PDA

View Full Version : கடவுளுக்குத்தான் கண் இல்லை...



இன்பக்கவி
12-08-2009, 07:53 AM
பார்க்காமல் வந்த காதல்
பார்க்காமலேயே போனது.
பார்த்து வந்த காதல்
பழகிய பின் பாதியில் போனது..
இன்டர்நெட் காதல்
இடையிலேயே போனது....

காதல் மேல் நம்பிக்கை இல்லாமல்
கவலையாய் ஆனது இன்று...
நல்ல காதல் எல்லாம்
நலிவடையும் சூழல்......

உடல் பார்த்து வந்த காதல்
கூடி வாழ்ந்து ஊனமாய் போனது...
மனம் பார்த்த வந்த காதல்
சேர முடியாமல் மரணித்து போனது.....

யார் மீது குற்றம்??
காதலை தேர்வு செய்யும்
நம் மீதா??
விளையாட்டாய் காதல் செய்யும்
வீணர்கள் மீதா????

காதலுக்கு கண் இல்லை என்பது பொய்...
கடவுளுக்குத்தான் கண் இல்லை...
உண்மை காதலர்களை
பிரித்து வருத்தி விடுகிறான்...

உண்மை காதல் தோற்பது இல்லையாம்- அன்று..
உண்மை காதல் எல்லாம் வாழவே இல்லை-இன்று..

இறைநேசன்
12-08-2009, 01:17 PM
கடவுளுக்குத்தான் கண் இல்லை...


காதலின் வெற்றி என்பது கல்யாணத்தில் முடிவதிலா?
காதலில் பிரிவுண்டு காலமெல்லாம் தவிப்பதிலா?
கல்யாணம் முடிந்தபின்னே காதலது மங்கிவிடும்
எந்நாளும் மங்காதது பிரிவடைந்த காதலன்றோ!

காதலின் அர்த்தம் எனக்கு இதுவரையில் புரியவில்லை
வாழ்க்கையின் அர்த்தம் கூட, நமக்கு இன்னும் தெரியவில்லை
கண்களை உண்டாக்கிய அந்த கருணை கடல் இறைவனுக்கு
கண்ணில்லை என்ற வார்த்தை கவிதைக்க்காகவும் வேண்டாமே!

இது எனது தாழ்மையான வேண்டுகோள்!

அன்புடன்
இறைநேசன்

ஆதி
12-08-2009, 01:27 PM
//கல்யாணம் முடிந்தபின்னே காதலது மங்கிவிடும்
எந்நாளும் மங்காதது பிரிவடைந்த காதலன்றோ! //

கல்யாணத்திற்கு பின்மங்கிவிட்டால்
கொண்டது காதல் அல்ல
கண்கள் கொண்ட காமமது..

காயிலே புளிப்பதென்ன கண்ணப்பெருமானே - பாரதி..

காதலிலும் அப்படித்தான் இணையை எங்கும் காண முடியும்..

பிரிந்த உறவுகள் முறிவதில்லை
முதிர்ந்த உறவுகள் பிரிவதில்லை..
புணர்ச்சி பழகுதல் மட்டும் காதலல்ல
பிரிந்த பிறகும்
உணர்ச்சி ஒத்திருதலே உண்மை காதல்..

வாழ்த்துக்கள் கவிதா123 அவர்களே..

இறைநேசன்
12-08-2009, 02:19 PM
எட்டாத தொலைவில் இருக்கும் எதொன்றின்மேல் இருக்கும் ஆர்வமும் வாஞ்சையும் எட்டியபின் இருப்பதில்லை, இதுதான் இயல்பு!
என்னதான் காதல் காதல் என்று கதறினாலும் அது கடைசியில் முடிவது காமத்தில்தான்.

காதல் என்னதான் புனிதம் என்றாலும் அதில் எதிர்பார்ப்பு இருப்பதால், அது நிறைவேறும்போது அதன் வேகம் மங்கிவிடுகிறது என்றே நான் கருதுகிறேன்! பலரின் வாழ்க்கை நிலையே இதற்க்கு சாட்சி.