PDA

View Full Version : தில்லி - மணிரத்னத்தின் பம்பாய் படத்தின் தழுவல் -நகைசுவை தொடர்கதை (முற்றும்)மதுரை மைந்தன்
10-08-2009, 09:12 AM
தயாரிப்பாளர்: அடுத்தடுத்து சோகமான படங்களே எடுத்து அலுத்துடுச்சு. அடுத்ததா எடுக்கப் போற படம் ஒரு முழு நீள நகைச்சுவைப் படமா இருக்கணும் என்ன சொல்றீங்க?

டைரகடர்: நானும் அதையே விருமபறேன். ஆனா கதைக்கு எங்கே போறது?

உதவியாளர்: சார் எனக்குத் தெரிஞ்ச நகைச்சுவை எழுத்தாளர் ஒருத்தர் இருக்காரு. அவர் பெயர் கிரேஸி மைந்தன். நம்ம கிரேஸி மோகனை மாதிரியே எழுதறதா நினைச்சுக்கிட்டு அவரே தன்னை கிரேஸி மைந்தன்னு சொல்லிக்கறாரு. நான் வேணா அவரைக் கூப்பிடட்டா?

தயாரிப்பாளர்: கூப்பிடுங்க. கதை நல்லா இருந்தா சரி.

உதவியாளர் தனது செல் போனில் அவரைக் கூப்பிட கிரேஸி மைந்தன் அங்கு வருகிறார்.

கிரேஸி மைந்தன்: ஹி ஹி ஹி வணக்கம். ஹி ஹி ஹி என்னைக் கூப்பிட்டீங்களாமே? ஹி ஹி ஹி எதுக்கு?

தயாரிப்பாளர் (எரிச்சலுடன்): நீங்க ஒரு நகைச்சுவை எழுத்தாளர் எனபதால் வார்த்தைக்கு வார்த்தை இப்படி ஹி ஹி னு சிரிக்கறதை கொஞ்சம் நிறுத்தறீங்களா? நாங்க ஒரு முழு நீள நகைச் சுவைப் படம் எடுக்கலாம்னு இருக்கோம். அதுக்கு ஏத்த மாதிரி கதை எதுவும் வச்சுருக்கீங்களா?

கிரேஸி மைந்தன்: ஓ வச்சிருக்கேனே. கதையின் தலைப்பு தில்லி.

தயாரிப்பாளர்: நாங்க தமிழ் படம் எடுக்கறோம். நீங்க சொல்ற தலைப்பை பார்த்தா அது ஒரு ஹிந்தி படம் போல இருக்கே?

கிரேஸி மைந்தன்: மணி ரத்னம் மட்டும் பம்பாய்னு தலைப்பு வைச்சு தமிழ் படம் எடுக்கலையா? என்னோட கதையும் அதே மாதிரி தான். மணி ரத்னம் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கப்புறம் பம்பாயில் நடந்த கலவரங்களை வைச்சு படம் எடுத்தாரு. என்னோட கதை இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதற்கப்புறம் தில்லியில் நடந்த கலவரத்தை வச்சு எழுதப்பட்டது. மணி ரத்னம் சீரியஸா கதை சென்னாரு. நான் நகைச்சுவையா கதை சொல்றேன்.

டைரக்டர்: ஓ அப்படியா, கதை சுவாரஸ்யமா இருக்கும் போல தோணுதே. சரி. சொல்லுங்க.

கிரேஸி மைந்தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு கதையை சொல்ல ஆரம்பிக்கறார்.

" தில்லிலே பஞ்சாபகேசன் னு ஒரு தமிழர் அரசாங்க ஊழியர்களின் குடியிருப்பான மோதிபாக்கில் ஒரு வீட்டில குடியிருந்தார். அவர் தில்லி செக்ரடேரியத்தில ஒரு அதிகாரி. அவருக்கு ஒரே பையன் ஒரே பொண்ணு ஒரே மனைவி".

தயாரிப்பாளர் குறுக்கிட்டு: ஒரே மனைவிக்காரர்னா அவர் பெயர் பஞ்சாப ராமன்னுல இருக்கணும்.

கிரேஸி மைந்தன்: பஞ்சாப கேசன் பெயர் தான் கதையோட ஒத்துப் போகிறது. அதை பின்னால பார்ப்பீங்க.

" இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம் அன்று தில்லியில் ஒரு கலவரம் வெடிக்கிறது. கலவரக்காரர்கள் சர்தார்ஜிகளை தாக்கினார்கள் அன்று. அனறயை தினம் பஞ்சாப கேசன் வீட்டுக் கதவு பட பட வென்று தட்டப் படுகிறது".

பங்கஜம் (பஞசாப கேசனின் ஒரே மனைவி): ஏன்னா யாரோ வாசல் கதவைத் தட்டறாளே. சித்தப் பாருங்கோ. நான் இங்கே சமையல் கட்டில கை வேலையா இருக்கேன்.

பஞ்சாப கேசன் வேண்டா வெறுப்பாக சென்று கதவைத் திறக்க அவரைத் தள்ளிக் கொண்டு ஒரு தாடிக்கார இளைஞன் விட்டிற்குள் நுழைகிறான்.

பஞசாபகேசன்(கோபமாக): ஏய் யார் நீ? எதுக்காக இப்படி அவசரமா அத்து மீறி நுழைஞ்சே?

தாடிக்கார இளைஞன் தமிழ் புரியாமல் முழித்து விட்டு: " மே ஏக் சர்தார்ஜி சோக்ரா முஜே குச் லோக் மார்னேக் கேலியே பீச்சாக் கர் ரஹே ஹைன். ஆப் ஹி முஜே பசா சக்தே ஹைன் ( நான் ஒரு சர்தார்ஜி பையன். என்னைக் கொல்வதற்கு சிலர் என்னைத் துரத்துகிறார்கள். அவர்களிடமிருந்து நீங்கள் தான் என்னைக் காப்பாத்தணும்).

பஞ்சாப கேசன்(தனக்கு தெரிந்த அரை குறை இந்தியில்): தும் சர்தார்ஜி கஹான் தலைப்பா? (நீ ஒரு சர்தார்ஜிங்கறே. எங்கே உன்னோட தலைப்பா?)

சர்தார்ஜி பையன்: மேரா பகடி? மே உஸ் கோ பேக் தியா தாக்கி ஓ லோக் முஜே பகசான் சகே (என்னோட தலைப்பாவா? நான் அதை தூர எறிந்து விட்டேன் அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க).

இவ்வாறு சொல்லி விட்டு அவன் பக்கத்து அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொள்ள உள்ளிருந்து வீல் என்ற அலறல் சத்தம் கேட்கிறது.

பஞ்சாப கேசன்: பங்கஜம் உடனே இங்கே வா. இந்த பையன் நம்ம கமலாவோட அறைக்குள்ளே புகுந்து கலாட்டா பண்றான்.

பங்கஜம்: ஏன் இப்படி சத்தம் போடறீங்க? அந்த பையன் பாவம். அவன் உயிருக்கு பயந்து இங்கே வந்து ஒளிஞ்சுருக்கான். நீங்க சும்மா இருங்கோ.

பஞ்சாப கேசன்: எனக்கு என்ன பயம்னா இந்த இதுவும் அதுவும் பக்கத்தில இருந்தா ஆபத்தாச்சே.

பங்கஜம்: என்னது இதுவும் அதுவும்? ஓ பஞ்சும் நெருப்புமா? ஒரு பையனும் ஒரு பெண்ணும் பக்கத்தில இருந்தா உடனே அந்த உவமைக்கு தாவறேளே? நம்ம பொண்ணு நெருப்பு மாதிரி. அந்த பையனை பஞ்சா ஊதிடுவா.

இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது மூடிய அறையிலிருந்து சிரிப்பு சத்தம் கேட்கிறது. பின் ஒரு பாடல் ஒலிக்கிறது.

கிரேஸி மைந்தன் தயாரிப்பாளரிடம்: இந்த இடத்துக்கன்னே ஒரு பாட்டு வச்சுருக்கேன். கேக்கறீங்களா? (பாடுகிறார்)

அந்த யமுனைக் கரையோரம்
ஒரு அழகைக் கண்டேனே
அவள் கூந்தல் விரிய விரிய
சௌரி கண்டேனே
பல்லே பல்லே பல்ல பல்ல பல்லே
ஓஹோ பல்லே பல்லே பல்ல பல்ல பல்லே

தயாரிப்பாளர்: சர்தாரஜிப் பையன் எப்படி தமிழ்ல பாடறான்?

கிரேஸி மைந்தன்: ஆக்சுவலா இந்த பாட்டு அந்த பொண்ணு கனவில வருகிறது. கனவில தான் எதுவும் சாத்தியமாச்சே. சென்னையில இருக்கிற ஹீரோ ஹீரோயின் கனவு ஸீன்ல ஸ்விட்ஜர்லாந்துக்கு போய் பாடலையா?. (கதையை தொடர்கிறார்)

பஞ்சாப கேசனும் அவரது மனைவியும் மூடிய அறைக்குள் சர்தார்ஜி பையனும் அவர்களது ஒரே பொண்ணும் என்ன பண்ணிக்கிட்டிருக்காங்க என்று பதை பதைத்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் வீட்டுக் கதவு மீண்டும் பலமாகத் தட்டப் படுகிறது.


தொடரும்

மன்மதன்
11-08-2009, 12:39 PM
நல்ல ஆரம்பம். கலக்குங்க..!!

sakthi
11-08-2009, 01:49 PM
நல்ல நகைச்சுவை. நல்ல கற்பனை.

மதுரை மைந்தன்
12-08-2009, 03:15 AM
நல்ல ஆரம்பம். கலக்குங்க..!!


நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
12-08-2009, 03:16 AM
நல்ல நகைச்சுவை. நல்ல கற்பனை.

நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
12-08-2009, 03:27 AM
பாகம்-2

பஞ்சாபகேசன் சென்று கதவை திறக்க அங்கே கையில் கம்பு கத்திகளுடன் சில தடியர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

தடியன் 1: சாப்ஜி இதர் கோயி சர்தார்ஜி லட்கா ஆயா க்யா? (ஐயா இங்கே சர்தார்ஜி பையன் ஒரத்தன் வந்தானா?).
பஞ்சாபகேசன்: இதர் மதராஸி ஹை. சர்தார்ஜி நஹி (இங்கே மதராஸி இருக்காங்க சர்தார்ஜி இல்லை)

தடியன் 2; சாப்ஜிகோ இந்தி மாலும் நஹி லக்தா ஹை. மெ பதாதா. சாப்ஜி இதர் கோயி சர்தார்ஜி கம்? (ஐயாவுக்கு இந்தி சரியா புரியலை. இப்போ நான் கேக்கறேன். சாப்ஜி இங்கே சர்தார்ஜி கம்?)

பஞசாபகேசன்(எரிச்சலுடன்): இதர் சர்தார்ஜி கம் நஹி ஜாதா ஹை. (இங்கே சர்தார்ஜி கம்மி இல்லை அதிகம்).

தடியன் 3: தேக்கோ சாப்ஜி இதர் கோயி சிர் பர் கபடா பாந்த் கே ஆயா க்யா? (ஐயா இங்கெ யாராவது தலையில் துணியை சுற்றிக் கொண்டு வந்தாங்களா?).

அப்போது பங்கஜம் குளித்து விட்டு தலையில் ஈரத்துண்டை சுற்றிய வாறு வருவதை பார்த்த பஞ்சாபகேசன் நீ உள்ளே போ இங்கே வராதே என்று விரட்டுகிறார்.

தடியன் 4: அரே ஹம் இதர் வக்த்கொ பர்பாத் கர் ரஹே ஹை. இஸ் பேவகூப்கோ இந்தி நஹி ஆத்தா ஹம்கொ தமில் நஹி ஆத்தா.(அடே நாம இங்கெ நேரத்தை விணடித்துக் கொண்டிருக்கிறோம். இந்த முட்டாளுக்கு இந்தி தெரியலை நமக்கு தமிழ் தெரியலை).

பஞ்சாபகேசன்: இதர் இந்தி ஆத்தா நஹி. தமிழ் ஆத்தா ஹை. சுப ஆத்தா காம் கர்த்தா ஜாத்தா (இங்கே இந்தி ஆத்தா இல்லை தமிழ் ஆத்தா இருக்கா. காலை வந்து வேலை பார்த்து விட்டு போறா).

தடியர்கள் மண்டையில் அடித்துக் கொண்டு நாம வேற சர்தார்ஜியை பிடிச்சு அடிக்கலாம் என்று சென்று விடுகின்றனர்.

பஞ்சாபகேசன் நிம்மதியாக பெரு மூச்சு விட்டுக் கொண்டு கதவை சாத்துகிறார்.

அதே நேரத்தில் அவரது மகள் சிரித்துக் கொண்டே சர்தார்ஜி பையனுடன் அவளது அறையை விட்டு வெளியே வருகிறாள்.

மகள்: டாட் மீட் இந்தர்சிங். என்னோட க்ளாஸ்மேட்.

பஞ்சாபகேசன்: இந்தர் சிங்கோ பந்தர் சிங்கோ அவனை இடத்தை காலி பண்ண சொல்லு. யார் யாரோ தடியன்கள் அவனை தேடி இங்கே வறாங்க.

இந்தர்சிங்: அங்கிள். மே அபி நஹி ஜா சக்தா. மேரா பகடிகோ மே பேக்தியா ஹைனா? பினா பகடி மேரா கர் மே குஜ்ஜா கரேங்கே ( அங்கிள் நான் இப்போ போக முடியாது. என்னொட தலைப்பாவை தூக்கி எறிங்சுட்டதாலே அது இல்லாம வீட்டக்கு போனா வீட்டில கோபிப்பாங்க).

பஞ்சாபகேசன்: அட ராமா!

இந்தர்சிங்கை மகள் வா இந்தர் நாம பேசிக்கிட்டிருக்கலாம் என்று தனது அறைக்குள் அழைத்து செல்கிறாள்.

அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் பஞ்சாபகேசன் முழித்துக் கொண்டிருக்கையில் வாசல் கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்கிறது.

தொடரும்...

மஞ்சுபாஷிணி
12-08-2009, 04:38 AM
அதெப்படி கலக்கலா தொடங்கி சஸ்பென்ஸ்ல முடிச்சிட்டீங்க ஐயா??

இந்த கிரேசி மைந்தன் மதுரை மைந்தனின் தம்பி இல்லையே? :)

இந்தி எந்த ஒரு இடத்திலும் பிழையில்லாமல் எழுதி இருக்கீங்க ஐயா?? அருமை மிக மிக அருமையான நகைச்சுவைத் தொடர்.... இந்தி படிப்பவருக்கு புரியுமோ என்று சிரமம் பாராமல் தமிழில் மொழிப்பெயர்த்து இருப்பது சிறப்பு... நன்றி ஐயா...

பஹுத் ஹச்சா ஹை சாப்... லேகின் இஸ்தரஹா சஸ்பென்ஸ் மே மத் டாலோ சாப்... :)

நேசம்
12-08-2009, 05:35 AM
ஸ்டோரி அச்சா கை.கனிடினு கர்ரோ.
நல்ல நகைச்சுவை.அதுவும் சஸ்பென்சுடொடு முடிந்து இருப்பது சுவாரஸ்யம்.

த.ஜார்ஜ்
12-08-2009, 08:25 AM
ஹ.. ஹா ஹா .... நல்ல கூத்துதான்.
நீங்க ஏன் சினிமாவுல டிரை பண்ணக்கூடாது மதுரை மைந்தன்?
நல்லாவே திரைக்கதை பண்றிங்க.

மன்மதன்
12-08-2009, 02:40 PM
நல்லாத்தான் போகுது..
அந்த சிங் நம்ம தமிழ் பையன்னு நினைக்கிறேன்..
ஒரு வேளை அது மதுரை பையனா கூட இருக்கலாம்.:D

மதுரை மைந்தன்
13-08-2009, 09:08 AM
அதெப்படி கலக்கலா தொடங்கி சஸ்பென்ஸ்ல முடிச்சிட்டீங்க ஐயா??

இந்த கிரேசி மைந்தன் மதுரை மைந்தனின் தம்பி இல்லையே? :)

இந்தி எந்த ஒரு இடத்திலும் பிழையில்லாமல் எழுதி இருக்கீங்க ஐயா?? அருமை மிக மிக அருமையான நகைச்சுவைத் தொடர்.... இந்தி படிப்பவருக்கு புரியுமோ என்று சிரமம் பாராமல் தமிழில் மொழிப்பெயர்த்து இருப்பது சிறப்பு... நன்றி ஐயா...

பஹுத் ஹச்சா ஹை சாப்... லேகின் இஸ்தரஹா சஸ்பென்ஸ் மே மத் டாலோ சாப்... :)

கிரேசி மைந்தன் மதுரை மைந்தனின் தம்பி இல்லை. மதுரை மைந்தன் கிரேஸி மைந்தனுக்கு அண்ணா :lachen001:

ஆப் கி தாரீப் கேலியே சுக்ரியா

http://img294.imageshack.us/img294/3811/47045486.jpg (http://img294.imageshack.us/i/47045486.jpg/)

மதுரை மைந்தன்
13-08-2009, 09:10 AM
ஸ்டோரி அச்சா கை.கனிடினு கர்ரோ.
நல்ல நகைச்சுவை.அதுவும் சஸ்பென்சுடொடு முடிந்து இருப்பது சுவாரஸ்யம்.

உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.தன்யவாத்

http://img294.imageshack.us/img294/3811/47045486.jpg (http://img294.imageshack.us/i/47045486.jpg/)

மதுரை மைந்தன்
13-08-2009, 09:15 AM
ஹ.. ஹா ஹா .... நல்ல கூத்துதான்.
நீங்க ஏன் சினிமாவுல டிரை பண்ணக்கூடாது மதுரை மைந்தன்?
நல்லாவே திரைக்கதை பண்றிங்க.

உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

http://img294.imageshack.us/img294/3811/47045486.jpg (http://img294.imageshack.us/i/47045486.jpg/)

மதுரை மைந்தன்
13-08-2009, 09:19 AM
நல்லாத்தான் போகுது..
அந்த சிங் நம்ம தமிழ் பையன்னு நினைக்கிறேன்..
ஒரு வேளை அது மதுரை பையனா கூட இருக்கலாம்.:D

சரியா சொன்னீங்க மன்மதன். இப்போ அசத்தப் போவது யாருனா அது மதுரை முத்து மதுரை மருது இவங்க தான். நன்றி


http://img294.imageshack.us/img294/3811/47045486.jpg (http://img294.imageshack.us/i/47045486.jpg/)

மதுரை மைந்தன்
13-08-2009, 09:27 AM
பாகம்-3

கதவை திறந்த பஞ்சாபகேசனை தள்ளிக் கொண்டு ஒரு சர்தார்ஜி பையன் உள்ளே நுழைகிறான். கதவை தாளிட்டு விட்டு அவன் பக்கம் திரும்பிய பஞ்சாபகேசன் அவன் பஞ்சாபி என்பதை மறந்து தமிழில் பொழிந்து தள்ளுகிறார்.

பஞ்சாபகேசன்: ஏய் நிங்கள்ளெல்லாம் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. ஆளாளுக்கு திறந்த வீட்டில ஏதோ நுழைஞ்ச மாதிரி வறீங்க. அப்படி என்ன தலை போற அவசரம்?

சர்தார்ஜி பையன்: அங்கிள் மன்னிச்சுங்க. நான் சர்தார் பையன் இல்லை. தமிழ் பையன் பேரு முருகன்.

பஞ்சாபகேசன்: என்னது தமிழ் பையனா? அப்புறம் என் இந்த வேஷம்?

முருகன்: வேஷம் தான் போடடேன் அங்கிள் காலேஜ் நாடகத்துக்காக. பாதி நாடகத்தில சிட்டில கலாட்டானு எல்லாரும் ஓடி போயிட்டாங்க. நானும் வீட்டுக்கு போகலாம்னு வேஷத்தை கூட கலைக்காம வெளியே வந்தேன். அப்போ கொஞ்சம் தடியன்கள் கையில கம்பு கத்தியோட என்னை துரத்த ஆரம்பிச்சாங்க. எனக்கு ஒண்ணும் புரியலை. என்னை ஏன் துரத்தறாங்கனு. அப்போ அவங்க பகடோ சர்தார்கோ உஸ்கா மார்மார்கர் சம்டி உத்தார்தேங்கே (அதாவது பிடி அங்த சர்தாரை அவனை அடிச்சு தோலை உரிச்சுடலாம்) னு சொன்னதும் உயிரை கைல பிடிச்சுகிட்டு ஓடி வந்தேன். உங்க வீட்டு வாசல்ல உங்க பெயர் பலகையை பார்த்து நீங்க தமிழர் எனக்கு அடைக்கலம் குடுப்பீங்கனு நுழைஞ்சேன்.

இப்படி சொல்லிவிட்டு நான் எங்கேயாவது ஒளிஞ்சுக்கணும் என்று பஞ்சாபகேசனின் மகளின் அறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொள்கிறான்.

உள்ளே நுழைந்த முருகன் தலையை அரிக்கிறது என்று தலைப்பாவை எடுக்க பஞ்சாபகேனின் மகளும்(அவள் பெயர் கல்யாணி) இந்தர் சிங்கும் கோரஸாக " ஓ முருகன்" என்று கூவுகிறார்கள்.

கல்யாணி: முருகா நீ எப்படி இங்கே வந்தே .

இந்தர் சிங்: முருகா தும் கைஸே இதர் ஆயா?

முருகன்: இந்தர் தும் கைஸா இதர் ஆயா வைஸா மே பி ஆயா குண்டோம்ஸே பச்கே (இந்தர் நீ எப்படி இங்கெ வந்தேயொ அப்படித்தான் நானும் வந்தேன் குண்டர்களிடமிருந்து தப்பித்து)

கல்யாணி: அது சரி. ஏன் இந்த வேஷம்?

முருகன் பஞ்சாபகேசனிடம் கூறியதை திருப்பி சொல்கிறான். காலேஜ் டிராமால நான் சர்தார்ஜி வேஷம் போடறது உனக்கு தெரியாதா? அது சரி. உனக்கு தான் டிராமால இண்ட்ரஸ்ட் கிடையாதே.

முருகன் இந்தரிடம் உன்னொட தலைப்பா எங்கேனு கேட்டதும் இந்தர் தான் குண்டர்களிடமிருந்து தப்பிக்க அதை கழற்றி எறிந்து விட்டதையும் தலைப்பா இல்லாம வீட்டிற்கு போனா அப்பா கோவிப்பார் என்றும் கூறினான்.

அறைக்கு வெளியே அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் பஞ்சாபகேசன் கையை பிசைந்து கொண்டிருக்கும் போது அறைக்குள்ளிருந்து ஒரு பாடல் வருகிறது.

கிரேஸி மைந்தன்(தயாரிப்பாளரிடம்): இந்த இடத்தக்குனு ஒரு பாட்டு போடடிருக்கேன் கேக்கிறிங்களா?

இந்தர்சிங் இந்தர்சிங் டோண்ட் ஒரி இந்தர்சிங்
தலைப்பா போனது உன் தப்பா

இந்தர்சிங் இந்தர்சிங் டோண்ட் ஒரி இந்தர்சிங்
தலைப்பா இல்லாம நீ அழகா இருக்கப்பா

கலர் கலரா துணியிருக்கு
கஞ்சி போட்ட துணி இருக்கு
மடி மடியென மடிச்சுடலாம்
சொருகு சொருகு என சொருகிடலாம்

இந்தர்சிங் இந்தர்சிங் டோண்ட் ஒரி இந்தர்சிங்
உன் தலைல புதிசா ஒரு தலைப்பா

இந்தர்சிங் இந்தர்சிங் டோண்ட் ஒரி இந்தர்சிங்
தலப்பாவை பாத்து உங்க அப்பா மலைப்பா

பாட்டில் லயித்திருந்த பஞ்சாபகேசனை மற்றுமொரு தடவை கதவை தட்டும் சத்தம் இந்த உலகிற்கு கொண்டு வந்தது.

கதவை திறந்த பஞ்சாபகேசனை தள்ளிக் கொண்டு மற்றுமோர் சர்தார்ஜி பையன் உள்ளே நுழைகிறான். அவனுக்கு பின்னால் கைளில் கம்பு கத்திகளுடன் முதலில் வந்த தடியர்கள் நின்று கொணடிருந்தார்கள்.

விரைவில் முடியும்

மன்மதன்
14-08-2009, 02:46 PM
ஆஹா.. முதல் பாடல் கலக்குது போங்க..

மதுரை மைந்தன்
15-08-2009, 09:04 AM
நன்றி மன்மதன்

மதுரை மைந்தன்
15-08-2009, 09:11 AM
இறுதி பாகம்

தடியர்களில் ஒருவன்: சாப்ஜி அபி சுபா நஹி சக்தே ஹை. சர்தார்ஜி சோக்ரா ஆப் கே பீச்சே கடா ஹை. (ஐயா இப்போ நீங்கள் மறைக்க முடியாது. சர்தார்ஜி பையன் உங்க பின்னாலே நிக்கறான்)..

சர்தார்ஜி பையன்: அப்பா நான் சர்தார் பையன் இல்லை உங்க பையன் ராகவன்.

தடியன் 1: க்யா போல்தா ஹை வோ? (என்ன சொல்றான் அவன்?)

பஞ்சாபகேசன்: மேரா பீச்சே சர்தார்ஜி கடா நஹி. மேரா எருமை கடா.

தடியன்கள்: ? ? ? ?

ராகவன்: தேக்கியெ மே இன்கா ஏக் லோதா பேடா ராகவன். (நான் இவரோட ஒரே பையன் ராகவன்)

தடியன் 1: யே கைஸா ஹோ சக்தா? மதராஸி பாப் கோ சர்தார்ஜி பேடா. (இது எப்படி சாத்தியமாகும்? மதராஸி தகப்பனுக்கு சர்தார்ஜி பையன்.)

தடியன் 2: அரே பேவகூப். சாப்ஜி ஏக் சர்தாரிணி கே சாத் ஷாதி கியா தோ? (அடே முட்டாள் ஐயா ஒரு சர்தாரிணியை மணந்து கொண்டிருந்தால்?).

தடியர்களுக்கு இந்த வாதம் புரியவே " மாப் கீஜியே சாப்ஜி (மன்னிச்சுக்கோங்கோ ஐயா)என்று கூறி விட்டு வேறொரு சர்தார்ஜியை தேடி செல்கின்றனர்.

அவர்கள் சென்ற பின் கதவை தாளிட்டு விட்டு திரும்புகிறார் பஞ்சாபகேசன்.

பஞ்சாபகேசன்: ராகவா இது என்ன கணறாவி?. தாடி மீசையை எடத்துடுனு சொன்னேன் நீ கேக்கலை. இப்போ இந்த தலைப்பா எப்படி வந்தது?

ராகவன்: டாட் ஊர்ல ஏதோ கலாட்டானு எங்க ஆபீஸ்ல எல்லேரையும் சீக்கரம் அனுப்பிட்டா. நான் நடந்த வரும் போது ஒர சர்தார்ஜி பையன் தன் தலைப்பாவை கழற்றி எறிஞ்சுட்டு ஓடினான். அந்த தலைப்பா என் தலைல வந்து விழுந்தது. அதை நான் கழற்ற மயற்சி பண்ணுவதற்கள் ஒரு கும்பல் கையில் கம்பு கத்திகளொடு என்னை துரத்த ஆரம்பிக்க நான் தப்பிச்சென் பிழைச்சேன்னு ஓடி நம்ம வீட்டுக்கு வந்தேன்.

பஞ்சாபகேசன்: அட பாவமே முதல்ல அந்த தலைப்பவை கழற்றி தூர எறி.

ராகவன் கஷ்டப்பட்டு அந்த தலைப்பாவை கழற்றி பக்கத்து மேசை மீது வைத்தான்.

பஞ்சாபகேசன்: பாத்தையா ராகவா இன்னிக்கு நம்ம வீட்டை தேடி சர்தார்ஜிகளா வறாங்க. ஏன்னு புரியலை.

ராகவன் பலமாக சிரித்து: எனக்கு விளங்கிடுச்சு. வாசல்ல உங்க பேரை இங்கிலீஷ்ல போடடிருக்கீங்க. சர்தார்ஜிகள் பஞ்சாபை சேந்தவங்க. அவங்களுக்கு நிறைய கேசம் இருக்கு. ஆக பஞ்சாபகேசன்னா அது சர்தார்ஜி. அதான் எல்லோரும் இங்கே வறாங்க.

அதைக்கேட்டு அன்று முதல் தடவையாக பஞ்சாபகேசன் பலமா சிரிக்கிறார்.

சிரிப்பு சத்தம் கேட்டு கல்யாணி இந்தர் சிங் முருகன் ஆகியோர் அங்கு வர தலைப்பாவை பார்த்த இந்தர் சிங் " மேரா பகடி மில் கயா (என்னோட தலைப்பா கிடைச்சுடுச்சு)' என்று குதிக்கறான்.

கல்யாணி: எங்கே முருகா நீயும் உன்னோட தலைப்பாவை வைச்சுக்கோ.

தலைப்பாக்களை வைத்துக் கொண்ட இந்தர் சிங்கும் முருகனும் இடம் மாற இருவரும் ஒன்றாக இருக்கவே குழம்புகிறாள் கல்யாணி.

கல்யாணி: இதில யார் இந்தர் சிங் யார் முருகன்னு தெரியலையே?

இந்தர் சிங்கும் முருகனும் குழப்பத்தை ரசித்த ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணடித்துக் கொள்கிறார்கள்.

பஞ்சாபகேசன்: அப்பனே முருகா இது என்ன விளையாட்டு?

இந்தர் சிங்கும் முருகனும் நமட்டு சிரிப்பு சிரிக்கினறனர்.

ராகவன்: எனக்கு ஒரு ஐடியா என்று பஞ்சாபகேசனின் காதில் ஐடியாவை சொல்கிறான்.

ராகவன் பஞ்சாபகேசனின் காதில்: நான் இரண்டு பேருக்கும் கன்னத்தில் ஒரு அறை விடறேன். அறை வாங்கின பிறகு மா னு கத்தினா அது இந்தர் சிங் அம்மா னு கத்தினா அது முருகன்.

ராகவன் அறைய இருவரும் கத்துகிறார்கள் மம்மி.

பஞ்சாபகேசன்: அட ராகவா!

ராகவன்: எனக்கு இன்னொரு ஐடியா தோணறது. இந்தர் சிங் முருகன் இருவரது அருகில் சென்று தரைப்பாக்களை முகர்ந்து பார்த்து இந்த தலைப்பாவோட கப்பு பழகிடுச்சு இது தான் இந்தர் சிங் என்கிறான.

அதே நேரத்தில் டி.வி. செய்தியில் இந்திரா காந்தி சுடப்பட்டதும் தில்லியில் குண்டர்கள் சர்தார்ஜிகளை தாக்கியதையும் போலீசும் ராணுவமம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாகவும் செய்தி வந்தது. இந்தர் சிங்கும் முருகனும் பஞ்சாபகேசனிடம் தங்களது நன்றிகளை தெரிவித்து விட்டு கிளம்புகின்றனர்.

முற்றும்

அமரன்
16-08-2009, 12:56 PM
முடிஞ்சிருச்சா. இதுக்காகத்தான் காத்திருந்தேன்.. விரைவில் படித்துடுறேன்.

மதுரை மைந்தன்
22-08-2009, 03:04 AM
முடிஞ்சிருச்சா. இதுக்காகத்தான் காத்திருந்தேன்.. விரைவில் படித்துடுறேன்.


என்ன அமரன் இன்னும் படிச்சு முடிக்கலையா அல்லது படிக்க ஏதுவாக பெரிய எழுத்து சீவக சிந்தாமணி மாதிரி வேணுமா?:lachen001:

பா.ராஜேஷ்
31-08-2009, 05:57 PM
கஹானி பஹுத் அச்சா ஹை. முபாரக் ஹோ! (கதை மிக நன்றாக இருக்கிறது. உங்களுக்கு வாழ்த்துக்கள்)!!! ;)

மதுரை மைந்தன்
01-09-2009, 10:48 AM
கஹானி பஹுத் அச்சா ஹை. முபாரக் ஹோ! (கதை மிக நன்றாக இருக்கிறது. உங்களுக்கு வாழ்த்துக்கள்)!!! ;)

சுக்ரியா தோஸ்த் (உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி)