PDA

View Full Version : இன்னும் ஓர் இரவு - 2



சசிதரன்
12-08-2009, 05:27 PM
யாருமறியாத
காட்டில்...
ஏதோ ஓர்..
பெயர் தெரியாத பூ..
பூத்துக் கொண்டிருக்கிறது.

எங்கோ ஒரு
விவாதம் நீண்டு...
புரிதலின் சுவடுகள்..
மறைய தொடங்குகிறது.

தாங்க முடியாத...
நிராகரிப்பின் வலியை...
யாரோ ஒருவன்..
பெற்றுக் கொண்டிருக்கிறான்.

எவனோ ஒருவன்...
மரணம் பற்றி...
கவிதை
எழுதிக் கொண்டிருக்கிறான்.

எங்கோ ஒருவன்...
தன மரணத்திற்கு...
யாரும் காரணமில்லையென..
கடிதம்
எழுதிக் கொண்டிருக்கிறான்.

இரவுகள்..
ஒன்று போல்..
அமைவதில்லை...
எல்லோருக்கும்.

நீளும் இரவின்...
நிசப்தம் உடைத்து..
நான் விடும் பெருமூச்சு...
ஏற்படுத்தக்கூடும்...

எங்கோ ஒரு...
பெரும்புயலுக்கான..
ஆரம்ப சுழற்சியை

வெற்றி வாசன்
12-08-2009, 05:40 PM
ஐந்து விரல்கும் ஒன்றாக இருபது இல்லை என்ற கருத்தை கவி ரசம் போங்க எழுதி உள்ளிர்கள். நல்ல கவிதை.

கலைவேந்தன்
14-08-2009, 08:47 AM
ஆஹா.... இரவுகள் ஒரே விதம்... எண்ணங்கள் பலவிதம்...!

இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த நள்ளிரவு வேளையில் எத்தனை மகளிர் கற்பிழந்தனரோ...?

ஒரே இரவு.... அவை சொல்லும் கதைகள் பல...!

பாராட்டுக்கள் சசி...!

செல்வா
14-08-2009, 03:15 PM
இந்தப் பிரபஞ்சமே... ஒரு விந்தை..

ஒவ்வொரு அணுவிலும்
ஒவ்வொரு நொடிக்குள்ளும்
ஒவ்வொரு நிகழ்வுகள்...

ஒன்றிற்கும் இன்னொன்றிற்கும்... தொடர்பிருக்கிறதா?
தொடர்பில்லையா...
இருக்கும் தொடர்பு நமக்குத் தெரியவில்லையா...

இங்கே நான் விடும் மூச்சுக்காற்று...
எங்கோ புயலாகுமா?

கேயாஸ் தியரியின்... பாதிப்பா...?

கம்பனுக்கு கலைமகளே கைவிளக்குப் பிடித்ததாகச் சொல்லுவார்கள்...

உங்கள் வார்த்தைகள் வசீகரிக்கின்றன...

இளசு
17-08-2009, 09:34 PM
ஒன்றிற்கும் இன்னொன்றிற்கும்... தொடர்பிருக்கிறதா?
தொடர்பில்லையா...
இருக்கும் தொடர்பு நமக்குத் தெரியவில்லையா...

இங்கே நான் விடும் மூச்சுக்காற்று...
எங்கோ புயலாகுமா?

கேயாஸ் தியரியின்... பாதிப்பா...?

...

உங்கள் வார்த்தைகள் வசீகரிக்கின்றன...

நான் சொல்ல வந்த கருத்துகள் செல்வாவின் கைவண்ணத்தில்..

வழிமொழிந்து வாழ்த்துகிறேன் வசீ!

------

செல்வா

கம்பன் , கட்டுத்தறி அறிந்தது..
கம்பன், கலைமகள் - அறிந்தேன் உன்னால்..
நன்றி!

சசிதரன்
18-08-2009, 04:46 PM
அத்தனை நண்பர்களுக்கும் நன்றி...:)

@செல்வா அண்ணா..

ஆம் செல்வா அண்ணா... கேயாஸ் தியரியின் பாதிப்புதான் இந்த கவிதை...:)

அமரன்
18-08-2009, 05:07 PM
சசியின் விழிகளினூடு
செல்வாவின் வெளிச்சம் பாய்ச்சி
இரவினைக் காண்பது
அழகோ அழகு...

பாராட்டுகள்.