PDA

View Full Version : பேப்பரில்..வானொலியில்..தொலைக்காட்சியில்



umakarthick
28-07-2009, 01:34 PM
பேப்பரில் நான்::

இது விவேக் ஜோக்ல வர மாதிரி இல்லைங்க நிஜமாகாட்டி என் போட்டோ பேப்பர்ல வந்துச்சு ஒரு தபா..12 ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தமைக்காக என்னை பேட்டிக்காண வந்த எங்க ஊர் லோக்க எடிட்டர்..அப்போ நான் எனக்கு டியூசன் எடுத்த வாத்திக்கு சாக்லேக் கொடுக்க தென்காசி போயிருந்தேன்..

அந்த சமயம் என் வீட்டுக்கு வந்திருக்கிறார், என் நண்பன் தான் பேட்டிக்கொடுத்திருக்கான்

பேப்பரில் வந்த பேட்டி இப்படி போகுது..

அவர்: வாழ்த்துக்கள் கார்த்திக்

அவன்(அதாவது நான் அதாவது எனக்கு பதில் என் நண்பன்): நன்றி சார்


அவர்: எப்படி இது சாத்தியமாச்சு


நண்பன்: கடுமையான உழைப்பு தான்(அப்படியா..யார்கிட்டடா கேட்டு இதை சொன்ன நீ)

அவர்: எந்த மாதிரி எல்லாம் பயிற்சிகள் எடுத்தீங்க,எந்த நேரத்தில் படிப்பீங்க, எப்போ தூங்குவீங்க


அவன்: கடந்த 2 மாதமா தூக்கமே கிடையாதுங்க(அடப்பாவி!! அம்மா:

கார்த்திக் எந்திரிடா மணி 10 ஆச்சு, அப்பா மதியம் சாப்பாட்டுக்கே வந்துருவாரு போல)


தொடர்ந்து காலை 4 மணியிலிருந்து 8 மணி வரை, மாலை 5 மணியிலிருந்து 10 வரை படிப்பேங்க(பொய் பொய் சுத்த பொய்..உண்மையில் நம்ம டைமிங்கே வேற இரவெல்லாம் படிப்பு பகலெல்லாம் தூக்கம் இதான் நம்ம பாலிசி )


அவர்: டாக்டர் படிப்பா?? இல்லது எஞ்சினியரிங்கா?



அவன்: டாக்டர் தாங்க நல்லா படிச்சி மக்களுக்கு சேவை செய்யனும்(போச்சுடா நானே எப்படிடா முதல் மார்க் வாங்கினேன்னு யோசிச்சுகினு இருக்கேன்!!!)


அவர்:: நன்றி

இவன்:: நன்றி

இப்படியாக ஒரு வழியா என் பேரு,போட்டோ,பேட்டி பேப்பர்ல வந்துடுச்சு..


வானொலியில் நான்:

எங்க ஸ்கூல்ல ஓவிய சார்,கை வேலை சார்ன்னு ரெண்டு பேரு இருப்பாங்க, ஒரு வேளையும் செய்ய மாட்டாங்க, பசங்களை டீ வாங்கிட்டு வரச்சொல்றது , அவங்க கிளாசை எல்லாம் PT பீரியடா எடுத்துக்க சொல்லிட்டு இருப்பாங்க, கிளாஸல தூங்குவாங்க..இதான் வேலை.



அவங்க தான் எங்க பள்ளியின் டிராமா தலைவர்கள், பள்ளி ஆண்டு விழாவில் அவர்களின் நாடகம் கண்டிப்பாக இருக்கு, ஸ்கிரிப்ட் அவ்ளோ மட்டமா இருக்கும்..சகிக்கவே முடியாது..இடையிடையே சினிமா பாட்டெல்லாம் இருக்கும்

ஒவ்வொரு வருஷமும் போடுற நாடகமும் ஒரே கதை மாதிர்யே இருக்கும், இப்படி தான் நான் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது வரதட்சினை பத்தி ஒரு நாடகம்
வானொலியில் போட போனோம் இவர்கள் தலைமையில்

திருநெல்வேலிக்கு காலையிலே பஸ்ஸில போய் வானொலி நிலையத்தில் காத்திருந்தோம்..ஒரு கண்ணாடி அறைக்குள் சில பேர் பேசிக்கொண்டிருந்தார்கள், எங்களை போல சில பள்ளி மாணவர்கள் காத்திருந்தார்கள்


எல்லாரும் பவுடர் போட்டு தலைச்சீவிக்கொண்டார்கள் பாத்ரூமில் , எதுக்குன்னு தெரியல ரேடியோல மூஞ்சியா தெரிய போவுது சரி இருந்தாலும் பருவாயில்லை(காதல் பிசாசே!!)ன்னு நானும் வாங்கி போட்டுக்கிட்டேன்..இப்போ நினைச்சா சிரிப்பா இருக்கு

2 தபா சொதப்பி அப்புறம் எப்படியோ சரியா பேசினேன்..மதியம் வெளியே வந்தா சரியான பசி..எப்படியும் பள்ளியிலிருந்து 500 ரூபாயாவது வாத்திக்கு கொடுத்துருப்பாங்க இன்னைக்கு புரோட்டா சால்னா சிக்கன் பிரியாணின்னு வெட்டனும்ன பார்த்தா கடைசில அந்தாளு மொத்தமா 6 பேருக்கு 100 ரூபா கொடுத்துட்டு பார்த்து போயிட்டு வாங்கடான்னு பஸ் ஏறிட்டாரு

இப்படியாக வானொலியில் என் குரல் வந்தாச்சு

தொலைக்காட்சியில்:


தஞ்சாவூர் சண்முகா காலேஜில் Btech ITM எடுத்து அங்கே சேரப்போனால் ஒரு மாதம் முன்னாடியே கிளாஸஸ் ஆரம்பிச்சாச்சு , கவுன்சிலிங் மூலமா வந்தவங்களை சேர்க்க மாட்டோம்னு சொல்ல வெறுப்பாகி ரோட்ல உட்கார்ந்து ஸ்டிரக் பண்ணி பெரிய பெரிய போலீஸ் ஆபிசர்ஸ் எல்லாம் வந்து சமரச சமோசா பண்ணி ..இன்னும் நிறைய பண்ணி..நான் கடுப்பாகி திருச்சியிலிருந்து நேரே வீட்டுக்கு கிளம்பு எத்தனிக்கையில் என்னை போல பாதிக்கப்பட்டவர்கள்

எல்லாரும் சென்னை கல்வி இயக்குனரகத்துக்கு நடைப்பயணம் போவதாய் தீர்மானிக்கு கூட்டத்தோடு கும்மியாய் நானும் போனேன்..


அங்கே ரஸ்னா வாங்கிக்குடித்துக்கொண்டே ரோட்டில் போகையில் சன் டிவி காரன் வீடியோ எடுத்து போட்டு விட அதுவே ஒரு மாதம் தினமும் காட்டினார்கள்


பாவிப்பய ரஸ்னா குடிக்கும் போதா வீடியோ எடுக்கனும் நாசமாய் போனவன்!!

வெற்றி வாசன்
13-08-2009, 07:50 PM
இது உண்மை கதையா அல்லது கற்பனை கதையா.
நன்றாக எழுதும் திறமை உங்களிடம் உள்ளது. கதை, கட்டுரை எழுதினால் நல்ல எதிர்காலம் உள்ள வாய்ப்பு நிச்சியம்.

அறிஞர்
13-08-2009, 08:50 PM
பேப்பர், வானொலி ஓகே..

ஆனா தொல்லைக்காட்சி கொஞ்சம் ஓவரு (நீங்க திட்டினதை சொன்னேங்க)...

மன்மதன்
14-08-2009, 01:37 PM
ஒருமாதம் தொலைகாட்சியில் காட்டினார்களா.. :confused:
சைடுல காசு அடிச்சி விட்டீங்களா..!!??:D

உங்க எழுத்து நடையில் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது...

த.ஜார்ஜ்
14-08-2009, 04:17 PM
நானும் நினைத்திருக்கிறேன். அதென்ன வெற்றி பெற்ற மாணவர்களிடம் நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது கேட்ட அதே கேள்வி.. அதே பதில்..
பாடத்திட்டம் மாறினாலும் இது மாறாது போலிருக்கிறது.

அப்புறம் அந்த டிவி மேட்டர்.. அவன்தானா நீ

umakarthick
20-08-2009, 03:50 PM
எல்லாம் உண்மை தான் பொய் ஏன் சொல்லணும்
நன்றி :)

umakarthick
20-08-2009, 03:50 PM
இது உண்மை கதையா அல்லது கற்பனை கதையா.
நன்றாக எழுதும் திறமை உங்களிடம் உள்ளது. கதை, கட்டுரை எழுதினால் நல்ல எதிர்காலம் உள்ள வாய்ப்பு நிச்சியம்.

ஆமா அப்படி தான் சொல்றாங்க ..நாங்க நம்ப மட்டோம்லா

umakarthick
20-08-2009, 03:51 PM
பேப்பர், வானொலி ஓகே..

ஆனா தொல்லைக்காட்சி கொஞ்சம் ஓவரு (நீங்க திட்டினதை சொன்னேங்க)...

கொஞ்சம் ஓவரா தன போறோமோ

ஓவியன்
23-08-2009, 05:08 AM
ஆஹா, உங்க பெயரும், குரலும் ரஸ்னா குடித்த முகமும் ஊடங்களில் வந்த விதத்தினை வாசித்து சிரித்தேன் கார்த்திக் (இறுதியில் திட்டியதைத் தவிர்த்திருக்கலாமே), இயல்பு நடையில் நடந்தவற்றை சுவராசியம் குறையாமல் சொல்வதே ஒரு கலை அதில் ஜெயித்துக் காட்டுகின்றன உங்கள் பதிவுகள், வாழ்த்துகளும் பாராட்டுக்களும் நண்பரே..!!

umakarthick
25-08-2009, 09:32 AM
ஆஹா, உங்க பெயரும், குரலும் ரஸ்னா குடித்த முகமும் ஊடங்களில் வந்த விதத்தினை வாசித்து சிரித்தேன் கார்த்திக் (இறுதியில் திட்டியதைத் தவிர்த்திருக்கலாமே), இயல்பு நடையில் நடந்தவற்றை சுவராசியம் குறையாமல் சொல்வதே ஒரு கலை அதில் ஜெயித்துக் காட்டுகின்றன உங்கள் பதிவுகள், வாழ்த்துகளும் பாராட்டுக்களும் நண்பரே..!!

சும்மா ஒரு ஜாலிக்காக தான் அப்படி திட்டினானே