PDA

View Full Version : வரலாறே தெரியாமல் எதற்கு கட்டுரை எழுதுகிறீர்கள்??Honeytamil
27-07-2009, 05:51 AM
இந்த கட்டுரை இந்திய இணையத்தளமான கேள்வி.நெட் தளத்தில் வெளியானது.இந்தியாவின் சிறப்பு நீதிபதி ஒருவர் எவ்வளவு கேவலமாக வார்த்தைகளை பிரயோகித்திருக்கிறார்.

காந்தியடிகள் இறந்தபோது உலகமே கண்ணீர் விட்டது. இப்போது பிரபாகரன் மரணமும் உலகின் கவனத்தை ஒருங்கே பெற்றிருக்கிறது. ஆனால் காந்தியடிகள் இறந்தபோது கண்ணீர் விட்ட உலகம், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்தபோது நிம்மதி அடைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

விடுதலைப்புலிகள் எப்படி உருவானார்கள்?

இலங்கையில் முக்கிய வருமானம் தேயிலைத் தோட்டம்தான். தேயிலையின் தேவை அதிகரித்ததும் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் நிறைய தேவைப்பட்டார்கள். பல இடங்களிலிருந்தும் ஆட்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள் என்றாலும் தமிழகம் பக்கத்து மாநிலமாக இருந்ததாலும், ஏற்கனவே தமிழர்கள் அங்கே வசித்து வந்ததாலும் கூட்டம் கூட்டமாக தமிழர்கள் அங்கே குடியேறத் தொடங்கினார்கள்.

தேயிலைத்தொட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் மெல்ல மெல்ல பிறதுறைகளிலும் புகுந்து விட்டார்கள். பிழைக்க வந்த தமிழர்கள் தங்களையும் மிஞ்சி விடும் நிலையைக்கண்டு சிங்களத் தலைவர்கள் சிலர் இவர்களின் முனனேற்றத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்கள். அதன்படி தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் பகைமையை வளர்த்து விட்டார்கள். தமிழர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்றால் அவர்களின் கல்விமுன்னேற்றத்தை தடை செய்யவேண்டும் என்று எண்ணி திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இலங்கை அரசு இறங்கியது. இதைத் தெரிந்துகொண்ட தமிழர்கள் மத்தியில் ஒரு மாணவர் பேரவை உருவானது. இந்த மாணவர் பேரவையில் பிரபாகரனும் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார்.

சிங்கள ராணுவத்தினர் மாணவர் பேரவையில் இருப்பவர்களை எல்லாம் கைது செய்து சித்திரவதை செய்தனர்.இந்த நிலையில்தான் புதிய தமிழ்ப்புலிகள் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

இவர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆதரவு மாநாடு ஒன்றை நடத்தினார்கள். இம்மாநாட்டில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதில் ஒன்பது பேர் பலியானார்கள். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த மேயர் ஆல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் பிரபாகரன்.

பிரபாகரன் துவக்கத்திலேயே கொலை வெறி மிக்கவன் என்பதை இந்த முதல் சம்பவமே நிருபித்துவிட்டது. இவர் என்ன செய்திருக்கவேண்டும்? பாராளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்ப முயற்சிசெய்திருக்கலாம். அல்லது இலங்கை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குகூட பதிவு செய்திருக்கலாம். ஆனால் பழிக்குப்பழி என்ற நோக்கத்தில் கேவலமாக திட்டமிட்டு மேயரை சுட்டுக் கொன்றதை எப்படி நியாயப்படுத்தமுடியும்?

விடுதலைப்புலிகள் அமைப்பின் நோக்கம் என்ன?

இவர்களது நோக்கம்தான் என்ன? இலங்கையில் தங்களுக்கென்று - தமிழர்கென்று தனிநாடு அமைக்கவேண்டும் என்பதா? அல்ல. இலங்கையையே தங்கள் வசம் ஆக்கிவிடவேண்டும் என்பதுதான் ரகசிய திட்டமாக இருந்தது. இலங்கையில் தமிழர்க்காக தனிநாடு அமைக்க வேண்டும் என கருதியதே சரியல்ல. ஏனெனில் சட்ட ரீதியாக தமிழர்களுக்கான உரிமையை மீட்டெடுக்க இயலும்.

இலங்கை ஒரு சுதந்திர நாடுதானே? பிரபாகரன் மக்களின் ஆதரவைத் திரட்டி தேர்தலில் வெற்றி பெற்று , இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான நலத்திட்டங்களை இயற்றினால் சிங்களவர்கள் எதிர்க்கவா போகிறார்கள்?

பிரபாகரனுக்கு போட்டியா?

உமாமகேஸ்வரன் அமைத்த தமிழ் ஈழ விடுதலை அமைப்பு, சபாரத்தினம் அமைத்த டெலோ அமைப்பு, பத்மநாபாவின் தலைமையில் அமைக்கப்பட்ட ஈ.பி.ஆர.எழ.எப். இவை அனைத்துமே தமிழர்களின் நலனுக்காக பாடுபடத்தான் தோன்றின. ஆனால் பிரபாகரன் இவர்களை எல்லாம் எதிரியாக நினைத்து கொன்றழிளித்துவிட்டார். இது என்ன நியாயம்? உண்மையில் தன்னைத் தவிர தனக்குப் போட்டியாக யாருமே வரக்கூடாது என்று திட்டமிட்டு செயல்பட்ட பிரபாகரனை ஒரு சய்கோ அரக்கன் என்றுதான் வர்ணிக்க வேண்டுமே தவிர இது எப்படி வீரமாகும்?

பிரபாகரன் பெரிய வீரனா?

பிரபாகரன் பெரிய வீரன் என்றுதான் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் பிரபாகரன் பெரியபயந்தான்கொல்லி என்பதே உண்மை. பிரபாகரன் மாணவராக இருந்தபோதே தமிழ் ஆதரவாளர் குழுவில் இருந்தார் என்றும், போலீசார் இவரைத் தேடிவந்தபோது தப்பிவிட்டார் எனவும், இவரது தந்தை நிலமயைசொன்னபோது, என்னை என்போக்கில் விட்டுவிடுங்கள் என்று வீட்டை விட்டு வெளிஏறியதாகத்தான் நம்மில் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறோம். இது உண்மை அல்ல. பெற்றோர் இனி வீட்டில் நுழையாதே என்று துரத்திவிட்டார்கள் என்பதே உண்மை.

பிரபாகரன் வீரனாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? இவர் தலைமைதாங்கி விடுதலைப்புலிகளுடன் இலங்கைக்குள் சென்று ராணுவத்துடன் மோதிஇருந்தால் அல்லவா வீரன் என்று சொல்ல இயலும்? ஆனால் அப்பாவித்தமிழர்களை பகடைகாயாக்கி ராணுவத்தை எதிர்த்தாரே தவிர இவரிடம் வீரம் என்பது மருந்துக்குக்கூட இல்லை என்பதே உண்மை.

பிரபாகரன் திருமணம் முடித்துக்கொண்டது ஏன்?

இந்தியாவில் குடும்ப அரசியல் இருப்பதைப்போலவே பிரபாகரன் இலங்கையில் தமிழர்களுக்காக தனி நாடு அமைத்து அதில் தன் வாரிசுகளை ஆட்சியில் அமர்த்தி தான் மட்டுமே அரசனாக இருக்கவேண்டும் என்று முதலிலேயே திட்டமிட்டுவிட்டதால்தான் இவர் புங்குடு தீவை சேர்ந்த மதிவதைநியைத் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொண்டது 1984. அப்போது விடுதலைப்புலிகளின் போர் மிகத் தீவிரமாக இருந்தது. தமிழர்களின் நலனுக்காக தம் வாழ்வை அர்ப்பணிக்கும் தியாகிக்கு திருமணம் எதற்கு? உடல் நோவேடுத்தால் விடுதலைப்புலிகளின் பல பெண் புலிகள் இருந்தார்களே, அவர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டால் யார் என்ன சொல்லப்போகிறார்கள்?

இந்திய விடுதலைக்காக போராடியவர்கள் தங்கள் சொத்து சுகத்தையெல்லாம் இழந்தார்கள். பிரபாகரன் தமிழர்களின் நலத்திற்காக எதை இழந்தார் ?

பிரபாகரன் இறந்தது உண்மையா? பொய்யா?

பிரபாகரன் சாகவில்லை என்றும், அவரைப்போல் உருவம் கொண்ட ஒருவரைத்தான் இலங்கை இராணுவம் காட்டி இருக்கிறது என்றும் சிலர் நம்புகின்றனர். உண்மையில் இறந்தது பிரபாகரன்தான். உண்மையில் பிரபாகரனை இராணுவம் சுடவில்லை. பிரபாகரனின் வன்முறைத் தத்துவத்தில் நம்பிக்கை இழந்த நெருங்கிய கூட்டாளிதான் பிரபாகரனை கொன்றிருக்கிறான் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை.

பிரபாகரனின் மரணம் நன்மையா? தீமையா?

பிரபாகரன் ஈழத் தமிழர்களின் சுதந்திரத்திற்காக பாடுபட்டார் என்றும், இது இலங்கைத் தமிழர்களுக்கு பெரிய இழப்பு என்றும் இப்போதும் பலர் கருதுகின்றனர். உண்மையில் பிரபாகரன் மரணம் பல விதைகளிலும் நன்மையே அல்லாமல் எந்த விதத்திலும் இழப்பு அல்ல. ஈழத் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்தி தன்னுடைய வஞ்சக போர்குணத்தை விளம்பரப்படுத்தி காட்டினார் தவிர தமிழர்களின் நலனுக்காக எந்த விதத்திலும் பாடுபடவில்லை என்பதே உண்மை. எனவே தமிழர்கள் இனி பல வகையிலும் சந்தோசப்படுவார்களே தவிர, யாரும் வருத்தப்படமாட்டார்கள்.

மேற்கண்ட கட்டுரை புதிய தீர்ப்பு மாத இதழில் வெளியானதின் சுருக்கம். தங்கள் கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவிக்க;

கட்டுரையாளர் முகவரி;
செந்தமிழ்கிழார்,
எண்.5-105,
பெரியார் பாதை மேற்கு,
அருகம்பாக்கம்,
சென்னை -600 106.

மாண்புமிகு இந்தியாவின் சிறப்பு நீதிபதி என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் செந்தமிழ்கிழாருக்கு,

புதிய தீர்ப்பு மாத இதழில் வெளியான பிரபாகரன் பற்றிய தங்கள் கட்டுரையை படிக்க நேர்ந்தது. பதில் எழுதும் அளவுக்கு தகுதியில்லாத கட்டுரை எனினும் , சில உண்மைகளை தங்களுக்கு தெரிவிப்பதற்காக இதை எழுதுகிறேன்.

முதலில், இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள் என்றுதான் தங்களைப்போல் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இலங்கை தமிழர்களில் பெரும்பான்மையானோர் அங்கிருந்த பூர்விக குடிகளே.

கலிங்க (தற்போது ஒரிசா ) மன்னன் சிங்கபாகுவின் மூத்த மகன் விஜயன். உரிய வயது வந்ததும் விஜயனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினார்கள்.விஜயனின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு வெறுப்பைத் தந்தன. பொறுத்துப் பார்த்த மக்கள் நேரிடையாக மன்னனிடம் சென்று, “உங்கள் மகனைக் கொன்று விடுங்கள்; இல்லையெனில் அவனையும் அவனது தோழர்களையும் நாடு கடத்துங்கள்” என்று முறையிட்டனர்.வேறுவழியின்றி மன்னன் சிங்கபாகு, விஜயன் உட்பட அவனது எழுநூறு தோழர்களையும் பிடித்து வந்து தலையில் பாதி முடியை சிரைத்து, சுக்கான் இல்லாத கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தான். விஜயனும் அவனது நண்பர்களும் இலங்கையில் தாமிரபரணி என்னும் பகுதியில் கரையேறினார்கள்.

அத்தீவில் வசிக்கும் இயக்க குல ராணியான குவேனி என்பவளைக் காண்கிறான். முறைப்படி மனைவியாக்கிக் கொண்டான். இந்த விஜயனே முதல் சிங்கள மன்னன் என்று மகாவம்சம் நூல் கூறுகிறது. மகாவம்ச வரலாறு மூலம், விஜயன் வருவதற்கு முன்பு இலங்கைப் பகுதியில் மக்கள் வசித்திருக்கிறார்கள்; அவர்கள் இயக்கர்கள் என்றும், நாகர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்; அவர்களுக்கென்று ஓர் அரசு இருந்திருக்கிறது என்பது புலனாகும். உண்மையில் இவர்களே இலங்கைத் தீவின் பூர்வகுடிகளாவர்.குமரிக்கண்டத்தின் வரலாற்றுப்படி நோக்கினால், அவர்கள் அசல் திராவிடர்கள் என்பதும் புலனாகும்.

மேலும் வரலாற்று ஆசிரியர் பால்.எ.பியரிஸ் என்பவர், விஜயனின் வருகைக்கு நெடுங்காலம் முன்பே சாலவத்தை, காங்கேசன்துறை போன்ற இடங்களில் திருக்கடேச்வரம், முன்நீச்வரம், தொண்டீஸ்வரம், திருக்கூநீச்வரம், நகுலீச்வரம் ஆகிய பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பண்டைய இலங்கையின் வல்லுவத்தே ஆற்றிலிருந்து தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சிங்களர்களும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழர்களும் வசித்து வந்ததாக British colonial secretary - sir hugh cleghorn என்பவர் பதிவு செய்துள்ளார். தமிழர்கள் இலங்கையின் பூர்விக குடிகள் என்பதற்கு இதுபோல் எண்ணிலடங்கா ஆதாரங்கள் உள்ளன.

தங்கள் கட்டுரையில் பிரபாகரன் என்கிற உலகத் தமிழர்களால் நேசிக்கப்படுகிற ஒருவரை மட்டுமல்லாது இன விடுதலைக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்த தமிழர்கள் அனைவரையும் தரக்குறைவாக விமர்சித்து உள்ளீர்கள்.

பிரபாகரன் மக்களின் ஆதரவைத்திரட்டி தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஆவதாம். பாராளுமன்றத்தில் தீர்மானம் போட்டு தமிழர் நலம் காப்பதாம். அட கூமுட்டயே! ஈழத்தந்தை செல்வா அவர்களின் தலைமையில் பலமுறை பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் வெற்றி பெற்றனர். அவர்களால் செய்ய முடிந்தது என்ன?

பாராளுமன்றத்தில் எதிர் கட்சியாகவும், ஆளும்கட்சியுடன் கூட்டணி அமைத்தும், அறவழியில் எவ்வளவோ போராடியும் ஒருபயனும் இல்லாமல் இறுதியில் தந்தை செல்வாவே தமிழர்களுக்கு தனிநாடுதான் தீர்வு என்கிற தீர்மானத்திற்கு வந்தார். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட குட்டிமணியின் நிலைமை என்ன ஆனது? அறவழியில் 30 ஆண்டுகள் போராடி, ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை பழி கொடுத்த பிறகுதான் தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.

பிரபாகரனின் வீரத்திற்கு நீர் சான்று கொடுக்க வேண்டியதில்லை. ஓயாத அலைகள் என்று கூகுல்-இல் தட்டச்சு செய்து தேடிப்பார். ஒரு நொடியில் ஒரு லட்சம் சான்றுகள் கிடைக்கும். வீரம் என்பது களத்தில் நின்று சமராடுவது மட்டுமல்ல. ஓயாத அலைகள் மூன்றாம் கட்டப் போரில் 14,000 ராணுவ வீரர்கள் போர்கைதிகள் ஆனபோது, அவர்களைக் கொல்லாமல் விடுவித்தாரே! அதுதான் வீரம். “புரட்சி என்பது ஒரு மாலை விருந்து அல்ல, அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல. ஒரு ஓவியம் தீட்டுவதோ அல்லது தையல் வேலை செய்வதோ அல்ல; அது அவ்வளவு பண்பானதாக இருக்காது; அவ்வளவு ஓய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமைதியானதாக, இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகவோ, பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது. புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி; ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தைத் தூக்கி எறியும் ஒரு பலாத்கார நடவடிக்கை. (மா சே துங்)

ஒரு லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையுள்ள ராணுவத்தை 15,000 புலிகள் எதிர்த்துப் போரிடும்போது நேர்மையை எதிர்பார்ப்பது தவறு. ராமன் கூட வாலியை மறைந்திருந்து தான் அம்பெய்து வீழ்த்தினார். ஆனாலும் புலிகள் நேர்மையுடன்தான் போரிட்டனர்.புலிகளுடன் போர் என்கிற பெயரில் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகளை ஆயிரக் கணக்கில் அப்பாவித் தமிழர்கள்மீது வீசி படுகொலை செய்ததுதான் சிங்களனின் நேர்மையா? பாதுகாப்பு வளையம் என்றுகூறி அப்பாவித் தமிழர்களை வரவழைத்து, அங்கும் குண்டுமழை பொழிந்தானே சிங்களன். அதுதான் நேர்மையா? மருத்துவ மனைகள், பள்ளிகள் என பாகுபாடில்லாமல் அனைத்தையும் அழித்தானே, அவன் நேர்மையானவன்? ஆனால் ராணுவ நிலைகள் தவிர பொது இடங்களை, அப்பாவி மக்களை ஒரு முறை கூட தாக்கியிறாத பிரபாகரன் நேர்மையற்றவர்? அப்படித்தானே? இப்படி எழுத ஏதாவது கூலி கிடைத்ததா?

ஏற்கனவே தமிழர்களின் வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது. நீரும் சேர்ந்துகொள்ள வேண்டாம். தற்போது முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவ முடிந்தால் உதவுங்கள். இல்லையெனில் நீதிபதிகளுக்கு கடிதம் எழுதி பிழைப்பை நடத்துங்கள். ஈழத் தமிழர்களை விட்டுவிடுங்கள்.

மேற்கண்ட என்னுடைய விளக்கத்தில் ஏதேனும் வரலாற்று தகவல்கள் விடுபட்டிருந்தால் பின்னூட்டமிடவும் .

ஓவியன்
27-07-2009, 06:57 AM
ஆங்கிலேயர்களால் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிய அழைத்து வந்தவர்கள்தாம் ஒட்டு மொத்த இலங்கைத் தமிழரென்றால் ஆங்கிலேயர்களை எதிர்த்திட்ட பண்டாரவன்னியனும் சங்கிலியனும் ஒரு வேளை சிங்களவர்களாக இருப்பார்களோ...??

அத்துடன் அப்பரும் சம்மந்தரும் பதிகம் பாடிய திருத்தலங்களான திருக்கோணேஸ்வரமும் திருக்கேதிஸ்வரமும் பெளத்த மதத்தை பின்பற்றும் சிங்களவர்கள் வழிபட்ட தலங்களாக இருக்குமோ...??

சிவா.ஜி
27-07-2009, 07:17 AM
ஓவியன், இந்தக் கட்டுரைக்கு பதிலளித்தவரின் கூற்றுபடி, பதிலளிக்கத் தகுதியில்லாத கட்டுரை இது.

”உங்கள் எண்ணங்களை விழிப்போடு கவனித்துக்கொண்டே இருங்கள், எந்த நேரத்திலும் அது வார்த்தையாக வந்து விழும், விபரீதத்தை விளைவிக்கும்”

என்ற யாரோ ஒரு அறிஞரின் கூற்றை, இந்தக் கட்டுரையாளர் படிக்கவில்லை போலிருக்கிறது.

புறந்தள்ளுங்கள் இந்தக் குப்பைகளை.

அமரன்
27-07-2009, 09:09 AM
எங்கிருந்து சுட்டது என்று போட மறந்த'தேனோ.'.

நேசம்
27-07-2009, 09:53 AM
அதான் முதலிலே கேள்வி.காம் என்று தேன் குறிப்பிட்டுள்ளார் அமரன்

அய்யா
01-08-2009, 02:58 PM
வரலாறென்றாலே, உண்மையும், புனைவும் உள்ளடக்கியதுதானே!

இப்போது எல்லோருக்குமே வரலாற்றாசிரியர்கள் ஆகும் ஆர்வம் பெருகியிருக்கிறது.

ஓவியன்
01-08-2009, 07:19 PM
இப்போது எல்லோருக்குமே வரலாற்றாசிரியர்கள் ஆகும் ஆர்வம் பெருகியிருக்கிறது.

சரியாக சொன்னீங்க, அப்படியே தத்துவாசிரியர்களாகும் ஆர்வமும் பெருகியிருக்கிறது...!! :rolleyes: