PDA

View Full Version : மின் மலருக்கான உதவி..!! விருப்பமுள்ளவர்கள் முன் வரலாம்சிவா.ஜி
25-07-2009, 09:19 AM
அன்பு உறவுகளே...மின்னிதழாய் நம் மன்றத்தின் நந்தவனம் மலர்ந்து வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆடி மலருக்கு அடுத்து கார்த்திகை மலருக்கு இதழ்குழுவுடன் இணைந்து பணிபுரிய விருப்பமுள்ளவர்கள், தங்கள் விருப்பத்தை இந்தத் திரியில் பதிவிட்டு உறுதிபடுத்துங்கள்.

உங்களது அலுவலகவேலை, குடும்பத்துக்கான நேரம் இதிலெல்லாம் இடைஞ்சலில்லாமல், கொஞ்ச நேரம் ஒதுக்கினாலே போதும்.

ஓவியர்கள் யாரேனும் இருந்தால், தயைகூர்ந்து முன் வாருங்கள். அட்டைப்படத்தை விசேடமாக கோட்டோவியமாக அமைக்க நினைத்திருக்கிறோம். அதற்கு உதவும் விதமாக நல்ல ஓவியர்களின் பங்களிப்பு அவசியமாகிறது.

நந்தவனம் மலர நாமும் நம் பங்கை அளிப்போம் வாருங்கள் உறவுகளே....!!!

சூரியன்
26-07-2009, 11:52 AM
வரும் மலருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கின்றேன்.
தேவைப்பட்டால் என்னையும் குழுவில் சேர்த்து கொள்ளுங்கள்.

சிவா.ஜி
26-07-2009, 12:44 PM
நன்றி சூரியன். நிர்வாகி ஆவன செய்வார்.

ஓவியன்
28-07-2009, 07:15 AM
ஆர்வமுள்ள புதியவர்களின் வருகை நம் நந்தவனத்தின் பொலிவினை இன்னும் அதிகரிக்கட்டும்...

ஆதி
28-07-2009, 01:02 PM
நம் உறவுகளின் திருக்கரத்தால்.. தீபங்களோடு நந்தவனமும் வெளிச்சமாய் பூக்கும் என்பது உறுதி..

அறிஞர்
28-07-2009, 01:48 PM
சிவா.ஜியின் தலைமையில் மின்னிதழ் சிறப்பாக வெளிவர அனைவரும் ஒத்துழைப்போம்.

சுட்டிபையன்
04-08-2009, 11:20 AM
உங்கள் எல்லோருடனும் சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்புண்டு, தவிர்க்க முடியாத சில காரணங்களால் இனைய முடியாமலுள்ளது, மன்னிக்கவு இனி வரும் காலங்களிம் நிச்சையமாக இணைவேன்.
நன்றி

அக்னி
11-08-2009, 04:51 PM
ஓவியர்கள் யாரேனும் இருந்தால், தயைகூர்ந்து முன் வாருங்கள். அட்டைப்படத்தை விசேடமாக கோட்டோவியமாக அமைக்க நினைத்திருக்கிறோம். அதற்கு உதவும் விதமாக நல்ல ஓவியர்களின் பங்களிப்பு அவசியமாகிறது.
சிவா.ஜி...
இந்தப் பதிவைக் கொஞ்சம் பாருங்களேன்...

கிரையோன்களுடன் நீர்வர்ணம், எண்ணை வர்ணமென எல்லா வகை வர்ணங்களையும் இப்போதே உபயோகிக்கத் தொடங்குங்கள்,
ஓவியப் பாஷை பேசறாரு ஓவியரு...
புடிச்சுக்கோங்க...

mafatsolai
24-08-2009, 06:07 AM
வரும் மலருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கின்றேன்(Drawings).
please என்னையும் குழுவில் சேர்த்து கொள்ளுங்கள்

இணைய நண்பன்
24-08-2009, 12:08 PM
எனது பங்களிப்பை வழங்குகிறேன்

அறிஞர்
27-08-2009, 03:48 PM
எனது பங்களிப்பை வழங்குகிறேன்
எது மாதிரி பங்களிப்பை தங்களால் கொடுக்க இயலும்..

இணைய நண்பன்
28-08-2009, 07:04 PM
எது மாதிரி பங்களிப்பை தங்களால் கொடுக்க இயலும்..

எதற்கும் நான் தயார்.எப்படியான பங்களிப்பு வேண்டும் என்று சொல்லுங்கள் செய்து முடிக்கிறேன்.நன்றி

சிவா.ஜி
29-08-2009, 07:56 AM
நன்றி சோலை மற்றும் இக்ராம். விரைவில் நிர்வாகி உங்களையும் மலர்க்குழுவில் இணைப்பார்.

tamilnatural
11-09-2009, 05:26 AM
Dear Sir,

Can you give me your mobile number for me to contact you over phone regarding this book. My id is tamilnatural@gmail.com

Regards
Tamilarasi.

அன்பு உறவுகளே...மின்னிதழாய் நம் மன்றத்தின் நந்தவனம் மலர்ந்து வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆடி மலருக்கு அடுத்து கார்த்திகை மலருக்கு இதழ்குழுவுடன் இணைந்து பணிபுரிய விருப்பமுள்ளவர்கள், தங்கள் விருப்பத்தை இந்தத் திரியில் பதிவிட்டு உறுதிபடுத்துங்கள்.

உங்களது அலுவலகவேலை, குடும்பத்துக்கான நேரம் இதிலெல்லாம் இடைஞ்சலில்லாமல், கொஞ்ச நேரம் ஒதுக்கினாலே போதும்.

ஓவியர்கள் யாரேனும் இருந்தால், தயைகூர்ந்து முன் வாருங்கள். அட்டைப்படத்தை விசேடமாக கோட்டோவியமாக அமைக்க நினைத்திருக்கிறோம். அதற்கு உதவும் விதமாக நல்ல ஓவியர்களின் பங்களிப்பு அவசியமாகிறது.

நந்தவனம் மலர நாமும் நம் பங்கை அளிப்போம் வாருங்கள் உறவுகளே....!!!

அமரன்
11-09-2009, 07:16 AM
வாங்க தமிழரசி.

உதவ முன்வந்தமைக்கு நன்றி. எ

ன்ன மாதிரியான உதவி செய்ய இயலும் என்பதையோ உங்களுக்கு இருக்கும் மன்ற மின்மலர் தொடர்பான சந்தேகங்களையோ இங்கே அல்லது தனிமடலில் கேளுங்கள்.

கேக்கும்போது தமிழில் கேக்க மறந்திடாதீங்க.

சரண்யா
13-09-2009, 12:03 PM
yes i am ready to help sir
don't mind what is that word கோட்டோவியமாக
will u explain it sir
Thank u sir
Have a nice day

சிவா.ஜி
13-09-2009, 07:44 PM
yes i am ready to help sir
don't mind what is that word கோட்டோவியமாக
will u explain it sir
Thank u sir
Have a nice day

நன்றி ரேஷ்மா. தமிழ் மலருக்கு தமிழில் கேள்விகளைப் பதிந்தால் நன்றாய் இருக்கும். கோட்டோவியம் என்றால்...Line Drawing கோடுகளில் ஓவியம் வரைவது. ஷேட் இல்லாமல்.

samuthraselvam
14-09-2009, 06:11 AM
நானும் பங்கேற்க விரும்புகிறேன்... கொஞ்சம் ஓவியம் கிறுக்குவேன்... சிவா அண்ணாவுக்கும் தக்சுக்கும் பரம்ஸ் அண்ணாவுக்கும் தெரியும் எனது ஓவியத்க் கிறுக்கல் பற்றி...

கிருஷ்ணன்
15-09-2009, 06:07 AM
i am ready to participate for your internet magazine. my email id is kannan233@gmail com

வியாசன்
22-10-2009, 12:26 PM
என்னமாதிரி உதவி எதிர் பார்க்கின்றீர்கள் என்பதை தெரிவித்தால் என்னால் முடிந்ததை செய்து தருகின்றேன். 2 வாரங்கள் கூடுதலான நேரம் உள்ளது. முடிந்தால் தனிமடலில் தெரிவியுங்கள்

அக்னி
22-10-2009, 01:36 PM
i am ready to participate for your internet magazine. my email id is kannan233@gmail com
அன்பு நண்பரே...
தமிழ் மன்றத்தின் முக்கிய நோக்கமே தமிழ்.
தயவு செய்து ஆங்கிலப்பதிவுகளைத் தவிருங்கள்.
தமிழிற் பதிவிட ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், உதவிட நாம் அனைவருமே காத்திருக்கின்றோம்.
தமிழிற் தட்டச்சிப் பாருங்கள். அதன் சுவையை நீங்கள்ம் அனுபவியுங்கள்.
தங்கள் புரிதலை அன்புடன் எதிர்பார்க்கின்றேன்.

விகடன்
26-10-2009, 06:46 PM
i am ready to participate for your internet magazine. my email id is kannan233@gmail com

உங்களுடைய இந்த வரிகளைப் படித்ததும் எனக்கு கவலைதான் மிஞ்சியது.
எங்களுடைய மின்னூல் என்று சொல்லாது உங்களுடைய மின்னூலிற்கு உதவுவதாக எழுதிவிட்டீர்களே..

aren
27-10-2009, 08:19 AM
அன்பு நண்பரே...
தமிழ் மன்றத்தின் முக்கிய நோக்கமே தமிழ்.
தயவு செய்து ஆங்கிலப்பதிவுகளைத் தவிருங்கள்.
தமிழிற் பதிவிட ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், உதவிட நாம் அனைவருமே காத்திருக்கின்றோம்.
தமிழிற் தட்டச்சிப் பாருங்கள். அதன் சுவையை நீங்கள்ம் அனுபவியுங்கள்.
தங்கள் புரிதலை அன்புடன் எதிர்பார்க்கின்றேன்.

இந்த ஒரு பதிவை தவிற அவர் எதுவும் இதுவரை பதிக்கவில்லை. விட்டுத்தள்ளுங்கள்.

வியாசன்
27-10-2009, 10:04 AM
இந்த ஒரு பதிவை தவிற அவர் எதுவும் இதுவரை பதிக்கவில்லை. விட்டுத்தள்ளுங்கள்.

நிபந்தனைகள் வளைந்து கொடுக்க கூடாதது என்று நினைக்கின்றேன். அது யாராக இருந்தாலும்

aren
27-10-2009, 04:01 PM
நிபந்தனைகள் வளைந்து கொடுக்க கூடாதது என்று நினைக்கின்றேன். அது யாராக இருந்தாலும்

நிச்சயம் விட்டுக்கொடுக்கக்கூடாதுதான். இந்த நபர் ஒரே ஒரு பதிவை மட்டுமே செய்திருக்கிறார். அதுவும் ஆங்கிலத்தில். அவர் எப்படி நம்முடைய மின்னிதழிற்கு உதவி செய்யமுடியும். அதற்கு அமரன் அவர்களின் பதில் வேறு. எதற்கு நேரம் விரயம் என்ற அர்த்தத்தில்தான் என் பதில்.