PDA

View Full Version : கொழு கொழு குழந்தை ஆசை



அறிஞர்
24-07-2009, 03:08 PM
மாதக்கணக்கில் மருந்து கொடுத்ததால் 5 மாத குழந்தை 9 கிலோவானது

http://tm.dinakaran.com/2472009/TM_24-07-09_E1_02-04%20CNI.jpg

தாயின் கொழுகொழு ஆசையால் விபரீதம்


சென்னை, ஜூலை 24

சளி, இருமலுக்கு டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தை தொடர்ந்து கொடுத்து வந்ததால் 5 மாத குழந்தை திடீரென உடல் பெருத்து 9 கிலோ அளவுக்கு வளர்ந்தது. கொழுகொழு குழந்தைக்கு ஆசைப்பட்டு தாய் இவ்வாறு செய்ததும் தெரியவந்தது.

அம்பத்தூர் சிவானந்தா நகரை சேர்ந்தவர் சிவலிங்கம் (28). தனியார் கம்பெனி ஊழியர். மனைவி அனிதா (21). இவர்களுக்கு அபிராமி என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் குழந்தையின் எடை திடீரென அதிகரித்தது. நாள் ஆகஆக குண்டாகிக் கொண்டே போனது.

பயந்துபோன பெற்றோர் எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு நேற்று வந்தனர். குழந்தையை டாக்டர் வெங்கடராமன் பரிசோதனை செய்தார். ஸ்டீராய்ட் மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுத்ததால் குழந்தையின் எலும்புகள் பலவீனம் அடைந்திருப்பதை கண்டுபிடித்தார். இதுபற்றி பெற்றோரிடம் விசாரித்தார்.

‘குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் சளி, இருமலுடன் வலிப்பும் இருந்தது. 4 நாட்களுக்கு கொடுக்குமாறு ஒரு மருந்தை டாக்டர் எழுதிக் கொடுத்தார். மருந்து கொடுத்த 4 நாளும் குழந்தைக்கு எந்த பிரச்னையும் இல்லை. குழந்தை துருதுருவென்றும் காணப்பட்டது. அந்த மருந்தை தொடர்ந்து கொடுத்தேன். குழந்தை முன்பைவிட கொழுகொழுவென்று வளர்ந்ததால் 4 மாதமாக கொடுத்து வந்தேன். சமீபத்தில் ரொம்ப குண்டாகிவிட்டாள். பயந்துபோய் வந்தோம்Õ என்று தாய் அனிதா கூறினார்.

ஸ்டீராய்டு மருந்து என்பது விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் உட்கொள்ளும் ஊக்க மருந்து. டாக்டர் ஆலோசனையின்றி அளவுக்கு அதிகமாக கொடுத்துள்ளீர்கள். 6 கிலோ இருக்க வேண்டிய குழந்தை 9 கிலோ இருக்கிறது. தொடர்ந்து கொடுத்திருந்தால் குழந்தை உயிருக்கே ஆபத்தாகியிருக்கும். டாக்டரை கேட்காமல் எந்த மருந்தும் கொடுக்கக்கூடாது என்று கூறி அவர்களை டாக்டர் அனுப்பிவைத்தார்.

நன்றி-தினகரன்

அருள்
24-07-2009, 03:18 PM
இதை போல் நிறைய தாய்மார்கள் உண்டு. இது அவர்களின் குழந்தை மீது வைத்துள்ள பாசத்தை கட்டினாலும் அவர்களின் அறியாமையை என்வென்று சொல்வது.

விகடன்
25-07-2009, 11:24 AM
வைத்தியச்செலவு வருமானத்தை விட மிஞ்சியிருப்பதால் இந்தமாதிரிவிடயங்கள் பொதுவாக நடக்கின்றது. இன்னும் சில இடங்களில் வைத்தியரிடம் வருத்தத்தை சொல்லாது மருந்தகங்களில் பணிபுரிவோரிடம் சொல்லி மருந்து கேட்கும் கொடுமையும் நிகழ்கிறது.

நேசம்
26-07-2009, 07:56 AM
இது தாயின் அறியாமையால் வந்த விளைவு.அழகான குழந்தை. இப்பொழுதாவது டாக்டரிடம் கொண்டு வரவேண்டும் என்று தாயுக்கு தோன்றியதே

puppy
27-07-2009, 06:54 AM
அன்னைக்கு அன்பு மட்டுமே தெரியும்.....மருத்துவர்கள் தான் சரியாக சொல்லி மாத்திரைகளை கொடுக்க வேண்டும்.....

நம்ம மன்ற மருத்துவர் மாதிரி இருந்தால் இப்படி தான் கஷ்ட படனும்.

பாரதி
27-07-2009, 01:39 PM
அன்னைக்கு அன்பு மட்டுமே தெரியும்.....மருத்துவர்கள்தான் சரியாக சொல்லி மாத்திரைகளை கொடுக்க வேண்டும்.....

நம்ம மன்ற மருத்துவர் மாதிரி இருந்தால் இப்படித்தான் கஷ்டப்படணும்.

அன்பு மருத்துவர் இல்லையே...?! :aetsch013:

மன்ற மருத்துவரை நல்லா புரிஞ்சிகிட்டவங்க, அவரிடம் மருத்துவ ஆலோசனை கேட்டவங்க கஷ்டப்பட்டதே இல்லை.