PDA

View Full Version : உனக்கான ஆபரணங்கள்.



ப்ரியன்
09-08-2009, 07:29 PM
உனக்கான ஆபரணங்கள். (http://priyanonline.com/?p=435)

ஓலைக்குடிசையில் இடுக்கில்
ஒழுகும் மழைத்துளிகளென
சில்லிடுகிறது
நின் நினைவலைகள்
கடந்திடும் ஒவ்வொரு சமயமும்.
*
உனக்கான ஆபரணத்தை
மழைத்துளிகளால் கோர்க்கிறது
வானம்.
*
மழையின்
முதல் துளி நீ
அடுத்த துளி நான்
மற்றவை
நம் பிள்ளைகள்.
*
காதல் தேசத்தின்
தேவதையாய் இருக்ககூடும்
நிலவொளியில் நம்மை
நனைத்து சென்ற
மழை!
*
எவ்வூர் நியாயம்
மழை நனைத்தால்
அணைப்பதும்
நான் அணைத்தால்
தள்ளுதலும்!
*
நீ நனைய
என்னை தாக்குகிறது
அழகின் மின்னல்!
*
எழுத இன்னும் இருக்கிறது
உன்னைப் பற்றியும்
மழைப் பற்றியும்.
*
என் கண்ணீரின்
ஒற்றை துளியை
கரைக்க இயலாமல்
மண் புதைகின்றன
மழைத்துளிகள்.
*

- ப்ரியன்

அருள்
09-08-2009, 10:25 PM
இன்னொரு மழையோடு கலந்த காதல் கவிதை.... அருமை
அடிகடி வரும் மழை கவிதைபோல் மழையும் வந்தால் ம்ம்ம்ம்ம்ம்

இளசு
10-08-2009, 08:14 PM
மழைக்காலங்கள் சுகமானவை..
காதல் காலங்களும்...


வளரட்டும்..

வாழ்த்துகள் ப்ரியன்!

செல்வா
11-08-2009, 03:46 AM
என் கண்ணீரின்
ஒற்றை துளியை
கரைக்க இயலாமல்
மண் புதைகின்றன
மழைத்துளிகள்.


தாளலயத்திலும் வார்த்தையமைப்பிலும் வசீகரிக்கின்றன வரிகள்... அருமை..



எழுத இன்னும் இருக்கிறது
உன்னைப் பற்றியும்
மழைப் பற்றியும்.


மழையைப் பற்றியும்
அல்லது
மழை பற்றியும்

எது சரி??

அக்னி
11-08-2009, 05:44 AM
ரணங்களின் வதையை,
ஆபரணங்களாக்கிய தேவதை...

ஆபரணங்கள் மண்புதைந்தாலும்,
அணிந்த ஆரணங்கோ மனம்நிறைய...

கரையாத கண்ணீர்,
புதையும் மழைத்துளிகளைத்,
துரத்திச்செல்லுமா...
இல்லை, அவற்றுடன்
தூதுசெல்லுமா...

பாராட்டுக்கள் ப்ரியன் அவர்களே...

மஞ்சுபாஷிணி
11-08-2009, 05:55 AM
மழைக்கான கவிதை மிக அருமை ப்ரியன்...

அமரன்
11-08-2009, 09:24 AM
ஓலைக்குடிசையில் இடுக்கில்
ஒழுகும் மழைத்துளிகளென
சில்லிடுகிறது
நின் நினைவலைகள்
கடந்திடும் ஒவ்வொரு சமயமும்.


யாரோ ஒருவரின்
தூக்கமும் கலையக் கூடும்
அச்சமயத்தில்..



உனக்கான ஆபரணத்தை
மழைத்துளிகளால் கோர்க்கிறது
வானம்.


நல்லாத்தான்
நூல் விடுறீங்க..



மழையின்
முதல் துளி நீ
அடுத்த துளி நான்
மற்றவை
நம் பிள்ளைகள்.


ஜொள்ளும்
அதிகம்தான் உங்களுக்கு.



காதல் தேசத்தின்
தேவதையாய் இருக்ககூடும்
நிலவொளியில் நம்மை
நனைத்து சென்ற
மழை!


நிலாக் காயுதே...



எவ்வூர் நியாயம்
மழை நனைத்தால்
அணைப்பதும்
நான் அணைத்தால்
தள்ளுதலும்!


எல்லாத் தண்ணியும்
நல்ல தண்ணி தானா..
மணக்கிறதே..!!



நீ நனைய
என்னை தாக்குகிறது
அழகின் மின்னல்!


தலைப் பிள்ளையா நீங்க.:)
அப்போ இடி...?



எழுத இன்னும் இருக்கிறது
உன்னைப் பற்றியும்
மழைப் பற்றியும்.

சுத்தம்..


என் கண்ணீரின்
ஒற்றை துளியை
கரைக்க இயலாமல்
மண் புதைகின்றன
மழைத்துளிகள்.


காதல் தீயிலிட்டு
சாம்பலாக்கிய என்னை
கரைக்காமல் சென்றதே
மழைக்கடல்..


அருமையான மழைக்காதல்.

நனைய நனையக் கோடி இன்பம் ஓடி வருது.

சசிதரன்
11-08-2009, 04:08 PM
மிக அருமையான வரிகள் பிரியன் அவர்களே...:)

வெற்றி வாசன்
11-08-2009, 06:21 PM
இன்னும் எதனை காலம் தான் மழை, நிலா, பெண் மட்டும் கவிதை பொருளாக இருக்கா பொகிறதோ என்று படிக்க தொடங்கினேன்.
இன்னும் கோடி உகங்கள் இது போல் கவிதை படித்து கொணடே இருக்கலாம்.
இயற்கை கற்பனையின் கங்கை உற்று. ஆதி இன்னும் கண்டறிய படவில்லை
வற்றாமல் உற்று தொடர என் வாழ்த்துகள்