PDA

View Full Version : சிதறிகிடக்கிறது



sathyamani
29-07-2009, 10:20 AM
மழையின் சாரலோடு
உன் நினைவுகளில் நனைந்தபடி
வாகனத்தில் சென்ற கருஞ்சாலைகளில்
சிதறிகிடக்கிறது வண்ணங்களில்
காதலின் சிறு சிறு புன்னகைகள்

puppy
29-07-2009, 10:35 AM
உண்மை தான் ....கவிதை நன்று

அமரன்
03-08-2009, 07:07 PM
வாகனத்தில் எரிபொருள் கசிவு இருக்கலாம் கவனியுங்கள்.

நன்றாக உள்ளது கவிதை.
பாராட்டுகள் சத்யா.

இளசு
03-08-2009, 07:49 PM
நீர் + எண்ணெய் + ஒளி = வண்ணப்பிரிகை..

சூழல் மாசு, இயற்பியல் நிகழ்வுகளிலும்
காதல் காணும் இளமனங்கள் வாழ்க!

பாராட்டுகள் சத்யமணி!

ஓவியன்
19-09-2009, 05:36 AM
சிதறிய புன்னகைகளை
மீள சேகரிக்க அலைகிறேன்
நாம் நடந்த சாலைகளில்..!!