PDA

View Full Version : மௌனம் கலைக்க ஒரு வேண்டுகோள்..........(நண்பர் ராம்&a



Nanban
30-09-2003, 03:32 PM
மௌனம் கலைக்க ஒரு வேண்டுகோள்..........(நண்பர் ராம்பாலுக்கு........)

மேகமற்ற வானம்
அச்சமூட்டுகிறது -
மயான அமைதியே
மௌனம் என்றால்
அந்த மௌனங்கள்
தொலைந்து போகட்டும்.

மேகமற்ற வானம்
குப்பைக் கூடையாய்
கிடக்கிறது -
குட்டி, குட்டி
நட்சத்திரங்களை
சிதறி விட்டுப் போய்விட்டனர்......

மேகமற்ற வானத்தை
சுத்தப்படுத்த
உன் மௌனம் களைந்து வா........
நீண்ட கரங்களால்
வெளிச்சத் துடைப்பத்தை
எடுத்து வந்து
சுத்தம் செய்து வை....

மேகமற்ற வானத்திற்கு
நீராவித் துளிகளை
அனுப்பி வை...
உன் வெம்மை கரங்களால்
கடல் நீரைக் கடைந்து
கண்ணுக்குத் தெரியாத
ஆவியை ஆகாயம்
அனுப்பி வை....

மேகமற்ற வானத்திற்கு
நீ வாராது போனதால்
நீராவி பிரியாது போனதால்
நீரின் அளவு கூடிய கடலில்
உப்பின் அளவு குறைந்து போனது -
சுவையும் குன்றிப் போனது...
நிலமெல்லாம் வீழ வேண்டிய நீர்
இன்னும் வானத்திற்குப் போகவில்லை.

மேகமற்ற வானத்தினால்
வரண்டு போனது
வானம் பார்த்த பூமி....
மேகம் உண்டாக்கி
நீ பொழிய வைப்பாய் மழையென்று
ஊரெல்லாம் உன் வருகைக்காக
சேமிப்புச் செய்ய செலவு செய்து
காத்திருக்கின்றது...

இயற்கை நியதியை
நீ சோதனை செய்கிறாய்...
விடிய மறுக்கிறாய்...
மயான அமைதியை
விரட்ட மறுக்கிறாய்......
தூங்கிச் சோம்பும் மனிதத்தை
சாடி எழுப்ப மறுக்கிறாய்...

வேண்டாம், இந்தச் சோதனை...
எழுந்து வா, பொழிந்து வா,
சூர்யக் குஞ்சே -
எழுந்து வா,
நண்பர் ராம்பால் அவர்களே
எழுந்து வருக!!!

Nanban
30-09-2003, 03:34 PM
முன்னைப் போல உற்சாகமாய் உலா வரப் பிரார்த்திக்கிறோம்..........

இளசு
30-09-2003, 05:05 PM
நண்பனின் பிரார்த்த்னையில் நானும் நண்பர்களும் இணைகிறோம்.

rambal
07-04-2004, 04:50 PM
நன்றி நண்பணுக்கும், இளசு அண்ணாவிற்கும்..

இனி மன்றம் பக்கம் வரப் பார்க்கிறேன்..
என்ற நம்பிக்கையில்..

பாரதி
07-04-2004, 05:53 PM
மீண்டும் மன்றம் வரும் ராமிற்கு நல் வாழ்த்துக்களும் வரவேற்புகளும்.

Nanban
07-04-2004, 06:40 PM
இந்த கவிதையும் மீண்டும் மேலே வந்துவிட்டது.... ராம்பாலும் மீண்டும் மன்றம் வந்து விட்டார்.... சமயட்திற்கு தகுந்த மாதிரி கவிதையைத் தேடி வெளிக் கொண்டு வந்த நண்பர் பாரதிக்கு நன்றி சொல்ல வேண்டும்....

ஜோஸ்
07-04-2004, 09:38 PM
பாரதிக்கு வாழ்த்துக்கள்...

kavitha
08-04-2004, 03:20 AM
வருக! வருக!
மீண்டு வருக!
புன்னகை பூத்து வருக!
கடந்தவை உதிர்த்து வருக!

தீவிர சிந்தனை எழுத்தாளரே வருக வருக!
மன்றம் இன்னும் பிரகாசிக்கப்போவது உறுதி!
உற்சாகத்துடன் வரவேற்கிறோம்!

தோழனுக்காக ஏங்கும்
எங்கள் வான நண்பனே
அருமையான இக்கவிதைக்கு
முதற்கண் நன்றி!

எம்கண்ணில் படவைத்து
சந்தோசத்தில் பாடவைத்த
பாரதி அவர்களுக்கும் நன்றி!

aren
08-04-2004, 03:52 AM
மறுபடியும் வலம் வர இருக்கும் ராம்பால் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள்.

இளசு
13-04-2004, 09:25 PM
வருக ராம்...

இன்னும் வந்தியத்தேவன், ஹமாயூன், செழியன் உள்ளிட்ட
அனைத்து கவிகளும் மீண்டும் கவிமழை மன்றத்தில் பொழிய இவ்வரவு கட்டியமாய் அமையட்டும்..

பரஞ்சோதி
14-04-2004, 07:13 PM
கவிகளே வருக,
கவிதைகள் தருக.
காத்திருக்கிறோம் அவைகளை பருக.

இளசு
08-05-2004, 10:01 PM
விரைவில் தக்க வேளை அமைந்து
பற்பல படைப்புகளை மன்றத்தில் பரிமாறும்
காலம் வரும் ராம்...

கனவுகள் வசப்படும்...

நம்பிக்கையுடன்
அண்ணன்

இக்பால்
09-05-2004, 04:31 AM
:)