PDA

View Full Version : இன்டர்நெட்டில் வந்தது - ஜெய் தொந்தி!

அருள்
27-07-2009, 02:39 PM
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை

கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா

அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே

தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.

மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு

மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

பாடலாசிரியர் வைரமுத்து கூட,

நீ காற்று நான் மரம்…

என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நீ பந்தி

நான் தொந்தி

என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.

அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின்

அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.

தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.

தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே

தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.

என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா

பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது.

இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில்

படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே

தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!

ஜெய் தொந்தி!

praveen
27-07-2009, 02:56 PM
படம் பதிந்திருக்கிறீர்களா என்ன ஒரு படம் கூட தெரியவில்லை.

பாலகன்
27-07-2009, 04:02 PM
ரொம்ப வித்தியாசமா சிந்திச்சிருக்கீங்க அருள்.
நான் கூட கொஞ்சம் தொப்பை வந்தவுடன் ரொம்ப கவலை பட்டேன்... படம் பாக்குற மாதிரி பண்ணீங்கன்னா ரெம்ப சந்தோசப்படுவேன்

puppy
27-07-2009, 05:14 PM
ஹா ஹா நல்ல கற்பனை

பாரதி
27-07-2009, 05:43 PM
பகிர்ந்தமைக்கு நன்றி அருள்.

நான் கூட கொஞ்சம் தொப்பை வந்தவுடன் ரொம்ப கவலை பட்டேன்... படம் பாக்குற மாதிரி பண்ணீங்கன்னா ரெம்ப சந்தோசப்படுவேன்

தொப்பையில் படம் பாக்க ஆசைப்படுறீங்களா...?!!:lachen001:

இளசு
27-07-2009, 10:51 PM
பகிர்ந்தமைக்கு நன்றி அருள்..

தொந்தி வளர்த்தார் - தொகுதி வளர்த்தார் - வெகு அருமை!

----------------------------------

மருத்துவரீதியாக - தொந்தி நகைச்சுவைக் கோமாளி அன்று!

உயர் குருதி அழுத்தம், உயர் கொலஸ்டரால், சர்க்கரை நோய், நெஞ்சடைப்பு
என பல நோய்களின் தொகுப்பான '' metabolic syndrome'' எனும் உலகளாவிய
நோயின் சின்னமான வில்லன்!

கடைசி விலா எலும்புக்கும், இடுப்பு எலும்புக்கும் நடுவில்
மூச்சை வெளிவிட்டபின் எடுக்கும் அளவு
ஆணுக்கு 90 செமீ , பெண்ணுக்கு 80 செமீ மீறி இருந்தால்.....

நடந்தும் உணவு குறைத்தும் - இடை இறுக்குவது மிக அவசியம்..அவசரம்!

ஆதவா
28-07-2009, 02:24 AM

என்ன கொடுமை இது!!!

இதைப்பற்றி விரிவாக ஒரு கட்டுரை போடுவீர்களா??

எதிர்பார்ப்புடன்
ஆதவா

அருள்
28-07-2009, 02:47 AM
படம் பதிந்திருக்கிறீர்களா என்ன ஒரு படம் கூட தெரியவில்லை.

படம் எதுவும் பதிக்கவில்லை. இடைவெளி விட்டேன் அது அதிகமாகி விட்டது

நேசம்
28-07-2009, 04:52 AM
தொந்தியால் ஏற்படும் சிரமங்களை தாண்டி சிரிக்க வைக்கிறது.பகிர்தலுக்கு நன்றி அருள்

tamilkumar
28-07-2009, 05:28 AM
லேசாக தொந்தி விழுந்துச்சேன்னு கவலையாக இருந்தேன். இதிலே இவ்வளவு நன்மைகள் இருக்கா?
ரொம்பநன்றி அருள்.

சிவா.ஜி
28-07-2009, 06:57 AM
உப்பில்லா பண்டம் குப்பையிலே
உப்புள்ள பண்டம் தொப்பையிலே...

பந்திக்கு முந்தியோரின்
தொந்தியும் முந்தும்....

கலாட்டாவான சிந்தனை. பகிர்வுக்கு நன்றி அருள்.

அமரன்
28-07-2009, 09:08 AM
அருள் வாக்க அண்ணன் ஊக்க சிவா போக்க..
தயக்கம் தவிர்த்து ஆரம்பித்து விட்டேன் நடக்க..

அய்யா
01-08-2009, 01:49 PM
ஹா..ஹா.. நல்ல நகைச்சுவை!

தொந்தியால் உண்மையிலேயே ஒரு நன்மை விளைந்திருக்கிறது. சிவாஜியின் மகன் பிரபு, (நடிக்க வரும் முன்பு) ஸ்ரீபிரியாவைக் காதலித்தார். தந்தை எதிர்த்ததால், துப்பாக்கியால் வயிற்றில் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். நல்லவேளையாக, குண்டு ஊடுருவிச் செல்லாததால் தப்பித்தார்.

வெகு சிலரே அறிந்த இரகசியம் இது!

ஷீ-நிசி
02-08-2009, 01:37 AM
பகிர்ந்தமைக்கு நன்றி அருள்..

தொந்தி வளர்த்தார் - தொகுதி வளர்த்தார் - வெகு அருமை!

----------------------------------

மருத்துவரீதியாக - தொந்தி நகைச்சுவைக் கோமாளி அன்று!

உயர் குருதி அழுத்தம், உயர் கொலஸ்டரால், சர்க்கரை நோய், நெஞ்சடைப்பு
என பல நோய்களின் தொகுப்பான '' metabolic syndrome'' எனும் உலகளாவிய
நோயின் சின்னமான வில்லன்!

கடைசி விலா எலும்புக்கும், இடுப்பு எலும்புக்கும் நடுவில்
மூச்சை வெளிவிட்டபின் எடுக்கும் அளவு
ஆணுக்கு 90 செமீ , பெண்ணுக்கு 80 செமீ மீறி இருந்தால்.....

நடந்தும் உணவு குறைத்தும் - இடை இறுக்குவது மிக அவசியம்..அவசரம்!

எளிதில் புரிகின்ற அளவிற்கு மிக வளமான வரிகள்! ஆதவா சொன்னதுபோல விரிவான கட்டுரை எழுதுங்கள் இளசு ஜி!

அமரன்
02-08-2009, 10:38 AM
யூ டூ ஷீ..:lachen001:

aren
03-08-2009, 06:50 AM
ஏற்கனெவே பயங்கர திட்டு வாங்கிக்கொண்டு ஏதோ வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறோம். இப்படிவேறு எழுதி ஏனுங்க எங்களை இன்னும் இம்சிக்கிறீர்கள்.

பா.ராஜேஷ்
03-08-2009, 05:54 PM
தொந்தி உடையோர் பெருமை பட்டு கொள்ளலாம். ஹி ஹி ஹி...

arun
05-09-2009, 09:07 AM
எனக்கு தொந்தி இல்லையேன்னு பீல் பண்றேன் :D :D

அக்னி
05-09-2009, 10:29 AM
அப்போ இவ்வளத்தையும் நாம மிஸ் பண்றோமா...

என்ன கொடுமை ஆதவா இது...

வெற்றி வாசன்
07-09-2009, 11:22 AM
படிக்க மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. என்னை போன்றவர்களை குஷி படுத்த எழுதின கட்டுரை போல இருக்கிறது.
ஒரு விடுபட்ட செய்தி. முழு முதல் கடவுள்இன் முக்கிய அடியாளம் இந்த தொந்தி தான்.