PDA

View Full Version : உன்னை பார்க்க நேரிட்டால்



சுஜா
24-07-2009, 02:32 PM
நான்
என்றாவது
உன்னை பார்க்க நேரிட்டால்
என் நடை வேகம்
குறைத்துக்கொள்வேன்.
அதற்குள்
உன்
நலம் விசாரிப்பு வசனங்களை
தயாரித்துகொள்.

அருள்
24-07-2009, 03:12 PM
சோகத்திலும் ஒரு சுகம் உண்டு

கா.ரமேஷ்
25-07-2009, 04:36 AM
அருமை...

sathyamani
25-07-2009, 04:49 AM
பிரிவு வலிதான் என்றாலும் சுகமானது

ஓவியன்
25-07-2009, 04:53 AM
நடை வேகம் குறைக்கும்
காதல்,
வாழ்வின் வேகத்தை
அதிகரிக்க என் வாழ்த்துக்களும்..!!

அமரன்
26-07-2009, 07:05 PM
சூப்பர்ப்..:icon_b:


நடைவேகம் குறைத்து
நீ
அருகில் வருகிறாய்..

இருதய வேர்களுக்கு
இரகசியம் கூறுகிறாய்..

என்
இதழ் தலைகள் அசைகின்றன.

நீ..
கடந்து சென்ற மறுகணம்
மோதத் துவங்கும் காற்று - என்
முடி பிடித்து ஆட்டுகிறது..

அமரன்
26-07-2009, 07:09 PM
அவன்
வேகம் குறைத்ததுவும்..

நீ
மேகமாய் உதிர்த்ததும்..

ஈரமே பாரமாய்
உன் மனதில் ஆனதுவும்..

கண்டேன் கண்மணியே..
கலங்காதே..
நீ என் கண்மணியே..

அமரன்
26-07-2009, 07:14 PM
நீண்டதொரு சாலையில்
துருவங்கள் நெருங்குகையில்
உருவங்கள் உருகிவிட
அரூபமாய் "அலை"கிறது..
அன்றும் இன்றும் என்றுமான
அவர்களுக்கிடையான காதல்..

ஓவியன்
27-07-2009, 04:19 AM
சூப்பர்ப்..:icon_b:


நடைவேகம் குறைத்து
நீ
அருகில் வருகிறாய்..

இருதய வேர்களுக்கு
இரகசியம் கூறுகிறாய்..

என்
இதழ் தலைகள் அசைகின்றன.

நீ..
கடந்து சென்ற மறுகணம்
மோதத் துவங்கும் காற்று - என்
முடி பிடித்து ஆட்டுகிறது..

முடி பிடித்தாட்டிய காற்று
என் மூளையை(!)
உலுக்கிச் சென்னது,,
இந்த வீதி ஒரு
முட்டுச் சந்தென.....!!

மறுபடியும் உனக்காக
காத்திருக்கின்றேன்
உன்னடை வேகம் குறையுமென..!:)

ஓவியன்
27-07-2009, 04:25 AM
அவன்
வேகம் குறைத்ததுவும்..

நீ
மேகமாய் உதிர்த்ததும்..

ஈரமே பாரமாய்
உன் மனதில் ஆனதுவும்..

கண்டேன் கண்மணியே..
கலங்காதே..
நீ என் கண்மணியே..

கண்ணென்பார்,
கண்ணின் மணியென்பார்
வார்த்தைகளைப் பாராதே,
அவர் மனங்களை மாத்திரம்
பாரென,
அவள் கூந்தலைப் பிடித்து
உலுக்கிச் சொன்னது
அந்த பொல்லாக் காற்று..!!

ஓவியன்
27-07-2009, 04:40 AM
நீண்டதொரு சாலையில்
துருவங்கள் நெருங்குகையில்
உருவங்கள் உருகிவிட
அரூபமாய் "அலை"கிறது..
அன்றும் இன்றும் என்றுமான
அவர்களுக்கிடையான காதல்..

வீதிகளில் காதலை
அரூபமாய் "அலை"யவிட்டு,
வீடுகளில் அடைந்திருந்து
அதனை,
கவிதைகளில் தேடுகின்றனர்
அவனும் அவளும்...!!

சிவா.ஜி
27-07-2009, 06:20 AM
சுஜாவின் காதல்வலி சொல்லும் சிறப்பான கவிதைக்கு, அமரனும், ஓவியனும் பின்னூட்ட கவிமாலையால் சிறப்பித்த விதம் அருமை.

வாழ்த்துகள் சுஜா.