PDA

View Full Version : பெண் பக்தைக்கு நடுகாட்டில் வைத்து முருகப்பெருமான் காட்சிHoneytamil
01-08-2009, 05:45 AM
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பக்தை ஒருவருக்கு வாகூரவெட்டை என்னும் இடத்தில் நடுக்கானகத்தில் வைத்து கதிர்காம முருகன் காட்சி கொடுத்ததுடன் அவரிடம் ஒரு பண முடிப்பையும் வழங்கிவிட்டு மறைந்துள்ளார்.

கிழக்கு மாகாணம், காரைதீவைச் சேர்ந்த பக்தை திருமதி மானாகன் புவனேஸ்வரி (வயது 55) என்பவருக்கே வாகூரவெட்டை நடுக் கானகத்தில் வைத்து முருகப் பெருமான் காட்சியளித்துள்ளார்.

இந்த பெண் பக்தையையும், இவருக்கு கதிர்காமமுருகன் வழங்கிய பணமுடிப்பையும், பணமுடிப்பிற்குளிருந்த 5000 ரூபா பணத்தையும் கீழேயுள்ள படங்களில் காணலாம்.

http://i25.tinypic.com/aevbih.jpg

http://i25.tinypic.com/2zqylar.jpg

நன்றி : பாரிஸ் தமிழ்

அமரன்
01-08-2009, 07:23 AM
முருகனுக்கு எப்படிக் கிடைத்தது அஞ்சாயிரம்...!!!??

கடவுளை நம்புங்கள். ஆனால் இதை நம்பாதீங்க.

அன்புரசிகன்
01-08-2009, 07:41 AM
நல்லது நடந்தவரை நல்லது. அதுக்காக எல்லோரும் 5000 கேட்டுடாதீங்க...

அவர் ஏற்கனவே ஆண்டி....

அமரன்
01-08-2009, 07:45 AM
நல்லது நடந்தவரை நல்லது. அதுக்காக எல்லோரும் 5000 கேட்டுடாதீங்க...

அவர் ஏற்கனவே ஆண்டி....

முருகன் எப்போது 'ஆண்டி' ஆனார் ரசிகா. அவர் அங்கிள் கூட ஆகல. ஸ்டில் ஹீ இஸ் யங்.:lachen001:

அன்புரசிகன்
01-08-2009, 08:20 AM
முருகன் எப்போது 'ஆண்டி' ஆனார் ரசிகா. அவர் அங்கிள் கூட ஆகல. ஸ்டில் ஹீ இஸ் யங்.:lachen001:

நான் தமிழ்ல சொன்னேனாக்கும்...

தமிழ் வாழ்க....
தமிழ் வாழ்க...:sport-smiley-014::sport-smiley-014::sport-smiley-014:

ஓவியன்
01-08-2009, 09:10 AM
பாவம் கதிர்மாகக் கந்தன், நம்ம ஆட்கள் அவரையும் விட்டு வைக்கிற மாதிரி தெரியலை..!! :lachen001:


நானாக இருந்திருந்தா கொடுக்கிறதை 5000 ரூபாவுக்குப் பதிலாக 5000 ஓமான் றியாலாகத் தரச் சொல்லிக் கேட்டிருப்பன்..!! :icon_rollout::D

ஷீ-நிசி
01-08-2009, 09:25 AM
கேட்கறவன் கேனப்பயலா இருந்தா?!.........

ஓவியன்
01-08-2009, 09:28 AM
கேட்கறவன் கேனப்பயலா இருந்தா?!.........

சும்மா போங்க ஷீ...!!

உங்களுக்கு 5000 இந்திய ரூபா கிடைக்கலைனு கோபம் போல.. :D:D:icon_rollout:

ஷீ-நிசி
01-08-2009, 09:38 AM
சும்மா போங்க ஷீ...!!

உங்களுக்கு 5000 இந்திய ரூபா கிடைக்கலைனு கோபம் போல.. :D:D:icon_rollout:

பேசறதை பார்த்தா அந்த 5000 த்துல ஓவியனுக்கும் ஒரு பங்கு இருக்கும் போல இருக்குதே!! :lachen001: :lachen001:

அய்யா
01-08-2009, 01:26 PM
ஒரிரு மாதத்துக்கு முன் இந்த முருகன் எங்கே போயிருந்தாராம்?

ஓவியன்
01-08-2009, 01:30 PM
ஒரிரு மாதத்துக்கு முன் இந்த முருகன் எங்கே போயிருந்தாராம்?

ஏன் அப்போது உங்களுக்கு 5000 தேவைப்பட்டதா..?? :aetsch013:

அய்யா
01-08-2009, 01:39 PM
ஏன் அப்போது உங்களுக்கு 5000 தேவைப்பட்டதா..?? :aetsch013:

நிறைய பேருக்கு உயிரும் உடமைகளும் தேவைப்பட்டதே.. ஈழத்தில்..!

Honeytamil
01-08-2009, 01:42 PM
என்ன முருகனை வைச்சு இப்பிடி ஆளாளுக்கு காமெடி பண்ணுறீங்களே? இன்னைக்கு இரவு முருகன் கனவுல வந்து என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே ??? என்று கேட்காமல் இருந்தால் சரி!!!!

அய்யா
01-08-2009, 01:43 PM
வடிவேலனல்லவா.. கேட்டாலும் கேட்பார்!

பரஞ்சோதி
01-08-2009, 03:58 PM
இருக்கிற கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிகைக்கும் வேட்டு வைச்சிடுவாங்க போல.

கடவுளை வேண்டினேன், கீழே கிடைச்சது என்றாலும் நம்பியிருக்கலாம்.

பாவம் முருகன், சண்டைக்கு பயந்து எங்கே ஓடி போயிட்டு, இப்போ தான் திரும்பியிருக்கார் போல.

- திருச்செந்தூர்க்காரன்

ஓவியன்
01-08-2009, 06:17 PM
நிறைய பேருக்கு உயிரும் உடமைகளும் தேவைப்பட்டதே.. ஈழத்தில்..!

அட அப்படியா..?? :confused:

(இது முருகனுக்கே தெரியலை, நமக்கு எப்படித் தெரியப் போகிறது)

தூயவன்
01-08-2009, 06:32 PM
அட போங்கப்பா வர வர புறுடா விடுறதுக்கு ஒரு அளவு இல்லாம போச்சு

அய்யா
01-08-2009, 06:35 PM
அட அப்படியா..?? :confused:

(இது முருகனுக்கே தெரியலை, நமக்கு எப்படித் தெரியப் போகிறது)

அப்படித்தான் சொல்லிகிட்டுருந்தாங்க!

ஓவியன்
02-08-2009, 03:58 AM
அப்படித்தான் சொல்லிகிட்டுருந்தாங்க!

அப்போ அதுவும் ஃகன்பர்ம் இல்லையா...!? :icon_cool1:

ஃகன்பர்ம் இல்லாமலா, பதிவு எண் #10 மற்றும் #12 பதியப்பட்டது....?? :icon_rollout::D

aren
02-08-2009, 05:21 AM
மக்கள் நம்பிக்கைக்கு ஒரு எல்லையே இல்லை போலிருக்குது. முருகன் தாமாகவே அடித்த நோட்டோ. அப்படின்னா அது கள்ளநோட்டாச்சே.

உழைத்து சம்பாதிக்கும் பணமே நம் கையில் இருக்கமாட்டேங்குது. அதில் இது வேறேயா?

நேசம்
02-08-2009, 08:16 AM
இது போன்ற சம்பவங்கள் வெறும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி நாத்திகர்களுக்கு கிண்டலுக்கு ஆளாகும்

அய்யா
02-08-2009, 10:25 AM
அப்போ அதுவும் ஃகன்பர்ம் இல்லையா...!? :icon_cool1:

ஃகன்பர்ம் இல்லாமலா, பதிவு எண் #10 மற்றும் #12 பதியப்பட்டது....?? :icon_rollout::D


கன்ஃபர்ம் இல்லாம் எவ்வளவோ நடக்குது.. இது என்ன ஜூஜுபி!

ஓவியன்
02-08-2009, 11:30 AM
கன்ஃபர்ம் இல்லாம் எவ்வளவோ நடக்குது.. இது என்ன ஜூஜுபி!

அதுசரி, அதையெல்லாம் அறியுமளவுக்கு உங்களளவுக்கு நான் அதி புத்திசாலி இல்லீங்கோ...!! :icon_rollout::icon_rollout:

அய்யா
03-08-2009, 05:09 AM
தெரியும்!

:)

ஓவியன்
03-08-2009, 06:31 AM
தெரியும்!

:)

தப்பு பண்ணிட்டீங்களே ஐயா, என்னை விட புத்திசாலியாக இருந்தும் நான் முன்னர் பதிவிட்ட பதிவினை மேற்கோளிடாது தப்பு பண்ணிட்டீங்களே... :lachen001:

இப்ப பாருங்க என்னை விட அதி புத்திசாலி நீங்கனு சொல்லி இருக்கீங்க...!! :lachen001:

அமரன்
03-08-2009, 08:07 AM
அந்தக்காலத்துப் புராணப் படங்களைச் சின்னவயசில் கேட்ட*து போலிருக்கின்றன உரையாடல்கள். :lachen001:

ஆதி
03-08-2009, 12:38 PM
கொடுக்குற தெய்வம் கூறையை பிச்சுக்கிட்டு கொடுக்கும் என்று சொல்வார்கள்..
ஆனா இவக என்னன்னா அளந்து கொடுத்ததா சொல்றாகளே.....

இறைநேசன்
03-08-2009, 12:47 PM
என்னுடைய அனுபவப்படி எந்த தெய்வமும் நேரில் வந்து பேசியது இல்லை.
ஆனால் மிகுந்தத் சிரத்தையோடு இறைவனை தேடும் பக்தர்களின் மனதில் தெய்வங்களால் தங்களை அடையாளம் காட்டி பேச முடியும் என்பதையே நான் அறிந்திருக்கிறேன்.

ஆனால் இங்கு இந்த பெண்ணிடம் தெய்வம் பேசியதோடு பணமும் கொடுத்தது என்ற செய்தியை கேட்கும்போது மிகுந்த ஆச்சர்யமாக இருக்கிறது.

அறிஞர்
03-08-2009, 01:25 PM
செய்தியை செய்தியாக பார்க்க வேண்டியது தான்.
இறைவனால் எதையும் செய்ய இயலும் என்ற நம்பிக்கை சிலருக்கு.
எல்லாம் வேஷம் என்பர் சிலர்....

விக்ரம்
04-08-2009, 11:58 AM
செய்தியை செய்தியாக பார்க்க வேண்டியது தான்.
O.K


இறைவனால் எதையும் செய்ய இயலும் என்ற நம்பிக்கை சிலருக்கு.
எல்லாம் வேஷம் என்பர் சிலர்....
எதைத்தான் செய்ய இயலும்....??? :icon_rollout: :icon_rollout: :traurig001: :traurig001:

அய்யா
10-08-2009, 12:57 PM
தப்பு பண்ணிட்டீங்களே ஐயா, என்னை விட புத்திசாலியாக இருந்தும் நான் முன்னர் பதிவிட்ட பதிவினை மேற்கோளிடாது தப்பு பண்ணிட்டீங்களே... :lachen001:

இப்ப பாருங்க என்னை விட அதி புத்திசாலி நீங்கனு சொல்லி இருக்கீங்க...!! :lachen001:


இல்லியே!

நீங்க அதிபுத்திசாலி இல்லேங்கறது எனக்குத் தெரியும்ன்னுதானே சொல்லியிருக்கேன்!

சுஜா
10-08-2009, 01:10 PM
குடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுகினு குடுக்குமுனு சொல்வாங்க...ஆனா இப்படி குறைவா கொடுத்திருக்கு .சரி இப்படி பணத்தைகொடுத்தா பணவீக்கம் அதிகமாயிடாது ?:lachen001::lachen001::lachen001::traurig001:

உதயசூரியன்
10-08-2009, 01:49 PM
கடவுளை மற..(எல்லா மத கடவுளையும் தான்)
மனிதனை நினை....

வாழ்க தமிழ்