PDA

View Full Version : கண்ணாளனே...



இன்பக்கவி
04-08-2009, 09:22 AM
கனவு கண்டேன்..
கண்ணில் கண்ட காட்சிகள்
கனவில் வந்தன....
கனவில் வந்தவனே
கனவோடு செல்லாமல்
கண்ணாளனாய் நீ வேண்டும்....
கண்ணோடு கண் பேசின..
காந்த கண் பார்வை
கள்ளம் அற்ற உன் பேச்சு...
கலங்கி போனது என் உள்ளம்....
காலம் எல்லாம் வேண்டும் நீ...
காலம் நம்மை சேர்குமோ என்றேன்....
கலங்கிய கண்ணோடு மௌனமானாய்
கனவு தான் என்றாலும்..
கால் நூற்றாண்டு வாழந்த திருப்தி என்னுள்...
கனவு நாயகனே...
கனவில் இருந்து செல்லாதே...
கண் உறக்கம் கலைய விருப்பம் இல்லை..
கண் உறக்கம் விழித்தால்
கலைந்து போவாய்......நீ
கண் விழிக்காத உறக்கம் வேண்டும்..
கனவோடு வாழ்ந்தாலும்.. போதும்
கண்ணாளனே...
கண்ணோடு கண் வைத்து பேசும்
கனிவான வார்த்தை போதும்...
கண்ணீர் எல்லாம்
கரைந்து போகும்.....
கனவே கலைந்து விடாதே!!!

ஓவியன்
04-08-2009, 09:41 AM
கனவில் வந்து
கண்ணால் பேசிய
கண்ணாளனுக்குத் தீட்டிய
கவிதை அருமை...!!

தொடரட்டும் உங்கள் கனவுகளும் கவிதைகளும்..!!

கா.ரமேஷ்
04-08-2009, 09:53 AM
கனவுக் காதலனுக்காக* தொடுத்த கவிதை அருமை.......

இன்பக்கவி
07-08-2009, 07:54 PM
கனவில் மட்டும் தான் காதலன் நல்லவனாக இருக்கிறான்...:icon_rollout:
அதனால் தான் நிஜத்தில் இப்படி கிடைப்பது இல்லை..:icon_b:
இது என் தோழியின் காதலுக்காக நான் எழுதியது..:lachen001:
அதனால் எழுத்துகள் தான் எனக்கும் சொந்தம்..:icon_b:
கனவு காதலன் இல்லை.:traurig001::traurig001:

அமரன்
07-08-2009, 08:23 PM
கண் உறக்கம் விழித்தால்
கலைந்து போவாய்......நீ


உறங்கும் போது
அனைவரும் தேவதையே.
உறக்கம் கலைந்தால்....!

நீ
உறங்கும் போதுதான்
மௌனியாக இருக்கிறாய்..:)

கனவு காணுங்கள் சாதிக்"கலாம்"..
காதலுக்கும் கனவுக்கும் காற்றுக்கும் உயிருக்கும் உள்ள உறவு..



கனவில் மட்டும் தான் காதலன் நல்லவனாக இருக்கிறான்...:icon_rollout:
அதனால் தான் நிஜத்தில் இப்படி கிடைப்பது இல்லை


இப்படியும் இருக்கலாம்..

கனவில் கண்டதை நிஜத்தில் எதிர்பார்த்து கிடைகாமல் போய் ஏற்படும் ஆதங்கமும் ஏக்கமும் ஏமாற்றமும் ஆண்களைக் கெட்டவர்களாகக் காட்டுகிறது.

கண்ணீரெல்லாம் கரைந்துபோகும்* - அழகான வார்த்தையாடல்.