PDA

View Full Version : இந்திய கடற்படை மீது சிங்கள கடற்படை தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பினார்கள்

கா.ரமேஷ்
28-07-2009, 12:40 PM
ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 22-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழர்களின் மீன்பிடி படகு பழுதானது. சதீஷ், ஜோசப், அந் தோணி, முனியசாமி ஆகிய மீனவர்கள் நடுக்கடலில் தவித்தனர். அவர்களை மீட்க, மீன்துறை அனுமதியுடன் வெள்ளிக்கிழமை காலை இரண்டு படகில் மீனவர்கள் 10 பேர் சென்றனர்.

கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற இவர்களை இலங்கை கடற்படையினர் மீன் துறையில் அனுமதி கடிதத்தைப் பார்த்ததும் படகை மீட்க அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து கச்சத்தீவு கடல் பகுதியில் பழுதாகி நின்ற படகை கயிற்றினால் கட்டி இழுக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர். ஹோவர் கிராப்ட் கப்பலில் அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர் பழுதாகி நின்ற படகை பார்வையிட்டனர்.

இந்நேரத்தில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள், ஹோவர் கிராப்ட் கப்பலை நோக்கி வேகமாக வந்தன. கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் இருந்த இந்திய கடலோர காவல் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நூலிழையில் இந்திய வீரர்கள் தப்பினார்கள். இதனிடையே ஹோவர் கிராப்ட் கப்பல் அருகில் வந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல் படையினரை விசாரித்து விட்டு திரும்பினர்.

நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைப் பார்த்த மீனவர்கள் பயந்து போய் தங்களது படகின் அடியில் ஒளிந்து கொண்டனர். கடற்படையினர் சென்றதும் படகை மீட்டு வெள்ளிக்கிழமை இரவில் ராமேசுவரம் வந்து சேர்ந்தனர்.

மீ
னவர்கள் கூறுகையில், இந்திய கடலோர காவல் படையினர் மீது இலங்கை கடற்படையினர் பலமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இந்திய கடலோர காவல் படையினர் கைகளை தூக்கியபடி நின்றனர். என்ன நடக்கிறது என்பது தெரியாததால் நாங்கள் படகுக்குள் ஒளிந்து கொண்டோம். இந்திய கடலோர காவல் படைக்கே இந்த நிலை என்றால் எங்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது, எனத் தெரியவில்லை என்றனர்.
நடுக்கடலில் நடந்த இச்சம் பவம் குறித்து மத்திய- மாநில புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நன்றி : மாலைமலர் இணையதளம்

பாலகன்
28-07-2009, 12:46 PM
வர வர இலங்கை செய்திகள் சலிப்பை ஏற்படுத்துகின்றது. ஏன் இந்திய ராணுவம் இப்படி திறமையில்லாமல் இருக்கிறது என்று தெரியவில்லை....

ஓவியன்
28-07-2009, 12:52 PM
”ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து...” என்பது இது தானோ..??

ஆதி
28-07-2009, 12:59 PM
வர வர இலங்கை செய்திகள் சலிப்பை ஏற்படுத்துகின்றது. ஏன் இந்திய ராணுவம் இப்படி திறமையில்லாமல் இருக்கிறது என்று தெரியவில்லை....

நிச்சயமாய் இல்லை.. முதலில் இந்த நிகழ்வு உண்மைதானா என்று உறுதியாகட்டும்.. அதுவரை யாரையும் எதுவும் சொல்ல முடியாது..

நேசம்
28-07-2009, 01:08 PM
இப்போ என்ன செய்ய போகிறது மத்திய அரசு. வழக்கம் போல் திவிரமாக செயல்படும் என்று நினைக்கிறென்

கா.ரமேஷ்
28-07-2009, 01:08 PM
இந்த செய்தி மாலைமலர்,நெருடல்,யாழ் மற்றும் தமிழ்வின் ஆகிய இணையதளங்களில் வந்துள்ளது.

சகோதரர் சொன்னது போல ஆட்டை கடித்து, மாட்டை கடித்து அடுத்து நம்மையும் கடிப்பார்கள்... நம் மத்திய அரசு புலனாய்வு துறை கொண்டு விசாரித்து கொண்டே இருக்கும்.....

பாலகன்
28-07-2009, 01:16 PM
நம் மத்திய அரசு புலனாய்வு துறை கொண்டு விசாரித்து கொண்டே இருக்கும்.....

நேற்று கூட டீவியில் செய்திகள் பார்த்துக்கொன்டிருக்கும் பேர்து, காங். தமிழக தலைவர் திரு.தங்கபாலு ஒன்றை சொன்னார்.. மத்திய அரசு இலங்கை தமிழர்கள் விசயத்தில் மிகுந்த அக்கரை கொன்டுள்ளது என்று... எனக்கு உடனே தூக்கம் வந்துடுச்சி.... ஏன்னா இதை மாதிரி காங். காரவுக சொல்லி சொல்லி அதை நாம செய்திகளில் கேட்டு கேட்டு போரடிச்சிருச்சி :)

ஆதி
28-07-2009, 01:21 PM

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்போம் - முதல் நாள் அறிகைவிடுவார்

மத்திய தலைமையில் பேசி முடிவெடுப்போம் - இரண்டாம் நாள்

அன்னை சோனியா சொற்படி நடப்போம் - மூன்றாம் நாள்

இப்படி ஒரு பாவமான தலைவர் தங்கபாலு..

கா.ரமேஷ்
28-07-2009, 01:25 PM
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்போம் - முதல் நாள் அறிகைவிடுவார்

மத்திய தலைமையில் பேசி முடிவெடுப்போம் - இரண்டாம் நாள்

அன்னை சோனியா சொற்படி நடப்போம் - மூன்றாம் நாள்

இப்படி ஒரு பாவமான தலைவர் தங்கபாலு..

பாவம் அவர் என்ன செய்வார்... பல சவால்கள் விட்டு பாராளுமன்ற தேர்தலில் தோற்றாச்சு, இருக்கும் தலைவர் பதவியை காப்பாற்ற சமயங்களில் அறிக்கைகள் தர வில்லையெனில் எப்படி பதவியை காப்பாற்ற முடியும்.ஏதோ அவரால் முடிந்த அளவு எழுதிகொடுப்பதை படிக்கிறார் விடுங்கள்...

அமரன்
28-07-2009, 06:01 PM
சுதந்திர இலங்கையில் அதியுச்சமாக்கப்ப்பட்ட பாதுகாப்பு, கண்காணிப்புகளின் போது இது போன்ற சிறு தொந்தரவுகள் சகஜமானவை.

கா.ரமேஷ்
29-07-2009, 05:16 AM
சுதந்திர இலங்கையில் அதியுச்சமாக்கப்ப்பட்ட பாதுகாப்பு, கண்காணிப்புகளின் போது இது போன்ற சிறு தொந்தரவுகள் சகஜமானவை.

உண்மையாய்தான் இருக்கும் என நினைக்கிறேன்...(கச்சத்தீவை தாரைவார்த்த அன்றைக்கே அது இலங்கைக்கு சொந்தமான கடல்பகுதி ஆகிவிட்டதென்னவோ அறியகூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது:confused:)
இப்படியே விட்டால் அதையும் தாண்டி வந்து ராமேஸ்வரம் எங்கள் பகுதி என சொன்னாலும் சொல்வார்கள் ... அதற்க்கொன்றும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை....:icon_ush:

Honeytamil
29-07-2009, 05:53 AM

அடபோங்க....சிங்களவனைப் பற்றி நீங்க இவ்வளவுதானா புரிந்து கொண்டுள்ளீர்கள். இன்ன்னும் கொஞ்ச நாளில் தமிழ்நாடுகூட எங்கட நாட்டில இருந்ததுதான் பிரிந்த்துபோனது எண்டு சொன்னாலும் சொல்லுவாங்கள்!!!!!