PDA

View Full Version : (ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?அறிஞர்
14-08-2009, 03:55 PM
மின்னஞ்சலில் வந்தது
நன்றி மன்மதன்...

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code)
திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள்.
பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக்
கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா
காட்டவும்.

3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை
உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே
நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட்
நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள்
எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை
எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.

7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான
விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள்.
அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

9.. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்
பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும்,
நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்.
நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச்
செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.

11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு
பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று
சொல்லிக்கொள்ளலாம்.

12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச
நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங்
போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து
வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது,
மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது
போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும்
நெடுக்கும் நடங்கள்.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக
இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள்.
போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.

16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.
மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி
குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி
கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால
நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை
மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால்
நமக்காக யார் பேசுவார்கள்?

கலைவேந்தன்
14-08-2009, 04:21 PM
ஹா ஹா...

எல்லாம் சர்தான்...

என்னைப்போல ஆசிரியர்கள் எப்படி பிசியாக காட்டிக்கொள்வதாம்...?

-யோசனையுடன்

அறிஞர்
14-08-2009, 06:55 PM
ஆசிரிய பணி தான்... அதிக விடுமுறை நாட்கள் கிடைக்கும் பணி.

பையன்களை ஏதாவது படிக்க சொல்லிவிட்டு தூங்கலாமே.
P.Ed வகுப்பாக மாற்றிவிட்டு அவர்களை விளையாட சொல்லலாம்.
Moral Instruction எனச் சொல்லிவிட்டு மாணவர்களை ஒரு தலைப்பின் கீழ் பேசச்சொல்லி... நீங்க ஓய்வு எடுக்கலாம்.

இளசு
14-08-2009, 07:40 PM
ஹ்ஹ்ஹ்ஹா!

மணிமணியான யோசனைகள்...

நீங்கள் எப்படி அறிஞரே?

அன்புரசிகன்
15-08-2009, 03:38 AM
அறிஞர் இவ்வாறு செய்ய இயலாது...
அவர் செய்யக்கூடியது...

செத்தபாம்பு தவளை ஓணான் போன்றவற்றை ஒரு பெரிய பொல்லாங்கட்டையால் அடித்துக்கொண்டே இருக்கலாம். :D

ஓவியன்
15-08-2009, 05:11 AM
ஹா, ஹா..!!

எப்படி இப்படி க்ரீட்டாக எல்லா டெக்னிக்ஸையும் பிடிச்சாங்களோ...??:eek:

ஓவியன்
15-08-2009, 05:52 AM
ஹா ஹா...

எல்லாம் சர்தான்...

என்னைப்போல ஆசிரியர்கள் எப்படி பிசியாக காட்டிக்கொள்வதாம்...?

-யோசனையுடன்

ஆசிரியர்களுக்கு இது ரொம்ப சுலபமாச்சே கலை, உதாரணத்துக்கு;


நான் பிசியாக இருக்கேன், மாணவர்களெல்லாம் சமர்த்தா உங்களுக்கு பிடிச்ச எதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படிங்கனு சொல்லிட்டு, நீங்க மேசை, நாற்காலியில் அமர்ந்து பாவ்லா காட்டலாம் (பிசியாக இருப்பது போலத்தான் :D)

அடிக்கடி மாணவர்களிடம் ஹெட் மாஸ்டர் ஆபிஸுக்கு போய் வரேன், சமர்தா இருங்கனு சொல்லிட்டு பள்ளி வளாகத்தை வேகமாக ரவுண்ட் அடிக்கலாம்:rolleyes:

பாடம் நடாத்திக் கொண்டிருந்து விட்டு, இடையில் மன்னியுங்க பிள்ளைகளா எக்சாமுக்கு கேள்விகள் தயாரிக்கணும் இன்னிக்கு படிச்சது போதும்னு சொல்லிட்டு நீங்க ஒரு புத்தகத்தைத் தூக்கிட்டு ஓய்வறைக்குப் போயிடலாம்.:icon_ush:

பாடம் நடாத்திக் கொண்டிருக்கையில் இடையே எதோ யோசனையுடன் எங்காவது போய் வருவது போல கேண்டீனுக்குப் போய் வரலாம். (வழியில் யாரும் பார்த்தால் அதிகாலையில் ஸ்பெசல் கிளாஸ் வைச்சதனால் ஒழுங்காக டிபன் சாப்பிடலைனு கவலைப்பட்டுக் கொள்ளலாம்.:lachen001:

வார விடுமுறை நாட்களில் ஸ்பெசல் கிளாஸ் வைக்கப் போறேனு ஹெட் மாஸ்டர் கிட்டே அனுமதி எடுத்திட்டு, வார விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து பசங்களோடு ஒரு அரைமணி நேரம் ஜாலியாகப் பேசிட்டு, அவங்களோடயே இன்னும் ஒரு அரைமணிநேரம் ஜாலியாக விளையாடிட்டு எல்லாரும் ஒண்ணாகவே வீடு திரும்பலாம்.:icon_rollout:

பாலகன்
15-08-2009, 08:46 AM
கலை அண்ணன் தயவில் நமக்கு நல்ல டிப்ஸ் எல்லாம் கிடைக்குதே... நன்றி கலை அண்ணா :D (ஆனா என்னோட மானவிகளை ஏமாற்றுவது ரொம்ப சிரமமாச்சே)

மஞ்சுபாஷிணி
15-08-2009, 08:55 AM
கலை உனக்காக ஓவியன் கொடுத்திருக்கும் யோசனைகள் பார்த்தியா?? :)

திங்கட் கிழமையில் இருந்து இதை செயல்படுத்துப்பா...

ஓவியன் உங்களுக்கு ரொம்ப நன்றிப்பா..

மஞ்சுபாஷிணி
15-08-2009, 08:56 AM
கலை அண்ணன் தயவில் நமக்கு நல்ல டிப்ஸ் எல்லாம் கிடைக்குதே... நன்றி கலை அண்ணா :D (ஆனா என்னோட மானவிகளை ஏமாற்றுவது ரொம்ப சிரமமாச்சே)
கவலை வேண்டாம் மகாபிரபு.. உங்களுக்கு யோசனைகளை கலை தருவார் :)

நேசம்
15-08-2009, 10:44 AM
தொழில் ரகசியமெல்லாம் வெளி வந்து விட்டதா.... இங்கே பகிர்ந்து கொண்டது முலம் பல டிப்ஸ் உறவுகள் முலம் வர வைத்த அறிஞருக்கு நன்றி

மயூ
15-08-2009, 03:53 PM
ஆஹா.. இதில அரைவாசிய நாங்க இப்ப செய்துகொண்டுதான் இருக்கமாக்கும் :D

தமிழ் மகன்
15-08-2009, 10:32 PM
ஆஹா.. இதில அரைவாசிய நாங்க இப்ப செய்துகொண்டுதான் இருக்கமாக்கும் :D

அதே அதே ஆபீசில் பெரிய ஆள் லேட்டாக போனால், நானும் கொஞ்ச நேரம் நெட்டை திறந்து வைத்து கொண்டு, இன்னொரு விண்டோவில் ஆபிஸ் பைலையும் திறந்து வைத்து கொண்டு பிசியாக இருப்பது போல காட்டி கொள்ளவேன். ஆனால் உண்மையிலே வேலையிருந்தாலும் ஆபிசில் இருந்து முடித்து விட்டும் செல்வேன்.

நெட்டை பார்த்து கொண்டு இருக்கும் போது மேலதிகாரி கிட்டே வந்து விட்டால் சமாளிக்க கீபோர்டில் உள்ள alt + tab ஐ அழுத்தி ஆபீஸ் பைலுக்கு மாறிடனும்.

ஏதாவது ஒரு பேப்பரை கயில் வைத்து கொண்டு மேலதிகாரி இருக்கும் அறைக்கு குறுக்கும் நெடுக்கும் போக வேண்டும்.அப்ப தானே பிசியா இருக்காருன்னு நினப்பாங்க.

இதெல்லாம் தற்காலிகம் தான் , கொடுத்த வேலையை முடிக்க வில்லை என்றால் எந்த பந்தா காட்டினாலும் பாச்சா பலிக்காது.

கீதம்
16-08-2009, 12:14 AM
இப்படியெல்லம் கஷ்டப்பட்டு பாவ்லா காட்டுறதுக்குப் பதில் ஒழுங்கா வேலையை செய்து நல்ல பிள்ளைன்னு பேர் எடுக்கலாம் இல்லையா?

ஓவியன்
16-08-2009, 06:28 AM
இப்படியெல்லம் கஷ்டப்பட்டு பாவ்லா காட்டுறதுக்குப் பதில் ஒழுங்கா வேலையை செய்து நல்ல பிள்ளைன்னு பேர் எடுக்கலாம் இல்லையா?

ஹா, ஹா..!!

அது முடியாமத்தானே இப்படியெல்லாம் யோசிக்கிறோமாக்கும்... :)

arun
05-09-2009, 10:01 AM
பலவற்றை ஏற்கனவே செய்து கொண்டிருப்பதால் சின்ன புன்னகை :D :D சூப்பர்

arun
05-09-2009, 10:02 AM
இப்படியெல்லம் கஷ்டப்பட்டு பாவ்லா காட்டுறதுக்குப் பதில் ஒழுங்கா வேலையை செய்து நல்ல பிள்ளைன்னு பேர் எடுக்கலாம் இல்லையா?

வேலை இருந்தா செய்ய மாட்டோம்னு சொன்னோமா ? :lachen001: :lachen001: