PDA

View Full Version : உன்னில் என்னைக் கண்டேன், சின்னப் பெண்ணே!



தாமரை
12-08-2009, 06:41 AM
ஹி ஹி டக்குன்னு பல பேருக்கு புரிஞ்சிருக்கும் நான் என்ன எழுதப் போறேன் இந்தத் திரியில அப்படீன்னு!!!

ஆமாம் ஸ்வேதாதான்.

பல முறை செய்கைகளையும் வார்த்தைகளையும், முகபாவங்கள் நடிப்பு போன்றவற்றைப் பார்க்கும்போது நம்மை நம் குழந்தைகளில் நம்மைக் காண்போம் இல்லையா?

அதில கொஞ்சம் பகிர்ந்துக்கலாம்னுதான் இந்தத் திரி!!

அன்று ஒருநாள்..

வீட்டுக் கூடத்தில் ஸ்வேதா சோஃபா மேல சேஃபா ஏறி நின்னா....

என்ன செய்யற? அப்படின்னு கேட்டேன்

நான் ஹைட்டாய்கிட்டு இருக்கேன் அப்படின்னா ஸ்வேதா...

அப்ப நானு? அப்பா - மகள் சம்பாஷணையில் சட்டென்று தாய் உள்நுழைய...

வெய்ட்டாய்கிட்டு இருக்க.... சட்டென்று ஸ்வேதாவிடமிருந்து வந்தது பதில்.

பிறகு என்ன நடந்திருக்கும்னு உங்களுக்கேத் தெரியுமே...

தாமரை
12-08-2009, 06:59 AM
இன்னிக்கு..

பள்ள்ளியில் ஆரஞ்சு வண்ண காய் கனிகள் வேடத்தில் வரச்சொல்லி இருந்தாங்க ஸ்வேதாவை..

நமக்குத் தெரிஞ்சது ஆரஞ்சுப் பழம், பப்பாளிப் பழம், கேரட் இவ்வளவுதானே...

ஒரு பெரிய சார்ட் வாங்கி கேரட் வரைஞ்சு, மேல கொஞ்சம் பச்சையா தழை வரைஞ்சு வெட்டியெடுத்து தயார் பண்ணினோம்..

ஆரஞ்ச்சு வண்ண கால்சட்டை, பச்சை நிற மேல்சட்டையோட கேரட் கழுத்தில் தொங்க இன்னிக்கு காலையில் ரெட்டியானாள் ஸ்வேதா. நான் பள்ளியில் கொண்டு சென்று இறக்கி விட்டு விட்டு ஆஃபீஸ் போகணும்..

கேரட் அலங்காரம் மாத்திரம் போதுமா? எதாவது பேசனுமே...

காரில் ஏறினப்புறம்தான் அந்த ஞாபகம் வந்தது.. ஓடற காரில் ஒரு பாட்டு எழுத ஆரம்பிச்சோம்..

I am the Carrot - I am the Carrot
Orange is my colour - Orange is my Colour
Eat me in the salad - Eat me in the salad
Good for eyes - Good for eyes

(Are you sleeping - Are you sleeping brother john - ட்யூனில் படிக்கவும்)

இதை 2 நிமிடத்தில் மனப்பாடம் செய்தாள் ஸ்வேதா..

இதைச் சொன்னா டீச்சர் என்ன சொல்வாங்க தெரியுமா? நான் கேட்டதுக்கு

வெரி நைஸ்...

அப்படின்னு சொல்லிட்டு

குட் ஃபார் ஐஸ் - வெரி நைஸ்

சொல்லிட்டு சந்தம் புரிந்த பென்ஸ் மாதிரி சிரிச்சா..

சரிதானே!!!

நேசம்
12-08-2009, 08:10 AM
பிறகு என்ன நடந்திருக்கும்னு உங்களுக்கேத் தெரியுமே...

எனக்கு உங்களுடைய அம்மா மாதிரி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20975) திரி தான் ஞாபகம் வந்தது :D

தாமரை
12-08-2009, 08:22 AM
இந்தக் குசும்புதானே வேணாங்கறது..

நான் அப்பா மாதிரி-ன்னு திரி ஆரம்பிச்சா அதில வந்து அம்மா மாதிரி-ன்னு சொல்றீங்களே..:D :D :D

கா.ரமேஷ்
12-08-2009, 08:30 AM
அட அட... காரட் என்னச்சுனு வந்தவுடனே கேக்க மறந்துடாதீங்க.. அத எங்களுக்கு சொல்ல மறந்துடாதிங்க..

இளசு
13-08-2009, 06:31 AM
சின்னத்தாமரைக்கு என் அன்பும் பாராட்டும்!

தாமரை
13-08-2009, 08:46 AM
ஆசிரியை எதிர்பார்க்கவே இல்லை போல இருக்கு...


கேரட் டிரஸ் போட்டவங்க எல்லாம் ஃபோட்டோ எடுத்துக்க வாங்க என்று அழைத்ததும், ஸ்வேதா எழுந்து மிஸ் ஐ வாண்ட் டு டெல் எ ரைம் என்று சொன்னாளாம்.

மிஸ்ஸிற்கு புரியலை,,, யூ கேன் டெல் த ரைம் ஆஃப்டர் இன் த கிளாஸ் அப்படின்னு சொல்ல...

அதை கண்டுக்காம காரட் பாடலை பாடியிருக்கா ஸ்வேதா...

மிஸ் ரொம்ப பரவசமாகி, ஒன்ஸ் மோர் கேட்டு அப்புறம் கைதட்டலும் நட்சத்திர அந்தஸ்தும் கொடுத்தாங்களாம்...

வீட்டிற்கு வந்த உடனே ஃபோன் செய்து சொன்னாள்..

நாளை இராணுவ உடுப்பு அணிந்து பள்ளி செல்ல இருக்கிறாள். அனிருத்திற்கு வெள்ளை உடை...

மிகப் பெரிய அணிவகுப்பு காத்திருக்கு.. தயார் செய்யணும்...

வர்ட்டா?

ஓவியன்
22-08-2009, 06:00 AM
கேட்க சந்தோசமாக இருந்திச்சு செல்வண்ணா, எனக்கு ஞாபகம் இருக்கு நீங்க ஒரு தடவை ஆ 10 திரியில் சின்னத்தாமரை அனிருத்தல்ல ஸ்வேதா தான் என்று கூறியது, ஒரு வழியாக ஆ 10 திரியினைத் துருவி அந்தப் பதிவினை கொணர்ந்திட்டேன்.....


தந்தையை விட தன் தாயினை ஒத்தவனாகவே அனிருத் இருக்கிறான். (ரத்த வகுப்பு கூட அவர்களுடையதுதான்). ஆனால் ஸ்வேதாவிடம் சின்னத் தாமரையை என்னால் கண்டுகொள்ள முடிகிறது. எனக்கு என்ன எண்ணங்கள் செயல்பாடுகள் இருந்தனவோ அதே போல்தான் அவள் இன்று இருக்கிறாள். என்வே அன்றைய தாமரை இன்றைய ஸ்வேதா என்று வேண்டுமானால் சொல்லலாம். முக்கியமாக நான் பெரியவர்களிடம் நல்லபையன் என்று பெயர் வாங்க என்ன என்ன உத்திகளை உபயோகித்தேனோ அதே உத்திகளை உபயோகிக்கிறாள். எந்த ஒரு விஷயமானாலும் நான் எப்படி என்னை முழுதாக ஈடுபடுத்திக் கொள்வேனோ அதே குணத்தையும் காண்கிறேன்.

சின்னத் தாமரைக்கு என் மனதார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்...!!:):):)

ஓவியன்
22-08-2009, 12:20 PM
நான் பெரியவர்களிடம் நல்லபையன் என்று பெயர் வாங்க என்ன என்ன உத்திகளை உபயோகித்தேனோ அதே உத்திகளை உபயோகிக்கிறாள்

இந்த உத்திகளைக் கொஞ்சம் நீங்களும் ஸ்வேதாவுமாக சேர்ந்து நமக்கும் சொல்லித் தரலாமே, நிறையப் பேருக்கு உபயோகமாக இருக்கும்..! :):):icon_rollout:

பரஞ்சோதி
23-08-2009, 06:05 AM
அருமை, அருமை

இத்திரி இப்போ தான் கண்டேன்.

ஸ்வேதா செல்லத்தின் குறும்புகள் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது, எனக்கு என் மகள் சக்தி நினைவுக்கு வருகிறார்.

தல, அவரது குறும்புகளையும், அசத்தல் பேச்சுகளையும், திறமைகளையும் அசைப்படங்களாக கூட எடுத்து மன்றத்தில் போடலாம் தானே.

கலைவேந்தன்
23-08-2009, 07:52 AM
மனம் நெகிழும் பதிவுகள். தன் பிம்பம் தன்னைப்போல அமைவதில் பெருமிதம் எத்தனை இருக்கும் என்பது நானறிவேன். 9 வருடங்களில் நானறிந்த கணிணிப் பட்டறிவை விட பலமடங்காக என் 11 வயது பையன் அர்விந்த் இந்த கடந்த 5 வருஷங்களில் பெற்றுவிட்டான் என்பதும் பெருமை தான். எட்டடி பாயும் பெற்றோருக்குப் பதினாறடி பாயும் வாரிசுகள் கிடைப்பது பெருமைப்படத்தக்க விஷயம் தான்.

தொடருங்கள் நண்பரே...!

மஞ்சுபாஷிணி
23-08-2009, 08:41 AM
ஸ்வேதா குட்டியின் குட்டி குட்டி கலாட்டாக்கள் ரொம்ப இனிமையா இருக்கு படிக்க... இன்னும் தொடருங்கள்.. நன்றி தாமரை...

மஞ்சுபாஷிணி
23-08-2009, 08:45 AM
மனம் நெகிழும் பதிவுகள். தன் பிம்பம் தன்னைப்போல அமைவதில் பெருமிதம் எத்தனை இருக்கும் என்பது நானறிவேன். 9 வருடங்களில் நானறிந்த கணிணிப் பட்டறிவை விட பலமடங்காக என் 11 வயது பையன் அர்விந்த் இந்த கடந்த 5 வருஷங்களில் பெற்றுவிட்டான் என்பதும் பெருமை தான். எட்டடி பாயும் பெற்றோருக்குப் பதினாறடி பாயும் வாரிசுகள் கிடைப்பது பெருமைப்படத்தக்க விஷயம் தான்.

தொடருங்கள் நண்பரே...!

இதை நானும் சந்தோஷமாக பகிர்கிறேன்.. கலையிடம் எதுனா சந்தேகம் கேட்டால் உடனே அர்வியை கூப்பிட்டு விடுவார்.. அர்வி வந்து எனக்கும் சொல்லித்தருவான்.

சிவா.ஜி
30-08-2009, 04:53 PM
ஸ்வேதாக் குட்டிதானே....நடமாடும் என்சைக்ளோஃபீடியாவோட வாரிசுன்னா கேக்கனுமா? எங்க வீட்ல இருந்த கொஞ்ச நேரத்துல என் மனைவியையே வழிய வெச்சுட்டா.

குறும்பு மின்னும் கண்களோட, ஆழமான பேச்சு. அதுவும் இந்த வயசுல. கேரட் பாட்டுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைச்சது ரொம்ப சந்தோஷம். அணிவகுப்பு என்ன ஆச்சுன்னு சொல்லுங்க......

தாமரை
31-08-2009, 01:57 AM
எங்களோட தோழி அவர். ஒருமுறை தன் தங்கையின் கல்யாணத்திற்கு அழைப்பதற்காக வீட்டுக்கு வந்தாங்க. அழைப்பு முடிந்ததும், சரி நேரமாச்சி, நான் வீட்டில கொண்டு வந்து விடறேன் என நானும் கிளம்பினேன்..

ஸ்வேதா நானுக் வர்ரேன் எனக் கூடவே ஏறிகிட்டா..

போகும் வழியெல்லாம் அந்தத் தோழி தன் மாமியாரின் கண்டிப்புகள், அதிகாரங்கள் பத்தி கதை சொல்லிகிட்டே வந்தாங்க.. நாலு வயசு ஸ்வேதாவும் கேட்டுகிட்டே வந்தா...

வீட்டுக்குப் போனாதும் ஸ்வேதா வோட ஃபிரண்ட் ஐஸ்வர்யாவோட கொஞ்சம் விளையாடட்டும் என்று அவங்க வீட்டுக்குள்ள போனோம். அந்தத் தோழியின் தங்கை ஐஸ்வர்யாவை அழைச்சிகிட்டு முன் ஹாலுக்கு வர ஸ்வேதா கேட்டாள்

"எங்க உங்க மாமியார்?"

திரு திரு வென தங்கை முழிக்க, அக்கா பதட்டமாய் ஓடி வர..

"உங்க மாமியாரை வரச் சொல்லுங்க நான் பேசறேன்"

எல்லோரும் அதிர்ச்சியில் திக்கு முக்காடிப் போயிட்டாங்க...

உடனே ஸ்வேதாவை ஐஸ்வர்யா ரூமுக்கு பேக் பண்ணி அனுப்பிட்டு பின்ன்ர் சமையற் கட்டில் இருந்து அவங்க மாமியாரைப் பார்த்தி பேசிட்டு அப்புறம் அப்படியே கப்சிப்புன்னு அழைச்சிகிட்டு வந்துட்டேன்.

அந்தத் தோழிக்கு நல்ல பாடம்.. நல்ல வேளை மாமியார் கூடத்தில் இல்லை. இருந்திருந்தா???

ஓவியன்
31-08-2009, 04:00 AM
அதுதானே, அந்த மாமியாரைக் கூப்பிட்டுக் கொஞ்சம் கண்டிக்கணும்னு நினைச்சதில என்ன தப்பு....?? :D:D:D

தாமரை
31-08-2009, 04:25 AM
பாவம் அந்தத் தோழி இவ்வளவு தெளிவா ஸ்வேதா தமிழ் பேசுவான்னு எதிர் பார்க்கவே இல்லை.. ஹி ஹி..

சிவா.ஜி
31-08-2009, 04:52 AM
அந்தத் தோழி இனி மாமியாரைப்பற்றி மட்டுமல்ல, யாரைப்பற்றி பேசுவதானாலும் கொஞ்சம் யோசித்தே பேசுவார்.

ஓவியன் சொன்ன மாதிரி, அந்த மாமியாரை ஸ்வேதா நறுக்குன்னு நாலு கேள்வி கேட்க விட்டிருக்கனும்.(அதுக்கப்புறம் அந்த தோழியோட நிலையை நினைச்சா பாவமா இருக்கு)

தாமரை
31-08-2009, 04:54 AM
சரி சரி நீங்க ஸ்வேதாவோட பேசும் போது ஜாக்கிரதையாவே பேசுங்க.. அப்புறம் உங்க வீட்ல ஆப்பு வச்சிரப் போறா!!

சிவா.ஜி
31-08-2009, 05:09 AM
ஆமா...ஆமா...ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும். எங்க வீட்டம்மா இப்பவும் ஆச்சர்யப்பட்ட்டுப் பேசும் குட்டிப் பெண் ஸ்வேதா.

நேசம்
31-08-2009, 06:24 AM
.(அதுக்கப்புறம் அந்த தோழியோட நிலையை நினைச்சா பாவமா இருக்கு)


எனக்கு என்னமோ அந்த மாமியாரை நினைச்சா தான் பாவமாக இருக்கு(நறுக்குன்னு நாலு கேள்வி கேட்டு இருந்தா)

தாமரை
31-08-2009, 06:58 AM
அந்தக் கொடுமையை ஏன் கேட்கறீங்க..

ஒரு முறை அழ ஆரம்பித்தாள்..

நான் சமாதானம் செய்து கொண்டிருந்தேன்...

நீ என்னிக்காவது எனக்கு ஒரு கிஃப்ட் வாங்கித் தந்திருக்கியாப்பா? நீ சுத்த வேஸ்டுப்பா என்று சொல்ல...

நான் வாங்கித் தந்ததை ஒண்ணொன்னா சொல்லச் சொல்ல

அது அம்மா வாங்கித் தரச் சொன்னது.. அது அண்ணன் செலக்ட் பண்ணினது இது சித்தி சொன்னது.. அது அவர் சொன்னது இது இவர் சொன்னது என லிஸ்டுல இருக்கிற எல்லாத்துக்கும் ஒரு காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தாள்..

ஊஹூம் இது சரிப்பட்டு வராதென வேற வழி முயற்சி பண்ணினேன் சரியாயிட்டா..

நீ என்னிக்காவது நீயா எனக்கு முத்தம் குடுத்தியா எனக் கேட்க...

ம்ம்ம்

இப்ப எல்லாம் சரியாப் போச்சுது...

அதான் நானா சர்ப்ரைஸ் கிஃப்ட் தர்ரதும்... அவளா முத்தம் தர்ரதும்..

பரஞ்சோதி
31-08-2009, 02:51 PM
ஆஹா! ஆஹா!

அப்பா மகள் பாசத்திற்கு ஈடு இணை வேற உலகில் இல்லை என்றே சொல்வேன்.

அசத்துங்க தல.

ஆனாலும் சின்னப்புள்ளையை இப்படி ஏமாற்றக்கூடாது ஆமாம்.

தாமரை
03-09-2009, 04:36 AM
சின்னக் குழந்தைகளைச் சமாளிப்பது ரொம்பவே கஷ்ட்ம்தான் பரம்ஸ்..

நீங்க பாட்டுக்கு பொது அறிவுப் புத்தகங்களை கொடுத்துட்டுப் போயிட்டீங்க.. அதைப் படிச்சிட்டு அனிருத் கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்றது யாரு?

அதன் விளைவுகள்தான் இப்ப நான் பதியற பல அறிவியல் தகவல்கள்..

உங்களுக்கு ஒர் கேள்வி...

போலாரிஸ் நட்சத்திரத்திற்கும் பூமிக்கும் உள்ள தொடர்பு என்ன?

இதை வேற நான் படிச்சு சொல்லணும்..

ஆதவா
03-09-2009, 05:04 AM
அதானே பார்த்தேன்.... என்னடா, அனிருத் செய்திகள் மட்டுமே வந்தினு இருந்துச்சி, ஸ்வேதாவைப் பத்தி காணோமேன்னு பார்த்தேன்.. தந்தை எட்டடின்னா (எட்டாத அடி) குட்டி பதினாறையும் தாண்டும் போல இருக்கே.....

அதுசரி, பதினாறு அடி தாண்டி, அடி விழுந்தது ஸ்வேதாவுக்கா...... இல்லை........

ஓவியன்
05-09-2009, 12:19 PM
இப்ப எல்லாம் சரியாப் போச்சுது...

அதான் நானா சர்ப்ரைஸ் கிஃப்ட் தர்ரதும்... அவளா முத்தம் தர்ரதும்..

அது தானே, ஒன்றைக் கொடுத்துத்தான் இன்னொன்றைப் பெறணும்..!! :)

தாமரை
11-12-2009, 04:30 PM
ஸ்வேதா வுக்கு ஹிந்தி பாடம் கற்று கொடுத்துக் கொண்டிருக்கிறார்..

அங்கூர்- மாதுளை
அங்கூட்டி - மோதிரம்

ஆம் - மாம்பழம்

கத்ரா - டேஞஜர்...

சொல்லிக் கொண்டே வந்த ஸ்வேதா.. அம்மா பாரும்மா...

ஸ்வேதா : டேஞ்ஜர்னா இந்தியில் என்னம்மா?

அம்மா : கத்ரா

ஸ்வேதா : "ஹாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ"

அம்மா : ஏன் கத்துறே,..

ஸ்வேதா : டேஞ்ஜர்னா கத்தணும் தானே..அதான் கத்ரான்னு பேர் வச்சிருக்காங்க போல இருக்கு.



...

சரண்யா
12-12-2009, 01:58 AM
ஸ்வேதாவின் பேச்சு எல்லாமே ரசிக்க முடிந்தது....அவ்வாறு எழுதி எங்க்ளோட பகிர்ந்த தாமரை அண்ணாவிற்கு நன்றிகள்...நல்லா கத்ரா

செல்வா
17-12-2009, 10:53 AM
நீங்க மட்டும் பாக்கல நாங்களும் பாக்குறோம் அதிலும் அந்த கத்ரா... ஹைலைட்

அமரன்
30-01-2010, 08:19 PM
ஸ்....ஆ...

சில இடங்கள்ள வலிக்குது. அட.. என் உடம்பின் சில பாகங்களைச் சொன்னேனுங்க.

ஏன் இடை நடுவில விட்டுட்டீங்கண்ணா.

விகடன்
05-04-2010, 01:43 PM
தாமரை அண்ணா. எதற்கும் வீட்டில அவதானமாக இருந்துகொள்ளுங்கோ.
பிறகு ஸ்வேதா நம்ம மன்றத்தில ஓர் உறுப்பினராக வந்து உங்க வண்டவாளங்களையெல்லாம் ஏற்றிவிட்டுவிடுவாள்.

அக்னி
20-04-2010, 07:32 AM
செல்வரோட இந்தத் திரியை இவ்வளவு நாட்களாகப் பார்க்காமல் விட்டேனே...

செல்வரைக் கவுக்க அவரே ஸ்வேதாப் பொண்ணைத் தயார் பண்ணுறார்.

இந்த இடைவெளியில் அதிகமான நிகழ்வுகள் மனப்பதிவுகளிருக்குமே..,
அவற்றையெல்லாம் மன்றப் பதிவுகளாக்குங்கள் அண்ணா...

தாமரை
26-05-2010, 09:26 AM
இப்போ சிறிது நாட்களுக்கு முன்னால் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பின் போது ஸ்வேதாவின் ஆசிரியை சொன்னது..

"ஸ்வேதாவுக்கு எப்பவும் நான் அவளை தனியா கவனிக்கறேன்னு காட்டிக்கணும். எப்பவாவது ஒரு நாள் நான் அவளைக் கவனிக்கலன்னா, ரொம்பவே அமைதியா உம்முன்னு இருப்பா..

சாயங்காலம் பள்ளி முடிஞ்சதும் என் பக்கம் வந்து நிப்பா.. என்னன்னு கேட்டுக் குனிஞ்சா கன்னத்தில் ஒரு முத்தம் வைப்பா..

அப்பதான் நாம இன்னிக்கு இவளைச் சரியா கவனிக்கலையேன்னு ஞாபகமே வரும்..

நிச்சயமா இவளை மிஸ் பண்ணுவேன்"

இன்னாமா நைஸ் பண்ணுதுங்க பாருங்க இந்தக் குட்டிப் பொண்ணு,

ஓவியன்
26-05-2010, 09:29 AM
இன்னாமா நைஸ் பண்ணுதுங்க பாருங்க இந்தக் குட்டிப் பொண்ணு,

அதுசரி :D,

இதையும், `உன்னில் என்னைக் கண்டேன், சின்னப் பெண்ணே` என்ற திரியின் தலைப்பையும் இணைத்துப் பார்த்தால்... :lachen001::lachen001::lachen001:

மதி
26-05-2010, 09:35 AM
அதுசரி :D,

இதையும், `உன்னில் என்னைக் கண்டேன், சின்னப் பெண்ணே` என்ற திரியின் தலைப்பையும் இணைத்துப் பார்த்தால்... :lachen001::lachen001::lachen001:
:D:D:D:D
அட அட அட.... :icon_ush::icon_ush: :eek::eek:

தாமரை
26-05-2010, 10:22 AM
அதுசரி :D,

இதையும், `உன்னில் என்னைக் கண்டேன், சின்னப் பெண்ணே` என்ற திரியின் தலைப்பையும் இணைத்துப் பார்த்தால்... :lachen001::lachen001::lachen001:

உனக்கேன்யா பொறாமை..:aetsch013::aetsch013::aetsch013:

ஓவியன்
26-05-2010, 10:23 AM
உனக்கேன்யா பொறாமை..:aetsch013::aetsch013::aetsch013:

பொறாமை எல்லாம் இல்லை, ஃகன்பேர்ம் பண்ணுவோம்னு தான்... :cool::icon_rollout: