PDA

View Full Version : சௌந்தர்யலஹரி - புதுமைத் தொடர்கதை அத்தியாயம் ஆறு (கலை எழுதியது )



மஞ்சுபாஷிணி
05-08-2009, 07:19 PM
நண்பர்களே!

இந்த சௌந்தர்யலஹரி எனும் தொடர்கதையில் என்ன புதுமையெனில் இக்கதை என் ஒருத்தியால மட்டும் எழுதப்படப்போவதில்லை!

நான் ஒருஅத்தியாயமும் அதைத்தொடர்ந்து என் மதிப்பிற்குரிய அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்கள் அடுத்த அத்தியாயமுமாய் மாறி மாறி எழுதப்படப்போகிறது!

உங்கள அனைவரின் ஆதரவுடன் நான் முதல் அத்தியாயத்தைத் தொடங்குகிறேன்!


சௌந்தர்யலஹரி அத்தியாயம் - ஒன்று

ரயில் நகரத் தொடங்கும்போது வயதான ஒரு பெரியவரும் ஒரு பாட்டியும் முடியாமல் வந்து ஏறினர். ஏறி வந்து இருக்கை தேடி அமர்ந்தனர். கையில் சிறிய துணிப்பை தவிர வேறு ஒன்றும் இல்லை. மூச்சு இரைத்தது இருவருக்குமே!

இருவரும் தமது கைகளை இறுக்கப் பற்றி இருந்தனர். எதிர் சீட்டில் அமர்ந்த குடும்பம் இந்த வயதான தம்பதிகளைப் பார்த்துக்கொண்டு இருந்தது. குடிக்க தண்ணீர் வேண்டுமா என்று அந்த குடும்ப பெரியவர் கேட்டார் வயதானவரிடம்.

அவர் அடுத்து இருந்த பாட்டியிடம்

''நீ குடிக்கிறியா சௌபர்ணிகா? ''என்று கேட்கிறார்.

''வேண்டாம் விஷ்வா! எனக்கு மயக்கமா இருக்குடா ''

''சரி என் தோள் மேலே சாய்ஞ்சுக்கோ பசிக்குதா? ''

'' இல்லடா ''

'' சரி சாய்ஞ்சுக்கோ ''

உடனே எதிர்சீட்டிலிருந்த பெரியவர் ராமனாதன்

''என்ன ஐயா அவங்களுக்கு படுக்கணும்னா சொல்லுங்க நீங்க இந்த பக்கம் வந்துருங்க அவங்க தாராளமா படுக்கட்டும்.'' என்று அக்கறையோடு சொன்னார்!

'' இல்ல இவளோட தலைக்கு அணையா என்னிக்கும் என் தோள் தான் வேணும் ''

அவர்களை ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் அந்த பெட்டியில் இருந்த அனைவருமே!

பாட்டி மெல்ல தலை சாய்த்து கொள்கிறார் பெரியவரின் தோளில்!

பெரியவர் பின் தன் தலையை சாய்த்துக்கொண்டு கண் மூடுகிறார்.

ரயிலின் ஆட்டம் இருவரையும் சற்றே கண்ணயர வைக்கிறது!

ஸ்டேஷன் ஏதோ வந்து நிற்கும் சத்தம் கேட்டு பெரியவர் கண் விழிக்கிறார்.

'' சௌபர்ணிகா உனக்கு பசிக்குமே எதாவது சாப்பிட வாங்கி வரவா ?''

'' வேண்டாம் விஷ்வா நீ போகாதடா என்னோடவே இரு எனக்கு பசிக்கல! ''

'' ஆனா எனக்கு பசிக்கிறதேடி ''

இருவரது குரலிலும் அன்பைத்தவிர வேறெதுவுமே காணப்படவில்லை!

'' வெள்ளரி பிஞ்சு வாங்கிக்கோங்க சார் '' ஒரு சிறிய பெண் பரட்டை தலையோடு பரிதாபமாகப் பார்த்தாள்.

அவர் ஏறிட்டுப் *பார்த்தார்.

உடனே காசு கொடுத்து ஒரு கட்டு வெள்ளரிப்பிஞ்சுகள் வாங்கி வைத்துக்கொண்டார் !

'' தண்ணியாவது வாங்கிட்டு வரேண்டா '' பெரியவரின் குரல் கெஞ்சியது!

'' வேண்டாம் விஷ்வா விட்டுப் போகாதடா ''

எதிரில் இருந்த குடும்பம் சிநேகமாய் சிரித்து '' எங்களோட ஷேர் பண்ணிக்கோங்க *நீங்க என் அப்பா அம்மா மாதிரி இருக்கீங்க. உங்க ரெண்டு பேர் மனசுல என்னவோ கவலை. எங்க அப்பாவோட அஸ்தியை கரைக்க தான் காசிக்கு போயிட்டு இருக்கேன். ராமனாதனின் குரலில் வாத்சல்யம் தெரிந்தது!

பெரியவர் அமைதியாக சொன்னார்

'' இல்லப்பா ஒன்னும் சாப்பிடற நிலைமையில நாங்க ரெண்டு பேருமே இல்ல!
ஆனா காசிக்கு போனா தங்க ஒரு நல்ல வீடு மட்டும் முடிஞ்சா பார்த்துக்கொடுங்க '' என்று சொன்னார்.

'' கண்டிப்பாக ஐயா '' ராமனாதன் வாஞ்சையாய் கூறினார்!

இருவரும் வெள்ளரி பிஞ்சை சாப்பிட்டனர்!

இரவானது.

எல்லாரும் படுக்க தயாராயினர்.
'' பாட்டிக்கு வேணும்னா கீழ்பர்த் தர்றோம் நீங்களும் கீழ் பர்த் எடுத்துக்கோங்க''

சொன்னார் ராமனாதனின் மனைவி!

குழந்தைகள் இருவரும் பேரக்குழந்தைகள் என்று சொன்னார் ராமனாதன்!

'' எங்களுக்கு ஒரு பர்த் போறும்பா அவள் மடியில் நான் கொஞ்சநேரம் தலை சாச்சுப்பேன் அப்புறம் என் மடியில அவ கொஞ்ச நேரம் தல சாச்சுப்பா நான் தனியா படுத்தா இவளோட இதயத் துடிப்பை கேட்க முடியாதுப்பா ''

அவர்கள் அதிசயமாக பார்த்தார்கள்

இருவர் அமரும் சீட்டில் மாறி பெரியவரும் பாட்டியும் அமர எல்லாரும் உறங்க ஆரம்பித்தனர் பெரியவரும் கண்ணசந்து பாட்டியின் மடியில் தலை வைத்து உறங்க முயற்சி செய்தார்.

உறக்கம் வரவில்லை.

கண்ணில் நீர் வழிந்து பாட்டியின் தொடை நனைந்தது!

'' என்னடா விஷ்வா அழறியா?

பாட்டியின் கையைப்பிடித்துக்கொண்டு சிறு பிள்ளையாய் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

'' முடியலடா என்னால ....என்னால நம் பிள்ளைகளை மறக்க முடியலடா ''

'' நீ அழக்கூடாதுடா ''

பாட்டி பெரியவரின் கண்களை தன் முந்தானையில் துடைத்தார்

'' விஷ்வா அழாதேடா உன் தைரியம் தானே என்னை உன்னுடன் வரச் செய்தது இந்தத் தள்ளாத வயதிலும்! நீ இப்படி குழந்தையா அழுதா நான் என்னடா பண்ணுவேன்? நீ தூங்க நான் பாடவா ? '' என்றார்.

பெரியவர் சொன்னார் '' பாடு ''

'' சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே.....''
அவர் மெல்ல கண் மூடி உறங்க ஆரம்பித்தார்.

இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டது பாட்டிக்கு!

மெல்ல அழுகையோடு '' உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் உதிரம் கொட்டுதடி '' என்ற பாட்டை பாடினார் பாட்டி!

'' இறைவா இந்த குழந்தையை நான் உயிருள்ளவரை பத்திரமா பார்த்துக்க எனக்கு சக்தி கொடுப்பா ! நான் இறந்து இந்த குழந்தை அனாதையாகக் கூடாது இறைவா! மனம் நிறைந்து இவன் வாழனும்! சந்தோஷம் என்னால கொடுக்க முடியுமோ இல்லையோ ஆனால் நிம்மதி தரணும் இவனுக்கு! இவன் உயிர் என் மடியில் போகும்போதே நானும் இவன் கையைப் பிடித்து இவனோட போகனும் இறைவா '' என்று பாட்டி அழுதார்!

அப்படியே விடிந்தது.

இனி கலைவேந்தன் தொடர்வார்...!

samuthraselvam
06-08-2009, 04:05 AM
புதுமையாக ஆரம்பம்...
கலை அண்ணாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்....

வயதானாலும் இருவரின் பேச்சிலும் அன்பு ஆளுமை செய்கிறது... தொடர வாழ்த்துக்கள்

நேசம்
06-08-2009, 04:44 AM
நல்ல முயற்சி.இதற்கு முன்பு சுபா மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் இருவரும் சேர்ந்து மாறி மாறி அத்தியாங்கள் எழுதி ஒரு நாவலை தந்துள்ளனர்

கா.ரமேஷ்
06-08-2009, 07:04 AM
நல்ல முயற்ச்சி, மிகவும் அருமையாக கதையை ஆரம்பித்திருக்கிறீர்கள் இருவருடைய திறமையை ஒரே திரியில் சுவைக்கப்போகிறோம்... எதிர்பார்க்க வைக்கிறது ஆரம்பமே...வாழ்த்துக்கள் தொடருங்கள்..

கலைவேந்தன்
06-08-2009, 11:10 AM
அருமையான தொடக்கம் மஞ்சு....!

இதமாக அன்பையும் காதலையும் எடுத்துக்காட்டும் முதல் அத்தியாயமே நெஞ்சைத் தொடுவதாக இருக்கு.

இனி நானும் அதற்கு ஏற்ப அடுத்த அத்தியாயம் தருகிறேன் மஞ்சு.!

பாராட்டுகள் மஞ்சு...!

மஞ்சுபாஷிணி
06-08-2009, 07:28 PM
புதுமையாக ஆரம்பம்...
கலை அண்ணாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்....

வயதானாலும் இருவரின் பேச்சிலும் அன்பு ஆளுமை செய்கிறது... தொடர வாழ்த்துக்கள்

ஆமாம் அன்பை தவிர வேறு ஒன்றுமே காணமுடியாத தொடராக இது இருக்கவேண்டும் என்பதே என் ஆசையும்...நன்றி நண்பரே...

மஞ்சுபாஷிணி
06-08-2009, 07:30 PM
நல்ல முயற்சி.இதற்கு முன்பு சுபா மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் இருவரும் சேர்ந்து மாறி மாறி அத்தியாங்கள் எழுதி ஒரு நாவலை தந்துள்ளனர்

ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே...

மஞ்சுபாஷிணி
06-08-2009, 07:33 PM
நல்ல முயற்ச்சி, மிகவும் அருமையாக கதையை ஆரம்பித்திருக்கிறீர்கள் இருவருடைய திறமையை ஒரே திரியில் சுவைக்கப்போகிறோம்... எதிர்பார்க்க வைக்கிறது ஆரம்பமே...வாழ்த்துக்கள் தொடருங்கள்..

அதனால தான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பயமா இருக்கு... கூடவே இருந்து வழிநடத்துங்க... வித்யாசமான சிந்தனையுடனான உங்க கவிதை ரொம்ப நல்லா இருந்திச்சு... வெற்றிக்கு வாழ்த்துக்கள் நண்பரே...

அமரன்
06-08-2009, 07:51 PM
முத்தான முயற்சிக்கு முதலில் சிறப்புப் பாராட்டுகளும் அடையப்போகும் வெற்றிக்கு முன்வாழ்த்துகளும்.

சௌந்தர்யலகரி..

சௌந்தர்யம் = அழகு..

லகரி = போதை, மகிழ்ச்சி = இரண்டுமே வெறியூட்டுபவை. )பிரமாண்டமான திரை என்றும் சொல்லலாம் லகரியை..)

நிஜமான அழகான அன்பை அடிநாதமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட கதையின் முதல் அத்தியாயமே கதையின் பால் கவர்ந்திழுத்து போதை ஏற்றுகிறது. மனத்திரையைப் பிரமாண்டமாக்கி விருந்துக்குத் தயாராக்கிறது. நிகழ்காலத்தில் கதையைச் சொல்லுவது நேரடி வர்ணனையாகி கதைக்கு உயிரோட்டத்தைக் கொடுக்கிறது. அப்படியே தொடர்ந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ரயில்சினேகங்கள் சில வாழ்க்கையில் கடைசிவரை கூடவே வந்து விடும். அப்படியான பாத்திரப்படைப்பாக ராமனாதன் குடும்பத்தை மட்டுமல்லாது இந்தக் கதையையும் நீங்கள் இருவரும் கொண்டு செல்வீர்கள் என்ற எதிர்பார்ப்பு மிகுகிறது.

மஞ்சுக்காவின் தமிழ் புலமை கருத்தைப் பறிக்கிறது. தொடருங்கள்..

மதுரை மைந்தன்
06-08-2009, 08:31 PM
கதை நன்றாக துவங்கி இருக்கிறது. வித்தியாசமான முயற்சியில் நணபர் கலைவேந்தன் அவரது தொடரும் கதையை படிக்க ஆவலாயுள்ளேன்

இளசு
07-08-2009, 07:10 AM
மஞ்சுசுபாஷிணி, கலைவேந்தர்.
முயற்சி முழு வெற்றியடைய வாழ்த்துகள்..

முதுமைக்குத் தனிச்சோபை உண்டு.
கண்ணியமும் மரியாதையும் கலந்து வரும் அழகு அது.

அந்நியோன்யம் பகிரும் சொற்கள், செயல்கள்..
தனிமை, பொது இடம்,
இளசுகள், பெரியவர்கள்....

மெல்லிய இழைகள் இருக்கின்றன - எனக்கான மனக்களத்தில்..
இழைகள் அதிர்ந்தன வாசிப்பில்..
எந்த சுவரத்தில்? குழப்பம்...

தொடர்ச்சியில் இருக்கலாம் தெளிவு!

ஐரேனிபுரம் பால்ராசய்யா
07-08-2009, 09:00 AM
கதை அன்பு சுமந்து வந்திருப்பது அனைவரையும் கவர்கிறது. ”இருவரது குரலிலும் அன்பைத்தவிர வேறெதுவுமே காணப்படவில்லை. மனதைக்கவரும் வார்த்தைகள்.புது முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

மஞ்சுபாஷிணி
08-08-2009, 08:24 AM
முத்தான முயற்சிக்கு முதலில் சிறப்புப் பாராட்டுகளும் அடையப்போகும் வெற்றிக்கு முன்வாழ்த்துகளும்.

சௌந்தர்யலகரி..

சௌந்தர்யம் = அழகு..

லகரி = போதை, மகிழ்ச்சி = இரண்டுமே வெறியூட்டுபவை. )பிரமாண்டமான திரை என்றும் சொல்லலாம் லகரியை..)

நிஜமான அழகான அன்பை அடிநாதமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட கதையின் முதல் அத்தியாயமே கதையின் பால் கவர்ந்திழுத்து போதை ஏற்றுகிறது. மனத்திரையைப் பிரமாண்டமாக்கி விருந்துக்குத் தயாராக்கிறது. நிகழ்காலத்தில் கதையைச் சொல்லுவது நேரடி வர்ணனையாகி கதைக்கு உயிரோட்டத்தைக் கொடுக்கிறது. அப்படியே தொடர்ந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ரயில்சினேகங்கள் சில வாழ்க்கையில் கடைசிவரை கூடவே வந்து விடும். அப்படியான பாத்திரப்படைப்பாக ராமனாதன் குடும்பத்தை மட்டுமல்லாது இந்தக் கதையையும் நீங்கள் இருவரும் கொண்டு செல்வீர்கள் என்ற எதிர்பார்ப்பு மிகுகிறது.

மஞ்சுக்காவின் தமிழ் புலமை கருத்தைப் பறிக்கிறது. தொடருங்கள்..

நன்றி அமரன்.. எவ்ளோ தூரம் யோசிக்கிறீங்க யப்பா... அன்பு அப்டின்னு சொன்னாலே அதுலயே அழகு கூடுது தானே?... எந்த ஒரு உறவையும் இணைப்பதும் பிணைப்பதும் அன்பு தானே?... இது கண்டிப்பா புது முயற்சியே தான்.... அம்மா கிட்ட கேட்டேன் சௌந்தர்யலஹரின்னா என்னன்னு?? யாராவது கேட்டா பதில் சொல்லனுமோன்னோ??? :) அம்மா சொன்னாங்க... சௌந்தர்யம்னா அழகு.. அம்பாளை பற்றி அம்பாளோட அழகைப்பற்றி பாடி அந்த பாடல்களே அலங்காரமாவது தான் சௌந்தர்யலஹரியாம்.... சரி அந்த தலைப்பு ஏன் இந்த கதைக்கு??? போக போக தெரியும் தானே?? அதுவரை :icon_ush:

அதென்ன அமரன் என் தமிழ் புலமைன்னு சொல்லிட்டீங்க? தமிழே எனக்கு தகராறு.. என் தமிழை ரொம்ப சரி பண்ணினது கலை தான்... நிறைய தப்பு செய்வேன்.. பொறுமையா சரிப்பண்ணி இப்படி எழுதனும் அப்டி எழுதக்கூடாதுன்னு சொல்லி தருவார்...

உங்க எல்லாருடைய மனதை அன்பு நிறைந்த இந்த சௌந்தர்யலஹரி நிறைக்குமா??? கலை தான் சொல்லனும் அடுத்த பாகத்தில்.. :)

நன்றி அமரன்...

மஞ்சுபாஷிணி
08-08-2009, 08:26 AM
கதை நன்றாக துவங்கி இருக்கிறது. வித்தியாசமான முயற்சியில் நணபர் கலைவேந்தன் அவரது தொடரும் கதையை படிக்க ஆவலாயுள்ளேன்

நானும் படிக்க ஆவலாய் காத்திருக்கேன் ஐயா...நன்றி ஐயா...

மஞ்சுபாஷிணி
08-08-2009, 08:27 AM
அமரன் உங்களுடைய ஊக்கப்படுத்தும் பின்னூட்டம் ரொம்ப சந்தோஷமா இருக்கு... ரொம்ப நன்றி அமரன்...

மஞ்சுபாஷிணி
08-08-2009, 08:32 AM
மஞ்சுசுபாஷிணி, கலைவேந்தர்.
முயற்சி முழு வெற்றியடைய வாழ்த்துகள்..

முதுமைக்குத் தனிச்சோபை உண்டு.
கண்ணியமும் மரியாதையும் கலந்து வரும் அழகு அது.

அந்நியோன்யம் பகிரும் சொற்கள், செயல்கள்..
தனிமை, பொது இடம்,
இளசுகள், பெரியவர்கள்....

மெல்லிய இழைகள் இருக்கின்றன - எனக்கான மனக்களத்தில்..
இழைகள் அதிர்ந்தன வாசிப்பில்..
எந்த சுவரத்தில்? குழப்பம்...

தொடர்ச்சியில் இருக்கலாம் தெளிவு!

ரொம்ப நன்றி இளசு... ஆனா ஒன்னுமே புரியலைங்க... நீங்க என்ன சொல்றீங்கன்னு... எனக்கு விளக்கி சொல்லுங்க ப்ளீஸ்... எனக்கு புரியவே இல்ல... நான் எழுதின பகுதி நல்லா இல்லையா?? புரியலையா?? நீங்க என்ன சொல்றீங்கன்னு கூட எனக்கு புரியலையே..சொல்லுங்க ப்ளீஸ்....

மஞ்சுபாஷிணி
08-08-2009, 08:38 AM
கதை அன்பு சுமந்து வந்திருப்பது அனைவரையும் கவர்கிறது. ”இருவரது குரலிலும் அன்பைத்தவிர வேறெதுவுமே காணப்படவில்லை. மனதைக்கவரும் வார்த்தைகள்.புது முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

அன்பை மட்டுமே அடிப்படையாக வைத்து முதல் பகுதி எழுதிட்டேன்... மிக்க நன்றி ஐரேனிபுரம் பால்ராசய்யா.... அடுத்த பகுதில கலை தொடரும் வரிகள் இதை விட இன்னும் அருமையா இருக்கும் என்று எனக்கு நம்பிக்கை......

பா.ராஜேஷ்
08-08-2009, 10:03 AM
மிக அருமையான கதை. இந்த காலத்திற்கு ஏற்ற கதையும் கூட. பெற்றோறரை தள்ளி வைக்கும் இந்த காலத்தில் இந்த மாதிரி அன்பை மட்டும் பொழியும் கதை மிக அவசியம். கலை அய்யாவின் தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன். மிக நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

மஞ்சுபாஷிணி
08-08-2009, 11:25 AM
மிக அருமையான கதை. இந்த காலத்திற்கு ஏற்ற கதையும் கூட. பெற்றோறரை தள்ளி வைக்கும் இந்த காலத்தில் இந்த மாதிரி அன்பை மட்டும் பொழியும் கதை மிக அவசியம். கலை அய்யாவின் தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன். மிக நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

நன்றி ராஜேஷ்.... அடுத்த பகுதிக்காக நானும் ரொம்ப ஆர்வத்தோட காத்துக்கிட்டு இருக்கேன்... கலையப்பா காப்பாத்துப்பா.. கை தூக்கி விடப்பா..

கலைவேந்தன்
09-08-2009, 06:17 PM
சௌந்தர்யலஹரி - அத்தியாயம் இரண்டு


கலைவேந்தன் தொடர்கிறேன்...............!

விடிந்தது.

காலை நேரத்தின் மந்தமான சூழ்நிலை ரயிலில் நிலவியது.

அந்த ரயில்பெட்டி மட்டுமல்லாது அடுத்திருந்த அனைத்துப் பெட்டிகளுமே மனிதர்களின் ஆழ்ந்த உறக்கத்தால் நிறைந்திருந்தது!

ரயில் வண்டியோ தனது கடமையை மறவாமல் சென்று கொண்டிருந்தது!

சட்டென்று கண்விழித்த ராமனாதனுக்கு எதிர் பெர்த்தில் இருந்த அந்த வயதான தம்பதிகளின் நினைவு வந்தது!

நேற்றும் ஒன்றும் உண்ணாமல் வெறும் வெள்ளரிப்பிஞ்சை உண்டுவிட்டு படுத்த நினைவு வந்தது! பாவம்!

எந்த ஊர்க்காரங்களோ என்ன பிரச்சினையோ! பாத்தா படித்த தம்பதியா தெரியுது! ஒரு வேளை பிள்ளைகள் இவர்களைக் கவனிக்காமல் துரத்திவிட்டார்களோ?

பலவிதமான எண்ணங்களும் வந்து ராமனாதனுக்கு ஆயாசத்தைக் கொடுத்தது!

அட! இதைக் கவனியாமல் போனோமே! ஆச்சரியத்தால் ராமனாதனின் கண்கள் அகல விரிந்தது!

நேற்று இரவு படுக்கப்போகும்போது அந்த வயதானவர் - என்ன பேரோ சொல்லிக்கிட்டாங்களே - ஆங் - விஷ்வா அந்த பாட்டியை சௌபர்ணிகான்னு கூப்பிட்டார் - அவங்க மடியில கிடந்தார்! ஆனா இப்ப அந்த பாட்டி இவர் மடியில்!

அந்த பெரியவர் விஷ்வா கண்ணை மூடித்தூங்குவது போல் தெரிந்தாலும் அவரது கைகள் சௌபர்ணிகாவின் வெளுத்த பஞ்சு போன்ற முடியைக் கோதிக்கொண்டே இருந்தது அந்த பாட்டியின் அழகான களையான முகத்தில் நிம்மதியான தூக்கம் தெரிந்தது! கனவில் எதையோ கண்ட சிறுகுழந்தை போல் சிணுக்கம் தெரிந்தது!

ராமனாதனுக்கு அறுபது தான் ஆகிறது! அந்த பெரியவர்களுக்கு அவரை விடவும் அதிக வயது போல் தோன்றியது! ஒருகணம் ராமனாதனுக்கு ஒரு இனம்புரியா பயம் வந்து விலகியது!

நேற்று இரவில் அந்த தம்பதிகள் தமக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டதும் தமது கதைகளைப் பகிர்ந்துகொண்டு இடையிடையே விசும்பியதும் கேட்டது!

என்னவோ காரணம் புரியாமல் சமீபத்தில் காலமான தமது தந்தையின் நினைவு வந்து போனது! எண்பத்தைந்து வயதில் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டுத்தான் போயிருந்தார் கொள்ளுப் பேரன்களைக்கூட கண்ணால் கண்டுவிட்டு போகும் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கிறது?

திடீரென பெரியவர் விஷ்வாவுக்கு பலத்த இருமல்!

கூடிய வரையில் தமது இருமலை கட்டுப்படுத்தி அந்த பாட்டியின் உறக்கம் கலையாமல் பார்த்துக்கொள்ள முயன்றார்! ஆனாலும் இருமலையும் தும்மலையும் மலஜலங்களையும் அடக்குதல் சாத்தியமா என்ன?

அவரது இருமலின் அதிர்வில் கண்விழித்தேவிட்டார் சௌபர்ணிகா!

'' என்னடா? என்ன செய்யுது ? '' பதறியவாறு எழுந்த அந்த மூதாட்டி விஷ்வா பெரியவரின் நெஞ்சைத் தடவிவிட்டார்!

'' உனக்கு பனி ஒத்துக்கலைடா... நேத்து ராத்திரி பனியில் காத்திருந்தியா அதாண்டா! இப்ப என்ன செய்வேன்? மருந்து இங்கே கிடைக்குமா ரெயிலில்? ''

அந்த மூதட்டியின் பதட்டத்தில் உலகளவு அன்பு தேங்கிக் கிடந்தது!

'' ஒண்ணுமில்லடி சாதாரண இருமல் சரியாப்போயிடும் பதட்டப்படாதேடி!'' அந்தப் பெரியவர் விஷ்வா ஆறுதல் கூறினார் சௌபர்ணிகா பாட்டிக்கு!

'' ஏண்டி இப்படி எதுக்கேடுத்தாலும் பயப்படுறே? சின்ன வயசுல நீ எவ்வளவு கவலையே இல்லாம இருந்தே? மறந்து போச்சா? ''

பெரியவரின் கண்களில் பழைய சம்பவங்கள் நிழலாடத் தொடங்கின!

'' புளியங்கா வேணுமாடி உனக்கு ''

'' பறிச்சு தாயேண்டா விஷ்வா ''

'' அப்ப நீ உன்னோட வீட்ல இருந்து எனக்கு என்ன கொண்டு வந்து தருவே சாப்பிட ''

'' போடா அச்சு பிச்சுன்னு பேசாதேடா விச்சுப் பையா எப்பப் பார்த்தாலும் சாப்பிடறதைப் பத்தியே பேசுறியே ''

'' என்னடி பண்றது எனக்கு சாப்பிடறதுல இஷ்டம் உனக்கு எதுலடி?? ''

'' டாய் விஷ்வா வேண்டாம் வீணா என்னை கோபப்படுத்தாதே ''

'' ஏண்டீ நான் உன்னை விட பெரியவன் வாடா போடா சொல்றியே... ஒழுங்கா மரியாதையா கூப்பிடு ''

'' எப்படியாம் ''

'' அத்தான்னு ''

'' போடா அச்சு பிச்சு விச்சு பயலே ''

'' ஏய் சுண்டெலி நீ என்கிட்ட மாட்டாமலேயா போகப்போறே இரு ''

சௌபர்ணிகா அவன் கையில் அகப்படாமல் மடியில் கட்டிய புளியங்காய் சிதற ஓடுகிறாள். பின்னாலேயே விஷ்வா விழ இருந்த அரை ட்ரௌசரை இறுக்க கையில் பிடித்துக்கொண்டு அவள் பின்னே ஓடினான்.

'' விஷ்வா சார்! விஷ்வா சார் !''

சட்டென்று கலைந்தது கனவு! அவரையே குறுகுறு என்று பார்த்துக் கொண்டு பழைய நினைவுகளில் மூழ்கிப்போயிருந்த சௌபர்ணிகாவும் சுயநினைவுக்கு வந்தாள்!

எதிரே ராமனாதனின் கைகளில் இரண்டு டீ கப்புகள்!

இனி மஞ்சு தொடர்வார்.......!

கலைவேந்தன்
09-08-2009, 06:27 PM
நண்பர்களே,

மஞ்சு தொடங்கிவைத்த அன்பு ஊற்றை கூடிய வரையில் தொய்வடையாமல் தொடர்ச்சி குன்றாமல் எழுதி இருக்கிறேன்.

ஒருவர் ஸ்டைலில் இன்னொருவர் எழுதுவது சிரமம் தான்.

ஆனாலும் என் ஸ்டைல் மஞ்சுவுடைய சரள நடைக்கு ஈடுகொடுப்பது போல் முயற்சித்து இருக்கிறேன்.

மஞ்சு அளவுக்கு எமோஷனல் கதை எழுதுவது எனக்கு கொஞ்சம் சிரமமே என்றாலும் முயன்றிருக்கிறேன்.

உங்கள் நடுநிலை விமரிசனங்கள் எங்களில் தகுந்த மாற்றங்களையும் முன்னேற்றஙகளையும் கொணர வைக்கும்.

உங்கள் நடுநிலையான விமரிசனங்களை பணிவுடன் எதிர் நோக்கும் கலைவேந்தன் மற்றும் மஞ்சுபாஷிணி.

மதுரை மைந்தன்
09-08-2009, 08:38 PM
ரொம்ப அருமையாக தொடர்ந்திருக்கிறிர்கள் கலைவேந்தன் அய்யா. சகோதரி மஞ்சுபாஷிணியின் உருக்கமான நடையுடன் உங்களுடைய நகைச்சுவையையும் (அச்சு பிச்சு விச்சு) கலந்து மெருகேற்றியிருக்கிறீர்கள்

அமரன்
09-08-2009, 09:02 PM
இரு பழங்களின் பருவங்களை வைத்து கதை சுழல்வதை இரண்டாம் பாகத்தில் உணர முடிகிறது. ஆனால் கதையின் திசையை பாதிதான் உய்த்துணர முடிகிறது.

கதையின் திசையை முற்றிலும் உய்த்துணர முடியாதளவுக்கு குழம்பாக இருந்தால் அது தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் அறுவைக்குச் சமானம். குழம்பும் இரசமும் சேர்த்துப் பிசைந்த சாதம் போல் இரண்டாம் பாகம் இருப்பதால் இது நாவலுக்குச் சமானம். எந்த வித இடைவெளியும் இல்லாமல் பிணைக்க்கப்பட்ட பாகங்களில் அவரவர் முத்திரை பளிச்சிடுகிறது.

பாராட்டுகள்.

மஞ்சுபாஷிணி
10-08-2009, 04:56 AM
ஆஹா அருமையாக தொடர்ந்திருக்கிறாய் கலை....ஒரு கதையை இருவர் எழுதுவது எத்தனை சிரமம் என்பதை இதோ இந்த கதையில் எனக்கு உணர வைத்திருக்கிறாய்... இருவருக்கும் இருக்கும் அன்பை நான் முதல் அத்தியாயத்தில் சொன்னேன்... அதுல ஒரு குட்டி விஷயம் சொன்னேன். அதை யாருமே கண்டுபிடிக்கலன்னு நினைக்கிறேன்... இன்னொரு முறை முதல் அத்தியாயம் படிச்சு பார்த்தால் கண்டிப்பா ஈசியா புரியும் வகையில் தான் வைத்தேன் அந்த குட்டி விஷயத்தை... யாருமே கண்டுபிடிக்கலன்னாலும் பரவாயில்லை.. உன் தொடர்ச்சி எனக்கு ஆச்சர்யம் கொடுத்தது.. திடிர்னு மலரும் நினைவுகள் போயிட்டியே? இனி நான் எப்படி தொடர்வேன்? சரி கண்டிப்பா முயல்கிறேன். அருமையான தொடர்ச்சி கலை.. மகிழ்ச்சி எனக்கு...

மஞ்சுபாஷிணி
10-08-2009, 04:57 AM
ரொம்ப அருமையாக தொடர்ந்திருக்கிறிர்கள் கலைவேந்தன் அய்யா. சகோதரி மஞ்சுபாஷிணியின் உருக்கமான நடையுடன் உங்களுடைய நகைச்சுவையையும் (அச்சு பிச்சு விச்சு) கலந்து மெருகேற்றியிருக்கிறீர்கள்

கலை இப்படி மலரும் நினைவுகள் போடுவார்னு நானும் எதிர்ப்பார்க்கலை ஐயா... அருமையான பகுதியாக அமைந்தது இரண்டாவது அத்தியாயமும். கலையின் சார்பிலும் நன்றி ஐயா...

மஞ்சுபாஷிணி
10-08-2009, 04:59 AM
இரு பழங்களின் பருவங்களை வைத்து கதை சுழல்வதை இரண்டாம் பாகத்தில் உணர முடிகிறது. ஆனால் கதையின் திசையை பாதிதான் உய்த்துணர முடிகிறது.

கதையின் திசையை முற்றிலும் உய்த்துணர முடியாதளவுக்கு குழம்பாக இருந்தால் அது தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் அறுவைக்குச் சமானம். குழம்பும் இரசமும் சேர்த்துப் பிசைந்த சாதம் போல் இரண்டாம் பாகம் இருப்பதால் இது நாவலுக்குச் சமானம். எந்த வித இடைவெளியும் இல்லாமல் பிணைக்க்கப்பட்ட பாகங்களில் அவரவர் முத்திரை பளிச்சிடுகிறது.

பாராட்டுகள்.

வாங்க அமரன்... சௌக்கியமா இருக்கீங்களா? :) இது நெடுந்தொடரா கொண்டு போகனும்.. அதே சமயம் கதையில் தொய்வில்லாமல் இருக்கணும்.. எல்லாருக்கும் பிடித்தமாதிரி இருக்கணும்.. இப்படி எத்தனையோ இருக்கணும் என்ற ஆவலில் தொடங்கிய கதைப்பா... அடுத்த பாகம் நான் வியாழன் அன்று தருகிறேன்.. படித்து ஊக்கம் கொடுத்து உடனே பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி அமரன்....கலையின் இந்த அத்தியாயம் நான் நினைத்ததை விட அருமையா எழுதி இருக்கார். நான் இதை அருமையா தொடரனுமேன்னு ஒரு பயம் மனசுக்குள்...

கா.ரமேஷ்
10-08-2009, 05:55 AM
முதுமை யில் இருந்து திடீரென இளமைக்கு சென்றுவிட்டீர்கள் ம்ம்ம் "அச்சு பிச்சு விச்சு" ணு வேற அருமையா கிளம்பிட்டீங்க கலை.. தொடருங்கள் மஞ்சு சரியான சவால்தான்......

மஞ்சுபாஷிணி
12-08-2009, 05:09 AM
ஆமாம் ரமேஷ்... தொடக்கமே கலை மலரும் நினைவுகளாக தொடங்கிவிட்டார்... முயல்கிறேன்... நன்றி ரமேஷ்....

samuthraselvam
12-08-2009, 06:04 AM
மஞ்சு அக்கா தான் கலக்கராங்கன்னு பார்த்த கலை அண்ணா அதைவிட சூப்பரா கலக்குறாரு....
மஞ்சு அக்கா எப்படி சமாளிக்க போறீங்க?

நீங்க ரெண்டு பெரும் போட்டி போட்டுட்டு கதை அமைக்க எங்களுக்கு படிக்க சந்தோசம் தான்....

அன்பை மட்டுமே அதுவும் வயதானாலும் இருக்கும் ஒற்றுமையுடன் கலந்த அன்பை அப்படியே இருவரும் படம் பிடித்து காட்டுகிறீர்கள்....

அடுத்த பாகத்தை தொடர மஞ்சு அக்காவுக்கு வாழ்த்துக்கள்....

அப்புறம் ஒரு சந்தேகம்..... மஞ்சு அக்கா நீங்க அவினாசிக்காரரா?

பா.ராஜேஷ்
12-08-2009, 05:33 PM
சபாஷ் சரியான போட்டி. தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன்.

இளசு
13-08-2009, 06:08 AM
இருவர் எழுதும் கதைகள் - இலகுவற்ற இலாவகம் வேண்டும் சுவாரசியச் சவால்..

கலைவேந்தர், மஞ்சு சுபாஷிணி - இருவருக்கும் வாழ்த்துகள்!

சிறப்பாகவே இரட்டைப்பயணம் இருக்கிறது..

தொடருங்கள்..

கலைவேந்தன்
13-08-2009, 07:35 AM
ரொம்ப அருமையாக தொடர்ந்திருக்கிறிர்கள் கலைவேந்தன் அய்யா. சகோதரி மஞ்சுபாஷிணியின் உருக்கமான நடையுடன் உங்களுடைய நகைச்சுவையையும் (அச்சு பிச்சு விச்சு) கலந்து மெருகேற்றியிருக்கிறீர்கள்

மிக்க நன்றி மதுரை மைந்தன் அவர்களே...

மஞ்சு பொன் வைத்து அழகுபார்த்த இடத்தில் நான் பூவைத்து அழகுபார்த்திருக்கிறேன்.

மிக்க நன்றி மஞ்சுவின் சார்பிலும்.

கலைவேந்தன்
13-08-2009, 07:39 AM
இரு பழங்களின் பருவங்களை வைத்து கதை சுழல்வதை இரண்டாம் பாகத்தில் உணர முடிகிறது. ஆனால் கதையின் திசையை பாதிதான் உய்த்துணர முடிகிறது.

கதையின் திசையை முற்றிலும் உய்த்துணர முடியாதளவுக்கு குழம்பாக இருந்தால் அது தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் அறுவைக்குச் சமானம். குழம்பும் இரசமும் சேர்த்துப் பிசைந்த சாதம் போல் இரண்டாம் பாகம் இருப்பதால் இது நாவலுக்குச் சமானம். எந்த வித இடைவெளியும் இல்லாமல் பிணைக்க்கப்பட்ட பாகங்களில் அவரவர் முத்திரை பளிச்சிடுகிறது.

பாராட்டுகள்.


கதைத்தொடக்கத்திலேயே கதையின் ஓட்டம் முழுவதும் புரிந்துவிட்டால் கதையின் சுவாரசியம் தொய்வடையும் நண்பரே...!

மேலும் கதையின் கரு மட்டுமே எங்களால் விவாதிக்கப்பட்டு உள்ளது இதுவரை.

கதையின் சம்பவங்கள் உரையாடல்களில் நாங்கள் சுதந்திரமாகச் செயல்படுகிறோம்.

பாராட்டுக்கு மிக்க நன்றி..!

கலைவேந்தன்
13-08-2009, 07:41 AM
ஆஹா அருமையாக தொடர்ந்திருக்கிறாய் கலை....ஒரு கதையை இருவர் எழுதுவது எத்தனை சிரமம் என்பதை இதோ இந்த கதையில் எனக்கு உணர வைத்திருக்கிறாய்... இருவருக்கும் இருக்கும் அன்பை நான் முதல் அத்தியாயத்தில் சொன்னேன்... அதுல ஒரு குட்டி விஷயம் சொன்னேன். அதை யாருமே கண்டுபிடிக்கலன்னு நினைக்கிறேன்... இன்னொரு முறை முதல் அத்தியாயம் படிச்சு பார்த்தால் கண்டிப்பா ஈசியா புரியும் வகையில் தான் வைத்தேன் அந்த குட்டி விஷயத்தை... யாருமே கண்டுபிடிக்கலன்னாலும் பரவாயில்லை.. உன் தொடர்ச்சி எனக்கு ஆச்சர்யம் கொடுத்தது.. திடிர்னு மலரும் நினைவுகள் போயிட்டியே? இனி நான் எப்படி தொடர்வேன்? சரி கண்டிப்பா முயல்கிறேன். அருமையான தொடர்ச்சி கலை.. மகிழ்ச்சி எனக்கு...

மிக்க மகிழ்ச்சி மஞ்சு...! எல்லாம் உன் ஆசியே...!

கலைவேந்தன்
13-08-2009, 07:43 AM
முதுமை யில் இருந்து திடீரென இளமைக்கு சென்றுவிட்டீர்கள் ம்ம்ம் "அச்சு பிச்சு விச்சு" ணு வேற அருமையா கிளம்பிட்டீங்க கலை.. தொடருங்கள் மஞ்சு சரியான சவால்தான்......

மிக்க நன்றி ரமேஷ்...! இன்னும் சற்று நேரத்தில் மஞ்சு தன் பகுதியைப் பதிப்பார் என்று அறிய வருகிறேன்.

பார்ப்போம்.

கலைவேந்தன்
13-08-2009, 07:46 AM
மஞ்சு அக்கா தான் கலக்கராங்கன்னு பார்த்த கலை அண்ணா அதைவிட சூப்பரா கலக்குறாரு....
மஞ்சு அக்கா எப்படி சமாளிக்க போறீங்க?

நீங்க ரெண்டு பெரும் போட்டி போட்டுட்டு கதை அமைக்க எங்களுக்கு படிக்க சந்தோசம் தான்....

அன்பை மட்டுமே அதுவும் வயதானாலும் இருக்கும் ஒற்றுமையுடன் கலந்த அன்பை அப்படியே இருவரும் படம் பிடித்து காட்டுகிறீர்கள்....

அடுத்த பாகத்தை தொடர மஞ்சு அக்காவுக்கு வாழ்த்துக்கள்....

அப்புறம் ஒரு சந்தேகம்..... மஞ்சு அக்கா நீங்க அவினாசிக்காரரா?


மிக்க நன்றி சமுத்திரசெல்வம் அவர்களே...!

கண்டிப்பாக இதில் அன்பைத்தவிர எந்த வில்லனும் வில்லியும் வரமாட்டார்கள் என்று நம்புகிறோம்.

பார்ப்போம் காலம் என்ன சொல்கிறது என்று.

அவர் அவிநாசிக்காரர் இல்லை நண்பரே...!

கலைவேந்தன்
13-08-2009, 07:48 AM
சபாஷ் சரியான போட்டி. தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன்.

மிக்க நன்றி ராஜேஷ்...!

உங்கள் கையொப்பம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

கலைவேந்தன்
13-08-2009, 07:49 AM
இருவர் எழுதும் கதைகள் - இலகுவற்ற இலாவகம் வேண்டும் சுவாரசியச் சவால்..

கலைவேந்தர், மஞ்சு சுபாஷிணி - இருவருக்கும் வாழ்த்துகள்!

சிறப்பாகவே இரட்டைப்பயணம் இருக்கிறது..

தொடருங்கள்..

உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் இருவரின் நன்றிகளும் நண்பரே...!

இனி மஞ்சு தொடர்வார்......

மஞ்சுபாஷிணி
13-08-2009, 08:13 AM
நன்று கலை....!

மஞ்சு தொடர்கிறேன்.....!


ராமனாதன் இரண்டு டீ கப் களை அந்த வயதான தம்பதிகளுக்கு நீட்டினார்!

'' இந்தாங்க சார்,,,! ரெண்டு பேரும் குடிங்க களைப்பா இருக்கீங்க! ''

கனவில் ஆழ்ந்திருந்த விஷ்வாவின் கவனம் கலைந்து தலை உயர்த்திப் பார்த்தார்.

'' தம்பி! இவள் டீ காபி எதுவும் குடிப்பதில்லை! நான் மட்டும் தான் குடிப்பேன்! ஒரு கப் போதும்பா! பெட் காபி குடிக்கிற பழக்கத்தை இன்னும் விடலை நான் இத்தனை வருஷமாகியும்! ''

இந்த பேச்சுவார்த்தையின் சத்தத்தில் கண்விழித்துவிட்ட சௌபர்ணிகா பாட்டி எழுந்து உடகார்ந்து கொள்ள முயன்ற போது உடலில் தெம்பே இல்லாமல் சிரமப்பட்டு எழுந்தாள்!

'' பாத்து சௌபா '' கனிவுடன் கூறியது மட்டுமின்றி அவளைத் தாங்கலாய் எழுப்பியும் அமரவைத்தார் விஷ்வா!

'' ஏண்டி நீ இப்படி சாப்பிடாம உடம்பைக்கெடுத்து வெச்சிருக்கே? பாரு! காத்து அடிச்சாலே பறந்து போயிடுவே போலிருக்கே! ''

'' டாய் விஷ்வா! என்ன மட்டும் சொல்லுறியே! உனக்கு அங்க மட்டும் என்ன வாழுதாம்? நீயும் தான் எலும்பும் தோலுமா மாறிட்டே! இப்ப எல்லாம் பசியே மரத்துப்போச்சுடா விஷ்வா! ஒரு காலத்துல எப்படி தின்னு குண்டா இருந்தேன்! உனக்கு ஞாபகம் இருக்காடா? ''

விஷ்வா டீயைக் குடித்துகொண்டிருக்கும் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த சௌபர்ணிகாவின் கண்களில் காட்சிகள் விரியலாயின!

'' சௌபர்ணிகா, போதுண்டி சாப்பிட்டது! ஏற்கனவே நீ ரொம்ப குண்டு டீ ''

'' டாய் விஷ்வா! ஏ விஷவாயு! சும்மாருடா! நான் சாப்பிடும்போது கண்வெக்காதே படவா! ''

'' ஏண்டி உனக்கு சாப்பிடும்போது மூக்கு ஒழுகுது? ''


'' போடா கிண்டல் பண்ணாதே ''

'' இல்லடி நீ கல்யாணம் பண்ணிக்கபோற உன்னோட ஆம்படையான் வேஷ்டி பூரா உன் மூக்கை துடைக்கவே போறாது..''

'' அம்மா இங்க பாரும்மா இந்த அச்சுப் பிச்சு விச்சு பயலை...என்னை கிண்டல் பண்ணிட்டே இருக்கான் ''

'' என்னடா விஷ்வா...ஏன் அவளை கிண்டல் பண்றே? அவளுக்கு சாப்பிடும்போது இப்படி தான் மூக்குல இருந்து தண்ணியா வரும் ''

'' அதான் அத்தே சொல்றேன்... எனக்கு வரலையே ''

'' இருடா இரு உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்.அம்மா எனக்கு ரசம் ஊத்தும்மா ''

'' அத்தே நான் போறேன் அவளை சீக்கிரம் அனுப்புங்க..சீவி சிங்காரிச்சு அவளை அழகு படுத்தினாலும் கறுப்பி ஒன்னும் சரியாக மாட்டா அத்தே...அவளை யாரு கல்யாணம் பண்ணிப்பா....கறுப்பி....! வேணும்னா எனக்கு கல்யாணம் பண்ணி தர்றிங்களா அத்தே? ஹூம்... நான் தான் இவளுக்கு வாழ்க்கை *கொடுக்கணும் ''

''போடா போக்கிரி பயலே ''

'' அம்மா நான் ஏம்மா கறுப்பா பிறந்தேன் ? ''

'' கண்ணன் கறுப்பு தானே அது போல நீயும் கறுப்பு....''

'' அம்மா கண்ணனை பிடிக்கிற மாதிரி என்னை பிடிக்குமாம்மா எல்லாருக்கும்?''

'' நீ கறுப்பா இருந்தாலும் களையா இருக்கே கண்மணி ''

'' சௌபூ சீக்கிரம் வாடீ லேட்டாது...''

'' இதோ வந்துட்டேண்டா விஷ்வா.....''

'' சரி கிளம்பு புத்தகம் எல்லாம் எடுத்துட்டியா ? ''

'' எடுத்துக்கிட்டேன் அம்மா...''

' '' சரிம்மா வரேன்.....!

'' அப்பா இல்லாத பொண்ணுன்னு உன்னை செல்லம் கொடுத்து கெடுக்கல சௌபர்ணிகா ! இப்ப உனக்கு விவரமெல்லாம் வந்துடுச்சு! பாத்து நடந்துக்கோ ''

'' சரிம்மா! தினம் தான் இதை சொல்றே நீ! ''

*'' என்ன சௌபூ என் மேலே கோபமா ?'' விஷ்வா!

'' போடா என்னோட பேசாத ....என்னை கறுப்பின்னு சொன்னியே...''

'' நீ கறுப்பா இருப்பதும் நல்லதுக்கு தாண்டி அப்ப தான் உன்னை யாரும் கட்டிக்க மாட்டா நானே உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்..''

’’அச்சு பிச்சுன்னு பேசாதடா நீ பார்க்க எவ்ளோ அழகா பொன் நிறத்துல இருக்கே என்னை பாரு எவ்வளவு கறுப்பா.. எங்க அப்பாவோட நிறத்தை எனக்கு குடுத்துட்டாரேடா விஷ்வா ''

மூக்குறியத் தொடங்குகிறாள்..சௌபர்ணிகா!

உடனே விஷ்வா தன் சட்டை நுனி ஒரு பட்டன் கழற்றி அவள் கண்ணீரையும் மூக்கையும் துடைத்து விடுகிறான்.

'' அழாதடி நான் இருக்கேன் உனக்கு எப்பவும்... உனக்காக. நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேண்டி...உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்..''

'' விஷ்வா இப்படி எல்லாம் பேசினா அப்புறம் உன்னோட விளையாட வர மாட்டேன் போடா ''

ஓடுகிறாள்.

திடீரென்று ரயில் பிரேக்கிட்டு மெதுவாய் ஊர்ந்து பின் சட்டென்று நின்றது!


இனி கலைவேந்தன் தொடர்வார்!

மதுரை மைந்தன்
13-08-2009, 08:54 AM
பிளாஷ் பேக்கில கதை அருமையாக செல்கிறது. அடுத்து நண்பர் கலைவேந்தன் கதையை எப்படி நகர்த்துகிறார் என்று அறிய ஆவலாயிருக்கிறது

அமரன்
13-08-2009, 11:48 AM
கறுப்பும் வெள்ளையுமாக கருவிழிகள் போல் நேற்ற்றய நினைவுகள். கலர் கனவுகளாக நாளைகள். இரண்டுக்கும் நடுவில் இன்றைய நிஜங்கள். ரயில்பெட்டி நிறைஞ்சுக்கு. பயணம் ரஞ்சனையாக உள்ளது. தொடருங்க கலைவேந்தே.

கலைவேந்தன்
14-08-2009, 09:34 AM
முதுமையைத்தொட்டு விட்ட மனிதர்கள் தமது இளமைக்காலத்தை பின்னோக்கிப் பார்த்து சுகமுறுவது மனித இயல்பு. அந்த இயல்பை நீ முதல் அத்தியாயத்தில் கோடிட்டுக்காட்டவே நானும் அதை என் வழிமுறையாகக் கொண்டேன்.

இந்த அத்தியாயத்தில் இளமை ததும்பும் இந்த இனிய நினைவுகளை மேலும் அன்பொழுகப் படைத்துவிட்டாய் என் இனிய தோழியே...!

இனி நானும் உன்னளவுக்கு யோசித்து இன்றோ நாளையோ அடுத்த அத்தியாயம் தருகிறேன் மஞ்சு.

கா.ரமேஷ்
14-08-2009, 12:17 PM
அழகான காதலை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் இருவரும், அதற்க்காகவே மனமார்ந்த பாராட்டுக்களை உங்களிருவருக்கும் அள்ளி கொடுக்கலாம்... இளமை தொடங்கி முதுமை வரை ஒரு காதல் நிலைத்து நிற்குமாயின் சொர்க்கம் வெளியில் தேட தேவையில்லை.இந்த கருத்தாளம் தான் உங்கள் கதையின் ஜீவனாய் இரயில் பயணத்தோடு நகர்ந்து கொண்டிருக்கிறது... நாங்களும் அதன் கூடவே...

கீதம்
14-08-2009, 11:12 PM
ஓடும் ரயிலில் நாங்களும் கூடவே பயணிப்பது போல் ஒரு உணர்வு. இக்கதையில் வரும் முதிய தம்பதி போல் இருவரை நானும் ஒரு ரயில் பயணத்தில் சந்தித்திருக்கிறேன். அழகின் இரு கோடிகளிலும் இருந்த அவர்களிடையே இருந்த அன்னியோன்னியம் என் மனதை வெகுவாகக் கவர்ந்தது. பல வருடங்கள் ஆனபிறகும் இக்கதையைப் படிக்கையில் அந்நிகழ்வுகள் பசுமையாய் என் நெஞ்சில் நிழலாடுகின்றன. அருமையான கதைக்கு வாழ்த்துகள் நண்பர்களே!

கலைவேந்தன்
18-08-2009, 03:58 PM
மிக்க நன்றி நண்பர்களே...~.~

த.ஜார்ஜ்
18-08-2009, 04:25 PM
கலை,மஞ்சு
நல்லாவே யோசிக்கிறீங்கப்பா.
கதை ரயிலை விட்டு எப்பொ இறங்கும்னு காத்திட்டிருக்கேன்.
பிள்ளைங்க துரத்தினாங்களா.. இல்ல.. பிள்ளைகளுக்காக வெளியேறினாங்களா..
முடிச்ச சீக்கிரம் அவுத்து விடுங்க.. டென்ஷனாகுதில்ல

கலைவேந்தன்
18-08-2009, 04:37 PM
இன்னும் சிறிது நேரத்தில் அடுத்த பகுதி இடுகிறேன்..?

மஞ்சுபாஷிணி
18-08-2009, 04:46 PM
கதை வாசித்து அழகு பின்னூட்டமிட்ட நண்பர்கள்

அமரன்
மதுரை மைந்தன் ஐயா
கீதம்
ரமேஷ்
ஜார்ஜ்

எல்லோருக்கும் கலையின் சார்பிலும் மனமார்ந்த அன்பு நன்றிகள்....

மஞ்சுபாஷிணி
18-08-2009, 04:48 PM
கலை,மஞ்சு
நல்லாவே யோசிக்கிறீங்கப்பா.
கதை ரயிலை விட்டு எப்பொ இறங்கும்னு காத்திட்டிருக்கேன்.
பிள்ளைங்க துரத்தினாங்களா.. இல்ல.. பிள்ளைகளுக்காக வெளியேறினாங்களா..
முடிச்ச சீக்கிரம் அவுத்து விடுங்க.. டென்ஷனாகுதில்ல
இன்னும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பொறுக்கனுமே நீங்க :)

மஞ்சுபாஷிணி
18-08-2009, 04:50 PM
இன்னும் சிறிது நேரத்தில் அடுத்த பகுதி இடுகிறேன்..?
காத்துட்டு இருக்கோமுல்ல கலை.. சீக்கிரம் போடுப்பா....

கலைவேந்தன்
18-08-2009, 04:50 PM
நல்லது மஞ்சு!


இனி கலைவேந்தன் எழுதுகிறேன்!


ரயில் நின்றது.

ஏதோ ஒரு ஸ்டேஷன்.

காலை 7 மணி அளவில் ஆகிவிட்டதால் ரயிலில் இருந்த பயணிகள் சோம்பல் முறித்து எழுந்து சுறுசுறுப்பாகி விட்டிருந்தனர்!

சற்றே பெரிய ஸ்டேஷன் என்பதால் அங்கே ஆரவாரம் குறைவில்லாமல் இருந்தது!

ராமனாதனின் பேரக்குழந்தைகள் கண்விழித்து மேல் பர்த்திலிருந்து எட்டிப்பார்த்தன!

'' பாட்டி. எனக்கு ஹார்லிக்ஸ் ''

'' பாட்டி எனக்கும் ''

12 வயது பெண் குழந்தை ராதிகா.

10 வயது பையன் சோமன்.

மகன் வயிற்றுப்பேரன்கள்!

கொள்ளுத் தாத்தாவின் அஸ்தி கரைக்க கூடவந்தே ஆகவேண்டுமெனும் பிடிவாதத்துடன் தாத்தா பாட்டியுடன் புறப்பட்டு வந்தவர்கள்.

'' இதோ தர்றேன் போய் முதல்ல பல் தேய்ச்சுட்டு வாங்கடா! ''

ராமனாதன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா பெரியவரைக் கேட்டார்.

'' ஐயா, இந்த வயதான காலத்துல ரெண்டுபேரும் தனியா புறப்பட்டு இத்தனை தூரம் பயணம் செய்யும் நோக்கம் என்னங்கையா? ''

'' ம்ம்ம்....என்னது ? '' ஏதோ நினைவில் உலவிக்கொண்டிருந்தவருக்கு ராமனாதனின் கேள்வி சட்டென்று மூளையில் ஏறவில்லை!

ராமனாதனின் கேள்வியையும் அதற்கு விஷ்வா விழிப்பதையும் பார்த்துக்கொண்டிருந்த சௌபர்ணிகா கூறினாள்.

'' தம்பி நாங்க ரெண்டு பேரும் காசியாத்திரை போறோம்! அங்க கொஞ்ச நாள் தங்கிட்டு வரலாமுன்னு போறோம். முடிந்தா அங்கயே சிவலோகம் போயிடனும்..,,,'' சௌபர்ணிகாவின் கண்கள் நனைந்தன!

'' அப்படி சொல்லாதிங்கம்மா! எல்லாம் அவனருள் தான்! ''

ராமனாதனுக்கும் வருத்தம் மேலிட்டது இந்த ஆதர்சத்தம்பதியைப் பார்த்து!

சௌபர்ணிகாவின் கண்கள் கலங்கியதைப் பார்த்த விஷ்வாவின் கைகள் தன்னிச்சையாய் மேலெழும்பி அவளது கண்களைத் துடைத்தன!

இருவரது பாசத்தையும் பார்த்து ராமனாதனும் கமலாவும் கொஞ்சம் பொறாமையே பட்டனர்!

கமலா தனது பேரன்களுக்கு ஹார்லிக்ஸ் கலக்கத் தொடங்கினாள்.

பேண்ட்ரி காரிலிருந்து ஃப்ளாஸ்கில் அதிகாலையில் வாங்கிவந்திருந்த வென்னீரில் ஹார்லிக்ஸ் கலந்து பிள்ளைகளுக்கும் ராமனாதனுக்கும் கொடுத்தாள்!

விஷ்வா பெரியவரிடமும் சௌபர்ணிகாவிடமும் கேட்டாள்.

அவர்கள் அமைதியாய் மறுத்தனர்!

இருவரது கண்களும் ஏதோ பழைய நினைவுகள் நிழலாடின!


* * * * * * *

''சௌபர்னிகா நீ இப்படி எலும்பும் தோலுமா இருக்கியே நீ சாப்பிடறதே இல்லையா? .....ஆங்.... அதெல்லாம் இல்லையே..........தட்டு நிறைய நீ கொட்டிக்கிறதை நான் பாத்திருக்கேனே......''

'' வேண்டாம் விஷ்வா என் கிட்ட அடி வாங்காதே! எத்தனை வாட்டி அடி வாங்கினாலும் உனக்கு உடம்புல படவே படாதாடா? ''

'' இத்தனூண்டு கை! அதால ஒரு அடி ! போடி! ''

'' டேய் விஷ்வா வேண்டாண்டா ! என் கிட்ட வீணா அடிவாங்கி எனக்கு பாவத்தை சேத்துவைக்காதே! ''

'' ஏய் குட்டை வாலு ! என் கூட பல்லாங்குழி ஆட வர்றியா? ''

'' போடா எனக்கு ஹோம் வர்க் பண்ணனும்! ''

'' தோத்துடுவோம்னு பயந்தானே! ஹாஹா! ''

'' நான் ஒண்ணும் பயப்படலை டா! நிஜமாவே ஹோம்வர்க் இருக்குடா! ரங்கா சார் அடிச்சே கொன்னுடுவார் டா! ''

'' சரிடீ சொல்லு நானும் உனக்கு ஹோம்வர்க் ல ஹெல்ப் பண்றேன்! சீக்கிரம் முடிச்சுட்டு நாம பல்லாங்குழி ஆடலாம்! ''

'' வேண்டாண்டா விஷ்வா! உனக்கு சிரமம் டா! ''

'' சௌபா! உனக்கு ஹெல்ப் பண்றதுல எனக்கு என்னடீ சிரமம்! நீ மட்டும் என்கிட்ட அன்பா பேசுடீ! உனக்கு எந்த குறையும் இல்லாம வெச்சு காப்பாத்தறேண்டி செல்லம்! ''

'' அச்சு பிச்சுன்னு உளறாதே விஷ்வா! சரி வா சீக்கிரம் வீட்டுப்பாடம் முடிச்சுட்டு பல்லாங்குழி ஆடலாம் வாடா! ''

* * * *
'' டாய் விஷ்வா! என் புதுப்பாவாடை சட்டை எப்படிடா இருக்கு? ''

'' சௌபா உனக்கு இந்த கருநீல சட்டையும் அரக்கு கல்ர் பாவாடையும் ரொம்ப அழகா இருக்குடி! உன் ரெட்டை சடையும் உனக்கு இன்னும் அழகு சேக்குதுடி! என் கண்ணே பட்டுடும். அத்தை கிட்ட சொல்லி சுத்திப் போட சொல்லுடி ''

'' போடா கிண்டல் பண்ணாதே! நான் கறுப்பு தானே! நான் எப்படி அழகா இருப்பேன்? ''

'' சௌபா ஏண்டி உன்னையே அடிக்கடி கறுப்புன்னு சொல்லி தாழ்த்திக்கிறே? உன்னைமாதிரி அழகு யாருக்கும் வராதுடி! ''

'' விஷ்வா நீ நிஜமா சொல்றியாடா? நிஜமா நான் அழகா இருக்கேனா? ''

'' இரு கிட்ட வந்து தொட்டு பாத்து ஒட்டுதான்னு பாத்து சொல்றேன்! ''

'' என்ன ஒட்டுதான்னு .....? ''

'' உன் கருப்புதான்! ''

'' விஷ்வா........ஆ.....போடா இனி என் கிட்ட பேசாதே ம்ம்ம்ம்ம்ம்...''

'' ஐயோ சௌபா கிண்டல் பண்ணேண்டி! என் செல்லம் அழாதே! ''

'' டாய் என்னை கட்டிப் பிடிக்காதே! ''

'' ஏண்டி? நீ எனக்கு தானே சொந்தம் .? கட்டிப்பிடிச்சா என்ன? ''

'' டாய் அதெல்லாம் தப்புடா! அம்மா கிட்ட சொல்லிருவேன்! ''

'' சொல்லிக்கோ! எனக்கு பயம் இல்லை! எப்பன்னாலும் நீ எனக்குத்தான் எனக்குத்தான்! எனக்குத்தான்! ''

'' .................................... ''

'' சௌ உனக்கு 11 வயசு ஆறது பட்டு! இன்னும் 10 வருஷத்துல எனக்கு 25 வயசாயிடும் ! நல்ல உத்தியோகம் தேடி உன்னை கட்டிண்டு ராசாத்தி போல வெச்சு காப்பாத்துவேன் செல்லம்! ''

'' விஷ்வா என்னடா சொல்றே? எனக்கு ஒண்ணும் புரியலை டா! ஆனா நீ சொல்றது கேக்க நல்லாயிருக்குடா...! என்னை பிடிக்குதாடா உனக்கு? ''

'' உன் மேல உயிரையே வெச்சிருக்கேண்டி செல்லம்! என்னை வெறுத்துடாதே சௌபா! என்னால உயிரோட இருக்க முடியாது! ''

'' டாய் அப்படி சொல்லாதே! எனக்கு அழுகை வருது! ''

'' ஐயோ நீ அழக்கூடாது சௌபா! நான் இருக்குற வரை நீ அழக்கூடாது! ''

* * * *

சற்று உரக்கவே சொல்லியதால் கடைசி வரி எல்லாருக்குமே கேட்டது!

'' என்ன விஷ்வா ஐயா! யாரைச் சொல்றீங்க? '' - ராமனாதன்!

நினைவுக்கு வந்த விஷ்வா குறுகுறுவென்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சௌபர்ணிகாவை அன்புடன் பார்த்தார்!

'' அவர் பழைய நினைவுகள்ல மூழ்கிட்டாரு தம்பி! எங்க கடந்த கால சின்னவயசு நினைவுகள் இப்ப எங்களுக்கு ஆறுதல் தருதுப்பா! ''

'' நீங்க யாரு? பாத்தா கணவன் மனைவின்னு சொல்ல முடியல்லை! போடா வாடான்னு நீங்க அவரை கூப்பிடறதைப் பாத்தா நல்ல நண்பர்கள்னு தோணுது. நீங்க அன்னியோன்யமா இருக்கறதைப் பார்க்கும்போது.....''

'' விஷ்வா நீ சொல்லுடா நாம யாருன்னு.. ! ''

விஷ்வா ஒரு முறை சௌபாவை தீர்க்கமாக பார்த்துவிட்டு ராமனாதனிடம் என்னவோ சொல்ல ஆரம்பித்து கனைத்தார்!

'' நான் விஷ்வேஷ்வரன்! ரிட்டையர்டு ஐ ஏ எஸ் ஆபீசர்! இவ சௌபர்ணிகா ரிட்டையர்டு ஆசிரியை! ''

தொடரும்.....

மீதியை நீ சொல்லு மஞ்சு!

அமரன்
18-08-2009, 05:02 PM
ராமநாதனுக்குத் எழுந்த சந்தேகம் கதையின் தொடக்கத்தில் எனக்கும் எழுந்தது. அடுத்தடுத்த பாகங்கள் தந்த* பால் 'மணம்' சந்தேகத்தை வலுவாக்கியது. இப்போது யார் இவர்கள் என அறியும் ஆவல் அதிகமாகி விட்டது. இந்த இடத்தில் தொடரும் போட்ட உங்களுடன் நான் டூ..

இளமை, முதுமை நிகழ்வுகளை தொடர்பு பிசகாமல் அமைப்பதிலும் இருவரும் அசத்துகின்றீர்கள்.

பாராட்டுகள்.

மதுரை மைந்தன்
19-08-2009, 08:50 AM
விஷ்வா செபர்ணிகாவின் பாசப் பிணைப்பு அருமை. அவர்கள் யாரென்று சஸ்பென்ஸில் விட்டிருக்கிறீர்கள். தொடர்ந்து படிக்க ஆவலாயுள்ளது

கலைவேந்தன்
20-08-2009, 04:02 PM
உங்கள் அனைவரின் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர்களே...!

பார்ப்போம்..இனி மஞ்சு எப்படி தொடர்கிறார் என்று....!

-பயத்துடன்

மஞ்சுபாஷிணி
20-08-2009, 05:31 PM
ராமநாதனுக்குத் எழுந்த சந்தேகம் கதையின் தொடக்கத்தில் எனக்கும் எழுந்தது. அடுத்தடுத்த பாகங்கள் தந்த* பால் 'மணம்' சந்தேகத்தை வலுவாக்கியது. இப்போது யார் இவர்கள் என அறியும் ஆவல் அதிகமாகி விட்டது. இந்த இடத்தில் தொடரும் போட்ட உங்களுடன் நான் டூ..

இளமை, முதுமை நிகழ்வுகளை தொடர்பு பிசகாமல் அமைப்பதிலும் இருவரும் அசத்துகின்றீர்கள்.

பாராட்டுகள்.

அமரன் இன்னொரு விஷயம் தெரியுமாப்பா? நான் இந்த கதையின் முதல் பகுதி எழுதும்போதே யாராவது இது பற்றி கேட்பார்களா என்று காத்திருந்தேன்... நீங்க இப்ப கேட்டுட்டீங்க... ஊக்கம் கொடுக்கும் உங்கள் பின்னூட்டம் தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம் :) நன்றி அமரன்... இனி வரும் எல்லா தொடரிலும் இப்படி தொடரும் போட்டால் த்ரீ ஃபோர் அப்டின்னு போடுவீங்களா? :rolleyes: மிக்க நன்றி அமரன்...

மஞ்சுபாஷிணி
20-08-2009, 05:36 PM
விஷ்வா செபர்ணிகாவின் பாசப் பிணைப்பு அருமை. அவர்கள் யாரென்று சஸ்பென்ஸில் விட்டிருக்கிறீர்கள். தொடர்ந்து படிக்க ஆவலாயுள்ளது
இப்படி நீங்க கேட்கனும்னு தான் ஐயா இப்படி சஸ்பென்ஸில் விட்டது...
நன்றி ஐயா தொடர்ந்து வந்து ஊக்கம் தந்தமைக்கு....

மஞ்சுபாஷிணி
20-08-2009, 05:38 PM
உங்கள் அனைவரின் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர்களே...!

பார்ப்போம்..இனி மஞ்சு எப்படி தொடர்கிறார் என்று....!

-பயத்துடன்

நீ நல்லா அசத்தி அசத்தி எழுதிரு... என்னை டென்ஷன் பண்ணி விட்ரு.. அப்புறம் இப்படி பயத்துடன் அப்டின்னு போட்டுரு...

அடுத்து எப்படி தொடருவேன் என்ற டென்ஷனோடு...

mmuthuraja
20-08-2009, 05:54 PM
மஞ்சுவுக்கும் கலை வேந்தருக்கும் என் வாழ்த்துக்கள். இது ஒரு நல்ல தொடக்கம் நல்ல முயற்சி.....

மஞ்சுபாஷிணி
20-08-2009, 06:20 PM
அத்தியாயம் ஐந்து


நன்று கலை !

மஞ்சு எழுதறேன்....!


விஷ்வேஸ்வரன் தம்மை ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி என்றும் சௌபர்ணிகாவை ஓய்வுபெற்ற ஆசிரியை என்றும் சொன்னதும் ராமனாதன் குடும்பத்தினருக்கு அவர்கள் இருவரின் மேல் திடீரென மதிப்பும் மரியாதையும் எழுந்தது!

'' ஐயா உங்க முகத்தைப் பார்த்தும் உங்க கம்பீரத்தைப் பார்த்தும் நீங்க கண்டிப்பா பெரிய பதவியில இருந்தவங்கன்னு தெரிஞ்சுது! அம்மாவின் முகத்தின் தேஜஸ் அவங்க கண்டிப்பா சிறந்த ஆசிரியை யா இருந்திருப்பாங்கன்னு தெரியுது! சொல்லுங்கையா உங்க கதையை! ட்ரெயின் தில்லிக்கு போய் சேர இன்னும் ரெண்டு நாள் இருக்கே! ''

உடனே சௌபர்ணிகா குறுக்கிட்டு '' தம்பி ராமனாதா! அவரை தொந்தரவு செய்யாதேப்பா! நான் சொல்றேன் கதையை! அவரைத் தங்கம்போல இனி பாத்துக்கணும்பா நானு! பாவம் என் தங்கம் எனக்காக என்னெல்லாம் பாடு பட்டார் தெரியுமா? '' என்றாள்.

இதைச் சொல்லும் போதே சௌபர்ணிகாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது!

விஷ்வாவுக்கு மிகவும் வருத்தம் வந்தது!

'' விடு சௌபர்ணிகா ! இனி நீ அழக்கூடாது! நீ அழுததெல்லாம் போதும்! இனி இருக்கும் கொஞ்சம் வருஷங்களாவது நாம சந்தோஷமா கழிப்போம் டா! கலங்கக்கூடாது இனி நீ! ''

அவரகளது பாசம் ராமனாதனை கண்கலங்க வைத்தது!

'' என்னோட உயிர்நண்பன் தான் இந்த விஷ்வா......''

கதை சொல்ல முனைந்த சௌபர்ணிகாவின் கண்கள் கனவுலகத்துக்கே சென்றுவிட்டது!

சௌபர்ணிகா கதையை சொல்லச் சொல்ல ராமனாதனும் அவரது மனைவியும் அவர்களுடன் பயணம் செய்து கடந்த காலத்துக்கே சென்றுவிட்டனர்!

*********

'' அம்மா என்னை கருப்பி கருப்பின்னு ஏன்மா சொல்றான் இவன்? இவன் மட்டும் இத்தனை செக்கச் செவேல்னு அழகா பிறந்திருக்கானே ? ''

மூக்குறியத் தொடங்கினாள் சௌபர்ணிகா!

'' அழாதே கண்மணி '' தங்கம் ஆதரவுடன் அருகே வந்து மகளின் தலையைக் கோதினாள்.

'' நீ அப்பா மாதிரி நிறம்.... விஷ்வா அவன் அம்மாவைப் போல நிறம்.....! ''

'' நான் அழகா இல்லையேம்மா....'' விசும்பிக்கொண்டே கூறினாள். '' கருப்பா இருக்கேன்.. தலை முடி பாரு எலிவால் மாதிரி.....பல்லைப் பாரு துருத்திட்டு இருக்கு..... யார் என்னை கேலி பண்ணினாலும் பொறுத்துப்பேன்..நான் ! இவன் என்னோட நண்பன் இல்லையா ? என்னை கேலி பண்ணலாமா? ''

'' கண்மணி அவன் உன்னை கேலி பண்ணினாலும் உன் மேலே அவனுக்கு பாசம் அதிகம்மா....!''

'' அம்மா என்னை யாருமே கல்யாணம் பண்ணிக்கமாட்டாங்களா? பக்கத்துவீட்டு மாமி இன்னொரு அக்காகிட்ட என்னைக்காட்டி சொல்லிக்கிட்டு இருந்தாம்மா! ''

'' இந்த வயசுல உனக்கு ஏண்டி இந்த கேள்வி ? அதது நடக்க வேண்டிய வயசு வரும்போது நடக்கும்.. இப்ப மனசு விசனப்படாம ... கிளம்பு புத்தகங்கள் எடுத்துக்கிட்டு.... விஷ்வாவும் பின்னாடியே வரேன்னு சொன்னான் பாரு... அவன் கையை பிடிச்சிட்டு ஆற்றை கடக்கணும் சரியா... பத்திரம்...''

கண்ணாடியில் தன் மகளைப் *பார்த்தாள்.தங்கம் . பத்து வயது பெண்ணுக்குரிய லட்சணங்கள் என்ன இருக்கு அவகிட்ட ? கொஞ்சம் பூசினமாதிரி இருந்தா நல்லா இருப்பாளோ? கொஞ்சம் கன்னம் பூசினா மாதிரி இருந்தா ...? அப்ப பல்லும் உள்ளே போயிடும்... தலை முடி இனிமே நல்லா பராமரிக்கனும் கண்மணிக்கு!

*சௌபர்ணிகா பையை எடுத்துக்கொண்டு தன் எலிவால் பின்னலை மறுபடியும் ஒரு முறை சரி செய்து கொண்டு தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு பின்னல் முதுகில் விழ செருப்பை மாட்டிக்கொண்டு புத்தகப்பையுடன் கை வீசி நடக்க ஆரம்பித்தாள் !

ஆற்றங்கரை நெருங்க நெருங்க சௌபர்ணிகாவுக்கு கை நடுங்க ஆரம்பித்தது.. என்ன இந்த விஷ்வா பயலை காணோமே... சுற்றுமுற்றும் திரும்பி பார்த்தாள்.

'' சௌபா இங்க இருக்கேண்டி'' என்று கையாட்டினான் விஷ்வா!

விஷ்வா தூரத்தில் கையாட்டி கொண்டே வருவதை பார்த்தாள்... உடனே அவளது முகம் மலர்ந்தது...

மகிழ்ச்சி மனதுக்குள் இருந்தாலும் இவள் ஒன்றும் பேசாமல் அமைதியாய் நின்றாள்.

மூச்சிரைக்க ஓடி வந்து அவள் கையைப் பிடித்தான்..'' ஏண்டி என் மேலே கோபமா?''

முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

'' சௌபா.. இங்க பாரு ஏண்டி கோவம்? ''

'' நீ என்னை ஏண்டா கருப்பின்னு சொன்னே? ''

*'' நீ கருப்பா இருந்தாலும் எனக்கு அழகு தாண்டி ''

'' ஏய் அசிங்கமா பேசாத...'' முகத்துக்கெதிரில் கை விரலை சுட்டிக் காட்டி எச்சரித்தாள்

அவன் அவள் கைவிரலைப் பிடித்து சொன்னான்... '' சௌபர்ணிகா நீ கருப்பா இருந்தா தான் நல்லது ''

'' ஏண்டா ''

'' அப்ப தானே உன்னை யாருமே கல்யாணம் பண்ணிக்கமாட்டா ''

'' அடப்பாவி இரு எங்க அம்மா கிட்ட சொல்றேன்..''

'' நீ ஒண்ணும் கவலைப்படாதே சௌபர்ணிகா நான் உன்னை கட்டிக்கிறேன் ''

'' ச்சீ போடா ! '' என்று ஓடப் போனவள் தயங்கி நின்றாள்.

'' நான் தான் நல்லாவே இல்லையே... என்னை போய் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றியே...''.

'' எனக்கு நீ அழகு தான் சௌபர்ணிகா....''

'' இப்டி எல்லாம் பேசாதடா அம்மா கிட்ட சொல்லிருவேன் '' அழ முற்பட்டாள்.

அவன் மெல்ல அவளது தலையைக்கோதி அழகாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்!

அவள் மூக்கை உறிஞ்சிக்கொண்டு அவன் கையை பிடித்துக்கொண்டாள்.

இருவரும் மெதுவாக ஆற்றை கடக்க முற்பட்டனர்...

அது ஒரு குறுகிய ஆறு!

இரண்டு தென்னைமரங்களே பாலம்!

இந்த ஆற்றைத் தவிர்க்க வேண்டுமென்றால் அதிகப்படியாக 5 கிமீ சுற்ற வேண்டும்!

விஷ்வா சௌபர்ணிகாவின் நடுக்கத்தை அவன் விரல்களை பற்றி இருந்த அவள் விரல்களில் உணர்ந்தான்.

உடனே தன் புத்தகப்பை அவள் புத்தகப்பை இரண்டையும் முதுகில் மாட்டிக்கொண்டு இரண்டு கைகளாலும் அவள் முதுகை அணைத்து தாய் போல பொத்தி பத்திரமாக ஆற்றைக் கடந்து போய் கையை விட மனமில்லாமல் நின்றான்.

'' ஏன் இவளிடம் எனக்கு இத்தனை ஈர்ப்பு? தாய் தந்தை இல்லாத எனக்கு அன்பை தரும் தங்கத்தின் மகள் என்பதாலா..?. இவளுடன் சேர்ந்திருந்தால் ஏன் எனக்கு இத்தனை சந்தோஷம்? நான்கு வயது மூத்தவன் விஷ்வா. இவளிடம் என்ன கண்டான் இவள் வயப்பட..? விடலைக்காதலா.....?!

அவனுக்குத் தெரியவில்லை!

தனது தலைப்பிரசவத்தில் இந்த விஷ்வாவைப்பெற்றெடுத்துவிட்டு ஜன்னி கண்டு இறந்துபோனாள் இவன் தாய் மரகதம்!

மரகதத்தின் பிரிவு கொஞ்ச நாளில் விஷ்வாவின் தந்தை நாராயணனையும் இந்த உலகத்தைவிட்டே அனுப்பிவிட்டது!

விஷ்வா அம்மா அப்பா அன்பே தெரியாமல் வளர்ந்தவன்.....தாய் தந்தை இல்லாத இவன் தாயின் சகோதரர் சிவச்சந்திரன் எடுத்து வளர்க்கிறார்... விஷ்வாவின் சொத்தையும் காக்கிறார்.... நல்ல மனிதர்.. பிள்ளையின் மேல் அதிக பாசம்.....

திருமணம் முடிந்து அந்த ஊருக்கு வந்த நாள் முதல் தங்கம் விஷ்வாவை எடுத்துக்கொண்டு தன் வீட்டில் கொண்டு வந்து அன்னம் ஊட்டியவள்..... அன்பான கணவன், ஆண்டவன் இன்னும் கண் திறக்கவில்லை வயிற்றில் ஒரு உயிர்ப் பூ பூக்கவில்லை.... என்ற விசனம் அவளுக்கு.

விஷ்வாவைக் காணும்போதும் அவன் மழலைமொழியில் கொஞ்சும் போதும் தன்னை மறப்பாள் சிறிது நேரம்.... எந்நேரமும் தன் வீட்டிலேயே இருப்பதால் தனக்கு மனதில் ஒரு நிம்மதி படர்வதை உணர்ந்தாள்...விஷ்வா மூன்று வயதாகும்போது தனக்கு ஒரு நாள் தலை சுற்றுவதை உணர்ந்தாள்... சந்தேகத்துடன் கணவன் கோபாலனுடன் சென்று மருத்துவச்சியைப் பார்த்தபோது கை பிடித்துப்பார்த்து வயிற்றில் பூ பூத்ததை பொக்கை வாய் விரிக்க சொன்னாள்.... கோபாலனுக்கு அங்கேயே தங்கத்தை கட்டிப்பிடித்து தன் சந்தோசத்தைக் காட்டிக்கொள்ள் ஆசை....

வழியில் வரும்போதே இருவரும் சிவச்சந்திரன் வீட்டிற்கு சென்று இந்த சந்தோஷத் தகவலை சொன்னார்கள்.

'' விஷ்வா என் வீட்டில் அடிவைத்த நேரம் என்னையும் தாயாக்கியது '' என்று சொல்லி சொல்லி மாய்ந்து போனாள் தங்கம்!

'' அத்தே '' என்று ஆசையாக வந்து தங்கத்தைக் கட்டிக்கொண்டான் விஷ்வா.
*
கோபாலன் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சினார்....

மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானத்தைப் பார்த்தார் கோபாலன்.

சீக்கிரம் வீட்டுக்கு போக எண்ணி தங்கத்தைக் கூட்டிக்கொண்டு வீட்டை எட்டினார்.

கதவை திறந்து உள்ளே போனப்பின் ஒரே இருட்டு.... அடடா கரண்ட் இல்லை.....

மெல்ல மாடிப்பக்கம் போய் காய்ந்திருந்த துணிகளை எடுக்கப் போனார் கோபாலன்.

தங்கம் இருட்டில் அமர்ந்திருந்தாள் மனதில் மகிழ்ச்சி!

திடிரென்று அம்மா என்ற சத்தமும் என்னவோ மோதி விழுந்த சப்தம் கேட்டு பதறி எழுந்தாள்...

வெளியே வந்து பார்த்தப்போது அதிர்ச்சியில் தலை சுற்றி விழுந்தாள் மேலிருந்து கால் வழுக்கி கீழே விழுந்து மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு அவசரமாய் உயிர் விட்டிருந்தார் கோபாலன்.

தங்கம் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளுமுன் சௌபர்ணிகா பிறந்தாள்.

அதன் பின் குழந்தை பிறந்து தொட்டிலில் இட்டப்போது விஷ்வா அடுத்திருந்து தொட்டிலை ஆசையுடன் பார்த்து அத்தே என்னோட பாப்பா இது என்றதும்...

அதன் பின் எப்போதும் சௌபர்ணிகாவுடன் விளையாடுவதும் அவளுடன் கை கோர்த்துக்கொண்டு ஓடுவதும் வருவதும்........

இவள் என்னுடையவள் என்ற எண்ணம் அப்போதே அவன் மனதில் ஏற்பட்டுவிட்டது!


தொடரும்....

இனி கலை நீ எழுது!

மதுரை மைந்தன்
22-08-2009, 09:57 PM
பெரும்பாலும் அந்த காலத்தில் கோபாலன் சாவிற்கு சௌபர்ணிகாவின் பிறப்பு தான் காரணம் என்று சொல்லி அவளை தூற்றுவார்கள். அத்துடன் கருப்பு நிறம் குட்டை முடி தெத்தி பல் பாவம் இந்த பெண். கதை விறு விறுப்பாக செல்கிறது. தொடருங்கள் நண்பர் கலைவேந்தன்.

மஞ்சுபாஷிணி
23-08-2009, 08:58 AM
மஞ்சுவுக்கும் கலை வேந்தருக்கும் என் வாழ்த்துக்கள். இது ஒரு நல்ல தொடக்கம் நல்ல முயற்சி.....
நன்றி எம் முத்துராஜா கலையின் சார்பிலும்...

மஞ்சுபாஷிணி
23-08-2009, 09:00 AM
பெரும்பாலும் அந்த காலத்தில் கோபாலன் சாவிற்கு சௌபர்ணிகாவின் பிறப்பு தான் காரணம் என்று சொல்லி அவளை தூற்றுவார்கள். அத்துடன் கருப்பு நிறம் குட்டை முடி தெத்தி பல் பாவம் இந்த பெண். கதை விறு விறுப்பாக செல்கிறது. தொடருங்கள் நண்பர் கலைவேந்தன்.
நன்றி ஐயா கலையின் சார்பிலும்...

கலைவேந்தன்
28-08-2009, 05:41 PM
அருமையான பாகம் தந்து அசத்திவிட்டாயே மஞ்சு...!

நான் அடுத்த பகுதி இதோ தருகிறேன்ப்பா...!

கலைவேந்தன்
28-08-2009, 06:06 PM
சௌந்தர்யலஹரி - அத்தியாயம் ஆறு

நன்று மஞ்சு!

இனி கலை தொடர்கிறேன்!

இவள் என்னுடையவள் என்ற எண்ணம் தோன்றியது முதல் சௌபர்ணிகாவின் ஒவ்வொரு அசைவுமே அவனுக்கு இன்பகரமானது!

காலையில் எழுந்ததும் பல்கூடத் துலக்காமல்நேராய் சௌபர்ணிகாவின் வீட்டுக்குத்தான் ஓடுவான்!

அவள் இழுத்துப்போர்த்தி தூங்கிக்கொண்டிருந்தாலும் அவளை விடமாட்டான்!

'' ஏய் குட்டைவாலு சௌ! எந்திரிடி! பாரு பொழுது விடிஞ்சாச்சு! இன்னும் தூங்கறியே தூங்கு மூஞ்சி சௌ! எழுந்திரி டி ! ''

அவள் போர்வையை இழுத்து அவளை எழும் வரை தொந்தரவு செய்து கொண்டே இருப்பான்!

'' ஏண்டா இப்படிப் படுத்தறே '' என்று மூக்கால் அழுதுகொண்டே எழ மனமில்லாமல் எழும் சௌபர்ணிகாவுக்கு விஷ்வாவின் புன்னகைத்த முகம்தான் முதல் காட்சியாய் இருக்கும்!

'' ஆத்துக்கு குளிக்க கிளம்புடி சௌ! இப்ப போனா கூட்டமே இருக்காது! படித்துறையில அழகா துணி துவைச்சிட்டு அழகா நீந்தலாம்! ''

'' ஏய் ! விஷ்வா! வேண்டாண்டா! எனக்கு நீந்த தெரியாது கரையிலேயே இருந்து குளிக்கிறேண்டா! பயம்மா இருக்குண்டா! ''

'' மக்கு சௌபர்ணிகா! நான் இருக்கேண்டி! நான் உனக்கு நீந்த சொல்லித் தரேண்டி! வாடி போகலாம்! ''

சிறிய துணிமூட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு இருவரும் ஆற்றங்கரைக்கு போகும் அழகை மௌனமாய் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் தங்கம்!

'' கடவுளே! என் கண்ணே பட்டுடும் போல இருக்கே! இந்த ரெண்டுபேரும் சில சமயம் எலியும் பூனையுமா அடிச்சிக்கிட்டாலும் ஒருத்தருக்கொருத்தர் எவ்வளவு அன்பா இருக்காங்க! ஆண்டவன் சம்மதம் இருந்தா இந்த ரெண்டுபேருமே வாழ்க்கையில ஒண்ணா இருக்கட்டும்! எனக்குன்னு யாரு இருக்கா! இதுங்களை விட்டா எனக்கு நாதி ஏது? ''

அவள் மனத்தில் ஓடிய எண்ணங்கள் மட்டும் நடந்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு ரம்மியமாய்ப் போய் இருந்திருக்கும்!

என்னசெய்வது ! நாம் ஒன்று நினைத்தால் இறைவன் நினைவு வேறொன்றாக இருக்கிறதே எப்போதும்!

ஆற்றங்ககரை.

'' சௌபா! நீ போயிக்கிட்டே இருடி! இதோ வாரேன்! ''

'' எங்கடா போறே? என்னைத் தனியா விட்டுட்டு? எனக்கு பயமாய் இருக்குடா!! ''

'' ஏண்டி பயப்படுறே? போயிக்கிட்டே இரு ரெண்டே நிமிஷத்துல ஜாயின் பண்ணிக்கிறேன்! ''

இவன் என்னை மட்டும் போக விட்டு தனியே எங்க போவான் ?

சிந்தனையில் இந்த எண்ணங்களை ஓட்டியவண்ணம் அமைதியாய் நடந்துகொண்டிருந்தாள்!

பனிரெண்டு வயதுக்கான செழிப்புகள் அவள் உடலில் வரத்தொடங்கி இருந்தன! கொஞ்சம் உடம்பு பூசினாற்போல் இருந்தாலும் அவள் கன்னங்கள் இன்னும் ஒட்டியே இருந்ததால் பற்கள் எடுப்பாகத் தெரியத்தான் செய்தன!

மெல்லிய உடல் ஆதலால் இடையும் குறுகிப்போய் பஞ்சம் நிறைந்த பகுதிகளாய் அவள் அங்கங்கள் இளைத்திருந்தன!

அவள் வயதினை ஒத்த பெண்களில் இருவர் வயதுக்கும் வந்துவிட்டனர்!

பார்க்க செப்புச் சிலைபோல் வாளிப்பாய் இருந்தனர்!

சௌபர்ணிகாவுக்கு அந்த தாழ்வு மனப்பான்மை மட்டும் இருந்துகொண்டே இருந்தது!

ஆனால் இந்த விஷ்வா.......!

அவன் எதற்குமே கவலைப்படவில்லை!

குழந்தைப் பருவத்திலிருந்தே அவளைப் பார்த்து வளர்ந்ததால் அவளது குறைகள் அவன் கண்ணுக்குப் படவே இல்லை!

கருவாட்டுப்பானையை பூனை சுற்றி சுற்றி வருவதைப்போல் அவளையே சுற்றிச் சுற்றி வந்தான்!

இந்தப்பயலை எங்கே காணோம்?

சௌபர்ணிகாவின் உடல் நடுங்கத்தொடங்கியது!

'' சௌபா '' என்று ஆசையுடன் அழைத்தவாறே எங்கிருந்தோ தோன்றினான் விஷ்வா!

அவனது சட்டையை ஒரு மூட்டைபோல் மாற்றி எதையோ சுமந்து கொண்டுவந்தான்!

'' எங்கேடா போயித் தொலைஞ்சே ? எவ்வளவு பயந்தேன் தெரியுமா ''

'' எங்கயோ போயி செத்துட்டானோன்னு நினைச்சியா ? நான் உன்னை விட்டுட்டு சாக மாட்டேண்டி! என செல்லத்தை தனியா தவிக்க விட்டுட்டு போக மாட்டேன்! ''

'' ஏண்டா இப்படி அச்சுபிச்சுன்னு பேத்தறே ? ''

சௌபர்ணிகா முகத்தைக் கடுமையாய் வைத்துக்கொண்டு கேட்டாள்!

'' சரி போகட்டும் விடு சௌபர்ணிகா! இந்தா உனக்கு ரொம்ப பிடிக்குமேன்னு பறிச்சிட்டு வந்தேன்! ''

அவள் கண் முன்னே தன சட்டை சிறு மூட்டையை திறந்துகாட்டினான்!

அதில் நல்ல அழகான வெளிர்சிவப்பு நிற கொடுக்காப் புளிப்பழங்கள்!

'' ஹைய்யா! '' சௌபர்ணிகாவின் கண்கள் அகல விரிந்தன!

அவளுக்கு கொடுக்காப்புளிப்பழங்கள் என்றால் உயிர்! இளஞ்சிவப்பு நிறப்பழங்களை உரித்து அதனுள் வெளிர்சிவப்பு இதழ்களாக இருக்கும் பழத்தை உண்ணுவது அவளுக்கு மிகப்பிடித்த ஒன்று!

'' சௌபர்ணிகா! குளிச்சிட்டு திரும்ப போகும் போது உனக்கு நான் உரிச்சி தரேண்டீ! ''

இருவரும் கரையில் தமது துவைத்து உலர்ந்த துணிகளை வைத்துவிட்டு துவைக்க வேண்டிய துணிகளை படித்துறையில் போட்டு சோப்பிட்டு அலசி வைத்துவிட்டு குளிக்க தயாராயினர்!

சௌ தனது பாவாடையை நெஞ்சு வரை ஏற்றிக்கட்டிக்கொண்டு தனது சட்டையை அவிழ்த்து விட்டு குளிக்கத் தயாரானாள்!

ட்ரவுசருடன் குளிக்கத்தொடங்கிய விஷ்வா ஆற்றில் கொஞ்ச தூரத்துக்கு நீந்திச் சென்று விட்டு மீனைப்போலத் திரும்பினான்!

'' ஏண்டி கரையிலே இருந்து பயந்து நடுங்கற? இறங்கி வா! ஆழமில்லை அவ்வளவு! நான் இருக்கேன்! நீந்து! ''

'' போடா! எனக்கு நீந்த வேண்டாம்! பயம்மா இருக்கு! ''

'' சௌபா, நான் உனக்கு கத்துத் தரேண்டி! இறங்கி வா தைரியமா! ''

மீன்குட்டி போல் அழகாய் விஷ்வா நீந்துவதைப்பார்த்த சௌபாவுக்கு தானும் நீந்திப்பார்த்தால் என்ன என்று ஓர் ஆசை உதித்தது!

அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த விஷ்வாவுக்கு அவளது ரகசிய ஆசை புரிந்து போயிற்று!

'' வாடி சௌபர்ணிகா! ''

அவன் கைகளை அகலவிரித்து அவளை வாஞ்சையுடன் அழைத்தான்!

இம்முறை அவன் அழைப்பைத்தட்ட சௌபர்ணிகாவால் முடியவில்லை!

அவள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெல்ல இறங்கி.....

ஆ...!

அவள் தடுமாறி ஆற்றில் விழுந்தாள்.

ஆனால் அவள் தண்ணீருக்குள் மூழ்காதபடி அவளைக் கைத்தாங்கிய அவன் அவளை இருகைகளாலும் ஏந்திய படி என்ன நினைத்தானோ.. அப்படியே அணைத்துக்கொண்டான்!

சௌபர்ணிகாவுக்கும் அந்த பயத்தினாலும் அதிர்ச்சியாலும் அப்படி ஒரு அணைப்பு தேவைப்பட்டதோ என்னவோ!

அவளும் வழக்க்ம்போல் கத்தி அழாமல் அப்படியே அடங்கினாள்!

'' சௌபர்ணிகா! என் கைல படுத்துக்கிட்டே நீந்துடா! கையை காலை ஆட்டி தண்ணியை உதைச்சு முன்னேறு டா! ''

ஒரு குழந்தையைத்தாங்குவது போல் அவளைத்தாங்கியவாறு நீந்தக் கற்றுக்கொடுத்த

அந்த

விஷ்வா பெரியவர்

இருமினார்!

தொடரும்.....


இனி நீ எழுது மஞ்சு!