PDA

View Full Version : அநுராதபுர தாக்குதல் காணொளி கிளிநொச்சிக்கு நேரலையாக அனுப்பப்பட்டது



Honeytamil
29-07-2009, 05:56 AM
சிறிலங்காவின் அநுராதபுர வான்படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தபோது அது தொடர்பான காணொளி காட்சிகளை கிளிநொச்சியில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உட்பட முக்கிய தளபதிகள் அதேநேரத்திலேயே பார்க்கக்கூடியவாறு நேரலையாக அனுப்பப்பட்டது.
அநுராதபுர வான்படைத் தளத் தாக்குதலின் சூத்திரதாரி என காவல்துறையினர் தெரிவிக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இளைஞரே வான்படைத் தளத்துக்கு வெளியே நின்று தாக்குதலை வழிநடத்தியதுடன், தாக்குதல் தொடர்பான காணொளி காட்சிகளை கிளிநொச்சிக்கு அனுப்பிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2007 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் நடத்தப்பட்ட அநுராதபுர வான்படைத் தளம் மீதான தாக்குதல் வழக்கு இன்று செவ்வாய்கிழமை அநுராதபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இத்தாக்குதலின் சூத்திரதாரி எனக் குறிப்பிடப்படும் இளைஞர் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் நீதவான் முன்பாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குறிப்பிட்ட இளைஞர் வான்படைத் தளத்துக்கு வெளியே நின்று தாக்குதலை தொடங்கிய நேரம் தொடக்கம் இறுதிவரையில் காணொளியில் பதிவாகிக்கொண்டிருந்ததாகத் தெரிவித்த குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள், இந்த காணொளி காட்சிகளை அவர் அதேநேரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பார்க்கக்கூடியதாக கிளிநொச்சிக்கும் அனுப்பிக்கொண்டிருந்ததாகத் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் நடவடிக்கையில் 24 பேர் கலந்துகொண்டதாகத் தெரிவித்த குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள், இதில் 21 பேர் இத்தாக்குதலுக்காக முகாமுக்குள் சென்றதாகவும், ஏனைய மூவரும் முகாமுக்கு வெளியே நின்று தாக்குதலை வழிநடத்திக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.