PDA

View Full Version : அவ(ள்) நம்பிக்கை



கீதம்
10-08-2009, 01:27 AM
பச்சிளம் குழந்தையாய் அன்று,
பாலர் பள்ளியில் விட்டுவிட்டு,
வீட்டுக்குக் கிளம்பிய வேளையிலே,
'அம்மா, போகாதே!' என்று
அழுது புரண்ட மகனை
அழகாய் சமாளிக்க,
அவளுக்குத் தோன்றியது,
அருமையான உபாயம்.
'போகமாட்டேன், கண்ணே!' என்று
பொய்சத்தியம் செய்தவள்,
வகுப்பு முடித்து வந்தவனிடம்,
'காலை முதல் மாலைவரை
காத்திருந்தேன் மரத்தடியில்.
கண்மணி, என்னை நம்பு!' என்றாள்.
கலக்கமின்றி நம்பினான் அவன்.
நம்பிக்கையினூடே காலம் விரைந்தது.

இன்றோ,
கலங்கி நிற்கிறாள், அவள்.
‘திரையரங்கில் திரிகிறான்
உன் திருப்புதல்வன்' என்றே
அறிந்தவர் தகவல் சொல்ல,
அதிர்ந்தவள் விசாரணை செய்ய,
அலட்டலின்றி சொல்கிறான்,
'காலை முதல் மாலை வரை
கல்லூரியில்தான் இருந்தேன்,
அம்மா, என்னை நம்பு!' என்று.
இப்போது அவள் முறை.
நம்புவதா, கூடாதா என்று
புரியாமல் தவிக்கிறாள்.

மஞ்சுபாஷிணி
10-08-2009, 05:03 AM
அருமையான கவிதை கீதம்... தாய் தன் குழந்தைக்கு செய்த பொய்ச்சத்தியம் குழந்தை நல்லவழியில் முன்னேறுவதற்காக... ஆனால் பிள்ளை வளர்ந்து அம்மாவிடம் சொல்லாமல் திருட்டுத்தனமா சினிமா போயிட்டு கல்லூரியில் தான் இருந்தேன் என்று சொல்லும் பொய் அந்த மகனின் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றத்தை கெடுக்கும் பொய் அது.. அம்மா கிட்ட சினிமாக்கு போறேன்னு சொல்லிட்டு போவதினால் அம்மா கண்டிக்க மாட்டார். மாறா இப்படி சொல்வார் கண்ணா கல்லூரி போ இப்போ. விடுமுறை நாளில் சினிமாவுக்கு போ...

அருமையான நடையில் எழுதி இருக்கீங்க கீதம்... நன்றி....

கா.ரமேஷ்
10-08-2009, 05:20 AM
குழந்தைகளின் மனநிலையை படிப்பது என்பது பெரிய கலை... தாயாய் அவரின் வருத்தத்தை எந்த வகையில் சொல்வது என்று விழிப்பது கடைசி வரியில் புலப்படுகிறது... வாழ்த்துக்கள் கீதம்..

அமரன்
10-08-2009, 06:23 AM
இந்தப் பையன் பெப்சொடெண்ட் பையன் இல்லை. அதான் பொய்சொல்றான்.:)


நன்மை பயக்கும் அம்மாவின் பொய்க்கும் தின்மை பயக்கும் மகவின் பொய்க்கும் இடைவெளி அதிகம்.

பொதுவாக பிள்ளைகள் பெற்றவர்களிடத்திம் பலதை மறைப்பதுக்குக் காரணம் பெற்றோர் மீதான பயமும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இடைவெளி அதிகம் இருப்பதுவுமே.

அம்மா அடிப்பார், அப்பா கண்டிப்பார் என்று ஒரு தவறை மறைத்து காலப்போக்கில் பாரதூரமான பல தவறுகளைச் செய்தவர்களையும் கண்டிருக்கிறேன். என்ன செய்தாலும் அதை அப்படியே பெற்றோரிடத்தில் ஒப்புவிப்போரையும் கண்டிருக்கிறேன்.

பாராட்டுகள்ள் கீதம்.

இளசு
10-08-2009, 08:00 PM
மனதைத் தொட்ட சிறுக(வி)தை!

வாழ்த்துகள் கீதம் அவர்களே!

செல்வா
11-08-2009, 03:53 AM
கதை சொல்லலில் வென்றிருந்தாலும் கவிதையின் உவமைகள் இரண்டும் பொருத்தமற்றதாகத்தான் படுகிறது....

பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் போது...

பள்ளி - கல்லூரி.... ஒத்துப்போனாலும்...

மரத்தடி - திரையரங்கு ஒத்துப் போகவில்லையே...

நிற்க...

தகவல் தவறாக இருக்கவும் வாய்ப்புள்ளதே...

உண்மையிலேயே அவன் கல்லூரியில் இருந்திருந்தால்...

கலக்கம் ஏன்...

ஒருவேளை முன்பு சொன்ன பொய் மனதை உறுத்துகிறதோ?

ஹா.....ஹா.......

வாழ்த்துக்கள்.....