PDA

View Full Version : ..................



சசிதரன்
11-08-2009, 04:20 PM
ஒவ்வொரு வருடமும்...
எந்த மாற்றமும் இல்லாமல்...
நடத்தபடுகின்றன..
ஊர் திருவிழாக்கள்.

முகத்திலும் முதுகிலுமாய்...
வேல் குத்தியபடி...
அங்குமிங்கும் ஆடும் மனிதர்களை...
மிரண்டு போய் பார்க்கின்றன குழந்தைகள்.

அடிக்கும் உடுக்கையொலி..
கூடக் கூட...
கூச்சல் போட்டபடி..
ஆட தொடங்குகின்றனர்..
சில பெண்கள்.

தன மரணத்திற்குதான்
என்று தெரியாமலே
தலையாட்டி
சம்மதம் சொல்கிறது ஆடு...

ஓங்கி இறக்கிய
அரிவாளின் வேகத்தில்...
உடல் விட்டு தனியே...
உருண்டோடுகிறது தலை.

பீய்ச்சியடிக்கும்
இரத்தம் பார்த்ததும்...
பூரண திருப்தியாய்..
கூச்சலிடுகிறது கூட்டம்.

"இதெல்லாம் அவசியம்தானா"...
தயங்கியபடி கேட்கும் என்னிடம்...
"சாமி குத்தமாயிடும்ல..
எல்லாம் அவருக்காகத்தான்.."
என்று அவர்கள் கைகாட்டும் திசையில்....

குலைநடுங்கி போய்...
கருவறைக்குள்...
பதுங்கியிருக்கிறார்...
கடவுள்.

வெற்றி வாசன்
11-08-2009, 06:01 PM
கவிதை மிக அருமை. உயிர் பலி தடை செய்ய சட்டம் வந்தும் பலன் ஏதும் இல்லை. இன்று அந்த சட்டம்மும் இல்லை.
ப்ளூ கிராஸ் அமைப்பு கூட இதில் ஏதும் செய்ய முடியாது. எல்லாம் அவர் பார்த்து கொள்வர் என்று தான் இருக்க வேண்டும்.

கா.ரமேஷ்
12-08-2009, 05:36 AM
சாட்டையடி கவிதை... தெய்வ பக்தி தேவைதான்,திருவிழாக்களும் தேவைதான் ஆனால் அதை அடுத்த உயிர்களை துன்புறுத்தாமல் செய்தால் நலமே என்பதுதான் என் கருத்தும்...

///தயங்கியபடி கேட்கும் என்னிடம்...
"சாமி குத்தமாயிடும்ல..
எல்லாம் அவருக்காகத்தான்.."
என்று அவர்கள் கைகாட்டும் திசையில்....

குலைநடுங்கி போய்...
கருவறைக்குள்...
பதுங்கியிருக்கிறார்...
கடவுள்.////

நல்லொதுரு கருத்தாழம் மிக்க வரிகள் வாழ்த்துக்கள்...

சசிதரன்
12-08-2009, 05:25 PM
கவிதை மிக அருமை. உயிர் பலி தடை செய்ய சட்டம் வந்தும் பலன் ஏதும் இல்லை. இன்று அந்த சட்டம்மும் இல்லை.
ப்ளூ கிராஸ் அமைப்பு கூட இதில் ஏதும் செய்ய முடியாது. எல்லாம் அவர் பார்த்து கொள்வர் என்று தான் இருக்க வேண்டும்.

நன்றி வாசன்...:)

சசிதரன்
12-08-2009, 05:26 PM
சாட்டையடி கவிதை... தெய்வ பக்தி தேவைதான்,திருவிழாக்களும் தேவைதான் ஆனால் அதை அடுத்த உயிர்களை துன்புறுத்தாமல் செய்தால் நலமே என்பதுதான் என் கருத்தும்...

///தயங்கியபடி கேட்கும் என்னிடம்...
"சாமி குத்தமாயிடும்ல..
எல்லாம் அவருக்காகத்தான்.."
என்று அவர்கள் கைகாட்டும் திசையில்....

குலைநடுங்கி போய்...
கருவறைக்குள்...
பதுங்கியிருக்கிறார்...
கடவுள்.////

நல்லொதுரு கருத்தாழம் மிக்க வரிகள் வாழ்த்துக்கள்...

உணர்ந்து பாராட்டிய வார்த்தைகளுக்கு நன்றி ரமேஷ்...:)

இளசு
12-08-2009, 09:08 PM
புதுவை அருகில் தொண்டமாநத்தம் கிராமத்திருவிழாவில்
ஒவ்வொரு வீட்டிலும் ஆடுவெட்டப்பட்டு குருதி வீட்டு வாசலில் கொட்டப்பட்டு...
மொத்தம் ஒரே நாளில் 1200 ஆடுகள் பலியாம்..

தினமலரில் இவ்வாரம் வாசித்தேன் சசி!

உணவுச்சங்கிலியில் அசைவ உணவுண்பதை அறிவு ஏற்றாலும்
இவ்வகைப் பலிச்செயல்களை இதயம் ஏற்கவில்லை..

இறைவனே பதுங்குவது நல்ல கற்பனை..

ஆனால் பல காவல் தெய்வங்கள் கருவறை இன்றி உற்றுவிழிக்கும்
திறந்தவெளி வாசிகள்தாம் இல்லையா?

பாராட்டுகள் சசி!

கலைவேந்தன்
14-08-2009, 09:00 AM
ஆ..... அந்த கடைசிவரி.....!

சிம்ப்ளி சுபர்ப் சசி...!

செல்வா
14-08-2009, 03:06 PM
நச்........
உணரவேண்டியவர்கள் உணர்ந்தால் நல்லது.

பாராட்டுக்கள்...

அமரன்
19-08-2009, 05:01 PM
நெத்தியடி..

ஆடடிக்கும் இடத்தில எங்கள நிக்க விடமாட்டாங்க.. அந்தக்காலம்.
ஆட்டை அகிம்சை வழியில் அதாங்க இரத்தம் சிந்தமால் கொல்லுவதை பார்க்க அனுமதித்தாங்க... அடுத்தகாலம்.
இரத்தம் பீய்ச்சியடிக்க ஆடு வெட்டுறதை பார்க்க விடுறாங்க... இந்தக்காலம்..
என்னவா மாறிப்போச்சு.. பலி கொடுக்கிறதைத் தவிர மத்ததெல்லாம்.

தீபா
20-08-2009, 11:52 AM
குருதிப்புனல்,
எலும்புத்தோணியில்
தோலைப் போர்த்தியபடி
கடவுள்
நடுக்கம் தீரவில்லை.
பயமா? குளிரா?

அருமையாக இருக்கிறது திரு.சசிதரன். நல்ல கவிதை வாசம்..

பலியிடுதலையும் வேடிக்கை பார்த்துவிட்டு,
சம்மணமிட்டு அமர்ந்திருக்கும்
தெய்வங்கள் இருக்கையில்.. என்ன செய்ய??




பல காவல் தெய்வங்கள் கருவறை இன்றி உற்றுவிழிக்கும்
திறந்தவெளி வாசிகள்தாம் இல்லையா?



அவை கருவறைவிட்டு
பிறந்து வந்த சிசுக்களோ என்னவோ??
:D :D