PDA

View Full Version : தேசம் தலை நிமிர காலில் விழும் இளைஞர்கள்..!நேசம்
06-08-2009, 05:33 AM
இந்த செய்தியை தினமலரில் படிக்கும் போது இளைஞர்கள் மீதான மதிப்பு அதிகரிக்கிறது.

செய்தி சுருக்கம்

சத்தியாகிரகா அமைப்பை சேர்ந்த நான்கு இளைஞர்கள் பலரின் காலில் விழும் காட்சியை கண்டபோது பலருக்கு அச்சர்யமாக இருந்தது.அகற்கான காரணத்தை அறிஉம் போது இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது.அது

http://img.dinamalar.com/data/images_news/tblfpnnews_15108454228.jpg

இவர்கள் அனைவரும் காரைக்கால் குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்த ராமகிருச்ன சாஸ்திரி என்பவர் ஆரம்பித்த சத்தியாகிரகா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள்.சாஸ்திரி அவர்கள் மனித உரிமையியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.இவரது ஆசை 2015 வருடத்தில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதே.
அதற்கு தடையாக இருக்கும் வன்முறை,லஞ்சம், ஜாதி போன்றவற்றை ஒழிக்க இவர் எடுத்த ஆயுதம் தான் காலில் விழும் சத்தியாகிரகம்.
தேர்தலில் துவங்கும் லஞ்சம் தான் தேசத்தின் எல்லா ஊழலுக்கும் அடிப்படை என்பது இவரது வாதம்.அரசியல்வாதிகள் காலில் விழுவதை விட வாக்களார்கள் காலில் விழுலாம் என்று முடிவடுத்து களம் இறங்கினார். இவரது அகிழ்சை வழி பிடித்து போன நூற்றுக்கனக்கான இளைஞர்கள் இவரது அமைப்பில் சேர்ந்தனர்.

இதுவரை பல மாநிலங்களுக்கு சென்ற இவர்கள் 17 இலட்சம் பேர் காலில் விழுந்து சத்தியாகிரக சாதனை புரிந்துள்ளனர.காதலில் விழும் வயதில், தேசத்துக்காக பலரது காலில் விழும் இவர்களை கரம் தாழ்த்தி சிரம் குவிக்க தோன்றுகிறது சாஸ்திரி கூறுகையில் "காலில் விழும் மாத்திரத்திலே பலர் நாங்கள் ஒட்டுக்கு காசு வாங்க மாட்டோம் என்று சத்தியம் அடித்து சொல்கின்றனர்..லட்சம் பேரின் காலில் விழுவதில் ஆயிரம் பேர் திருந்தினாலும் எங்களுக்கு அது வெற்றிதான்" என்றார்

மேலும் விவரங்களுக்கு (http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=4562)

நன்றி தினமலர்

aren
06-08-2009, 05:42 AM
இப்படி காலில் விழுவதால்மட்டும் தேர்தலில் இருந்து லஞ்சம் ஓடிவிடும் என்று நினைக்கிறீர்களா?

இவர்களுடைய ஓட்டை வேறு ஒருவர் இவர் வாக்குச்சாவடிக்கு போவதற்கு முன்பாகவே போட்டுவிடுவார்கள், அப்புறம் பணம் வாங்கினால் என்ன வாங்காவிட்டால் என்ன.

அரசியல்வாதிகள் தாமாகவே திருந்தினால் ஒழிய இந்த அவலத்தை ஒழிக்கமுடியாது.

நேசம்
06-08-2009, 05:48 AM
அரசியல்வாதிகள் தாமாகவே திருந்தினால் ஒழிய இந்த அவலத்தை ஒழிக்கமுடியாது.

நிச்சயம் அண்ணா.இவர்களகவே திருந்தினால் ஒழிய அவலம் நீங்காது என்பது உண்மையே.ஆனால் மக்கள் ஒட்டு போட காசு வாங் க மாட்டோம் என்று முடிவெடுத்து விட்டால் அப்புறம் வேட்பாளார் தகுதி, கட்சியின் கொள்கை கவனத்தில் எடுத்து கொள்வார்கள் இல்லையா. இதனால் சிறிது மாற்றம் ஏற்படும் இல்லையா.

கா.ரமேஷ்
06-08-2009, 06:53 AM
எப்படியாய் இருந்தாலும் அந்த இளைஞர்களின் முயற்ச்சி மிகவும் பாராட்டுக்குறியது.... ஒருவர் ஓட்டுப் போடுபவர்களில் பணம் வாங்காமல் வாக்களித்தால்கூட அவர்களின் பிரச்சாரத்தில் வெற்றி இருக்கிறது என நான் சொல்வேன்... பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே....

மஞ்சுபாஷிணி
06-08-2009, 09:57 AM
சிறு பொறியாக தொடங்கும் இவர்களின் முயற்சி வெற்றிப்பெற வாழ்த்துக்கள்...

ஒரு காலத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்குமா என்பது போய்

போராடி பார்ப்போம் என்று தொடங்கி....

மஹாத்மாவின் அஹிம்சாவழி போர் ஒரு முடிவுக்கு கொண்டுவந்து

இந்தியா சுதந்திரம் பெற்றே விட்டதே...

அது போல இப்பொழுது தொடங்கும் இந்த முயற்சி திருத்தட்டும் அரசியல்வாதிகளை....

நதி
06-08-2009, 10:36 AM
இளைஞர்களில் சீர்திருத்தப் பற்று பிரமிக்க வைக்கிறது; மெச்சத்தக்கது.

இதனால் நல்ல அரசியல்வாதிகள் உருவானால் சரி.