PDA

View Full Version : விண்டோஸ் எக்ஸ்பி/விஸ்டா டிப்ஸ்.... டிப்ஸ்...



நூர்
10-08-2009, 10:39 AM
விண்டோஸ் எக்ஸ்பி/விஸ்டா டிப்ஸ்.... டிப்ஸ்....
------------------------------------------------
ஆகஸ்ட் 10,2009

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பல சின்னஞ்சிறு வசதிகளை நாம் பயன்படுத்துவது இல்லை. அவற்றைக் கையாளும் விதம் குறித்து இங்கு பல குறிப்புகளும் டிப்ஸ்களும் தரப்படுகின்றன.

விஸ்டா மற்றும் எக்ஸ்பிக்கான குறிப்புகள் இணைந்து இங்கே காட்டப்படுகின்றன. ஏதாவது ஒரு சிஸ்டத்திற்கு மட்டும் எனில் அது அடைப்புக்குறிக்குள் சுட்டிக் காட்டப்படுகிறது.

1. குயிக் லாஞ்ச் (எக்ஸ்பி – விஸ்டா)


ஸ்டார்ட் பட்டனின் வலது புறம் இருப்பது குயிக் லாஞ்ச் பார். அடிக்கடி பயன்படுத்தப்படும் புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் ஐகான்கள் இங்கு வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இது உங்கள் கம்ப்யூட்டரில் தெரியவில்லை என்றால் கீழ்க்கண்டவாறு செயல்படவும்.

டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் டூல்பார்ஸ் என்ற இடத்தில் லெப்ட் கிளிக் செய்திடவும். இதில் பாப் அப் ஆகும் பிரிவுகளில் குயிக் லாஞ்ச் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் வெள்ளைக் கலர் பேடில் பென்சில் வைத்தது போல ஒரு ஐகான் தென்படும்.

இது டெஸ்க் டாப் பெறுவதற்கான ஐகான். பல புரோகிராம்களைத் திறந்து செயல்படுகையில் டெஸ்க்டாப் வேண்டுமென்றால் புரோகிராம்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக மூட வேண்டியதில்லை. இந்த ஐகானில் கிளிக் செய்தால் டெஸ்க் டாப் கிடைக்கும். மீண்டும் அழுத்த புரோகிராம்கள் கிடைக்கும். விஸ்டா சிஸ்டத்தில் இது புளு கலரில் இருக்கும்.


2. ஸ்டார்ட் மெனு (எக்ஸ்பி)


உங்கள் கம்ப்யூட்டரில் நிறைய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திருந்தால் ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் ஆல் புரோகிராம்ஸ் பட்டியல் மிகப் பெரியதாக இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் இருக்காது. இதனைப் பல வகைகளாகப் பிரித்து அடுக்கும் வசதியினை எக்ஸ்பி சிஸ்டம் தருகிறது. இதனைப் பயன்படுத்த ஸ்டார்ட் பட்டனில் லெப்ட் கிளிக் செய்து பின் ஆல் புரோகிராம்ஸ் மீது ரைட் கிளிக் செய்து மெனுவினைப் பெறவும்.


இதில் Open அல்லது Open All Users என்பதைத் திறக்கவும். இங்கு போல்டர்களில் இந்த புரோகிராம்கள் காட்டப்படும். இவற்றைப் புதிய துணை போல்டர்களை உருவாக்கி புரோகிராம்களை வகைப்படுத்தி வைக்கலாம். இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் Edit மெனு சென்று அதில் Undo என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

3. டபுள் கிளிக் (எக்ஸ்பி)


ஒரு போல்டரில் டபுள் கிளிக் செய்கையில் என்ன ஏற்பட வேண்டும் என்பதனை ஆல்ட் அழுத்தி மாற்றலாம். ஆல்ட் கீ அழுத்தியவாறே புரோகிராம் மீது அழுத்தினால் அந்த புரோகிராம் சார்ந்த ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும்.

இந்த விண்டோவில் அந்த போல்டருக்கான ஐகானை மாற்றலாம்; வியூவினை மாற்றலாம். கண்ட்ரோல் அல்லது ஷிப்ட் கீயுடன் அழுத்துகையில் போல்டர் ஒரு புது விண்டோவில் திறக்கப்படும். ஷிப்ட் கீயுடன் அழுத்துகையில் போல்டர் வியூ எக்ஸ்ப்ளோரர் பாரில் இடது பக்கம் கிடைக்கும்.


4. குயிக் டாகுமென்ட்ஸ் (எக்ஸ்பி):


விண்டோஸ் விஸ்டாவில் ஸ்டார்ட் மெனுவில் டாகுமென்ட்ஸ் என்ற பட்டன் இருப்பதைப் பார்க்கலாம். எக்ஸ்பியில் இது இல்லை. ஆனால் மிக எளிதாக இது போன்ற ஒரு பட்டனை எக்ஸ்பி சிஸ்டத்திலும் சேர்க்கலாம். டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும்.

கிடைக்கும் விண்டோவில் ஸ்டார்ட் டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர் Customize என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள Advanced டேப்பில் என்டர் அழுத்தி ஸ்டார்ட் மெனு காட்டும் பிரிவுகளில் My Documents என்று இருப்பதனைக் கண்டறியவும்.

இதில் வரிசையாக உள்ளவற்றில் ஸ்குரோல் பார் மூலம் கீழே சென்றால் Display as Menu என்று ஒரு வரி இருப்பதனைக் காணலாம்.

இதில் கர்சரால் கிளிக் செய்து அங்குள்ள கட்டத்தில் மார்க் ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி மை டாகுமென்ட்ஸ் பட்டன் கிடைக்கும்.

5. வேகமாக ஷட் டவுண் செய்திட (எக்ஸ்பி):


கம்ப்யூட்டரில் வேலையை முடித்துவிட்டு வேகமாகச் செல்ல முயற்சிப்போம். ஆனால் கம்ப்யூட்டர் தான் ஷட் டவுண் ஆக நேரம் எடுத்துக் கொண்டு நம் பொறுமையைச் சோதிக்கும். இதனைச் சற்று வேகமாக ஷட் டவுண் செய்திட ஒரு வழி உண்டு.

இதற்கு மவுஸ் பயன்படுத்தாமல் கீ போர்டினைப் பயன்படுத்தலாம். ஸ்டார்ட் பட்டனை ஒரு முறை அழுத்தவும். ஸ்டார்ட் மெனு கிடைக்கும். உடனே ‘U’ கீயை அழுத்தவும். இப்போது ஷட் டவுண் மெனு திரையில் காட்டப்படும்.

இப்போது மீண்டும் ‘U’ கீயை அழுத்தினால் கம்ப்யூட்டர் உடனே ஷட் டவுண் ஆகும்; ‘S’ கீயை அழுத்தினால் ரீஸ்டார்ட் ஆகும்; ‘H’ கீயை அழுத்தினால் ஸ்டேண்ட் பை நிலைக்குச் செல்லும்; ‘ஏ’ கீயைஅழுத்தினால் ஹைபர்னேட் என்னும் நிலைக்குச் செல்லும்.

இறுதியாகத் தரப்பட்டுள்ள ஹைபர்னேட் நிலைக்குச் செல்ல அதற்கென ஏற்கனவே கம்ப்யூட்டரை செட் செய்திருக்க வேண்டும்.

6. ஆட்டோமேடிக் ஸ்குரோலிங் :


மிகப் பெரிய நீளமான டாகுமெண்ட்டைப் படிக்கையில் தானாகவே இந்த டாகுமெண்ட்டை ஸ்குரோல் செய்திடலாம். மவுஸ் கொண்டோ, என்டர் கீ தட்டியோ, ஸ்குரோல் பாரில் மவுஸ் கொண்டு அழுத்தியோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மவுஸை டாகுமென்ட் உள்ளே சென்று வீலைக் கிளிக் செய்திடவும். மவுஸின் கர்சர் நடுவில் புள்ளியும் அதனைச் சுற்றி இரண்டு அல்லது நான்கு அம்புக் குறிகள் கொண்ட கர்சராக மாறும். இரண்டு அம்புக் குறிகள் என்றால் டாகுமெண்ட் தானாக மேலும் கீழும் செல்லும். நான்கு அம்புக் குறிகள் என்றால் நான்கு பக்கங்களிலும் செல்லும்.

இப்போது மவுஸை அசைத்தால் அந்த அடையாளம் நகரத் தொடங்கும். அந்நிலையில் எங்கு கிளிக் செய்தோமோ அங்கு இதே போன்ற டூப்ளிகேட் கர்சர் ஒன்று இருக்கும்.

இப்போது டாகுமெண்ட் பக்கம் தானாக நீங்கள் அசைத்த திசையில் நகரத் தொடங்கும். மவுஸை அசைத்து அது ஸ்குரோல் ஆகும் வேகத்தினைக் கட்டுப்படுத்தலாம்.


7. போல்டருக்கு ஷார்ட் கட்:


கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருமே புரோகிராம்களுக்கு ஷார்ட் கட்கள் அமைத்துப் பயன்படுத்துகிறோம். ஒரு சிலரே போல்டருக்கும் ஷார்ட் கட் அமைக்கலாம் என்பதனைத் தெரிந்து அவற்றிற்கும் ஷார்ட் கட்கள் அமைத்துப் பயன்படுத்தி வருகின்றனர்.

எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டெஸ்க்டாப் பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து நியூ என்பதில் கிளிக் செய்து கிடைக் கும் மெனுவில் ஷார்ட் கட் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது தோன்றும் சிறிய பாக்ஸில் போல்டர் உள்ள இடத்தின் பாத் அமைக்கவும்.

அடுத்து நெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்து இதற்கு ஒரு பெயர் கொடுக்கவும். அதன்பின் பினிஷ் என்ற இடத்தில் கிளிக் செய்தால் ஷார்ட் கட் உருவாக்கப்பட்டு டெஸ்க்டாப்பில் இடம் பெறும். இதில் கிளிக் செய்தால் நேராக போல்டருக்குச் செல்லலாம்.


8. எக்ஸ்பிக்கு சைட் பார்:


விண்டோஸ் விஸ்டாவில் இருப்பதைப் போல சைட்பார் ஒன்றினை எக்ஸ்பி திரையில் அமைக்க விரும்பினால் அதற்கு வழி உள்ளது. இதற்கு கூகுள் டூல் பார் ஒன்றை டவுண்லோட் செய்திட வேண்டும்.

http://pack.google.com என்ற முகவரியில் உள்ள தளம் சென்று அதனை டவுண்லோட் செய்திடவும். இந்த பைலை டவுண்லோட் செய்தவுடன் கூகுள் டெஸ்க் டாப் டாஸ்க்பாரில் தானாகவே காட்டப்படும்.

இதனை சைட் பாராகப் பயன்படுத்த அதன் அருகே உள்ள கருப்பு அம்புக் குறியில் கிளிக் செய்து அதன் பின் சைட்பார் என்பதில் கிளிக் செய்திடவும். இந்த சைட்பாரில் இன்னும் பலவித பயன்பாட்டு புரோகிராம்களை இணைக்கலாம். கால்குலேட்டர், கடிகாரம், நியூஸ் பீட் போன்ற பல புரோகிராம்கள் கிடைக்கும்.

அத்துடன் இந்த கூகுள் டெஸ்க்டாப் மூலம் பைல் மற்றும் போல்டர்கள், இமெயில் செய்திகள் ஆகியவற்றை எக்ஸ்பியில் தேடிப் பெறுவதைக் காட்டிலும் வேகமாகத் தேடிப் பெறலாம்.

9. பிரைவேட் போல்டர்:


யூசர் அக்கவுண்ட் உருவாக்கிக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினாலும் மற்றவர்களின் பைல்களை நீங்களும் உங்கள் பைல்களை அவர்களும் பெற்றுக் காணும் வாய்ப்பு உள்ளது. போல்டர்களை பிரைவேட் என மாற்றிக் கொண்டால் இந்த வாய்ப்பு தடைபடும்.

எந்த போல்டரை இவ்வாறு மாற்ற வேண்டும் என முடிவு செய்கிறீர்களோ அந்த போல்டரின் மீது ரைட் கிளிக் செய்திட வேண்டும். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். பின் வரும் விண்டோவில் செக்யூரிட்டி டேப்பில் கிளிக் செய்திடவும்.

இங்கு ADD என்னும் பட்டனைத் தட்டுவதன் மூலம் இந்த போல்டரை யார் எல்லாம் பார்க்கலாம் என்று அவர்களின் யூசர் நேம் மட்டும் தேர்ந் தெடுக்கலாம். இந்த அனுமதியிலும் பல வகை உள்ளன.

இதனை செட் செய்திட என்று Allow / Deny என இரு பாக்ஸ் கிடைக்கும். இவற்றை டிக் செய்வதன் மூலம் வெவ்வேறு வகையில் இவர்களை இந்த போல்டரைப் பார்க்க அனுமதிக்கலாம்.

உங்களிடம் விண்டோஸ் ஹோம் எடிஷன் இருந்தால் கம்ப்யூட்டரைப் பூட் செய்து சேப் மோட் சென்று அங்குதான் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எக்ஸ்பி புரபஷனல் எனில் நேராகவே இந்த மாற்றத்தை ஏற்படுத்தலம.

10. ரெகுலர் கடிகாரம் எதற்கு?


விஸ்டாவில் சைட் பார் உள்ளது. அதில் கடிகாரம் ஓடுகிறது. எக்ஸ்பியிலும் சைட் பார் உருவாக்கி அதில் கடிகாரத்தினை இயக்கிவருகிறீர்களா! அப்படியானால் டாஸ்க் பாரில் கடிகாரம் எதற்கு என்று எண்ணுகிறீர்களா? அதனை நீக்க வேண்டும் என முடிவு செய்தால் கீழ்க்குறித்தபடி இயங்கவும்.

வழக்கம்போல டாஸ்க்பாரில் காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் Notification Area என்று உள்ள இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Clock என்று உள்ள இடத்தில் Show the Clock முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

11. பைல் எக்ஸ்டென்ஷன் பெயர் தெரிய:


விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இரண்டிலும் பைல் ஒன்றின் எக்ஸ்டென்ஷன் பெயர் தெரியாமல் இருக்கும் வகையில் டிபால்ட்டாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நமக்குச் சில வேளைகளில் பைல்களின் பெயர்கள் அதன் துணைப் பெயருடன் தேவையாய் இருக்கும்.


ஒரே பெயரில் பேஜ் மேக்கர், வேர்ட், பெயிண்ட் புரோகிராம்களில் பைல்களை உருவாக்கி இருப்போம். இவற்றில் நமக்குத் தேவையானதைப் பெற நமக்கு துணைப் பெயர் தெரியவேண்டியதிருக்கும்.

இந்த பெயரைக் காட்டும்படி சிஸ்டத்தினை செட் செய்திடலாம். இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து Tools மெனுவினைத் திறக்கவும்.

விஸ்டாவில் ஆல்ட் கீயினை அழுத்தவும். பின் போல்டர் ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வியூ டேப்பில் கிளிக் செய்து அதில் ‘Hide extensions for known file types’ என்று உள்ள வரியின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அடுத்து பைல்களின் பெயர்கள் காட்டப்படுகையில் அவற்றின் துணைப் பெயர்களோடு அவை காட்டப்படும்.

நன்றி.தினமலர்.

rajraja
03-01-2011, 11:16 AM
vry good:icon_b: