PDA

View Full Version : காதல் நோய்...!!!



சிவா.ஜி
28-07-2009, 07:14 AM
எனக்கு வந்த காதல் நோய்,
தொற்று நோயாக பரவி
உன்னையும் பற்றட்டும்
உனக்கும் காதல் முற்றட்டும்

நோய் முற்றி குணமாகாமல்
நமக்கு மணமாகட்டும்
நோய்தாங்கியாய் நம் மனமாகட்டும்
நெருக்கம் ஒன்றே நமக்கு நனவாகட்டும்

உனக்கு நானும்,எனக்கு நீயும்
போலி மருத்துவராய் இருந்து
நோய் வளர்க்க கொடுப்போம் மருந்து
வளர்ந்து வாழட்டும் நம்முள் அது அமர்ந்து...

உணவுக்கு முன், உணவுக்குப் பின் என இல்லாமல்
ஒரு மூச்சுக்கு முன், மறு மூச்சுக்கு பின் என
அன்பெனும் மருந்துண்டு
காதல் நோய் வளர்த்து வாழ்வோம்....

நேசம்
28-07-2009, 08:48 AM
இந்த நோய்க்கு திருமணம் என்ற மருந்து கொடுத்தாலும் நோய் தொடர்ந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் போலிருக்கு.பரவட்டும் இந்த நோய் எல்லாருக்கும்

அமரன்
28-07-2009, 09:01 AM
ஆமாம்...
முற்றட்டும் இந்தக் காதல் நோய்..
அப்போதுதான்
நறு'மணம்' தரும் முற்றிய நோய்..

போலி மருத்துவர் பாவனை ரசித்தேன்.


தின்னத் தின்னத் திகட்டாதது காதல்
சிவாவின் எழுத்துகள் போல்

சிவா.ஜி
28-07-2009, 10:20 AM
ஆமா நேசம். இந்த நோய் மட்டும் தீரவே கூடாது. என்றும் தொடரனும்.

சிவா.ஜி
28-07-2009, 10:21 AM
பாஸ் எப்போதும்போல உங்க சொல்லாடலை மிகவும் ரசித்தேன். ரொம்ப நன்றி அமரன்.

இளசு
28-07-2009, 05:35 PM
காலை அரும்பி மாலை மலர்ந்து பின்னிரவில் உதிரும் நோய் - காமம்..

ஆதிநாள் தொடங்கி அந்திமநாள் வரை வளர்ந்தால் - அது காதல்..

காமம் கரைந்தும் காலமெல்லாம் பந்தம் நிலைக்க
காதல் நோய் அவசியம்..

மருத்துவம் பார்ப்பவர்களே மாறி மாறி வளர்த்துவிட்டால்?

நினைக்கவே இனிக்கும் நோய்!


அசத்திய சிவாவுக்கு சபாஷ்!

lenram80
28-07-2009, 06:53 PM
நோயாளி சிவா குணமாகாமல் இருக்க வாழ்த்துகள்!

பாரதி
28-07-2009, 11:07 PM
பற்று நோய் தொற்று நோயாகி விட்டதா...?
நோய் குணமாகி விடக்கூடாது என (வ)அருந்தும் அருமருந்தா..?
அசத்துங்க சிவா...!

சிவா.ஜி
29-07-2009, 06:36 AM
காமத்துக்கும், காதலுக்குமான நேரவித்தியாசம் சொன்ன பின்னூட்ட வரிகளை பிரமிப்புடன் பார்க்கிறேன் இளசு. மிக்க நன்றி.

சிவா.ஜி
29-07-2009, 06:37 AM
ஹா...ஹா....இந்த நோய் மட்டும்தான் குணமாகவேக்கூடாது என நோயாளியை நினைக்க வைக்கும். நன்றி லெனின்.

சிவா.ஜி
29-07-2009, 06:38 AM
ஆமாம் பாரதி.....பற்று நோய் தொற்று நோயாகி, தொடர் நோயாய் இனிப்புடன் உடன் வருகிறது...

மிக்க நன்றி.

சசிதரன்
29-07-2009, 04:47 PM
ஆஹா... அற்புதம் சிவா அண்ணா... காதல் நோய் முற்றட்டும்... வார்த்தை அடுக்கு அற்புதம் அண்ணா...:)