது நம்மை மதிக்கிறார்களே அவர்களை மதித்து சமமாக நடத்தி வாழ்ந்தாலே போதும்..

புராணத்தில் கூட இதை மறைமுகமாகச் சொல்லி இருக்காங்க..

அதாவது பூமியின் நடக்கும் பூஜைகள் மற்றும் யாகங்கள் மூலம்தான் தேவர்களுக்கு பலமாம். அதாவது மற்றவர்கள் கண்டு கொண்டால்தான்.. பலம்..

பூமியில் அவர்களுக்கான மரியாதை குறையும் போது.. அதாங்க பூஜைகள் குறையும் பொழுது அவர்கள் பலவீனமாகி விடுவார்கள்.

அதேதான்..

நான் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்பவனை கண்டுக்காதீங்க. தானே சரியாகி விடுவான்...

முதலில் நம் மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை நீக்கினால் பாதி வெற்றி.. அதாவது நம்மை நாம் மதிப்பது.

அப்புறம் நம்மை மதிப்பவர்கள மதிச்சா முக்கால் வெற்றி.

அப்புறம் ஆதிக்க மனப்பான்மை நம்மை அசைக்காத மனசை வளத்துகிட்டா முழு வெற்றி...

ஐரேனிபுரம் பால்ராசய்யா
24-08-2009, 12:12 PM
தாமரையின் மெனக்கெடல்கள் தரமானதாகவும் ஒரு கிராமத்தின் திருவிழாக்களை நேரில் பார்ப்பதுபோல் பிரமிப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

பரஞ்சோதி
24-08-2009, 12:32 PM
சரி உங்களுக்கு ஒரு கேள்வி...

முருகன் அண்ணனா? இல்லை பிள்ளையார் அண்ணனா?

முருகன் பிறப்பையும், விநாயகர் பிறப்பையும்

நல்லா படிச்சிட்டு வந்து பதில் சொல்லுங்க.. :D:icon_b::icon_b::icon_b:

வயதால் முருகன் மூத்தவர், பார்வதியால் உருவாக்கப்பட்ட சிறுவன் விநாயகர் சிவனிடம் சண்டையிட்ட போது, முருகனும் மயில் மீதேறி வந்து சண்டை போடுவதாக சின்ன வயசில் சிறுவர் மலர் படக்கதையில் படிச்சிட்டு மண்டை குழம்பி போனேன்.

கலைவேந்தன்
28-08-2009, 06:32 PM
உங்கள் சிறந்த சிந்தனையைக் குறைத்து மதிப்பிடவில்லை தாமரை.

என் மனதுக்குப்பட்ட இந்த விஷயங்களை இனி இங்கே விவாதிக்க விரும்பவில்லை நண்பரே..

இந்த இனிய தொடர் தடையின்றி தொடரட்டும்...!

பிறிதொரு சமயம் வேறொரு களத்தில் இது குறித்து நான் கருத்து சொல்வேன்.

தொடருங்கள் நண்பரே...!

மஞ்சுபாஷிணி
29-08-2009, 11:22 AM
அருமையான கதை.. நிறைய விஷயங்கள் அறிய முடிந்தது. தொடருங்கள் தாமரை.. நன்றி...

மதுரை மைந்தன்
29-08-2009, 07:42 PM
பல புது விஷயங்களை படங்களுடன் கொடுத்து அத்துடன் கதையையும் இணைத்திருக்கிறீரகள். மிகவும் சுவாரஸ்யமாக கதை செல்கிறது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.