PDA

View Full Version : தோழியே...



இன்பக்கவி
14-08-2009, 02:30 PM
தோழியே...
உன்னை முழுமையாக இழந்தேன் இன்று
உன்னை நிறைய நினைக்கிறேன்..
உனக்காக அழுகிறேன்
உன்னை ஏனோ வருத்திவிட்டேன்..
உன்னை நினைத்து அழுவதும் சுகம் தான்..
உன் மீது நான் கொண்ட பாசம்
உணார்ந்தேன் இன்று...
உணரதானோ இந்த இடைவெளி..
உள்ளுக்குள் மறைத்த வைத்த பாசம் இன்று
உள்ளத்தை விட்டு வெளி வந்த சந்தோசம் எனக்கு
உன்னோடு இருந்த நாட்களில் அறிய வில்லை
உன் பாசத்தை..
உன் மீது நான் வைத்து இருக்கும் பாசத்தை
உன்னாலும், என்னாலும் வரையறுக்க முடியாது.
உன் பாசம் என் மீது நிஜமானது
உண்மையானது..
உன்னைப் போல பாசம் வைக்க யார் இனி எனக்கு..
உயிர் பிரியும் வரை
உன் மீது உண்டான என் பாசம்
உள்ளத்தை விட்டு போகாது..

செல்வா
14-08-2009, 03:10 PM
பிரிந்து விட்ட நட்பை விட
துயரம் தருவது ஏதுமில்லை...

துயரத்தைக் கவியாக்கும்... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

இன்னும் நிறைய வாசியுங்கள்
நிறைய எழுதுங்கள்..

வாழ்த்துக்கள்.

இன்பக்கவி
20-08-2009, 07:29 AM
நன்றிகள் செல்வா...:)