PDA

View Full Version : உலகை உலுக்கிவரும் பன்றி காய்ச்சல்!



இறைநேசன்
11-08-2009, 08:02 AM
இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 4 பேர் பலியாகி விட்டனர். மராட்டிய மாநிலத்தில் 3 பேரும் குஜராத்தில் ஒருவரும் உயிரிழந்தனர். குறிப்பாக மும்பை மற்றும் புனே நகரங்களில் பன்றி காய்ச்சல் நோய் தீவிரமாக உள்ளது. இது தவிர டெல்லி, சென்னை, பெங்களூர், கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 3 ஆயிரத்து 624 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 782 பேருக்கு அந்த காய்ச்சல் இருப்பது உறுதியானது. புனே நகரில் மட்டும் 205 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவில் பன்றி காய்ச்சல் பரவுவது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் கவலை அடைந்துள்ளார். நேற்று காலையில், மத்திய சுகாதார துறை மந்திரி குலாம்நபி ஆசாத்தை அவசரமாக அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

பன்றி காய்ச்சல் குறித்த நிலைமையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக தன்னிடம் தெரிவிக்குமாறு ஆசாத்திடம் பிரதமர் கூறினார். மேலும், பன்றி காய்ச்சல் குறித்து நாட்டு மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டார். இந்த தகவல்களை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


பொது இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்கும் வகையில் மக்களை உஷார் படுத்துவதற்காக அந்த விளம்பரங்கள் இருக்கும். பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள், பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

பிரதமரை சந்தித்த பிறகு நிருபர்களை சந்தித்த மத்திய சுகாதார மந்திரி குலாம்நபி ஆசாத், "பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் பொது மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்'' என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, மராட்டியத்தில் பன்றி காய்ச்சல் நிலைமை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக உயர்மட்ட அவசர கூட்டத்தை அந்த மாநில அரசு நேற்று கூட்டியது. முதல்-மந்திரி அசோக் சவாண் தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அப்படி செல்வதாக இருந்தால் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்' என்றும் மராட்டிய மாநில மக்களை அசோக் சவாண் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த மாநிலத்தில் மட்டும் 3 பேர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.

எனவே, டெல்லியில் உள்ள தேசிய தொற்று நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து மேலும் ஒரு மருத்துவ குழுவை மராட்டிய மாநிலத்துக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அந்த குழுவினர், புனே நகருக்கு சென்றனர்.

நன்றி: மாலை மலர்

அமரன்
11-08-2009, 08:13 AM
பன்றிக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த ஊடகங்கள் முன்வரவேண்டும். விரைந்து நடவடிக்கை எடுத்தால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரலாம். அரசு நிச்சயம் செய்யும்.

ஓவியன்
11-08-2009, 08:33 AM
இங்கே ஓமானிலும் அபாயச் சங்கு ஊதியுள்ளனர், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளனர்...

கா.ரமேஷ்
11-08-2009, 09:29 AM
இந்தியாவில் அறிகுறி தென்பட்டால் உடனே அணுக வேண்டிய மருத்துவமனைகள் :

Chennai

King Institute of Preventive Medicine (24/7 Service)
Guindy, Chennai – 32
(044) 22501520, 22501521 & 22501522

Communicable Diseases Hospital
Thondiarpet, Chennai
(044) 25912686/87/88, 9444459543

Government General Hospital
Opp. Central Railway Station, Chennai – 03
(044) 25305000, 25305723, 25305721, 25330300

Pune

Naidu Hospital
Nr Le'Meridian, Raja Bahadur Mill, GPO, Pune – 01
(020) 26058243

National Institute of Virology
20A Ambedkar Road, Pune – 11
(020) 26006290

Kolkata

ID Hospital
57,Beliaghata, Beliaghata Road, Kolkata - 10‎
(033) 23701252

Coimbatore

Government General Hospital
Near Railway Station,
Trichy Road, Coimbatore – 18
(0422) 2301393, 2301394, 2301395, 2301396

Hyderabad

Govt. General and Chest Diseases Hospital,
Erragadda, Hyderabad
(040) 23814939

Mumbai

Kasturba Gandhi Hospital
Arthur Road, N M Joshi Marg, Jacob Circle, Mumbai - 11
(022) 23083901, 23092458, 23004512

Sir J J Hospital
J J Marg, Byculla, Mumbai - 08
(022) 23735555, 23739031, 23760943, 23768400 / 23731144 / 5555 / 23701393 / 1366

Haffkine Institute
Acharya Donde Marg, Parel, Mumbai – 12
(022) 24160947, 24160961, 24160962

Kochi

Government Medical College
Gandhi Nagar P O, Kottayam - 08
(0481) 2597311,2597312

Government Medical College
Vandanam P O, Allapuzha - 05
(0477) 2282015

Taluk Hospital
Railway Station Road, Alwaye, Ernakulam
(0484) 2624040 Sathyajit - 09847840051

Taluk Hospital
Perumbavoor PO, Ernakulam 542
(0484) 2523138 Vipin - 09447305200

Gurgaon &
Delhi

All India Institute of Medical Sciences (AIIMS)
Ansari Nagar, Aurobindo Marg Ring Road, New Delhi – 29
(011) 26594404, 26861698 Prof. R C Deka - 9868397464

National Institute for Communicable Diseases
22, Sham Nath Marg,
New Delhi – 54
(011) 23971272/060/344/524/449/326

Dr. Ram Manohar Lohia Hospital

Kharak Singh Marg,
New Delhi – 01
(011) 23741640, 23741649, 23741639
Dr. N K Chaturvedi – 9811101704

Vallabhai Patel Chest Institute
University Enclave, New Delhi- 07
(011) 27667102, 27667441, 27667667, 27666182

Bangalore

Victoria Hospital
K R Market, Kalasipalayam, Bangalore – 02
(080) 26703294 Dr. Gangadhar - 94480-49863

SDS Tuberculosis & Rajiv Gandhi Institute of Chest Diseases
Hosur Road, Hombegowda Nagar, Bangalore – 29
(080) 26631923 Dr. Shivaraj - 99801-48780

கா.ரமேஷ்
11-08-2009, 09:33 AM
அறிகுறிகள் :

http://www.tamilmantram.com/photogal/images/5428/1_ATT3688728.gif

நேசம்
11-08-2009, 10:07 AM
பகிர்தலுக்கு நன்றி ரமேஷ் இறை நேசன்

கா.ரமேஷ்
11-08-2009, 11:49 AM
பன்றி காய்ச்சல் குறித்து விபரம் அறிய ஹெல்ஃப்லைன் நம்பர் அறிவிப்பு

சென்னை : கடும் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் பன்றி காய்ச்சல் நோய் குறித்து தகவல்கள் அறிய, 044 - 2432 1569 என்ற ( சென்னை நம்பர் ) டெலிபோன் நம்பருக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நன்றி:தினமலர்

இறைநேசன்
11-08-2009, 12:10 PM
பலி எண்ணிக்கை 10ஆனது...

இன்று இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த சயதா தோஷிவாலா என்ற 63 வயதுப் பெண்மணி பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தார்.

இதேபோல குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள எஸ்.எஸ்.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆர்யா முரளி (13) என்ற சிறுமி இன்று உயிரிழந்தார். குஜராத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இறக்கும் 2வது நபர் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே புனேவில்தான் அதிக அளவில் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் இதுவரை 5 பேர் இறந்துள்ளனர். மும்பை மற்றும் தானேவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்தமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்து அகமதாபாத், வதோதரா, சென்னை ஆகிய நகரங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை புனேவைச் சேர்ந்த 13 வயது மாணவி ஸ்ருதி கவதே மற்றும் 35 வயதாகும் பார்மசிஸ்ட் சஞ்சய் திலேகர் ஆகியோர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 7ம் தேதி முதல் சிறுமி ஸ்வாதி செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே, நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்துள்ளது.

வேளச்சேரியில் பீதி...

சிறுவன் சஞ்சய் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தான். சஞ்சய் பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு இறந்ததைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் வசிப்போர் அனைவரும் மாஸ்க் அணிந்து நடமாடி வருகின்றனர்.

சஞ்சய் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ள பகுதியில் ஆள் நடமாட்டம் அடியோடு குறைந்து போய் விட்டது.

சஞ்சய் வசித்து வந்த வீட்டுக்கு அருகே வசித்து வரும் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேறு பகுதிகளில் உள்ள தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனராம்.பல வீடுகளில் வேலைக்காரப் பெண்கள் கூட வர மறுத்து விட்டனராம்.

வேளச்சேரி மக்கள் இன்னும் சஞ்சய் மரணம் மற்றும் பன்றிக் காய்ச்சல் பீதியிலிருந்து விலகவில்லை. ஒரு விதமான பதட்டமும், இறுக்கமான சூழ்நிலையும் அங்கு காணப்படுகிறது.

- NEWS

இறைநேசன்
11-08-2009, 12:17 PM
பன்றிக் காய்ச்சல் அடுத்த சுற்று தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. இம்முறை உலக நாடுகளைச் சேர்ந்த பல லட்சம் பேரை அது பாதிக்கும் என்று அமெரிக்க சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உலக நாடுகளை பன்றிக் காய்ச்சலை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்தியாவில் தற்போது பன்றிக் காய்ச்சல் படு வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் வரும் நாட்களில் பன்றிக் காய்ச்சல் உலக நாடுகளில் பல லட்சம் பேரை பாதிக்கும், கடும் விளைவுகளை அது ஏற்படுத்தும் என அமெரிக்க சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து வென்டர்பில்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் வில்லியம் ஷாப்னர் கூறுகையில், பன்றிக் காய்ச்சல் வைரஸ் இன்னும் அழியவில்லை. அது உலக நாடுகளை வரும் நாட்களில் மிக
மோசமாக பாதிக்கும் அபாயம் உள்ளது

News: thatstamil.oneindia.in

மன்மதன்
11-08-2009, 12:52 PM
இன்று மதியம் 3 மணிக்கு நான் வேலை பார்க்கும் ஏரியா காலியாகிவிட்டது. காரணம் இங்கு பணிபுரியும் ஒருவரின் மகனுக்கு ஸ்வைன் ஃப்ளூ வந்து விட்டதாக போன் வர, ஏற்கனவெ நேற்றிலிருந்து மாஸ்க் அணிந்தும் / கர்ச்சீப்பினால் முகத்தை மறைத்தும் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஜூட்..

ஓவியன்
11-08-2009, 03:13 PM
இங்கிலாந்தில் ஸ்வைன் ஃப்ளூ பற்றி வெளியிடப்பட்டிருக்கும் கையேட்டினைப் பெற இங்கே (http://www.mediafire.com/?sharekey=cb19b243a673927c5bf1f12f1ff3f30ae04e75f6e8ebb871)சொடுக்குங்கள்...

மஞ்சுபாஷிணி
12-08-2009, 05:16 AM
பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி....

பயமா தான் இருக்கு :(

தாமரை
12-08-2009, 05:29 AM
பெங்களூர் மருத்துவமனைகள்

Mallya 080 22277979

Manipal 080 25023512

St.Martha's 080 22275081

Malliage Medical Centre 080 22203333

St.John's 080 22065000

Ambedkar Hospital 080 25476496

Vydehi Hospital 080 28413385

M.S.Ramaiah 080 23608888

City Hospital, Rajajinagar 080 23131777

Pristine Hospital 080 41354444

Mahabhodi Malligae Hospital 080 26565678

Victoria Hospital, Kalasipalayam, KR Market, Phone : 26703294

Lakeside Hospital, Meanee Avenue, Near Ulsoor lake, Phone 25366725


Rajiv Gandhi Institute of Chest Diseases, Near Kidwai Cancer Hospital. Phone : 26632634



மேலதிக தகவல்களுக்கு

http://www.cdc.gov/h1n1flu/qa.htm
http://blogs.siliconindia.com/17vikas10pareek1978

வசீகரன்
12-08-2009, 05:33 AM
தகவல்களுக்கு நன்றி இறை நேசன், ரமேஷ், ஓவியன் இதுவரை இந்தியாவில் 13பேர் உயிரை குடித்துவிட்டது இந்த வைரஸ்..... சென்னையில் இரண்டு பேர் பலியாகிவிட்டார்கள்... இது இப்படியே தொடர்கதையாகி பல உயிர்களை காவு வாங்குவதற்குள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்தே ஆகவேண்டும்...... இதற்கு அரசும் பொதுமக்களும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும்.....

இறைநேசன்
12-08-2009, 06:07 AM
இது இப்படியே தொடர்கதையாகி பல உயிர்களை காவு வாங்குவதற்குள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்தே ஆகவேண்டும்...... இதற்கு அரசும் பொதுமக்களும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும்.....
இந்நோய் கிருமியால் பாதிக்கப் பட்ட ஒருவர், நோய் தன்னை தாக்கியுள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொருவரையும் infect செய்து விடுகிறார்.

முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் சமீபம் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.

நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேஜை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், காயின்கள், பழம்-கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல் நோய் வருவதை
ஓரளவுக்கு தடுக்கும்.

நோய் தாக்கியிருந்தால் அல்லது சந்தேகம் இருந்தால் ?

*உடனடியாக உங்கள் மருத்துவரைப் பாருங்கள்.
*நோயிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய மூன்று நாட்களுக்கும் *இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
*முதல் நான்கைந்து நாட்களுக்குள் respiratory specimen (சளி)
பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
*ஃப்ளு தடுப்பூசிகளை சரியான இடைவெளிகளில், உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிபோட்டுக் கொள்ளவும் (தற்போது ஏற்பட்டுள்ள pandemic flu-வுக்கு தடுப்பூசி ஏதும் இல்லை என்றாலும் கூட, இவை ஓரளவுக்கு நம்மை பாதுகாத்துக்கொள்ள
உதவலாம்).
*வெந்நீர் மற்றும் சோப்பு உபயோகித்து அடிக்கடி கை கழுவி கொள்ளவும்.
*தும்மும் போதும், இருமும் போதும் வாயை மூடிக் கொள்ளவும்.
உடனே கையை அலம்பிகொள்ளவும்.
* நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சமீபத்தில் இருப்பதை முடிந்தவரை
தவிர்க்கவும்.
* உங்களை நோய் தாக்கி இருந்தால், வீட்டிலேயே இருக்கவும். இதனால்
மற்றவர்களுக்குநோய் பரவுவதை தவிர்க்கலாம்.
* மாஸ்க் அணித்து பயணிக்கவும்.
* மருத்துவர் பரிந்துரைத்தவாறே மருந்துகளை முழுமையாக
எடுத்துக்கொள்ளவும்.
* இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பன்றிக்
காய்ச்சலுக்கு பரிசோதனைகள் செய்ய அனுமதி இருப்பதால்,தகுந்த
பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டிய நேரம்
ஒதுக்கிகொள்ளவும்.
நோய் தாக்கி இருப்பதற்கான அறிகுறிகள்

தொடர்ந்த தலை வலி
குளிருதல், நடுங்குதல்
இருமல் / சளி / மூக்கில் நீர்வடிதல் /தொண்டையில் வலி / தும்மல்
பசியின்மை / சாப்பாடு மீது வெறுப்பு
தலை சுற்றல் / மயக்கம்
பசியின்மை
உடல் வலி / வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் வலி
இடைவிடாத காய்ச்சல்
வயிற்று போக்கு
வாந்தி எடுத்தல்

THANKS - TAMILFRIENDS

இறைநேசன்
12-08-2009, 07:51 AM
பன்றி காய்ச்சல் தொடர்பாக சில தகவல்ள்:


1.இதிலிருந்து தப்ப தடுப்பூசி உள்ளதா?

தடுப்பூசி இல்லை.

2.யாருக்கு தடுப்பு முறைகள் அவசியம்?

அ.தற்போது நோய் கண்டவரின் குடும்பத்தினர்

ஆ.நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர், செவிலியர்,பணியாளர்.

3.எப்போது நோய் பரவும்?

நோய் வருவதற்கு ஒரு நாள் முன்பிலிருந்து பாதித்த 7 நாட்கள்வரை பரவும்.

4.தடுப்பு மருந்து உள்ளதா?

நோயாளிகளுக்கு உபயோகிக்கும் டாமிஃப்ளூ TAMIFLU(oseltamivir) மருந்தே இதற்கும் உபயோகிக்கப்படுகிறது.

5.டாமிஃப்ளூ எவ்வாறு செயல்படுகிறது?

இது வைரஸின் பெருக்கத்தைத் தடுத்துவிடுகிறது. அதனால் வைரஸ் இனப்பெருக்கம் செய்யமுடியாது. உடலின் பல செல்களையும் பாதிக்க முடியாது.

6.டாமிஃப்ளூ எப்போது நன்கு செயல்படும்?

வைரஸ் உடலுக்குள் நுழைந்த 48 மணிநேரத்திற்குள் நன்கு செயல்படும். அதன் பின் உபயோகித்தால் வைரஸ் பல்கிப்பெருகி உடலின் பல செல்களைத்தாக்கி இருக்கும்.

7.மருந்தின் அளவு மற்றும் காலம் எவ்வளவு?

டாமிஃப்ளூ 75மிகி பத்து நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு உடல் எடையைப் பொறுத்து குறையும். 1 வயதுக்குக் கீழ் சாதாரணமாகக் கொடுப்பதில்லை. ஆயினும் நோயின் வீரியம் அதிகமானால் கொடுக்கப்படுகிறது.

8.டாமிஃப்ளூவின் பக்கவிளைவுகள் என்ன?

குமட்டல்,வாந்தி, பேதி,வயிற்றுவலி,தலைவலி, ஒவ்வாமை, மேலும் வைரஸ் தடுப்பு மருந்துகளுக்குள்ள அனைத்தும்.

இளைஞர்கள் மனநிலையில் விபரீதமான மாற்றங்களை விளைவிக்கலாம்.

9.இதுவரை டாமிஃப்ளூ எத்தனை பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது?

1999 லிருந்து 50 மில்லியன் மக்கள் உபயோகித்துள்ளனர்.

10.இந்தியாவில் மருந்து எங்கு கிடைக்கிறது?

அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது. டாமிஃப்ளூ குறைந்த அளவே உள்ளது. 2 கோடி டாமி ஃப்ளூ மாத்திரைகளை கையிருப்பில் வைக்க அரசு முடிவு செய்துள்ளது.

நன்றி - திரட்டி

நேசம்
12-08-2009, 08:06 AM
இந்நோய் வந்தால் காப்பற்ற முடியுமா... இல்லை இதுக்கு மருந்து இல்லையா... இந்நோய் இப்பொழுது தான் முதல் தாவை வருகிறதா - தெரிந்தவர்கள் கூறுங்கள்

இறைநேசன்
12-08-2009, 08:20 AM
இந்நோய் வந்தால் காப்பற்ற முடியுமா... இல்லை இதுக்கு மருந்து இல்லையா... இந்நோய் இப்பொழுது தான் முதல் தாவை வருகிறதா - தெரிந்தவர்கள் கூறுங்கள்

வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தால் நோய் குணமாகும். முதலிலேயே கண்டு பிடித்து சிகிச்சை அளித்துவிட்டால் உயிரிழப்பு ஏற்படாது. வேறு நோய் என்று கருதி அலட்சியப்படுத்தினாலும் நோயை முற்றவிட்டாலும் ஆபத்து ஏற்படும்.

பன்றி காய்ச்சல் முதன் முதலில் 1918-ம் ஆண்டு ஸ்பெயினில் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் பலியானார்ள்.

1968-ம் ஆண்டு ஹாங்காங்ஙகில் பரவி உலகம் முழுவதும் தொற்றியது. இதில் 10 லட்சம் பேர் பலியானார்கள்.

1976-ல் அமெரிக்க படைவீரர்களை நோய் தாக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்சில் பரவியது.

நன்றி - PIRABUVIN

மேலும் விபரம் தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்

இறைநேசன்
14-08-2009, 06:22 AM
பன்றிக் காய்ச்சல் பலி கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. புனேவில் மட்டும் இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 23 பேரின் உயிரைக் குடித்துள்ளது பன்றிக் காய்ச்சல்.

இந்தியாவி்ல் பன்றிக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,300யை எட்டியுள்ளது. இவர்களில் 600 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். 600க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன.

நேற்று இரவு 70 வயது பருபாய் ஷிண்டே என்ற பெண் உயிரிழந்தார். நான்கு நாள் சிகிச்சைக்குப் பின்னர் அவர் இறந்தார்.

அதேபோல 40 வயதாகும் பிரபாகர் வாரிகர் என்பவரும் சசூன் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்தார்.

இதுவரை புனேவில் 15 பேர் உள்பட நாடு முழுவதும் 23 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.

சென்னை தண்டையார்ப்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் இதுவரை 27 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 17 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 57 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-thatstamil

ஓவியா
19-08-2009, 05:19 PM
பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க வழி இல்லை என்று தெரியும்,

இருப்பினும் ஏதேனும் வழியிருந்தால் யாராவது சொல்லுங்களேன்..

நன்றி.

ஓவியன்
19-08-2009, 06:40 PM
பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க வழி இல்லை என்று தெரியும்,

இருப்பினும் ஏதேனும் வழியிருந்தால் யாராவது சொல்லுங்களேன்..

நன்றி.

இந்த கையேடு உங்களுக்கு உதவக்கூடுமே......



இங்கிலாந்தில் ஸ்வைன் ஃப்ளூ பற்றி வெளியிடப்பட்டிருக்கும் கையேட்டினைப் பெற இங்கே (http://www.mediafire.com/?sharekey=cb19b243a673927c5bf1f12f1ff3f30ae04e75f6e8ebb871)சொடுக்குங்கள்...

அறிஞர்
19-08-2009, 07:01 PM
இது மாதிரி உள்ள காய்ச்சல்களால் வருடாவருடம் பலர் இறக்கிறார்கள்.

ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால் உடனே கட்டுபடுத்திவிடலாம்.

நான் இருக்கும் ஊரில் இருவருக்கு வந்து சரியாகிவிட்டது.

இந்த வருடத்தில் 1,80,000 பேரை இது தாக்கியுள்ளதாக கூறியுள்ளனர். ( http://www.voanews.com/english/2009-08-18-voa31.cfm )

இதற்கான H1N1 தடுபூசிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. (http://www.cnn.com/2009/HEALTH/07/22/swine.flu.vaccine.trials/)

Ranjitham
19-08-2009, 10:53 PM
சந்தித்த நன்பர்களுடன் அளாவிளாவி கொண்டிருந்தபொழுது “பன்றி காச்சல் , ஆந்தரக்*ஷ் “ போன்ற வைரஷ் கிருமிகள் உருவாக அமெரிக்கா தான் காரனம் என்பதாக சொன்னார்கள். நன்பர் அறிஞர் கொடுத்த சுட்டியை தட்டி பார்த்த பொழுது கூட அமெரிக்க கம்பெனி பன்றி காச்சல் தடுப்பூசியை மனித உடளில் சோதனை செய்ய ‘வாலிண்டியர்சை’ தேடுவதாக இருந்த்து அதுவும் அக்டோபரில் தான் தயாரகுமாம். நமது “ துலசி நடுதர 25 முதல் 30 இலைகலை அப்படியோ அல்லது சாருபிழிந்து பாவித்துவந்தால் பன்றி காச்சல் வருவதை தடுப்பதுடன் குனமடையசெய்வதாக போனவாரம் யகூ செய்தியில் படித்தேன்.
நன்றியுடன்
இரன்சிதம்.

ஓவியா
20-08-2009, 01:47 AM
இந்த கையேடு உங்களுக்கு உதவக்கூடுமே......

நன்றி ஓவியன், இருப்பினும் இந்த சுட்டியை நான் முன்பே படித்துவிட்டேன். :)

ஓவியன்
20-08-2009, 03:51 AM
நன்றி ஓவியன், இருப்பினும் இந்த சுட்டியை நான் முன்பே படித்துவிட்டேன். :)

இதனைவிட வேறு வழிகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை, எதற்கும் நம்ம இளசு அண்ணா இந்த திரிக்கு வந்து சென்றால் நலமென நினைக்கின்றேன்...:)

Mano.G.
20-08-2009, 06:25 AM
இன்று வரை மலேசியாவில் பன்றி காய்ச்சலால் இறந்தோரின் எண்ணிக்கை 67.
இந்நோய் கண்டவர்களில் இன்னமும் 236 பேர் தீவிர சிகிச்சை (ICU) வார்டுகளில் சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றனர், 1300 பேர்கள் சந்தேகத்தின் பேரில் தனிமை படுத்த பட்டுள்ளனர்.

முக கவசம் (mask) இன்றுமுதல் விலை கட்டுபடுத்த பொருளாக சந்தையில் விற்க படுகிறது. ( நேற்றைய விலை மலேசிய ரிங். 5.00) இன்று முதல் அதிகபட்ச வில்லை ரிங்.1.00.

நோய் கண்டிருப்போர் கண்டிப்பாக தனிமை படுத்த படவேண்டும் , அதை மீறுவோருக்கு சிறை தண்டனையும் , அபராதமும் விதிக்க படும்.
எனபது மலேசிய அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்பு.


மனோ.ஜி

பாரதி
17-09-2009, 03:22 PM
இதைக்குறித்த தமிழக அரசின் தகவல் தளம்

http://www.swineflutninfo.in/