PDA

View Full Version : தலைப்பில்லை



Ravee
14-08-2009, 01:17 AM
தலைப்பில்லை


தலைப்பில்லா கவிதை ஒன்று கண்டேன்

அவசரத்தில் களவாடபட்டது அது

உன் பிள்ளைக்கு வேறு ஒரு அப்பன் பெயரா

அது எவ்வளவு அசிங்கமோ

அது போல தான் இதுவும்

மற்றவன் பிள்ளைக்கு உரிமைகோரதே

நாம் ஒன்றும் மலடுகள் இல்லை

சிந்தித்து பார் உன்னாலும் பிரசவிக்க முடியும்

:icon_rollout: :icon_rollout: :icon_rollout:

அமரன்
14-08-2009, 06:43 AM
என்னைக் கடந்து செல்லும்
ஒவ்வொரு நொடியிலும்
களவாடி விடுகிறேன்
ஒரு கவிதையையேனும்..

அடுத்தவன் உழைப்பைச் சுரண்டுவது
இன்னொருத்தன் பிள்ளைக்கு தந்தையாய் இருப்பதைப் போன்றது.
திருடர்களுக்கு சரியான சொல்வீச்சு.

அநாதைக் குழந்தை எனில்...?

பாராட்டுகள் ரவீ.

வெற்றி வாசன்
14-08-2009, 07:10 AM
நல்ல கவிதை. பாரதியின் ரௌதிறம் பழகு கவிதயில் இழைஒடுகிறது.

கலைவேந்தன்
14-08-2009, 08:38 AM
சூடான வரிகள்...! பாராட்டுக்கள் தோழரே...!

Ravee
14-08-2009, 06:42 PM
அமரன் அவர்களே அனாதை குழந்தைகளை கௌரவிப்போம்
பள்ளிக்காலத்தில் என் கவிதைகளும் துண்டுக்காகித்தில் காணமல் போனவை தானே

நண்பர் ஒருவருக்கு புரிய வைக்க நானும் கவிதா123 யும் நடத்திக்கொண்டு இருக்கும் போராட்டத்தின் ஒரு பகுதி தான் இது .எங்களுக்கே வெற்றி கிட்டும்

இன்பக்கவி
17-08-2009, 07:16 AM
அண்ணா,
அவருக்கு சொல்லி கலைத்து போனேன் அண்ணா..விடுங்கள்...எல்லாம் வீண்...
உங்கள் பாதிப்பை இங்கும் கொட்டி விட்டீர்கள்.....:icon_rollout::icon_rollout:

ஓவியன்
22-08-2009, 12:47 PM
நீ அபகரித்துப் போனது
கவிதைகள் மட்டுமல்ல
என் கற்பனையும்
சேர்த்து சேமித்து
ஒதுக்கிப் பாவித்த
மணித் துளிகளையும்தான்....

மொத்தத்தில் மற்றவர் படைப்புக்களைக் களவாடிப் போவோருக்கு நல்ல சாட்டையடி இந்தக் கவிதை..!!