PDA

View Full Version : இப்படி ஒரு தேடுபொறி வந்தா எப்படி இருக்கும் ?



Honeytamil
09-08-2009, 05:28 AM
வழக்கமா இணையத்தில் நாம் தேடுறதுக்கு கூகுள்,யாஹு,போன்ற தேடியந்திரங்கள் பயன் படுத்துகிறோம்.இதுபோல் பரீட்ச்சையின் போது மாணவ மாணவர்களுக்கு கீழே உள்ளதுபோல் தேடியந்திரம் இருந்தால் மிகவும் பயனாக இருக்கும்.. எந்த பாடத்துல இருந்து எந்த பக்கம் படிச்சோம்ன்னு மூளைக்கு ஞாபகப்படுத்தி விடை கொண்டுவருவதற்க்கு......

http://i30.tinypic.com/206ztbo.jpg

இன்னும் மருத்துவர்களுக்கு நம் உடலின் எந்த பகுதியில் கேன்சர் இருக்கு? எந்த பகுதியில் உள்காயம் பட்டுருக்குன்னு தெரிஞ்சுக்கிடவும் இந்த மாதிரி தேடியந்திரம் இருந்துச்சுன்னா மிகவும் உதவியாயிருக்கும் ....

http://i29.tinypic.com/14l0sxt.jpg

ஹோட்டல்ல சாப்பிடப்போனா மெனுக்கு பதிலா இதுமாதிரி தேடியந்திரம் வச்சுட்டா மிகவும் சூப்பரா இருக்கும்.....

http://i28.tinypic.com/iz8dgg.jpg

துணிக்கடைக்கு சேலை எடுக்கப்போகும் மகளிர்க்கு இது மாதிரி தேடியந்திரம் இருந்தா நேர விரயம் குறையும்.......

http://i31.tinypic.com/2u9pxs5.jpg

திருமண புரோக்கர்களிடம் பெண் தேடும் மணமகன்களுக்காக இப்படி ஒரு தேடியந்திரம் இருந்தால் வசைதியா இருக்கும்.......

http://i26.tinypic.com/20t2v0n.jpg

கவனிக்குமா? கூகுள்

நன்றி : பிரியமுடன்......வசந்த்

கலைவேந்தன்
09-08-2009, 06:00 AM
எல்லாஞ்சரித்தேனுங்கப்பு....

ஆனா மகளிர்க்கு சேலை தேடும் பொறி சரியில்லங்கப்பு.

வாய்ப்பு நிறைய தரனுமுல்ல...? :)

நேசம்
09-08-2009, 06:50 AM
இப்படி வந்தா நல்லா தான் இருக்கும்.ஆனால் துணி எடுக்கும் விசயத்தில் கூடுதல் ககவல் அடிப்படையில் தேடினால் நல்லா இருக்கும்

leomohan
09-08-2009, 07:13 AM
ஹா ஹா நல்ல கற்பனை.

anna
09-08-2009, 07:31 AM
அருமையான கற்பனை தான் நண்பருக்கு, இருந்தால் நன்றாகத்தானே இருக்கும். வந்தால் வரவேற்போம்

ஓவியன்
09-08-2009, 09:16 AM
வாய்ப்பு நிறைய தரனுமுல்ல...? :)

சேலை வாங்கும் போது அவங்க உங்களுக்கு நிறைய வாய்ப்பு தார இல்லைங்களே..!! :rolleyes::D:D:D

அமரன்
09-08-2009, 11:16 AM
இதெல்லாம் இணையத்தில் இருக்கே.. நீங்க இணையலையா.

சசிதரன்
09-08-2009, 11:51 AM
ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ...:D

நேசம்
09-08-2009, 12:04 PM
சேலை வாங்கும் போது அவங்க உங்களுக்கு நிறைய வாய்ப்பு தார இல்லைங்களே..!! :rolleyes::D:D:D

இதில் ஏம்பா நமக்கு வாய்ப்பு :D
(ஒவியனுக்கு நிறைய கிடைக்குது போலிருக்கு)

மஸாகி
09-08-2009, 12:10 PM
இதெல்லாம் ரொம்ப அதிகம் - முடிஞ்சா, ஒருவரின் புகைப்படத்தைக் கொடுத்து எந்த இணையத்திலிருந்தாவது ஒருவர் பற்றிய தகவலைத் தெரிந்துகொள்ள தேடியந்திரம் வந்தால் நன்றாக இருக்கும்.

(பெண்கள் துணிக்கடை விஷயத்தில் - யாம் பெற்ற துன்பம் தேடியந்திரமும் பெற வேண்டுமா..? பாவம், விட்டுருங்கய்யா..?)

நட்புக்கு - மஸாகி
09082009

அமரன்
09-08-2009, 12:17 PM
(பெண்கள் துணிக்கடை விஷயத்தில் - யாம் பெற்ற துன்பம் தேடியந்திரமும் பெற வேண்டுமா..? பாவம், விட்டுருங்கய்யா..?)

நட்புக்கு - மஸாகி
09082009

ஆமாமா.. பாவம் மென்பொருள் வல்லுனர்கள். விட்டுங்கப்பா.

Honeytamil
09-08-2009, 01:52 PM
ஆமாமா.. பாவம் மென்பொருள் வல்லுனர்கள். விட்டுங்கப்பா.

ஆமாம் பாவம் தேடுபொறி !!! எவ்வளவு நேரந்தான் தேடுரமாதிறியே நடிக்கும்????

அக்னி
09-08-2009, 03:20 PM
ஆமாம் பாவம் தேடுபொறி !!! எவ்வளவு நேரந்தான் தேடுரமாதிறியே நடிக்கும்????
சூப்பர் டைமிங்... :icon_b:

இந்த தேடுபொறிகளைத் தேட ஒரு பொறி இல்லையா... :rolleyes:

கலைவேந்தன்
09-08-2009, 06:46 PM
இது வரைக்கும் மகளிர் படை வந்து கருத்து தெரிவிக்கவே இல்லையே....

- க வலையுடன்

அக்னி
10-08-2009, 12:56 PM
க(வ)லைவேந்தரே...
தங்களின் வீட்டுக்கு, அண்ணியின் பெயரில் இந்தப்பக்கத்தைப் பார்சலில் அனுப்பிவைத்துவிட்டாற் போச்சு...
இ-பார்சல் போதுமா அல்லது...
வசதி எப்படி...