PDA

View Full Version : விண்டோஸ் உதவிடும் புரோகிராம்கள்.நூர்
03-08-2009, 11:52 AM
விண்டோஸ் உதவிடும் புரோகிராம்கள்

ஆகஸ்ட் 03,2009

எத்தனை ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வந்தாலும் விண்டோஸ் அருகே எதுவும் வர முடியாது என விண்டோஸ் மற்றும் கம்ப்யூட்டர் ரசிகர்கள் சொல்வதற்குக் காரணம் அதன் பலவகைச் செயல்பாடுகள் தான்.

இப்படி பெரும்பாலான மக்கள் உலகெங்கும் விண்டோஸ் பயன்படுத்துவதால் தான் பல டெவலப்பர்கள் விண்டோஸ் இயக்கத்துடன் சேர்ந்து, இணைந்து இயங்கும் பல சிறிய புரோகிராம்களை வடிவமைத்து இலவசமாகவும் விலைக்கும் வழங்கி வருகின்றனர்.

இந்த கூடுதல் புரோகிராம்கள் விண்டோஸ் இயக்கத்தின் குறிப்பிட்ட சில செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன; விரைவு படுத்துகின்றன; அல்லது மக்கள் எதிர்பார்க்கும் ஆனால் விண்டோஸ் இயக்கத்தில் இல்லாத சிலவற்றையும் தருகின்றனர்.


இங்கே அத்தகைய புரோகிராம்களின் பட்டியல் ஒன்று தரப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை இலவசமே. கட்டணத்தின் பேரில் கிடைக்கும் சில புரோகிராம்கள் கூட இலவசப் பதிப்பு ஒன்றை அளிக்கின்றன.

பல புரோகிராம்கள் இன்று பிளாஷ் டிரைவில் பதிந்து எடுத்துச் சென்று அதில் இருந்தவாறே பயன்படுத்தும் வசதியும் கொண்டுள்ளன. பயன்பாடுகளின் அடிப்படையில் இவை தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு தரப்படுகின்றன.


1. QT Tab Bar: இப்போது பயன்பாட்டில் இருக்கும் பிரவுசர்கள் அனைத்தும் டேப் பிரவுசிங் என்னும் வசதியைக் கொண்டிருக்கின்றன. இதனை விரும்பாதவர்கள் யாரும் இல்லை.

ஒரே நேரத்தில் பல தளங்களைத் திறந்து பயன்படுத்தவும், இஷ்டம்போல அவற்றிற்கு இடையே செல்லவும், அந்த டேப்களை மாற்றி அமைக்கவும் இந்த பிரவுசர்களில் வசதி உள்ளது. இதே வசதி ஏன் விண்டோஸ் இயக்கத்தில் இருக்கக் கூடாது. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் ஏன் இது போல டேப்கள் இருக்கக் கூடாது என்ற கேள்விக்கு இந்த புரோகிராம் விடை அளிக்கிறது. இந்த இலவச புரோகிராம் கிடைக்கும் தள முகவரி: www.qttabbar.wikidot.com


2. UBit Menu: மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பை விரும்பும் பலர் அதன் ரிப்பன் இன்டர்பேஸை வெறுக்கின்றனர். முன்பு கிடைத்த மெனு எவ்வளவு நன்றாக இருந்தது என்று ஆசைப்படுபவர்களும் உள்ளனர். இந்த டிராப் டவுண் மெனுவினை இந்த புரோகிராம் தருகிறது.

வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் ஆகிய புரோகிராம்களில் இவற்றைப் பெறலாம் ஆபீஸ் 2003ல் உள்ளதைப் போன்ற தோற்றத்தையும் பயன்பாட்டினையும் ஆபீஸ் 2007ல் பெறலாம். இந்த புரோகிராம் இலவசமாகவும் அலுவலகப் பயன்பாட்டிற்கு எனில் கட்டணம் செலுத்தியும் பெறலாம். தள முகவரி : www.ubit.ch/software/ubitmenu languages


3.Winroll: www.palma.com.au/winroll நான் விரும்பிய அழகான புரோகிராம் இது. எந்த விண்டோவின் டைட்டில் பாரிலும் ரைட் கிளிக் செய்திடுங்கள். பாருக்குள் அந்த விண்டோ சுருட்டிக் கொள்வதனைப் பார்த்து ரசிக்கலாம். இவ்வாறு திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களுக்கும் செய்திடலாம்.


4. Nimivisuals: www.mynimi.net இது ஒரு கலப்பு திருமண புரோகிராம். இதனை எந்த பிளாஷ் டிரைவிலும் தூக்கிச் சென்று அப்படியே பயன்படுத்தலாம். இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை.

ஒரு இ.எக்ஸ்.இ. புரோகிராம் உள்ளது. அப்படியே கிளிக் செய்து பயன்படுத்த வேண்டியதுதான். என்ன செய்கிறது? விண்டோஸ் இயக்கத்திற்கு மேக் ஓ.எஸ். மற்றும் லினக்ஸ் இயக்கத்தின் தோற்றத்தைத் தருகிறது. பலவகையான தோற்றங்கள் இதன் சிறப்பு.


5. Bump Top: www.bumptop.com விண்டோஸ் டெஸ்க் டாப்பினை ஒரு முப்பரிமாண டெஸ்க்காக மாற்றிக் காட்டுகிறது. பைல்கள் அடுக்குகளாகக் காட்டப்படுகின்றன. இவற்றைச் சுற்றி வந்து தேவையானதை எடுத்துக் கொள்ளலாம்.

இவை காட்டும் சுவர்களில் எதையேனும் நாம் ஒட்டி வைக்கலாம்; எடுக்கலாம். இது விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் 7 தொகுப்பிலும் இயங்கும் எனக் கூறப்படுகிறது. இது இலவசமே. ஆனால் ப்ரோ எடிஷன் வேண்டுமானால் கட்டணம் செலுத்திப் பெற வேண்டும்.


6. Minime: www.saphua.com/blog/?page_id=18 இலவசமாய்க் கிடைக்கும் இந்த புரோகிராம் அனைத்து விண்டோக்களையும் சிஸ்டம் ட்ரேக்கு ஒரே ஒரு ஹாட் கீயினை அழுத்துவதன் மூலம் மேற்கொள்கிறது. அனைத்தையும் ஒரு சிங்கிள் ஐகானில் வைக்கிறது. இந்த ஐகானைக் கிளிக் செய்து ஒரு மெனுவாகப் பெற்று எவை இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று பார்க்கலாம்.


7. BackUp Maker: www.ascomp.de/index.php?php=prog&prog=backupmaker


எளிய பேக் அப் புரோகிராம். முற்றிலும் இலவசம். கம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்களை இன்னொரு டிரைவ், யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ், சிடி/டிவிடி அல்லது ஒரு எப்.டி.பி. வெப் சைட் என எந்த இடத்திற்கும் அனுப்புகிறது. ஏதாவது ஒரு பைலை இழந்துவிட்டால் மீட்டுத் தருகிறது.


8. Carbonite: www.carbonite.com ஆண்டுக்கு 35 டாலர் செலுத்திவிட்டால் எத்தனை பைல்களையும் ஆன்லைனில் இந்த புரோகிராம் சேவ் செய்து வைக்கிறது. இடம் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறது; வரையறையே இல்லை.

இது தானாகவே கம்ப்யூட்டரில் பைல்கள் உருவாக்கத்தினைக் கண்காணித்து ஆன்லைன் ஸ்டோரேஜுக்கு அனுப்புகிறது.இதனால் நீங்கள் எந்த இடத்திலும் எந்த கம்ப்யூட்டரிலிருந்தும் பைல்களைப் பெற்று இயக்கலாம்.


9. DriveImage XML: www.runtime.org/driverimagexml.htm இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம் பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இருக்கும்போது கூட மைக் ரோசாப்ட் தரும் வால்யூம் ஷேடோ சர்வீசஸ் (Volume Shadow Services)பயன்படுத்தி உங்கள் ஹார்ட் டிரைவின் டிஸ்க் இமேஜ் ஒன்றை உருவாக்குகிறது.

பின் இதனைப் பெற்று அனைத்து பைல்களையும் அல்லது குறிப்பிட்ட டிரைவின் பைல்களைத் திரும்பப் பெற்று பயன்படுத்தலாம்.


10. Drivermax: www.innovativesol.com/drivermax இதுவும் இலவசமாகக் கிடைக்கும் ஒரு புரோகிராம். இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் இது டிரைவர் புரோகிராம்களை பேக் அப்பாக வைத்துக் கொள்ளும்.

நாம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கை ரீபார்மட் செய்து புரோகிராம்களை யும் சாதனங்களையும் நிறுவுகையில் அவற்றிற்கான டிரைவர்களை இதிலிருந்து பெறலாம். மேலும் இந்த டிரைவர்களுக்கு அவ்வப்போது அந்த நிறுவனங்கள் அப் டேட் வழங்குகையில் இந்த தளம் தானாகவே அவற்றை அப்டேட் செய்து நமக்கு வழங்குகிறது.


11. HDhacker: dimio.altervista.org/eng இந்த இலவச புரோகிராமும் ஒரு தனிப்பட்ட வகை பைலை பேக் அப் செய்கிறது. உங்கள் கம்ப்யூட்டரை ஆன் செய்தவுடன் அது MBR எனப்படும் Master Boot Record ஐத் தேடுகிறது.இதுதான் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள முதல் பிரிவில் உள்ள முதல் செக்டார் ஆகும்.

இங்குதான் பூட்டிங் தொடங்குகிறது. இந்த எம்.பி.ஆர். பார்ட்டிஷன் டேபிளைப் படித்தறிந்து உங்கள் கம்ப்யூட்டருக்குத் தேவையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் எங்குள்ளது எனக் கம்ப்யூட்டருக்குச் சொல்கிறது.

எனவே இந்த எம்.பி.ஆர். முறையாக பூட் செய்யப்படுவது மிக மிக முக்கியம். இது கெட்டுப் போனால் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல ஆகிவிடும். எனவே இதன் பேக் அப் பைல் கட்டாயம் ஒவ்வொரு பெர்சனல் கம்ப்யூட்டருக்கும் தேவை.

இந்த புரோகிராம் இதைத்தான் செய்கிறது. உங்கள் எம்.பி.ஆர். புரோகிராமினை பேக் அப் செய்து அதனை மீண்டும் நீங்கள் விண்டோஸில் இருக்கையில் கொண்டு வரும்.


12.Mozyhome: www.mozy.com/home இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டர் இயக்கத்தில் இருக்கையில் பின்னணியில் செயல்படும். நீங்கள் குறிப்பிடும் போல்டர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கும்.

கம்ப்யூட்டர் வேலை எதுவும் இன்றி இருக்கையில் உடனே அந்த போல்டர்களில் உள்ள பைல்களை பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளும். தேவைப்பட்டால் நாம் எப்போது வேண்டுமானாலும் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். 2 ஜிபி வரையிலான இடம் வரை இதில் இலவசமாகப் பைல்களைப் பதிந்து வைக்கலாம். அதன் பின் இடம் வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும்.


13.Defraggler: www.defraggler.com இந்த புரோகிராம் குறித்து ஏற்கனவே விபரமாகக் கம்ப்யூட்டர் மலரில் கொடுத்துள்ளோம். டிபிராக் செய்கையில் பொதுவாக முழு ஹார்ட் டிஸ்க் அல்லது ஒரு டிரைவ் முழுவதும் டிபிராக் செய்திடுவோம்.

ஆனால் இதனைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட பைலைக் கூட டிபிராக் செய்து அதனைச் சரியாக இணைத்து ஹார்ட் டிஸ்க்கில் வைக் கலாம்.


14.FileAlyzer: www.safernetworking.org/en/filealyzer கம்ப்யூட்டரில் உருவாக்கப்படும் பைல் ஒன்றுக்கு பல்வேறு கூறுகள் இருக்கும். இதனைத்தான் ப்ராபர்ட்டீஸ் என்கிறோம்.

பொதுவாக ஒரு பைல் குறித்து குறைந்த அளவிலான அதன் தன்மைகளையே நாம் பார்க்கிறோம். இந்த புரோகிராம் மூலம் பார்த்தால் பைலின் பல்வேறு கூறுகளைக் காணலாம். இவ்வளவா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு பைல் ஒன்றுக் கான கூறுகளை இந்த புரோகிராம் பட்டியலிடும்.


15. Maxto: www.maxto.net இப்போதெல்லாம் மானிட்டர்கள் நீள் சதுர வாக்கில் பெரிய அளவில் குறைந்த விலையில் எல்சிடி திரையுடன் கிடைக்கின்றன. அவ்வளவு பெரிய திரையில் ஒரே ஒரு புரோகிராம் மட்டும் ஏன் இயக்க வேண்டும்.

பிளாட் போட்டு குடியேறுவது போல ஏன் பல பிரிவுகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் இரண்டு அல்லது நான்கு புரோகிராம்களில் இயக்கத்தினை மானிட்டர் திரையில் பார்க்கக் கூடாது.

இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கிறது இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம். மானிட்டர் திரையினை சதுரங்களாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் ஒரு புரோகிராம் இயங்கும் வகையில் அமைக்கிறது. இதுவும் இலவசமே.


16. My Lockbox: www.fspro.net/mylockbox பைல்களையும் போல்டர்களையும் எப்படி மற்றவர்கள் பார்க்க முடியாமல் பூட்டி வைப்பது என்று அடிக்கடி கேட்கும் வாசகர்கள் இதனைப் பயன்படுத்தலாம்.

இலவசமாய்க் கிடைக்கும் இந்த புரோகிராம் ஒரு போல்டரை மறைத்து வைக்கும்; அல்லது லாக் செய்து வைக்கும். அந்த கம்ப்யூட்டரின் அட்மினிஸ்ட்ரேட்டிவ் உரிமை இருப்பவர் கூட அதனைக் காண முடியாது.

இணையம் வழியாக உங்கள் கம்ப்யூட்டரில் நுழைபவர் கூட அதனைக் காணமுடியாது. இந்த புரோகிராம் மூலம் ஒரு சின்ன பாஸ்வேர்ட் கொடுத்து போல்டரை லாக் செய்துவிடலாம்.


17. File & Folderunlocker www.diamonds.cs/ au.freeutilities/fileunlocker.php லாக் செய்யப்பட்ட ஒரு பைல் என்கிரிப்ட் செய்யப்படுவதில்லை. ஆனால் அதனுடன் வேலை செய்வது விண்டோஸ் இயக்கத்தில் சிரமமானது.

இந்த அன்லாக்கர் புரோகிராம் லாக் செய் யப்பட்ட நிலையில் இருந்து அதனை மாற்றிவிடும். பின் அந்த பைலை உங்கள் விருப்பப்படி மாற்றலாம்.


18. Irfanview: www.irfanview.com இது பல ஆண்டுகளாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே பிரபலமான பைல். 1996லிருந்து இது புழக்கத்தில் உள்ளது.

எந்த பார்மட்டில் இருக்கும் இமேஜையும் இதில் பார்க்கலாம். சில வீடீயோ பார்மட்டுகளையும் காணலாம். அத்துடன் நில்லாது வேறு பார்மட்டுகளுக்கு மாற்றலாம். அவற்றை எடிட் செய்திடலாம்.


19.CCleaner: www.ccleaner.com இதுவும் பிரபலமான ஒரு புரோகிராம். பிரவுசர், ரெஜிஸ்ட்ரி மற்றும் நம் டைரக்டரிகளில் உள்ள தேவையற்ற என்ட்ரிகளை நீக்குகிறது.

டெம்பரரி மற்றும் லாக் பைல்கள் தேவையின்றி குவிந்திருந்தால் அவற்றை நீக்கி கம்ப்யூட்டர் வேகமாகவும் தடையின்றியும் இயங்க வைக்கிறது. மேலும் மால்வேர் புரோகிராம்களைக் கண்டறிந் தும் நீக்குகிறது.


20. Spymetools: www.lcibrossolutions.com/spyme_tools.htm நம் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சில வேளைகளில் நடக்கக் கூடாதது நடக்கும். சில தளங்கள் தங்கள் ஸ்பை வேலைகளை மேற்கொள்ள நம் கம்ப்யூட்டர் ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்களை ஏற்படுத்திவிடுகின்றன.

இந்த புரோகிராம் அப்படி மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகையில் மாற்றத்திற்கு முன்னும் அதன் பின்னும் உள்ள ரெஜிஸ்ட்ரியை காப்பி செய்து தருகிறது. எனவே உங்கள் கம்ப்யூட்டர் இயக்கத்தில் ஏதேனும் மாற்றங் களை உணர்ந்தால் உடனே பழைய ரெஜிஸ்ட்ரி காப்பி பைலை அமல்படுத்தி ஸ்பை வேலைகளுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.

நன்றி.தினமலர்.

அன்புரசிகன்
03-08-2009, 12:14 PM
நல்லதொரு பகிர்வு. நன்றி...