PDA

View Full Version : என்னைவிடவும்



ஆதவா
09-08-2009, 02:43 AM
மினிடோர் ஓட்டும் பொழுது
சக்கரத்தில் கயிறு சிக்கியிருப்பதாகக்
கூறியவன்
க்ரக்ஸ் வண்டிக்காரன்
வண்டியின் பின்கதவு
திறந்திருப்பதாகச் சொல்லிச் சென்றவன்
சைக்கிளில் வந்ததாக நினைவு
கடந்து சென்றவன் சொன்னான்
சரக்கு ஒன்று
விழுந்துவிட்டது என்று.
இவர்களில் யாவரும் நினைவிலில்லை
என் வண்டிக்குத் தெரியும்
என்னைவிட அவர்களை

இளசு
09-08-2009, 07:59 AM
Self -சுயம், தான்.

உன்னையே நீ அறிவாய் - சாக்ரடீஸ்.

சுயம் என்பதன் எல்லைகள் என்ன?

கல்வி, தொழில் என்பன செயல்சுயத்தை விரிவாக்க....

ஊதிய தொந்தி, ஏற்றிய தொப்பி, ஊன்றிய கோல், ஓட்டும் வாகனம் -
இப்படி சில பௌதீகச்சுயத்தை பருமனாக்க....

நம்மை அறிவதும், நம்மைப் பிறர் அறிவிப்பதுமாய்..

வாழ்க்கைப் பாடங்கள் அனுதினமும்...

இறுதித்தேர்வு இல்லாமலேயே!

பல பரிமாணங்களில் யோசிக்க வைத்த கவிதை!


ஆதவா வந்து சொல்லலாம் - நேரடிப் பரிமாணம் ஒன்றுதான் அண்ணா என!

அருள்
09-08-2009, 03:25 PM
ஆனால் நம்மை ஒருவர் பாராட்டிவிட்டால் போதும் அவரை கடைசி வரை நினைவில் உள்ளதே....

கலைவேந்தன்
09-08-2009, 05:01 PM
எத்தனை முறை என்னைக்கடந்து செல்லும் பைக்கில் பெண்ணின் துப்பட்டா சக்கரத்தில் மாட்டும் அபாயம் உண்டென்று எச்சரித்திருக்கிறேன் என்று நினைவில்லை....

எத்தனை முறை என் பைக்கின் சைட் ஸ்டாண்ட் தடுக்கிவிடும் அபாயம் உண்டென்று என்னை எச்சரித்தார்கள் என்று எனக்கு நினைவில்லை....

எத்தனை முறை நான் பலர் பைக்கின் சைட் ஸ்டாண்ட் திறந்திருக்கிறது எச்சரித்தேன் என்று எனக்கு நினைவில்லை....

அணைக்க மறந்த சைட் இண்டிகேட்டர்களை எத்தனை வண்டிக்கு எச்சரித்தோம் என்று எனக்கு நினைவில்லை.....

இதெல்லாம் வாழ்க்கையில் சின்ன சின்ன மனத்திருப்தியைத் தரும் விஷயங்கள். இதனால் நம் மனம் ஒரு நிம்மதியை அடைகிறது. ஒரு உயிரைக் காத்துவிட்டதாய் நம் மனம் கர்வமடைகிறது.

இவைகள் தாம் வாழ்க்கையை ருசிகரமாக்குகிறது.

மனித நேயம் என்பது இதுதானோ?

அவர்களுக்கெல்லாம் நன்றி செலுத்த ஆதவாவுக்குத் தோன்றியதே...

பாராட்டுக்கள் ஆதவா...!

கா.ரமேஷ்
10-08-2009, 06:46 AM
ஒரு வாரங்களுக்கு முன் நடந்தது.., ஒரு சிறுமியின் மேல் துப்பட்டா சிக்கி மிதிவண்டி தானாக நின்று விட்டது.. நல்லவேளை அருகில் நடந்து சென்றுகொண்டிந்த நாங்கள் பிடித்து அவரை இறக்கி விட்டோம்,அந்த மேல்துப்பட்டாவை எடுக்க பத்து நிமிடம் செலவழித்தோம் அது நன்றாக சிக்கி, போன வேகத்தில் இரண்டு கம்பிகள் வேறு உடைந்திருந்தது. அதன் பிறகு அவருக்கு அறிவுறை கூறி அனுப்பி வைத்தோம்...

அவர் சொன்ன " தேங்ஸ் அங்கிள்,தேங்ஸ் அங்கிள்,தேங்ஸ் அங்கிள் " என்ற புன்னகை வார்த்தைகள் இன்றும் நினைவில் இருக்கிறது....

மனிதாபிமானத்தை எடுத்துணர்த்திய கவிதை... வாழ்த்துக்கள் தோழரே....

செல்வா
11-08-2009, 03:58 AM
அக்கறை பொதுவாக எல்லோர் மேலும் வருவதில்லை...

தனக்குத் தெரிந்தவர் தன்மனங்கவர்ந்தோருக்கு எனும் போது விரைந்து வந்து எச்சரிக்கும் வாய் பிறருக்கு எனும்போது மூடிக்கொண்டு விடுகிறது.

ஆனால் அதையும் தாண்டி அவ்வப்போது நமக்காக ஒலிக்கும் இத்தகைய குரல்கள் நமது குரல்களும் கேட்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது....

அந்தத் தேவை கவிதையின் உவமைகளுக்கு மட்டுமல்ல....

சிந்தித்துப் பார்த்தால் இன்னும் பலவற்றுக்கும்....

ஆதவா
11-08-2009, 09:09 AM
இளசு அண்ணா, சிலசமயம் படைப்பாளிகளுக்கும் தெரியாத அவர்களுடைய படைப்பின் சிறப்பை நீங்கள் அநாயசமாகக் கூறிவிடுகிறீர்கள்.

நேரடிப் பரிமாணம் "ஒன்றுதான்" என்று படைப்பாளிகள் கூறுவது எவ்வளவு பெரிய தவறு!!!

மிக்க நன்றி அண்ணா.

---------------------
நன்றி அருள், மனிதர்களின் குணங்களிடையே அதுவும் ஒன்று.

கலைவேந்தன் அண்ணா..நீங்கள் சொல்வது சரியானது.. மிக்க நன்றி.. (ஆனாலும் என்னை ஆதி' யாக்கிவிட்டீர்களே!!!)

கா.ரமேஷ்... அந்த குழந்தையின் மனதைக் கவனித்தீர்களா... உங்களை ஒருக்காலமும் மறக்காது!!

நன்றிங்க செல்வா.. ஒருசிலர்தான் பிறர் என்றும் பாராமல் கூறுபவர்கள்....

சசிதரன்
11-08-2009, 04:16 PM
ரொம்ப நல்ல கவிதை ஆதவா... யாரோ தெரியாத ஒருவருக்கு உதவி செய்கிறோம் என்று நினைப்பதே ஒருவித மன திருப்தியை தரும்.... கலைவேந்தன் அண்ணா சொன்னது போல்.... நல்ல கவிதைக்கு பாராட்டுக்கள் ஆதவா...:)

ஷீ-நிசி
11-08-2009, 05:05 PM
மிக வித்தியாசமான கரு... வாழ்த்துக்கள் ஆதவா