PDA

View Full Version : நடராஜா நீ கொஞ்சம் நட ராஜா



மதுரை மைந்தன்
01-08-2009, 05:21 AM
பார்வதி அம்மாளுக்கு மகன் நடராஜன் அதிகம் நடக்க வில்லை என்று வருத்தம். ஒரே பிள்ளை என்று செல்லமாக வளர்ந்தான் நடராஜன். சின்ன குழந்தையாக இருந்த போது வீட்டுக்கள் தள்ளி வண்டியில் வலம் வந்தான். சிறிது பெரியவனான பிறகு மூணு சக்கர சைக்கிளில் தான் அவனது சாப்பாடு விளையாட்டு எல்லாம். ஹைஸ்கூலில் சேர்நதவுடன் சைக்கிள் காலேஜில் சேர்ந்தவுடன் ஸ்கூட்டர் இப்போது ஆபீஸில் சேர்ந்தவுடன் செகண்ட் ஹாண்ட் கார் என்று வாகனங்களிலேயே வலம் வந்தான். பக்கத்து கடைக்கு போவதானால் கூட தனது காரில் தான் போய் வருவான்.

வருடத்தக்கு ஒரு தடவை சொந்த ஊரான மதுரைக்கு போனால் மீனாட்சி கோயிலில் பொற்றாமரை குளத்து படிக்கட்டில் உடகார்ந்து விடுவான். அங்கிருந்தே அம்மனை கும்பிட்டு விடுவான். மும்பையில் மால்களுக்கு சென்றால் அவனுக்காகவே போடப்பட்ட மாதிரியான பெஞ்சில் அமர்ந்து விடுவான். அவனுக்காக அவனத நண்பர்கள் தான் ஷாப்பிங் செய்ய வேண்டும்.

" அதிகமா நடக்க மாட்டேனு பாரு உனக்கு உடம்பு தடிச்சு தொந்தியும் போட்டாச்சு" அங்கலாய்த்தாள் பார்வதி அம்மாள்.

நடராஜன் சிரித்துக் கொண்டே " அதனாலென்ன அம்மா தொந்தி இருந்தா போலீஸ் வேலை நிச்சயம் கிடைக்கும்" என்றான்.

" இங்கே காலனில பாரு கார்த்தால எல்லோரும் வாக் போறா. டாக்டர் கிட்ட போனா தினம் நீங்க நடந்தீங்கனா ஒரு வியாதியும் வராது என்கிறா" என்றாள் பார்வதி அம்மாள்.

'கவலைப் படாதே அம்மா நான் ஜிம்முக்கு போய் உடம்பை தேத்திக்கிறேன்" என்று சமாதானம் செய்தான் நடராஜன்.

மும்பையில் அன்று காலையிலிருந்தே மழை பெரிதாக இருந்தது. சர்ச்கேட்டில் வேலை பார்த்த நடராஜன் காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். மதியம் 3 மணி அளவில் ஆரம்பித்து மிக பெரிய மழை பெய்ய ஆரம்பித்து மும்பை முழவதும் வெள்ளக் காடாய் ஆயிற்று. செம்பூரில் குடி இருந்த பார்வதி அம்மாள் மழை இப்படி பெய்கிறதே நடராஜன் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று கடவுளை பிரார்த்தித்தாள். நடராஜனுக்கு மொபைல் போனில் செய்தால் கால் போய் சேரவில்லை. நிமிடங்கள் மணிகளாக நகர்ந்து பார்வதி அம்மாளை சோதித்தது. டெலிவிஷன் செய்திகளில் மும்பை தெருக்களில் தண்ணீர் நிரம்பி எல்லாவித போக்குவரத்தும் நின்று விட்டது என்று அறிந்து பதை பதைத்தாள் பார்வதி அம்மாள். நடராஜனால் அதிகம் நடக்க முடியாதே என்று அழுது புலம்பினாள். சாப்பிடாமலேயே நடராஜனின் வருகையை எதிர் பார்த்து சோர்வுற்று கண்ணயர்ந்தாள்.

காலிங் மணியின் சத்தம் கேட்டு கண் விழித்த பார்வதி அம்மாள் கடியாரத்தை பார்த்தாள். அப்போது நடு இரவு மணி 3 ஆக இருந்தது. வாசல் கதவை திறந்தால் அங்கு மழையில் நனைந்து தலை முடி பரந்து பாண்ட் ஷர்ட் கசங்கிய நிலையில் நின்றான் நடராஜன்.

" நடராஜா வா வா எப்படி வந்தே" என்றாள் பார்வதி அம்மாள்.

" நானும் எங்க ஆபிஸ் நண்பர்களும் வேற டிரான்ஸ்போர்ட் கிடைக்காம நடக்க ஆரம்பிச்சோம். முதல்ல இவ்வளவு தூரம் நடக்க முடியுமானு மலைப்பா இருந்தது. ஆனா பிரண்ட்ஸோட பேசிக்கிட்டு நடந்ததில தூரம் தெரியலை. அதோட வழி நெடுக ஜனங்கள் எங்களுக்கு சாப்பாடு தண.ணீர் கொடுத்து உற்சாகம் பண்ணிணதல அலுப்பு தெரியலை. இவ்வளவு தூரம் சர்ச்கேட்டிலிருந்து செம்பூர் வரைக்கும் நடந்ததில எனக்கு புத்தணர்ச்சி கிடைச்சிருக்கு. நான் இனிமே நிறைய நடக்க போறேன்". நடராஜன் சொன்னதைக் கேட்டு பூரித்த பார்வதி அம்மா " வா நான் தலையை துவட்டி விடறேன். சாப்பிட்டட்டு படுத்து நல்லா தூங்கு" என்றாள் பார்வதி அம்மாள்.

பார்வதி அம்மாளுக்கு தெரியாது அன்று நடராஜனுக்கு நடப்பதில் வந்த உற்சாகத்திற்கு காரணம் அவனுடன் நடந்து வந்த அவனது ஆபீஸ் பிரண்ட் கமலா என்று.

அமரன்
01-08-2009, 07:52 AM
எப்படியோ நடராஜன் நடந்தால் சரி. தொந்தி குறைஞ்சால் சரி.

நகைச்சுவகை கலந்து இளைஞர்களின் கடிவாளம் இளைஞிகள் கையிலும் உண்டு எனக் காட்டிய கதைக்கு பாராட்டுகள் மதுர அண்ணா.

அக்னி ஏன் நடந்து திரியுறான்னு தெரிஞ்சிட்டு.

மதுரை மைந்தன்
01-08-2009, 08:49 AM
எப்படியோ நடராஜன் நடந்தால் சரி. தொந்தி குறைஞ்சால் சரி.

நகைச்சுவகை கலந்து இளைஞர்களின் கடிவாளம் இளைஞிகள் கையிலும் உண்டு எனக் காட்டிய கதைக்கு பாராட்டுகள் மதுர அண்ணா.

அக்னி ஏன் நடந்து திரியுறான்னு தெரிஞ்சிட்டு.


ஹா ஹாஹ ஹா

அக்னியோட அமலாவை தெரிஞ்சு வச்சிருக்கீங்களே.

உடன் பின்னூட்டம் போட்டதற்கு நன்றி அமரன் தம்பி

செல்வா
02-08-2009, 04:53 AM
நடக்காதிருப்பவனின் பெயர் நடராஜன்.

அண்ணாவின் கதைகளைப்போல் பெயர்களிலேயே எள்ளலை வைத்து ஆரம்பிக்கும் கதை..

நடக்காத ராஜாவாக இருந்தவன்... நடராஜாவாக.. மாறுகிறான்...

காரணம் ... காதல்...

நல்லா எழுதிருக்கீங்க...

வாழ்த்துக்கள் அண்ணா....

ஆமா... தொந்தியா இருந்த நடராஜன் நடந்தா ஒல்லியாவாரு...

ஒல்லியாயிருக்கும் அக்னி நடந்தா?

அமரன்
02-08-2009, 09:22 AM
நடக்காதிருப்பவனின் பெயர் நடராஜன்.

அண்ணாவின் கதைகளைப்போல் பெயர்களிலேயே எள்ளலை வைத்து ஆரம்பிக்கும் கதை..

நடக்காத ராஜாவாக இருந்தவன்... நடராஜாவாக.. மாறுகிறான்...

காரணம் ... காதல்...

நல்லா எழுதிருக்கீங்க...

வாழ்த்துக்கள் அண்ணா....

ஆமா... தொந்தியா இருந்த நடராஜன் நடந்தா ஒல்லியாவாரு...

ஒல்லியாயிருக்கும் அக்னி நடந்தா?

ஹி...ஹி...
பாவம் நடராஜன்.. தொந்தியும் கரைந்து காசும் கரைந்து..
மெல்லிய அக்னி நட்ந்தால் பெருத்து விடுவான்.

மஞ்சுபாஷிணி
08-08-2009, 06:26 AM
கதை மிக அருமை... நடராஜன் போல நடக்காமலயே வாழ்க்கையை நகர்த்துவோர் நிறைய பேர் இருக்காங்க :) தொந்தி கரைய இப்படியாவது நடக்கட்டுமே... நன்றி ஐயா.

கா.ரமேஷ்
08-08-2009, 06:41 AM
நல்ல நகைச்சுவை கதை...

நட(க்கா)ராஜரை பாருங்கள் தனக்கென்று ஒரு பெண் வந்தவுடன் சோம்பல் எல்லாம் சுகமாய் போய்விட்டது...எல்லாம் காதல் படுத்தும் பாடு.. நல்ல கதைக்களம் தோழரே வாழ்த்துக்கள்...!

இளசு
08-08-2009, 09:02 AM
மிக இரசித்தேன்..

குறிப்பாய் இறுதி வரி கூடுதல் முடிச்சை!

மும்பை பேய்மழையைக் கச்சிதமாய்ப் பயன்படுத்திய யுத்திக்கு சபாஷ்!

பாராட்டுகள் மதுரை மைந்தரே!


( நானும் நடராசன் நடக்கிறான் என ஒரு க(வி)தை எழுதியிருக்கிறேன் மன்றத்தில்..
அது சுஜாதா அவர்களின் கதை பாதிப்பால் என நினைவு..)

த.ஜார்ஜ்
08-08-2009, 09:29 AM
பாருங்க .பொண்ணுங்க என்னவெல்லாம் தியாகம் பண்ண வேண்டியிருக்கு?

பா.ராஜேஷ்
08-08-2009, 10:09 AM
எப்படியோ எல்லோரையும் நடக்க செய்வதற்கான கதையாக தோன்றுகிறது. எல்லோருக்கும் புரிந்தால் சரி.

ஓவியன்
23-08-2009, 05:58 AM
ஹா, ஹா..!!

நடராஜன் இனி எப்போதும் நடப்பது இருக்கட்டும், ஆனா அவன் கூட அவனது ஆபிஸ் பிரண்ட் கமலாவும் சேர்ந்து நடக்கணுமே....?? :D:D

நடக்காராஜன், நிஜமாவே நடராஜனான கதை அமர்க்களம் மதுரை அண்ணா, மனதார்ந்த பாராட்டுக்கள்..!!:)

ஐரேனிபுரம் பால்ராசய்யா
25-08-2009, 08:39 AM
நகைச்சுவை கலந்த நயமான கதை. மும்பையின் அடை மழையை அழகாக எழுதி அசத்திவிட்டீர்கள். பாராட்டுக்கள்

மதுரை மைந்தன்
26-08-2009, 08:44 AM
பின்னூட்டங்கள் போட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள.

நேசம்
26-08-2009, 09:22 AM
நல்ல நகைச்சுவை கதை.அதுவும் அந்த கதாபாத்திரத்துக்கு நடராஜான்னு பேர் வச்சசு அருமை.முதல் தடவை நடையின் வலி தெரியவில்லை.ஆனால் போக போகா வலியுடன் நடக்க வேண்டி இருக்கும்.பாரட்டுகள்

மதுரை மைந்தன்
30-08-2009, 10:22 AM
நல்ல நகைச்சுவை கதை.அதுவும் அந்த கதாபாத்திரத்துக்கு நடராஜான்னு பேர் வச்சசு அருமை.முதல் தடவை நடையின் வலி தெரியவில்லை.ஆனால் போக போகா வலியுடன் நடக்க வேண்டி இருக்கும்.பாரட்டுகள்

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே