PDA

View Full Version : சத்தமில்லாமல் ஒரு சாதனை..!!



ஓவியன்
17-08-2009, 01:06 PM
ஷிம்பாவே கிரிக்கட் வீரரான சார்ளஸ் கவென்றி (Charles Coventry) நேற்றைய தினம் வரை, கிரிக்கட் போட்டிகளை தவறாது பார்பவர்களுக்கு கூட அதிகமாக பரிச்சயமில்லாத நபராகவே இருந்துள்ளார். ஆனால் நேற்று ஷிம்பாபே அணியினருக்கும் பங்களாதேஷ் அணியினருக்குமிடையே நடந்த நான்காவது ஒரு நாள் கிரிக்கட் போட்டியின் போது தன் பெயரை சத்தமே போடாமல் துடுப்பாட்ட ஜாம்பவான்களில் ஒருவரான சயிட் அன்வரின் பெயர் மட்டுமே இதுவரை இருந்த இடத்தில் தன் பெயரையும் பொறித்துள்ளார்.

ஆம் நேற்றைய தினம் கிரிக்கட் உலகையையே வியப்பிலாழ்த்தி இந்த இருபத்தாறே வயதான வலது கை துடுப்பாட்ட வீரர் தனது முதலாவது சதத்தினை சயிட் அன்வரின் சாதனையைச் சமப்படுத்திக் கொண்டு 194 எனும் சாதனை ஓட்டங்களாகக் குவித்திருந்தார்.

இதுவரை ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளில் தனி நபராக 200 ஓட்டங்களைக் குவிக்கும் வாய்பினைப் பல துடுப்பாட்ட வீரர்கள் பெற்றிருந்தனர், இதில் சென்னையில் வைத்து இந்திய அணியினருடன் 2007 ஆம் ஆண்டளவில் நடந்த போட்டியில் 194 ஓட்டங்களைக் குவித்த சயிட் அன்வர், சார்ஜாவில் இந்திய அணியினருடான போட்டியில் தன் அணியின் மொத்த ஓட்டங்களை 300 ஓட்டங்களாக உயர்த்த வேண்டி சில தேவையற்ற பந்துகளையும் அடித்தாடி 189 ஓட்டங்களுடன் சவுரவ் கங்குலியின் பந்து வீச்சில் ஸ்டம் செய்யப்பட்டு ஆட்டமிழந்த சனத், உலகப் புகழ் பெற்ற, 434 ஓட்டங்களைக் குவித்த அவுஸ்திரேலிய அணியினரை துரத்திச் சென்று தென்னாபிரிக்கா வெற்றியீட்டிய போட்டியில், 32வது ஓவரில் 175 ஓட்டங்களுடன் சைமண்ட்ஸ் பந்து வீச்சில் பிரட் லீயிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்த ஹிப்ஸ், என பலரும் 200ம் ஓட்டங்களை நெருங்கியும் 200வது ஓட்டத்தினை பெற முடியாமலேயே இருந்திருக்கின்றனர், இருக்கின்றனர்.

200 ஓட்டங்கள் குவிப்பது இருக்கட்டும், ஏறத்தாழ 12 வருடங்களாக சயிட் அன்வர் குவித்திருந்த 194 ஓட்டங்களை துடுப்பாட்ட வீரர்கள் ஒருவருமே நெருங்கவேயில்லையென்பதிலிருந்து இந்த மைற்கல்லினை நெருங்குவது எத்தகைய சிரமென்பது தெளிவாக புலனாகும். 146 பந்துகளை சந்தித்து 22 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கலாக சயிட் அன்வர் குவித்த இந்த ஓட்ட எண்ணிக்கையை கவென்றி 156 பந்துகளைச் சந்தித்து 16 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடங்கலாக ஆட்டமிழக்காது நெருங்கியுள்ளார்.

நேற்றைய போட்டியில் இறுதி பந்து பரிமாற்றத்தின் போது 191 ஓட்டங்களுடனிருந்த கவென்றி இறுதி பந்து பரிமாற்றத்தில் இரு பந்து வீச்சுக்களைச் சந்திக்கும் வாய்ப்பினை மாத்திரம் பெற்று மேலதிகமாக மூன்று ஓட்டங்களைப் பெற்றதுடன் சயிட் அன்வரின் சாதனையை சமப்படுத்தினார், இந்த சாதனை இன்னிக்ஸின் கடைசிப் பந்தில் நிறைவேறியுள்ளது.

தம் கிரிக்கட் அணியில் இடம்பெற்ற சர்ச்சைகளுடன் பல புகழ் பெற்ற வீரர்கள் அணியையும் நாட்டையும் விட்டு இடம் பெயந்து விட, மிகப் பலவீனமான அணிகளிலொன்றாக கருதப்பட்டு வந்த ஷிம்பாவே அணியினருக்கு கவென்றி நிச்சயமாக ஒரு ஊக்க மருந்துதான், இந்த மருந்து இனி வரும் காலங்களில் கிரிக்கட் உலகில் தொடர்ந்தும் சாதனைகளைப் படைக்குமா, இன்னுமொரு அண்டிபிளவராகி ஒட்டு மொத்த அணியின் சுமையையும் தன் தோளில் சுமக்குமா என்பதையெல்லாம் காலம்தான் தீர்மானிக்கும், அதுவரை இந்த சாதனையாளனை நாமும் வாழ்த்தி பாராட்டுவோம்.



கொசுறு நியூஸ்- சார்ளஸ் கவென்றி ஒரு விக்கெட் காப்பாளர்...!! :)

ஆதி
17-08-2009, 01:26 PM
ஓவியரே - கங்குலிதான் 183 ஓட்டங்கள் இலங்கைக்கு எதிராக உலக கோப்பையில் குவித்தார்.. சனத் 189 ஓட்டங்கள் குவித்தார் இந்தியாவுக்கு எதிராக..

டெண்டூல்கர் 186 ஆட்டமிலக்கவில்லை

-------------------------------

சார்லஸ் கொவென்றிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

ஓவியன்
17-08-2009, 01:31 PM
உண்மைதான் ஆதி, 189, 183 என வந்திருந்தது, இப்போது திருத்தி விட்டேன்..

மதி
17-08-2009, 02:26 PM
வாழ்த்துகள் ஜிம்பாப்வே வீரருக்கு...!

அமரன்
17-08-2009, 04:06 PM
வாழ்த்துகள் இளஞ்சிங்கத்துக்கு.

அறிஞர்
17-08-2009, 07:08 PM
இளம் வீரருக்கு வாழ்த்துக்கள்.. நல்ல எதிர்காலம் அமையட்டும்.

பரஞ்சோதி
17-08-2009, 07:29 PM
சாதனை வீரர் கவென்றி என் வாழ்த்துகள்.

mmuthuraja
17-08-2009, 07:33 PM
ஜிம்பாப்வே வீரருக்கு வாழ்த்துக்கள்....சாதனைகள் தொடரட்டும்...

சூரியன்
17-08-2009, 07:44 PM
நல்ல தொடக்கம் தான்.
எப்படியோ அந்த சாதனையை சமன் செய்துவிட்டார்.

ஓவியன்
18-08-2009, 08:49 AM
ஜிம்பாப்வே வீரருக்கு வாழ்த்துக்கள்....சாதனைகள் தொடரட்டும்...

வாங்க முத்துராஜா, உங்களைப் பற்றி மன்றத்தில் புதியவர்கள் தங்களை அறிமுகப்படுத்தும் பகுதியில் ஒரு அறிமுகத் திரியாகத் தரலாமே...

செல்வா
18-08-2009, 03:08 PM
வாழ்த்துக்கள்... இளம் வீரர் சார்லஸிர்க்கு...
இன்னும் பல வெற்றிகள் குவிக்க....

நேசம்
19-08-2009, 04:23 AM
நிச்சயமாக இந்த சாதனை அவருக்கு மட்டுமில்லமால் அந்த அணிக்கும் உற்காசத்தை கொடுத்து இருக்கும்.

ஓவியன்
19-08-2009, 05:00 AM
உண்மைதான் நேசம், ஆனால் நேற்றைய ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் பூச்சிய ஓட்ட எண்ணிக்கையுடன் ஆட்டமிழந்து விட்டாரே கவென்றி...!!

நேசம்
19-08-2009, 06:36 AM
உண்மைதான் நேசம், ஆனால் நேற்றைய ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் பூச்சிய ஓட்ட எண்ணிக்கையுடன் ஆட்டமிழந்து விட்டாரே கவென்றி...!!
ஒருவேலை இந்த ஆட்டத்துக்கு சேர்ந்து தான் முதலில் ஆடி இருப்பார் போலிருக்கு ஒவியன்

ஓவியன்
19-08-2009, 06:43 AM
ஒருவேலை இந்த ஆட்டத்துக்கு சேர்ந்து தான் முதலில் ஆடி இருப்பார் போலிருக்கு ஒவியன்

:lachen001::lachen001:

இன்னும் எத்தனை ஆட்டத்துக்கும் சேர்த்து ஆடினாரோ தெரியலையே.......!! :D:D:D

___________________________________________________________________________________________

சரி, சரி..

பாவம், சின்ன புள்ள தானே, இனி நன்றாக ஆடட்டும்..!! :)

நேசம்
19-08-2009, 07:31 AM
:lachen001::lachen001:

இன்னும் எத்தனை ஆட்டத்துக்கும் சேர்த்து ஆடினாரோ தெரியலையே.......!! :D:D:D
_________________________________________________________________________________________
..!! :)
சத்தமில்லமால் இப்படி ஒரு திரி ஆரம்பிசுட்டு இப்படி சத்தமா கிண்டல் செய்தால் எப்படி ஒவியன்

ஓவியன்
19-08-2009, 07:44 AM
சத்தமில்லமால் இப்படி ஒரு திரி ஆரம்பிசுட்டு இப்படி சத்தமா கிண்டல் செய்தால் எப்படி ஒவியன்

அதுதான் பாவம் சின்ன புள்ளனு :icon_rollout: சொல்லிட்டம்ல... !! :icon_b:

பரஞ்சோதி
19-08-2009, 09:56 AM
உண்மைதான் நேசம், ஆனால் நேற்றைய ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் பூச்சிய ஓட்ட எண்ணிக்கையுடன் ஆட்டமிழந்து விட்டாரே கவென்றி...!!

கிரிக்கெட்டில் கிடைக்கும் நல்ல வாழ்க்கைப் பாடம்.

மன்மதன்
20-08-2009, 01:44 PM
நிஜமாகவே சத்தமில்லாமல்தான் சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.. !!

பாரதி
22-08-2009, 04:03 PM
செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி ஓவியன்.
நானும் அந்த செய்தியைப்படித்தேன். சார்லஸ் காவெண்ட்ரியின் துடுப்பாட்டம் சிறப்பானதாக இருந்தது. சில ஆட்டங்களிலேயே அவர் இதை சாதித்தது அவர் திறமையைக் காட்டுகிறது. ஆனால் அந்த சாதனையை கொண்டாட இயலாத வகையில் ஜிம்பாப்வே அணி தோற்றது சற்று வருத்தத்திற்குரியதே.

arun
05-09-2009, 08:34 AM
இளம் வீரருக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல சாதனைகளை அவர் படைக்கட்டும்

rajarajacholan
25-02-2010, 06:08 AM
நன்றி ஓவியன் சார்.

மதுரகன்
25-02-2010, 06:25 AM
வேட்டையாடு விளையாடு படத்தில் ஒரு பாடல் வரும் "கற்க கற்க" என்று அதிலே ஒரு வரி "கண் ஆயிரம் கை ஆயிரம் என தேகம் கொள்ள இப்பூமியில் நடமாடிடும் இவன் தெய்வம் அல்ல" என்பது அதுதான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகின்றது. அதாவது மனித இயலுமை எல்லையின் விளிம்பில் நின்று சாதனை படைக்கின்ற ஆற்றல் ஒரு சிலருக்கதான் வாய்க்கும். அவர்களில் ஒருவர்தான் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சகாப்தம் சச்சின் சச்சின் சச்சின் ....

36 வயதிலும் களைப்பே இன்றி சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர் அனைத்திற்கும் மகுடம் வைத்தது போல இன்று 200 ஓட்டங்களை ஒருநாள் போட்டியொன்றில் பெற்றுக்கொண்டுள்ளார். தென்னாபிரிக்க அணியுடனான இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் குவாலியரில் வைத்து அனைத்து பந்து வீச்சாளர்களையும் துவைத்து எடுத்ததன் மூலம் 147பந்துகளில் 200ஓட்டங்களை (25நான்குகள்,3ஆறுகள் அடங்கலாக)ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டுள்ளார்.

இதன் மூலம் "இவர் ஓய்வு பெறும்போது துடுப்பாட்ட சாதனைகளில் பெரும் பங்கு இவர் பக்கம் இருக்குமென்று இருபது வருடங்களுக்கு முன்னரே கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிய கருத்து மேலும் வலுப்பெற்றுள்ளது. அதை விட மறுபுறமாக இன்று தன்னுடைய 93ஆவது சர்வதேச சதத்தினை(ஒருநாள்-46, டெஸ்ட்-47 ) பூர்த்தி செய்துள்ள அவர் 100ஆவது சதத்தினை நோக்கி அடுத்த அடியையும் எடுத்து வைத்துள்ளார்.
எவராலும் நினைத்துப் பார்க்கவே கடினமான அல்லது கடந்த தசாப்தத்தினுள் ஒருசிலரால் மட்டுமே நெருங்க முடிந்த விடயமொன்றை சச்சின் இன்று சாதித்துள்ளார். கிரிக்கெட் உள்ளவரைக்கும் சச்சினின் புகழ் என்றும் நிலைத்திருப்பதை யாராலும் தடுக்க முடியாது. இந்த சாதனையை நான் பல்கலைக்கழக உணவுக்கூடத்தில் அமர்ந்து இருந்தது பார்த்துக்கொண்டிருந்த போது சூழ இருந்தவர்கள் அனைவரும் பெரும்பான்மை இனத்தவர்கள் மற்றும் இலங்கை அணி ரசிகர்கள் அவர்கள் அனைவரும் கை தட்டி மற்றும் மேசையில் தட்டி வாழ்த்தியபோது அது எனக்கு புரிந்தது விட்டது.

சச்சினுக்கு நன்றிகள் இதுபோன்ற ஒரு அடியை பார்க்கிற சந்தர்ப்பம் தந்ததுக்கு!!
மதுரகன்

பகிர்வு - http://saaralhal.blogspot.com

aren
25-02-2010, 06:26 AM
இதே விஷயத்துக்காக இன்னொரு திரி ஏற்கெனவே ஓவியன் துவக்கியுள்ளார். உங்களது பதிவையும் அதனுடனேயே சேர்ந்துவிடுங்கள்.