PDA

View Full Version : கருக் கலைய சம்மதியோம்....!கலைவேந்தன்
02-08-2009, 04:02 PM
கருக்கலைய சம்மதியோம்...!

ஆண்டுக்கொருமுறை வரும்அறுவடை நாளுக்காய்
அன்புநீர் தெளித்து விழி வாசலில் காத்திருந்தான்....

மனவயல் முழுக்க நம்பிக்கை நாற்றுகள்
எதிர்பார்ப்புக் காற்றில் சிலு சிலுத்தன...

எகிறிப்பறந்துவரும் சூழ்நிலை வெட்டுக்கிளிகளை
தன் கைப்பொமமையைத் தக்கவைக்கப் போராடும்
பலவீனக் குழந்தையாய் விரட்டினான்...

திருவிழா வசந்தங்கள் தரும் திகட்டாக சுவை புசிக்க
புது வகுப்புச்செல்லும் சிறுமாணாக்கனாய்க் காத்திருந்தான்...

இளம்பச்சை நாற்றுகளைப் பசிகொண்ட ஆடுகள்
புசித்திட விட்டுவிடாது விழிவியர்க்க பார்த்திருந்தான்...

கடும்புயல் மழைகளை கட்டுப்படுத்த இயலாதெனினும்
தன்வயல் பட்டுவிடாமல் க்டவுளிடம் உருகிநின்றான்...

சதிவலிது தானெனினும் அதனைவிட
விதிவலிது என உணர்ந்து
மதிமுழுக்க நல்லெண்ணம் நிறைத்து நின்றான்...

அந்த நாளும் வந்தது.....

காத்திருந்து விருந்து புசிக்கும் இரவுப்பிச்சைக்காரனாய்
கால்கடுக்க நின்று செய்த தவம் பயனுறுமோ என எண்ணி
காலதேவனின் அலட்சியப்பார்வையை லட்சியம் செய்யாமல்
கவலையுடன் எதிர்பார்த்த நாளும் வந்தது.....

வடித்துச் சமைத்து வடிவாகப்பறிமாறும் நேரம்
வாய்வைக்கவந்த நாயின் விதி சொல்வதா...?

கருக்கொண்ட மேகங்கள் பொழிந்துவிடத் தயாராகும்போது
எங்கிருந்தோ வந்த சூறாவளிப் பெருங்காற்று
எங்கோ தள்ளிப்போன சோகம் புனைந்துரைப்பதா...?

ஏழைகளுக்குமட்டுமே சந்தர்ப்ப சூழல்கள்
எதிராக நிற்பதேன்....?

காரணம சிந்திப்போம் களைவோம்...
களைய முடியாதவற்றை கருவறுப்போம்....!

எது எப்படியாகினும்

ஏழைப்பசியாளனின் உணவுக்கனவுகள்
கருக்கலைய சம்மதியோம்....!

அமரன்
02-08-2009, 09:48 PM
பாரதியும் கலைவேந்தனும்
மாறி மாறித் தெரிகின்றனர்
கவிதையில்....!

கருக் கலைக்க வேண்டும்..
அன்றாடம் காய்ச்சிகளின் அவலம் சொன்ன
கவிதையின் கருவினைக் கலைக்க வேண்டும்.

கருக்கலைக்க வேண்டும்..
எளியோரை வீழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகின் கருவைக் கலைக்க வேண்டும்.

சிறு சேமிப்புக்குக் கூட வழி இல்லாத*
காலத்தை உருவாக்கும் இயற்கைச் சீரழிவின்
கருதனைக் கலைக்க வேண்டும்...!

கா.ரமேஷ்
03-08-2009, 06:04 AM
அருமை கலைவேந்தன்.... விவசாயி கருவை காத்தால்தான் நம் உயிர் நிலைத்திருக்கும்... நல்ல கவிதை வாழ்த்துக்கள் .....

நேசம்
03-08-2009, 07:27 AM
விவாசயிகளின் துயரங்களை கூறும் கவிதை.கரு கலையமால் இருக்க வேண்டிய அவசியத்தை கூறும் கருத்தான கவிதை

கலைவேந்தன்
03-08-2009, 03:21 PM
பாரதியும் கலைவேந்தனும்
மாறி மாறித் தெரிகின்றனர்
கவிதையில்....!

கருக் கலைக்க வேண்டும்..
அன்றாடம் காய்ச்சிகளின் அவலம் சொன்ன
கவிதையின் கருவினைக் கலைக்க வேண்டும்.

கருக்கலைக்க வேண்டும்..
எளியோரை வீழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகின் கருவைக் கலைக்க வேண்டும்.

சிறு சேமிப்புக்குக் கூட வழி இல்லாத*
காலத்தை உருவாக்கும் இயற்கைச் சீரழிவின்
கருதனைக் கலைக்க வேண்டும்...!

ஆஹா...அழகான பின்னூட்டமே ஓர் அற்புதக்கவிதையாய்.

மிக்க நன்றி நண்பரே...!

கலைவேந்தன்
03-08-2009, 03:23 PM
அருமை கலைவேந்தன்.... விவசாயி கருவை காத்தால்தான் நம் உயிர் நிலைத்திருக்கும்... நல்ல கவிதை வாழ்த்துக்கள் .....

உண்மைதான் ரமேஷ்...!

விவசாயியின் கூன் நிமிர்ந்தால் தான் நம் ஊன் நிறையும் என்பது மறுக்கப்படமுடியாத சத்தியம்...!

நன்றி ரமேஷ்...!

( எனது சிறுவயதுப்பெயர் ரமேஷ்தான் :) )

கலைவேந்தன்
03-08-2009, 03:26 PM
விவாசயிகளின் துயரங்களை கூறும் கவிதை.கரு கலையமால் இருக்க வேண்டிய அவசியத்தை கூறும் கருத்தான கவிதை

கண்டிப்பாக நேசம்...!

ஏழைகளின் வாழ்க்கைக் கருவளர்ந்தால்தான் நம் வாழ்க்கை உருப் படும் எனதில் ஐயமில்லை...!

நன்றி நண்பரே...! ( நண்பியே...? )

மஞ்சுபாஷிணி
03-08-2009, 03:58 PM
கவிதையின் ஒவ்வொரு வார்த்தைகளும் சரி அதை கோர்த்த விதமும் சரி அடுத்தவர் துன்பத்தை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும். துன்பப்படும் எத்தனையோ பேரை பார்க்கிறோம். ஆறுதல் சொல்கிறோம். ஆனால் அவர் நிலையில் இருந்து பார்க்க தவறுகிறோம். கலை உன் இந்த கவிதை படிக்கும்போதே மனம் கனத்தது உண்மை...

ஒரு ஏழை விவசாயியின் தினம் உணவே கனவான நிலை... ஆண்டுக்கொருமுறை செய்யும் அறுவடை தான் அவனின் ஜீவ போராட்டம்... ஏழை விவசாயியின் மனதிலுள்ள வேதனைகளை அப்படியே எழுதியது ஆச்சர்யம்...

பட்டினிச்சாவு அதிகம் விவசாயிகள் வானம் பொய்த்தபோது கண்டது.... நாம் சாப்பிட அவர்களின் உழைப்பு... ஆனால் அவர்களின் வயிறு நிறைவதில்லை...

மிக அருமை கலை....

கலைவேந்தன்
03-08-2009, 04:03 PM
உன் ஆசி மஞ்சு...!