PDA

View Full Version : தமிழ மன்றத்தில் முதல் கவிதை - கடவுள் எங்கே



வெற்றி வாசன்
10-08-2009, 06:53 PM
கால் கடுக்க கோவில் சென்றேன்
நாள் முழுக்க தவம் கிடந்தேன்
வாரம் முழுக்க விரதம் இருந்தேன்
காணவில்லை திரும்பி வந்தேன்

ஏழை சிரிப்பில் கவலை உண்டு
உதுவும் கரத்தில் நன்றி உண்டு
தலைவன் உதவி நோக்கம் உண்டு
கண்டேன் கடவுள் இல்லை என்று

எங்கு ஒளிந்து விளையாடுகின்ராய்
குழந்தையின் சிரிப்பில் கண் முன் வந்தாய்.

இளசு
10-08-2009, 07:26 PM
தளிர்கள் ஒவ்வொன்றும் இறை, நாளை நம்பிக்கைகளின் விதைகள்..

கண்ட இடம் சரியே...

கவிதைக்கு வாழ்த்தும் பாராட்டும் வாசன் அவர்களே!

வெற்றி வாசன்
10-08-2009, 07:33 PM
பாராட்டிற்கு நன்றி இளசு அவர்களே.

samuthraselvam
11-08-2009, 04:10 AM
முதல் கவிதை.... கடவுளின் தேடல்......
குழந்தையின் சிரிப்பில் கடவுளை கண்ட விதம் அருமை... வாழ்த்துக்கள் வாசன்..!

கா.ரமேஷ்
11-08-2009, 04:23 AM
முதல் கவிதையிலேயே குழந்தையை கடவுளாய் கண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்..

நேசம்
11-08-2009, 04:31 AM
முதல் கவிதை கடவுளின் தேடலாக அமைந்து விட்டது உங்களுக்கு.வாழ்த்துகள்

அக்னி
11-08-2009, 06:03 AM
மழலை தவிர மற்றவரெல்லாம்,
கவலை கொண்டவரே...

கவலை கடவுளைத் தேடலாம்.
கவலையிடம் கடவுளை எப்படித் தேடுவது?

தேவைகளும் கவலைகளும்தான்,
கடவுளைத் தேடவைக்கின்றன...
தேவைகளும் கவலைகளும்
இல்லாதவர்கள் கடவுளைப் பிரதிபலிப்பார்கள்...

நீங்கள் கடவுளைக் கண்டறிந்த விதம், சொன்னது அருமை...

பாராட்டுக்கள்...

அமரன்
11-08-2009, 08:03 AM
கடவுளைக் காண்பது
நடக்காதது...
கடவுளை உணரமட்டுமே
முடியும்..

சிரிப்பு... அழுகை.. கோபம்.. தாபம்..
இப்படி எல்லாத்திலும் உணரலாம் கடவுளை..

முதலுக்கும் முடிவுக்கும் பாராட்டுகள் வெற்றிவாசன்

ஆதி
11-08-2009, 08:14 AM
தேடுங்கள் கண்டடைவீர்கள்..

தெய்வத்தில் இருந்து
தெய்வங்கள் பிறக்குமென்றால்
நீங்கள் தேடி கண்டடைந்தது சரியே..

தெய்வம் - குழந்தை

பிறக்கும் தெய்வங்கள் - புன்னகை

மன்றில் தங்களின் முதல் கவிதையே முதல்வனை தேடும் கவிதையாக அமைந்திருக்கிறது.. கடவுள் வாழ்த்தோடு தொடங்கிவிட்டீர்கள்.. இனி எல்லாம் சுகமே.. தொடருங்கள் உங்கள் பயணத்தை..

வாழ்த்துக்கள் வாசன்..

ஆர்.ஈஸ்வரன்
11-08-2009, 11:42 AM
வாழ்த்துக்கள்..

வெற்றி வாசன்
11-08-2009, 02:41 PM
அணைத்து தமிழ்மன்ற உறுபினர்களின் பாராட்டிற்கும் நன்றி.
அமரன் அவர்களின் வெற்றி வாசன் பெயர் மிகவும் நன்றாக உள்ளது.

அக்னி மற்றும் ஆதி கருதும் மிக நன்று. முக்கியமாக கடுவுளின் இடம் இருந்து தன கடவுள் பிறக்கிறது எனற கருத்து

ஓவியன்
11-08-2009, 03:05 PM
மழலையிடம் கடவுளைக் கண்டு,
நாமும்
மழலையாகி கடவுளை நம்மிலேயே காண்போம்..!!

அழகான முதற்கவிதைக்கு மனதார்ந்த வாழ்த்துகள் அன்பரே..!!

வெற்றி வாசன்
11-08-2009, 03:12 PM
வாழ்த்துகலுக்கு மிக்க நன்றி ஓவியன் அவர்கலே.
இங்கு உள்ளவர்களின் பதிப்புடன் பெயர் மிக அழாகாக உள்ளது.

அமரன், ஓவியன், நேஸம் பூன்ற பெயர்கள் சில உதாரணம்.

செல்வா
11-08-2009, 03:14 PM
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர் அண்ணா...

இங்கே குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறார் வாசன்.

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே ...
கண்ணதாசன் கண்ட கடவுளின்....

புதுக்கவிதை வடிவம்..

முயற்சிக்கு வாழ்த்துக்கள்... வாசன்.

இன்னும் பல படைக்க இனிய வாழ்த்துக்கள்.

சசிதரன்
11-08-2009, 04:06 PM
முதல் கவிதையில் கடவுளை தேடி குழந்தையிடம் கண்ட வாசனுக்கு வாழ்த்துக்கள்...:)

வெற்றி வாசன்
11-08-2009, 06:14 PM
நன்றி செல்வா மற்றும் சசி அவர்களே.
ஆம் தமிழ மன்றத்தில் முதல் தேடல் கடுவுள், அது வெற்றியில் முடிந்ததாலால் தேடல் இனி தொடரும்.....