PDA

View Full Version : கடவுளுக்கு ஒரு கேள்வி?!



ஷீ-நிசி
01-08-2009, 09:47 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/KadavulukuoruKelvi2.jpg


தாலி கயிறொன்று
அவள் கழுத்தில் ஏறாததால்;
தாம்பு கயிறொன்று,
அவள் கழுத்தில் ஏறியது.

கடிதமொன்று அவளருகில்
படபடத்தது,

அதில்…..

கடவுளுக்கு ஒரு கேள்வி!

“கடைசி இரவை
கொடுத்தாயே இறைவா….
எனக்கு முதல் இரவை கொடுத்தாயா?! ”

ஓவியன்
01-08-2009, 12:25 PM
ஷீயின் கவிதையொன்றுக்கு நீண்ட நாட்களுக்குப் பின் நான் பின்னூட்டமிடுகிறேனென நினைக்கிறேன், இந்த நீண்ட இடைவெளி இனிமேலும் நீடிக்காதிருக்கட்டும்....

சரி கவிதையின் கருவுக்கு வருவோம், எழுத்துக்களைக் கையாண்ட விதத்தில் கவிதை ஆகா சொல்ல வைக்கிறது ஆனால் வழமை எதிர்மறையான எண்ணத்திலான கவிதைக்கருவுடன் எனக்கு உடன்பாடில்லை ஷீ..!!

இறக்கும் அந்த இரவுதான் இறுதி இரவென்றால்,
குழந்தையாக அவதரித்த முதல் நாள் இரவன்றோ முதலிரவு..!!

அதனைக் கடவுள் கவிதை நாயகிக்குக் கொடுக்கத் தவறவில்லையே,
அவள் தானே அவர் கொடுத்த வாய்ப்புக்களை முழுமையாக
அனுபவிக்கத் துணிவற்று இறுதி இரவினை நாடுகிறாள்..!!

தாலிக் கயிறு கிடைக்காதவரெல்லாம்
தாம்புக் கயிற்றை நாடினால்
நம் உலகின் நிலை என்னாவது....???

தாலிக் கயிறொன்று கிடைக்க
சம்பிரதாயங்கள்தான் தடையென்றால்
சம்பிரதாயங்களை உடைத்தெறிவோம்,

அதன் பின்னரும் கிடைக்காதிருந்தால்,
அந்த காரணத்தையும் தகர்த்தெறிவோம்,
நம்பிக்கைதானே வாழ்க்கை ஷீ..!!

நாமும் நம்புவோம், இந்தக் கரு என்றென்றும் நிஜக் கருவாகாதிருக்கட்டும்.

ஷீ-நிசி
02-08-2009, 01:27 AM
நன்றி ஓவியன்...

இது கடைசி இரவென்றால் பிறந்தது முதல் இரவுதானே... மிக நியாயமான கேள்வி....

கவிதைக்கு பொய் அழகுதானே.....

திருமணமானவர்கள் இணையும் 'முதல்' இரவை முதல் இரவு என்கிறார்கள்..
அந்த முதல் இரவை மையப்படுத்தி கூறப்பட்டுள்ளது கவிதையில். எல்லா பெண்களுக்கும் கிடைக்கும் திருமணம் என்ற அந்த சந்தோஷம், ஏன் எனக்கு மட்டும் அல்லது என்னைப்போன்ற வறுமையான பெண்களுக்கு வரதட்சணை என்ற ஒரே காரணத்தினால் தடைபட்டுப்போகிறதே என்ற ஆதங்கத்தை இறைவன் முன் வைக்கிறாள்... தற்கொலை செய்துகொள்ளும் அந்த இரவில் அவளுக்கு தோன்றும் அந்த சில வரிகளே கவிதையாய் இங்கே.....


நன்றி ஓவியன்!

அமரன்
02-08-2009, 10:32 AM
மலர்ந்தாலும் மணப்பதில்லை..
பழந்தண்ணி காயவில்லை....

இறைவனிடம் ஒரு கேள்வி..
என்று தணியும் இந்த வரதட்சணை வெறி...???

இந்த முறை ஷீயின் சாட்டை தயவு தாட்சனியம் பாராது சுற்றியிருக்கு.

பாவமன்னிப்புக் கிடைப்பதில்லை
பாவைகளின் இரகசியங்கள்
பாராத பாய்களுக்கு.....!

இளசு
03-08-2009, 08:37 PM
மணம், முதலிரவு தாண்டியும் வாழ்வில் நிறைய உண்டு..
ஆனால் மணம் அமையா வறட்சியில் நிற்பவர் மனநிலை?

இது, இப்படி என இயற்கையும் சமூகமும் விதித்தவை முரணான அரணாக..
சிறைக்குள் சிக்கிய மனப்பறவையின் சிறகழிவு...

இருள் முடிவென்னும் கருமையை மீறி
சொல்வண்ணம் சொலிக்கும் முரண்கவிதை..

பாராட்டுகள் ஷீ!

ஷீ-நிசி
05-08-2009, 01:52 AM
[QUOTE=அமரன்;426419]மலர்ந்தாலும் மணப்பதில்லை..
பழந்தண்ணி காயவில்லை....

அழகான வரிகள் அமரா....


நன்றி!

ஷீ-நிசி
05-08-2009, 01:54 AM
சிறைக்குள் சிக்கிய மனப்பறவையின் சிறகழிவு...

!


வார்த்தையின் வளமை இளசு ஜி! மனப்பறவையின் சிறகழிவு.... சூப்பர்ப்!

நன்றி இளசு ஜி! மிக அழகான நுண்ணிய விமர்சனம்!

தாமரை
05-08-2009, 02:33 AM
எனக்குத் தெரிந்தவரை
யாருமே விரும்பாதவர்கள்
இல்லவே இல்லை...

நமக்குப் பிடித்தவர்களுக்கு
நம்மைப் பிடிக்கவில்லை
இதுதான்
முற்றிலும் உண்மை...

இறுதி இரவு உன்கையில் என்றால்
முதலிரவும் உன்கையில்தான்

வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே
சகதிகளில் சிக்கிக் கொள்ளத் தேவையில்லை..

சிலசமயம் குனிந்தும் பார்க்கலாம்

கா.ரமேஷ்
05-08-2009, 04:45 AM
முதிர்கன்னிகளின் முகம் காட்டும் கவிதை...
முதல் இரவினை அவர் சந்திக்காமல் இருந்ததற்க்கு அவரின் முழு மனதை அறிந்திருக்க வேண்டும்... நல்ல கவிதை வாழ்த்துக்கள்...

நேசம்
05-08-2009, 11:19 AM
இறைவனிடம் ஒரு கேள்வி என்று இந்த சமுகத்தின் அவலத்தை சொல்லி இருக்கார்.ஆனால் நாம் கேள்வி கேட்கமால் இந்த க்விதையின் கரு நடக்கமால் இருக்க முயற்சிப்போம்.பாரட்டுகள்

ஷீ-நிசி
05-08-2009, 03:54 PM
இறுதி இரவு உன்கையில் என்றால்
முதலிரவும் உன்கையில்தான்

ஆழமான வரிகள்... நன்றி தாமரை

ஷீ-நிசி
05-08-2009, 03:55 PM
நன்றி ரமேஷ், நன்றி நேசம்