PDA

View Full Version : ஜன கண மண...!!!



lenram80
26-07-2009, 04:42 PM
என் மாநிலத்தைப் பற்றி குறிப்பு இல்லை!
என் காவிரியை கண்டு கொள்ளவே இல்லை!
என் மொழியைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை!
இதுவரை முழு கீதமும் முழுதாகப் புரிந்தது கூட இல்லை!
இருந்தாலும்
உன்னைக் கேட்கும் போதெல்லாம்
என் மெய் சிலிர்க்காமல் இருந்ததில்லை!

ஜெய் ஹிந்த்!

http://video.google.com/videoplay?docid=7399792002477900458&hl=en

சிவா.ஜி
27-07-2009, 06:34 AM
உண்மைதான் லெனின். இந்தியன் என்ற உணர்வு தரும் உத்வேகம் அது.

பாடல் இயற்றப்பட்டபோது மாநிலங்கள் அமைந்திருக்கவில்லை. அதனால்தான் பொதுவாக “திராவிட உத்தல பங்கா” என்பதில் திராவிடம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

வாழ்த்துகள் லெனின்.

கா.ரமேஷ்
27-07-2009, 06:39 AM
ஜெய் ஹிந்த்......

அமரன்
27-07-2009, 07:48 AM
சிவா சொன்னதே என்னதும்..

பாராட்டுகள் லெனின்.

lenram80
27-07-2009, 12:32 PM
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சிவாஜி, ரமேஷ், அமரன்.

உண்மை தான் சிவாஜி. இருந்தாலும் ஒரு தென்னிந்திய நதியின் பெயரோ, மலைத் தொடர்களின் பெயரோ அல்லது மொழிகளின் பெயரோ இதில் குறிப்பிடவில்லை. தாகூருக்கு தென்னிந்தியாவின் தாக்கம் அவ்வளவாக இல்லை போலும் என்று சொல்வதை விட, இந்தப் பாடல் ஜார்ஜ் ஆங்கில மன்னனை இந்தியாவில் வரவேற்கப் பாடப்பட்ட பாடல் அதுவும் 1911-ல்.


தேசிய கீதமாக இதை ஏற்றுக் கொணட போது, கொஞ்சம் மாறுதல்களை கொண்டு வந்திருக்கலாம்.