PDA

View Full Version : இலங்கை துடுப்பாட்ட அணியின் வெற்றி.



அன்புரசிகன்
03-08-2009, 12:13 PM
இன்று தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் நிகழ்ந்த பாக்கிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் துடுப்பாட்ட போட்டியில் ஈட்டிய வெற்றி மூலம் இலங்கை 3-0 என்ற வீகிதத்தில் தொடரை பாக்கிஸ்தானை முதன் முறையாக இலங்கை மண்ணில் வென்றுள்ளது.

முன்னதாக டெஸ்ட் போட்டியிலும் இலங்கை முதன்முறையாக இலங்கை மண்ணில் பாக்கிஸ்தானுடனான போட்டியின் தொடரை வென்றது.

இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்.

நேசம்
03-08-2009, 01:27 PM
20/20 உலக கோப்பைக்கு பிறகு பாகிஸ்தானுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி.இலங்கை எளிதாக ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றது

அருள்
03-08-2009, 01:58 PM
உள்ளூரில் எல்லா குதிரையும் நல்லா ஓடும்.........

அன்புரசிகன்
03-08-2009, 02:58 PM
உள்ளூரில் எல்லா குதிரையும் நல்லா ஓடும்.........

நண்பரே... பாக்கிஸ்தானில் இலங்கை வென்றுள்ளது. தாயகத்தில் தான் வெல்லவில்லை. இது தான் முதலாவது தொடர் வெற்றி...

ஓவியன்
03-08-2009, 03:17 PM
ஜெயசூர்யாவின் இடத்தில் ஜெயவர்த்தனே அருமையாக துடுப்பெடுத்தாடிக் காட்டியிருந்தமை விசேட அம்சம்..!! :)

அமரன்
03-08-2009, 06:14 PM
இலங்கைக்கு வாழ்த்துகள்.

ஜெயவர்தனே, கப்புகெதர, பந்துவீச்சாளர்கள் என பலரது ஒன்றுபட்ட உழைப்பு பெற்றுத் தந்த வெற்றி என்றும் தொடரட்டும்.

ஓவியன்
04-08-2009, 09:49 AM
அதுசரி இந்தப் போட்டியில் சனத் ஏன் ஆடவில்லை, உண்மையாகவே ஓய்வில் தான் இருந்தாரா...??

நேசம்
04-08-2009, 01:06 PM
அதுசரி இந்தப் போட்டியில் சனத் ஏன் ஆடவில்லை, உண்மையாகவே ஓய்வில் தான் இருந்தாரா...??
ஆடவில்லையென்றால் ஒய்வில் தான் இருக்கனும்:confused:

ஓவியன்
04-08-2009, 01:17 PM
ஆடவில்லையென்றால் ஒய்வில் தான் இருக்கனும்:confused:

இல்லை நேசம் இதற்கு முன்னைய போட்டியில் இலங்கை அணித்தலைவர் சங்ககார ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார், அவர் அப்படி ஆட்டமிழக்க மறுபுறத்தில் துடுப்பெடுத்தாடிய ஜெயசூர்யாவின் கவனக் குறைவே பிரதான காரணமாக இருந்தது...

இப்போது ஒன்றையும் ஒன்றையும் கூட்டிப் பாருங்கள் விடை கிடைக்கலாம்... :rolleyes: