PDA

View Full Version : தீவிரவாதம் தொலைப்போம்...!கலைவேந்தன்
14-08-2009, 08:30 AM
http://1.bp.blogspot.com/_dKWP-csrG_0/STlQeWzw3ZI/AAAAAAAAAH0/WGqZesdEULw/s400/3.jpg

தீவிரவாதம் தொலைப்போம்....!

தாயவள் உதிரத்தில் உதித்திடுவார் - மனம்
தீயென மாறியே உலகழிப்பார்...!
செந்தழல் கொண்டிங்கு சுட்டெரிப்பார் - தினம்
சந்தன விருட்சங்கள் பொசுக்கிடுவார்...!

சொந்தங்கள் அழுதிட பணிபுரிவார் - இவர்
பந்தங்கள் ஏதுமே விலக்கிடுவார்...!
கொண்டிட்ட கொள்கையில் குறுகிடுவார் - மனம்
கொஞ்சமும் இளகிடா குணம் கொள்ளுவார்...!

நாடென்ன செய்தது நமக்கெனுவார் - சினம்
நாட்டையே அழித்திட வழிசெய்குவார்...!
கூடுகள் சிதைத்திட்டு உயிர் பறிப்பார் - மதம்
கூறிட்டு நாட்டினில் குழிபறிப்பார்....!

மனிதங்கள் புதைபட உயிரழிப்பார் - குணம்
மரத்திட புனிதங்கள் அழித்திடுவார்...!
தாயவள் கருவினை களைந்திடுவார் - பணப்
பேயது ஆட்டிட மதங்கொள்ளுவார்....!

மானிடப் பதரென மதித்திடுவோம் - இவர்
மாண்டிட சட்டங்கள் விதைத்திடுவோம்..!
பாரதத் தாயவள் மடிநிறைத்தே - அவள்
பாங்குற வாழ்ந்திட வழி செய்குவோம்....!

இறைநேசன்
14-08-2009, 09:02 AM
அருமையான கவிதை ஒற்றை படைத்துள்ளீர்கள் நன்றி!

கா.ரமேஷ்
14-08-2009, 12:26 PM
கொடுஞ்செயல் புரிந்தோர்கெல்லாம்
கோழி பிரியாணி கொடுத்துக் கொண்டிருக்கிறோம் பிறகு எப்படி இவர்களை பொன்றவர்கள் திருந்துவர்?

கடுமையாய் உழைக்க செய்து கால் வயிற்று கஞ்சி கொடுக்க வேண்டும்...
கருணை என்றால் என்ன என்பதை அது போன்ற கயவர்க்கு அறிய செய்யவேண்டும்...

நல்லதொரு கவிதைக்கு பாராட்டுக்கள் கலை...

செல்வா
14-08-2009, 02:06 PM
தீவிரவாதம் ஆணிவேர் கண்டு அறுக்கப் படவேண்டியது...

கலைகள் வெறும் மனச்சாந்திக்கு மட்டுமல்ல

சமூகச் சீர்திருத்தத்திற்கும் தான்...

என்று ... குரலெழுப்பும் கவிதை..

சொற்சுவை நிறைந்தது...

வாழ்த்துக்கள்...

கலைவேந்தன்
15-08-2009, 05:26 PM
நண்பர்களின் பாராட்டைத் தலைவணங்கி ஏற்கிறேன்...!

நன்றி நண்பர்களே...!

அமரன்
16-08-2009, 07:53 AM
சுதந்திர பாரதம் வாழ்க நிரந்தரம்..

அதற்குத் தேவை பயங்கரவாரத் தொலைவு.

அருமையான பொருள், சொல்வளத்துடன் வளர்ந்த கவிதை..

வளைந்து அருவாளாகி தீவிரவாதத்தை அறுக்க விறு விறுப்புடன் நிற்கிறது.

தீவிரவாதத்தை ஒழிக்க நண்பர்கள் சொன்ன

கலை, உழைப்பு, கருணை ஆயுதங்கள் கச்சிதமானவை.

அனைவருக்கும் பாராட்டூகள்.

தீவிரவாதத்தை ஒழித்தால் தீவிரவாதிகள் தற்கொலை செய்வர்.

தீவிரவாதிகளை கொன்றால் தீவிரவாதிகள் மீண்டும் தோன்றுவர்.

ஓவியன்
16-08-2009, 11:14 AM
நல்ல சொல் நயத்துடன் செழித்து விளங்கும் கலையம்சமிக்க கவிதை...

கலை, எனக்கொரு சந்தேகம் வெறும் சட்டங்களால் மட்டும்
தீவிரவாதிகளை அழித்திட முடியுமா என்ன..??
அது, எய்தவனிருக்க அம்பை நோவது போலாகாது..??

பசியுற்றவர்களும், வேலைவாய்ப்பின்றி இருப்பவர்களும்தானே
இலகுவில் தீவிரவாதிகளாகின்றார்கள்,
அப்படியானால் அவர்களைத் தீவிரவாதிகளாக்கிய
பொறுப்பில் ஒரு சிறு துளியேனும் நமக்கும் கிடைக்கிறதே,
ஆகக் குறைந்தது,
உண்ணும் உணவுகளை வீணடிப்பதிலும்,
பூமித்தாய் தந்த வளங்களை வீணடிப்பதிலுமாகவேனும்....

என்னைப் பொறுத்த வரை,
எங்குமே சமத்துவம் மலர்ந்திட்டால்
எங்குமே தீவிரவாதம் முளைத்திடாது...!!

கலைவேந்தன்
20-08-2009, 03:33 PM
அமரன் கருத்தும் ஓவியன் கருத்தும் வெகுவாக சிந்திக்க வைக்கின்றன...

நன்றி நண்பர்களே...!