PDA

View Full Version : என் வானிலே இரண்டு வெண்ணிலா!!! - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க



Pages : [1] 2

தாமரை
23-07-2009, 05:08 AM
சமீப காலத்தில் சில மன்ற உறுப்பினர்கள் வானவியலில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அத்தகைய வானவியல் தகவல்கள் பல திரிகளில் சிதறிக்கிடப்பதை விட ஒரே இடத்தில் இருந்தால் பயன் மிக அதிகமாக இருக்கும் என கருதுகிறேன்.

வானவியல் தகவல்களை, புதிரோ புதிர் போல ஒரே இடத்தில் பெற இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.

முதலில் ஸ்டார் கேஸிங்.. மென்பொருள் ஒண்ணு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

http://download.cnet.com/3001-2054_4-10072276.html?spi=307fda8034341e6e6cabeb2cc115f5b6

இதை நிறுவிக் கொள்ளலாம். இதன் பிறகு வானத்தில் நட்சத்திர மண்டலங்களை 12 இராசி மண்டலங்கள் அப்புறம் 88 நட்சத்திர மண்டலங்கள், 8 கிரகங்கள் என பார்ப்போம்.

கிரகங்களைப் பற்றி இதைப் படிப்பவர்கள் பதிவிடுங்கள்.

வானம் மொத்தம் 360 பாகைகளாக இருக்கிறது அல்லவா? இந்த 360 பாகைகளை 12 ஆக 30 பாகைகள் ஒரு இராசி எனப் ப்ரித்து இருக்கிறார்கள். (30 மில்லி ஒரு பெக் என்பதை குடிமகன்களும், 30 மில்லி ஒரு அவுன்ஸ் என வெறும் மகன்களும் நினைவில் கொள்ளலாம்).

இந்தப் பகுதியில் உள்ள பெரிய நட்சத்திரங்களின் வடிவத்தைப் பொறுத்து அவற்றிற்கு பெயரிட்டு இருக்கின்றனர்.

மேச ராசி : http://en.wikipedia.org/wiki/Aries_(constellation)
http://www.enchantedlearning.com/agifs/Aries.GIF

ரிசப ராசி : http://en.wikipedia.org/wiki/Taurus_(constellation)
http://www.enchantedlearning.com/tgifs/Taurus.GIF

மிதுன ராசி : http://en.wikipedia.org/wiki/Gemini_(constellation)
http://www.enchantedlearning.com/ggifs/Gemini.GIF

கடகராசி : http://en.wikipedia.org/wiki/Cancer_(constellation)
http://www.enchantedlearning.com/cgifs/Cancer2.GIF

சிம்மராசி : http://en.wikipedia.org/wiki/Leo_(constellation)
http://www.enchantedlearning.com/lgifs/Leo2.GIF

கன்னிராசி : http://en.wikipedia.org/wiki/Virgo_(constellation)
http://www.enchantedlearning.com/vgifs/Virgo.GIF

துலாராசி : http://en.wikipedia.org/wiki/Libra_(constellation)
http://www.enchantedlearning.com/lgifs/Libra.GIF

விருச்சிகராசி : http://en.wikipedia.org/wiki/Scorpius
http://www.enchantedlearning.com/sgifs/Scorpius.GIF

தனுசுராசி : http://en.wikipedia.org/wiki/Sagittarius_(constellation)
http://www.enchantedlearning.com/sgifs/Sagittarius.GIF

மகரராசி : http://en.wikipedia.org/wiki/Capricorn_(constellation)
http://www.enchantedlearning.com/cgifs/Capricorn.GIF

கும்பராசி : http://en.wikipedia.org/wiki/Aquarius_(constellation)
http://www.enchantedlearning.com/agifs/Aquarius.GIF

மீனராசி : http://en.wikipedia.org/wiki/Pisces_(constellation)
http://www.enchantedlearning.com/pgifs/Pisces2.GIF

சரி இப்போ எப்படி இந்த ராசிகளை அடையாளம் காண்பது?

சந்திரனை வைத்துதான்

http://en.wikipedia.org/wiki/Nakshatra#Nakshatra_descriptions

இங்கே நட்சத்திர அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நமது தினசரி காலண்டரில் அன்று என்ன நட்சத்திரம் என்று கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த நட்சத்திரத்தின் அருகே சந்திரன் இருக்கும்.

ஆக இதைக் கொண்டு இருபத்தேழு நட்சத்திரங்களையும்.. மற்றும் 12 இராசிகளையும் வானத்தில் அடையாளம் காணலாம்.

இதே போல ஸ்டார் கேஸிங் சாஃப்ட் வேர் மூலமாக இந்த ந்ட்சத்திர மண்டலங்களை அடையாளம் காணலாம்.

மொட்டை மாடியில் இனி தூங்கப் போறவங்க எல்லாம் கையைத் தூக்குங்க..

இந்த விவரங்களைக் கொண்டு 5 கிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்கள் 12 இராசிகளை அடையாளம் கண்டு பிடியுங்கள்..

இன்னும் வரும்...

பின் இணைப்பு :


இதுதான் வானவியலில் அடிப்படை ஆரம்பம்.

aren
23-07-2009, 05:38 AM
என்னவோ சொல்லவரீங்கன்னு புரியது, ஆனால் அதே சமயம் புரிய மாட்டேங்குது. இன்னொருதபா படிச்சுப்பார்த்தால் புரியும் என்றே நினைக்கிறேன். தொடருங்கள்.

தாமரை
23-07-2009, 05:54 AM
வானத்தில் என்ன பாக்கிறது என்று தெரியாம மலங்க மலங்க விழிப்பவர்களுக்கு இந்த ஆரம்பப் பகுதி..

வானத்தில் 12 இராசி மண்டலங்களையும் இருபத்தேழு நட்சத்திரங்களையும் அடையாளம் காண முடிந்தால், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி போன்ற 5 கிரகங்களை வெறுங்கண்களால் அடையாளம் காணமுடியும்.

வானத்தைப் பார்க்க கற்றுக் கொண்டால் வானியல் சுவாரஸ்யமாக இருக்கும்.

கார்த்திகை நட்சத்திரங்கள் :

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=141516&postcount=62

சப்தரிஷி மண்டலமும், அருந்ததி நட்சத்திரமும்

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=141603&postcount=65

இப்படி வானம் நமக்குத் தெரிந்த ஊராகும் பொழுது அந்த வைரப்புள்ளிகள் நமக்குச் சினேகிதர்கள் ஆகும் போது வானம் பார்த்தல் மிக சுவாரஸ்யமாகும்.

அதன் பின் வானவியலின் அற்புதங்களை, புதிய கண்டு பிடிப்புகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என இருக்கிறேன்.

சிவா.ஜி
23-07-2009, 08:52 AM
அப்ப சக்தி வாய்ந்த டெலிஸ்கோப் ஒண்ணு வாங்கிக்கிட்டு மொட்டைமாடிக்குப் போயிட வேண்டியதுதான். ரொம்ப சுவாரசியமா இருக்கும் போலருக்கே...

தாமரை
23-07-2009, 10:06 AM
இந்த மாதன் வானத்தில் என்ன ஸ்பெஷல்?



சனிக்கிரகம், வியாழன், செவ்வாய், சுக்கிரன் எல்லாம் பார்க்கலாம்.

2009 க்கு இன்னொரு விஷேசமும் இருக்கு,,

இது சர்வதேச வானியல் ஆண்டு.

நமது தமிழ் மாதம் ஆடியின் கணக்கின் படி சூரிய உதயம் கடக ராசியில் நடக்கிறது. ஆகவே இரவு ஆரம்பிக்கும்பொழுது மேற்கு வானத்தில் மிதுன ராசி தெரியும். ரிஷபம், மேஷம், மீனம்,கும்பம், மகரம் இவை ஆரம்பத்தில் மேற்கிலிருந்து கிழக்காகத் தெரியும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திலும் ஒரு ராசி மறைய அடுத்த ராசி உதயமாகும். மிதுனராசியை காண்பது கடினம்தான் ஏனென்றால் நட்சத்திரங்கள் தென்படும் பொழுது மிதுனராசி அஸ்தமனமாகி இருக்கும்,

விடிய விடிய கவனித்தால் ஜெமினி ராசியிலிருந்து சிம்மராசி ராசி வரை காணலாம்.

ஆனால் அவ்வளவு பொறுமை நமக்கில்லையே.. எனவெ இரவு 10 லிருந்து 11 வரையிலான நேரத்தை நமதாக்கி அப்பொழுது என்ன தெரியும் எனப் பார்க்கலாம்.

இந்த மாத வானம் :

சூரியன் மறையும் பொழுது மேற்கு வானில் சுக்கிரன் பளீரெனத் தெரியும். கூடவே அதற்கு சற்றே தென்கிழக்கில் செவ்வாய் கிரகமும் தெரியும். செவ்வாய் கிரகம் ரிஷப் ராசி பகுதியில் இருப்பதைக் கவ்னியுங்கள்.

வியற்காலையில் சூரியன் உதிக்கும் முன்பு, சந்திரனும் உதிக்கும் முன்பு சனிக்கிரகம் சிம்ம ராசிப்பகுதியில் தெரியும்.

சந்திர உதயத்திற்குப் பிறகு சூரிய உதயத்திற்கு சற்றே முன்னால் கிழக்கு அடிவானத்தில் புதன் கிரகம் கடகராசிப்பகுதியில் தெரியும்.

http://amazing-space.stsci.edu/tonights_sky/show.php?month=july&year=2009

ஸ்டெல்லேரியம் மென்பொருளை திறந்து வைத்துக் கொண்டு அதையும் வானத்தையும் ஒப்பிட்டால்.. எது எது என்ன என்ன எந்த எந்த தூரத்தில் உள்ளது எனப் புரியும்.

இன்பா
23-07-2009, 10:55 AM
அண்ணா நீங்க கிளப்பி விட்டீங்க...

ஏதாவது தேடலாம்ன ஒரே மேக மூட்டம் பெங்களூர்ல...!!!

தாமரை
23-07-2009, 11:56 AM
வானத்தைப் பார்ப்பது என்றால் நமக்கெல்லாம் தெரிந்த முதல் பொருள் சூரியன்

http://space.about.com/library/graphics/sun_tour.jpg

சூரியன் ஒரு நட்சத்திரம். அது பூமிக்கு அருகில் இருப்பதால் பகலில் சூரியன் இருக்கும் பொழுது சூரியன் மட்டுமே தெரிகிறது. சில சமயங்களில் மாத்திரமே பகலில் சந்திரனும் தெரியும்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் சராசரியாக 14.960 கோடி மைல்களாகும். சூரிய ஒளி பூமியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகின்றது,

சூரியனின் குறுக்களவு 13,90,000 கிலோமீட்டர்கள் ஆகும்.

சுரியன் மேற்பரப்பின் வெப்ப நிலை 5800 கெல்வின் ஆகும். அதாவது 5527 செல்சியஸ்.

சூரியனில் 70 சதவிகிதம் ஹைட்ரஜனும் 28சதவிகிதம் ஹீலியமும் உள்ளது.

சூரியன் சுற்றுவது நம் பூமி சுற்றுவதை விட வித்தியாசமானது. சுரியன் மையப்பகுதி 25.4 நாட்களுக்கு ஒரு முறை சுழல, துருவப் பகுதிகள் 36 நாட்களுக்கு ஒருமுறை சுழல்கின்றன. காரணம் சூரியன் முழுக்க முழுக்க வாயுப்பொருட்களால் ஆனதினால்தான்,

சுரியனின் கருப்பகுதியில் 1.56 கோடி கெல்வின்கள் (செல்சியஸ் என்றுகூட சொல்லலாம், 273 டிகிரி இதில் பெரிய வித்தியாசமில்லை). இங்கு உள்ள அழுத்தமானது பூமியின் கடல் மட்டத்தில் உள்ள காற்றழுத்தம் போன்று 250 பில்லியன் அளவு பெரிது.

ஒவ்வொரு வினாடியும் சூரியனி 70 கோடி டன் ஹைட்ரஜன் 69.5 கோடி டன் ஹீலியமாக மாறுகிறது. மிச்சம் 50 இலட்சம் டன் சக்தியாக காமாக் கதிர்களாக கதிரியக்கமாய் வெளிப்படுகிறது.

சூரியனின் மேற்பரப்பு ஃபோட்டோஸ்பியர் எனப்படுகிறது. சூரியப் புள்ளிகள் எனப்படும் சூரியனின் மேல் தற்காலிகமாகத் தோன்றும் புள்ளிகள் சூரியனின் தற்காலிகக் குளிர்ந்த பிரதேசங்கள் ஆகும். சில சூரியப் புள்ளிகள் 50000 கிலோமீட்டர் அளவு கூட பெரியதாக இருக்கும்.

சுரியனின் மையத்தில் தோன்றும் வெப்பம் வெப்பக்கடத்தல் மூலமாகவே சூரியனின் மேல்பகுதியை அடைகிறது. இதில் 80 சதவிகித வெப்பம் இழக்கப்படுகிறது.

ஃபோட்டோஸ்பியருக்கு மேற்பட்ட பகுதி குரோமோஸ்பியர் எனப்ப்டுகிறது. இதற்கும் மேற்பட்ட பகுதியே கரோனா எனப்படும் பகுதியாகும். இது சாதாரணமாக கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் சூரிய கிரகணத்தின் போது இது மிகத் தெளிவாகத் தெரியும்.

http://www.solarviews.com/raw/sun/eclips94.mpg

இந்தக் கரோனா 1 இலட்சம் கெல்வின் வரை வெப்பமுள்ளதாகும்,

சூரியனின் காந்தப் புலம் மிக மிகச் சிக்கலான ஒன்றாகும். இது புளூட்டோவின் சுற்றுப் பாதையையும் தாண்டி விரவி இருப்பதாகும்.

ஒளி மற்றும் வெப்பம் மட்டுமன்றி சூரியனில் இருந்து சூரியக் காற்றும் வீசுகிறது. இது எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் துகள்களால் ஆனது, இதன் வேகம் வினாடிக்கு 450 கிலோமீட்டர்களே ஆகும். இதுவே சூரியத் தழல் வெளிப்பாட்டின் போது மிக அதிகமான துகள்கள் வெளிப்படுத்தப் படுகிறது. இவை பூமியின் மின், மற்றும் மின்னணு சாதனங்களையே பாதிக்கும் அளவிற்கு இருக்கும். (2012 -இல் இது போன்ற தழல் வெளிப்படும் என்பதும் ஒரு உயிருள்ள வதந்தியாகும்.)

பூமியின் வடதுருவப் பகுதியில் இந்தச் சூரியப் புயலினால் வானத்தில் வண்ண வண்ணக் காட்சிகள் தெரியும். இதை நார்தர்ன் லைட்ஸ் என்பார்கள்,

சூரியத் தழல் வெளிப்படும் பொழுது இந்த சூரியக் காற்றின் வேகம் வினாடிக்கு 750கி.மீ வரை கூட உயரலாம். இவை வால்நட்சத்திரங்களையும் செயற்கைக் கோள்களையும் பாதிக்கின்றன.

சூரியம் பால்வீதியைச் சேர்ந்தது. பால்வீதியை இது 250 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறைச் சுற்றி வருகிறது.

சூரியனின் தற்போதைய வயது 4.5 பில்லியன் வருடங்கள் எனக் கணிக்கப்படுகிறது. சூரியன் இன்னும் 5 பில்லியன் வருடங்கள் வரை வாழலாம் என்றும் ஆனால் அதன் ஒளி அப்பொழுது இப்பொழுது இருப்பதை விட இரட்டிப்பாக இருக்கும் எனவும் ஊகிக்க முடிகிறது. அதன் பிறகு ஹைட்ரஜன் குறையக் குறைய சூரியனின் இறுதிக்காலம் வர, சூரியன் மார்க்கெட் இழந்த நடிகை போல பெருத்து.. சிவந்து வெடிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது

இன்பா
23-07-2009, 02:35 PM
நன்றி தாமரை அண்ணா...!!!

இன்னும் பல தகவல்களை எதிர் நோக்கி :)

பாலகன்
23-07-2009, 04:28 PM
சூரியனுக்குள் குளிர்ந்த பகுதியா? ஆச்சர்யம் மிக மிக ஆச்சர்யம்.... அந்த சூரிய புயலை நினைச்சாலே பயமா இருக்குது :(

தாமரை
23-07-2009, 04:50 PM
இப்போது இந்தியாவில் வானம் பார்ப்பவர்களுக்கு...

போன வார இறுதியில் யாரோ கல்லால் அடிக்க காயப்பட்ட வியாழக்கிரம் இப்போது கிழக்கு திசையில் அடிவானத்துக்கு சற்று மேலாக மகர ராசிக்கு அருகில் பளீரெனத் தெரிகிறது. பெங்களூரில் மகர ராசி தெரியவில்லை, வியாழக் கிரகம் மட்டும் தெரிகிறது.

பார்த்து ஒரிரண்டு நிமிடங்கள் ஆறுதல் சொல்லி வைங்க. :)

வியாழன் அடிபட்ட மேட்டர் இங்க வந்திருக்கு..



http://www.tamilmantram.com/vb/showthread.php?p=425321#post425321

இந்தத் திரிகள் இன்பா படிக்க மட்டுமே!!!:icon_rollout::icon_rollout::icon_rollout:

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6270
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6587

இன்பா
24-07-2009, 04:35 AM
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா தாமரை அண்ணா...!!

சென்னையில் சுனாமி வந்தது இல்ல...? அதற்கு முந்தின நாள் நானும் எனது அண்ணாவும் மெரினா பீச்சில் ஒரு ஒரு மணிநேரம் பேசிக்கிட்டிருந்தோம்...

தற்செயலாக ஒரு கேள்விகேட்டேன் அண்ணாவிடம்.. அதாவது எப்போதாவது கடல் தண்ணீர் இங்க வரைக்கும் வந்திருக்கா என்று ப்ரசிடென்சி கல்லூரி எதிரி ஒரு சப்வே இருக்கே அதை காண்பித்தேன்... "எனக்கு நினைவு தெரிஞ்சி அந்த மாதிரியெல்லாம் வந்தது இல்லைன்னு சொன்னார்..."

மறுநாள் எனக்கு போன் செய்து ஏண்டா அப்படி சொன்னே என்றார்...? எனக்கு ஒன்றும் புரியாமல் எப்படி ? என்றேன்... போய் சன் டிவி பார் என்றார்...

போய் பார்த்தால் நான் சொன்ன அந்த இடம் வரைக்கும் கடல் தண்ணீர்... ஆடிப்போய்விட்டேன்...

தாமரை
24-07-2009, 04:38 AM
சூரியனுக்கு அப்புறம் சந்திரன் என நினைத்தீர்கள்தானே.. சரிதான். ஆனால் மூணாவதா பூமியைப் பார்ப்போம்.

சந்திரனை பெண்ணாகத்தான் பலரும் பார்க்கிறார்கள்.

http://nineplanets.org/pics/Luna2.jpg

சந்திரன் பூமியிலிருந்து 384,4903 கி.மீ தூரத்தில் உள்ளது. சந்திரன் பூமியை 27.3 நாட்களுக்கு ஒரு முறை வலம் வருகிறது. (ஹா ஹா.. புத்திசாலிங்க நீங்க,, நம்ம ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் எப்படி வந்தது என்று சரியா யூகிச்சிட்டீங்களே...)

ஆனால் அமாவாசைக்கு அமாவாசை இருக்கும் வித்தியாசம் 29.5 நாட்கள். இதற்குக் காரணம் சந்திரன் பூமியைச் சுற்றுது.. பூமி சூரியனைச் சுற்றுது. இதனால் இதனால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள கோணமாறுபாடுகளால் நமக்கு சந்திரனின் உருமாற்றம் 29.5 நாட்கள் கொண்டதாக இருக்கிறது.

இதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இதை வச்சுதான் அந்தக் காலத்துல வானத்தைப் பார்த்து மாதம் நாள் மணி சொல்லுவாங்க.. இதைப் பின்னால் பார்க்கலாம்.

சந்திரனோட குறுக்களவு 3424 கிலோமீட்டர்கள்.

எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அதைப் பார்க்க நினைக்காதே. பார்த்தா பயந்திடுவ என்று சூப்பர் ஸ்டார் படையப்பாவில் சொன்ன மாதிரி நிலவிற்கு இரண்டு முகங்கள் என்ச் சொல்லலாம்.

பூமிக்குத் தெரியும் முகம் இது..

http://upload.wikimedia.org/wikipedia/commons/3/36/Moon_names.jpg


பூமிக்குத் தெரியாத முகம் இது

http://upload.wikimedia.org/wikipedia/commons/2/2a//Moon_PIA00304.jpg

இதற்குக் காரணம் நிலா தன்னைத் தானே சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் காலமும் பூமியைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலமும் ஒரே அளவு.

ஒவ்வொரு அமாவாசைக்கும் சூரிய கிரகணம், ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சந்திர கிரகணம் வரலியே என்ன காரணம்?

http://upload.wikimedia.org/wikipedia/commons/4/43/Earth-Moon.PNG

இதுதான்... சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள அச்சிற்கும், சந்திரன் பூமியைச் சுற்றிவரும் அச்சிற்கும் உள்ள வித்தியாசம்.

பூமியைப் பார்க்கும் நிலா முகம் மனிதனின் கண்ணடி பட்டதாலோ என்னவே நிறைய அடி வாங்கி இருக்கிறது... நிலாவின் பின்பகுதியோ அவ்வளவாக அடிவாங்கவில்லை. ஏன் என்று யோசிக்க வேண்டிய விஷயம்தானே...

நிலவில் உள்ள தட்ப வெப்ப நிலை காரணமாக வால்நட்சத்திரங்கள் மோதுவதல் கிடைக்கும் நீர் ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரிந்து நிலவின் ஈர்ப்பு விசைக் குறைபாட்டினால் நிலவில் தங்காமல் போயிருக்கலாம். ஆனால் தெ துருவப் பகுதியில் உள்ள சில பள்ளங்களில் சூரிய ஒளி எப்பொழுதுமே விழாத காரணத்தினால் அங்கு நீர் உறைந்திருக்கலாம் எனக் கருதப் படுகிறது. நாசாவும் அதை ஆய்வு செய்யப் போகிறது.

4.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மிகப் பெரிய மோதலினால் பூமியிலிருந்து நிலா பிய்க்கப் பட்டதாக கருத்து நிலவுகிறது. நிலவின் மிகச் சிறிய உட்கருவும் மிக அதிகமான மேண்டில் பகுதியும் இதை உறுதி செய்வது போல இருக்கிறது.

http://en.wikipedia.org/wiki/File:Moon_Schematic_Cross_Section.svg

நிலவில் வளிமண்டலம் மிகச் சிறிய அளவே உண்டு, இல்லை என்பது கப்ஸா.

கதிரியக்கத்தினால் உண்டாகும் ரேடான், மிகச்சிறிய விண்கற்கள், சூரியத் தழல், சூரிய ஒளி இவற்றால் உண்டாகும் பொட்டாசியம் சோடியம் போன்ற வாயுக்கள், ஆர்கான், ஹீலியம், ஆக்சிஜன் மீத்தேன், நைட்ரஜன், கார்பன் மோனாக்ஸைடு / டை ஆக்ஸைடு போன்றவையும் மிகக் குறைந்த அளவே உண்டு,

பூமியில் கிடைக்காத சில தனிமங்களும் நிலவில் இருக்கலாம்.

நிலவினால் உண்டாகும் சில பல விஷூவல் எஃபெக்ட்கள்..

1. கடல் ஓதங்கள்..

2. கிரகணங்கள்

3. பூமியின் தள்ளாட்டம்.. மற்றும் சுழற்சி வேகக் குறைவு..

பூமியைத் தவிர மனிதனின் காலடி பட்ட இன்னொரு இடமாக நிலா உள்ளது..

இன்னும் வரும்...

இன்பா
24-07-2009, 05:22 AM
இன்னும் வரும்...

சீக்கிரம் வாங்க....

இன்பா
24-07-2009, 05:33 AM
நிலவினால் உண்டாகும் சில பல விஷூவல் எஃபெக்ட்கள்..

குழந்தைகளுக்கு சோறூட்ட.... :)

தாமரை
24-07-2009, 06:53 AM
சூரிய கிரகணம்

http://en.wikipedia.org/wiki/File:Geometry_of_a_Total_Solar_Eclipse.svg

சூரியன் - பூமி - நிலா ஆகியவற்றின் நிலைகளையும் கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்பதையும் அழகாக விளக்கும் படம் இதுவாகும்.

அம்ப்ரா எனப்படு இடத்தில் முழுச் சூரிய கிரகணமும், பெணம்ப்ர எனும் இடத்தில் பார்சுவ சூர்ய கிரகணம் அல்லது பகுதி சூரிய கிரஹணமும் ஏற்படும்.

சூரிய கிரஹணப் படங்கள் மன்றத்தில் இந்தத் திரியில் உள்ளன,

முழுச் சூரிய கிரகணம் :

http://i13.photobucket.com/albums/a282/aringar/se2.jpg

பார்சுவ சூரிய கிரகணம் (பகுதிச் சூரிய கிரகணம்)

http://i13.photobucket.com/albums/a282/aringar/se3.jpg

கங்கணச் சூரிய கிரகணம். (சூரியன் தங்க வளையல் போலத் தெரியும். இதன் தோசம் விலக மனைவிக்கு தங்க வளையல் வாங்கித்தரணும். :D :D :D)

http://i13.photobucket.com/albums/a282/aringar/se4.jpg

முழுச் சூரிய கிரணம் விலகும் போது வைர மோதிரம் போல் காட்சி தரும். (இதன் தோசம் விலக மனைவிக்கு வைர மோதிரம் வாங்கித் தரணுமாம். :D :D :D)

http://i13.photobucket.com/albums/a282/aringar/SE1.jpg

பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையும், நிலா பூமியச் சுற்றி வரும் பாதையும் சாய்வாக இருத்தல், பூமி தன் அச்சில் சாய்ந்து இருத்தல், பூமியின் பாதையும் நிலவின் பாதையும் நீள் வட்டமாய் இருத்தல் போன்ற காரணங்களால், சூரிய கிரகணம், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் ஏற்படுகிறது. ஒரே இடத்தில் இரண்டு முழுச்சூரிய கிரகணங்கள் தெரிய 100 ஆண்டுகள் வரை ஆகலாம்.

சூரிய கிரகணங்கள் எப்பொழுது எங்கே தெரியும் போன்ற விவரங்களை நாசா பட்டியலிட்டு வைத்துள்ளது.

http://eclipse.gsfc.nasa.gov/SEcat/SEdecade2001.html
http://eclipse.gsfc.nasa.gov/SEcat/SEdecade2011.html
http://eclipse.gsfc.nasa.gov/SEcat/SEdecade2021.html
http://eclipse.gsfc.nasa.gov/SEcat/SEdecade2031.html
http://eclipse.gsfc.nasa.gov/SEcat/SEdecade2041.html


http://eclipse.gsfc.nasa.gov/SEgoogle/SEgoogle2001.html
http://eclipse.gsfc.nasa.gov/SEgoogle/SEgoogle2021.html
http://eclipse.gsfc.nasa.gov/SEgoogle/SEgoogle2041.html
http://eclipse.gsfc.nasa.gov/SEgoogle/SEgoogle2061.html
http://eclipse.gsfc.nasa.gov/SEgoogle/SEgoogle2081.html

அப்புறம் இது பேரேடு....3000 ஆவது வருஷம் வரை

http://eclipses.gsfc.nasa.gov/SEcat5/catalog.html
சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய தகுதி வாய்ந்த ஒரு இடத்தில் மன்ற மீட்டிங் போட்டு, பயணம், தங்குதல் மற்றும் உபகரண வசதி செஞ்சா நல்லா இருக்குமில்ல.. :D :D :D :D

சூரிய கிரகணத்தின் போது பலர் வீட்டுக்குள் அடைந்து கிடக்க, சூரியனின் கரோனாப் பகுதியை ஆராய இதுவே தகுந்த சமயமாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

அப்புறம் சூரிய கிரகணத்தின் போது ரேடியேஷன் அதிகமா இருக்கும் என்று சிலர் சொல்வார்கள். அது தவறு.. அப்பொழுது ரேடியேஷன் குறைவாகத்தான் இருக்கும்.

சூரிய கிரகணத்தின் போது முழுக்கிரகணம் விலகும் பொழுது வெளிச்ச வேற்பாடு மிக அதிகமாக இருப்பதால் கண்கள் பாழாகும் என்பதுதான் உண்மை.

நிலாவினால் மட்டுமல்ல, புதன் சுக்கிரன் போன்றவற்றாலும் சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால் சூரியனில் சிறிய பொட்டாகத் தெரிவதை விஞ்ஞானிகள் தவிர வேறு யாரும் ஆர்வம் செலுத்திப் பார்ப்பது இல்லை.


http://www.sas.org.au/noleen/2.Venus%20Transit.jpg

http://www.nasa.gov/images/content/162676main_mercury_transit_516.jpg

2012 ஆம் வருசம் ஜூன் ஆறாம் தேதி அடுத்த வெள்ளிச் சூரிய கிரகணமும், 2016 ஆம் ஆண்டு மே 09 ஆம் தேதி அடுத்த புதன் சூரிய கிரகணமும் ஏற்படும்.


இதையும் கொஞ்சம் பாருங்க

http://www.nasaimages.org/luna/servlet/detail/NVA2~4~4~6186~106712:Mercury-s-Transit--An-Unusual-Spot-

சூரிய கிரகணத்தின் போது நட்சத்திரங்கள் கூட தெரியும்.

இன்பாவின் வேண்டுகோளுக்கினங்க பெங்களூர் மேகங்களை விரட்டி வைத்திருக்கிறேன். இன்று இரவு இன்பா வியாழக் கிரகத்தை 10:00 மணி அளவில் கிழக்கு வானில் கண்டு ரசித்து, முடிந்தால் ஜூம் செய்து படம் எடுத்து போடுவார் என எதிர்பார்க்கிறேன்..

நட்சத்திரங்களைக் கவனிக்க மின்சார விளக்குகள் அதிகம் இல்லாத அமைதியான மலைஉச்சிகள்தான் வசதி... கிருஷ்ணகிரி பகுதியில் ஒரு மலையை வாங்கி அங்க ஒரு ரிசார்ட் கட்டி வைங்க சிவாஜி... !!!!

(அங்கதானே கரண்ட் இருப்பதே இல்லை என புலம்பறார் சிவாஜி :D :D :D)

இன்பா
24-07-2009, 07:06 AM
நேற்று இருக்குறதிலேயே பெரிய நட்சத்திரம் போல தெரிந்த ஒரு நட்சத்திரத்தை ஜூம் செய்தேன்... அது கிழக்குப் பக்கமாகத் தான் இருந்தது...

என்னுடைய லென்ஸ் 60 X ஆனால் டிஜிட்டல் ஜூம் 2000 X என்ன ஜூம் செய்தாலும் சரிவர தெரியவில்லை...

பேசாமல் டெலஸ்கோப் வாங்கிவிடுவோமா என்று பார்க்கிறேன். :D

தாமரை
24-07-2009, 08:23 AM
சாதாரண காமிராவில் ஒளி தேவை.. எஸ்.எல்.ஆர் முறைப்படி அமைந்து ஃபோகஸை மாற்ற முடியும் எனில் முயன்று பார்க்கலாம்.

தொலநோக்கிகளின் மூலம் நேரடியாக கண்ணால் பார்த்தால் மட்டுமே எளிதாக காணமுடியும். படமெடுக்க அதை ஒரு திரையில் விழ வைத்து படமெடுக்க வேண்டும்.

நீங்கள் கிழக்குப் பக்கம் பார்த்திருந்தால் அது வியாழன் தான். அதைப் பார்த்துட்டு வந்துதான் அந்தப் பதிவையே போட்டேன்.

ஸ்டெல்லேரியம் மென்பொருள் சுட்டியைத் முதல் பதிவில் தந்திருக்கிறேன். அதில் பெங்களூரை உங்கள் இருப்பிடமாக தெரிவு செய்து பார்த்தால் அந்த நேரத்து வானத்தில் என்ன என்ன நட்சத்திரங்கள் கிரகங்கள் எங்கே இருக்கின்றன எனத் தெரியும். அதைக் கொண்டு மொட்டை மாடியில் மல்லாக்க படுத்துக் கொண்டு வானத்தை அளக்கலாம்.

அப்புறம் நான் டெல்லியில இருந்தப்ப வால் நட்சத்திரம் பார்த்தேன்..

தாமரை
27-07-2009, 10:08 AM
கீழே உள்ள படம் காலை ஆறுமணிக்கு இன்றைய சூழ்நிலையில் பூமி, சூரியன், வியாழன் ஆகியவற்றின் நிலையை இராசி மண்டலத்தில் காட்டுவதாகும்.

இராசி மண்டலம் கிழக்கிலிருந்து மேற்கு செல்கிறது. பிறகு நம் கண்ணுக்கு தெரியாத பூமியின் மறுபக்கம் இருக்கிறது.

http://i326.photobucket.com/albums/k413/stselvan/morning-1.jpg

பூமி சூரியனைச் சுற்றும் போது ஆவணி மாதம் சூரியன் சிம்ம ராசியில் தெரியும்.
வியாழன் இப்பொழுது மகரத்தில் உள்ளது. எனவேதான் இரவு வியாழன் கிழக்கு வானில் தெரிய ஆரம்பிக்கிறது.

இந்த அடிப்படையை உங்கள் மனக்கண்களால் பார்க்க முடிந்தால் மட்டுமே நான் எழுதும் வானத்தை பார் என்பது புரியும். புரியறவங்க கையைத் தூக்குங்க...

தாமரை
27-07-2009, 01:32 PM
இன்று இரவு வானம்... காட்சி நேரம் இரவு பத்துமணி... இடம் பெங்களூர்..

(இந்தியாவின் மற்ற இடங்களிலும் ஏறத்தாழ இதையே காணலாம்..

http://i326.photobucket.com/albums/k413/stselvan/tonigh-10pm.jpg

மேற்கில் நிலவு மறைந்து கொண்டிருக்கும். நிலவு அருகில் கன்னி ராசிக்கான நட்சத்திரங்கலைக் காணலாம்..

உட்சி வானில் பிரகாசமான வேகா நட்சத்திரத்தை கவனியுங்கள்.. காந்தப் புல மாறுபாடு ஏற்பட்டு துருவங்கள் இடம் மாறி வரும் காலத்தில் இந்த வேகாதான் நமது அடுத்த துருவநட்சத்திரம் எனக் கணிக்கிறார்கள்.


வியாழன் கிழக்கு வானத்திலே பிரகாசமாகத் தெரியும்.

வடக்குப் பகுதியில் எல்லா ரேகைகளும் கூடுமிடத்தில் ஒரு நட்சத்திரம் இருக்கிறதல்லவா அதுதான் துருவ நட்சத்திரம்.

ஆனால் நமது பெங்களூரு மின் ஒளிச்சிதறலின் கைங்கர்யத்தில் நாம் பார்க்கும் வானம் இப்படி இருக்கும்...



http://i326.photobucket.com/albums/k413/stselvan/tonigh-10pmreal.jpg

தாமரை
28-07-2009, 02:25 AM
இது வரை விண்வெளிக்குச் செல்ல இராக்கெட்டுகளை மட்டுமே நம்பி இருந்தோம் அல்லவா? இது மிகவும் செல்வாகும் ஒன்று.. அது மட்டுமல்லாமல் ஸ்டார்ட் பண்ணினா பாதியில் திரும்ப முடியாது இல்லையா?

ஆனால் விண்வெளிக்கு உல்லாசப் பயணம் போனால் இது போன்ற கண்டிஷன்கள் ஒத்து வராதே.. அதனால் புவி அருகு விண்வெளிக்கு உல்லாசப் பயணம் சென்று வர வேறு செலவு குறைந்த வழி வேண்டும் என பலர் ஆராய்ந்து வந்தார்கள்.

அதில் ஒரு முறை, விண்வெளி ஓடத்தை சூப்பர் சானிக் விமானத்தின் மூலம் சுமந்து கொண்டு காற்றுவெளியின் விளிம்பிற்குக் கொண்டு செல்வது.. பறந்து கொண்டிருக்கும் போதே விண்வெளி ஓடம் விடுபட்டு ஒரு அதிகப் பட்ச உந்து விசை (த்ரஸ்ட்) மூலம் விண்வெளியில் தப்புந்து விசை வேகத்தில் சீறிப்பாயும் வகை.

http://news.yahoo.com/s/ap/20090727/ap_on_re_us/us_space_plane

இரட்டை விமானமாகக் கட்டப்ப்பட்ட இந்த வாகனத்திற்கு வெண்குதிரை வீரன் என பெயரிட்டுள்ளனர்.

http://d.yimg.com/a/p/ap/20090727/capt.19424e9de01e4107ac52ed880b078271.space_plane_wimr104.jpg

இப்பொழுதே 2 இலட்ச அமெரிக்க டாலர்கள் விலை நிர்ணயிக்கப் பட்ட 300 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

முந்திக் கொள்பவர் யாரோ?

மன்றம் ஸ்பான்சர் பண்ணினா போயிட்டு வந்து இன்னும் ஆயிரக்கணக்கில எழுதலாம்னு இருக்கேன்.. என்ன சொல்றீங்க?:icon_rollout::icon_rollout::icon_rollout:

தாமரை
28-07-2009, 02:29 AM
ஒருவாரத்திற்கு முன்பு வியாழன் மீது எதுவோ இடித்த செய்தியைக் கொடுத்திருந்தேன். ஹப்புள் விண்ணோக்கி அதை தற்பொழுது புகைப்படம் எடுத்து வெளியிட்டு உள்ளது.

செய்தி இங்கே :

http://www.nasa.gov/mission_pages/hubble/main/jupiter-hubble.html

இது படம்.:

http://www.nasa.gov/images/content/372829main_p0923ay.jpg

தாமரை
28-07-2009, 02:39 AM
இந்தப் படத்தைப் பாருங்க.. இது என்னன்னு யோசிச்சுச் சொல்லுங்க. கொஞ்ச நாள் கழிச்சு என்னன்னு நான் சொல்றேன்


http://www.nasa.gov/mpg/262351main_reconnect.mpg

http://www.nasa.gov/mpg/259563main_THEMISASInights_512x288.mpg



http://www.nasa.gov/images/content/262648main_substormimg_HI.jpg

இன்பா
28-07-2009, 05:06 AM
கத்தப்புல மாற்றம் அடைவதைத்தானே சொல்லவருகிறீர்கள்... ???

தாமரை
28-07-2009, 05:49 AM
சந்திர கிரகணம்:

சந்திர கிரகணம் சூரிய கிரகணத்தைப் போல ஆர்வத்தைத் தூண்டுவதும் இல்லை, அதே போல பார்க்க ஆயத்தங்களும் தேவை இல்லை. சந்திரன் பூமிக்குப் பின்னால் வரும் பொழுது சூரிய ஒளியை பூமி மறைப்பதால் உண்டாவதாகும். சந்திரன் பௌர்ணமி அன்று சூரியனுக்கு எதிர் திசையில் வருகிறது. அதில் சில மாதங்களில் சந்திரன் சுற்றி வரும் அச்சும், பூமி சூரியனைச் சுற்றி வரும் அச்சும் ஒரே நேர்கோட்டில் அமையும் பொழுது சந்திர கிரகணம் ஏற்படும். இது எப்படி ஏற்படுகிறது என்பதை விளக்கும் படம் கீழே

http://www.mreclipse.com/Special/image/LEDiagram1c.JPG


சந்திரன் இருக்கும் நிலையைப் பொறுத்து இப்படிப்பட்ட ஒளிக்காட்சிகள் வானில் தோன்றலாம்.

http://www.mreclipse.com/LEphoto/TLE2000Jan/image/TLE2000umbra2w.JPG


சந்திர கிரகணங்கள் மூன்று வகைப்படும்.

பெனும்ப்லா சந்திரகிரகணம்.

சூரியன் பூமியை விட பலமடங்கு பெரியதாக இருப்பதால் முப்பரிமாண விளைவால் முதல் படம் போல அடர்நிழல் பகுதி (அம்ப்ரா) குறைஒளிப் பகுதி (பெனும்ப்ரா) போன்றவை ஏற்படுகின்றன. இந்த குறை ஒளிப்பகுதியில் சந்திரன் இருக்கும் பொழுது பெனும்ப்லா சந்திரகிரகணம் தெரிகிறது. இது ஏற்படும் பொழுது சந்திரனின் ஒளி சற்றே மங்குகிறது.. இதை வெறும் கண்ணால் பிரித்தறிவது கடினம்தான். மலைஉச்சிப் பகுதிகளில் ஒளிச்சிதறலும், காற்றின் ஈரப்பதமும் குறைந்து இருக்கும் நிலையில் இதை பிரித்தரிய இயலும்.

http://www.mreclipse.com/LEphoto/NLE2002/image/NLE2002-3w.JPG

பகுதி சந்திர கிரகணம்:


இதில் சந்திரனின் ஒருபகுதி அடர்நிழல் பகுதியிலும், இன்னொரு பகுதி குறை ஒளிப்பகுதியிலும் இருப்பதால் உண்டாவதாகும். இதில் சந்திரனின் ஒருபகுதி இருண்டு மீண்டும் ஒளிபெறுவதைக் காணலாம்.

http://www.mreclipse.com/LEphoto/TLE2000Jan/image/TLE2000-10w.JPG

பூரண சந்திர கிரகணம்:

நீங்கள் எதிர்பார்ப்பதைப் போல இதில் சந்திரன் காணாமல் போகாது. சந்திரன் செந்நிறமாக காட்சியளிக்கும்.

காரணம் சூரியனின் மறைமுகமான ஒளிக்கதிர்கள் சந்திரனை அடைவதே ஆகும். அதாவது பூமியின் வளிமண்டலம் சிதறடிக்கும் சிவப்பு ஒளி அலைகள் மூலம் சந்திரன் வெளிச்சம் பெறுவதால் சந்திரன் செந்நிறமாக காட்சியளிக்கும்.

சந்திர மண்டலத்தில் இருந்து பூமியில் சூரிய கிரகணம் ஏற்படும் பொழுது அந்த நிழல் கருமையாக தெரிவதற்குக் காரணம் சந்திரனில் வளிமண்டலம் குறிப்பிடத்தக்க அளவிற்கு இல்லை என்பதே காரணமாகும்.


http://www.mreclipse.com/LEphoto/TLE2004Oct/image/TLE2004-139w.JPG

பூரண சந்திர கிரகண நிலைகள்:

http://www.mreclipse.com/LEphoto/TLE2004Oct/image/TLE2004-Triple1x.JPG


இந்தச் செந்நிற நிலாவை சிவா.ஜி பார்த்தால் "இரத்த நிலா" என்று மர்மக் கதை எழுதுவார்.

அதையே ஆதி பார்த்தால் "நிலவின் நாணம்" எனக் காதல்கவிதை எழுதுவார்.

இதையே ஒரு கம்யூனிஷ்ட் பார்த்தால்.. நிலவில் பொதுவுடமை என எழுதலாம்.

இதையே ஒரு பின் நவீனத்துவ கவிஞன் பார்த்தால்.. ????

சிவா.ஜி
28-07-2009, 07:26 AM
ஆஹா...வானத்துல இம்புட்டு இருக்கா...? நல்லாவே விளக்கம் குடுக்குறாரு எங்க தாமரை வாத்தியார்.

நீங்க சொன்னதும் நானும் நினைச்சேன் சையது பாஷா மலையில ஒரு ரிசார்ட் கட்டிடலான்னு...அதுக்குப் பின்னால நீங்க சொன்ன மாதிரி...ரிசார்ட் கட்டிட்டு எப்பவும் இருட்டுலயா உக்காந்துகிட்டு இருக்க முடியும்ன்னு நினைச்சு இப்போதைக்கு அந்த ஐடியாவை தள்ளி வெச்சுட்டேன்.

மன்றம் ஸ்பான்சர் பண்ணி தாமரை நிலாவுக்குப் போய்ட்டு வந்துட்டார்னா....ஆற்காட்டாரை நம்பாம நாமளே மின்னல்லருந்து மின்சாரம் தயாரிச்சுக்கலாம்ன்னு நல்ல வார்த்தை சொன்னாருன்னா....யோசிக்கலாம்...

அருமையான விளக்கங்கள், அழகான படங்கள்ன்னு இந்தத்திரி சூப்பரா இருக்கு.

சிவா.ஜி
28-07-2009, 07:33 AM
வீடியோ பார்த்தேன்..முதல் படத்துல காந்தப்புல மாற்றம் மாதிரி என்னவோ நிகழுது....அடுத்ததுல...அமெரிக்கா மேல ஏதோ கிரகத்தோட நிழல் மாதிரி ஒண்ணு தற்காலிகமா விழுந்து மறையுது. என்னன்னு தெரியல.

தாமரை
28-07-2009, 09:27 AM
அது சூரியனில் இருந்து வெளிப்படும் மின் காந்தப் புயல் எப்படி பூமியின் வடதுருவப் பகுதியில் ஒளி நடன னிகழ்ச்சியை அரங்கேற்றுகிறது என்பதன் விளக்கம் ஆகும்.,..

நார்த்தர்ன் லைட்ஸ் எனப்படும் இந்த ஒளிநடனம் காண துருவப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.

சிவா.ஜி
28-07-2009, 10:18 AM
ஓ...அது நிஜமாகவே பார்க்க முடிகின்ற காட்சிதானா? இயற்கையின் இந்த ஆட்டமும் அழகாகத்தானிருக்கிறது.

தாமரை
28-07-2009, 10:18 AM
நிலவின் மீது நாம் நடக்க முடியாதுதான், ஆனால் நிலாவின் மேப்பை பார்க்கலாம்,
இங்கே

http://www.google.com/moon/

சில வருடங்களுக்கு முன்பு நிலவில் இடத்தை விற்கிறோம் என்று சிலர் கிளம்பினார்கள்.

இன்னும் விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏக்கர் 30 டாலராம்..

http://www.lunarlandowner.com/

இன்னும் பல பேர் இப்படிக் கிளம்பி இருக்கிறார்கள்..

http://www.google.co.in/search?hl=en&q=Buy+moon+land&btnG=Search&meta=&aq=f&oq=

அதே போல் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களுக்கு உங்கள் பெயரை வையுங்கள் எனக் கூவிக் கூவி விற்கிறார்கள் சிலர்..

http://www.google.co.in/search?hl=en&q=star+named+after+you&meta=&aq=7&oq=+Star+Name


இவர்கள் வருமான வரி கட்டுகிறார்களா? எந்த நாட்டில் இவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். இவர்கள் மீது எந்த அரசாங்கமும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?


இப்படி எக்கச்சக்க வியாபார வாய்ப்புகள் வானில் கொட்டிக் கிடக்கின்றன,, வாங்க செவ்வாய் கிரகத்தை பிளாட் போட ஆரம்பிக்கலாம்.

தாமரை
28-07-2009, 10:21 AM
ஓ...அது நிஜமாகவே பார்க்க முடிகின்ற காட்சிதானா? இயற்கையின் இந்த ஆட்டமும் அழகாகத்தானிருக்கிறது.


http://images.google.co.in/images?hl=en&um=1&sa=1&q=northern+lights&aq=0&oq=North

இதை வெறும் கண்களாலேயே காணலாம். இந்த வருடம் மின்காந்தப் புயல் குறைவாகவே இருக்கிறது... இன்னும் ஓரிரு வருடங்களில் அதிகரிக்கக் கூடும். கனடாவில் வாழும் முகிலன் போன்றவர்கள் இதை பார்த்திருக்கலாம். :)

தாமரை
28-07-2009, 10:27 AM
இந்தியாவில் முழுச் சந்திர கிரகணம் தெரியும் நாள்

2011 ஜூன் 15..

http://eclipse.gsfc.nasa.gov/LEplot/LEplot2001/LE2011Jun15T.pdf

இரத்த நிலவைக் காண வெறியோடு காத்திருக்கும் காட்டேரி..

தாமரை
28-07-2009, 12:21 PM
அடுத்து வரிசையில் வானில் மிகப் பிரகாசமாகத் தெரியக் கூடியது

காதல் தேவதை, அதிர்ஷ்டகாரகன், அசுர குரு, திருமணத்தின் அதிபதி.. இப்படி பலவாறு வர்ணிக்கப்படும் சுக்கிரன்..

சுக்கிரன் சூரியனில் இருந்து 10.8 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றி வரும் கோளாகும். இது சூரியனிலிருந்து இரண்டாவதாக இருக்கிறது, அதே சமயம் பூமியை விட குறைந்த தொலைவில் இருப்பதால் சூரியனுக்கு மிக அருகிலேயே தெரியும், இன்று கூட சூரிய மறைந்த உடன் வானில் மேற்கு திசையில் பிரகாசமாகத் தெரியும்.

வெள்ளிக் கிரகம் ஏறத்தாழ பூமியின் அளவே உள்ளது. ஆனால் திருமணத்தில் உள்ள கொதிப்புகள், வெப்பங்கள், எரிமலைகள் போல இதன் மேற்பரப்பும் பலத்த கொந்தளிப்புகளுக்கு ஆளானது.. சூரியனுக்கு அருகில் இருப்பதால் என்கிறீர்களா? ஹோல்டன் ஹோல்டன்.. பொறுங்க..

புதனை விட சுக்கிரனில் வெப்பம் அதிகம். சுக்கிரனின் வெப்பநிலை 462 டிகிரி செல்சியஸ் ஆகும். ஏறத்தாழ இதே வெப்ப நிலை எப்பொழுதும் நிலவுகிறது..

சுக்கிரன் சூரியனை மற்ற கிரகங்களைப் போலவே எதிர் கடிகாரச் சுற்று முறையில் சுற்றி வருகிறது. இது சூரியனை ஒரு சுற்று சுற்றி வர 224.7 நாட்கள்.

இப்பதான் உங்களுக்கு அதிர்ச்சி தரப் போறேன்,,,

சுக்கிரன் தன்னைத் தானே சுற்றுவது கடிகாரச் சுற்றின் படி. அதாவது பூமி உட்பட்ட எல்லா கிரகங்களும் சூரியனைச் சுற்றுவதும் தன்னைத் தானே சுற்றுவதும் ஒரே திசையில்தான் (எதிர் கடிகாரச் சுற்று).

சுக்கிரன் மட்டும் இவ்வாறு சுற்றக்காரணம் விண்கல் ஒன்று இடித்திருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இன்னும் எனக்கு அது சரியாகத் தோன்றவில்லை... (காரணம், விண்கற்கள் கூட சூரியன் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் திசையில் தான் நகர்கின்றன, எனவே எதிர் திசையில் ஒரு விண்கல் இடித்திருக்கும் என்பதை நம்ப இயலவில்லை.

(வேறொரு தியரி வச்சிருக்கேன் மக்கா.. இது என்னோட ஆராய்ட்சி)

சரி சுக்கிரன் தன்னைத் தானே சுற்றிக் கொள்ள எவ்வளவு காலம் ஆகுதுன்னு பார்ப்போமா? 243 நாட்கள்.

அதாவது சுக்கிரனில் ஒரு வருடத்தை விட ஒரு நாள் பெரியது.

என்ன அதுக்குள்ள தலையில கையை வச்சுகிட்டீங்க.. இன்னும் இருக்கே..

சுக்கிரனில் சூரியன் மேற்கு புறமாய் உதிக்கும். 58.4 நாட்களில் கிழக்கில் சூரியன் அஸ்தமனமாகும். இரவின் நீளம் 58.4 நாட்களாகும். ஆக கூட்டினால் 116.8 நாட்கள்தான் அதனால் ஒரு முறை சூரியனைச் சுற்றி வருவதற்குள் இரண்டு நாட்கள் போலத் தெரியும்.

இதனால் சுக்கிரனைப் பொறுத்தவரை அனைத்து நட்சத்திர மண்டலங்களையும் இரண்டே நாட்களில் பார்க்கலாம்,

இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் சந்திரனைப் போலவே சுக்கிரனும் பூமிக்கு ஒரு முகத்தை மட்டுமே காட்டுகிறது. அதாவது பூமியின் ஈர்ப்பு விசை சுக்கிரனை வெகுவாக பாதிக்கிறது. அதனால் நிலாவைப் போலவே சுக்கிரன் சுழல்வதும் பூமிக்கு ஒத்திசைவில் இருக்கிறது.

அதாவது சுக்கிரனின் சுயசுழற்சி பூமியினால் பாதிக்கப்படுகிறது.... ஆனால் சுக்கிரன் சூரியனின் பிடியில் இருந்து தப்பிக்க இயலவில்லை, இதனால் கணவனுடன் போகும் பொழுது காதலனை ஓரக்கண்ணால் பார்ப்பதைப் போல பூமிக்கு ஒத்திசைவில் சுழல்கிறது,

சுக்கிரனுக்கும் வளர்பிறை தேய்பிறை உண்டு,, அதை விண்ணோக்கியில் மட்டுமே காணமுடியும்.

சுக்கிரன் ஏறத்தாழ கோளவடிவம் கொண்டது.. அதன் அச்சும் ஏறத்தாழ செங்குத்தாக உள்ளது, அதனால் அங்கு பருவகாலங்கள் இல்லை..

அது சுற்றும் பாதையும் ஏறத்தாழ வட்டமாக உள்ளது...



படமும் மற்ற விவரங்களும்.... தொடரும்

தாமரை
28-07-2009, 03:44 PM
http://www.fourmilab.ch/cgi-bin/Solar

சூரியனைச் சுற்றும் கிரகங்கள் எங்கெங்கே இருக்கின்றன என்பதைக் காட்டும் இணையதளம் அது.

சுக்கிரனும் நமது சந்திரனைப் போலவே பிறை வடிவங்களைக் காட்டும்.

http://www.solarviews.com/raw/venus/venusvis.gif

ஆனா இன்னொரு கூத்தைக் கேளுங்க.. எப்ப சுக்கிரன் முழுவட்டமா தெரியுதோ அப்போ ஒளி மங்கி இருக்கும். எப்போ பிறைவடிவில் தெரியுதோ அப்பதான் அதிகப் பிரகாசத்தோட தெரியும். காரணம் அது முழு வட்டமா தெரியும் பொழுது சூரியனுக்கு அந்தப்பக்கம் இருக்குமில்லையா, சூரியனோட ஒளி, மற்றும் தூரம் காரணமாக ஒளி மங்கிக் காணப்படுகிறது..

http://antwrp.gsfc.nasa.gov/apod/image/9705/venus_pvo_big.jpg

சுக்கிரனின் வளர்பிறை தேய்பிறை ஒரு முழுச்சுற்று வர 1.6 ஆண்டுகள் ஆகும்.


அதே மாதிரி சுக்கிரன் சூரியன் முகத்தை கடக்கும் பொழுது சூரியனுக்கு திருஷ்டிப் பொட்டு வைக்கும். இது ஒரு நூற்றாண்டில் இருமுறை இது போலத் தெரியும். அதுவும் அருகருகில்...



போனமுறை சூரியனைக் கடந்தது 2004 ல். அடுத்து 2012 -ல். . அதற்கடுத்து அதைக் காண 2117 வரைக் காத்திருக்க வேண்டும்.. அதனால் தவறாமல் பார்த்துடுங்க.

http://www.sas.org.au/noleen/2.Venus%20Transit.jpg

இன்பா
28-07-2009, 04:00 PM
போனமுறை சூரியனைக் கடந்தது 2004 ல். அடுத்து 2012 -ல். . [B]அதற்கடுத்து அதைக் காண 2117 வரைக் காத்திருக்க வேண்டும்.. அதனால் தவறாமல் பார்த்துடுங்க.


2004 டிசம்பர் சுக்கிரகிரகணம் சுனாமி வந்தது,
2012 டிசம்பர் சுக்கிர கிரகணம்...??

கொஞ்சம் நாளாய் இப்படியே யோசிக்கும்
இன்பா

தாமரை
28-07-2009, 04:09 PM
போன சுக்கிரனால் ஏற்பட்ட சூரிய கிரகணம் ஜூன் 8 2004. சுனாமி வந்தது டிசம்பர் 26 2004.

அடுத்த சுக்கிரனால் ஏற்படும் சூரிய கிரகணம் ஜூன் 6, 2012.. அப்போ டிசம்பர் 21 2012????

இப்படி யோசிக்கணும் இன்பா!!!

இப்ப சிவா.ஜி யும் கவலைப் பட ஆரம்பிச்சிடுவார் பாருங்க. :D :D :D

lenram80
28-07-2009, 06:14 PM
மிகச் சிறந்த எனக்கு மிகவும் ஈடுபாடு உள்ள ஆர்வப் படுத்தும் உற்சாகக் கட்டுரை தொகுப்பு. தொடருங்கள் தாமரை.

நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மில்கி வே கெலக்ஸி (பால் வெளித் திரல்), ஆல்பா சென்டொரா, சிரியஸ், டைடன், ஆன்ரோமடா, அப்பலோ, பிக் பாங், ரிலெடிவிடி தியரி ( சார்பியல் தத்துவம்), பிரிஃப் கிஸ்டரி ஆஃப் டைம் என்று எல்லாவற்றையும் படித்துப் பார்த்துக் (குளம்பி) இருக்கிறேன்.

தாமரை
29-07-2009, 02:17 AM
இதில எதையும் படிக்கலை.. அதான் தெளிவா இருக்கேனோ???

தாமரை
29-07-2009, 03:05 AM
2004 - ல் எடுக்கப்பட்ட சுக்கிரன் படங்கள்

http://upload.wikimedia.org/wikipedia/commons/1/11/Phases_Venus.jpg

சுக்கிரன் - பூமிக்கு இடையிலான தொலைவுதான் கோள்களுக்கு இடையேயான தொலைவுகளில் மிகச் சிறியதாகும், சுக்கிரன் வட்டப் பாதையில் சுற்றுகிறது என்று ஏற்கனவே பார்த்தோம். கோள்களின் இயக்க விதிகளின் படி ஏன் நீள் வட்டமாக இல்லை என யோசிக்க வேண்டும். அதற்கும் அதன் சுழற்சி திசை மாறுபாடாக இருப்பதற்கும் சம்பந்தம் இருக்கிறது.. சந்திரன் பூமி உடைந்து தோன்றியது என்பதற்கும் இதற்கும் எதாவது சம்பந்தம் இருக்கலாம்.

சுக்கிரன் மீது எதுவோ மோதியதில் உண்டான சந்திரன், சுக்கிரனின் சுழற்சி அந்த மோதலில் குறைந்து விட்டதால் மறுபடி சுக்கிரனிலேயே விழுந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதனால் சுக்கிரன் பூமிக்கு அருகில் வந்து பூமியின் ஈர்ப்பு விசையினால் பூமியுடன் ஒத்திசைவு கொண்டு இருக்கலாம்.

http://i326.photobucket.com/albums/k413/stselvan/innerplanets.jpg


இதுவரை சுக்கிரனுக்கு வெளியில் இருந்து பார்த்த நாம் இப்போது சுக்கிரனில் இறங்கிப் பார்ப்போம். வெளியே இத்தனைக் கூல் தகவல்களை கொண்டிருக்கும் சுக்கிரன் நிஜத்தில் ஹாட் ஹாட் ஹாட் தான்..

சுக்கிரனின் வளிமண்டலத்தில் 90 சதவிகிதத்திற்கும் மேல் கார்பன் டை ஆக்சைடு தான். அப்புறம் நைட்ரஜன் 3.5 சதவிகிதம் தான்.

சுக்கிரனில் பல எரிமலைகள் உண்டு. சுக்கிரனில் நீர் நிழல் பகுதிகளில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல்கள் இல்லாவிட்டாலும் பள்ளம், மற்றும் பீடபூமிப் பகுதிகள் உண்டு. இந்த பீடபூமிப் பகுதிகளை கண்டங்கள் என்று கொண்டால்.. சுக்கிரனில் இரண்டு கண்டங்கள் உண்டு.

கீழே உள்ள படத்தில் உள்ள மஞ்சள் பகுதிகள் உயர்ந்த பகுதிகள் ஆகும்.

http://upload.wikimedia.org/wikipedia/commons/8/8d/Map_of_Venus.jpg

சுக்கிரனின் உட்பகுதியும் கரு, மேண்டில் மற்றும் மேலோடு போன்றவை கொண்டுள்ளது. ஆனால் கார்பன் டை ஆக்சைடு வெப்பத்தை வெளிவிடாமல் தடுப்பதால் பூமியைப் போன்று டெக்டானிக் பிளேட்டுகள் அமையவில்லை எனக் கருதப் படுகிறது.

சுக்கிரன் மிக மெதுவாகச் சுழல்வதால் காந்தப் புலம் உண்டாவது கிடையாது.

சுக்கிரனில் 100 கிலோமீட்டர் பரப்பளவிற்கு மேலான இராட்சச எரிமலைகள் 167 இருக்கின்றன எனக் கணக்கிட்டு இருக்கிறார்கள்..

சுக்கிரனில் இறங்கிய இரஷ்ய விண்கலத்தின் மூலம் எடுக்கப்பட்ட படம் கீழே..

http://upload.wikimedia.org/wikipedia/commons/1/1a/Venus-venera13-right.jpg

எனக்கென்னவோ செவ்வாயை விட சுக்கிரன் பதுகாப்பா இருக்கும்னு தோணுது..

1. சுக்கிரனோட சுழற்சி வேகத்தை அதிகரிக்கணும்.. (சுக்கிரனின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் மோதி வேகத்தை அதிகரிக்கலாம்.. :D :D.. இதனால் 54 நாட்கள் நீடிக்கும் பகல் இரவு அளவு சுருங்கும்..

2. சுழற்சி வேகம் அதிகரித்தால் காந்தப் புலம் உண்டாகும். இதனால் கதிரியக்க பாதிப்பு குறையும்.

3. கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜன் - கார்பன் என பிரிக்க தேவையான வேடி வினையைத் தூண்ட வேண்டும்..நாலைஞ்சு வால் நட்சத்திரங்களை சுக்கிரன் மேல் விழவைத்தால் கடல் தோன்றி விடும். ஷூ மேக்கர் - லெவியை தள்ளி விட்டுருவோம்.

இதை மட்டும் செஞ்சோம்னா சுக்கிரனை பிளாட் போட்டு வித்துட்டு ஆயுசு பூரா ஜாலியா இருக்கலாம். என்ன சொல்றீங்க?

இன்பா
29-07-2009, 03:34 AM
நாலைஞ்சு வால் நட்சத்திரங்களை சுக்கிரன் மேல் விழவைத்தால் கடல் தோன்றி விடும். ஷூ மேக்கர் - லெவியை தள்ளி விட்டுருவோம்.

நம்ம சூப்பர் ஸ்டாரை அனுப்பிவைத்தால் சும்மா ஷூ மேக்கர் லெவியை எட்டு உதைச்சு மோதவிடமாட்டாரு? :)

தாமரை
29-07-2009, 06:41 AM
சூப்பர் ஸ்டார் செருப்பு தைப்பவனை உதைக்க மாட்டார் இன்பா.. அதுக்கு ஆண்டி ஹீரோ யாராச்சும் கிடைச்சா பாருங்க..

:D :D :D

இன்பா
29-07-2009, 09:45 AM
சூப்பர் ஸ்டார் செருப்பு தைப்பவனை உதைக்க மாட்டார் இன்பா.. அதுக்கு ஆண்டி ஹீரோ யாராச்சும் கிடைச்சா பாருங்க..

:D :D :D

ஆண்டி ஹீரோவா ? அது யாரு ? :D

தாமரை
29-07-2009, 09:57 AM
இவ்வளவு பெருமை படைத்த சுக்கிரனை எப்போ எப்படிப் பார்க்கலாம்?

அதுக்கு விடியற்காலை எழுந்திருக்கணும்., சுக்கிரனை நாம் காலை அல்லது மாலை நேரத்தில் மட்டும் தான் பார்க்க முடியும், இப்போது சுக்கிரன் விடியற்காலையில் தெரியும் நட்சத்திரம், (விடிவெள்ளி)...

விடியற்காலை 4:30 மணிக்கு எழுது கிழக்கு வானைக் கவனித்தால் சுக்கிரனைக் கண்ணாரக் காணலாம் கொஞ்சமா வடக்குப் பக்கம் ஜ்கா வாங்கி இருக்கும்,

நேர் கிழக்கில அந்த மூணு நட்சத்திரம் வரிசையாத் தெரியுதே அதுக்கு ஒரு கதை இருக்கு.. அதை அப்பால சொல்றேன்.

http://i326.photobucket.com/albums/k413/stselvan/venus.jpg

தாமரை
29-07-2009, 10:15 AM
சரி சரி இப்பவே சொல்லிடறேன்.. Regal, அதற்குக் கீழே உள்ள நட்சத்திரம் இரண்டும் வலது பக்க கால்கள்.. மூன்று நட்சத்திரங்கள் முதுகெலும்பு.. Betelgause அப்புறம் அதற்கு மேல் உள்ள நட்சத்திரம் மிச்சமுள்ள இரண்டு கால்கள்,,

இந்த அமைப்பை ஓரியன் (oriyan) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஆனால் தமிழில்... தமிழில்...

சந்திரமுகி படம் பார்த்தீங்க இல்லையா? அதில் வடிவேலுவின் நட்சத்திரம் என்ன?

ஆங்... பேய்களுக்கு ரொம்பப் பிடிச்ச நட்சத்திரம்னு சொல்வாங்களே...

அதாங்க மிருகசீரிஷம்...

அதாவது சுக்கிரன் இப்போ மிருக சீரிஷ நட்சத்திரத்தில் இருக்கு, பஞ்சாங்கம் எடுத்து வேணும்னா செக் பண்ணிக்கோங்க...

எப்படி பென்ஸிற்கு கேள்வி நட்சத்திரங்கள் (கார்த்திகை) நட்பு நட்சத்திரமோ அது மாதிரி எனக்கு இந்த மிருகசீரிசம் ஒரு மாதிரி தோழன். இதை வானத்தில் எளிதில் அடையாளம் கண்டு பிடிக்கலாம்..

தாமரை
29-07-2009, 11:36 AM
விண்ணோக்கிகள் ரொம்ப அதிக விலை ஒண்ணுமில்லை..

http://www.telescope.com/control/main/

10000 ரூபாயில் கூட கிடைக்குது...

இன்பா
29-07-2009, 11:43 AM
தொலைநோக்கி வெச்சிருக்கீங்களா...????

தாமரை
29-07-2009, 11:45 AM
பைனாகுலர்தானே.. அனிருத் வச்சிருக்கான்.. :)

puppy
29-07-2009, 11:47 AM
தொலைநோக்கி வாங்கினா மட்டும் போதாது?
என்ன பார்க்கணும் என்று தெரியனும்?
இதை பாருங்க முதலில் http://www.stellarium.org/

தாமரை
29-07-2009, 11:54 AM
சமீப காலத்தில் சில மன்ற உறுப்பினர்கள் வானவியலில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அத்தகைய வானவியல் தகவல்கள் பல திரிகளில் சிதறிக்கிடப்பதை விட ஒரே இடத்தில் இருந்தால் பயன் மிக அதிகமாக இருக்கும் என கருதுகிறேன்.

வானவியல் தகவல்களை, புதிரோ புதிர் போல ஒரே இடத்தில் பெற இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.

முதலில் ஸ்டார் கேஸிங்.. மென்பொருள் ஒண்ணு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

http://download.cnet.com/3001-2054_4-10072276.html?spi=307fda8034341e6e6cabeb2cc115f5b6

இதை நிறுவிக் கொள்ளலாம்.


முதல் பதிவே இந்த ஸ்டெல்லேரியம் மென்பொருளில் இருந்துதான் ஆரம்பித்திருக்கிறது பப்பி!!!

இன்பா
29-07-2009, 11:54 AM
பைனாகுலர்தானே.. அனிருத் வச்சிருக்கான்.. :)

இப்பவே ட்ரைனிங் கொடுக்குறீங்கப் போல.... :icon_b:

ஆனா அதுல நிலா கூட குத்து மதிப்பாதானே தெரியும்...

நல்ல 2000 X டெலஸ்கோப் வாங்கி கொடுக்கலாமில்ல....

தாமரை
29-07-2009, 12:01 PM
இப்பவே கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியலை..

அவன் சுக்கிரன், புதன், செவ்வாய், சனி, மிருகசீரிஷம், கார்த்திகை, துருவ நட்சத்திரம், வியாழன், வேகா இப்படி பல விஷயங்களை பார்த்தாச்சி..

முதல்ல எனக்கு ஒண்ணு வாங்கணும். :D :D :D

puppy
29-07-2009, 12:26 PM
சென்னையில் தேவதாஸ் telescoptics ஒரு கடை இருக்கு ரொம்ப வருடங்களுக்கு முன்பு இந்திய வந்த போது வாங்கினேன். அங்கே போய் வாங்குங்க

அப்புறம் அந்த இணையத்தை பற்றி சொன்னது இளசுக்காக.......அவரு மறந்து போய் இருப்பாரு...வயசு ஆகிடுச்சு இல்லையா

தாமரை
29-07-2009, 12:29 PM
இளசுவா? அவர் இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கலையே பப்பி!.. அறிஞரும் தான்,..

puppy
29-07-2009, 01:08 PM
இனிமேல் பார்ப்பாரு பாருங்க

இளசு எங்கே போனீங்க ?

இளசு
29-07-2009, 07:30 PM
வந்துட்டேன் பப்பி..

பணிப்பளு அழுத்தம் அதிகம்..
ஆர அமர வாசிக்க தோதில்லை பல நாளாய்...

முழுக்க வாசிக்க விரைவில் வருவேன் தாமரை..

அதுவரை பொறுத்தருள்க...

தாமரை
04-08-2009, 05:20 AM
நம்மளை மாதிரியே ஆஃபிஸில் வேலை செய்யற சில மேனேஜர்கள், எப்ப பார்த்தாலும் முதலாளி முன்னாலயே ஜால்ரா அடிக்கிற மாதிரி தெரியும். இவங்க முதலாளிகளை விட்டு விலகற மாதிரியே தெரியாது,,,

இவங்களை மாதிரி சூரியனுக்கு மிக நெருக்கமா அமைந்திருக்கும் புதன் இருக்கே, எப்பவும் வானத்தில் சூரியனோட மட்டுமே தெரியும். சில சமய்ம் காலையிலும், சில சமயம் மாலையிலும் அடிவானத்தில் தெரியும் புதன் கொஞ்சம் விசேசமான கிரகம்தான்.

http://upload.wikimedia.org/wikipedia/commons/5/53/Mercury_in_color_c1000_700_430.png

என்னடா இது பாக்க நிலா மாதிரி இருக்கேன்னு யோசிக்கத் தோணுது இல்லையா?

புதனின் சுற்றுப் பாதை ரொம்பவே நீள் வட்டமானது,, இதற்கும் சூரியனுக்கும் உள்ள குறுகிய தூரம் 4.6 கோடி கிலோ மீட்டர்கள்
இதற்கும் சூரியனுக்கும் உள்ள அதிகபட்ச தூரம் சுமார் 7 கோடி கிலோமீட்டர்கள்

இது கொஞ்சமே கொஞ்சூண்டு தான் தன்னோட அச்சிலிருந்து சாஞ்சிருக்கு.. சுக்கிரனை விட இது குறைவு. இது சூரியனை ஒரு தடவை சுற்றி வர 89 நாட்களாகுது.

ரொம்ப வருச காலமா புதன் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் காலமும் 89 நாட்கள் என்றும் நம்ம நிலாவை மாதிரி சூரியனுக்கு ஒரே முகத்தை மட்டுமே காட்டிகிட்டு இருக்கும் என்றும் நம்பிகிட்டு இருந்தாங்க,

ஆனா அது தப்பாம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் மூலம் புதன் இரண்டு முறை சூரியனைச் சுற்றுகிற நேரத்தில் தன்னைத்தானே இரண்டுமுறை சுத்திக்கிது அப்படின்னு சொல்றாங்க

இப்போ நீங்க புதன் மேல நின்னுகிட்டு இருக்கீங்கன்னு வச்சுக்குவோம்..

சில இடங்களில் சூரியன் கிழக்கில் தோன்றி பெரிசாயிட்டே மேற்கு நோக்கி போகும். திடீர்னு கொஞ்சம் நின்னு ரிவர்ஸ் கியர்ல போகும்.
மறுபடி நின்னு கியரை மாத்தி மேற்கு நோக்கி சின்னதாகி கிட்டே போய் மறையும்

நட்சத்திரமெல்லாம் ஏறக்குறைய மூணு மடங்கு வேகத்தில நகரும்.

இன்னும் வரும்

இன்பா
04-08-2009, 06:35 AM
நன்றி அண்ணா..!!!

அடுத்து மார்ஸா... ஆவலோட காத்துகிட்டிருக்கேன்... வாங்கோ...!!!

தாமரை
11-08-2009, 07:10 AM
சுக்கிரனும் நமது சந்திரனைப் போலவே பிறை வடிவங்களைக் காட்டும்.

சுக்கிரனின் வளர்பிறை தேய்பிறை ஒரு முழுச்சுற்று வர 1.6 ஆண்டுகள் ஆகும்.


அதே மாதிரி சுக்கிரன் சூரியன் முகத்தை கடக்கும் பொழுது சூரியனுக்கு திருஷ்டிப் பொட்டு வைக்கும். இது ஒரு நூற்றாண்டில் இருமுறை இது போலத் தெரியும். அதுவும் அருகருகில்...



போனமுறை சூரியனைக் கடந்தது 2004 ல். அடுத்து 2012 -ல். . அதற்கடுத்து அதைக் காண 2117 வரைக் காத்திருக்க வேண்டும்.. அதனால் தவறாமல் பார்த்துடுங்க.

http://www.space.com/common/media/video/player.php?videoRef=SP_090527_Exoplanet

இதைப்பாருங்க

தாமரை
12-08-2009, 02:12 AM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=426642&postcount=89

இந்தத் திரியில் சில விவ்ரங்கள் கொடுத்திருக்கேன்..

இந்த வாரம் இதே போல வானில் ஒரு தீபாவளி பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது...


http://news.yahoo.com/s/space/20090811/sc_space/strongmeteorshowerexpectedtonight



http://d.yimg.com/a/p/afp/20090811/capt.photo_1250015680282-1-0.jpg

http://d.yimg.com/a/p/ap/20090812/capt.f77020d7aba64a4b91351e05ae7db8a4.meteor_shower_la118.jpg

http://upload.wikimedia.org/wikipedia/en/7/7d/Sig06-011_medium.jpg

இதைப்பார்க்க நீங்க விடியற்காலம் எழுந்திருக்கணும். சுமார் மூணு மணிக்கு சந்திரன் உதித்த பின்னால் Preseus நட்சத்திர மண்டலம் உதிக்கும். சந்திரன் நாளுக்கு நாள் இடம் பெயரும் என்பதால், அடையாளத்துக்கு அந்த மூணு புள்ளி மிருகசீரிஸ நட்சத்திரத்தை எடுத்துக்குங்க,, அதுக்கு கொஞ்சம் வடக்கு கொஞ்சம் மேல Preseus நட்சத்திர மண்டலம் இருக்கும்.

சுமார் 5 மணிக்கு இது நல்லா கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு வானில் உயர்ந்து விடும். அப்போ இந்தத் தீபாவளியைக் காணலாம்.

விடியற்காலை வானில் எப்படி அடையாளம் காண்பது?

http://i326.photobucket.com/albums/k413/stselvan/shower.jpg

யார் யார் விடியற்காலையில் எழுந்து பாக்கப் போறீங்க..

பார்ப்பதற்கான சில உதவிக் குறிப்புகள்

http://www.space.com/spacewatch/meteor_forecast.html

தாமரை
18-08-2009, 12:41 PM
http://assets.nydailynews.com/img/2009/08/14/140x102-alg_planet.jpg


வழக்கமான ஒரு காட்சி...

இப்போ சூரியன் எதிர்கடிகார திசையில் தன்னைத் தானே சுத்திக்குது..

அதே மாதிரி பால்வீதியில் எதிர் கடிகாரச் சுற்றில்தான் சுற்றி வருகிறது..

சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் எதிர் கடிகாரச் சுற்றில்தான் சுற்றி வருது..

காரணம் சூரியனின் ஈர்ப்பு விசை..

1. ஒவ்வொரு கோளின் சுற்றுப் பாதையும் சூரியனைக் குவியத்தில் கொண்ட நீள் வட்டப் பாதையாகும்

2. சூரியனையும் கோளையும் ஒரு நேர் கோட்டினால் இணைத்தால் அந்தக் கோடு சம காலத்தில் சம அளவு பரப்பைக் கடக்கும்.. அதாவது சூரியனுக்கு அருகில் இருந்தால் வேகமாக பயணிக்கும். தூரமாக உள்ள பொழுது மெதுவாக பயணிக்கும். (நமக்கு கோடை காலத்தில் சூரியன் பூமிக்கு வெகு தொலைவில் இருக்குதுங்கோ)

3. சுற்றிவரும் காலத்தின் வர்க்கமும்(ஸ்கொயர்), அந்த நீள் வட்டத்தின் மிகப் பெரிய விட்டத்தின் பாதியின் கனமும் (கியூப்) நேர்மறையானதாகும்..

http://en.wikipedia.org/wiki/Kepler's_laws_of_planetary_motion

இதைப் படிச்சு மண்டையைக் குழப்பிக்குங்க...

ஆனா சொல்ல வந்த விஷயம் வேற...

ஆனா பாருங்க லேட்டஸ்டா ஒரு கிரகத்தைக் கண்டு பிடிச்சிருக்காங்க. அது 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால இருக்காம்.

அந்த கிரகத்துக்கு WASP-17 அப்படின்னு பேர் வச்சிருக்காங்க. அது நம்ம வியாழன் கிரகத்தை விட இரண்டு மடங்கு பெரிசா இருக்காம். ஆனா நம்ம பூமியை விட 70 மடங்கு இலேசானதாம்..

இதுக்குக் காரணம் இந்தக் கிரகம் புடிச்ச கிரகம் அதனோட சூரியனை நீண்ட நீள் வட்டத்தில் சுற்றிவருதாம்,,

ஆனா இம்பார்டண்ட் மேட்டர் அது இல்லை.. இது அந்தச் சூரியன் சுத்தற திசைக்கு எதிர் திசையில் சுத்தி வருதாம்..

இது மட்டும் ஏன் இப்படி இராகு கேது மாதிரி எதிர் திசையில் சுத்துதுன்னு புரியாம விஞ்ஞானிகள் மண்டையைப் பிச்சுகிட்டு இருக்காங்க...

எதோ ஒரு மயிரிழையில் தப்பித்த ஆக்சிடெண்டால தான் இப்படி நடக்குது போல அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சு இருக்காங்க..


அதுசரி வேற எதாவது இப்படி இருக்கான்னு பார்த்தா...

நெப்டியூனோட சந்திரன் டிரைடன் இப்படித்தான் நெப்டியூன் சுத்தற திசைக்கு எதிர் திசையில் சுத்துதாம்..

நெப்ட்யூன் ட்ரைடனை கடத்தல் பண்ணியிருக்கணும். அதனாலதான் இப்படி எதிர் திசையில் சுத்துதுன்னு இங்க யோசிக்கறாங்க விஞ்ஞானிங்க..

ட்ரைடன் புளூட்டோவை விட பெர்சு..

அதாவது ப்ளூட்டோவும்(இராமன்) ட்ரைடனும்(சீதை) இரட்டைக் கிரகங்கள் என்றும்.. இரண்டும் காதலாகி கசிந்துருகி டூயட் பாடிகிட்டு சூரிய மரத்தைச் சுத்தி வர்ரப்ப, நெப்டியூன்(இராவணன்) வில்லனா இவங்க சுற்றுப் பாதையில் வந்திருக்கு..

http://www.fourmilab.ch/cgi-bin/Solar

மேற்கண்ட சுட்டியில் புளூட்டோ நெப்டியூன் சுற்றுப் பாதைகள் கிராஸ் ஆகறதைப் பார்க்கலாம்.. :)

சீதை இராவணனால் கவரப்பட்ட மாதிரி கொஞ்சம் வெயிட்டான ட்ரைடன் நெப்ட்யூனால் கவரப்பட்டது... இராமனின் மீதான காதல் போன்ற புளூட்டோவின் ஈர்ப்பு விசை ட்ரைடனின் சுற்றுப்பாதையை நெப்டியூனின் சுழற்சிக்கு எதிர்புறமா மாற்றி விட்டிருக்கும் என்பதுதான் கதை...

இப்படி சொல்லுது கீழ்கண்ட சுட்டி...

http://www.space.com/scienceastronomy/060510_triton_origin.html


ஆனா இங்க மட்டும் ஏன் மயிரிழையில் தப்பித்த விபத்து என்று சொல்றாங்கன்னு புரியலை...

ஒரு வேளை இது நாளை நமதே மாதிரி இன்னொரு சூரியன் தொலைத்த குழந்தையோ என்னவோ...


செய்திக்கு :

http://www.space.com/scienceastronomy/090812-backward-planet.html

தாமரை
19-08-2009, 02:33 AM
பூமியில் இருந்து நிலவு தொன்றக்காரணம், ஒரு மிகப் பெரிய மோதல் என அறிவியல் சொன்னாலும் அது வால்நட்சத்திரமாக இருக்கலாம் என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன்.

நிலவு தோன்றியதன் கற்பனையை இந்த அனிமேஷன் காட்டுகிறது,,,

http://www.space.com/common/media/video/player.php?videoRef=b032503_snx_excerpt_moon


இப்போ சமீபத்தில் நடத்திய ஆய்வில், வால் நட்சத்திரங்களில் உயிருக்கு அடிப்படை ஆதாரமான அமினோ அமிலங்கள் இருக்கலாம் எனச் சொல்லுது

http://d.yimg.com/a/p/afp/20090730/capt.photo_1248977322202-1-0.jpg


http://news.yahoo.com/s/space/20090817/sc_space/lifesbuildingblockfoundincomet

பரஞ்சோதி
19-08-2009, 08:46 AM
அட்டகாசமான திரி, அனைவருக்கும் பயனுள்ளது.

மாணவனாக நானும் உங்களுடன். தொடருங்க ஆசானே!

- முதல் பெஞ்சில்

தாமரை
24-08-2009, 04:21 AM
மின்னல் என்றால் என்ன?

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D

மின்னல் என்றால் கீழ் நோக்கி பாயும் அப்படின்னு நினைச்சிகிட்டு இருக்கிற நேரத்தில

மின்னல் மேல் நோக்கியும் பாயும் என்பதையும் கண்டு பிடித்திருக்கிறார்கள்

http://i.livescience.com/images/090823-upward-lightning-02.jpg

இவை மேகங்களில் தொடங்கி பூமியின் அயனோஸ்பியர் அதாவது வளிமண்டல் எல்லை வரைக்கும் செல்கிறதாம்..

இதெப்படி இருக்கு.?

செய்திக்கு

http://www.livescience.com/environment/090823-upwards-lightning.html

பரஞ்சோதி
24-08-2009, 12:37 PM
ஆமாம், மின்னல்/இடி மாட்டு சாணியில் விழுந்தால் அது தங்கமாகும் என்ற கட்டுகதையை கேள்விப்பட்டிருக்கீங்களா?

தாமரை
27-08-2009, 05:53 AM
இதை கலைஞர் தன் உளியின் ஓசை திரைப்படத்தில் சொல்லி இருக்கிறாரே...

அதை விடுங்கள்... இதைக் கேளுங்கள்..

விஞ்ஞானிகள் புதிதாக WASP-18b என்ற கிரகத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இது கொஞ்சம் வினோதமான கிரகம்தான். ஏனென்றால் இது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


பொறுங்க பொறுங்க... ரொம்ப உணர்ச்சி வசப்படாம ஆசுவாசப் படுத்திக்குங்க..இது சாக 10 இலட்சம் ஆண்டுகள் ஆகலாம்...

325 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் ஃபீனிக்ஸ் நட்சத்திர மண்ணலத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருது இந்த WASP-18b கிரகம்.

இது நம்ம வியாழக் கிரகத்தை விட 10 மடங்கு பெரிசு.. அதன் நட்சத்திரத்தில் இருந்து 19 இலட்சம் கிலோமீட்டர்கள் தூரத்திலேயே சுத்தி வருதாம்.

அதாவது பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தைப் போல 5 மடங்கு தூரம்தான்..

பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தில் 50 ல் ஒரு பங்கு தூரம்தான்...

இது அந்த நட்சத்திரத்தைச் சுற்றிவர 1 நாள்தான் ஆகுதாம்..

சரி ஏன் எப்படித் தற்கொலை செய்துக்குது என்று சொல்லவே இல்லையே....

சொல்றேன் கேளுங்க...

இந்தக் கிரகம் இவ்வளவு அருகில் இருப்பதால் அந்த நட்சத்திரத்தின் மேல்பரப்பில் நம்ம கடலில் ஓதம் ஏற்ற்படுதே அந்த மாதிரி பிளாஸ்மா ஓதம் ஏற்படுது... இதனால் இந்தக் கிரகத்தின் வெப்பநிலை 3800 டிகிரிக்கு மேல இருக்க்கு..

இந்தக் கிரகம் மெல்ல மெல்ல அந்த நட்சத்திரத்தில் விழுந்து அழிந்துவிடும் என இதைக் கண்டுபிடித்த கோயல் ஹெல்லியர் என்னும் கீல் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானி சொல்றார்.

ஆமாம் நட்சத்திரத்தோட பேரு என்னனு சொன்னேன்?

சொல்லவே இல்லையே.. அது WASP-18 என்னும் நட்சத்திரம். ஹி ஹி...

மேரிலேண்டைச் சேர்ந்த விஞ்ஞானி டக்ளஸ் ஹேமில்டன் இதுக்கு வேறு எதாவது அர்த்தம் இருக்கான்னு பார்க்கணும் என்று சொல்றாரு.. நமக்குத் தெரிந்த இயற்பியல் கோட்பாடூகளின் அடிப்படையிலேயே ஒரு கோளாறு இருக்கலாம் என்று இவர் நம்பறாரு..

இன்னும் ஒரு பத்து வருஷத்தில என்ன விஷயம் என்று தெரிஞ்சிரும்...

பொறுத்திருப்போம்.

மஸாகி
27-08-2009, 06:51 AM
சூரியம் பால்வீதியைச் சேர்ந்தது. பால்வீதியை இது 250 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறைச் சுற்றி வருகிறது.

சூரியனின் தற்போதைய வயது 4.5 பில்லியன் வருடங்கள் எனக் கணிக்கப்படுகிறது. சூரியன் இன்னும் 5 பில்லியன் வருடங்கள் வரை வாழலாம் என்றும் ஆனால் அதன் ஒளி அப்பொழுது இப்பொழுது இருப்பதை விட இரட்டிப்பாக இருக்கும் எனவும் ஊகிக்க முடிகிறது. அதன் பிறகு ஹைட்ரஜன் குறையக் குறைய சூரியனின் இறுதிக்காலம் வர, சூரியன் மார்க்கெட் இழந்த நடிகை போல பெருத்து.. சிவந்து வெடிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது

வானியல் தொடர்பான - நல்ல பல அற்புதமான தகவல்களை வழங்கி வருகின்றீர்கள். சூரியன் பற்றி தாங்கள் குறிப்பிட்ட உண்மைகள், சான்றோர்கள் மூலம் வழங்கப்பட்ட வேத நூல்களிலும் கூட புராண காலங்களிலேயே தீர்க்கதரிசனம் செய்யப்பட்டிருப்பதை என்னால், அறிந்து கொள்ள முடிந்தது.

உதாரணமாக, 1400 வருடங்களுக்கு முன்னர் கடவுளால் வழங்கப்பட்டதாக இஸ்லாமியர்களால் நம்பப்படும் அல்குர்ஆனில் - இதுபற்றி பின்வருகின்ற தகவல்கள் காணப்படுகின்றன.

பால்வீதி தொடர்பாக :

''இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.'' (அல்குர்ஆன் : 21:33)

சூரியனின் வாழ்கைக் காலம் தொடர்பாக :

''சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன''.(அல்குர்ஆன் : 55:5)

கடைசி காலத்தில் சூரியனுக்கு ஏற்பட இருக்கும் நிலமை தொடர்பாக :

''சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும்'' (அல்குர்ஆன் : 81:1)

நவீன விஞ்ஞானம் வளராத காலத்தில் - ஆச்சரியமான எதிர்வு கூறல்கள்.

இதுபோன்ற தகவல்கள், இந்து, பௌத்த, கிறிஸ்தவ வேத நூல்களிலும். காணப்படலாம் என்றே நினைக்கின்றேன். அது தொடர்பான தகவல்களையும் (மதங்கள் தொடர்பான - வாத பிரதிவாதங்களுக்குள் நுழையாமல்) தலைப்புடன் தொடர்புடையதான தகவல்களை இவ்விடத்தில் பகிர்ந்து கொள்ளலாமே. சுவாரஸியமாக இருக்கும்..

நட்புடன்-மஸாகி
27082009

தாமரை
27-08-2009, 12:18 PM
. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் மூலம் புதன் இரண்டு முறை சூரியனைச் சுற்றுகிற நேரத்தில் தன்னைத்தானே இரண்டுமுறை சுத்திக்கிது அப்படின்னு சொல்றாங்க

இப்போ நீங்க புதன் மேல நின்னுகிட்டு இருக்கீங்கன்னு வச்சுக்குவோம்..

சில இடங்களில் சூரியன் கிழக்கில் தோன்றி பெரிசாயிட்டே மேற்கு நோக்கி போகும். திடீர்னு கொஞ்சம் நின்னு ரிவர்ஸ் கியர்ல போகும்.
மறுபடி நின்னு கியரை மாத்தி மேற்கு நோக்கி சின்னதாகி கிட்டே போய் மறையும்

நட்சத்திரமெல்லாம் ஏறக்குறைய மூணு மடங்கு வேகத்தில நகரும்.

இன்னும் வரும்

மதங்களை நுழைக்கவே நுழைக்காமல் திரியை நகர்த்தலாம் என இருக்கிறேன். அதுக்குத்தான் 2012 திரி இருக்கே மஸாகி...

சரி புதனை பாதியிலயே விட்டுட்டமில்ல.. புதனைப் பற்றிப் பார்ர்போம்.

புதனின் ஒருநாள் என்பது அதாவது சூரியன் தோன்றி சூரியன் மறைந்து மறுபடி சூரியன் தோன்றுவது 175.84 பூமி நாட்களைக் கொண்டது.. அதாவது இது இரண்டு புத வருடங்களாகும். அதாவது புதனில் ஒரு நாளைக்கு இரண்டு வருடங்கள் காமெடியா இருக்கில்ல.. ஆனால் உண்மை..

சூரியன் சைஸ் மாறுவதும் கன்னா பின்னான்னு ஞாபக மரதி டிரைவர் மாதிரி போறதும் பார்க்க கொஞ்சம் ஜாலியாத்தான் இருக்கும். அதே சமயம் இரவும் பகலும் ஏறத்தாழ சம அளவில் இருக்கும்.

புதனுக்குத்தான் சூரிய மண்டலத்திலேயே பூமியைப் போன்ற காந்தப் புலமும் உண்டு. ஆனால் அது ரொம்பவும் குறைந்த அளவினால ஆனது.

இதுக்குக் காரணம் இதன் உட்கருவில் மிகுந்த அளவு இரும்பு இருந்தாலும் அது சற்று உருகிய நிலையில் இருப்பதால் எனக் கருதப்படுகிறது


1. மேலோடு - புதனின் மேற்பரப்பு சந்திரனைப் போலவே பல அடி வாங்கி இருக்கு,

http://upload.wikimedia.org/wikipedia/commons/7/74/Mercury%27s_%27Weird_Terrain%27.jpg

2. மேண்டில் - உருகிய பாறைக் குழம்பு..

3. உட்கரு.. - உருகிய இரும்பு..

புதனின் துருவப்பகுதியில் பனிக்குல்லா இருப்பதாகவும் கருதப்படுது.

http://upload.wikimedia.org/wikipedia/commons/f/fe/Merc_fig2sm.jpg

சரி அடுத்து நாம பார்க்கப் போறது...

நார்தர்ன் லைட்ஸ் எனப்படும் துருவ ஒளிநடனம்

கூடவே வாங்க

மஸாகி
27-08-2009, 02:57 PM
அப்படியே ஆகட்டும் - தாமரை..

நட்புடன்-மஸாகி
27082008

தாமரை
28-08-2009, 04:10 AM
துருவ ஒளி நடனம் என்பது ஒரு மிக அற்புதமான காட்சி ஆகும்..

http://ferocity.cocolog-nifty.com/english/images/northern_lights-thumb.jpg

http://www.bergoiata.org/fe/Bob-Ross/bob_ross_csg051_northern_lights.jpg

http://upload.wikimedia.org/wikipedia/commons/0/07/Aurore_australe_-_Aurora_australis.jpg

http://upload.wikimedia.org/wikipedia/en/1/1d/Red_and_green_aurora.jpg



இவை ஏற்பட முக்கியக் காரணிகள்

1. சூரியனின் கரோனா மாஸ் எஜெக்சன் எனப்படும் வெடிப்பு..
2. இதனால் ஏற்படும் மின்காந்தப் புயல்..
3. பூமியின் மின்காந்தப் புலம்

முதல்ல கீழே உள்ள சுட்டியில் உள்ள வரைகலை அசைபடங்களைப் பாருங்க..

http://www.space.com/common/media/video/player.php?videoRef=b030620_snx_sunstorm

http://www.space.com/common/media/video/player.php?videoRef=SP_080724_themisRecon

இப்படித்தாங்க இந்த துருவ ஒளிநடனம் நடக்குது.. துருவப் பகுதியில் வாழ்பவர்களுக்கு இது மிகப்பெரிய அதிசயமாகவே இருந்தது. பழங்கால கடல் மாலுமிகள் தான் இதற்கு துருவ ஒளி நடனம் எனப் பெயர் வைத்தது..




இன்னும் எழுதுகிறேன்.. இதை விளக்கமா..

தாமரை
28-08-2009, 12:19 PM
http://www.hickerphoto.com/data/media/146/ad_22540n.jpg

இவ்வளவு அழகா இருக்கிற இந்த துருவ ஒளிநடனம் வட துருவப்பகுதியைச் சுற்றி உள்ள பல பகுதிகளிலும் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களின் தென் கோடியிலும் அண்டார்டிகா பகுதியிலும் தெரியும். ஜப்பானியர்கள், இரஷ்யர்கள், ஸ்காண்டிநேவியன் நாடுகள், கனடா, வட அமெரிக்காவின் சில பகுதிகள் போன்றவற்றில் தெரியும்.

வைகிங் கடற் கொள்ளையர்கள் இதை தங்கள் வேலைக்காரி ஆவிகளின் நடனம் என்று சொன்னார்கள்..

ஸ்காட்லாந்துக்காரர்கள் தேவலோக அப்சரஸ்கள் அங்கு நடனமாடுகிறார்கள் என ஜொள்ளு விட்டனர்,,,

அமெரிக்காவின் பல பழங்குடியினர் பலவாறான கதைகளைக் கொண்டிருந்தனர். சிலர் அங்கு தெய்வீக மருத்துவர்கள் சஞ்சீவினி போன்ற மூலிகைகளை சேகரிக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

http://www.hickerphoto.com/data/media/146/northern_lights_alaska_T4158.jpg

கிரீன்லாந்தைச் சேர்ந்த எஸ்கிமோக்கள் இறந்து போன உறவினர்கள் பூமியில் உள்ள மக்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள் என நினைத்தார்கள்

இன்னொரு அமெரிக்கப் பழங்குடியினர் விசில் சைகை மூலம் இந்தப் பேய்களுடன் பேச முடியும் என நம்பினார்கள்.. (இனிமே இருட்டில விசிலடிக்கும் போது எதாவது பேய் அதைக் கேட்டு உங்களுக்கு என்னவோ சொல்ல வரும்னி நினைவு வச்சுக்காதீங்க)

டென்மார்க் ஸ்வீடன் மக்கள் வடதுருவத்தில் பெரிய எரிமலை இருப்பதாக நினைத்தார்கள்..


http://www.hickerphoto.com/data/media/146/aurora_igloo.jpg

டேனிஷ்காரர்கள். அது அன்னப்பறவைகள் பறப்பதால் உண்டாகும் எதிரொளிகள் என நினைத்தார்கள்..

நியூசிலாந்துக் காரர்கள் துருவப் பகுதி மக்கள் கேம்ப் ஃபயர் போட்டிருப்பதாகச் சொல்வார்கள்..

இன்னும் சில அமெரிக்கப் பழங்குடியினர் இறந்த மாவீரர்கள், மீனவர்களின் இராட்சசத்தனமான ஆவிகள் என நினைத்தார்க்ள்

அலாஸ்கா பழங்குடியினர் அது அவர்கள் வேட்டையாடு மீன்கள், திமிங்கிலங்கள், கடற்சிங்கங்கள், மான்கள் போன்றவற்றின் ஆவிகள் என நினைத்தார்கள்..

சில எஸ்கிமோக்கள் இந்தப் பேய்களை கத்தி ஈட்டி போன்றவைக் கொண்டும் தாக்குவார்களாம்.

http://www.hickerphoto.com/data/media/146/northern-lights-show_29575.jpg

சீனர்கள் அவை டிராகன்கள் என நினைத்தார்கள்..

80 சதவிகித இரவுகளில் துருவப்பகுதிகளான அலாஸ்கா, வட கனடா ஐஸ்லாண்ட், ஸ்காண்டிநேவியாவின் வடபகுதி, வடக்கு ரஸ்யா இங்கெல்லாம் தெரியும். முக்கியமாக குளிர்காலத்தில் இரவு நீண்டிருப்பதால் நன்கு தெரியும்.

வெகு சில நேரங்களில் மெக்சிகோ, சீனா வரை கூட இவை தெரியும். அதனால் வட துருவப் பகுதிகளுக்குப் போனா இந்த ஒளியில் நாம் திறந்த வெளி டிஸ்கோ ஆடிட்டு வரலாம்.


http://upload.wikimedia.org/wikipedia/commons/6/63/Aurora_australis_panorama.jpg

1900 களில் இந்த துருவ ஒளிநடனத்துக்கு காரணம் சூரிய ஒளித்துகள்கள்களாக இருக்கலாம் என கிறிஸ்டியன் பிர்க்லேண்ட் எலெக்ட்ரான் கற்றைகளை காந்தக் கோளங்களின் மீது பாய்ச்சிக் காட்டினார்.

ஆனால் இந்தக் கதிரியக்கம் எப்படி வருகிறது என்பதைப் பற்றி பல தேற்றங்கள் இருந்தன

ஆனால் 1962 க்குப் பிறகே இது சூரியனில் இருந்து வரும் சூரியக் காற்றில் உள்ள துகள்கள் பூமியின் காந்தப்புலத்தின் காரணமாக துருவப்பகுதிகளுக்கு திருப்பப்பட்டு நடக்கும் அதிசயம் என் உணர்ந்தார்கள்..

ஆமாம் காந்தப் புலம் இல்லைன்னா இது தெரியவே தெரியாதா அப்படின்னு தெரியாதவங்க தெரியாம தெரிஞ்சுக்க வேண்டி தெரிஞ்ச என்கிட்ட தெரிஞ்சே கேட்பாங்க..

நீங்களே சொல்லுங்க தெரியுமா தெரியாதா? தெரியும் ஆனா இவ்வளவு அழகா இருக்காது... ஏன்னா சூரியப் புயலின் எலெக்ட்ரான்கள் அடர்த்தி எல்லா இடங்களிலும் விரவி விடுவதால் எல்லா இடங்களிலும் ரொம்ப மெலிதாக தெரியும்..

இப்போ எலெக்ட்ரான்கள் துருவப் பகுதிகளுக்கு தள்ளப்படுவதால் அங்க மட்டும் தெரியுது, ஆனா அற்புதமா தெரியுது..

சரி சரி முகிலனை கூப்பிடுங்க.. சில ஃபோட்டோ போடச் சொல்லலாம்.

தாமரை
28-08-2009, 01:48 PM
http://pds.jpl.nasa.gov/planets/images/browse/mars/valmar.jpg

செவ்வாய்..

செவ்வாய்க் கிரகம் சிவப்பு நிறம் கொண்டது. செவ்வாய் என்பது கிரேக்க புராணத்தின் படி போர்க்கடவுள் ஆகும். இந்திய புராணத்தின் படி செவ்வாய் பூமியால் வளர்க்கப்பட்டவன். போர்க்குணம் கொண்டவன். இவனின் அதிதேவதை சுப்ரமணியன் தேவர்களின் தளபதி, ரோம புராணப்படி மார்ஸ் என்பது விவசாயக் கடவுள்..

இவை எல்லாம் செவ்வாயின் நிறத்தையும், செவ்வாயில் பூமியொத்த குணத்தையும் காட்டுவதாக அமைகிறது. விஞ்ஞானிகள் கூட செவ்வாய்தான் அடுத்த பூமியாக மனிதனை தாங்கக் கூடியது என்று கருதினார்கள்.

வெளிக்கிரக வாசிகள் என்றவுடனேயே செவ்வாய் கிரக வாசிகள் என்பதுதான் முதலில் தோன்றிய கற்பனை...

புமியில் இருந்து தொலைநோக்கிகளில் செவ்வாயைக் கண்டபோது செவ்வாயில் கால்வாய்கள் இருப்பதாக நம்பினார்கள்.
செவ்வாயின் மீதான ஒளியில் பருவ கால மாற்றங்களைக் கண்டு செவ்வாயிலும் பருவ காலங்கள் உண்டு நீர் உண்டு என நம்பினார்கள்..

பாவம் செவ்வாயால் மக்களின் கற்பனைக்கு கிடைத்துக் கொண்டிருந்த தீனிகள் மரைனர் 4 என்கிற விண்வெளிக் கப்பல் 1965 ல் அனுப்பிய தகவல்களில் தவிடு பொடியாகியது. தொடர்ந்து வைகிங், மார்ஸ் பாத்ஃபைண்டர், மார்ஸ் எக்ஸ்படைசன் ரோவர்ஸ்கள் ஸ்பிரிட், ஆப்பர்சூனிட்டி, பீனிக்ஸ் ஆகிய விண் ஓடங்களும் இதர கருவிகளும் அனுப்பிய தகவல்கள் ஏமாற்றம் அளிக்கக் கூடியவையாகவே இருந்தாலும்...

செவ்வாயின் துருவப்பகுதியில் பனிக்கட்டிகளும், உறைந்த கரியமில வாயுவும் இருக்கலாம் என்பது மட்டுமே நல்ல செய்திகள்,

ஒரு காலத்தில செவ்வாயில் நீர் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் எண்ணும் அளவிற்கு சிறிது ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

செவ்வாய்க்கு இரந்து சந்திரன்கள் உண்டு.. சந்திரன் என்றதும் ரொம்ப பெரிசா கற்பனை பண்ணிடாதீங்க.


http://upload.wikimedia.org/wikipedia/commons/d/db/Orbits_of_Phobos_and_Deimos.gif

போபோஸ் என்பது 22 கிமீ விட்டமே உள்ள மிகப் பெரிய பாறை. இது செவ்வாயில் இருந்து 9000 கிமீ உயரத்தில் படுவேகமாக சுத்தி வருது.. ஆனால் பாவம் இன்னும் சில மில்லியன் ஆண்டுகளில் இது செவ்வாயின் மீது விழுந்து நொறுங்கிப் போகும்.


http://www.nineplanets.org/thumb/show9.jpg


http://upload.wikimedia.org/wikipedia/commons/a/aa/Phobos.jpg


போபோஸ் என்றால் என்ன அர்த்தம். எங்கியோ கேட்ட மாதிரி இருக்கில்ல.. அதாங்க.. போபியா ன்னு சொல்வமே பயம்...

கொஞ்சம் கலர்ஃபுல்லா இதை குளோசப்ல பார்க்கலாமா?


http://upload.wikimedia.org/wikipedia/commons/5/59/Stickney_mro.jpg



வீரத்துக்கு அடையாளமான செவ்வாயின் ஒரு உப கிரகம் பயம்..

அப்போ இன்னொரு உபகிரகம் என்ன? டெய்மோஸ்.. இது 12 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட கல். இது செவ்வாயை 23000 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வருது...

http://upload.wikimedia.org/wikipedia/commons/8/8d/Deimos-MRO.jpg

டெய்மோஸ் அப்படின்னா பேனிக் அப்படின்னு அர்த்தம். அதாவது உதறலெடுப்பது...

வீரம் என்பது பயமில்லாத மாதிரி நடிப்பதுன்னு குருதிப்புனல்ல கமல் சொல்வாரில்ல.. அப்படி வீரத்தைச் சுத்திச் சுத்தி வருதுங்க இந்த பயங்கள்,

அதுவும் இந்த போபியா புடிச்ச போபஸ், குணா கமல் நான் அசிங்கம் அப்படின்னு சொல்லிட்டு ரூமுக்குள்ளயே சுத்திச் சுத்தி வர்ரமாதிரி வேகமா சுத்தி வருது...

இதெல்லாம் அஸ்ட்ராய்ட் பெல்ட்டிலிருந்து செவ்வாய் லபக்கிய சில விண்கற்கள் என்று எண்ணுகிறார்கள்..

இன்னும் ஒரு தியரி இருக்கு.. சனிக்கிரகத்தைப் பார்க்கும் போது அதைப் பார்த்தா நல்லா இருக்கும்..

சரி இனிச் செவ்வாயில் இறங்கிப் பார்ப்போம்.

பாலகன்
28-08-2009, 02:10 PM
பல விந்தையான செய்திகளை அளித்துவரும் அண்ணன் தாமரைக்கு எனது நன்றிகள். நிறைய விசயங்களை உங்களிடமிருந்து தெரிந்துகொன்டேன். அந்த புதன் இரண்டு முறை சூரிய உதய மறைவு அருமையான தகவல்.

அன்புடன்

தாமரை
04-09-2009, 12:02 PM
செவ்வாயைப் பற்றி இனி பார்ப்போம்.

செவ்வாயின் குறுக்களவு 6794 கி,மீ. அதாவது இது பூமியில் சரிபாதி.. ஆனால் நிலாவை விட இருமடங்கு.

இது சூரியனை ஒருமுறைச் சுற்றிவர 687 நாட்கள் ஆகுது. இதுவும் நீள் வட்டப் பாதையில்தான் சுற்றி வருது. ஆனால் இந்த நீள் வட்டப் பாதை பூமியோட நீள் வட்டப் பாதைக்கு ஒப்பிட்டால் இன்னும் நீள்வட்டமானது

அதாவது...

பூமிக்கும் சூரியனுக்கும் குறைந்த பட்ச தூரம் : 147 mil.km.
பூமிக்கும் செவ்வாய்க்கும் அதிகபட்ச தூரம் : 152 mil. km

ஆனால்

செவ்வாய்க்கும் சூரியனுக்கும் குறைந்த பட்ச தூரம் : 206 mil km
செவ்வாய்க்கும் சூரியனுக்கும் அதிகபட்ச தூரம் : 249 mil. km

இன்னொரு விஷயம். பூமி எப்படி தன் அச்சில் 23.5 டிகிரி சாஞ்சிருக்கோ அப்படி..
செவ்வாய் 25 டிகிரி சாஞ்சிருக்கு..


இப்படி சாஞ்சி இருக்கறதால செவ்வாயிலும் கோடைக்காலம் குளிர்காலம் உண்டு. வடதுருவத்திலும், தென் துருவத்திலும் பனிப்படலம் உண்டு.. தூசுப் புயல் உண்டு..

பூமியோட பாதை சற்றே நீள்வட்டமா இருப்பதால் வடதுருவ கோடைக்காலத்திற்கும், தென் துருவ கோடைக்காலத்துக்கும் அதிக வித்தியாசம் இருப்பதில்லை. ஆனால் செவ்வாயின் சுற்றுப் பாதை ரொம்பவே நீள் வட்டமா இருப்பதால் தென் துருவத்தின் கோடைக்காலம் வடதுருவத்தோட கோடைக் காலத்தை விட 25 நாட்கள் சின்னது..

அதே மாதிரி சூரிய வெப்பமும் மாறும். தென் துருவ கோடைக்காலத்தின் போது சூரியனுக்கு அருகில் இருப்பதால் ரொம்பவே பிரகாசமா இருக்கும். அதனால புழுதிப் புயல் தெரியும். சில ச்மயம் வெண்மேகங்களும் தெரிவது உண்டு...

பூமியை மாதிரியே செவ்வாயும் தன்னைத் தானே சுத்திக்குது. அதுக்கு ஆகும் காலம் 1 நாள் 37 நிமிஷம் ஆகுது. ஆனா சூரியன் உச்சியில் இருப்பதில் இருந்து சூரிய உச்சியில் வருவதற்கு கணக்கெடுத்தா 24 மணிநேரம் 39 நிமிஷம் ஆகும். காரணம் சூரியனைச் சுற்றுவது.


செவ்வாயை தொலைநோக்கியில் பார்த்தால் காவி நிற கோளமாகத் தெரியும். அதன் வட துருவத்திலும் தெந்துருவத்திலும் வென்பனியையும் காணலாம்.இருட்டுப் பகுதியில் கொஞ்சம் பச்சையாய் தெரியும். கால்வாய்கள் இருக்கிற மாதிரியும் தெரியும். வெயில் காலத்தில் செவ்வாயில் புயல்கள் நகர்வதும் தெரியும்.

இதையெல்லாம் பார்த்துட்டுதான் செவ்வாயில் உயிரினங்கள் இருக்கு என்ற ஆழமான நம்பிக்கை மனுஷனுக்கு உண்டாச்சு..

அதனால அதை ஆராய நிறைய செயற்கை கோள்கள் சென்றன...

தொடரும்

தாமரை
06-09-2009, 12:21 PM
பூமியைப் போலவே இரும்பு உட்கரு, பாறைக் குழம்பு மற்றும் மேலோடு போல மூணு அடுக்காகத்தான் செவ்வாயும் அமைந்திருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் உட்கரு மிகவும் சிறியதாக இருக்கலாம் எனக் கருதப்படுது. ஏன்னா வலிமையே இல்லாத காந்தப் புலம்.

செவ்வாய் பூமியை விட 30 சதம் அடர்த்து குறைந்த கிரகம். பூமியின் மேலோட்டுத்தகடுகளைப் போல செவ்வாயின் அமைப்பில் தக்டுகள் இல்லை அப்படின்னு நம்பறாங்க. ஆனால் செவ்வாயில் பீடபூமிகள், பள்ளத்தாக்குகள், எரிமலைகள் எல்லாம் இருக்கு.

http://pds.jpl.nasa.gov/planets/images/browse/mars/olympus.jpg

http://pds.jpl.nasa.gov/planets/images/browse/mars/olympers.jpg

மேலே உள்ள எரிமலையின் பேரு ஒலிம்பஸ் மான்ஸ். இது செவ்வாயில் உள்ள மிகப் பெரிய எரிமலை. இதன் விட்டம் 624 கிமீ. உயரம் 25 கி.மீ. (நம்ம எவெரெஸ்ட் உயரம் 8+ கிமீ)

http://upload.wikimedia.org/wikipedia/commons/6/62/Mars_NPArea-PIA00161_modest.jpg


மேலே உள்ளது செவ்வாயின் வட துருவம். இந்தப் பனிப்படலத்தில் உறைந்த நீரும் கரியமில வாயுவும் இருப்பதாக எண்ணுகிறார்கள் விஞ்ஞானிகள்.

செவ்வாயின் மீதுள்ள வளிமண்டலம் மெல்லியது. இதில் கரியமில வாயுதான் 95% உள்ளது. நைட்ரஜன், ஆர்கான், ஆக்சிஜன் ஆகியவை மிகக் குறைந்த அளவில் உள்ளன.

வளிமண்டலத்தில் சிவப்பு வர்ணம் சிதறடிக்கப்படுவது படத்தில் அபாரமாக தெரியுமே

http://upload.wikimedia.org/wikipedia/commons/7/7d/Mars_atmosphere.jpg

அடுத்து மனிதன் இந்த கிரகத்தை ஆராய எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் பார்ப்போம்.

இன்பா
08-09-2009, 04:55 PM
ரொம்ப நாள் களிச்சி வந்தேன்... நான் எதிர்பார்த்த பல விசயங்களை கொடுத்திருக்கீங்க....

மேலோட்டமா எல்லாத்தையும் படிச்சுட்டேன்... இன்னும் பொறுமையா ஒருவாட்டி படிக்கனும்...

நன்றி தாமரை அண்ணா..!!!!

இன்பா
09-09-2009, 05:57 AM
நேத்து இதை படித்து விட்டு என்னுடைய டுபா-மொக்கை கேமராவில் மார்ஸை படம் பிடித்திருக்கிரேன்...

அதை இங்கே இன்றிறவும் போடுகிறேன்...

கடுகளவு தான் தெரிஞ்சது, ஆரன்ஞ்சு கலர்ல தெரியுது......


அது சரி சீக்கிரம் அப்டேட் பண்ணுங்க... :)

இன்பா
09-09-2009, 05:03 PM
ஜூபிட்டர்

http://img141.imageshack.us/img141/7260/vlcsnap66132.png

மார்ஸ்

http://img141.imageshack.us/img141/3089/vlcsnap66549.png

தாமரை
10-09-2009, 01:51 AM
அபாரம் அபாரம்.. சிவா.ஜி... சிவா.ஜி உங்களுக்குப் பொறாமையா இல்லையா?

இன்பா
10-09-2009, 06:08 AM
அண்ணா..!!

ரொம்ப zoom பன்னும் போது கை கடகடன்னு உதற்ரது... சரியா பிடிக்க முடியல... அதனால tripod வாங்கி ஓரளவுக்கு பிடிச்சேன்,

நாளைக்கு எப்படியாச்சும் விடியற்காலையில எழுந்து சுக்கிரன் அண்ணாச்சியை படம் எடுக்கலாம்னு இருக்கேன்.. :)

தாமரை
10-09-2009, 06:32 AM
அதை விட இன்றிரவு வியாழனைக் குறிவைங்க்க முதல்ல...

வியாழன் அப்போது பூமிக்கு அருகிலிருந்து விலகிகிட்டு இருக்கு அதன் முழு வட்டும் ஒளிபெற்றிருப்பதாலும் அழகா வரும்... இன்னோரு விஷயம் இது மாலை 6:30 மணியில் இருந்தே கிழக்கு வானில் பிரகாசமா தெரிய ஆரம்பிக்கும்..அடுத்து ஒரு வருஷமாகும் மறுபடி பக்கத்தில் வர

சுக்கிரன் சுமார் 5:15 மணிக்கு கிழக்கு வானில் தோன்றும் ஆனால் 5:45 க்கு சூரிய ஒளி வந்திடும். அருணோதயம்னு சொல்வாங்க.. அதனால கொஞ்சம் தூங்கினாலும் கஷ்டம் தான். ஆனால் இப்போதைய நிலையின் படி வெள்ளியும் பிரகாசமா தெரியும்.

புதன், சனி இரண்டும் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் இப்போது படம் எடுப்பது கடினம்.

கீழே இருக்க்கும் படத்தைப் பாருங்க..இது இப்போதைய கோள்களின் நிலைகள்.


http://i326.photobucket.com/albums/k413/stselvan/planetspos.gif


புதன் நமக்கும் சூரியனுக்கும் மத்தியில் இருக்கும் போது தெளிவா தெரிவதில்லை. எனவே அது சூரியனுக்கு பின்னால் போகிற வரை நாம் பொறுத்துருக்க வேண்டும்.

வெள்ளி, வியாழன் இரண்டையும் இப்பொழுது படம்மெடுக்கலாம், ஆராயலாம்.யுரேனஸ் நெப்டியூன் டெல்ஸ்கோப் இருந்தால் இப்பொழுது ஆராயலாம்

செவ்வாயை பிப்ரவரி 2010 ல் மிக அருகில் இருந்து ஆராயலாம்.

சனிக்கிரகத்திற்கும் நாள் குறிப்போம்

2010 மார்ச் மாதம் சனி பூமிக்கு அருகில் இருக்கும். அப்போ அதை படமெடுக்கலாம்.

பொறுமை இல்லையேன்னு சொல்றாரு இன்பா!
.

இன்பா
10-09-2009, 08:19 AM
பொறுமை கொஞ்சம் இல்லை தான் :)

அண்ணா சொந்தமா டெலஸ்கோப் பண்ண முடியுமா? நமக்கு தேவையான அளவுக்கு ஜோம் லென்த் வெச்சிக்கலாம் இல்லையா ?

தாமரை
14-09-2009, 02:45 AM
http://a52.g.akamaitech.net/f/52/827/1d/www.space.com/images/090911-urine-01.jpg

வானத்தை கடந்த புதன் கிழமை வெறித்துக் கொண்டிருந்த வட அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மிக அதிசயமான விண்நிகழ்வு ஒன்று காணக்கிடைத்தது.. பளபளக்கும் மிகப்பெரிய வால்நட்சத்திரம் போன்ற தோற்றம்.

இதைப் பார்த்து பரவசத்தில் ஆழ்ந்தவர்கள் உடனே நாசாவைத் தொடர்பு கொண்டார்கள். தாங்கள் கண்ட அதிசயத்தை பக்திப் பரவசத்துடன் சொல்ல அங்கிருந்து வந்த பதில்..


சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற விண்வெளி ஓடம் வியாழக்கிழமை புறப்படத் தயாராகியது. அந்த தயாராவதில் உள்ள ஒரு கட்டம் தான் கழிவு நீர் அகற்றம்.

68 கிலோ எடையுள்ள உச்சா, மற்றும் கழிவு நீர் விண்வெளியில் கொட்டப்பட்டது..

உடனே உறைந்து பனிக்கட்டியான இந்த் நீர் சூரிய ஒளிபட்டு மின்னி, சூடாகி ஆவியானதையே இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டிருக்கிறார்கள்.

டிஸ்கவரி ஓடத்தின் ஓட்டுனர் கெவின் ஃபோர்ட் இதைச் செய்தவர். தயாராகும் சடங்குகளுக்கிடையில் வின்வெளி ஓடத்திலிருந்து ஒரு வளைந்த ஒளிர்வு உண்டானதைக் கண்டு நாசா விஞ்ஞானிகள் அவரைக் கேட்டபோது அவர்களுக்கு தெரிந்து போனது..

இதனால் நம்ம மக்களுக்குச் சொல்றது என்னன்னா..

இருட்டா இருக்குன்னு விண்வெளியில் திறந்த வெளியில் மூச்சா போகக்கூடாது.. உலகத்துக்கே வெளிச்சம் போட்டுக் காட்டிடும்.

:eek::eek::eek::eek::lachen001::lachen001::lachen001:

இன்பா
14-09-2009, 04:23 AM
அதான் சொல்றது மூத்திரத்தை அடக்கக் கூடாதுன்னு...

68 கிலோ அளவுக்கு அடக்கி வெச்சிருக்காங்க... !!! அதான் வெளிச்சம் போட்டு காமிச்சிடுச்சு...

தாமரை
14-09-2009, 04:35 AM
அதுக்குக் காரணமும் இருக்கு இன்பா.. இந்த முறை என்ன நடந்ததுன்னா..

முதல்ல ஒரு செயலிழந்த ஐரோப்பியச் செயற்கைக்கோள் விண்வெளி நிலையத்திற்கு மிகவும் சமீபத்தில் கடந்தது. அதே மாதிரி ஒரு 10 செமீ நீளமுள்ள ஒரு குப்பை டிஸ்கவரி ஓடத்தில் உரச இருந்தது. போகும் போதும் சிறிது பிரச்சனைகள். இறங்கும் போது வானிலை சரியில்லை என வானிலை எச்சரிக்கை வேற..

இதெல்லாம் தான் காரணம்

இன்பா
14-09-2009, 07:53 AM
ஆமா விண்வெளியில மூத்திரம் போக முடியுமா ?

அங்க தான் ஈர்ப்பு விசையே இருக்காதே... அப்படி இருக்கையில மூத்திரம் எப்படி கீழ வரும் :)

தாமரை
14-09-2009, 08:55 AM
தம்பீ இன்பா...

உடலில் இருந்து கழிவு வெளிப்படுவது புவியீர்ப்பு விசையால் அல்ல. உள்ளே நாம் விசை கொடுத்து வெளிப்படுத்துகிறோம். இல்லையென்றால் மல்லாக்கப் படுத்திருக்கும் நோயாளிகள் எப்படி கழிவை வெளிப்படுத்துவார்கள்?

அங்கே இன்னும் கொஞ்சம் எளிது, ஏனென்றால் வெளியே காற்றழுத்தம் குறைவு. அதனால் நாம் செலவிட வேண்டிய சக்தியும் குறைவு.

இன்பா
14-09-2009, 11:03 AM
கொஞ்சம் ஓவரா யோசிச்சிட்டேன்னு நினைக்குறேன்...!!!!

பால்ராஜ்
16-09-2009, 01:56 PM
அது எதற்கு அந்த "ச்சீய்...."...??

இன்பா
17-09-2009, 05:50 AM
நானும் இங்க வர்ரப்ப எல்லாம் எட்டி பாத்துட்டுப் போறேன்...!!!

ஆனா நீங்க..!!!

பால்ராஜ்
17-09-2009, 01:35 PM
உடலில் இருந்து கழிவு வெளிப்படுவது புவியீர்ப்பு விசையால் அல்ல. உள்ளே நாம் விசை கொடுத்து வெளிப்படுத்துகிறோம்.

ஆஹ்ஹா.. பட்டி மன்றத்துக்கு நல்ல பாயிண்ட்.. சற்று தாமதமாகக் கண்டதால் உபயோகிக்க முடியவில்லை..

ஆனாலும் ஈர்த்தது அந்த 'ச்சீய்'.. தான்:aetsch013:

தாமரை
23-09-2009, 09:22 AM
http://pds.jpl.nasa.gov/planets/images/browse/mars/vlpan22.jpg

செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மணல்வெளியில் இருக்கும் துருப்பிடிச்ச இரும்புதான் செவ்வாயின் நிறத்துக்குக் காரணம். அந்த இரும்பு துருப்பிடிச்சது ஒரு காலத்தில் அங்கே நீர் இருந்ததாலதான் அப்படின்னு விஞ்ஞானிகள் போன வாரம் வரைக்கும் நினைச்சாங்க. ஆனால் போன வாரம் இந்த மாற்றம் நிகழ தண்ணீரே அவசியம் இல்லைன்னு புரிஞ்சிகிட்டாங்க...

செவ்வாயின் மனலில் மேக்னடைட் என்ற இரும்புக் கனிமம் இருக்கிறது. இது காற்றால் அரிக்கப்படும் போது காற்றில் இருக்கற ஆக்சிஜனை ஈர்த்து இரும்பு ஆக்சைடை உண்டாக்கித் துரு பிடிக்கிது அப்படின்னு கண்டு பிடிச்சிருக்காங்க. அதனால் செவ்வாயில் உள்ள அரிப்புகள் நீரால் மட்டுமில்லை காற்றாலும் உண்டாகி இருக்கலாம் அப்படின்னு இப்போ சொல்றாங்க...


செவ்வாயின் தட்பவெப்பம் -140 டிகிரி செல்சியஸிலிருந்து 15 டிகிரி செல்சியஸ் வரை வேறு படுது

http://www.sciencemuseum.org.uk/antenna/martianocean/images/mars-surface.jpg

செவ்வாயில் உயிரினங்கள் இருந்ததா நம்புவதற்கு கீழ்கண்ட படங்கள் தான் தூண்டுகோலா இருந்தது

செவ்வாயில் தெரியும் முகம்

http://a52.g.akamaitech.net/f/52/827/1d/www.space.com/images/060921_mars_faceA_02.jpg
http://a52.g.akamaitech.net/f/52/827/1d/www.space.com/images/mars_face_1976_full_02.jpg

மண்டையோடு

http://a52.g.akamaitech.net/f/52/827/1d/www.space.com/images/060921_mars_faceC_02.jpg

பிரமிட் மலைகள்

http://a52.g.akamaitech.net/f/52/827/1d/www.space.com/images/060921_mars_faceD_02.jpg


செவ்வாய் மனிதன்??


http://www.space.com/images/080124-mars-sasquatch-02.jpg


ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு இல்லியா?

மஞ்சுபாஷிணி
23-09-2009, 11:24 AM
யப்பா ஒரே ஆச்சர்யமா இருக்கு... பகிர்வுக்கு நன்றி தாமரை...

தாமரை
24-09-2009, 01:00 PM
செவ்வாயில் புயல்கள் உண்டு. ஆனால் இவை நம்ம பூமியின் புயல் மாதிரி நீராவி அடிப்படையில் இல்லாம மிகச் சன்னமான துகள்களால் ஆனது. செவ்வாயின் தெற்குப் பகுதியில் மிகப் பெரிய பள்ளம் இருக்கு. இந்தப் பகுதிகளில் தான் இந்தப் புயல் ஆரம்பிக்குது. சாதாரணமா செவ்வாயில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் காத்து இருக்கும். இந்த தூசிப் புயலின் போது இது 70 லிருந்து 80 கி.மீ வேகம் வரைக்கும் அதிகரிக்கும். சில சமயம் செவ்வாய் கிரகத்தையே மறக்கிற அளவிற்கு பெரிசா இருக்கும் இந்தப் புயல்கள். 1971 ல் மிகப் பெரிய புயல் உண்டாகி இருக்கு, 2007 லும் அடுத்த பெரிய புயல் உண்டாச்சி.

நம்ம ஊரு டொர்னடோ மாதிரியும் தூசிப்புயல் உண்டாவது உண்டு. செவ்வாய் அதிகச் சூடாகும் பொழுது இது உண்டாகுதாம். இதன் உயரம் 10 கி.மீ வரை கூட இருக்குமாம். இந்தப் புயல்களில் உண்டாகும் மின்சாரம் செவ்வாயின் ஹைடரஜன் பெராக்சைடை உடைத்து மீத்தேன் வாயுவை உண்டாக்குதாம். ஆனால் இந்த மீட்தேன் சூரியனோட புற ஊதாக்கதிர்களால் அழிக்கப் பட்டு விடுதாம்.

ஆதி காலத்தில செவ்வாய் பூமி மாதிரி இருந்ததா இல்லையா அப்படின்னு பல கருத்துகள் இருக்கு, ஆனால் ஒண்ணு மட்டும் சர்வ நிச்சயம். செவ்வாயின் வளிமண்டலம் மெலிதாகிக் கொண்டே வருது. அதுக்குக் காரணம் அதில பசுமைக் குடில் வாயுக்கள் குறைவா இருப்பதுதான் அப்படிங்கறாங்க..

இதுக்கு இரண்டு விதக் காரணங்கள் சொல்றாங்க.. ஒண்ணு செவ்வாயின் உட்கரு திட நிலைக்கு மாறியதால், காந்த மண்டலம் குறைஞ்சு போச்சி. இதனால் சூரியக் கதிரியக்கத்தால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டு விண்வெளியில் சிதறடிக்கப்பட்டிருக்கலாம். அல்லது அவை எதாவது மோதலில் சிதறடிக்கப்பட்டு இருக்கலாம்.. அல்லது வாயுக்கள் திரவங்களுடன் கலந்து பாறைகளாக இறுகிப் போயிருக்கலாம்..

செவ்வாயில் தவிச்ச வாய்க்குத் தண்ணி கிடைக்காதுன்னு தெரியும். ஆனா முன்னால தண்ணி இருந்திச்சா? இருந்திருந்தா அது எங்கப் போச்சு அப்படின்னு விஞ்ஞானிகள் இன்னும் மண்டையப் பிச்சுகிட்டு இருக்காங்க.

இன்னொரு சுவாரஸ்யமான விசயம்.

பூமி சாதாரணமா 23.5 சாஞ்சி இருக்குன்னு நமக்குத் தெரியும். ஆனால் இலட்சக்கணக்கான ஆண்டுகளில் இது 22.1 டிகிரியில்ருந்து 24.6 டிகிரி வரைக்கும் வேறுபடலாம் அப்படின்னு கணிச்சு இருக்காங்க..

ஆனா இந்தச் செவ்வாய் இருக்கே அது...

0 டிகிரியிலிருந்து 60 டிகிரி வரை சாய்வு கோணங்களில் மாற்றம் காடக்கூடியது. காரணம் அந்தப் பக்கத்தில இருக்காரே குரு.. அவர்தான். இதனால் 0 டிகிரி கோணத்தில் இருக்கும் பொழுது பனிப்படலம் செவ்வாய் நடுக்கோடு வரைக்கும் கூட வரலாமாம். 60 டிகிரி இருக்கும் போது பனிப்படலம் ஆவியும் ஆகிவிடுமாம்.

செவ்வாய்க்கு இதுவரை 40 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டிருக்கு, ஆனால் அதில் பாதிக்கு பாதி அம்பேல்.. ஃபெயில்.

மரைனர் 3, 4, 6, 7,9 வைகிங் 1, 2, மார்ஸ் குளோபல் சர்வேயர், மார்ஸ் பாத் ஃபைண்டர், மார்ஸ் ஒடிசி அப்புறம் மார்ஸ் ரிகான்னைசன்ஸ் இதெல்லாம் வெற்றி.


மார்ஸ் அப்ஸர்வர்,மார்ஸ் கிளைமேட் ஆர்பிட்டர், மார்ஸ் போலார் லேண்டர் இதெல்லாம் சொதப்பிய முக்கிய செயற்கைக் கோள்கள்



மரைனர் 4 தான் செவ்வாயின் தென் ட்துருவப் பகுதியை படம் எடுத்தது. என்னடா இது இன்னொரு சந்திரனைப் போல குண்டும் குழியுமா இருக்குன்னு யோசிக்க வச்சது. மரைனர் 6, 7 கூட செவ்வாயின் ஈர்ப்பு சக்தி, வளி மண்டலம் பத்திச் ஒன்னதே தவிர தெளிவான தகவல்கள் இல்ல.

மரைனர் ஒன்பதுதான் செவ்வாயில் எரிமலைகள், பள்ளத்தாக்குகள், கால்வாய் அமைப்புகள் இருக்குன்னு காட்டிச்சி. 1971, அப்பதான் அந்த மிகப் பெரியதூசிப்புயல் வந்து மரைனர் ஒன்பதுக்கு ஆட்டம் காட்டிச்சி... அந்தப் புயல் ஓய்ந்த பின்னால்தான் செவ்வாய் பூமி மாதிரி இருந்திருக்கலாம்னு பெரிய நம்பிக்கையே வந்திச்சி...

வைகிங் 1 ம் 2ம் செவ்வாயின் நிலப்பரப்பு, வளிமண்டலம், நில அமைப்பு எல்லாம் படம் புடிச்சி தெளிவாக்கிச்சு. வைக்கிங் செவ்வாயில் இறங்கி செவ்வாய் பூமியில் இருக்கும் பாலைவனம் போன்ற அமைப்பில் இருக்குன்னு படங்காட்டிச் சொன்னது...

http://pds.jpl.nasa.gov/planets/images/browse/mars/southcan.jpg


மார்ஸ் குளோபல் சர்வேயர்தான் செவ்வாயில் மணற்பரப்பில் அரிப்புகளை துல்லியமா படம் போட்டு காமிச்சது. இதை வச்சிதான் செவ்வாயில் ஒருகாலத்தில் தண்ணீர் திரவ நிலையில் இருந்திருக்கும் பாலாறும் தேனாறும் ஓடி இருக்கும் அப்படின்னு எல்லாம் கதை எழுதினாங்க.

http://www.space.com/images/h_in_mars_regully_062700_03.jpg

மார்ஸ் பாத் ஃபைண்டர் கதை நமக்குத் தெரியும்.. ரொம்பச் சீப்பான ஒண்ணு. இதில 8085 மைக்ரோ பிராஸஸர், வி.எக்ஸ். ஒர்க்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தோட ஒரு சின்ன வண்டியை வச்சி அனுப்பினாங்க. சோஜர்னர்னு பேரு. இதைப் பற்றிய கதை இரண்டு ஞாபகம் இருக்கு,

முதல் கதை...

சோஜர்னர் மார்ஸ்ல இரங்கின கொஞ்ச நாள்ல ஹேங்க் ஆயிடுச்சாம். அதன் பின்னால் வாட்ச்டாக் டைம் அவுட் ஆகி (சிஸ்டம் வேலை செய்யாட்டி சிஸ்டத்தை மறுபடி ரீஸ்டார்ட் பண்ணற நன்றியுள்ள டைம்பாமை வாட்ச்டாக்குன்னு சொல்லுவாங்க) சிஸ்டம் மற்படி உயிர்த்தெழுந்தது.

மைக்ரோசாஃப் ஆபரேட்டிங் சிஸ்டம் போடாததற்கு பட்ஜெட் பற்றாக்குறைதான் காரணம்... (நல்ல வேளை)

கதை இரண்டு :

ஹைதராபாத்தில நான் எங்க கம்பெனிக்கு மக்களை இண்டர்வியூ செய்யப் போனபொழுது நாலு பேரு சத்தியமா இந்த சோஜர்னரை அவங்கதான் டிசைன் பண்ணினதா தலைமேல் அடிச்சு சத்தியம் பண்ணினாங்க... சரி சரி அது எந்த வருஷம்.. அப்படின்னு கேட்டப்பதான் அது டிசைன் பண்ணின காலத்தில அவங்க +2 படிச்சாங்க என்ற உண்மை அவங்களுக்கே தெரிஞ்சது..

அப்புறம் இரண்டு தோல்விகள்.. மார்ஸ் கிளைமேட் ஆர்பிட்டர் தொபுக்கடீர்னு விழுந்திருச்சி, அடுத்து போலார் லேண்டரும் தொபுக்கடீர்,,,

அட என்னடா இது இப்படி புட்டுக்குதே என்ன பிரச்சனைன்னு ஆராய்ச்சி பண்ணினப்ப தான் ...

அழுத்தத்தை பவுண்ட்ஸ் / இன்ச் என்பதற்கு பதிலா கிலோகிராம் / செ.மீ ப்படின்னு தப்பா ப்ரோக்ராம் பண்ணிட்டோம்னு கண்டு பிடிச்சாங்க. அதைப் பார்த்ததும் உங்களை மாதிரித்தான் நானும் ஹைய்யோ ஹைய்யோன்னு தலையில அடிச்சுகிட்டேன்.

மார்ஸ் ஒடிஸி தான் தண்ணீர் செவ்வாயின் நிலப்பரப்புக்கு கீழே ஐஸ் இருக்கும்னு சொல்லிச்சி..

அப்பால ஸ்பிரிட், ஆப்பர்சூனிட்டி அப்படின்னு இரண்டு இயந்திர வண்டிகளை அனுப்பிச்சாங்க. இவையும் பல தகவல்களைக் கொடுத்தன, எவ்வள்வோ கஷ்டங்களுக்கிடையில் தண்ணீ கொஞம் கீழதான் இருக்கு அப்படின்னு சொல்லுது.. உப்புகளை அம்போன்னு விட்டுட்டு தண்ணி காணாமப் போயிருக்கு..

தண்ணீரால் உண்டாகும் சல்ஃபேட் உப்புகள் படிமங்கள், தண்ணீரால் உண்டாகும் வளைவான அரிப்புகள், கூழாங்கல் போன்ற நீலவண்ண கற்கள்.. இதையெல்லாம் காட்டி,.. செவ்வாயும் ஒரு காலத்தில் தண்ணியடிச்ச குடிமகந்தான் அப்படின்னு நிரூபிக்க முயற்சி செஞ்சது..


http://qt.exploratorium.edu/mars/opportunity/micro_imager/2005-03-10/1M163692417EFF5000P2956M2M1.JPG
கடைசியா அனுப்பின ஃபீனிக்ஸ் மார்ஸ் லேண்டர் நகராட்டியும், இருந்த இடத்தில் இருந்தே நல்ல நல்ல காரியங்கள் செய்யுது..

அது துருவப் பகுதியில் இறங்கி அங்க பனி கலந்த மண்ணைத் தோண்டியெடுத்து ஆராய்ந்தது, அதில் உறைநிலை வெப்பத்திற்குக் கீழேயும் தண்ணீரை திரவமா வைக்கும் பெர்குளோரேட் என்கிற வேதிப் பொருள் இருப்பதைச் சொன்னது.. மேகங்களில் இருந்து பனி பொழிவதையும் அது நிலத்தைத் தொடும் முன்னாலேயே ஆவியாகி விடுவதையும் சொன்னது.. குளிர்ல 5 மாசத்தோட இது செத்துப் போனாலும் நல்ல தகவல்கள்தான்.

பாலகன்
24-09-2009, 03:30 PM
ரொம்பவே நல்ல தகவல் தான் செவ் வாய் பற்றிய செய்தி. படிக்க படிக்க ஆனந்தம் பரவசம். இன்னும் போடுங்க....

தாமரை
24-09-2009, 03:48 PM
என் ஞாபக சக்திக்கு நானே என் முதுகைத் தட்டிக்கறேன்

Polar Lander was the second Mars probe to fail last year. The companion spacecraft, the $125 million Mars Climate Orbiter, either broke up or burned up in the martian atmosphere due to controllers' confusion over metric and English measurements in plotting its trajectory.


முழுத்தகவலுக்கு


https://www.space.com/scienceastronomy/solarsystem/mpl_report_000328.html


அப்பால மார்ஸ் சோஜர்னர் பிரச்சனையைப் பற்றி இந்த ஆவணத்தில்

http://course.cse.ust.hk/comp355/notes/Concurrency.pdf

26 மற்றும் 27 ஆம் பக்கங்களைப் பார்க்க..

:D :D :D

aren
24-09-2009, 04:27 PM
தாமரை அவர்களே,

இதை எழுதி முடித்தவுடன் இதை அப்படியே புத்தகமாக போடலாம். அவ்வளவும் முத்துக்கள். நம் மன்றம் வராதவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

தொடருங்கள்.

தாமரை
24-09-2009, 05:12 PM
இன்று நாசா, இஸ்ரோ இரண்டு பேரும் ஒரு அறிக்கை கொடுத்திருக்காங்க. அதாவது நிலாவில கண்டிப்பா தண்ணி இருக்காம்,

அப்போலோ காலங்களில் கொண்டுவரப்பட்ட மணல்களில் சிறிது தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதாக அறிந்தாலும் அது பூமியின் ஈரப்பசை எப்படியோ கலந்திருக்கலாம் என்று சந்தேகம் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்தது,,

தற்போது சந்திராயனில் இருந்து செய்யப்பட்ட ஆய்வில் நீர் ஹைட்ராக்ஸில் ஆகிய மூலக்கூறுகள் மட்டுமே கிரகிக்கும் அலைநீளங்கள் கிரகிக்கப்படுவதை அறிந்திருக்கிறார். (ஹைட்ராக்ஸில் என்பது ஒரு ஹைட்ரஜனும் ஒரு ஆக்சிஜனும் சேர்ந்தது. OH அதாவது ஆமாங்க அதேதான்,)

எப்படி இந்த ஹைட்ராக்ஸில் உருவாகி இருக்கும்? அதாவது சூரியப் புயலில் இருந்து வரும் ஹைட்ரஜன் அணுக்கள் நிலாவின் மேலிருக்கும் ஆக்சிஜனுடன் இணைந்து இது உண்டாகி இருக்கலாம் அப்படின்னும் இல்லை இல்லை வால் நட்சத்திரங்கள் மோதியதால் சிதறிய்வை என்றும் சண்டை போட்டுகிட்டு இருக்காங்க,

நிலவை உடைத்து ஆராய்ட்சி பண்ண அனுப்பின எல்கிராஸூம் இதையே சொல்கிறது.

1999 ல சனியை நோக்கி சென்ற காசினி இதை கொஞ்சமா காட்ட்டி இருந்தது, ஆனா அப்போ தெளிவான தகவல் இல்லை.

இப்படி ஹைட்ரேட் ஆவது அதாவது ஹைட்ராலிஸ்கள் உருவாவதும் அழிவதும் தினமும் நிலாவில் நடந்து கொண்டு இருக்கு என்று நமப ஆரம்பிச்சி இருக்காங்க..

சந்திராயன் சொன்ன பின்னாடி நாசாவும், இஸ்ரோவும் கூட்டா இந்த அறிக்கையை விட்டு இருப்பது ரொம்பவே சந்தோசமாக இருக்கு

பாலகன்
24-09-2009, 07:02 PM
அந்த தண்ணீரை மனிதர் பயன்படுத்த முடியுமா? அல்லது அது காணல் நீர் போலவா? அடுத்த ஆராய்ச்சியாக மனிதர் தங்கலாமா என்று ஆராய போவதாக சொல்கிறார்களே? இதெல்லாம் சாத்தியமா?

தாமரை
25-09-2009, 07:14 AM
நிலாவில் தெந்துருவப்பகுதியில் நிலத்தடியில் பனிக்கட்டியாக இருக்கும் நீரை (இருந்தால்) உபயோகிக்கலாம். ஆனால் இந்த ஹைட்ராக்ஸில் வடிவ நீரை உபயோகிப்பது கடினம். நிலாவை ஒரு பெட்ரோல் நிலையம் மாதிரி உபயோகிக்கலாம். ஏனென்றால் நிலாவில் ஹீலியம் 3 என்கிற தனிமம் இருக்கு. இது மிக்ச் சிறந்த எரிபொருள். இங்கிருந்து நிலாவிற்க்கு ஷட்டில் சர்வீஸ்ல போய் அங்கிருந்து செவ்வாய்க்கு இந்த ஹீலியம் 3 உபயோகிக்கும் இராக்கெட் வழியா போகலாம்.

அதே மாதிரி நிலவின் மறுபக்கத்தில் தொலை தொடர்பு கருவிகள் அமைக்கலாம்.

பல திட்டங்களை சொல்லி இருக்காரு...

நீங்க படிக்கலியா?


இதை நான் சொல்லலை. கலாம் சொல்றார்

http://www.rites.com/rites-journal/A.P.J.Abdul%20kalam.pdf

செவ்வாயில் இருக்கும் பனி வடிவலான நீர் உபயோகப்படுத்தலாம் எனத் தோணுது..

பால்ராஜ்
25-09-2009, 11:57 AM
அப்போ நிலாவுக்கு போனாலும் தண்ணி அடிக்கலாம்...??

எஸ் ஜே சூர்யா ரொம்ப சந்தோஷப்படுவார்.

இன்பா
30-09-2009, 05:57 AM
செவ்வாயில் இருக்கும் பனி வடிவலான நீர் உபயோகப்படுத்தலாம் எனத் தோணுது..

செவ்வாய் பத்தி இன்னும் ஏதாவது தகவல் இருக்கா ?

தாமரை
06-10-2009, 05:20 AM
இந்த மாத வானம் : அக்டோபர் அதிசயம்.

1. சுக்கிரன், சனி, புதன் மூன்றும் வானத்தில் ஓடிப்பிடிச்சு விளையாடுவதை அதிகாலை 5:15-5:45 க்குப் பார்க்கலாம்

நாளை காலை (7/10/2009) சுக்கிரன் புதன் சனி மூன்றும் ஒரே நேர் கோட்டில்

http://i326.photobucket.com/albums/k413/stselvan/sky07-10-2009-1.jpg


அக்டோபர் 8 ஆம் தேதி காலை புதனும் சனியும் மிக மிக அருகே

http://i326.photobucket.com/albums/k413/stselvan/Skyoct08.jpg


அக்டோபர் 10 ஆம் தேதி

சனி வெள்ளிக்கும் புதனுக்கும் இடையே

http://i326.photobucket.com/albums/k413/stselvan/skyoct10.jpg

அக்டோபர் 12, இரவு 1:40 க்கு மணிக்கு நிலாவை முத்தமிடும் செவ்வாய்

http://i326.photobucket.com/albums/k413/stselvan/skyoct12.jpg

அக்டோபர் 16, நிலவுக் கீற்றுடன் அதிகாலை 5:30 மணிக்கு வெள்ளியும், சனியும்

http://i326.photobucket.com/albums/k413/stselvan/skyoct16.jpg


இது மட்டுமல்லாமல் அக்டோபர் 20 - லிருந்து 22 வரை ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தில் (அதிகாலை 2:00 மணிக்கு கிழக்குப் பக்கம் தெரியும் மிருகசீரிச நட்சத்திரக் கூட்டத்தில் விண்கற்கள் விழுவதையும் காணலாம்.

தாமரை
06-10-2009, 02:22 PM
செவ்வாய்க்கு அடுத்து குருவைப் பார்ப்பதுதான் சரி...

http://upload.wikimedia.org/wikipedia/commons/e/e2/Jupiter.jpg

குரு என்னும் வியாழக்கிரகத்தை பற்றி வானியலார்கள் ரொம்ப காலத்துக்கு முன்பே பல சரியான கணிப்புகளை வச்சிருந்தாங்க...

1. குரு மிகப் பெரியதுன்னு தெரிஞ்ச கிரேக்கர்கள் அதை தேவர்களின் தலைவன் ஜூயூஸ் என்ற பேரை வைத்து ஜூபிடர் என அழைத்தார்கள்.

2. நம்ம ஊர்ல கூட குருவிற்கு தனி மரியாதைதான், குரு பளிச்சுன்னு வானத்தில் தெரியும்.

சைஸை வச்சுப் பார்த்தா வியாழன் சூரியனில் ஆயிரத்தில் ஒரு பங்குன்னு சொல்லலாம். (அதை விடக் கொஞ்சம் சின்னது)

குருவை இப்படிப் பாருங்க தலை சுத்தும்..

http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a3/790106-0203_Voyager_58M_to_31M_reduced.gif


குருவுக்கு 63 நிலா இருக்காம்.. இன்னொரு சிறப்பு என்னான்னா, குருவுக்கு சில சமயம் டெம்பரரரி நிலா கூட உண்டு... அதாவது ஒரு இரண்டு வருஷம் குருவைச் சுத்திட்டு ஓடிப்போயிடும்..

நிலாக்களைப் பற்றி அப்புறம் பார்ப்போம்..


முதல்ல நம்ம சூரியக் குடும்பத்தில் குருவோட மகிமையைப் பார்ப்போம்.

குருவோட விட்டம் 142,984 கிலோ மீட்டர், அதாவது பூமியை விட 12 மடங்கு பெரிசு. சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள், சந்திரன்கள் இன்னும் எல்லா தூசு தும்புன்னு எடுத்து ஒரு பக்கம் போட்டாலும் அதை விட இரண்டு மடங்குக்கும் அதிகமா எடை உள்ளது குரு.

நாம எல்லாம் எல்லா கிரகங்களும் சூரியனைச் சுத்துதுன்னு தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கோம்.. இல்லை என்பதை இந்த குரு நிரூபிக்குது....

அதைப் புரிஞ்சிக்க நாளைவரை பொறுங்க,

aren
06-10-2009, 03:09 PM
நாம எல்லாம் எல்லா கிரகங்களும் சூரியனைச் சுத்துதுன்னு தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கோம்.. இல்லை என்பதை இந்த குரு நிரூபிக்குது....

அதைப் புரிஞ்சிக்க நாளைவரை பொறுங்க,

இதென்ன புதுக்கதை. எல்லா கிரகங்களும் சூரியனைச் சுத்ததுன்னு நாம் கரெக்டா புரிஞ்சிகிட்டு இருக்கோம்னுதான் நான் நினைச்சேன்.

தாமரை
06-10-2009, 04:38 PM
இரண்டு பொருட்கள் இருக்குன்னு வச்சுக்குவோம். இவற்றின் ஒன்றுக்கொன்றான ஈர்ப்பு விசையில் சுழலுது என்றால் அவற்றின் பாதை கீழ் கண்டவாறுதான் இருக்கும்.

http://upload.wikimedia.org/wikipedia/commons/f/f2/Orbit2.gif

அதாவது இரு பொருளின் மையப்புள்ளிக்கும் இடைப்பட்ட ஒரு மையப்புள்ளியைச் சுற்றி இரண்டுமே சுற்றி வரும்.

இந்த மையப் புள்ளி எப்படி நிர்ணயமாகிறது என்பதில்தான் விஷயமே இருக்கு..

http://upload.wikimedia.org/wikipedia/commons/1/1f/Two-body_Jacobi_coordinates.JPG

இது இரண்டுக்கும் உள்ள பருமனைப் பொறுத்தது. இரண்டும் சம அளவான பருமன் இருந்தால் இந்தப் புள்ளி இரண்டுக்கும் மையத்தில் இருக்கும்.

சூரியனின் பருமன் மிகப் பெரிது. மற்ற கோள்களைப் பொறுத்தவரை இந்த மையப்புள்ளி சூரியனுக்கு உள்ளேயே அடங்கி விடுகிறது.. அதனால் சூரியன் சிறிதளவு தள்ளாடுவது போலத் தெரியும்.

ஆனால் குருவுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள மையப் புள்ளி சூரியனுக்கு வெளியே இருக்கிறது. சூரியனின் ஆரம் 1 என்றால் 1.068 அதாவது சூரியனின் மேற்பரப்புக்கு மேல் இந்தப் புள்ளி இருப்பதால் இந்தப் புள்ளியை சூரியன் சுற்றுகிறது.


இப்போ பூமி சூரியனைச் சுற்றி வருது. க்ருவும் சூரியனைச் சுற்றுது.. இதனால தெரிஞ்சோ தெரியாமலோ குரு பூமியையும் சுற்றி வருது...

அதாவது நாம பிரகாரத்தைச் சுத்தி வரும்போது பூசாரி முதற்கொண்டு சிலரையும் சேர்த்துச் சுத்தி வர்ரோமில்லையா அந்த மாதிரி...


மற்ற நட்சத்திரங்களில் கிரகங்கள் இருப்பதையும், சூரியக் குடும்பத்தின் நெப்டியூன், புளூட்டோ போன்ற கிரகங்களையும் இம்மாதிரி சூரியத் தள்ளாட்டக் கணக்கீட்டில் தான் இருக்குமென்று ஊகித்து பின்னர் அது சரி என்றும் கண்டறிந்தார்கள்.

அதாவது சூரியன் உட்பட சூரிய குடும்பத்து கோள்கள், குறுங்கோள்கள் அனைத்தும் ஈர்ப்புச் சமநிலை உள்ள ஒரு புள்ளியைச் சுற்றி வருகின்றன.

இதனால்தான்

இந்தக் கோட்பாட்டை விரித்துப் பார்க்கும் போது என்னதான் இந்தப் பேரண்டத்தில் எல்லாமே சுற்றிச் சுழன்றாலும் அனைத்திற்கும் மத்தியில் ஒரு புள்ளியில் ஈர்ப்ப்ச் சமத்துவம் இருக்கும் எனப் புரிகிறது. அதுவே பேரண்டத்தின் மையம்.

நியூட்டனின் லா ஆஃப் மோஷன், கெப்ளரின் விதிகளைப் படித்தால் இது மிகத் தெளிவாக விளங்கும்.

குரு சூரியனைச் சுற்றி வர 11.86 வருடங்கள் ஆகின்றன, பூமி சூரியனைச் சுற்றும் போது ஒவ்வொரு 398 நாட்களுக்கு ஒரு முறை சுரியனுக்கும் குருவுக்கும் இடையில் வரும்.

குருவும் சுற்றி வருகிறது, பூமியும் சுற்றி வருகிறது. இதனல் வானத்தில் குரு நமது கண்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருவது போலத் தெரிகிறது.

12 என்றதும் உங்களுக்கு டக்குன்னு ஞாபகம் வருவது என்ன?

12 ராசிகள்..

சூரியன் 12 மாதத்தில் ராசிமண்டல்த்தில் சஞ்சாரம் செய்யுது, குரு 12 வருடத்தில் இராசி மண்டலத்தில் சஞ்சாரம் பண்ணுது... அப்போ ஏறத்தாழ சூரியன் அப்பான்னா, குருவை பெரியண்ணான்னு சொல்லலாம் தானே.

குருவுக்கு இன்னும் பல சிறப்புகள் இருக்கு

இன்பா
07-10-2009, 09:12 AM
அடிக்கடி ப்ரேக் போடாதிங்கணா...!!!
ஒரேடியா எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியாது தான்... இருந்தாலும் ஆர்வம் :)

aren
07-10-2009, 01:12 PM
எனக்கும் அதே எண்ணம்தான் இன்பா. தாமரை அவர்களின் நேரம் அதற்கு ஒத்துவரவேண்டுமே.

தாமரை
08-10-2009, 05:13 PM
இவ்வளவு அவசரப்பட்டா எப்படி? அப்புறம் கேள்வி கேட்க ஆரம்பிச்சிருவேன்.

குரு இருக்காரே குரு அவர் தன்னைத் தானே சுத்திக்க ஆகற காலம் 10 மணி நேரத்துக்கும் கொஞ்சம் குறைவு.

குரு கோளமா இருந்தாலும் நடுப்பகுதி குண்டா இருக்கும். உயரம் கொஞ்சம் குறைச்சல். நம்ம பூமி மாதிரியே..

அப்புறம் இதில அதிகமா இருக்கிறது என்ன தெரியுமா? ஹைட்ரஜனும் (89%)ஹீலியமும்தான்(10%). மிச்சம் கொஞ்சமா அம்மோனியா, நியான், மீத்தேன், தண்ணி, கொஞ்சம் கற்கள் வெறும் கேஸ் தானா குருன்னு யோசிக்காதீங்க.. வாயுவா, திரவமா, திடப்பொருளா இப்படி அனைத்து வடிவங்களிலும் இதே ஹைடரஜனும் ஹீலியமும் இருக்கு.

சூரியனிலும் ஹைட்ரஜனும் ஹீலியமும்தான். இங்கயும் ஹைட்ரஜனும் ஹீலியமும்தான். ஆனால் குரு சூரியன் ஆகலை. காரணம் அணுக்கரு பிணைப்பை உண்டாக்கும் அளவுக்கு வெப்பம் உருவாக இன்னும் பல்மடங்கு பெருசா இருக்கணுமாம்.

குருவோட கரு பூமியைப் போல 10 லிருந்து 15 மடங்கு வரை பெரிதான திடப்பாறைகள்..(முக்கியமா ஹைட்ரஜன், ஹீலியம்

அப்புறம் அதுக்கு மேல திரவ வடிவலான வாயுக்கள்.. அப்புறம் அதுக்கு மேல வாயு வடிவலான வாயுக்கள்..(ஹைய்யோ ஹைய்யோ)

இந்த திரவ வடிவிலான ஹைட்ரஜன் இருக்கே,, அங்கே அதிப்யங்கர அழுத்தம் இருக்கும்.. பல்லாயிரம் மடங்கு நமது கடல் ஆழத்தை விட, இந்த திரவத்தை திரவ உலோக ஹைட்ரஜன் அப்படின்னு சொல்றாங்க. எவ்வளவு அழுத்தம்னா, நமக்கு கண்ணா முழி பிதுங்கிப் போறதைப் போல ஹைடரஜனில் உள்ள புரோட்டானும் எலெக்ட்ரானும் கூட பிதுங்கிறுது..

திட உட்கரு மேல இந்த திரவ ஹைட்ரஜன் இருக்கறதாலயும், இப்படி திருமண வாழ்க்கை பிரஷர் தாங்காம எலெக்ட்ரானும் புரோட்டானும் டைவர்ஸீக்கு அலையற கணவன் மனைவி மாதிரி அலையறதாலும், குருவில் மிகச் சக்தி வாய்ந்த காந்தப் புலம் உண்டாகுது...பூமியை விட 14 மடங்கு சக்தி உள்ளது.

காந்தப் புலம்னா அடுத்தது என்ன? கரெக்ட் சிவா.ஜி துருவ ஓளி ந்டனம். இது குருவிலும் உண்டு..

http://upload.wikimedia.org/wikipedia/commons/8/8e/Jupiter.Aurora.HST.UV.jpg

குரு தன்னைத் தானே சுத்திக்கறதில இன்னொரு விஷேசம் என்னன்னா, மையப்பகுதியை விட துருவப் பகுதிகள் கொஞ்சம் ஸ்லோதான்.. 5 நிமிஷம் மெதுவாச் சுத்துது..

குரு ஒரு திருமணமான ஆனால் திருமணத்தை இரகசியமா வச்சிகிட்டு இருக்கிற கிரகம்.

புரியலையா? குருவும் மோதிரம் போட்டுகிட்டு இருக்கிற, அதாங்க சனிக்கு இருக்கே அது மாதிரி வளையம் (குருவுக்கு 3 வளையம் இருக்கு, ஆனா சாதாரணமா தெரியாது) போட்டுகிட்டு இருக்கு, இந்த வளையத்தில் இருப்பது எல்லாம் ஐஸ் கலந்த தூசுகள்.

http://upload.wikimedia.org/wikipedia/commons/2/29/PIA01627_Ringe.jpg

அப்புறம் குரு தன்னோட அச்சில் 3.03 டிகிர்தான் சாஞ்சு இருக்கு, இதனால பருவ கால வேறுபாடுகள் ரொம்பவும் கம்மி.. ஆனா... ஆனா எக்கச்சக்க புயல்கள் உண்டு...

தொட்ரும்

aren
08-10-2009, 11:57 PM
குரு மிகவும் சக்திவாய்ந்த கிரகம்னு சொல்லுங்க. பல விஷயங்கள் உங்கள் மூலம் எங்களுக்குக் கிடைக்கிறது. தொடருங்கள்.

பாலகன்
09-10-2009, 03:46 AM
படிக்க படிக்க சுவாரஸ்யமா இருக்கு... குரு அம்பூட்டு பெரிய ஆளா... ஆச்சர்யம்.

அப்புறம்.............

தகவல்களுக்கு நன்றி தாமரை அண்ணே

தாமரை
12-10-2009, 05:15 PM
குரு சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகம். குருவோட அளவு பூமியை போல 1321 மடங்கு என்றாலும் எடை 318 மடங்குதான். முன்னரே பார்த்தோம் இல்லையா? பூமிதான் ரொம்ப இறுகிய கிரகம் என்று..

குருவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையை விட 2.5 மடங்கு அதிகம். குரு வருஷா வருஷம் 2 செ.மீ அளவு சுருங்கி வருகிறது. பயப்படாதீங்க இதன் காரணம் இதில் அதிக அளவு விண்கற்கள் விழ ஆரம்பித்து இதனால் இதன் ஈர்ப்பு விசை அதிகரிப்பதே காரணமாகும்..

குரு ஒரு போலீஸ்காரர் மாதிரி அதன் வழியில வருகிற அத்தனை வழிதவறிய குழந்தைகளையும் பிடிச்சு வச்சுக்குது.

சூரியனிடமிருந்து 775 மில்லியன் மைல்கள் தொலைவில் சுற்றி வரும் குரு,

நம்ம கிரகங்கள் சுற்றி வரக்கூடிய சுற்றுப் பாதைகள் சூரியனுடைய மையப்பகுதியை விட குருவோட மையப்பகுதிக்கு கிடைமட்டமா இருக்குன்னு சொல்லலாம்.

குரு ரொம்ப வேகமா சுததறதால நம்ம ஊரில பருவக்காற்றுகள் இருக்கிற மாதிரி அங்கு சூறாவளி மிக அதிகம். அதிவும் எதிர் எதிர் திசைகளில் அதைவேகமா நகருவதைப் தொலை நோக்கிகளில் பார்க்கலாம்.

http://upload.wikimedia.org/wikipedia/commons/7/76/PIA02863_-_Jupiter_surface_motion_animation.gif

இந்த மேகங்கள் அம்மோனியம் ஹைட்ரோ சல்ஃபைடால் ஆனவை. இவை 360 கி.மீ வேகத்தில் வீசுகின்றன. வண்ணப்பட்டைகள் சூரிய ஒளி விலகல், மேகங்களில் உள்ள வேதிப் பொருள்கள் இப்படி பல விதங்களில் வேறுபடுகின்றன.

மேகங்களில் சிறிய அளவிலான தண்ணீரும், மெலிதான ஒளி ஊடுருவும் வகையும் இன்னும் சில வகைகளும் இருப்பதாக தெரிகிறது.. குருவில் மின்னல்களும் இருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள்.

இன்னொரு விஷயம் என்னன்னா, சூரியனில் இருந்து பெரும் வெப்பத்தை விட அதிக வெப்பத்தை குரு வெளியிடுகிறது.

சூரிய மண்டலத்தில் இன்னொரு சூரியன் உண்டாகும் என்றால் அது குருவாக இருக்கும்.

குருவின் நிலநடுக்கோட்டுப் பகுதிக்கு 22 டிகிரி தெற்குப்பகுதியில் ஒரு பெரிய சிவப்புப் புள்ளி தெரியும். இது மிகப் பெரிய நிலை கொண்ட சூறாவளி ஆகும். இதன் அளவெ இரண்டு மூன்று பூமியின் அளவைப் போன்றதாகும். 300 / 400 வருடங்களாக இதை வான்வியலார்கள் பார்த்துகிட்டுதான் இருக்காங்க.

http://upload.wikimedia.org/wikipedia/commons/e/ec/Great_Red_Spot_From_Voyager_1.jpg

செவ்வாயில் இறங்கிய மாதிரி குருவில் இறங்க முடியாது.. ஆனா என்ன? அங்க இருக்கிற சந்திரன் யூரோப்பா வில் தண்ணீர் ஆக்சிஜன் எல்லாம் இருக்கு அப்படின்னு சொல்றாங்க.. வெப்பநிலை மட்டும்தான் ரொம்பக் குறைச்சல். குருவின் காந்தப் புல பாதுகாப்பும் இருக்கறதால கதிரியக்க பிர்ச்சனைகளும் கம்மி..

ஆனா மிகப் பெரிய பிரச்சனை ஒண்ணு இருக்கு,,, குருவை முழுசா பார்த்த பின்னால் அந்த ஸ்டார் வார்ஸை பார்க்கலாம்..

இன்பா
16-10-2009, 08:57 AM
குரு அம்பூட்டு பெரிய ஆளா... ஆச்சர்யம்.

ஆமாங்கோ...!!!!

கீதம்
17-10-2009, 05:28 AM
அதி நுட்பமான வானவியல் தகவல்களை ஆர்வத்துடன் படிக்கும் வகையில் அழகுத்தமிழில் எளிமையாகச் சொல்லி விளங்கவைக்கும் தங்களின் முயற்சி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. வாழ்த்துகள் தாமரை அவர்களே.

தாமரை
19-11-2009, 11:06 AM
விண்கல் மழையைப் பற்றி முன்பே படித்தோம். வானில் ஒரு தீபாவளி என்ற தலைப்பில்..

அதில் நவம்பர் மாதம் நடக்கும் லியோனாட் மிடியார் ஷவர் அதாவது சிம்ம ராசியில் நடக்கும் விண்கல் மழையைப் பற்றி சொல்லி இருந்தேன்..

மேற்கு அமெரிக்கப் பகுதியில் நேற்று அது வர்ணஜாலம் நடத்தி இருக்கு...

http://www.youtube.com/watch?v=OB9GgFAghqs

அது பற்றி செய்திகளையும், காட்சிகளையும் இங்கே பாருங்க.

http://www.ksl.com/?nid=148&sid=8714738


இரவை பகலாக்கிய இந்த விண்கல் வீழ்ச்சி...

நள்ளிரவு 12:07 க்கு ஒரு இராட்சச நீல வெடிப்பினை பலர் யூடா மற்றும் மேற்கு அமெரிக்கப் பகுதி மக்கள் கண்டனர். இரவினைப் பகலாக்கிய அது வெளிச்சத்தைக் கொண்டு இயங்கும் தெருவிளக்குகளை ஏமாற வைத்தது..

மணிக்கு 80 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியின் வளி மண்டலத்தில் நுழைந்த அந்த விண்கல் பூமிக்கு மேலோ 100 கிலோ மீட்டர் உயரத்தில் வெடித்து கண்கொள்ளா காட்சியினைக் காட்டி தீபாவளி கொண்டாடி இருக்கிறது..

ஒரு நீண்ட ஒளி அம்பு வெடித்து ஐந்தாறு தீப்பந்துகளாகச் சிதறிய இந்த கண்கொள்ளா காட்சி வெகு அரிதான ஒன்று..

வழக்கம் போழ இது ஒரு ஏவுகணைத் தாக்குதலோ என்று பயந்த சிலர் அவசரப் போலீஸ் உதவிக்கு அழைத்து இருக்கிறார்கள்..

பூமியில் இதனால் எந்த சேதமும் இல்லை என அறியப் படுகிறது..

aren
19-11-2009, 12:34 PM
பல புதிய விஷயங்களை அருமையான அழகான தமிழில் எழுதி புரியாத எங்களுக்கும் புரிய வைக்கும் தாமரை அவர்களுக்கு என் நன்றி.

தாமரை
24-11-2009, 11:33 AM
குருவை இதுவரை ஆராய்ந்த செயற்கைக் கோள்கள்

பயனியர் 10, 11(குருவை ஆராய்ந்தவை); வாயேஜர் 1,2(குருவின் நிலவுகளை ஆராய); உலைசஸ், காசினி(சனிக்கிரகத்தை ஆராய), நியூ ஹாரிசான்ஸ்.(ப்ளூட்டோவை ஆராய)

ஷூ மேக்கர் வால் நட்சத்திரம், 1995 ல் தனது இறுதிப் பயணத்தில் 21 துண்டுகளாகச் சிதறி குருவின் மேல் விழுந்ததை கலிலியோ படமெடுத்தது.

குருவின் மேல் எந்த செயற்கைக் கோளையும் இறக்கி ஆராய்ந்து பயனில்லை. குருவை விட நம்மை மிகவும் கவரப் போவது குருவின் நிலவுகள் தான். ஏன்னா ஏன்னா, குருவின் நிலவான யூரோப்பாவில் தண்ணீர் பனிக்கட்டிகளாக இருக்கு.. .

ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுபிடித்த பலப் பல சூரியக் குடும்பத்தைச் சாராத கோள்கள் குரு மாதிரி வாயு அடர்த்தி மிக்க கோள்கள்தான். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு 64 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமி, வெள்ளி, செவ்வாய் மாதிரி பாறைகளால் ஆன ஒரு கிரகத்தைக் கண்டு பிடிச்சி இருக்காங்க.

சூரியக் குடும்பம் ஒரு அரசியல் மேடைன்னா அதிக கல்வீச்சுக்கு ஆளாகும் முக்கியப் பேச்சாளர் குருதான்.

இதில ஒரு குழப்பம் இருக்குங்கோ.. ஒரு பக்கம் இத்தனைக் கல்வீச்சை குரு தாங்கினாலும் சூரியக் குடும்ப மேடை மேல கல்வீச்சு விழுவதற்கும் குருதான் காரணம் அப்படின்னும் சொல்றாங்க.

சூரியக் குடும்பத்தைப் பொருத்தவரை பெரிய கிரகங்கள் மட்டுமில்லாம விண்கற்கள் நிறைந்த பகுதிகளும் இருக்கு,

குருவுக்கும் செவ்வாய்க்கும் மத்தியில் அஸ்ட்ராய்ட் பெல்ட் (விண்கல் துகள்கள்) இருக்கு. நெப்ட்யூனுக்கு வெளியே குயிப்பர் பெல்ட் இருக்கு. இதிலதான் புளூட்டோ, ஹௌமியா மேக்மேக் மாதிரி குறுங்கோள்களும் இருக்கு. அப்புறம் ஸ்கேட்டர்ட் டிஸ்க் எனப்படும் சின்ன சின்ன குறுங்கோள்களைக் கொண்ட, கோள்களின் சுற்றும் தளத்திற்கு வேறு கோணத்தில அமைந்த வட்டு, அதுக்கும் வெளிய ஊர்ட் மேகம் என்கிர மாதிரி பல விண்துசிக் கற்கள் கொண்ட மேகம் இருக்கு.

நம்ம குருவோட ஈர்ப்பு விசையால இங்க இருந்து கற்கள் பறந்த சூரியக் குடும்பத்தில வீசப்படறதாக வதந்தி உலவுது.

அதனால குருவை பார்த்து நாயகன் படம் மாதிரி நீங்க நல்லவரா கெட்டவரா அப்படின்னு கேட்டா .. தெரியலையேம்மா அப்படின்னு சூப்பர் பர்ஃபார்மன்ஸ் குடுக்கும்..

குருவை விட நமக்கு அதிக சுவாரஸ்யத்தைத் தரக் கூடியது அதோட 63+ சந்திரன்கள் தான்.

ஏன் 63+? குருவுக்கு தற்காலிக சந்திரன்கள் உண்டு.. அதாவது போற போக்கில சில பெரிய விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் கொஞ்ச நாள் குருவைச் சுத்திட்டு போறது உண்டு..

http://www.newkerala.com/nkfullnews-1-111557.html

இந்தச் செய்தியைப் பாருங்க.. குஷிதா முரமத்ஸூ (ஹிந்தியில் மத் என்றால் வேணாம் னு அர்த்தம். பாருங்களேன், குஷி தா முறைக்காதேன்னு சொல்ற மாதிரி பெயர் வச்சவங்களுக்கு தமிழ் - ஹிந்தி தெரியாதுன்னு நினைக்கிறேன்.) 1949 லிருந்து 1961 வரை சுற்றி வந்ததாம்.

குருவுக்கும் செவ்வாய்க்கும் இடையில் உள்ள அஸ்ட்ராய்ட் பெல்ட்டிலிருந்து சில கற்களை இப்படி தற்காலிக மனைவியா (18 கற்கள் என சிமுலேஷன் பண்ணிச் சொல்றாரங்க) மாத்திக்கிறதா குஷிதோ ஓட்சுகா சொல்றார்.

ஷூ மேக்கரும் இப்படித்தான் குருவால் கவரப் பட்டதாம்.

குரு காதல் மன்னன்தான்.

தொடரும்

ஆதி
24-11-2009, 12:21 PM
குரு காதல் மன்னன், நல்ல பட்டம் அண்ணா..

எண் கணிதம் சுக்ரனைதான் காதல் மன்னன் நு சொல்லுது.. சரி இதை ஏன் இங்க சொல்றேன்.. ஏன்னா உங்க ராசியும் சுக்ரன் தானே அண்ணா.. :)

தாமரை
24-11-2009, 12:33 PM
குரு காதல் மன்னன், நல்ல பட்டம் அண்ணா..

எண் கணிதம் சுக்ரனைதான் காதல் மன்னன் நு சொல்லுது.. சரி இதை ஏன் இங்க சொல்றேன்.. ஏன்னா உங்க ராசியும் சுக்ரன் தானே அண்ணா.. :)

என் ராசியதிபதி குரு.. லக்னாதிபதி சனி...

சுக்ரனை காதலுக்கு அதிபதியாக உலக ஜோதிடங்கள் சொன்னாலும் புத்திரக் காரகனாக குருவைச் சொல்லும். குருவைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் சந்திரன்கள் இருப்பதை இது குறிப்பதாகக் கொள்ளலாம்.

சூரியன் - பித்ரு காரகன் - அப்பா - பூமி சூரியனில் இருந்து பிறந்தது

சந்திரன் - மாத்ரு காரகன் - அம்மா - சந்திரன் உண்டாவதற்காக ஏற்பட்ட விபத்தில்தான் உயிர்கள் உண்டாகும் வாய்ப்பு பூமிக்கு கிடைத்ததாக நம்பப்படுகிறது

செவ்வாய் - சகோதரக் காரகன் - பூமியைப் போல அமைப்பு கொண்ட கிரகம்.

சுக்கிரன் - களத்திரக் காரகன் - மனைவி - பூமியைப் போலவே அமைப்பும் பூமியுடன் ஒத்திசைவு கொண்டும் சுற்றி வருவது

புதன் - மாமன் காரகன் - எப்பவும் அப்பா கூட சுத்தற அம்மாவின் தம்பி.
சனி - ஆயுள்காரகன் - இதை சனிக்கிரகம் பற்றி பார்த்த பின்னால சொல்றேன்.

இன்பா
25-11-2009, 10:25 AM
தாமரை அண்ணா நீங்க அடிக்கடி இந்த திரிக்கு லீவ் விட்டுற்ரீங்க... அதுதான் கஷ்டம்.... சரி காத்திருக்கீரேன்...

தாமரை
25-11-2009, 10:27 AM
கலிலியோ.. 1610 ல் தன்னுடைய தொலைநோக்கியை குருவைப் பார்த்து திருப்பிய போது நாலு சந்திரன்களைக் கண்டறிந்தார். இவை நாலும் கலிலியோவின் சந்திரன்கள் என அழைக்கப்படுகின்றன. இதை வச்சுதான் பூமிதான் நடுசெண்டர்ல இருக்கு அப்படிங்கற வாதத்தையே உடைச்சார் கலிலியோ.

அந்த நாலு மூணுகள் (அய்ய, சந்திரன்களப்பா)

ஐயோ (தெரியுமே! உங்களுக்குச் சிரிப்பு வருமே,, அதைப் பத்தி படிக்கும் போது சரியான பேர்தான்னு சொல்லுவீங்க..)

யூரோப்பா
கேனிமீட்
கலிஸ்டோ

ஐயோ!!

குருவிலிருந்து சராசரி தூரம் : 421,700 km
ஆரத்தின் அளவு : 1821 கிலோ மீட்டர்கள்
குருவிலிருந்து 5 வது சந்திரன்..
குருவைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் 42 மணி நேரம்
தன்னைத் தானே சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் 42 மணி நேரம்


http://www2.jpl.nasa.gov/galileo/ganymede/P47971_full.jpg

படத்தைப் பார்த்தீங்கள்ள.. கலரைப் பார்த்த உடனே என்ன தோணுது?

ஆமாங்க ஆமாம்.. கலரைப் பார்த்த உடனே புரியவேண்டியது ஐயோ வில் எக்கச்சக்கமா எரிமலைகள் இருக்கு. அவற்றில் சில பல இன்னும் நெருப்பைக் கக்கிகிட்டும் இருக்கு.

http://www.solarviews.com/browse/jup/iosur.jpg

வாயேஜர் இந்தச் சந்திரனை எட்டிப் பார்த்தப்ப எதிர் பார்த்தது சரி ஐயோ நம்ம நிலா மாதிரி குண்டும் குழியுமா இருக்கும்னு. ஆனா முன்னூறு கிலோ மீட்டர் உயரத்துக்கு அக்னிக் குழம்பைக் கக்கும் எரிமலைகள் இருக்கும்னு யாருமே நினைக்கவே இல்ல. எக்கச்சக்கமான எர்மலையின் வாய்கள் அக்னி ஜொள்ளு விடுவதை இங்க பார்க்கலாம்.

http://www.solarviews.com/raw/jup/iovolc2.gif

அதுவும் வாயேஜர் 1 போய், வாயேஜர் 2 வர்ரதுக்குள்ள எக்கச் சக்க எரிமலைகள் அணைந்து போக புதுசா எக்கச் சக்க எரிமலைகள் உண்டாகி இருந்தது.

http://upload.wikimedia.org/wikipedia/commons/1/12/Tvashtarvideo.gif

எரிமலைகளின் வாய் பல கிலோமீட்டர்கள் ஆழம் உள்ளது. (உங்க வாயை போட்டிக்குப் பிளக்காதீங்க.. உங்களால அதோட போட்டிப் போட முடியாது :D :D :D) அங்கே அடியாழத்தில் உருகிய கந்தக ஆக்சைடு ஏரிகளே இருக்காம். (அதனால தான் அந்தக் கலர்)

ஐயோ வின் சில இடங்களில் வெப்பநிலை 2000 கெல்வின் ஆகவும்(எரிமலை வாய்கள்), சில இடங்களில் 130 கெல்வின் ஆகவும் இருக்காம்.


ஐயோவில் 100 லிருந்து 150 மலைத் தொடர்கள் வரை இருக்கலாம்னு சொல்றாங்க. ஐயோவில் தென் துருவப் பகுதியில் இருக்கற மலை நம்ம எவரெஸ்டை இமயமலையை விட இரண்டு மடங்கு உயரமானது. சாதாரணமா மலைகள் 6 கி.மீ உயரமும் (எவரெஸ்ட் 8.5 கிலோ மீட்டர் உயரம்னு வச்சுக்குங்க.) 150 கிலோ மீட்டர் நீளமும் இருக்கு, மலைகள் உருவாகக் காரணம் டெக்டானிக் தகடுகள் நகருவதுதான்னு யூகிக்கிறாங்க.

http://www.solarviews.com/browse/jup/iomoun.jpg

இதையெல்லாம் வச்சுப் பார்க்கும்போது ஐயோ ரொம்பச் சின்ன வயசு சந்திரன்னு சொல்லலாம்.

ஐயோ என்பது கிரேக்க கடவுள்களின் தலைவன் ஜூயூஸோட சின்ன வீடு, தன் மனைவிக்குத் தெரியாம இளம் பசுங்கன்று உருவத்தில் பதுக்கி வச்சிருப்பதா சொல்வாங்க. நம்ம புராணத்தில எமனோட மனைவி.

இத்தனை எரிமலைகள் இருந்தா என்னாகும்? அங்க இருக்கிற காத்தெல்லாம் சல்ஃபர் டை ஆக்சைடு தாங்க. இது மிக அழுத்தமான ஆனால் மெல்லிய வாய்மண்டலம் கொண்டது. அதனால இங்க ஒரு செயற்கைக் கோள் இறங்கணும்னா.. மெல்ல ராக்கெட் வேகம் குறைச்சி ரிவர்ஸ்ல மெது மெதுவா இறங்கணும்..

இன்னொரு முக்கியமான விஷயம்

இந்த் ஐயோ குருவைச் சுற்றி வரும்போது குருவோட காந்தப் புலத்தை வெட்டி வருகிறது. இதனால என்ன உண்டாகும்? ஆமாங்க ஆமாம். மின்சாரம் தான். இதனால் உண்டாகும் வெப்பம் குறைவுதான். ஆனால் உண்டாகும் மின்சாரம் 1 ட்ரில்லியன் வாட்ஸூக்கு மேலயே இருக்கும்னு சொல்றாங்க. (இப்ப உண்மையாவே ஐயோன்னு சொல்லத் தோணுதில்ல?

படத்தைப் பாருங்க..

http://upload.wikimedia.org/wikipedia/commons/2/2d/Jupiter_magnetosphere_schematic.jpg

இதனால ஹெவெல்ஸ் சர்க்யூட் பிரேக்கர் விளம்பரத்தில் ஷாக்கடிச்சி நிக்கிற முடிகள் மாதிரி ஐயோ வில் உள்ள துகள்கள் நட்டுகிட்டு ஐயோவை விட்டு விலகிப் போகுது... இதனாலும் குருவின் காந்தப் புலம் அதிகரிக்குது.

ஐயோவை கிரகண காலத்தில் (அதாவது குருவின் நிழலில் இருந்த காலத்தில் புடிச்ச ஃபோட்டோவைப் பார்த்தீங்கன்னா புரியும்..

http://upload.wikimedia.org/wikipedia/commons/6/62/Io_Aurorae_color.jpg

எப்படி ஒளிருது பாத்தீங்கல்ல.


ஐயோவின் உட்புறம் எப்படி இருக்கும்?

http://www.solarviews.com/browse/jup/ioint.jpg

இரும்பும் நிக்கலும் கலந்த உலோக திட உட்கரு, அதற்கு மேல் சிலிகேட்டினால் ஆன பாறைக்குழம்பு/பாறை/மணல் பகுதிகள் கொண்டது.

ஐயோ, யூரோப்பா இரண்டும் ஏறத்தாழ ஒரே சைஸ்..

ஐயோ, யூரோப்பா, கனிமீட் மூணும் ஒத்திசைவு கொண்ட சுற்றும் வேகம் உள்ளவை..

கனிமீட் 1 சுத்து சுத்தினா, யூரோப்பா இரண்டு சுத்தும், ஐயோ நாலு சுத்தும் சுத்தும்.

http://upload.wikimedia.org/wikipedia/commons/8/83/Galilean_moon_Laplace_resonance_animation.gif


சரி சரி அடுத்து நாம் யூரோப்பாவைப் பார்ப்போம்..

தொடரும்

தாமரை
25-11-2009, 12:52 PM
ஐயோவைப் பற்றிய உதிரித் தகவல்..

ஐயோவின் எரிமலைத் தூசிகள் பலசமயம் ஐயோவின் ஈர்ப்பு விசையைத் தாண்டி குருவைச் சுற்ற ஆரம்பித்து விடுகின்றன.

இதைப் பார்க்கும் போது.. ஐயோவின் மீது எரிகற்கள் அதிகம் விழாத காரணம் குருவினால் அவை ஈர்க்கப்பட்டு விடுவதே என எண்ணத் தோணுது...

தாமரை
26-11-2009, 04:45 AM
சரி சரி.. இந்த வீடியோவைப் பார்த்து கொஞ்சம் பீதி / பேதியாகுங்க...

http://www.space.com/common/media/video/player.php?videoRef=080401-solar-tsunami

மே 19, 2007 ல சூரியனை ஆராய்ச்சி செய்யும் சோஹோ விண்கலம் இதைப் பதிவு செஞ்சிருக்கு..

இது சூரியச் சுனாமி...

ஆமாங்க ஆமாம்.. சூரியனில் சுனாமி ஏற்பட்டது தோற்றப் பிழையா இல்லை நிஜமா என ஆராய்ந்து கொண்டிருந்த நாசா இது உண்மையான சுனாமிதான் அப்படின்னு அறிக்கை விட்டிருக்கு...


http://www.space.com/common/media/video/player.php?videoRef=SP_091125_soalr-tsunami

http://www.space.com/scienceastronomy/080401-stellar-tsunami.html

ஒரு மாபெரும் அலை.. அதன் உயரம் பூமியை விட அதிகம்,(அதாவது 12000 கிலோ மீட்டருக்கு மேல.. ) கொதிக்கும் பிளாஸ்மா.. ஒரு கல்லை குளத்தில் போட்டா உண்டாவதைப் போன்ற வட்ட அலைகள்...

கண்ணை மூடிகிட்டு கற்பனை செய்ங்க...

ஸ்டீரியோ விண்கலம் பதிவு செஞ்ச சுனாமி அலை

ஒரு இலட்சம் கிலோ மீட்டர் உயரம், நொடிக்கு 250 கி.மீ வேகம்

இது எதனால உண்டாகுது.. இதனால் ஏற்படும் பாதிப்புகள் நன்மைகள் என்ன என்பது தெரிஞ்சா உடனே சொல்றேன்

குணமதி
26-11-2009, 06:48 AM
புதிய செய்தி.

மேலும் விளக்கங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

தாமரை
26-11-2009, 08:11 AM
http://upload.wikimedia.org/wikipedia/commons/5/54/Europa-moon.jpg


படத்தைப் பார்த்தாலே நாக்கில எச்சில் ஊருதில்ல..

சர்க்கரைப் பொடி தூவிய சாக்லேட் உருண்டை மாதிரியான இந்த யூரோப்பா ரொம்ப சுவாரஸ்யமான சந்திரன் கலிலியோ கண்டுபிடிச்ச நாலு சந்திரன்ல இது சின்னது.

இதோட குறுக்களவு 3100 கிலோ மீட்டர். நம்ம சந்திரனை விட இது கொஞ்சம் சின்னது.

ஆனா ஒரு விஷயம் கேளுங்க. சூரியக் குடும்பத்திலயே மொழ மொழன்னு யம்மா யம்மா அப்படின்னு இந்தச் சந்திரனைப் பார்த்துப் பாடலாம். அவ்வளவு ஸ்மூத்தா இருக்கும்.

பெண்ணோட முகத்தை ஏன் இந்தச் சந்திரனுக்கு ஒப்பிடலைன்னு கூட அப்பப்ப மனசில கேள்வி வரும்னா பார்த்துக்கோங்களேன்,

ஈரோப்பாவின் மேலோடு சிலிக்கேட் அதாங்க நம்ம மணலால் ஆனது. இதன் உட்கரு இரும்பால் ஆனதா இருக்கும்னு கணிப்பு.

இதை விட முக்கியமான மூணு விஷயங்கள் இருக்கு

1. இதன் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் இருக்கு (யுரேகா, யுரேகா...)
2. இதன் மேலோடு என்பது உறைந்த தண்ணீர்..
3. இந்த மேலோட்டுக்கு கீழே திரவ வடிவிலான நீர் இருப்பதாக சொல்றாங்க

http://www.solarviews.com/raw/jup/eurint.jpg

இரும்பு உட்கரு, அதைச் சுற்றி இறுகிய மணற் பாறைகள், அதன் மேல் 100 கிலோ மீட்டர் உயரத்திற்குத் தண்ணீர், அதன் மேல் உறைந்த நீர், அதன் மேல் ஆக்சிஜன் இருக்கும் வளி மண்டலம்..

http://upload.wikimedia.org/wikipedia/commons/8/88/EuropaInterior1.jpg

ஈரோப்பா மேல இருக்கிற வரிவடிவங்கள் மட்டுமே அதோட வழவழப்பான மேனியில் இருக்கும் சிறிய மேடுபள்ளங்கள்

http://upload.wikimedia.org/wikipedia/commons/4/45/Europa_g1_true.jpg

இவையெல்லாம் சிறிய சிறிய பிளவுகள். இது யூரோப்பாவின் மேலோட்டுத் டெக்டானிக் தடுகள் நகர்வதால் உண்டாவதாக நம்பப் படுகிறது.. இந்தப் பிளவுகள் அதிகபட்சம் 20 கி.மீ அகலம் இருக்கலாம் என நம்பறாங்க

இந்தப் பிளவுகள் டெக்டானிக் பிளவுகள் நகருவதால் உண்டாகும் வெற்றிடத்தை கீழ இருக்கிற தண்ணீர் பொங்கி உறிவதால் கலர் மாறி கோடு கோடா தெரியறது அப்படின்னு தியரி சொல்றாங்க.

இங்கயம் அதிகமா விண்கல் விழிந்து அம்மிக்கல் மாதிரி கொத்தல் கிடையாது. அதனால யூரோப்பாவும் இளமை பொங்கும் சந்திரனாத்தான் இருக்கணும்னு சொல்றாங்க..


பாருங்க.. பக்கத்தில ஐயோல எக்கச் சக்கமா கரண்ட் இருக்கு. இங்க தண்ணி ஆக்சிஜன் எல்லாம் இருக்கு..

இதை விட்டுட்டு செவ்வாய் செவ்வாய்ன்னு வெறும் வாயை மெல்றாங்க..

:D :D :D

தாமரை
27-11-2009, 04:58 AM
சரி சரி யூரோப்பாவைப் பத்தி உங்க கணிப்பு என்ன அப்படின்னு யாரும் கேட்காட்டியும் பதில் சொல்றேன் கேளுங்க..

யூரோப்பாவின் மேல் பகுதி மொழமொழன்னு மென்மையா இருக்கக் காரணம், யூரோப்பா முழுக்க இருக்கும் தண்ணீர்தான் காரணம். ஒரு பெரிய விண்கல் விழுதுன்னு வச்சுக்குவோம் என்னாகும். மேல இருக்கிற பனிக்கட்டி விரிசலாகும். வெப்பத்தினால் அது உருகும். தண்ணீர் இதனால் ஏற்பட்ட குழியை உடனே பாய்ந்து நிரப்ப மறுபடி ஸ்மூத்தா ஆகிடுது யூரோப்பா.

அது மட்டுமில்ல, குரு, ஐயோ, கனிமீட் ஆகியவற்றின் ஈர்ப்பு விசையால் உள்ளே இருக்கிற தண்ணீர் ஓதங்களை உண்டாக்குவதால் உருட்டினா பரோட்டா மாவு நல்லா உருண்டையா ஆகிடற மாதிரி மேற்பரப்பு மலைகள், பள்ளத்தாக்குகள் இல்லாம நைசா ஆயிடுது. கோடுகள் கூட இது மாதிரியாகத்தான் உருவாகி இருக்கணும்.

அடுத்து கனிமீட் சந்திரனைப் பார்ப்போம்.

இன்பா
30-11-2009, 04:21 AM
யுரோப்பா ஓகே தான்....

எனக்கு யுரோப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, அதுலயும் வரிவரியா இருக்கே... :D

தாமரை
30-11-2009, 04:23 AM
யுரோப்பா ஓகே தான்....

எனக்கு யுரோப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, அதுலயும் வரிவரியா இருக்கே... :D

மத்தவங்க கிட்ட வரி, வரியா இல்லாம வேற எப்படி இருக்கு இன்பா?

இன்பா
30-11-2009, 04:39 AM
மத்தவங்க கிட்ட வரி, வரியா இல்லாம வேற எப்படி இருக்கு இன்பா?

இப்படி விலாவரியா கேட்ட என்னகு பதில் சொல்ல தெரியாதே :)

தாமரை
30-11-2009, 06:35 AM
விலா எலும்பு வரிகள் மாதிரி வரிசை வரிசையாதான் இருக்கும். அவற்றின் முக்கிய நோக்கம் இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதுகாத்தல்..

அதை விடுங்க இப்ப கனிமீடைப் பார்ப்போம்.

தெரியுமா? கனிமீட் தான் சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய சந்திரன். இது செவ்வாய் கிரகத்தின் அளவில் முக்கால் பங்கு இருக்கும்.

http://apod.nasa.gov/apod/image/0909/ganymedeenhanced_galileo_big.jpg

இது புதன் கோளை விடப் பெரியது.

சந்திரன்களுக்கே உரிய கொத்தல் கொத்தலான முகம்கொண்ட இந்த கனிமீட் கலிலியோ கண்டு பிடித்த நான்கு குரு சந்திரன்களில் ஒன்று. இது குருவை 7.154 நாட்களுக்கு ஒரு முறை சுத்தி வருது. இது தன்னைத்தானே சுத்திக்கிற வேகமும் அதேதான்.

இந்த மாதிரி தன்னைத் தானே சுத்திக்கிற வேகமும் இன்னொன்றை சுத்தற வேகமும் ஒண்ணா இருந்தா அந்த கோள் / துணைக்கோள் அது சுத்தி வர்ர கோளின் அல்லது நட்சத்திரத்தின் முழு பிடியில் இருக்கிறதாச் சொல்லலாம்.

தன்னைத் தானே சுத்துகிற வேகம் மாறுபட்டு இருந்தால் அந்தக் கோள் துணைக்கோள் வேறுவிதமான பெரிய இடித்தல்களுக்கோ அல்லது தாய்க் கோளின் அல்லது நட்சத்திரத்தின் முழுப் பிடியில் இல்லாமலோ இருக்குன்னு சொல்லலாம்.

இதனுடைய விட்டம் 5264 கி.மீ. ஆனால் இது எடை குறைவான சந்திரன். இதனுடைய மேற்பகுதி 70 டிகிரி கெல்வினில் இருந்து 152 டிகிரி கெல்வின் வரை வெப்பமுடியதா(????) இருக்கும்

இது ஜீபிடர்ல இருந்து 10 இலட்சத்து 70 ஆயிரதி 400 கி.மீ தூரத்தில் சுத்தி வருது,

முதல்ல இந்த கனீ மீட்ல மணலும் தண்ணியும் மட்டுமே இருக்கும்னு நினைச்சாங்க. இதனோட வளிமண்டலத்தில (துளியூண்டு வளிமண்டலம்) ஆக்சிஜன் இருக்காம்.

ஆனால் வாயேஜர் போயி ஆரய்ட்சி செஞ்சப்பதான் இங்க காந்தப் புலமும் இருக்குன்னு கண்டு பிடிச்சாங்க. இதனால் கன்மீடோட உட்கருவில் உலோகம் இருக்கலாம் என்று கணிச்சாங்க.

கனிமீடோட காந்தப் புலத்தை படத்தில் பார்க்கலாம்.

http://upload.wikimedia.org/wikipedia/commons/7/7b/Ganymede_magnetic_field.jpg

இதை வச்சிப் பார்த்தா கனிமீடோட உள்ளமைப்பு இப்படி இருக்கும்

http://upload.wikimedia.org/wikipedia/commons/0/0e/PIA00519_Interior_of_Ganymede.jpg


உள்ளே உலோகக் கரு. அதன் மேல் சிலிகாவினால் ஆன மேண்டில். அதற்கு மேல் நீர். அதற்கு மேல் உறைந்த நீர்.

உலோகக் கரு 250 லிருந்து 800 கி.மீ வரை விட்டம் இருக்கலாம்.

கைனிமீடின் மேற்பரப்பு இருவகையாக இருக்கிறது. குண்டும் குழியுமான பழமையான பரப்பு

http://www2.jpl.nasa.gov/galileo/ganymede/P47066.full.jpeg

வரிகளோடிய இளைய நிலப்பரப்பு


http://pds.jpl.nasa.gov/planets/images/browse/jupiter/ganygrov.jpg

http://www2.jpl.nasa.gov/galileo/ganymede/P47064.full.jpeg

நம்ம சந்திரனைப் போல இல்லாமல் இங்க இருக்கற குழிகள் அதிகம் தட்டையாக இருக்கு. ஒரு விண்கல் விழுந்தா அதைச் சுற்றி ரிம் மாதிரி உருவாகும் மலைகள் இங்கே இல்லை. காரணம்தான் சொல்லி இருக்கமில்ல.. தண்ணீர்.

பூமியைப் போல கன்மீடின் மேலோட்டிலும் டெக்டானிக் பிளேட்டுகள் இருக்கலாம் என எண்ணப்படுகிறது.. புத்தககங்களை அடுக்கி வச்சி சரிச்ச மாதிரி இருக்கிற இந்த அமைப்பு அதனால்தான் அமைந்திருக்கும் அப்படின்னு நினைக்கிறாங்க.

http://pds.jpl.nasa.gov/planets/images/browse/jupiter/ganscarp.jpg [IMG]


கனிமீடோட வடதுருவம் ரொம்பவே அடி வாங்கி இருக்கு. தென் துருவம் கொஞ்சம் குறைவாத்தான் அடி வாங்கி இருக்கு.


[IMG]http://pds.jpl.nasa.gov/planets/images/browse/jupiter/ancient.jpg

தாமரை
30-11-2009, 09:39 AM
குருவை இந்த மூணு சந்திரணும் ஒத்திசைவோட சுத்தி வர்ரது மிக ஆச்சர்யமான ஒண்ணு அப்படின்னாலும் அது குருவோட சூப்பர் பவர் ஈர்ப்பு விசையக் காட்டுது.

இந்த மூணு மூனிலும் இவைகளுக்கு இடையேயான ஈர்ப்பு விசையினாலும், இவை சுற்றி வருவதால் அது வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு திசைகளில் செயல்படுவதால் நம்ம கடல் ஓதங்களைப் போல ஈரோப்பாவிலும், கனிமீடிலும் உள்ள திரவங்கள் ஓத மாற்றம் உண்டாகி அதனால் உண்டாகும் நகர்தலினால் உள்ளே வெப்பம் உண்டாவதால் தண்ணீர் திரவ னிலையில் இருக்கலாம் அப்படின்னு சொல்றாங்க.

ஆனா ஒண்ணு,

காந்த புலத்தை மின் கடத்திகளால் வெட்டுவதால் மின்சாரம் உண்டாகும்னு பாடத்தில் படிச்சிருக்கோம். இங்க ஐயோ வில் அளவு கடந்த மின்சாரம் குருவின் காந்தப் புலத்தை அது குறுக்கிட்டுச் சுற்றுவதால் உண்டாகுதுன்னு பார்த்தோம்.

ஆனால் பூமியைச் சுத்துற செயற்கைக் கோள்களிலும் இதே மாதிரி நம்மால் மின்சாரம் உண்டாக்க முடியுமில்ல. அப்ப விண்வெளி நிலையங்களுக்கு சூரிய மின்சாரம் எதுக்கு வெட்டியா?

யோசிக்க வேண்டிய கேள்விதான் இல்லியா?

அறிஞர்
30-11-2009, 02:04 PM
பல பல புதிய தகவல்கள்.. நன்றி தாமரை...

இன்பா
01-12-2009, 03:18 AM
பாவம் கனிமீடு வரிகள் மட்டுமில்லாம அலகும் குத்தியிருக்காங்க.. :(


ஆனால் பூமியைச் சுத்துற செயற்கைக் கோள்களிலும் இதே மாதிரி நம்மால் மின்சாரம் உண்டாக்க முடியுமில்ல. அப்ப விண்வெளி நிலையங்களுக்கு சூரிய மின்சாரம் எதுக்கு வெட்டியா?

http://antelope.wikispaces.com/file/view/idea.gif/50644771/idea.gif

ஆதி
01-12-2009, 11:36 AM
அண்ணா, சூரியன் தற்போது சுழலும் திசைக்கு எதிர்திசையில் சுழல போகிறது என்று ஒரு செவி வழி செய்தி அறிந்தேன்..

அதாவது இப்போ ஆண்டி க்லாக்வைஸ்-ல் சுற்றுகிறது, இனி க்லாக்வைஸ்-ல் சுற்றுபோகிறது என்ற போகிறதாம், என்று எங்கோ படித்ததாய் நண்பர் சொன்னார்.. என்னால் சத்யமாய் நம்ப முடியலை.. இது சாத்யமே இல்லை என்று சொன்னேன்.. ஆனால் இப்படியும் நடக்க ஏதாவது வாய்ப்பிருக்காங்கண்ணா..

தாமரை
04-12-2009, 03:00 AM
அண்ணா, சூரியன் தற்போது சுழலும் திசைக்கு எதிர்திசையில் சுழல போகிறது என்று ஒரு செவி வழி செய்தி அறிந்தேன்..

அதாவது இப்போ ஆண்டி க்லாக்வைஸ்-ல் சுற்றுகிறது, இனி க்லாக்வைஸ்-ல் சுற்றுபோகிறது என்ற போகிறதாம், என்று எங்கோ படித்ததாய் நண்பர் சொன்னார்.. என்னால் சத்யமாய் நம்ப முடியலை.. இது சாத்யமே இல்லை என்று சொன்னேன்.. ஆனால் இப்படியும் நடக்க ஏதாவது வாய்ப்பிருக்காங்கண்ணா..

இதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. நியூட்டனின் முதலாம் இயக்க விதிப்படி சூரியனை விட மிகச் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசை கொண்ட ஒன்று சூரியனைத் தாக்கினால் ஒழிய இயலாது. அப்படி வருமானால் நமது கோள்கள் அத்தனையும் சூரியனை தனியே தவிக்க விட்டு விட்டு அந்தச் சூரியனோட ஓடிப் போயிடும்...

தாமரை
04-12-2009, 03:01 AM
http://a52.g.akamaitech.net/f/52/827/1d/www.space.com/images/080616-trio-planets-02.jpg

(இது நிஜப்படம் அல்ல.. வரைபடம்)

இது என்ன நம்ம சூரியக் குடும்பமா என முழிக்காதீங்க.. இல்லீங்க இது இப்போதைய சமீபத்திய கண்டுபிடிப்பு...

நான் முதல்லயே சொன்ன மாதிரி இதுவரைக் கண்டுபிடிக்கப் பட்ட அயல்மண்டலக் கிரகங்கள் எல்லாம் நம்ம குரு மாதிரியான இராடசச வாயுக் கோளங்கள். ஒரு கிரகம் கண்டு பிடிச்சாங்க.. நல்லா கிண்ணுன்னு கல்லு மாதிரி. ஆனா அது அதோட சூரியனில் இன்னும் ஒரு மில்லியன் வருஷத்தில ஐக்கியமாயிடும்னு சொன்னாங்க..

இந்தவாரம், நமக்கு 42 ஒளி ஆண்டுகள் தொலவில் ஒரு சூரியக் குடும்பத்தைக் கண்டு பிடிச்சி இருக்காங்க

அந்தச் சூரியனுக்கு HD 40307 அப்படின்னு பேரு..


தெற்கு ஐரோப்பாவில் சிலியில் உள்ள லா சில்லா என்ற இடத்தில் இருக்கும் HARPS என்ற அமைப்பின் தொல நோக்கியின் மூலம் பல அயல்மண்டலக் கிரகங்களைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்காங்க.

இவங்க டெக்னிக் என்னன்னா, நாம ஏற்கனவே பார்த்ததுதான். ஒரு கிரகம் சுத்துதுன்னா, அதௌ சுற்றி வரும் சூரியனில் தள்ளாட்டம், வாபுள் இருக்கும். இதற்கு ஆரச் சுழல் வேகம் என்றும் பெயர் இருக்கு.

நம்மைப் பொறுத்தவரை கிரகம் புடிச்சவன் தள்ளாட்டத்திற்கு ஆளாவான் அப்படின்னு வச்சுக்குவோம்.



இந்த HD40307 சூரியன் 42 ஒளி ஆண்டுகள் தொலைவில் Doradus மற்றும் Pictor constellations (நட்சத்திரக் கூட்டம்) உள்ளது.


இது மட்டுமல்லாமல் HARPS விஞ்ஞானிகள் இன்னும் 45 கிரகங்கள் பூமியை விட பருமனில் சிறிய, 50 நாட்களுக்குள் தங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றதாக சந்தேகப் படறாங்க. சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் மூன்று இருந்தால் அதில் ஒன்றைச் சுற்றிக் கிரகங்கள் இருக்கு என்று சொல்கிறார்கள்.

http://a52.g.akamaitech.net/f/52/827/1d/www.space.com/images/081113-hr8799-02.jpg

இது HR8979 நட்சத்திரம். இதிலும் மூன்று கிரகங்கள் இருக்கு. தெரியுதா?

HD-40307 நம்ம சூரியனை விட சற்றே சிறிய சூரியன்,





http://a52.g.akamaitech.net/f/52/827/1d/www.space.com/images/081113-formalhaut-photo-01.jpg


இப்போ HD40307 ஐச் சுற்றி வரும் மும்மூர்த்திகளைப் பார்ப்போம்.

1, இது பூமியை விட 4.2 மடங்கு பருமன் கொண்டது. இதன் சுற்றுக் காலம் 4.3 நாட்கள்

2. இது பூமியை விட 6.7 மடங்கு பருமன் உள்ளது, இதன் சுற்றுக்காலம் 9.6 நாட்கள்

3. இது பூமியை விட 9.4 மடங்கு பருமன் உள்ளது. இதன் சுற்றுக்காலம் 20.4 நாட்கள்.

விவரங்களுக்கு

http://www.space.com/scienceastronomy/080616-super-earths.html


இன்னும் இரண்டு

1. HD181431 சூரியனை 7.5 மடங்கு பூமிப் பருமனுள்ள கிரகம் 9.5 நாட்களுக்கு ஒரு முறைச் சுற்றி வருது. இதனுடன் குரு மாதிரி ஒரு கிரகம் 3 வருஷத்துக்கு ஒரு முறைச் சுற்றி வருது,

2. இன்னொரு சூரியனை 22 மடங்கு பூமிப் பருமனுள்ள கிரகம் 4 நாட்களுக்கு ஒரு முறையும், சனியைப் போல ஒருகிரகம் மூணு வருஷத்திற்கு ஒரு முறையும் சுற்றி வருது.


இதுவரைக்கும் 270 க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டு பிடிச்சு இருக்காங்க...

ஆமாம்..

நாம் ஐயோ, யூரோப்பா, கனிமீட் என மூணு சந்திரனைப் பற்றி படிக்கறப்ப, இப்படி மூணு கோள்களைக் கண்டு பிடிச்சது தற்செயலா?

இன்பா
08-12-2009, 04:27 AM
எல்லாம் பூமியை விட 4 5 மடங்குன்னு பெருபெருசா இருக்கே... பேசாம அங்க ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணலாம்...

தாமரை
08-12-2009, 04:45 AM
உயிர்கள் உருவாக என்ன தேவை? ஏன் மற்ற கிரகங்களில் உயிர்கள் இல்லை என்பது பற்றி பல ஆய்வுகள் நடக்குது இன்பா... அதையும் ஒரு நாள் தருகிறேன்..

காந்தப் புலம், உருகிய பாறைக் குழம்பு, ஈர்ப்பு விசை, சூரியனுக்கும் கோளுக்கும் உள்ள தூரம், கோள்களில் அடங்கி இருக்கும் கனிமங்கள், அக்கம் பக்கத்து கோள்கள், துணைக்கோள்கள், தன்னைத் தானே சுற்றும் வேகத்திற்கும் சூரியனைச் சுற்றும் வேகத்திற்கும் உள்ள விகிதம், சாய்வுக் கோணம் இப்படிப் பல விஷயங்கள் இதில அடக்கம்.

சந்திரனை ஏற்கனவே ரியல் எஸ்டேட் போட்டு வித்துகிட்டு இருக்காங்க.. நட்சத்திரத்திற்கு பேர் வைப்பதையும் வித்துகிட்டு இருக்காங்க என்பதை மொதல்லயே பார்த்தோம்..

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=425919&postcount=29

தாமரை
08-12-2009, 09:10 AM
கலிஸ்டோ

http://www.solarviews.com/raw/jup/callist1.gif

கலிஸ்டோ என்பது கலிலியோ கண்டுபிடித்த நான்கு சந்திரன்களில் ஒன்று. கனிமீட் சூரியக் குடும்பத்திலியே மிகப் பெரிய சந்திரன் எனப் பார்த்தோம் இல்லியா. இது அதுக்கு அடுத்த தம்பி!

இதுதான் கலிலியோ கண்டு பிடித்த நான்கு சந்திரன்களில் குருவில் இருந்து தொலைவில் சுற்றி வருவதாகும். இது குருவிலிருந்து 18, 83,000 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றி வருது.

இதோட குறுக்களவு 4800 கிலோமீட்டர் ஆகும். ஏறத்தாழ நம்ம புதன் கிரகத்தோட சைஸ்.

ஆனால் இது மென்மையான் சந்திரன் எடை குறைச்சல்தான், 1.08 x 10^23 கிலோ எடைதான்,

இந்தச் சந்திரனைப் பொறுத்தவரை உயர்ந்த மலைகள் கிடையாது.. ஆழ்ந்த பள்ளங்கள் கிடையாது. யூரோப்பா கூட இப்படித்தான் என்று படிச்சமில்ல.

விண்கற்கள் விழுந்த குழிகள், வளைய வடிவமான தடங்கள் தவிர பெரிசா ஒண்ணும் கிடையாது..

என்னது வளையமா? அப்படின்னு இன்பா கேட்கிறாரு பாருங்க..

கீழே இருக்கிற படத்தைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்க

http://www.solarviews.com/raw/jup/callist2.gif

வல்ஹல்லா எனப்படும் மேற்கண்ட வளையத்தின் உள்வளையம் 300 கிலோமீட்டர் குறுக்களவு உள்ளது. வெளிவளையம் 3400 கி.மீ குறுக்களவு உள்ளது. இதைப் பார்த்தா தண்ணியில யாரோ கல்லெறிந்ததால் உண்டான வளையங்கள் மாதிரி இல்ல?

http://www.solarviews.com/raw/jup/galcal4.jpg

இரண்டாவது அமைப்பு அக்சார். இதுவும் இதே மாதிரி பொதுமைய வளைய அமைப்புதான். இதன் குறுக்களவு 1700 கி.மீ இருக்கும்,

வல்ஹல்லா (ஹல்லா என்றாக் கன்னடத்தில் பள்ளம் என்று அர்த்தம் ஹி ஹி..) மேற்குத் தொடர்ச்சி மலை என்றால் அக்சார் கிழக்குத் தொடர்ச்சி மலை என வச்சுக்கலாம். ஏன்னா அக்சார் தொடர்ச்சியான வளையமா இல்லாம விட்டு விட்டு இருக்கும்.


அடுத்து இன்னொரு வகை பள்ளங்கள்

http://www.solarviews.com/raw/jup/callist3.gif

பாருங்க அம்மிக் கல்லு கொத்தின மாதிரி இங்க வரிசையா பள்ளங்கள் தெரியுதா? இதனுடைய நீளம் 600 கி.மீ. அகலம் அதிக பட்சம் 40 கிலோ மீட்டர். இது எப்படி உண்டாகி இருக்கும் தெரியுமா?

ஒரு வால் நட்சத்திரம், நம்ம டெம்பிள் டட்டில் மாதிரி குருவோட ஈர்ப்பு விசையால் இழுக்கப் படுதுன்னு வச்சுக்குவோம். அதன் வேகம் அதிகரிக்கும். அந்த வேகத்தில வால் பகுதியில பெரியபெரிய துண்டுகளா ஒடையும். அந்த மாதிரி உடைந்த பகுதிகள் நம்ம க்லிஸ்டோ மேல விழுந்தததால இது உண்டாகி இருக்கணும் அப்படின்னு ஒரு கணிப்பு.

அந்த வளையங்கள் உண்டான கதை என்னவா இருக்கும் அப்படின்னு பார்க்கறதுக்கு முன்னால கலிஸ்டோவின் உள்ளமைப்பு எப்படி இருக்கக் கூடும் அப்படின்னு பார்ப்போம்.

http://www.solarviews.com/browse/jup/calint.jpg

பார்த்தீங்களா இதுவரைப் பார்த்ததில் இதில ஒண்ணு மிஸ்ஸிங். அதாங்க உலோக உட்கரு..

மேலோடு 80 லிருந்து 100 கிலோ மீட்டர் மொத்தமுள்ள உறைந்த ஒன்று. இதில சிலிகேட்(மணல்), தண்ணீர்,

அதுக்கு கீழ 50 ல இருந்து 200 கி.மீ வரைக்கும் உப்புக் கடல் நீர் இருக்கலாம் அப்படின்னு சொல்றாங்க.. ஆஹா தண்ணி குருவின் சந்திரன்களில் ரொம்பவே இருக்குன்னு பாக்கறீங்களா?

அதுக்குக் கீழ கல்லும், ஐஸூம் இருக்கு அப்படீங்கறாங்க..

இப்பச் சொல்றேன் கேளுங்க. அந்த கான்செண்ட்ரேடட் சர்க்கிள் (நீரலை வடிவம்) இருக்கே.. அது பெரிய விண்கற்கள் விழுந்ததால் மேல இருக்கிற ஐஸ் உருகி அலை உண்டாகி மறுபடி உறைந்து போன வடிவமாக இருக்க வேண்டும்.

தொடரும்.

இன்பா
08-12-2009, 09:42 AM
கண்ணுக்கு தெரியிற ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு சூரியன், ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒவ்வொரு குடும்பம், அது நம்ம பங்காளிங்க ஒருத்தனாவது இருக்க மாட்டானா ன்னு நாசா தேடிகிட்டிருக்கு.

ஒரு பாபெரும் தொலை நோக்கி செஞ்சு ஏன் ஓவ்வொரு நட்சத்திரமா தேடக்கூடாது. ஒருவேளை அவ்வளவு தூரம் ஜூம் செய்ய முடியலையா.(என் மொக்கை கேமராவைப் போல).


காந்தப் புலம், உருகிய பாறைக் குழம்பு, ஈர்ப்பு விசை, சூரியனுக்கும் கோளுக்கும் உள்ள தூரம், கோள்களில் அடங்கி இருக்கும் கனிமங்கள், அக்கம் பக்கத்து கோள்கள், துணைக்கோள்கள், தன்னைத் தானே சுற்றும் வேகத்திற்கும் சூரியனைச் சுற்றும் வேகத்திற்கும் உள்ள விகிதம், சாய்வுக் கோணம் இப்படிப் பல விஷயங்கள் இதில அடக்கம்.

ஆமா இவ்வளவு சாதகமா விசயங்கள் அமைவது கடினம் தான் அதான் நமக்கு பக்கத்துல எங்குமே உயிரினங்கள் வாழக்கூடிய கிரகம் இல்லை.

போன வாராம் விஜய் டீவியில, ஒருத்தர கான்பிச்சாங்க, அவர் ESP சக்தியாலா டொமிகோ என்ற பிங்க் கலர் கிரகம் இருப்பதாகவும் அதில் தங்க நிறத்தாலான மனிதர்கள் இருப்பதாகவும், இன்னும் 25 வருசத்துல நம்ம பூமிக்கு அவர்கள் வருவதாகவும் சொன்னார்.

கிளம்பிட்டாங்கயா...னு நல்லா சிரிச்சேன், ஆனாலும் நிச்சயம் வெற்றுகிரகத்தில் உயிர்கள் இருக்குன்னு நிச்சயமா நம்புறேன் ஏன்னா பட்சி சொலுது(இது ESP இல்லைங்கோ :)).


இதுதான் கலிலியோ கண்டு பிடித்த நான்கு சந்திரன்களில் குருவில் இருந்து தொலைவில் சுற்றி வருவதாகும். இது குருவிலிருந்து 18, 83,000 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றி வருது.

இவ்வளவு தூரத்துல இருந்து கூட குருவோட ஈர்ப்பு சக்தியில சுத்துதுன்னா குரு இஸ் கிரேட் தான்.

இந்த கிரகத்துல தங்கம் அதிகமா இருக்கும் ஏன்னா சும்மா மினுமினுன்னு மின்னுதே...

(அய்யய்யோ இன்பாவுக்கு அறிவு கூடிகிட்டே இருக்குதே, அம்மாகிட்ட சொல்லி திருஷ்ட்டி சுத்திப் போட்டுக்கனும் :))

தாமரை
08-12-2009, 10:08 AM
போன வாராம் விஜய் டீவியில, ஒருத்தர கான்பிச்சாங்க, அவர் ESP சக்தியாலா டொமிகோ என்ற பிங்க் கலர் கிரகம் இருப்பதாகவும் அதில் தங்க நிறத்தாலான மனிதர்கள் இருப்பதாகவும், இன்னும் 25 வருசத்துல நம்ம பூமிக்கு அவர்கள் வருவதாகவும் சொன்னார்.

கிளம்பிட்டாங்கயா...னு நல்லா சிரிச்சேன், ஆனாலும் நிச்சயம் வெற்றுகிரகத்தில் உயிர்கள் இருக்குன்னு நிச்சயமா நம்புறேன் ஏன்னா பட்சி சொலுது(இது ESP இல்லைங்கோ :)).



இவ்வளவு தூரத்துல இருந்து கூட குருவோட ஈர்ப்பு சக்தியில சுத்துதுன்னா குரு இஸ் கிரேட் தான்.

இந்த கிரகத்துல தங்கம் அதிகமா இருக்கும் ஏன்னா சும்மா மினுமினுன்னு மின்னுதே...

(அய்யய்யோ இன்பாவுக்கு அறிவு கூடிகிட்டே இருக்குதே, அம்மாகிட்ட சொல்லி திருஷ்ட்டி சுத்திப் போட்டுக்கனும் :))

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.. அங்க மின்னறதெல்லாம் ஐஸ் மாமு ஐஸ்..

குருவோட ஈர்ப்பு விசை அதையும் கடந்து புனிதமானது. .. செவ்வாய் - குரு இதுக்கு மத்தியில் இருக்கும் கற்கள் அப்பப்ப விஸிட்டிங் சந்திரனா குருவைச் சுத்தி வருமுன்னா பாத்துக்குங்க...

அந்த விஜய் டி.வி ஒளிபரப்பை நானும் பார்த்தேன். பிங்க் நிற கிரகம், தங்க நிற மனிதர்கள் பூமிக்கு 250 கோடி மைல் தொலைவு...


நம்ம புளூட்டோ இருக்கே புளூட்டோ அதன் தூரம் சூரியனில் இருந்து

5,913,520,000 km அதாவது 591 கோடியே, 35 இலட்சத்து 20 கிலோ மீட்டர்.

இதில 250 கோடி கிலோ மீட்டர் தூரத்தில இன்னொரு சூரியன் இருந்தா நாம என்ன ஆவோம்?

http://en.wikipedia.org/wiki/List_of_nearest_stars

இதில படிங்க

Alpha Centauri is the closest star system to the Solar System, being only 1.34 parsecs, or 4.37 light years away from our Sun.[9]

ஒரு ஒளி ஆண்டுன்னா..

A light-year or light year (symbol: ly) is a unit of length, equal to just under 10 trillion (i.e. 1013) kilometres.

அதாவது 10,000,000,000,000 கிலோ மீட்டர். அதாவது .. 10 இலடசம் கோடி கிலோ மீட்டர்கள். நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் 43 இலட்சம் கோடி கிலோமீட்டர் தூரத்தில இருக்கு.. இதைக் கூடவா விஜய் டி.வி. காரங்க சரி பார்க்க மாட்டாங்க?

போங்கப்பா, ரொம்பவுந்தான் போங்கு அப்பா!!!

இன்பா
09-12-2009, 04:52 AM
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.. அங்க மின்னறதெல்லாம் ஐஸ் மாமு ஐஸ்...

அடச்சே...!! கொஞ்சம் நோண்டி எடுத்து வந்துடலாம்னு இருந்தேன்... இப்படி ஆகிப்போச்சே :traurig001:


நம்ம புளூட்டோ இருக்கே புளூட்டோ அதன் தூரம் சூரியனில் இருந்து 5,913,520,000 km அதாவது 591 கோடியே, 35 இலட்சத்து 20 கிலோ மீட்டர். இதில 250 கோடி கிலோ மீட்டர் தூரத்தில இன்னொரு சூரியன் இருந்தா நாம என்ன ஆவோம்.

போங்கப்பா, ரொம்பவுந்தான் போங்கு அப்பா!!!

பாவம் அவரு கணக்குல கொஞ்சம் வீக்கா இருப்பாரு போல... :D

இன்னொரு விசயம் குங்குமம்/குமுதம்/ஆவி (சரியா தெரியல எதுலன்னு) போட்டிருக்காங்க, "2012-ல் இரண்டு சூரியன்" அப்படின்னு... வெறும் தலைப்பு தான் படிச்சேன்..

இவ 2012 விடமாட்டான்னு நீங்க சொல்றது ஏங்கதுல கேட்டதே :)

aren
09-12-2009, 05:09 AM
நானும் விஜய் டிவியில் இதைப் பார்த்துவிட்டு என் மகளிடம் சொன்னேன், 250கோடி மைலில் இன்னொரு சூரியனா, இருக்க சாத்தியமேயில்லை, அப்படியிருந்தால் அதுவும் நம் சூரிய குடும்பத்தில் ஒன்றாக இருக்கும் என்று அடித்துச் சொன்னாள்.

நீங்களும் அதையே சொல்கிறீர்கள். அப்படியென்றால் அந்த ஆள் விஜய் டிவியில் சொன்னது பொய்யானதா?

பூளோட்டோ ஒரு கிரகம் என்று இதுவரை நம்பியிருந்தோம், இப்பொழுது அது கிரகம் இல்லை என்கிறார்கள். அதேமாதிரி இந்த கிரகமும் நம் கண்ணுக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறதோ என்னவோ?

தாமரை
09-12-2009, 05:24 AM
நம்ம விவாதங்களை எதுவும் போடலியா?

இன்பா
09-12-2009, 05:45 AM
பூளோட்டோ ஒரு கிரகம் என்று இதுவரை நம்பியிருந்தோம், இப்பொழுது அது கிரகம் இல்லை என்கிறார்கள். அதேமாதிரி இந்த கிரகமும் நம் கண்ணுக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறதோ என்னவோ?

இங்கிருக்கிற செவ்வாயில் உயிரினம் இருக்கிறதா? இன்றே இன்னும் 100% உறுதிப் படுத்தப் படவில்லை. ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம்.

ஆனால் அவர் சொன்னது சூரியன் இருப்பதாகவும் அதை அந்த "டொமிகோ" சுற்றுவதாகாவும் அது பூமியைவிட பெரியதாகவும் சொன்னார்.., பக்கத்து கெலாக்சியையே தொலைநோக்கியில் பார்க்கும் நமக்கு 250 கோ.கி.மி தொலைவில் உள்ள டொமிகோ கண்ணி படாமல் போயிருக்குமா ஆரென் அண்ணா.

தாமரை
16-12-2009, 06:11 AM
குருவோட நாலு பெரிய சந்திரன்களையும் பார்த்தோம்.

அதை தொலைநோக்கியில் பார்த்தா எப்படித் தெரியும்?

http://upload.wikimedia.org/wikipedia/commons/7/7d/Jupiter-moons.jpg

அந்த நாலோட படமும் இங்க இருக்கு எது என்ன சந்திரன் அப்படின்னு சொல்லுங்க பார்ப்போம்?

http://upload.wikimedia.org/wikipedia/commons/6/62/Galilean_satellites.jpg



எளிமையா பார்க்க குருவோட சந்திரன்களை மூணு வகையா பிரிக்கலாம்

1. கலிலியோ சந்திரன்கள்
2. உள்வட்ட சந்திரன்கள் - அமல்தியா, மெடிஸ்,அட்ராஸ்டீ, தீப்.
3. ஒழுங்கற்ற வெளிவட்ட சந்திரன்கள்

இப்போ இன்னும் சில சின்ன சந்திரன்களைப் பார்ப்போம். அப்புறம் வெறும் லிஸ்ட் மட்டும் போதும்..

அமல்தியா :


http://upload.wikimedia.org/wikipedia/commons/5/53/AmaltheaSimulation.jpg


இது 250 கிலோ மீட்டர் நீளம், 146 கிலோ மீட்டர் அகலம், 128 கிலோ மீட்டர் உயரம் கொண்ட ஒழுங்கற்ற பாறை மாநிலம் மாதிரின்னு வச்சுக்குங்க. (நம்ம இலங்கை சைஸ் இருக்குமா?)

ஆனா குருவில் இருந்து பார்க்கும் போது நம்ம சந்திரனை விட பெரிசா சிவப்பா தெரியும். காரணம், இதில் உள்ள கந்தகம்.இது குருவுக்கு 1இலட்சத்து 81 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில இருக்கு, ஒரு முறை குருவைச் சுத்தி வர ஏறத்தாழ 12 மணி நேரம் ஆகும்.




மேடிஸ்:

http://upload.wikimedia.org/wikipedia/commons/9/9a/Metis.jpg

இதைப் பார்த்த பின்னாலும் இதைப் பத்தி தனியா படிக்கணுமா என்ன?

இதோட சைஸ் 60×40×34 km

தீப்

http://upload.wikimedia.org/wikipedia/commons/1/1b/Thebe.jpg

இதோட சைஸ் 116×98×84 km, தூரம் 222,000 கிலோ மீட்டர்கள்.

இதுக்கபுறம் இருக்கறதெல்லாம் குட்டிக் குட்டி சந்திரங்கள். லிஸ்ட் தர்ரேன் பாருங்க

http://en.wikipedia.org/wiki/Inner_satellites_of_Jupiter#Table

இதுல அப்பப்ப சிலது கழண்டுக்கும், சிலது சேரும்.. சிலது விழுந்திடும்.

சரி அடுத்து என்ன பாக்கலாம்?

சனி அப்படின்னுதானே நினைக்கிறீங்க..

இல்லை...

அது இன்னும் கொஞ்சம் வித்தியாசமான ஒண்ணு..

அஸ்ட்ராய்ட் பெல்ட் என்று சொல்லப்படும் விண்கற்கள்

தொடரும்

தாமரை
17-12-2009, 01:03 PM
ஒரு சுவாரஸ்யமான தகவல்.

1715 ல் டேவிட் கிரெகரி தன்னுடைய வானவியல் நூலில் ஒரு கருத்தை ஆராய்ந்திருந்தார். (எலிமெண்ட்ஸ் ஆஃப் அஸ்ட்ரானமி.)

நம்ம சூரியக் குடும்பத்தில் சூரியன், புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், வியாழன், சனி முதலான பல கோள்கள் இருக்கு இல்லையா? இதில் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள சராசரி தூரத்தை 1 விண்வெளி அலகு என்கிறோம்.

இதை பத்து சமபங்கா பிரிச்சா..

0 என்ற அலகில் சூரியன், புதன் 0.4 ல், வெள்ளி 0.7 ல் பூமி 1 ல், செவ்வாய் 1.5 ல், வியாழன் 5.2 ல் சனி 9.5 அலகில் இருக்கும் என எழுதினார்.

1764 ல் சார்லஸ் போனட் என்ப்வர் தன்னுடைய ஃபிரெஞ்சுப் புத்தகத்தில் நமக்குத் தெரிந்து சூரியக் குடும்பத்தில் கோள்கள் துணைக்கோள்கள் எல்லாம் சேர்த்து 17 உள்ளன என்றார். அதை 1766 ல் மொழி பெயர்த்த ஜோஹன் டேனியல் டைடஸ்
கீழ்கண்ட கண்டுபிடிப்பைச் சொன்னார்.

நாம் ஒவ்வொரு கிரகமும் மற்றவற்றில் இருந்து இருக்கும் தூரத்தைக் கவனித்தால், அவை அவற்றின் பருமனுக்கு நேர் விகிதத்தில் அமைந்துள்ளன.
சூரியனில் இருந்து சனிக்கிரகம் உள்ள தொலைவு 100 அலகுகள் என்றால் புதன் 4 அலகு தூரத்தில் இருக்கிறது. வெள்ளி 7(4+3) அலகு தூரத்தில் இருக்கிறது. பூமி 10 (4+6)அலகு தூரத்தில் இருக்கிறது. செவ்வாய் 16 (4+12) அலகு தூரத்தில் இருக்கிறது. ஆனால் குரு மாத்திரம் 52 (4+48) அலகு தூரத்தில் இருக்கிறது. சனி 100 (4+96) அலகு தூரத்தில் இருக்கிறது.

கவனியுங்கள்

0 = சூரியன்
4+0 =4 = புதன்
4+3 = சுக்கிரன்
4+6 = 4+(3x2) = பூமி
4+12 = 4+ (6x2) = செவ்வாய்
4+24 = 4+12 = ????????????????????????????
4+48 = 4+(24x2) = குரு
4+96 = 4+(48x2) = சனி

இவ்வளவு ஒழுங்காக அமைந்திருக்கும் அமைப்பில் ஒரு இடம் காலியாக இருக்கிறதே. அங்கே எதாவது கண்டிப்பாக இருக்க அல்லது இருந்திருக்க வேண்டும் என அவர் சொன்னார்.

1768 ல் ஜோஹன் எலர்ட் போட் என்பவரும் இதையே சொன்னார்.

1781 ல் யுரேனஸ் கண்டுபிடிக்கப்படும் வரை இதற்கு யாரும் முக்கியத்துவம் தரவில்லை.

ஆனால் யுரேனஸ் 4+(96x2) = 196 அலகிற்கு சமீபத்தில் இருக்கிறது என்றபோது விஷயம் சுவாரஸ்யமாக மாறியது...

போட், குருவிற்கும், செவ்வாயிற்கும் இடையில் உள்ள கிரகத்தைக் கண்டு பிடிக்க வேண்டும் என வலியுறுத்திய போது 1801 ல் கேரஸ் என்ற ஒரு குறுங்கோளைக் கண்டு பிடித்தனர்.

950 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட இந்தக் குறுங்கோள் முதலில் விடுபட்ட கிரகமாக அங்கீகாரம் பெற்றது.

பிறகு இந்தப் பகுதியில் பல சிறு சிறு விண்கற்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அதனால் 1802 ல் அஸ்ட்ராய்ட் (நட்சத்திரம் போன்றவை) என பெயரிடப் பட்டன,

கேரஸில், உறைந்த நீர், களிமண், கார்பனேட்டுகள் போன்றவை இருக்கலாம், தரைக்குக் கீழே திரவ வடிவக் கடலும் இருக்கலாம் என கணிக்கப் பட்டுள்ளது.

ஆனால் 2006 ல் புளூட்டோ தன் கிரகப் பதவியை இழந்து குறுங்கோளானபோது, இந்த கேரஸ் குறுங்கோளாக அறிவிக்கப்படலாமா என விவாதம் நடந்து அப்படியே அறிவிக்கப் பட்டது.


இதற்கு பின்னர் இதே பகுதியில் பல்லாஸ் எனப்படும் குறுங்கோள் கண்டு பிடிக்கப் பட்டது.

1807 ல் இதே சுற்றுப் பாதைகளில் ஜூனோ , வெஸ்டா போன்றவை கண்டு பிடிக்கப்பட்டன, 1845 ல் அஸ்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னால் பலப் பல குட்டிக் குட்டி விண்கற்கள் இந்தப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டன.

அஸ்டிராய்ட் என்று பெயர் சூட்டப்பட்ட பல கற்கள் இப்பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டதால் இப்பகுதி அஸ்டிராய்ட் பெல்ட் என பெயர் சூட்டப் பட்டது.


இப்போ எவ்ளோ கண்டு பிடிச்சிருக்கோம் தெரியுமா?

இந்தப் படத்தைப் பாருங்க

http://upload.wikimedia.org/wikipedia/commons/f/f3/InnerSolarSystem-en.png


உடனே உங்களுக்குத் இப்ப தோணுதே அதுதான் அந்த கால விஞ்ஞானிகளுக்கும் தோணிச்சு..

அதாங்க, ஏன் அங்க ஒரு பெரிய கிரகம் இருந்து அது எதோ காரணத்தினால இப்படி வெடிச்சி சிதறி இருக்கக் கூடாது?

அது பொய்யா? மெய்யா?

என்ன ஆச்சு?

பொறுங்க இன்னொரு நாள் சொல்றேன்

aren
23-12-2009, 06:38 AM
நான் படிக்கும்பொழுதே நினைத்தேன். இந்த அஸ்டிராய்ட்டெல்லாம் ஒரு நாள் ஒன்றாக இருந்திருக்கவேண்டும் என்று.

இது சரியென்றால், சூரியனைச் சுற்றும் கோள்கள் சூரியனின் சுற்றுவட்டாரித்தின் ஈர்ப்பிலேயே செல்கின்றன. அப்படியென்றால் அந்த ஈர்ப்புகள் நீங்கள் சொன்ன விகிதாசாரத்தில்தான் செல்லவேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்த தூரவிகிதம் சரியான அளவிலேயே இருக்கின்றது.

அப்படியென்றால் பூளோட்டோவிற்கு பிறகும் இன்னும் கிரகங்கள் இருக்கலாம் ஆனால் நம் கண்களுக்கு இன்னும் புலப்படவில்லை என்று கருதலாமா?

இன்பா
24-12-2009, 08:10 AM
என்னங்க கடு தூவி விட்டதுப் போல இவ்வளவு கிடக்கு...

அப்புறம் ?

தாமரை
24-12-2009, 02:21 PM
ஜனவரி 4 க்கு அப்புறம்

aren
27-12-2009, 11:40 AM
அவதார் படத்தில் வரும் பண்டோரா கிரகம் இருக்கிறதா?

மும்பை:"அவதார்' படத்தில் வரும், "பண்டோரா' போன்ற கிரகம் ஒன்று இருந்தால்... அதுவும் நமக்கு அருகிலேயே இருந்தால் எப்படி இருக்கும்...? அதுபோன்ற கிரகம் ஒன்று இருப்பதாக விஞ்ஞானி ஒருவர் கணித்துள்ளார்.சமீபத்தில் வெளியாகி உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் ஹாலிவுட் தயாரிப்பான, "அவதார்' படத்தில் மனிதன், பூமியில் வாழ்வதற்கான எரிபொருள் தேவைக்காக பூமியைப் போலவே இருக்கும் இன்னொரு கிரகமான, "பண்டோரா' என்ற கிரகத்தைத் தேடிச் செல்வது போன்ற காட்சிகள், இன்று நமக்கு ஆச்சரியத்தைத் தந்தாலும், இன்னும் சில நூற்றாண்டுகளில் நிஜமாகப் போகிறது என்பது தான் உண்மை என்பதே விஞ்ஞானிகள் கருத்து.

ஹார்வர்டு ஸ்மித் - சோனியன் வானியற்பியல் மையத்தைச் சேர்ந்த லிசா கல்ட்டெனகர் என்ற பெண்மணி, "ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்' என்ற கருவியின் மூலம் சூரியக் குடும்பத்துக்கு உள்ளேயே பூமியைப் போல அமைப்புடைய ஏதாவது ஒரு கிரகம் இருக்காதா என்று ஆராய்ந்து வருகிறார்."நமது சூரியக் குடும்பத்துக்குள் வியாழன் கிரகம் போன்று அளவில் பெரிய பெரிய வாயு கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவற்றின் அருகில் பல நட்சத்திரங்களும் இருக்கின்றன. இந்த வாயு கிரகங்களில் நாம் வாழ முடியாது."ஆனால் இவற்றைச் சுற்றி வரும் நட்சத்திரங்கள், பெரும்பாலும் பாறைகள், பனி மூட்டங்கள் இவற்றோடுதான் இருக்கின்றன. இவை, நாம் வாழ்வதற்குத் தகுதியான கிரகங்கள் மேலும் சில இருக்கின்றன என்பதைத்தான் காட்டுகின்றன' என்கிறார் லிசா.

இப்போது அவர் இதுபோன்ற மனிதன் வாழத் தகுந்த கிரகமான, "ஆல்பா சென்டவுரி ஏ' என்பதைக் கண்டுபிடித்துள்ளார். "நமது சூரியன் போல உள்ள ஒரு நட்சத்திரத்தின் அருகில் ஆல்பா கிரகம் இருக்கிறது. "அவதார்' படத்தில் வரும், "பண்டோரா' போலத்தான் அது இருக்கிறது. அதில் நமக்குத் தேவையான கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன், நீர் போன்றவை இருக்கிறதா என்று ஆராய்ச்சி நடந்து வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.


நன்றி: தினமலர் 26/12/2009

aren
27-12-2009, 11:42 AM
மேலேயுள்ள விவரங்கள் இன்று தினமலரில் வந்துள்ளது. தாமரை இதைப் பற்றியும் கொஞ்சம் தெளிவாகச் சொன்னால் எங்களுக்கு புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

தாமரை
04-01-2010, 05:16 AM
http://www.wired.com/images_blogs/wiredscience/2009/12/gj1214b.jpg

டிசம்பர் 16 ஆம் தேதியிட்ட செதி இது...

பூமியில் இருந்து 42 ஒளி ஆண்டுகள் தொலைவில்...

GJ 1214B என்ற இந்தக் கிரகம் ஹார்வர்ட் ஸ்மித்ஸொனியன் வானியல் மையத்தினரால் பூமி போன்ற இன்னொரு கிரகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது நமது பூமியை விட 2.7 மடங்கு பெரிய ஆரம் கொண்டது. இதன் பருமன் பூமியை விட 6.6 மடங்கு பெரியது

இதில் ஹைட்ரஜன், ஹீலியம், நைட்ரஜன், கார்பன், மெக்னீசியம், ஆக்ஸிஜன் இன்னபிற தனிமங்கள் இருக்கலாம் எனக் கணிக்கக்ப்படுகிறது. இன்னும் என்னென்ன இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது தன்னுடைய சூரியனை 38 மணி நேரத்திற்கு ஒரு முறை சுற்றி வருகிறது.




இதனுடைய அடர்த்தியைக் கொண்டு பார்க்கும் பொழுது முக்கால் பங்கு திரவங்களும், பனியும் கால்பங்கு திடப் பாறைகளும், வளிமண்டலமும் இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.

இத வெப்பநிலை 280 டிகிரி செல்சியஸிலிருந்து 120 டிகிரி செல்சியஸ் வரை வேறுபடுவதாக அறிகிறோம். இது சுற்றி வரும் சூரொயன் நம்ம சூரியனை விட 5 மடங்கு சிறியதாகும்.

இவ்வளவு வெப்பமாக இருந்தாலும் இங்கு நீர் திரவ வடிவில் இருப்பதாக எண்ணப் படுகிறது. காரணம் இதன் வளி மண்டல அழுத்தம். வளி மண்டல அழுத்தம் அதிகமாக அதிகமாக நீரின் கொதிநிலை உயரும் என்பது நாம் அறிந்ததே.

இந்த அழுத்தம் நம் பூமியின் மேல் உள்ள அழுத்தத்தை விட 20,000 மடங்கு அதிகம் என நம்ப்பப் படுகிறது.



இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 400கும் மேற்பட்ட கிரகங்களில் 28 கிரகங்கள் சூப்பர் எனக் கருதக் கூடிய அளவிற்கு பாறைகள், திரவங்கள் கொண்டு நம் பூமி அளவிற்கு ஈடுதரக்க்டியதாக இருக்கலாம் எனக் கருதப் படுகின்றன.

இதில் முக்கியமான வற்றில் Corot-7b நம்ம பூமிக்கு இருமடங்கு பெரியது. 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அதனால் அதிகமாக ஆராயமுடியவில்லை.

Glise 581c என்னும் கிரகமே அதன் சூரியனைக் கடப்பதை இன்னும் காணமுடியவில்லை. இதனால் அதன் வளி மண்டலத்தினை ஆராய முடியவில்லை.

ஆல்ஃபா சென்சுரி ஏ - சூரியனுக்கு அருகில் உள்ளது (4.37 ஒளி ஆண்டுகள்) அது வேற இது வேற...

----------------------------------------------------------------------------


நம்ம சூரியக் குடும்பத்திலேயே

1. என்சிலாடஸ் ( சனியின் துணைக்க்கோள்)
2. யூரோப்பா (வியாழனின் துணைக்கோள்)
3. செவ்வாய் (முன்பு இருந்திருக்கலாம்)
4. டைடன் ( சனியின் துணைக்கோள்)
5. ஐயோ (வியாழனின் துணைக்கோள்)

இவை ஐந்தில் ஒன்றில் உயிர்கள் இருக்கலாம் என்ற சாத்தியக் கூறு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கு,
.

தாமரை
04-01-2010, 05:33 AM
1802 ல ஹெய்ன்ரிச் ஓல்பர்ஸ் என்பவர் நம்ம ஆரென் சொன்ன மாதிரியேதாங்க சொன்னாரு, அங்க ஒரு கிரகம் இருந்திருக்கணும். அங்க இருந்த கிரகத்துக்கு கிரகம் புடிச்சி எதுவோ அதன் மேல மோதி பல துண்டுகளாச் சிதறி இருக்கணும் அப்படின்னு சொன்னார்ர். ஏறத்தாழ அந்தக் கூற்றை எல்லாரும் ஒத்துகிட்டாங்க.

ஆனா பாருங்க இந்தத் துகள்கள் இருக்கே அதை அத்தனையும் ஒண்ணா சேர்த்து ஒரு தட்டில வச்சு, இன்னொரு பக்கத்தில நம்ம சந்திரனை 25 துண்டுகளாப் பிச்சு அதில ஒரு பங்கை வச்சு எடை போட்டா சரியா இருக்குமுங்க.. அவ்வளவுதாங்க.

அது மட்டுமில்லீங்க, ஒவ்வொரு கல்லும் ஒரு விதம். இதில ஒரு வேதிப் பொருள் இருந்தா அதில வேற வேதிப் பொருள். இதையும் விளக்க முடியலீங்க..

இதையெல்லாம் தாமரை மாதிரி விளக்கமா பார்த்து பார்த்து இவை எப்போதும் ஒரே கோளின் பகுதிகளாக இருந்தது இல்லை அப்படின்னு வாதிட்டாங்க.


அப்புறம் கடைசியா ஒரு ஆப்பு 1846 ல் விழுந்தது, நெப்டியூன் கண்டு பிடிக்கப்பட்டப்போ, இந்த ஒழுங்கு முறை அடுக்குக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாம போச்சு.


ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட விண்கற்கள் இங்க கண்டுபிடிக்கப் பட்டிருக்கு, செவ்வாய்க்கு அப்பால் பறந்த விண்கலங்களில் கலிலியோ மட்டும் தான் சில விண்கற்களை படம் பிடிச்சது..

இன்பா
05-01-2010, 05:18 AM
நிறைய தகவல்கள்...


நம்ம சூரியக் குடும்பத்திலேயே

1. என்சிலாடஸ் ( சனியின் துணைக்க்கோள்)
2. யூரோப்பா (வியாழனின் துணைக்கோள்)
3. செவ்வாய் (முன்பு இருந்திருக்கலாம்)
4. டைடன் ( சனியின் துணைக்கோள்)
5. ஐயோ (வியாழனின் துணைக்கோள்)

இவை ஐந்தில் ஒன்றில் உயிர்கள் இருக்கலாம் என்ற சாத்தியக் கூறு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கு,

இந்த விசயத்தில் தான் எனக்கு அதிக ஈடுபாடு,
அதனால் தான் செவ்வாய் மீது தனி அக்கரை. :)

இன்பா
31-01-2010, 01:38 AM
எங்க போனிங்க தாமரை, ரொம்ப நாளா அப்டேட் எதுவும் காணம்...

தாமரை
01-02-2010, 12:35 PM
கங்கணச் சூரிய கிரகணம் பார்த்திருப்பீங்க..

இது ஏற்படக் காரணம் என்னன்னு பார்ப்போம்..

குளிர்காலத்தில் அதாவது ஜனவரி மாதத்தில் சூரியன் பூமிக்கு மிக அருகில் இருக்கும்

இதை பெரிஹெலியன் அப்படின்னு சொல்வாங்க

வெயில்காலத்தில் அதாவது ஜூலை மாதம் சூரியன் பூமியில் இருந்து வெகு தொலைவில் இருக்கும். இதை அபிஹெலியன் அப்படின்னு சொல்வாங்க.


இதில சைஸ் வித்தியாசம் தெரியும்.. படத்தைப் பாருங்க

http://www.perseus.gr/Images/solar-scenic-aph-peri.jpg

இதே மாதிரி சந்திரனுக்கு பெரிஜீ- அபெஜீ அப்படின்னு பூமிக்கு அருகிலான நாள், தொலைவிலான நாள் அப்படின்னு இருக்கு அதை அறிய ..

http://www.fourmilab.ch/earthview/pacalc.html


http://www.perseus.gr/Images/lunar-apogee-perigee-2006.jpg


இரண்டு படத்திலும் arc-min அப்படின்னு குடுத்திருப்பது விட்டம் ஆகும்

நிலாவின் விட்டம் சூரியனின் விட்டத்திற்கும் சமம் அல்லது அதிகமாக இருக்கும் காலம் பூரண சூரிய கிரஹணமும், குறைவாக இருக்கும் காலம் கங்கணச் சூரிய கிரஹணமும் உண்டாகின்றன.

ஜனவரி 15 அன்று சூரியன் 14,71,52,201 கி.மீ தூரத்தில் இருந்தது.
நிலாவோ 4,02,571 கி.மீ தூரத்தில் இருந்தது.

எனவே சூரியன் குறைந்த பட்ச தூரமான 14,70,98,074 km என்பதற்கு அருகிலும் சந்திரனோ அதிகபட்சதூரம் என்னும் 4,05,696 km என்ற தூரத்திற்கு அருகிலும் இருந்தது.

அதனால் சூரியன் பெருசாவும் சந்திரன் சின்னதாவும் தெரிஞ்சது, இதனால் சூரியனோட ஒளிவட்டம் தங்க வளையலா தெரிய கங்கணச் சூரிய கிரஹணம் உண்டாச்சி...




இப்போ தெளிஞ்சிருக்குமே!!!


இப்பொ பெர்ஹெலியன், அபோஹெலியன் எப்போ வரும் என்கிற தகவல்கள் கீழே

Universal Time

m d h
2000
Perihelion Jan 3 05
Aphelion July 4 00

2001
Perihelion Jan 4 09
Aphelion July 4 14

2002
Perihelion Jan 2 14
Aphelion July 6 04

2003
Perihelion Jan 4 05
Aphelion July 4 06

2004
Perihelion Jan 4 18
Aphelion July 5 11

2005
Perihelion Jan 2 01
Aphelion July 5 05

2006
Perihelion Jan 4 16
Aphelion July 3 23

2007
Perihelion Jan 3 20
Aphelion July 7 00

2008
Perihelion Jan 3 00
Aphelion July 4 08

2009
Perihelion Jan 4 15
Aphelion July 4 02

2010
Perihelion Jan 3 00
Aphelion July 6 12

2011
Perihelion Jan 3 19
Aphelion July 4 15

2012
Perihelion Jan 5 01
Aphelion July 5 04

2013
Perihelion Jan 2 05
Aphelion July 5 15

2014
Perihelion Jan 4 12
Aphelion July 4 00

2015
Perihelion Jan 4 07
Aphelion July 6 20

2016
Perihelion Jan 2 23
Aphelion July 4 16

2017
Perihelion Jan 4 14
Aphelion July 3 20

2018
Perihelion Jan 3 06
Aphelion July 6 17

2019
Perihelion Jan 3 05
Aphelion July 4 22

2020
Perihelion Jan 5 08
Aphelion July 4 12

தாமரை
02-02-2010, 03:52 AM
அடுத்தது நாம பார்க்கப் போறது சனிக்கிரகம்.

மந்தன் என அழைக்கப்படும் சனிக்கிரகம்தான் பழங்காலத்தில் அறியப் பட்ட வெகு தூரத்தில் இருந்த கிரகம். இடுப்பில ஒட்டியாணத்தோட ஒய்யாரமா நடை போடுற சனிக்கிரகம்

சனிக்கிரகம் இருப்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே மக்களுக்குத் தெரியும்.

http://imgsrc.hubblesite.org/hu/db/images/hs-1994-53-a-web.jpg

சனிக்கிரகம் சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய கிரகம் ஆகும். அளவில் இது பெரிசா இருந்தாலும் அடர்த்தியில் இது மிகவும் குறைவானது.


இந்தச் சனிக்கிரகத்திற்கு 34 பெயரிடப் பட்ட சந்திரன்களும், மொத்தமாய் 61 சந்திரன்களும் நூற்றுக்கணக்கான துணைக்கோள் துகள்களும் (வளையங்களில் உள்ளவை) கொண்டது.

சனிக்கிரகத்தின் வளையங்கள் ரொம்ப சுவாரஸ்யமானவை.. இப்ப கூட 2009 அக்டோபர் ஆறாம் தேதி, புதுசா பெருசா ஒரு வளையத்தைக் கண்டு பிடிச்சு இருக்காங்க.. இதோட சேர்த்து சனியோட வளையங்களை எட்டா பிரிக்கிறாங்க.

சனியைப் பற்றி மேலும் பார்ப்போம்.. கூடிய சீக்கிரம்

தாமரை
05-02-2010, 09:06 AM
சனிக் கிரகம் ஒரு வாயுக் கோளமாகும். வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் ஆகிய நான்கு கோள்களும் வாயுக் கோளங்களே. இம்மாதிரி ராட்சச வாயுக் கோள்களை ஜோவியன் பிளானட்ஸ் (அதாவது ஜூபிடரைப் போன்ற கோள்கள்) என அழைக்கிறார்கள். எப்படு பூமி மாதிரி அளவும், திடமான மேற்பரப்பும், வளிமண்டலமும் கொண்ட கோள்களை எர்த் லைக் பிளானட்ஸ் என அழைக்கிறார்களோ அப்படு ஜோவியன் பிளானட் என்றால் வியாழனைப் போன்ற பெரிய அள்வும், வாயுக் கோளமாகவும் இருக்கும் கோள் என்று அர்த்தம்.

சனிக்கிரகம் உயரம் குறைந்து இடைபெருத்த லொள்ளுவாத்தியார் மாதிரியான உருவம் கொண்டது ஆகும். அதாவது வடக்கிலிருந்து தெற்காக இது 54,364 கிலோமீட்டரும், கிழக்கிலிருந்து மேற்காக இது 60,268 கிலோமீட்டரும் ஆரம் கொண்டது.

இந்த வடிவத்துக்குக் காரணம் மைய விலக்கு விசை / மற்றும் குறைந்த சனியீர்ப்பு விசை ஆகியவை ஆகும். சனிக்கிரகம் பூமியை விட 95 மடங்கு எடையில் பெரிசு..

ஆனால் அளவிலோ 764 மடங்கு பெருசு...(9.5 மடங்கு பெரிய விட்டம் கொண்டது சனிக்கிரகம்)

பக்கத்தில பக்கத்தில வச்சா எப்படி இருக்கும் தெரியுமா?

http://upload.wikimedia.org/wikipedia/commons/3/39/Saturn%2C_Earth_size_comparison.jpg


சனிக்கிரகத்தின் உள் அமைப்பைப் பத்தி தெளிவா தெரியாட்டியும், ஒரு அனுமானம் உண்டு...

அதனுடைய் உட்புறமும் நம்ம வியாழன் மாதிரி ஒரு சின்ன பாறையாய் இறுகிய உட்கருவும், அதைச் சுற்றி ஹைட்ரஜனும் ஹீலியமும் அடர்ந்த திரவ வடிவிலும்(உலோக ஹைட்ரஜன்) அதன் மேல் திரவ வடிவலான ஹைட்ரஜனும் ஹீலியமும், அதன் மேல்புறம் சுமார் 1000 கிலோமீட்டர் உயரத்துக்கு வாயு வடிவலான ஹைட்ரஜனும் இருக்கறதா நினைக்கிறாங்க.

பூமிக்கு வெப்பம் எங்கிருந்து கிடைக்குது அப்படின்னா சூரியனில் இருந்துன்னு சொல்வோம். ஏற்கனவே வியாழனில் பார்த்தோம் வியாழன் எவ்வளவு வெப்பத்தை சூரியனிடம் இருந்து வாங்குதோ அவ்வளவு உள்புறமிருந்தும் சூடாகுது அப்படின்னு. அதாவது வியாழக்கிரகம் வருஷத்துக்கு 2 செ.மீ சுருங்குது அப்படின்னு படிச்சொம்.

சனிக்கிரகம் சூரியனில் இருந்து பெறுகின்ற வெப்பத்தை விட 2.5 மடங்கு வெப்பத்தை வெளிய விடுது.

இதுக்குக் காரணம் ஒண்ணு குருவில் இருக்கிர மாதிரி கெல்வின் ஹெச்மோட்ஸ் நிகழ்வு அப்படிங்கற நிகழ்வு.. அதவாது ஈர்ப்பு விசையால் கிரகங்கள் மெல்ல சுருங்க ஆரம்பிப்பது.

சனிக்கிரகத்தில் கூடுதலாக எடை அதிகமுள்ள ஹீலியம் எடை குறைவான ஹைட்ரஜனுக்குள் மழைத்துளி மாதிரி இறங்குவதால் இன்னும் கொஞ்சம் வெப்பம் அதிகமா உண்டாகுது.

சனிக்கிரகம் தன்னைத் தானே சுத்திக்க எடுத்துக் கொள்ளும் நேரம் 10 மணி 34 நிமிஷம். ஏற்கனவே அஸ்ட்ராய்ட் பெல்ட்டைப் பற்றி பார்த்தப்ப சனிக்கிரகம் சூரியனில் இருந்து சராசரியாக 1.400,000,000 கிமீதூரத்தில் இருக்குன்னு பார்த்தோம். இது சூரியனைச் சுற்றிவர 10759 நாட்கள் எடுத்துக்குது. (29-1/2 வருடம்)

நம்ம சந்திரன் நம்மைச் சுற்றி வருதே 27 நாட்களுக்கு ஒருமுறை.. அப்ப சந்திரன், சூரியனுடன் ஒப்பிடும் பொழுது சூரியனுக்கும் நமக்கும் ஒரே நேர்கோட்டில் தெரிய ஆகும் இடைவெளி எவ்வள்வு ? 29-1/2 நாட்கள்.. இதை சைனோடிக் பீரியட் அப்படின்னு சொல்வாங்க.

இதே மாதிரி புதன் 116 நாட்களும், வெள்ளி 584 நாட்களும், செவ்வாய் 780 நாட்களும், குரு 399 நாட்களும், சனி 378 நாட்களும் இது மாதிரி தெரிய எடுத்துக்கும். காரணம் இது பூமி சூரியனைச் சுற்றுவதற்கும் மற்ற கிரகங்கள் சூரியனைச் சுற்றுவதற்கும் உள்ள கால வித்தியாசங்கள்..

சனிகிரகத்திற்கும் காந்தப் புலம் உண்டு. ஆனால் அது பூமியின் காந்தப் புலத்தை விட வலிமை குறைந்தது. குருவில் உண்டாகிற மாதிரியே மெடாலிக் ஹைட்ரஜன் திரவ ஹைட்ரஜன் உராய்வினால் இந்த காந்தப் புலம் தோன்றுது.

என்னங்க ஒரே வறட்சியா இருக்கேன்னு பார்க்கறீங்களா? என்ன் செய்யறது.. அங்கதான் தண்ணியே இல்லையே...

கொஞ்சம் கலர் ஃபுல்லா மாத்தட்டுமா? சனியின் படங்களைப் உத்துப் பாருங்க.. நாம படம் போடும் போது அவுட்லைன் போடற மாதிரி நீலமா ஒரு அவுட் லைன் தெரியும் பாருங்க... நீலமா தெரியுதா? சனிக் கிரகம் நாம பூமியில் இருந்து பார்க்கும் பொழுது இப்படிக் கருநீலமாத்தாங்க தெரியும். பெரிதாக்கிப் பார்க்கும் போதுதான் உள்ள இருக்கிற அந்த காவி- ஆரஞ்சு கலர் கொஞ்சமா தெரியும்,..

குருவில் பார்த்தமே அதே மாதிரி சனியிலும் பட்டைகள் உண்டு.. ஆனால் அதெல்லாம் ரொம்ப லைட்டா இருக்கும்... அதை அப்புறமா பாக்கலாம்...

தாமரை
08-02-2010, 09:01 AM
சனி என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வர்ரது வளையங்கள் தான். வளையம்னாலே மோதிரமும், மோதிரம் என்றாலே கல்யாணமும், கல்யாணம்னாலே சனியும் நினைவுக்கு வருவதும் கவனிக்க வேண்டிய விஷயம்தான்,

சனியின் வளையங்களை முதலில் கவனிச்சவர் வேற யாரா இருக்கும்.. கலிலியோவைத் தவிர.. அவர் என்ன சொன்னாருன்னா, சனிக் கிரகம் ஒண்ணில்ல.. மூணு கிரகம் சேர்ந்திருக்கும் போல.. எல்லாம் ரொம்ப பக்கம் பக்கமா இருக்குது போல அப்படின்னார்...

1655 ல தான் கிறிஸ்டன் ஹைகஸ் அப்படிங்கறவர் அது வளையம்னு கண்டு பிடிச்சார்.. மெலிசா, தட்டையா ஓட்டைபோட்ட அப்பளம் மாதிரி சனியைச் சுற்றி இருக்கு. அது நீள் வட்ட வடிவமானது அப்படின்னு எல்லாம் சொன்னார்.

1800களின் மையப்பகுதியில்தான் அந்த வளையங்கள் சின்னச் சின்ன துகள்களினால் ஆனது.. சாதா அப்பளமில்ல.. நொறுங்கிப் போன அப்பளம் அப்படின்னு கண்டுபிடிச்சாங்க.

http://www.solarviews.com/raw/sat/satring.gif


சனிக் கிரகத்தின் இந்த வளைய்ங்களை பயனியர் 11 தான் 1979 ல் முதன் முதலா படம்புடிச்சது. அதுக்கு முன்னால பூமியில் இருந்து எடுக்கப் பட்ட படங்களை விட இந்தப் படங்கள் தெளிவாகவே இருந்தது.. அதுக்குப் பின்னால வாயேஜர்1, வாயேஜர் 2 ஆகியவை 1980, 81 லும் காசினி 2004 லும் சனிக்கிரகத்தை படமெடுத்தன. காசினி சனியைச் சுத்தி வருது,,, இன்னும் சுத்துதான்னு தேடணும்.

சனியின் வளையங்களில் மொத்தம் 7 பெரிய வளையங்கள் இருக்கறதா வரிசைப் படுத்தி இருக்காங்க.. அவை சனியில் இருந்து இருக்கும் வரிசையில் பார்த்தால்

D, C, B, A, F, G, E

அதாவது D என்பது வெளிப்புறத்தில் இருப்பது E என்பது உட்புற வளையம்..

A, B, C மூணும் அகலமா இருக்கும் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வளையங்கள் இவைதான்.

அதுக்கப்புறம் நுணுக்கமாப் பாக்குறப்பதான் C இரண்டு பகுதியா இருக்கறதும் A நாலு பகுதியா இருக்கறதும் மெதுவா மெதுவா புரிஞ்சது..

இன்னும் வரும்

aren
08-02-2010, 09:52 AM
இந்த வளையங்கள் எல்லாம் என்ன என்று சொல்லவில்லையே

தாமரை
09-02-2010, 06:24 AM
http://upload.wikimedia.org/wikipedia/commons/9/96/Saturn_eclipse_exaggerated.jpg

http://upload.wikimedia.org/wikipedia/commons/8/8a/Unraveling_Saturn%27s_Rings.jpg


வளையங்கள் குரு, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களுகும் உண்டு. இருந்தாலும் சனிகிரகத்திற்கு உள்ளது போல அழகான அழுத்தமான வளையங்கள் வேறு எந்த கிரகத்துக்கும் இல்லை..

ஆமாம் அந்த வளையங்களில் அப்படி என்னதான் இருக்கு?

இந்த வளையங்கள் சராசரியாக 20 மீட்டர் மட்டுமே தடிமன் உள்ளவை. இதில் 93 சதவிகிதம் பனிப்பறைகளும் 7 சதவிகிதம் கரிமமும் வேறு சில பாறைத் துகள்களும் உண்டு.

இப்போ சூரிய மண்டலத்தை கண் முன் கொண்டு வந்து பாருங்க... கோள்கள் சூரிய மண்டலத்தை சுற்றி வரும் பாதையைப் பார்த்தால்...

அதுவும் சனிக் கிரகத்தை சுற்றி உள்ள வளையம் போல ஒரு தட்டு வடுவில்தான் தெரியும்.. கொஞ்சம் மேல போய் நம்ம பால் வீதியை எடுத்துக்குங்க.. அதுவும் ஒரு மிகப் பெரிய கருந்துளையை சுற்றி வரும் வட்டு வடிவில்தான் இருக்கு,,

வட்டு வடிவம் என்பது கிரகங்கள் அமைவதில் ஒரு மைல்கல்லாகும்.. பூமிக்கும் ஒரு காலத்தில் இதே போல் வளையம் இருந்து அதில் இரண்டு சந்திரன்கள் இருந்து அவைகளும் கூடி ஒரே சந்திரன் ஆனதை முன்னால சந்திரன் உண்டான தியரியைச் சொன்னப்ப சொல்லி இருக்கேன். அதோட சிமுலேசன் படம்கூட இங்க இருக்கு பாருங்க..

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=453479#post453479

ஒரு கிரகம் உண்டாகும் போது அது கோளவடிவம் பெரும்பொழுது இதுமாதிரி தூசிகள் வட்டு வடிவத்தை கொண்டு அந்த கிரகத்தைச் சுற்றி வருவதும்.. மெல்ல மெல்ல கிரகத்தின் ஈர்ப்பு விசையால் அவை கிரகதில் விழுந்து கிரகம் பெரிதாவதும் கிரகத்தின் வளர்ச்சிப் பாதையில் உள்ள பகுதிதான்.

இப்போ மறுபடி சனியின் வளையத்திற்கு வருவோம். இப்போ நாம பாக்கிறமே அதை முக்கிய வளையம் அப்படின்னு சொல்லலாம். ஏன்னா, 2009 அக்டோபர்ல இன்னொரு பெரிய வளையத்தை கண்டு பிடிச்சிருக்காங்க. சனியின் இந்தப் பெரிய வளையம் ரொம்ப மெல்லியது, அதே சமயம் மிக மிக பெரியது... அது முழுக்க முழுக்க பனித் துகள்கள்தான்.

முக்கிய வளையம் ஏழு பெரும் பகுதிகளை கொண்டு இருப்பதாக பார்த்தோம்..

முதல்ல A -வளையத்தைப் பார்ப்போம்.

மிகவும் பிரகாசமான A,B,C வளையங்களில் A தான் மிக வெளிப்புறம் உள்ளது. இதன் உட்பகுது காஸினி எல்லையில் அட்லஸ் என்னும் சின்ன சந்திரன் இருக்கு...

A வளையத்தின் வெளிப்புற எல்லையில் எபிமேதியூஸ், ஜேனஸ் என்னும் இரண்டு சந்திரன்கள் உள்ளன..

A வளையத்தின் சுற்று வேகமும், இந்தச் சந்திரன்களின் சுற்றுவேகமும் 7:6 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. அதாவது வளையம் சனியை 7 முறை சுற்றும் நேரத்தில் இந்தச் சந்திரன்கள் 6 முறை சுற்றி வரும். இதனால் நம்ம பால்வீதியில் எப்படி ஸ்பைரல் அமைப்பு இருக்கோ அதே மாதிரி வளையத்திலும் ஸ்பைரல் அலைகள் உண்டாகுது..

இன்னும் வரும்

aren
09-02-2010, 06:33 AM
எபிமேதியூஸ் சந்திரனில் தண்ணீர் இருப்பதாக இன்று ஒரு ஆர்டிகள் வந்துள்ளதே பார்த்தீர்களா? மேல் விப*ர*ங்க*ளுக்கு

http://news.rediff.com/report/2010/feb/09/saturn-moon-enceladus-may-contain-life.htm

தாமரை
09-02-2010, 07:19 AM
குரு மற்றும் சனி கிரகங்களின் சந்திரன்களில் தண்ணீர் இருப்பதை முன்பே சொல்லி இருக்கறனே...முழுசா படிக்கலையோ?

தாமரை
09-02-2010, 07:32 AM
அதுக்கான நேரம் வரும் போது சொல்லலாம் என்று இருந்தேன்..

http://www.space.com/common/media/video/player.php?videoRef=SP_090622_Mimas

காசினி எடுத்த படத்தைப் பாருங்க

http://i.space.com/images/best2006_Saturn_02.jpg

என்சிலாடஸ், டைட்டன் போன்ற கிரகக்ங்களில் கிய்சர்கள் இருப்பதை கூட படம் எடுத்திருக்கு...

தாமரை
09-02-2010, 07:36 AM
சனியின் மிகப் பெரிய வளையம் கொஞ்ச நாளைக்கு முன்னால் கண்டு பிடிச்சாங்களே அது எவ்வளவு பெரிசு பாருங்க

http://www.universetoday.com/wp-content/uploads/2009/10/SaturnRingDiagram-sm.jpg

இதனோட உள்வளைவு சனிக்கிரகத்தில் இருந்து முப்பத்தி ஏழு இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் ஆரம்பிக்குது. அங்கிருந்து 1 கோடியே 20 இல்ட்சம் மைல் அகலம் கொண்ட இராஜபாட்டை இது.. (இந்த ஏரியாவில 100 கோடி பூமிகளை வைக்கலாம்..)

இது சகார பாலைவன மக்கள் தொகையை விட மிக குறைந்த நெருக்கம் கொண்ட பகுதி.. 1கிலோ மீட்டர் தொலைவுக்கு தேடினா 10 அல்லது 15 துகள்கள் இருக்கலாம்..

இது மற்ற வளையங்கள் போல இல்லாமல் வேறு கோணத்தில இருப்பதையும் கவனிக்கலாம்...

இதைப் பத்தியும் எழுத வேண்டி இருக்கு.. இன்னும் நிறைய இருக்கு...

rajarajacholan
09-02-2010, 09:41 AM
wow. என்னால நம்பவே முடியலை. நிங்க சுஜாதா மாதிரி விஞ்ஞானி அண்ட் ரைட்டரா? எனக்கு ரொம்ப ஆர்வம் ஆயிடுச்சு உங்க எழுத்த படைச்சுட்டு

aren
09-02-2010, 10:11 AM
இந்த புதிய வளையம் இவ்வளவு தூரம் தள்ளி இருப்பதால் இது ஆஸ்டிராய்ட் பெல்ட் மாதிரியும் இருக்கலாமே

யவனிகா
09-02-2010, 11:03 AM
அருமையான திரி.

இப்போ தான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

சுவாரசியமான விசயங்களை எளிமையாக தொகுத்து தருவதற்காக தாமரை அண்ணாவைப் பாராட்டியே ஆகவேண்டும்.

aren
09-02-2010, 01:05 PM
அருமையான திரி.

இப்போ தான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

சுவாரசியமான விசயங்களை எளிமையாக தொகுத்து தருவதற்காக தாமரை அண்ணாவைப் பாராட்டியே ஆகவேண்டும்.

இப்போவாவது உங்களுக்கு இங்கே வரவேண்டும் என்று தோன்றியதே, அதுவே நல்லது. இன்னும் நம்ம அறிஞர் இந்தத் திரி பக்கமே வரவில்லையே.

rajarajacholan
09-02-2010, 01:34 PM
வா!. நான் Stellarium சாப்ட்வெர் பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தை பார்த்துவிட்டேன். இத்தனை நாலும் நான் அதை ஒரு நச்சத்திரம் என்றே நினைத்தேன். நன்றி தாமரை சார். இரவு சனியை பார்க்கபோரேன்.

சிவா.ஜி
09-02-2010, 01:38 PM
wow. என்னால நம்பவே முடியலை. நிங்க சுஜாதா மாதிரி விஞ்ஞானி அண்ட் ரைட்டரா? எனக்கு ரொம்ப ஆர்வம் ஆயிடுச்சு உங்க எழுத்த படைச்சுட்டு

ஆமாங்க சோழன்...சுஜாதாவுக்கும் இவருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு....அவரும் பொறியியல் பட்டதாரி...இவரும், அவரும் எலக்ட்ரானிக்ஸ்...இவரும், அவரும் பெங்களூர்லதான் வேலை செஞ்சிட்டிருந்தார்....இவரும் இப்பவும் செய்கிறார்...

அவரும் நல்ல ரைட்டர்....இவரும் நல்ல ரைட்டர்...

நம்ம மன்றத்து சுஜாதா இவர்.

சிவா.ஜி
09-02-2010, 01:40 PM
இந்தத் திரி கூடிய சீக்கிரம் தனிப்புத்தகமா அச்சில் வர வேண்டும். விற்பனையில் கலக்கவேண்டும் என்பது என்னுடைய பேராவல்.

முயற்சி பண்ணுங்க தாமரை.

தாமரை
09-02-2010, 03:25 PM
ஆஸ்ட்ராய்ட் பெல்டுக்கும் இந்த வளையத்துக்கும் இருக்கிற வித்தியாசங்கள் சில

1, அஸ்ட்ராய்டுகள் பாறைகள் உலோகத்தன்மையும் கொண்டவை.. இதில முக்கியமா நீர்தான் இருக்கு.. பனிக்கட்டிகள்

2. அஸ்ட்ராய்ட் பெல்ட் சூரியனின் சுற்றுப் பாதையில் இருக்கு.. இது சனிக்கிரகத்தைச் சுற்றி வருது

3. இதன் மத்தியில் சனியைச் சுற்றக் கூடிய சந்திரன் கூட இருக்கு,

அப்புறம் அஸ்ட்ராய்ட் பெல்ட்டைப் பற்றிய இன்னொரு லேட்டஸ்ட் தகவல்

போனவாரம் ஹப்புள் டெலஸ்கோப் ஒரு படம் புடிச்சது.. முதல்ல எல்லாரும் அது ஒரு வால்நட்சத்திரம் என்றுதான் நினைச்சாங்க

http://images.theage.com.au/2010/02/08/1103431/Asteroid-420x0.jpg

அப்புறம் ரொம்பவுமே ஜூம் பண்ணிப் பாத்தப்பதான் அது இரண்டு விண்கற்கள் நேருக்கு நேர் மோதிகிட்டதால் தூளாகி போனதுதான் அது. தெரிச்சது தண்ணீர் இல்லை. வாயுக்கள்.

இதனோட வாலின் நீளம் 160,900 கி.மீ. இதை வச்சு பார்க்கும் போது கொஞ மாதங்களுக்கு முன்னால் இந்த மோதல் நடந்திருக்கும் என கணித்திருக்கிறார்கள்.. ( நம்ம திரி ஆரம்பிச்ச நேரமோ என்னவோ தெரியலை.)

என்னுடைய அனுமானம் என்னன்னா, சனியைச் சுற்றி உள்ள துகள்கள் எல்லாம் வால்நட்சத்திர துகள்கள். அவை வெடிச்சி சில இலட்சம் ஆண்டுகள் ஆகி இருக்கலாம். இப்போது சனியைச் சுற்றி வரும் இவை சேர்ந்து சந்திரனாகவோ அல்லது சனியில் விழுந்து அதனுடன் இணைந்து விடவோ கூடும்.

அப்புறம் சனியோட வளையம் ரொம்ப மெல்லியது அப்படின்னுதானே சொன்னேன், அது பல இடங்களில் உண்மை ஆனா சில இடங்களில் 4000 மீட்டர் உயரம் கொண்ட பனி மலைகள் கூட இதில் இருக்கறதா நம்ம காசினி சொல்லுது. அதாவது எவரெஸ்ட்ல பாதி உயரம்.

அதே மாதிரி வளையங்களில் சில பளீர்னு இருக்கும். அங்க எல்லாம் மோதல்களினால் உண்டாகும் புழுதிகள்தான் இதற்கு காரணம் என்றும் தெரியுது..

இதனால சனிக்கு இன்னும் நிறைய சந்திரன்கள் எதிர்காலத்தில் கிடைக்கலாம். அவை மீண்டும் இணைந்து இன்னுமொரு பெரிய சந்திரனும் உருவாகலாம்..

என்ன இன்பா பண்டோரா கிரகத்தில் உள்ள மிதக்கும் மலைகள் ஞாபகம் வந்திருக்குமே!!!

aren
10-02-2010, 02:23 AM
இந்த ஆஸ்டிராய்ட் பெல்ட் ஒரு காலத்தில் கிரகமாக இருந்திருக்க சாத்தியமில்லை என்று சொல்லப்படுகிறது.

ஆனால் எனக்கென்னவோ, குருவில் இருக்கும் பல சந்திரங்கள் ஒரு காலத்தில் இந்த ஆஸ்டிராய்ட் பெல்ட் இருந்த இடத்தில் ஒரு கிரகமாக இருந்திருக்கலாமோ என்று நினைக்க வைக்கிறது. அது வெடித்துச் சிதறியதில் அந்த இடத்திலிருந்து விலகி குருவுக்கு அருகில் சென்றதினால், குருவால் கைது செய்ய படுத்தப்பட்டு அங்கே சந்திரனாக இருக்கிறதோ என்று நினைக்க வைக்கிறது.

தாமரை
10-02-2010, 02:52 AM
எந்த சாத்தியக் கூறையும் முழுமையாய் நிரூபிக்கவோ மறுக்கவோ முடியாத தொலைவில் நாம இருக்கோம். இன்னும் நிலா உண்டானது எப்படி அப்படின்னே நம்மால உறுதியா சொல்ல முடியலை. அதை விடுங்க.. நம்ம பூமியைப் பற்றியே இன்னும் பல விஷயங்கள் நமக்கு தெரியலை...

அதனால நம்ம அனுமானங்களை நாம் சொல்லத்தயங்கத் தேவை இல்லை.

செவ்வாய் வரை திட மேற்பரப்பைக் கொண்ட கோள்கள் அதற்கு பின் வாயுக் கோளங்களாக இருப்பதற்கும்.. புளூட்டோ திட மேற்பரப்பைக் கொண்டு இருப்பதற்கும், வாயுக் கோளங்களுக்கு வளையங்கள் இருப்பதற்கும்.. வாயுக் கோளங்கள் மெதுவாக சுருங்கி வருவதற்கும் இப்படி எத்தனையோ கும்களை கும்மாங் குத்து குத்தி அல்சிப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கு,,

அறிவியல் வளர்வதே அப்படித்தான்

rajarajacholan
11-02-2010, 09:01 AM
ரொம்ப நாளா எனக்கு ஒரு கேள்வி இருக்கு சார், எப்படி நச்சத்திரங்கள் இவ்வளவு தூரத்தில இருக்கு, மார்ஸ் இத்தனை வெயிட்டா இருக்குனு கண்டுபிடிக்கிறாங்க?

rajarajacholan
12-02-2010, 08:52 AM
http://www.tejraj.com

இது பலருக்கு உபயோகமா இருக்கலாம்

rajarajacholan
12-02-2010, 10:14 AM
ஏழரை வருடங்களுக்கு ஒருமுறை சனிக்கிரத்தோட ஒரு பக்கம் தெரியுமாம். அப்படின்னா, நாலா பக்கமும் தெரிய மொத்தம் 30 வருஷம்,. சனியோட ஒரு வருஷம் 29.5. (நானும் ஒரு ஆஸ்ட்ரோ ஆயிட்டோம்ல) வாவ். அப்படின்னா ஜோசியம் எல்லாம் பொய் இல்லையா.

தாமரை சார், ஜோசியம்+வானவியல் இரண்டையும் லிங் பன்னி எழுத முடியுமா? நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன்.

இன்பா
15-02-2010, 10:38 AM
ரொம்ப நாள் கழிச்சு வந்தவனுக்கு நாலைந்து பதிவுகள்... செம இண்ட்ரஸ்டிங்கோட...!!!

குருவுக்கும் சனிக்கும் பெட் இருப்பதை பார்த்து, இவர்கள் நிறைய சாப்பிடுவார்கள் அதனால் தான் பெருத்துவிட்டார்கள், அதற்காக விண்கற்கள் தூசிகளை கொண்டு பெல்ட் போட்டு இறுக்க கட்டியிருக்கிறார்கள் என்று... :)

நன்றி தாமரை அண்ணா... !!!

தாமரை
15-02-2010, 12:07 PM
ஓரு கிரகத்தின் எடையை எப்படிக் கணக்கிடுகிறார்கள்..

கேள்வி புதுசு ஆனால் பதில் பழசு..

நியூட்டனோட பேரண்ட ஈர்ப்பியல் தத்துவம் தெரியுமில்ல...

இப்போ இரண்டு பெரும் பொருட்கள் இருந்தால் அவை இரண்டும் ஒன்றையொன்று அவற்றின் மையப்புள்ளிகளை இணைக்கும் கோட்டின் வழியாக ஈர்க்கும்.

இந்த ஈர்ப்பு விசையானது வற்றின் நிறைக்கு நேர்மறையாகவும், அவற்றிற்கு இடையே உள்ள தொலைவிற்கு எதிர்மறையாகவும் இருக்கும்.

(இதனால இரண்டு வெயிட் பார்ட்டி பக்கம் பக்கம் இருந்தா காதல் பத்திக்கும் அப்படின்னு நினைச்சிறக் கூடாது. அது வேற.. இது வேற )

Fg = (GMm)/r2

அப்படின்னு இதை ஒரு சமன்பாட்டில் பொருத்தலாம். Fg என்பது பேரண்ட அளவிலான ஒரு நிலைஎண்.

G = 6.67x10-11 N m2/kg2.

இதில M என்பது ஒரு பொருளின் நிறை m என்பது இன்னொரு பொருளின் நிறை.

நியூட்டன் இன்னொன்னும் சொன்னார். அதாவ்து இப்படி ஒன்றையொன்று சுத்துதே அந்த இரண்டின் மீது செலுத்தும் ஈர்ப்பு விசை அவற்றின் மைய விலக்கு விசைக்கு சமமாக இருக்கும்.

Fc = Fg

F = Ma என்பது தான் தெரிஞ்ச விஷயமாச்சே..

அதனால்

Fc =MAc = (4*Pi^2r) / T^2

Fc = Fg என்பதால்

(m*4*PI^2*r)/T2] = (GMm)/r^2

இதிலிருந்து கிடைப்பது

r^3/T^2 = (GM)/(4PI^2)

T என்பது ஒரு கிரகத்தை அதன் துணைக்கோள் சுற்றும் நேரம்
G என்பது 6.67x10-11
M என்பது நிறை
r என்பது சுற்றுப் பாதையின் ஆரம்

இப்ப எளிதா கணக்கிடலாம் இல்லையா?

உதாரணம்

யுரேனஸின் சந்திரன் ஓபரான் யுரேனஸை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் 13.5 நாட்கள்.

அதனுடைய சராசரி தூரம் 582,600 km

இதிலிருந்து யுரேனஸின் நிறையக் கணக்கிடுவோம்.

582,600 km = 582,600,000 m

13.5d x 24h/d x 60m/h x 60s/m = 1,166,400 s


r^3/T^2 = (GM)/(4PI^2)
M = (r^3*4*PI^2) / (G*T^2)


இப்போ மதிப்புகளை போடுங்க

M=[(582,600,000^3)4*PI^2]/[(6.67x 10-11)(1,166,4002)]


M=8.6 x 1025 kg

இப்படித்தான் கண்டு பிடிக்கிறாங்க.

இது மாதிரி துணைக்கோள் இல்லாவிட்டால் என்ன செய்யறது?


அட போங்கப்பா.. அதையும் அப்படித்தான்... அதான் ஆரம், சூரியனைச் சுற்றும் வேகம், யுனிவர்சல் ஈர்ப்பு கான்ஸ்டண்ட் G மூணும் தெரியுமே. முதலில் சூரியனோட நிறைய கணிச்சுக்கணும். அதை வச்சுகிட்டு கிரகதோட வெயிட்டை ஈசியா கணிக்கலாம்.

போங்கப்பா போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கப்பா

rajarajacholan
15-02-2010, 01:30 PM
இந்த கேள்வி கேட்காமலேயே இருந்திருக்கலாம். இருக்கிற கொஞ்ச நஞ்ச முடியும் கொட்டிட்டு இருக்கு.. ம்ம். நன்றிங்க தாமரை சார்.

இன்பா
16-02-2010, 02:38 AM
அப்போ தராசு வெச்சு எடை போடமாட்டாங்களா..?

சோ, டோட்டல் சூரிய குடும்பத்தின் எடை எவ்வளவுன்னு எடை போட்டு வித்துடலாம் :D

aren
16-02-2010, 02:52 AM
இருக்கிற கொஞ்ச நஞ்ச முடியும் கொட்டிட்டு இருக்கு.. ம்ம். நன்றிங்க தாமரை சார்.

இதுனாலேத்தான் அறிஞர் இந்த பக்கமா வர்றதேயில்லை போலிருக்கு.

rajarajacholan
16-02-2010, 03:43 AM
இதுனாலேத்தான் அறிஞர் இந்த பக்கமா வர்றதேயில்லை போலிருக்கு.

அது யாருங்க, இன்னொரு விஞ்ஞானியா? என்னது தமிழ்மன்றம் ஒரே விஞ்ஞானிமன்றமா இருக்க்,

தாமரை
16-02-2010, 03:45 AM
அப்போ தராசு வெச்சு எடை போடமாட்டாங்களா..?

சோ, டோட்டல் சூரிய குடும்பத்தின் எடை எவ்வளவுன்னு எடை போட்டு வித்துடலாம் :D

டோட்டல் மால்ல விக்கிற அளவுக்கு இது சின்னதில்லையே...

தாமரை
16-02-2010, 03:52 AM
இப்படி எடை கண்டு பிடிப்பது எவ்வளவு துல்லியமா இருக்கும்? அதுசரி இந்த நியூட்டன் விதி, கெப்ளர் விதி இரண்டும் சரிதானா அப்படின்னு ஒரு கேள்வி இன்பா மனசுல ஓடுது..

அது 99.99 சதவிகிதம் சரியா இருக்கும். ஏன்னா இன்னிக்கு நாம அனுப்புற செயற்கைக் கோள்களின், சுற்றுப் பாதை, அது சுற்றி வரும் வேகம் இத்தனையும் இந்த சமன்பாடுகளைக் கொண்டுதான் நிர்ணயிக்கப்படுகின்றன.

இந்தக் கணக்கு தப்புன்னா அவற்றால் சுற்றுப்பாதையில் இருக்க முடியாது..

ஒண்ணு மனைவி டார்ச்சர் தாங்காம கண்காணாம காவி கட்டிகிட்டு போற கணவன் மாதிரி காணாமப் போயிடும்.

இல்லைன்னா குவார்ட்டர் கோயிந்து மாதிரி சுத்தி டொபுக்குன்னு பூமியில விழுந்திடும். (இங்கயும் ஏறத்தாழ அதே காரணம் தான் - ஈர்ப்பு விசை.- காதல்.)

அதனால் மனைவியோட பேச்சுக்கு சரியான ரிதத்தில் ஆமாம் போட்டு தலையசைக்கிற மாதிரி எந்த தூரத்தில் சுற்றுப் பாதையோ அதற்கு தகுந்த வேகத்தில் போகணும்...

விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இப்படித்தான் ஒண்ணுக்கொண்ணு சரியா இருக்கும். ஹி ஹி ஹி ஹி ஹி

தாமரை
16-02-2010, 05:19 AM
நட்சத்திரங்கள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்று எப்படிக் கண்டு பிடிப்பது...

அட இது ரொம்ப சிம்பிள் மேட்டருங்க,,, இப்ப சொல்றேன் கேளுங்க

கண்ணாலதான்..

இது ஜோக் இல்லை நிஜம். இந்த தத்துவத்தை இறைவன் நம்ம கண்ணுக்குள்ள புதைச்சு வச்சிருக்கான்.

நமக்கு ஒரு கண் போயிருச்சி அப்படின்னு வச்சுக்குங்க, ஒரு பொருள் எவ்வளவு தொலைவில் இருக்குன்னு அனுமானிப்பது ரொம்பவே கஷ்டம். வலது கண் இடது கண் இரண்டும் ஒரே பொருளை இருவேறு கோணங்களில் பார்க்குது. இந்தக் கோண வித்தியாசம் தான் நம்ம கண்ணுக்கு ஆழம், (அதாங்க டெப்த்) தூரம் என தெரிகிறது.

நட்சத்திரங்களின் தொலைவை கண்டுபிடிக்கவும் இதே டெக்னிக்கை தான் உபயோகிக்கறாங்க. (இதை எந்த சாமியாருக்கும் சொல்லிடாதீங்க.. இந்த தத்துவமெல்லாம் நாம ஆசிரமம் ஆரம்பிக்கும் போது உபயோகிச்சுக்கலாம். இப்படி எக்கச் சக்க தத்துவம் நம்ம கைல இருக்கு)
படமெல்லாம் போ(சு)ட்டுகிட்டு வந்து விளக்கறேன்..

கொஞ்சம் பொறுங்க...

இன்பா
16-02-2010, 08:10 AM
கூகுள் எர்த் ல தூரம் கண்டுபிடிருக்குறதை ரொம்ப பிரம்மிப்பா பார்த்தேன்...

நட்சத்திரங்களுக்கிடையிலான தூரத்தையும் கூட கணக்கிடலாமா...?

தாமரை
16-02-2010, 10:38 AM
இப்ப கண்ணால் எப்படித் தொலவை கணக்கிடுகிறோம் என்பதைக் காண்போம்.

இங்க இருக்கிற படத்தைப் பாருங்க...

http://i326.photobucket.com/albums/k413/stselvan/parellax.jpg

இரண்டு கண்ணும் ஒரு நட்சத்திரத்தைப் பார்க்குது இல்லையா?

இப்போ நட்சத்திரம் இரண்டு கண்களின் மத்தியில் இருக்கு. அதாவது கண்கள் நட்சத்திரம் இவற்றை இணைத்து ஒரு இரு சமபக்க முக்கோணம் அமையுது.

இப்போ முதல் கண் ஒரு கோணத்தில் பார்க்குது. இரண்டாம் கண் அதே கோணத்தில் பார்க்குது. இப்போ கண்கள் இரந்தையும் இணைத்து ஒரு கோடு போடுவோம்.

இந்த இரு சமபக்க முக்கோணத்திற்கு மத்தியில் ஒரு கோடு போட்டா இரண்டு செங்கோண முக்கோணங்கள் கிடைக்கும்.

இப்போ நமக்கு இரண்டு கண்களுக்கும் இடையில் உள்ள தொலைவு தெரியும். அதே மாதிரி கண்கள் பார்க்கும் கோணமும் தெரியும்.

இப்போ திரிகோணமிதி (அப்படித்தான் மூணு முறை போட்டு மிதிக்கணும்.. ) விதிப்படி அந்தச் செங்குத்துக் கோட்டின் நீளம் எளிதில் கண்டுபிடிக்கலாம்.

TAN Angle = எதிர்பக்கம் (உயரம்) / அடுத்த பக்கம் (விழியிடைத் தூரம்/2)

இதில Angle தெரியும். விழியிடைத் தூரம் தெரியும். அதைக் கொண்டு உயரம் கண்டுபிடிக்கலாம்.

இதுதாங்க நட்சத்திரம் அளக்கவும் அடிப்படை.

தாமரை
16-02-2010, 10:53 AM
http://www.galacticfool.com/images/articles/parallax/using-parallax-distance-to-star.png

http://www.libraryjournal.com/articles/blog/1100000310/20080826/parallax2%5B1%5D.gif

இந்தப் படத்தைப் பாருங்க..

பூமி சூரியனைச் சுற்றி வருதுன்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்.

இது ஒரு நீள் வட்டப்பாதை இல்லையா?

அதில இரண்டு நிலைகளைத் தேர்ந்தெடுக்கிறோம். 6 மாச இடைவெளியில் இந்த இரண்டு புள்ளிகள் கிடைக்கும்.

நமக்கு சில ரொம்பவே தொலைவான நட்சத்திரங்கள் தெரியும். இவை எப்பொ பார்த்தாலும் அவை தெரியும் கோணம் மாறவே மாறாது.

முதல்ல ஒரு ஜனவரி நாளில் பூமியின் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து நாம் தூரம் அறிந்து கொள்ள வேண்டிய நட்சத்திரம் தெரியும் கோணத்தை குறித்துக் கொள்கிறோம். மிக மிக தொலைவில் உள்ள நட்சத்திரம் நமக்கு ரெஃபரன்ஸ்...

ஆறு மாசம் கழிச்சு பூமி சூரியனுக்கு இன்னொரு பக்கம் இருக்கும் போது.. அந்த ரெஃபரன்ஸ் நட்சத்திரம் நாம் முதலில் குறித்த இடத்திற்கு வரும் பொழுது தூரம் அளக்க வேண்டிய நட்சத்திரம் தெரியும் கோணத்தைக் குறித்துக் கொள்கிறோம்.

போன பதிவில் சொன்ன மாதிரியேதான்.

நமக்கு பூமியின் சுற்றுப் பாதை தெரியும். அதனால முதன் முறை பார்த்தபோது அண்டவெளியில் நாம் இருந்த இடமும், தற்போது நாம் இருக்கும் இடமும் இவை இரண்டுக்குமான தொலைவும் தெரியும்.

இந்தக் கோணத்தின் TAN மதிப்பையும், இந்த தூரத்தில் பாதியையும் கொண்டு தூரத்தைக் கணக்கிடுகிறோம்.

வாத்தியார் மிதிச்சி மிதிச்சி சொல்லிக் கொடுத்தப்ப ஏன் படிச்சோனு தெரியாம படிச்ச பாடங்கள் இப்படி எல்லாம் வாழ்க்கையில் உபயோகப்படும்..

எல்லாத்தையும் சரியான கோணத்தில் பார்த்தால் எல்லாமே எளிய கணக்குகள்தான்.

இன்பா
17-02-2010, 02:44 PM
கணக்கு வாத்தியார் வந்து கணக்கு பாடம் எடுத்த மாதிரியே இருக்கு... :D

aren
19-02-2010, 09:54 AM
கீழேயுள்ள இணைப்பில் சூப்பர்நோவா எப்படி ஏற்படுகிறது என்பதை இப்போது புதிதாக நாசாவில் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று எழுதியிருக்கிறது. இதை கொஞ்சம் எங்களுக்கும் புரியும்படி எழுதுங்களேன்.

http://beta.thehindu.com/sci-tech/science/article109574.ece?homepage=true

தாமரை
22-02-2010, 05:46 AM
ஏழரை வருடங்களுக்கு ஒருமுறை சனிக்கிரத்தோட ஒரு பக்கம் தெரியுமாம். அப்படின்னா, நாலா பக்கமும் தெரிய மொத்தம் 30 வருஷம்,. சனியோட ஒரு வருஷம் 29.5. (நானும் ஒரு ஆஸ்ட்ரோ ஆயிட்டோம்ல) வாவ். அப்படின்னா ஜோசியம் எல்லாம் பொய் இல்லையா.

தாமரை சார், ஜோசியம்+வானவியல் இரண்டையும் லிங் பன்னி எழுத முடியுமா? நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=441836&highlight=%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D#post441836

அண்ணே ராஜராஜ சோழன், ஜோதிடம் என்பது வானவியலை அடிப்படையாகக் கொண்ட ஒரு தகவல் திரட்டு. அது முழு வளர்ச்சி அடையவில்லை. அதுக்குள்ள அதை தடம்மாற்றி அழிவுப் பாதையில் அழைச்சுகிட்டுப் போயிட்டாங்க.

ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க. சனியில் இருந்து மாந்தி என ஒரு புது கிரகத்தை அந்தக் காலத்து ஜோதிடர்கள் உண்டாக்கினாங்க. இந்த மாந்தி இருக்கே இது சனியின் நிலவான டைட்டனா என்று எந்த ஜோதிடராவது ஆராய்ந்து இருக்கிறாரா? சொல்லுங்க. (இந்தக் கதை இராமாயணத்தில் வரும். இராவணன் தனக்கு அடிமைகளான நவக்கிரகங்களை தன்க்கு வெற்றி உண்டாகிற மாதிரியான பொஷிஷன்ல நிக்கச் சொல்ல, சனி தன் உடல் சதையை வெட்டி அதை ஒரு கிரகமாக்கி இராவணனின் இலக்கினத்தில் வைத்துவிட அதனால் இராவணன் தோல்வி அடைந்து இறந்தான் அப்படீங்கறது கிளைக்கதை. அந்தச் சதையை பகலில் குளிகன் என்றும் இரவில் மாந்தி என்றும் சொல்லுவாங்க.

அதாவது இராமாயண காலத்தில் டைட்டனை கண்டு பிடிச்சாங்களா அப்படின்னு யாராவது ஜோதிடர் ஆராய்ட்சி பண்ணினதா கேள்விப் பட்டிருக்கீங்களா? இல்லைதானே?

இன்றும் பஞ்சாங்கம் இல்லாம ஒரு ஜோதிடரை கிரக ஸ்புடம் பண்ணச் சொன்னா, ஹி ஹி முடியாதுன்னு சொல்லுவாங்க. பிரபல ஜோதிடரை வானத்தில எது எந்த நட்சத்திரம், எது எந்தக் கிரகம்னு காட்டச் சொல்லுங்க. வழியல்தான் பதிலாக் கிடைக்கும்.

இன்றைய ஜோதிடர்கள் பழைய வானியல் வல்லுனர்கள் ஆராய்ட்சிக்காக திரட்டி வைத்த தகவல்களை படிச்சு தங்களுக்குத் தோணின மாதிரி எல்லாம் அதை அர்த்தப் படுத்திக் கொண்டு சொல்றாங்களே ஒழிய எந்த ஜோதிடரும் வானியல் ஆராய்ட்சியில் ஈடுபடலை.

பஞ்சாங்கம் கணிப்பவர்கள் அந்தக் காலத்தின் வானியல் கணித சூத்திரங்களை கணினியில் ஏற்றி வைத்து விட்டு அடிப்படையை மறந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் ஜோதிடம் விஞ்ஞான அடிப்படையானது என்ற ஒரு வரியை வச்சுகிட்டு ஒவ்வொரு ஜோதிடனும் மக்களை ஏமாற்றுகிறார்னு சொல்லலாம்.

யாரொருவர் அந்த வானியல் ஆராய்ட்சியை வளப்படுத்தி மேலும் புதிய புதிய தகவ்ல்களைச் சேகரித்து அந்த டேட்டா பேஸை இன்னும் விரிவாக்கிக் கொண்டு வருகிறானோ அவரை மட்டுமே ஜோதிடர் எனச் சொல்லலாம். அப்படி யாரைப் பற்றியும் இந்தக் காலத்தில் நான் கேள்விப் பட்டதில்லை.

இன்பா
23-02-2010, 09:41 AM
தாமரை அண்ணா,

ஜாதங்கம் ஜோதிடம் எல்லாம் பலிக்கிறதா என்பதை விட, அவர்களின் கணிப்பு அதாவது இந்நாள் இது இங்கிருக்கும், இன்று கிரகணம் வரும் என்றெல்லாம் கணிப்பு அவர்களின் அவர்களின் வானியல் அறிவைப் பற்றி அறிய முடிங்கின்றது அல்லவா?.

தாமரை
23-02-2010, 11:17 AM
தாமரை அண்ணா,

ஜாதங்கம் ஜோதிடம் எல்லாம் பலிக்கிறதா என்பதை விட, அவர்களின் கணிப்பு அதாவது இந்நாள் இது இங்கிருக்கும், இன்று கிரகணம் வரும் என்றெல்லாம் கணிப்பு அவர்களின் அவர்களின் வானியல் அறிவைப் பற்றி அறிய முடிங்கின்றது அல்லவா?.

நிஜமா மேலிருக்கும் என் பதிவைப் படித்த பின்னால்தான் இப்படி எழுதத் தோணியதா?

இன்பா
03-03-2010, 09:38 AM
பூமி சுற்றும் வேகம் குறைந்துக் கொண்டே வருகிறதாமே.. சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் கூட ஒரு நாளுக்கு 1..... வினாடி அளவுக்கு குறைந்துவிட்டதாமே...?

தாமரை
03-03-2010, 09:59 AM
பூமி சுற்றும் வேகம் குறைந்துக் கொண்டே வருகிறதாமே.. சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் கூட ஒரு நாளுக்கு 1..... வினாடி அளவுக்கு குறைந்துவிட்டதாமே...?


தப்பு தப்பா படிக்காதீங்க இன்பா...

பூமியின் நாளின் அளவு 1.26 மைக்ரோசெகண்டுகள் குறைந்திருக்கிறது. அதாவது பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் வேகம் அதிகரித்து இருக்கிறது.


The quake, the seventh strongest earthquake in recorded history, hit Chile Saturday and should have shortened the length of an Earth day by 1.26 microseconds, according to research scientist Richard Gross at NASA's Jet Propulsion Laboratory in Pasadena, Calif. One microsecond is one-millionth of a second long.

The 9.1 Sumatran earthquake in 2004, which set off a deadly tsunami, should have shortened Earth's days by 6.8 microseconds and shifted its axis by about 2.76 inches (7 cm, or 2.32 milliarcseconds).

அதாங்க நம்ம சுனாமி புகழ் நிலநடுக்கம் 6.8 மைக்ரோசெகண்டுகளை ஒரு நாளைக்கு குறைத்து இருக்கிறது..

இப்போ உங்களுக்கு அசைன்மெண்ட் என்னன்னா,

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் வேகம் அதிகரிப்பதால் அதன் ஈர்ப்பு விசை குறையுமா அதிகரிக்குமா இல்லை மாறாமல் இருக்குமா என்று கண்டு பிடிச்சு சொல்லுங்க பார்ப்போம்.

இன்பா
05-03-2010, 05:56 AM
பூமி வேகமாக சுற்றினால் அதன் ஈர்ப்பு விசை கூடும்...

எப்படி என் அறிவு...
(எல்லாம் இந்த திரியில் படிச்சது தான் :D)

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் வேகம் அதிகரிப்பதால் அதன் ஈர்ப்பு விசை குறையுமா அதிகரிக்குமா இல்லை மாறாமல் இருக்குமா என்று கண்டு பிடிச்சு சொல்லுங்க பார்ப்போம்.

போன போஸ்ட்ல நீங்க சொன்னதை அப்படியே கொட் செய்ததால், இவன் ஒழுங்கா தான் படிக்குறானான்னு டெஸ்ட் பன்றீங்க தானே :D

இன்பா
13-04-2010, 05:02 AM
தாமரை அண்ணா என்ன ஆச்சு, புதுப்பிக்கவே இல்லையே.

தாமரை
12-05-2010, 04:42 PM
இப்பதான் தம்பி தக்ஸ் அவசரமா ஃபோன் பண்ணினாரு.. அண்ணா அண்ணா வானத்தைப் பாருங்க அப்படின்னு..

என்ன விஷேசம்னு கேட்டேன்.. வானத்தில ஒரு பகுதி ரொம்ப வெளிச்சமா இருக்குதாமே என்னால இங்க பார்க்க முடியலைன்னு சொன்னார்.

சரின்னு பால்கனியில் போய் பார்த்தேன். நிஜம்தான் வானத்தில் தென் பகுதியில் மேகங்கள் பளிச்சுன்னு இருந்தது..

ஆனா இதைப் பத்திதான் எனக்கு முன்னமே தெரியுமே..

பார்க்கத் துடிப்பவங்க உடனே போய் பாருங்க...

http://www.wired.com/wiredscience/2009/07/nightclouds/

http://www.newscientist.com/article/dn9228-mysterious-glowing-clouds-targeted-by-nasa.html

இதற்கு காரணம் என்ன?

வெய்யில் காலத்தில் பூமியின் வடபகுதி ரொம்ப சூடாகுதில்லையா, அதனால பூமியின் இந்தப் பகுதியில் வளி மண்டலம் உயருது.

ஆவியான தண்ணீர் இதனால் மேலே போகுதில்லையா.. வளிமண்டலம் உயருவதால் அதன் மேல்பகுதி ரொம்ப சில்லுன்னு ஆகி நீராவி பனிப்படலமா உறைந்திடுது. இது ரொம்ப அதிக உயரத்தில் இருப்பதால் சூரியன் நமக்கு மறைந்தாலும் இந்த மேகங்கள் ஒளியூட்டப்படுது.

இதில் நமது பூமியில் காற்றில் மாசு அதிகரிப்பதால் சூரிய ஒளி எதிரொளிக்கப் படுவது குறைஞ்சு போயிடுது. இதனால் வளிமண்டலத்தின் மேற்பகுதி இன்னும் ஜில்லுன்னு ஆயிடறது. பூமியின் மேற்பகுதியில் வெப்பம் அதிகமா இருப்பதால ஆவியாகும் தண்ணியும் அதிகமா இருக்கு.

இருந்தாலும் விண்வெளியில் இருந்து மாசுக்கள் வருவது எப்படி? டிராபிகல் பகுதியில் இது ஏன் தெரியுது என்பது கொஞ்சம் தெளிவில்லாமல்தான் இருக்கு,.

வானத்தைப் பாருங்க!!!

தாமரை
13-05-2010, 11:39 AM
கிழக்கு தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலையை அடுத்துவருவது சவ்வாது மலைத் தொடர்கள் ஆகும். இம்மலைத் தொடர்கள் வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் 262 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. இம்மலையின் சராசரி உயரம் 1060 மீட்டரில் இருந்து 1160 வரை ஆகும். இம்மலையில் காவனுர் என்ற இடத்தில் ஆசியாவின் மிகப்பெரிய தொலை நோக்கியான வைனுபாப்பு அப்சர்வேட்டரி அமைந்துள்ளது. இங்கு வானியல் தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இம்மையம் இந்திய வானியற்பியல் மையத்தால் (Indian Institute of Astro Physics) நிர்வகிக்கப்பட்டுவருகிறது. இம்மையத்திலிருந்து வானில் உள்ள அற்புதங்களைக்காண பொதுமக்களுக்கும் அனுமதி (பிரதி சனிக்கிழமை தோறும்) அளிக்கப்படுகிறது.

மாலை 6:00 மணியில் இருந்து 10:00 மணி வரை இந்த தொலைநோக்கியில் வானம் பார்க்கலாம்..

சிவாஜி அண்ணா, அடுத்த டிரிப் வரும்போது இம்மமலைக்கு அனிருத்துட போலாமா?

ரங்கராஜன்
13-05-2010, 01:07 PM
காவனுர் என்ற இடத்தில் ஆசியாவின் மிகப்பெரிய தொலை நோக்கியான வைனுபாப்பு அப்சர்வேட்டரி அமைந்துள்ளது

சே சே இந்த கேள்வி இந்த வருடம் டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்டார்கள் நான் கொடைக்கானல் என்று குறித்து விட்டு வந்தேன்............... அண்ணா கொஞ்சம் முன்னாடி இந்த பதிவை போட்டு இருக்ககூடாதா

தாமரை
13-05-2010, 01:09 PM
காவனுர் என்ற இடத்தில் ஆசியாவின் மிகப்பெரிய தொலை நோக்கியான வைனுபாப்பு அப்சர்வேட்டரி அமைந்துள்ளது

சே சே இந்த கேள்வி இந்த வருடம் டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்டார்கள் நான் கொடைக்கானல் என்று குறித்து விட்டு வந்தேன்............... அண்ணா கொஞ்சம் முன்னாடி இந்த பதிவை போட்டு இருக்ககூடாதா

கானல்தான்.. ஹி ஹி

aren
01-06-2010, 01:55 AM
இன்றைய தினகரன் இணையத்தளத்தில் இப்படி ஒரு செய்தி வந்துள்ளது. தாமரை இதற்கு நாம் அனைவருக்கும் புரியும்படி விளக்கமாக எழுதுவார் என்றே நம்புகிறேன்.

சூரியன் ஒரு முழுக்கோளம் இல்லை

சூரியன் ஒரு முழுக்கோளம் என்கிற நம்பிக்கை அண்மையில் தகர்க்கப்பட்டிருக்கிறது.

சூரியனின் கோளத்தன்மையை நாசா விஞ்ஞானிகள் அண்மையில் துல்லியமாக அளந்துள்ளனர். இப்படி அளவீடு செய்வதற்கு Reuven Ramaty High-energy Solar Spectroscopi Imager என்னும் விண்தொலைநோக்கி பயன்பட்டுள்ளது. சூரியப் புள்ளிகள் தீவிரமாக இயங்கும் நாட்களில் சூரிய நடுக்கோட்டின் ஆரம், துருவ அச்சின் ஆரத்தைக் காட்டிலும் சற்றுப் பெரியதாக இருக்கிறதாம். சூரியனைச் சுற்றிலும் பழத்தோல் போன்ற ஒரு பொருள் உருவாவதால் துருவப் பகுதிகளில் நசுங்கிப்போன கோளமாக சூரியன் தோற்றமளிக்கிறதாம். சூரியனின் இடுப்பு சற்று பருத்திருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.

இந்த "பழத்தோல் பிதுக்கம்" காரணமாக சூரியன் ஒரு முழுமையான கோளம் இல்லை என்கிற கருத்து உறுதிப்படுகிறது. சூரியனின் தீப்பிழம்புகளை ஆராய்வதற்காக 2002ல் Reuven Ramaty High-energy Solar Spectroscopi Imager என்னும் விண்தொலைநோக்கி ஏவப்பட்டது. எக்ஸ் கதிர்களையும், காமா கதிர்களையும் பயன்படுத்தி இந்த விண்தொலைநோக்கி அளவீடுகளை செய்துள்ளது.

விண்மீன்களில் சூரியன் மட்டுமே மிக அதிகமான ஈர்ப்புவிசையைப் பெற்றிருக்கிறது. சூரியனின் கோள வடிவம் 0.001 சதவீதம் என்று இது நாள் வரையில் நம்பப்பட்டு வந்தது. நிமிடத்திற்கு 15 சுற்றுகள் வீதம் சுழலக்கூடிய விண்தொலைநோக்கியின் பொருளருகு துளை வழியாக சூரிய வட்டத்தையும், தீப்பிழம்புகளையும் கண்காணித்தபோது, சூரியன் முழுமையான கோளம் இல்லை என்கிற உண்மை தற்செயலாக அறியப்பட்டுள்ளது.

இந்த பழத்தோல் பிதுக்கம் காந்தப்பண்புகளைக் கொண்டதாம். சூரியப்பரப்பில் குமிழ்களாகப் படரும் இந்த மேற்பரப்பிற்கு supergranules என்று பெயரிட்டுள்ளனர். பானையில் கொதிக்கும் நீர்க்குமிழ்களைப் போன்று பிறப்பெடுக்கும் இந்த supergranules மெள்ள மெள்ள விண்மீன்களின் அளவிற்கு உருப்பெருக்கம் அடைகின்றனவாம். supergranules ன் அளவு பூமியைப்போல் இருமடங்கு என்றும் கணக்கீடுகள் காட்டுகின்றன. இவை முழுக்க முழுக்க காந்தப்புல பிளாஸ்மாவால் ஆனவையாம்.

supergranules ன் மையத்தில் தோன்றும் காந்தப்புலம் மெதுவாக மேற்பரப்பை அடைகிறது. சூரியனில் ஏற்படும் காந்தப்புல மாற்றங்களால் g-mode எனப்படும் சூரிய ஈர்ப்பு விசையில் அலைவுகள் ஏற்படுகின்றன. சூரியனின் காந்தப்புல ஏற்றத்தாழ்வுகள், பூமியின் காந்தப்புலத்தை நிச்சயமாக பாதிக்கக்கூடியவை.

நன்றி: தினகரன் இணையப்பக்கம்

http://www.dinakaran.com/sciencedetail.aspx?id=7107&id1=21

தாமரை
01-06-2010, 04:47 AM
எல்லாக் கோளுமே ஏறத்தாழ அப்படித்தான். நாம் படித்திருக்கோம். பூமி கூட அப்படித்தான்.

இதன் அடிப்படைக் காரணம் சுழற்சியால் உண்டாகும் மைய விலக்கு விசை.

சனியைப் பற்றிச் சொன்ன போது கூட...

சனிக்கிரகம் உயரம் குறைந்து இடைபெருத்த லொள்ளுவாத்தியார் மாதிரியான உருவம் கொண்டது ஆகும். அதாவது வடக்கிலிருந்து தெற்காக இது 54,364 கிலோமீட்டரும், கிழக்கிலிருந்து மேற்காக இது 60,268 கிலோமீட்டரும் ஆரம் கொண்டது.


குரு கோளமா இருந்தாலும் நடுப்பகுதி குண்டா இருக்கும். உயரம் கொஞ்சம் குறைச்சல். நம்ம பூமி மாதிரியே..

ஆக இதன் அடிப்படைக் காரணம் "ரூட் காஸ்" சுழற்சிதான்.


அடுத்து சுழற்சி வேகமும் வாயுக்கோள்களில் / நட்சத்திரங்களில் வேறுபடும். துருவப் பகுதிகள் மெதுவாகவும், மையப் பகுதிகள் வேகமாகவும் சுழல்வதால் நீங்கள் சொன்ன மாதிரி எஃபெக்டுகள் சனி / குரு கோள்களில் ஏற்படுவதுதான். இது புதிய கண்டு பிடிப்பு அல்ல.

சனியைத் தொடர்ந்தால் புரியும்...

தாமரை
10-06-2010, 12:25 PM
http://science.nasa.gov/media/medialibrary/2010/06/04/SpWeatherPoster1.jpg

டும் டும் டும் டும்..

ஒரு நாள் வரப்போகுது... எப்போ? என்ன? எங்க?

2013 ல் இது நடக்கப் போகுது.. எது?

1859 ஆம் ஆண்டு நடந்ததே அதுதான். அன்று என்ன ஆச்சு?

ஒரு மிகப் பெரிய சூரியப் புயல்... அன்று ஏற்பட்ட துருவ ஒளி ஹவாய் தீவுகள் வரை தெரிந்தது, மக்கள் அதன் ஒளியில் செய்தித்தாள்களையே படிக்க முடிந்ததாம்.

2013 மே மாதம் அதே போன்ற ஒரு மிகப் பெரிய சூரியப் புயல் வரலாம் என்று எண்ணப்படுகிறது.

அன்று தந்தி ஒயர்கள், மின்சாரக்கம்பிகள் ஷார்ட் சர்க்கியூட் ஆகி, பல வீடுகள் தீக்கிரையாகின.. இன்று நாம் உபயோகப்படுத்தும் மின்சாதனங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் பொழுது அந்த ஒரு நாள் உலகத்தின் சில பகுதிகள் இருளில் மூழ்கலாம்.

விமானங்கள், செயற்கைக்கோள்கள், கணிணிகள் முக்கியமா டி.விக்கள், தொலைபேசிகள், செல்பேசிகள் இப்படி மின்சாரம் மற்றும் தொலைதொடர்பை நம்பி இருக்கும் அத்தனையும் அன்று பிரச்சனைகளைச் சந்திக்கலாம்.

கத்ரீனா புயல் உண்டாக்கியதைப் சேதத்தை விட 20 மடங்கு சேதத்தை இந்தப் புயல் உண்டாக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

http://science.nasa.gov/science-news/science-at-nasa/2009/29may_noaaprediction/

http://www.youtube.com/watch?v=DU4hpsistDk


வார்த்தைகளால் இப்படி பெரிசு பெரிசா சொன்னாலும் நாசா காட்டும் கிராஃப் என்ன சொல்லுது?

http://science.nasa.gov/media/medialibrary/2009/05/29/29may_noaaprediction_resources/prediction_strip2.jpg

http://science.nasa.gov/media/medialibrary/2009/05/29/29may_noaaprediction_resources/maunderminimum.jpg

இந்த கிராஃபின் படி போன 1960 களில் சூரியப் புள்ளிகள் மிக அதிகமா இருந்திருக்கு. 2000 ஆம் ஆண்டு இருந்த சூரியப் புள்ளைகளை விடக் குறைவாகவே புள்ளிகள் தோன்றலாம் என்று அவர்களின் கணிப்புகள் சொல்லுது...

1859 ல் 120 புள்ளிகள் வரை இருந்தது, 1960 ல் 180 வரை உயர்ந்திருந்தது.. ஆனால் இப்போதைய கணிப்பு எழுபதுகளில்தான்.. அப்படி இருக்க இது அந்த அளவிற்கு இருக்கும் எனச் சொல்லுவது எங்கியோ உதைக்குது...

எதையும் பெரிசா காட்டியே பயமுறுத்தி பழகிட்டாங்க.. என்ன செய்ய..

பார்க்கலாம்.. நாசா சொன்னது பலிக்குதா என் உள்மனசு சொல்றது பலிக்குதான்னு..

பாலகன்
10-06-2010, 04:20 PM
2013 வருஷம் ஒகே அந்த நாள் எந்த நாள்? அது தெரிஞ்சா எல்லா எலெக்ரிக்கல் எலெக்ரானிக்கல் உபகரணங்களை அமித்தி விட்டு தப்பிவிடலாம் :)

ரொம்பவே பயமா இருக்குது.

அக்னி
11-06-2010, 07:00 AM
இந்த நாசா க்க்காரங்க, அடிக்கடி இப்பிடிப் பீதிய கிளப்பி விடுறாங்களே...

மாயன நம்பிறவங்க மட்டும் பயப்பிடாம இருங்க... :cool:

சிவா.ஜி
11-06-2010, 07:07 AM
உங்க உள் மனசு சொல்றதுதாங்க நடக்கும் தாமரை....அன்னைக்கு எதுவும் நடக்காது.....சந்தோஷமா...எல்லோரும் தொலைக்காட்சிப் பாத்துக்கிட்டிருப்பாங்க....

நாசான்னாலே புருடாதான்....

தாமரை
11-06-2010, 10:47 AM
குருவைப் பற்றிப் படிக்கறப்ப அதன் மீதுள்ள வரி வரியான மேகக் கூட்டங்களையும் அவை எத்ரெதிர் பக்கங்களில் நகர்வதையும் படிச்சிருந்தோம்..

போன வருஷம் ஜூலை மாதம் எதுவோ ஒண்ணு இடிச்சதையும் பார்த்தோம்..

இந்த வருஷம் பார்த்தா...

அந்த மேகக் கூட்டங்களில் ஒரு பட்டியைக் காணோம்...


பாருங்களேன்...

http://msnbcmedia3.msn.com/j/MSNBC/Components/Photo/_new/jupiter-belt-fade-100513-02.h2.jpg



இந்தப் புகைப்படங்களை எடுத்தவர் ஆண்டனி வெஸ்லி என்னும் ஆஸ்திரேலியர்..

அவர் இன்னொரு விஷயமும் இந்த மாசம் வீடியோ எடுத்திருக்கார்.

அதாவது மீண்டும் குருவை எதுவே தாக்கி இருக்கு,,,


ஜூன் 3 ஆம் தேதி அவர் எடுத்த புகைப்படமும் வீடியோவும் கீழே...

கறுப்பு வெள்ளையில் (வடமேற்குப் பகுதியில் உள்ள வெள்ளைப் புள்ளி)
http://jupiter.samba.org/jupiter/20100603-203129-impact/03189-2.jpg

வண்ணத்தில் (தென்கிழக்குப் பகுதியில் உள்ள வெளிச்சப் புள்ளி)

http://jupiter.samba.org/jupiter/20100603-203129-impact/j20100603-203136utc.jpg

http://www.youtube.com/watch?v=DaRwaw9d_LQ

அக்னி
11-06-2010, 10:53 AM
யாருப்பா அது குருவோட இடுப்புப்பட்டியொன்ன ஆட்டயப்போட்டது..?

குரு அடுத்ததா என்னத்தப் பறிகொடுத்தாரோ...

இதனால, சிஷ்யகோடிகளுக்கு ஆபத்தொண்ணுமில்லாம இருந்தாச் சரி...

சிவா.ஜி
11-06-2010, 11:54 AM
குருப்பார்வை...இப்ப எப்புடி இருக்கும்....மிஸ்டர் காழியூர் நாராயணன்தான் சொல்ல வேண்டும்...

நாராயணா...நாராயணா....

தாமரை
27-06-2010, 04:15 AM
http://www.dinakaran.com/image/science-specials-69.jpg

அனைத்துலக வானியல் ஆண்டாக 2009 அறிவிக்கப்பட்டுள்ளது. இது கலீலியோ கலிலி தனது தொலைநோக்கியைப் பயன்படுத்தி முக்கிய வானியல் அவதானிப்புகளை செய்த 400 ஆண்டுகள் நிறைவில் வருகிறது. இந்த அறிவிப்பை பல நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் வெளியிட்டது.

சர்வதேச வானியல் ஆண்டாக (International Year of Astronomy 2009) ஐ.நா. சபை அறிவித்துள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு 1609இல் கலீலியோ தனது தொலைநோக்கி மூலம் கோள்களை ஆராய்ந்து கூறினார். "சூரியக் குடும்பத்தின் மையப்பகுதி சூரியன். அதனைச் சுற்றியே பூமி வலம் வருகிறது”. இதனை நம்ப மறுத்த மதவாதிகளுக்காக பொதுமக்களுக்கு முன் செய்முறை விளக்கத்தை அளித்தார். தனது கண்டுபிடிப்பை மக்கள் மத்தியில் தொலைநோக்கி வழியே பார்க்கச் செய்தார். வானை நோக்கி தொலைநோக்கியைத் திருப்பிய அந்த ஆண்டிலிருந்து நவீன அறிவியலின் பெரும் புரட்சி தொடங்கியது.

மக்களிடம் தன் கண்டுபிடிப்பை முதலில் எடுத்துச் சென்ற விஞ்ஞானி கலீலிலியோதான். கிருத்துவ திருச்சபைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்கள் நம்மை உறைய வைத்துவிடும். அந்த உக்கிரமான போராட்டம், "மனித வரலாற்றில் முக்கிய மைல்கல்' என்று கம்யூனிச சிந்தனையாளர் பிரடெரிக் எங்கெல்ஸால் புகழ்ந்துரைக்கப்பட்டது.

ஐரோப்பாக் கண்டம் கிருத்துவ கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கத்தின் பிடியில் பல நூற்றாண்டுகள் இருந்தது. மானுடத்திற்கு பகுத்தறிவு அளித்து அறிவுப் புரட்சி செய்ய வந்த பல மகத்தான விஞ்ஞானிகள் ஒடுக்கப்பட்ட காலமது. அப்படியொரு காலத்தில்தான் கலீலிலியோ கலிலி இத்தாலியில் பிறந்தார். மருத்துவப் படிப்பை பயின்று வந்தவர் விருப்பமில்லாமல் பாதியிலேயே விட்டுவிட்டு கணிதத்தைப் படித்தார். பேராசிரியராகப் பணியாற்றி பல அறிவியல் கருத்துக்களை எடுத்துரைத்தார். அறிவியல் கருத்துக்கள் தத்துவார்த்தமாக கூறப்பட்டு வந்த காலத்தில், முதன்முதலாக செய்முறையின் மூலம் அறிவியல் கருத்துக்களைச் வெளியிட்ட பெருமை கலீலிலியோவைச் சாரும்.

சிவா.ஜி
27-06-2010, 06:21 AM
வியப்பூட்டும் மனிதர் கலீலியோ. மத குருமார்களை சமாளிப்பதென்பது எவ்வளவு ஆபத்தானது என வரலாற்று நூல்களில் படித்திருக்கிறேன். எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து...பல அறிவியல் உண்மைகளை உலகுக்கு அளித்த கலீலியோவைக் கௌரவிக்கும் விதமாக 2009ஐ சர்வதேச வானியல் ஆண்டாக அறிவித்ததில் மகிழ்ச்சி.

பாலகன்
27-06-2010, 07:37 AM
உண்மை என்றுமே கசக்கும். அதே தான் அந்த காலத்திலும் நடந்திருக்கிறது.
கலிலீயோ விடாமுயற்சியாக சாதித்து இருக்கிறார்.

நல்ல தகவல்

aren
04-08-2010, 02:05 AM
சூரியன்லே இரண்டு இடத்தில் சுனாமி ஏற்பட்டு இருக்கிறதாமே. அதனால் வெளிப்படும் கதிரியக்கம் நம் பூமியை நோக்கி வருகிறதாமே. வானத்தில் வெளிச்சம் அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

தாமரை அவர்கள் கொஞ்சம் விளக்கமாக எழுதுவார் என்றே நினைக்கிறேன்.

தாமரை
04-08-2010, 10:43 AM
சூரியன்லே இரண்டு இடத்தில் சுனாமி ஏற்பட்டு இருக்கிறதாமே. அதனால் வெளிப்படும் கதிரியக்கம் நம் பூமியை நோக்கி வருகிறதாமே. வானத்தில் வெளிச்சம் அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

தாமரை அவர்கள் கொஞ்சம் விளக்கமாக எழுதுவார் என்றே நினைக்கிறேன்.

துருவ ஒளி நடனம் என்று ஏற்கனவே இதைப் பற்றிச் சொல்லி இருக்கேன்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=475056

இதையும் கவனிக்கவும்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=429444

சூரிய காந்தப் புயலின் வலிமையும் எண்ணிக்கையும் 11 வருடச் சுழற்சியில் அதிகமாகை குறையச் செய்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம் சூரியக் கரும்புள்ளிகள் ஆகும்.

சூரியனில் கரும் புள்ளிகள் தொகுப்பு தொகுப்பாக உண்டாகி மறைகின்றன. இந்தத் தொகுப்பில் சராசரியாக 10 சூரியக் கரும்புள்ளிகள் இருக்கும். இவற்றின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து உச்சத்தை எட்டி மறுபடி மெல்லக் குறையும். இந்த ஒரு சுழற்சிக்கு ஆகும் காலம் 11 ஆண்டுகள்.

சோலார் மினிமம், சோலார் மேக்ஸிமம் இந்த உச்ச நீச்ச காலங்கள் அறியப்படும்.

தற்போது சோலார் மினிமம் என்ற காலத்தைத் தாண்டி சூரியக் கரும் புள்ளிகள் உண்டாகத் தொடங்கி இருக்கிறது. இதன் விளைவாக இரண்டு சூரியப் புயல்கள் உண்டாகி மிகப் பெரிய மின் காந்தப் புயல் உண்டாக்கி இருக்கிறது.

இதனால் ஏற்பட்ட துருவ ஒளி நடனம் அமெரிக்காவின் வடக்குப் பகுதி வரை இம்முறை தெரிந்திருக்கிறது.

மேலும் சோதனையாக..

பன்னாட்டு விண்வெளி மையத்தின் குளிரூட்டும் பகுதியில் அம்மோனியா பீய்ச்சப்படும் பகுதியில் பழுது ஏற்பட்டிருப்பதால் குளிர் பதனம் செயல்படவில்லை. அதைச் சரி செய்ய விண்வெளி நடைக்கு திட்டமிட்ட போது இந்தப் புயல்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால், பழுது பார்க்கும் பணி மூன்று நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் சில மணிநேரம் செயற்கைக் கோள்கள் முடக்கப் படலாம். நீங்க எதாச்சும் ப்ரோக்ராம் பார்க்க முடியலன்னா இது காரணமாய் இருக்கலாம்.

2013 வாக்கில் சோலார் மேக்ஸிமம் எனப்படும் அதிகபட்ச காந்தப் புயல்கள் இருக்கும் என்று சொல்லி இருக்கிறேன்.

இன்பா
05-08-2010, 05:44 AM
2013 வாக்கில் சோலார் மேக்ஸிமம் எனப்படும் அதிகபட்ச காந்தப் புயல்கள் இருக்கும் என்று சொல்லி இருக்கிறேன்

அப்பவாச்சும் உலகம் அழியுமா ? :D

தாமரை
05-08-2010, 05:48 AM
அப்பவாச்சும் உலகம் அழியுமா ? :D

ஏம்பா இந்தக் கொலைவெறி.. ???

நீ அந்தப் பதிவை நல்லா படிக்கலைன்னு இதிலிருந்தே நல்லா தெரியுது...

இந்த கிராஃபின் படி போன 1960 களில் சூரியப் புள்ளிகள் மிக அதிகமா இருந்திருக்கு. 2000 ஆம் ஆண்டு இருந்த சூரியப் புள்ளைகளை விடக் குறைவாகவே புள்ளிகள் தோன்றலாம் என்று அவர்களின் கணிப்புகள் சொல்லுது...

1859 ல் 120 புள்ளிகள் வரை இருந்தது, 1960 ல் 180 வரை உயர்ந்திருந்தது.. ஆனால் இப்போதைய கணிப்பு எழுபதுகளில்தான்.. அப்படி இருக்க இது அந்த அளவிற்கு இருக்கும் எனச் சொல்லுவது எங்கியோ உதைக்குது...

எதையும் பெரிசா காட்டியே பயமுறுத்தி பழகிட்டாங்க.. என்ன செய்ய..

பார்க்கலாம்.. நாசா சொன்னது பலிக்குதா என் உள்மனசு சொல்றது பலிக்குதான்னு..

இதை 100 முறை இம்போஷிசன் எழுது!!!

lenram80
19-08-2010, 03:02 PM
[IMG]


அதில இரண்டு நிலைகளைத் தேர்ந்தெடுக்கிறோம். 6 மாச இடைவெளியில் இந்த இரண்டு புள்ளிகள் கிடைக்கும்.

நமக்கு சில ரொம்பவே தொலைவான நட்சத்திரங்கள் தெரியும். இவை எப்பொ பார்த்தாலும் அவை தெரியும் கோணம் மாறவே மாறாது.

முதல்ல ஒரு ஜனவரி நாளில் பூமியின் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து நாம் தூரம் அறிந்து கொள்ள வேண்டிய நட்சத்திரம் தெரியும் கோணத்தை குறித்துக் கொள்கிறோம்.

அண்ட வெளி நாயகன் தாமரைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்!!!!

எனக்கு நீங்கள் சொன்ன "நட்சத்திர தொலைவு கண்டுபிடித்தல்" பற்றி ஒரு சந்தேகம்.

நீங்கள் சொன்னமாதிரி 6 மாத இடைவெளி புள்ளிகளை எடுக்காமல், பூமியின் பொசிஸன், சூரியன், அந்த நட்சத்திரம் கொண்டு கண்டு பிடிக்கலாம் இல்லையா?

பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ளே தொலைவு (ஆண்டின் எந்த நாளாக இருந்தாலும்) நமக்குத் தெரியும். ஆக, பூமிக்கும் அந்த நட்சத்திரத்துக்கும் உள்ள கோணம் வைத்து சூரியனுக்கும் அந்த நட்சத்திரத்துக்கும் உள்ள கோணம் கண்டு பிடிக்கலாம். இது ட்டான் கோணம். மற்றும் சூரிய - பூமி தூரம் இது அடுத்துள்ள பக்கம். வைத்து கணக்கிடலாம் இல்லையா?

இன்னொரு சந்தேகம்... ஜனவரி மாதம் நாம் ஒரு நட்சத்திரம் கிழக்கே (எதோ ஒரு திசையில்) பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு 5, 6 , 7 மாதம் கழித்து பூமி சூரியனின் அந்த பக்கம் வந்து விடும் போது... நான் ஜனவரியில் பார்த்த அதே நட்சத்திரத்தை பார்க்க முடியுமா?


அப்புறம்... பூமியின் துருவ மாற்றம் பற்றி கேள்வி பட்டீர்களா? அதாவது மின் காந்தக் கொடுகளின் திசை மாற்றம். வடக்கில் இருந்து தெற்கு பக்கம் மாறுவதற்கான காலம் வந்து விட்டது. எப்பொது வேண்டு மானாலும் மாறலாம். அப்படி மாறும் காலத்தில் (ஒரு வாரமோ.. ஒரு மாதமோ) சூரியனிடமிருந்து வரும் கதிர் வீச்சை தடுக்க பூமியின் காந்தப் புலம் இருக்காது. இதனால் பூமியில் வாழும் உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவைகள் மற்றும் கடல் அழிய வாய்ப்பு உண்டு. இது பற்றி உங்கள் கருத்து? இப்போது கூட அரோரா (துருவ ஒளிப் பிரகாசம்) வந்ததே...

Nivas.T
19-08-2010, 03:15 PM
இதை 100 முறை இம்போஷிசன் எழுது!!!

:medium-smiley-002:

தாமரை
19-08-2010, 04:12 PM
பூமியின் பொசிஸன், சூரியன், அந்த நட்சத்திரம் கொண்டு கண்டு பிடிக்கலாம் இல்லையா?

பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ளே தொலைவு (ஆண்டின் எந்த நாளாக இருந்தாலும்) நமக்குத் தெரியும். ஆக, பூமிக்கும் அந்த நட்சத்திரத்துக்கும் உள்ள கோணம் வைத்து சூரியனுக்கும் அந்த நட்சத்திரத்துக்கும் உள்ள கோணம் கண்டு பிடிக்கலாம். இது ட்டான் கோணம். மற்றும் சூரிய - பூமி தூரம் இது அடுத்துள்ள பக்கம். வைத்து கணக்கிடலாம் இல்லையா?


முடியாது.. திரிகோணமிதி விதிகளின்படி,

இரண்டு பக்கங்கள் மற்றும் ஒரு கோணம்..

அல்லது

இரண்டு கோணங்கள் ஒரு பக்கம் இருந்தால்.. மற்றவற்றைக் கணக்கிடலாம்.

நீங்க சொன்னதில் ஒரு பக்கம் - சூரியன் பூமி தூரம் தெரியும்..
ஒரு கோணம் - பூமி - நட்சத்திரம் தெரியும்.

ஆனால் சூரியன் மற்றும் அந்த நட்சத்திரத்திற்கும் உள்ள கோணம் சரியாகத் தெரியாது. அதற்கு நட்சத்திரத்தின் தூரம் தெரியணும்..



இன்னொரு சந்தேகம்... ஜனவரி மாதம் நாம் ஒரு நட்சத்திரம் கிழக்கே (எதோ ஒரு திசையில்) பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு 5, 6 , 7 மாதம் கழித்து பூமி சூரியனின் அந்த பக்கம் வந்து விடும் போது... நான் ஜனவரியில் பார்த்த அதே நட்சத்திரத்தை பார்க்க முடியுமா?


6 மாதங்களுக்கு மேல் ஒரு நட்சத்திரத்தைப் பார்க்க வேண்டுமானால் அது வடக்கு அல்லது தெற்கு திசையில் தெரிய வேண்டும். கிழக்கு - மேற்கு திசையில் அதிகபட்சம் 6 மாதம்தான்.

ஆனால் செயற்கைக் கோள்கள் மூலம் அதற்கு மேலும் பார்க்கலாம்.

அப்புறம்... பூமியின் துருவ மாற்றம் பற்றி கேள்வி பட்டீர்களா? அதாவது மின் காந்தக் கொடுகளின் திசை மாற்றம். வடக்கில் இருந்து தெற்கு பக்கம் மாறுவதற்கான காலம் வந்து விட்டது. எப்பொது வேண்டு மானாலும் மாறலாம். அப்படி மாறும் காலத்தில் (ஒரு வாரமோ.. ஒரு மாதமோ) சூரியனிடமிருந்து வரும் கதிர் வீச்சை தடுக்க பூமியின் காந்தப் புலம் இருக்காது. இதனால் பூமியில் வாழும் உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவைகள் மற்றும் கடல் அழிய வாய்ப்பு உண்டு. இது பற்றி உங்கள் கருத்து? இப்போது கூட அரோரா (துருவ ஒளிப் பிரகாசம்) வந்ததே...


இதனால் சில இடங்கள் அழியும் நேரத்தில் புதிய நிலப்பகுதிகள் தோன்றலாம். கண்டங்களின் பெயர்ச்சிகள் நடக்கலாம். ஆனால் ஸ்விட்ச் போட்டவுடன் பல்ப் எரிவதைப் போல ஒரு நாளில் வடதுருவம் தென்துருவம் ஆகி, பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றும் என்பது மிகைப்பட்ட கற்பனை.. அட்லாண்டிக் கடலின் அடியில் இருக்கும் கனிமப் படிவுகளின் அமைப்பைக் கொண்டு இந்த காந்தப் புலமாற்றம் நடப்பதை அளந்திருக்கிறார்கள்.

ஹோமோ எரக்டஸ் என்ற மனித இனங்களும் அதன் முன்னோர்களும் பல காந்தப் புல மாற்றங்களைத் தாண்டி வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் ஹோமோ சாபியன்ஸ் என்னும் அவர்களின் சகோதரர்களான நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. சொல்லப்போனால் காந்தப் புல மாற்றத்தினால் ஒரு பேரழிவு நிகழ்ந்ததாக இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை.

lenram80
19-08-2010, 04:36 PM
[COLOR="Red"]ஆனால் ஸ்விட்ச் போட்டவுடன் பல்ப் எரிவதைப் போல ஒரு நாளில் வடதுருவம் தென்துருவம் ஆகி, பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றும் என்பது மிகைப்பட்ட கற்பனை..சொல்லப்போனால் காந்தப் புல மாற்றத்தினால் ஒரு பேரழிவு நிகழ்ந்ததாக இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை.

அது தான் பிரச்சனையே... துருவ மாற்றம் உடனடியா நடக்காது. ஆக எவ்ளொ நாள் அது நடக்குமோ..அத்துனை நாள் பூமியை சுற்றி இருக்கும் காந்தப் புலமும் இருக்காது.

துருவ மாற்றத்தால், அத்தனை transformers-யும் செயல் இழக்கும். சுத்தமா மின் இணைப்பு இல்லாமல் மிகவும் கடினம். மின்சாரமே ஒரு மாதத்துக்கு இல்லை என்றால் என்னவாகும்? கணினி, குளிர் சாதனப் பெட்டி, பெட்ரோல் இல்லாமல் (சுத்தப் படுத்தும் தொழிற் சாலைக்கு மின்சாரம் வேண்டும்) உணவை சேமிக்க, சமைக்க முடியாதே!!! நகர் புறம் நாறி விடும் மீண்டும் அத்தனை transformers யும் சரி செய்வதற்குள்.

அடுத்து... துருவ மாற்றத்தால் உயிர் இணம் அழியும் என்பதை விட, அந்த இடைப்பட்ட சமயத்தில் சூரியப் புயல் அடிக்காமல் இருக்க வேண்டும். முன்னவர்கள் காலத்தில் அப்படி சூரியப் புயல் வந்திருக்காவிட்டால் அது அவர்களது அதிர்ஸ்டமாக இருக்கலாம். அதே அதிர்ஸ்டம் நமக்கும் இருக்குமா?

எனக்கு என்னமோ 2012 டிச 12 - ல் மாறப் போவுது... சூரியப் புயல் அடிக்கப் போவதென்றே தோன்றுகிறது.. இன்னையிலிருந்து நல்ல பிடிச்ச அயிட்டங்களா சாப்பிட வேண்டியது தான். தாமரை அண்ணா.. ஒரு பிளேட் குத்து பரோட்டா , முட்டை தோசை அப்படியே ஒரு மட்டன் பிரியானி நீங்க ஆர்டர் பண்ணும் போது எனக்கும் சேத்து ஆர்டர் பன்னிடுங்க.. உங்களுக்கு e-பணம் கொடுத்தர்ரேன்.

தாமரை
19-08-2010, 04:46 PM
துருவ மாற்றத்தால், அத்தனை transformers-யும் செயல் இழக்கும். சுத்தமா மின் இணைப்பு இல்லாமல் மிகவும் கடினம். மின்சாரமே ஒரு மாதத்துக்கு இல்லை என்றால் என்னவாகும்? கணினி, குளிர் சாதனப் பெட்டி, பெட்ரோல் இல்லாமல் (சுத்தப் படுத்தும் தொழிற் சாலைக்கு மின்சாரம் வேண்டும்) உணவை சேமிக்க, சமைக்க முடியாதே!!! நகர் புறம் நாறி விடும் மீண்டும் அத்தனை transformers யும் சரி செய்வதற்குள்.

அடுத்து... துருவ மாற்றத்தால் உயிர் இணம் அழியும் என்பதை விட, அந்த இடைப்பட்ட சமயத்தில் சூரியப் புயல் அடிக்காமல் இருக்க வேண்டும். முன்னவர்கள் காலத்தில் அப்படி சூரியப் புயல் வந்திருக்காவிட்டால் அது அவர்களது அதிர்ஸ்டமாக இருக்கலாம். அதே அதிர்ஸ்டம் நமக்கும் இருக்குமா?

.

சூரியனின் காந்தப் புலத்திற்கும் பூமியின் காந்தப் புலத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் பூமியில் காந்தப்புலம் மாறணும்னா அது சூரியனால் தூண்டப்பட்டதாகத்தான் இருக்கும்.

அதனால் அந்தச் சமயத்தில் சூரியப் புயல்கள் உண்டாகாமலே இருக்கத்தான் அறிவியல் ரீதிப்படி வாய்ப்பிருக்கு..

அப்புறம் காந்தப் புலத்திற்குக் காரணமும் சொல்லி இருக்கேன். இரும்பு உட்கரு,. அதன் மேல் இருக்கு மேக்மா குழம்போ திரவ வடிவத்தில்.

இவற்றின் சுழற்சி வேகங்களில் சற்று வித்தியாசம் உண்டு. இதனால் ஏற்படும் உராய்வில் உண்டாகும் மின்சாரம் இரும்புக் கருவில் காந்தச் சக்தியை உண்டு செய்கிறது.

இதன் விளைவுகள் மேலோட்டில் உள்ள் இரும்புக் கனிமங்கள், காந்தத் தன்மை உள்ள பொருட்கள் இந்தக் காந்தப் புலத்திற்கேற்ப தம்மை அடுக்கிக் கொள்கின்றன. இதைத்தான் கடலின் அடியில் ஆராய்ந்து காந்தப் புல மாற்றங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே காந்தப் புல மாற்றம் ஏற்பட்டால் மிகப் பெரிய நில நடுக்கங்கள் ஏற்படும் என்பது பொய்.

அதனால் தின்னே தீர்த்திடாதீங்க!!!:icon_b::icon_b::icon_b:

lenram80
26-08-2010, 05:15 PM
வியாழனின் சந்திரனான ஐயொ-வில் இன்றும் எரிமலைகள் இருப்பதற்கு சுவாஸ்யமான காரணங்களாக இதைச் சொல்கிறார்கள். சந்திரன்கள் ஐயொ, ஐரோப்பா மற்றும் கனிமேட் இந்த மூன்றும் வியாழனைச் சுற்றி வரும் போது 4 வருடங்களுக்கு ஒரு முறை நேர் கோட்டில் வருகின்றன. இதனால் "சுற்றுப் பாதை ஒத்ததிர்வு" ஏற்படுகிறது (Orbital resonance). ஒத்ததிர்வுன்னா காதல் தொடங்கும் போது நமக்கு புடிச்ச பொண்ணை பாத்த உடனே நெஞ்சு தட தட ந்னு அதிரும் பாருங்க.. அதான் ஒத்ததிர்வு.

அதாவது அதிர்வெண்கள் ஒன்றாக இணையும் போது அலையின் வீச்சு (amplitude) அதிகரிக்கும்ன்னு நாம ஸ்கூல்லே படிச்சுருக்கோம்லே. இதனால்.. ஐயொவில் பொட்டு பொட்டு என்று ஒரு தட்டு அவ்வப்போது விழுந்து கொண்டே ஒருக்கும். இதனால் அதன் சுற்றுப் பாதை கூட வட்டத்திலிருந்து நீள் வட்ட வடிவமாகி விட்டது.அதே நேரத்தில் வியாழன் இந்த சந்தின்களை வட்ட வடிவில் சுற்ற முயற்சிக்கிறது. இதனால் ஒருவித "ஈர்ப்பு உராய்வு" (Gravitational Friction) ஏற்பட்டு, ஐயோவில் வெப்பம் அதிகரிகிறது.நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது இந்த சுற்றுப் பாதை ஒத்ததிர்வு. ஒருவர் பெங்களூரில். மற்றவர் சென்னையில். இந்த இருவரையும் இணைக்கும் நேர்கோட்டில் அவர்களது மற்ற நண்பர் எவரேனும் வந்தால்...மூவரும் ஒரு அதிர்வு அதிர்ந்தால் எப்படி இருக்கும்???

இரண்டாவது காரணம்... நீள் வட்டப் பாதைக் காரணமாக ஐயொ வியாழனை நெருங்கும் போது (பெரிஜி முனை) தன்னை நோக்கி வியாழனின் ஈர்க்கும் விசை அதிகரிக்கிறது. இதனால் ஐயொ இழுவடைகிறது.சுற்றுப்பாதையின் அடுத்த பக்கதிற்கு (அப்போஜி முனை)வரும் போது மீண்ரும் ஐயொ தன்னுடைய ஈர்ப்பு விசையால் கோள வடிவமாகிறது. இப்படி முட்டையாகி பந்தாகி முட்டையாகி பந்தாகி....உராய்வின் காரணமாய் வெப்பம் அதிகரிப்பதால் இன்னமும் அங்கே எரிமலைகள்.

கொசுறுத் தகவல்: இந்த சுற்றுப் பாதை ஒத்ததிர்வு தான் சனியைச் சுற்றி வரும் வளையங்களில் இடைவெளி ஏற்படக் கூடக் காரணம்.

அனுராகவன்
02-09-2010, 08:15 PM
அருமை நண்பரே!!

பாலகன்
16-11-2010, 04:05 PM
தாமரை அண்ணா இந்த திரி தொடருமா? இன்னும் பல புதிய தகவல்களை தாருங்கள்

இன்பா
05-01-2011, 12:55 PM
தாமரை அண்ணா இந்த திரி தொடருமா? இன்னும் பல புதிய தகவல்களை தாருங்கள்

ஏன்னே தெரியலை, தாமரை அமைதியாகிட்டாரு.

தாமரை
21-03-2011, 06:42 AM
இப்போதையா சூடான தலைப்புச் செய்தி "சூப்பர் மூன்"

சூப்பர் மூன் என்றால் என்ன? அது எப்படின்னு ஏதோ தோராயமா எல்லோருக்கும் ஒரு குழப்பம் இருந்து கிட்டே இருக்கும். :lachen001::lachen001:

அதை மிக எளிதாகச் சொல்லணும் என்றால்..

ஒரு பௌர்ணமி அன்று பூமிக்கு மிக அருகில் நிலா வந்தால், நிலா 14% பெரியதாகவும், ஒளி இருப்பதாகவும் தெரியும். அதைத்தான் சூப்பர் மூன் என்கிறோம். அதிலும் நம்ம இந்த பௌர்ணமி சூப்பர் மூனுக்கு இன்னும் கொஞ்சம் விஷேசம் இருக்கு.

நம்ம நிலா இருக்கே அது பூமியைச் சுற்றிவர 27.3 நாட்கள் ஆகுது. எனவே 27.3 நாளைக்கு ஒரு முறை நிலா பூமிக்கு அருகில் வந்துபோகுது.

ஆனால் பூமி சூரியனைச் சுற்றி வருவதால் நமக்கு சந்திரன் பூமியைச் சுற்றி வர 29.5 நாட்கள் ஆவது போல தோற்றம் தெரிகிறது,

இதனால் எல்லா பௌர்ணமி அன்றும் நிலா பூமியின் அருகில் வருவதில்லை.

இதில் இன்னும் கொஞ்சம் ஆழமா போவோம்.

நிலா பூமியை நீள் வட்டப் பாதையில் சுத்தி வருது.

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a4/Apogee_%28PSF%29.png/800px-Apogee_%28PSF%29.png

இதில் 1. நிலா பூமியில் இருந்து தொலைவில் உள்ளதைக் குறிக்கிறது, இதற்கு அபோஜி என்று பேர்.

2. நிலா பூமிக்கு அருகில் இருப்பதைக் குறிக்கிறது. இதற்குப் பெரிஜி என்று பெயர்.

சராசரி அபோஜியில் நிலவின் தூரம் 405,696 km. பெரிஜியில் நிலவின் தூரம் 384,399 கி.மீ

இங்க ஏன் சராசரின்னு சொல்றோம்? காரணம் சூரியன், புதன், வெள்ளி, செவ்வாய், குரு, சனி இப்படியாகப்பட்ட பெருங்கோள்களின் ஈர்ப்பு விசையைப் பொருத்து இந்த அபோஜி - பெரிஜி தூரங்கள் மாறும்.

வருஷத்திற்கு ஒன்றொ அல்லது இரண்டு மூன்று வருஷத்திற்கு ஒன்றோ சூப்பர் மூன்கள் வந்தாலும் அவை பெரிதாகப் பேசப்படுவதில்லை. இந்த முறை மார்ச் 19 ஆம் தேதி வந்த சூப்பர் மூனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம் 356,577 கி.மீ அதாவது சராசரியை விட 30,000 கிமீ தூரம் நெருக்கம்.

இந்த அபோஜி, பெரிஜியை இங்க கணக்கு செய்யலாம்


http://fourmilab.ch/earthview/pacalc.html

இதைப்பற்றி கொஞ்சம் கங்கணச் சூரிய கிரகணத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது சொல்லி இருக்கேன்.

பழைய மற்றும் எதிர்கால சூப்பர் மூன்கள்

* November 10, 1954
* November 20, 1972
* January 8, 1974
* February 26, 1975
* December 2, 1990
* January 19, 1992
* March 8, 1993
* January 10, 2005
* December 12, 2008
* January 30, 2010
* March 19, 2011[16]
* November 14, 2016
* January 2, 2018
* January 21, 2023
* November 25, 2034
* January 13, 2036

சூப்பர் மூனுக்கும் இயற்கை அழிவுகளுக்கும் தொடர்பு கொடுக்க விருபுபவர்கள் இந்தப் பட்டியலை ஆராய்ந்தால் கொஞ்சம் புண்ணியமுண்டு.

சரி 20 வருஷத்தில் இது மிகப் பெரிய சூப்பர் மூன் என்று சொல்கிறார்களே காரணம் என்ன? கீழே உள்ள கிரக நிலைகளைக் காணவும்.

http://www.fourmilab.ch/cgi-bin/Solar?di=9AEAAAF0A23BB33E4AA87C257F859F60A0BAFE89CDA4DD34DB57D0B39266677D11001762006F68EE2645DC3447ECE86D95901F70CF0066F6D583A87F3C56E33FE56BE776AAA7403CF71D35DFC777D421C9C444


சூரியன் மற்றும் புதன், வெள்ளி, செவ்வாய், குரு, யுரேனஸ், நெப்டியூன் போன்றவை நிலா இருக்கும் பக்கத்திற்கு எதிர்பக்கமாகவும், சனி மட்டுமே நிலா இருக்கும் பக்கத்திலும் இருப்பதைக் காண்பீர்கள். இதனால் நிலாவின் மீது ஒரு பக்கமான ஈர்ப்பு விசை அதிகரித்ததால் பூமிக்கு மிக அருகில் வந்தது நிலா...

அதுவே 2010 ஜனவர் 30 ஆம் தேதி கிரக நிலைகள்

http://www.fourmilab.ch/cgi-bin/Solar?di=0C7C3C6634AD25A8DC3EEAB3E91309F6362C681F5B324BA24DC0472407F3F0E38F9E89FC9EF1F670B8DB42AAD97276F30B0E81EE519EF8684B1D36E1A2C87DA17BF579E83439DEA26983AB4159E94ABF575A82

அன்று செவ்வாய் நிலா இருக்கும் பக்கத்தில் இருந்தது.

இதனால் அன்று பெரிஜி யில் நிலா இருந்தாலும் இப்போது வந்த அளவிற்கு மிக அருகில் வரவில்லை.

இப்படியாக சூரியன் / பூமி / நிலா மட்டுமல்லாமல் மற்ற கிரகங்களும் இந்த சூப்பர் மூன் நிகழ்விற்கு உடந்தை.

சூப்பர் மூன் அன்று கடல் ஓதங்கள் உயரமாக இருக்கும். ஆனால் நில நடுக்கங்கள்?

நில நடுக்கங்களுக்கும் நிலாவிற்கும் தொடர்பு உண்டு. ஆனால் சூப்பர் மூன் மட்டுமே என்று பார்த்தால் இல்லை.

நில நடுக்கங்களுக்கு அடிப்படைக் காரணம்.. பூமியின் உள்ளமைப்பு..

திடக் கரு, திரவ மேக்மா அதில் மிதக்கும் திட டெக்டானிக் பிளேட்டுகள்

இப்படியாக அமைந்த பூமியின் மீது மாற்படும் ஈர்ப்புவிசைகள் செயலாற்றுவதால் டெக்டானிக் பிளேட்டுகள் நகர்கின்றன். இதை இன்கே சொல்லி இருக்கேன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=425013#post425013

http://pubs.usgs.gov/gip/dynamic/dynamic.html#anchor19309449

இப்ப எல்லோரும் சூப்பர் மூனைப் பற்றி தெளிவாகி மத்த விஷயங்களில் குழம்பி இருப்பீங்க என்று தெளிவாக நம்புகிறேன்.

கீதம்
21-03-2011, 08:05 AM
விளக்கத்துக்கு நன்றி தாமரை அவர்களே. கொஞ்சம் விளங்கியது போலவும் நிறைய விளங்காதது போலவும் இருக்கிறது. இன்னும் ஓரிரு முறைகள் படித்தால் தெளிவாகும் என்று நினைக்கிறேன். மிகவும் நன்றி.

தாமரை
21-03-2011, 08:08 AM
என்ன விளங்கலை என்பதைக் கேள்விகளாய் கேட்டால் நன்றாக இருக்கும்

கீதம்
21-03-2011, 08:18 AM
என்ன விளங்கலை என்பதைக் கேள்விகளாய் கேட்டால் நன்றாக இருக்கும்

கேள்வி கேக்கறதுக்கே இன்னொரு தடவை படிக்கணும். எழுதியிருப்பது புரியாமல் இல்லை. என் மூளைக்குள் ஏற்றுவதில்தான் சற்று சிரமம். (அறிவியல் ஆர்வம் இருக்கும் அளவுக்கு அதைப் புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது எனக்கு.):icon_p:

தாமரை
21-03-2011, 08:24 AM
கேள்வி கேக்கறதுக்கே இன்னொரு தடவை படிக்கணும். எழுதியிருப்பது புரியாமல் இல்லை. என் மூளைக்குள் ஏற்றுவதில்தான் சற்று சிரமம். (அறிவியல் ஆர்வம் இருக்கும் அளவுக்கு அதைப் புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது எனக்கு.):icon_p:

உங்க அறிவியல் ஆர்வத்தை நீங்க நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கீங்க..

நான் தான் குழப்புவேன்.. அதாவது இங்கே நீங்க அதை என்று சொல்வது ஆர்வத்தையா? அறிவியலையா? என்பது மாதிரி.:icon_rollout::icon_rollout::icon_rollout:

கீதம்
21-03-2011, 08:30 AM
புவியியல், வானவியல், உயிரியல் போன்றவற்றில் ஆர்வம் உண்டு.(பெளதிகம், வேதியியல் ஆகாது) சிலவற்றை எளிதாய் கிரகித்துக்கொள்ளும் மூளை, சிலவற்றைக் கிரகிப்பதில் சற்று நேரம் கூடுதலாய் எடுத்துக்கொள்கிறது. அதைத்தான் விளங்கவில்லை என்னும் வார்த்தையால் குறிப்பிடுகிறேன். (அதை என்பது எதை என்று ஆராயமுனைந்துவிடாதீர்கள், சொல்லவந்த விஷயத்தில் உண்மையிலேயே குழம்பிவிடுவேன்):)

நாஞ்சில் த.க.ஜெய்
21-03-2011, 09:49 AM
மிகவும் அவசியமான அறிவியல் தகவல் அனைவரும் அறியும் வண்ணம் அவரவர் மனதில் பயத்தினை அகற்ற உதவும் வண்ணம் உள்ள பதிவு ...சரி தங்கள் பதிவு கூறும் தகவலுக்கு வருவோம் .. இந்த பதிவில் நீங்கள் தெளிவு படுத்தி உள்ளது என்ன ?
தாமரை[/COLOR]"] நில நடுக்கங்களுக்கும் நிலாவிற்கும் தொடர்பு உண்டு. ஆனால் சூப்பர் மூன் மட்டுமே என்று பார்த்தால் இல்லை. இந்தவரிகளில் நீங்கள் கூறவந்தது என்ன?நிலவிற்கும் நிலநடுக்கத்திற்கும் தொடர்பு உண்டு என்று கூறிவிட்டு சூப்பர் மூன் மட்டுமே என்றுபார்த்தால் இல்லை என்று கூறியுள்ளீர்களே இதில் நிலவு என்பது வேறு மூன் என்பது வேறா ? எனது சந்தேகம் என்னவென்றால் ஒரு கோளானது தன்னைதானே சுற்றிவந்து மற்ற கோள்களையும் சுற்றி வருகிறது அவ்வாறு சுற்றிவரும் போது ஒருகோளானது மற்ற கோள்களின் அருகில் வரும் போது அந்த கோள்களின் ஈர்ப்பு விசையினால் அதன் அருகில் உள்ள கோள்களின் ஈர்ப்பு விசையானது பாதிக்கப்படும் அவ்வாறு பாதிக்கபடுமபோது ஏற்படும் விளைவுகள் எவ்வாறு இருக்கும் ?இது வெறும் கடல் கொந்தளிப்புடன் முடிந்துவிடுமா ?வேறு விளைவுகள் ஏதும் ஏற்படாதா? எதற்காக இந்த கேள்வியை வினவுகிறேன் என்றால் நமது பூமியின் மூலாதாரமே புவிஈர்ப்பு விசை மற்றும் காற்று புவிஈர்ப்பு விசையினால் ஏற்படும் காற்று மாறுபாடுக்கும் புவிஈர்ப்பு விசையில் ஏற்படும் மற்றம் மூலம் ஏற்படும் காற்றின் மாறுபாடுக்கும் வேறுபாடு உண்டல்லவா ?இந்த மாறுப்படினால் ஏற்படும் விளக்கங்கள் நாம் தெளிவுற அறிந்தால் தான் இந்த பதிவின் சாராம்சம் மூலம் நமது சந்தேகங்கள் மீதான தெளிவும் நம்பிக்கையும் உண்டாகும் ....

தாமரை
21-03-2011, 10:23 AM
மிகவும் அவசியமான அறிவியல் தகவல் அனைவரும் அறியும் வண்ணம் அவரவர் மனதில் பயத்தினை அகற்ற உதவும் வண்ணம் உள்ள பதிவு ...சரி தங்கள் பதிவு கூறும் தகவலுக்கு வருவோம் .. இந்த பதிவில் நீங்கள் தெளிவு படுத்தி உள்ளது என்ன ?இந்தவரிகளில் நீங்கள் கூறவந்தது என்ன?நிலவிற்கும் நிலநடுக்கத்திற்கும் தொடர்பு உண்டு என்று கூறிவிட்டு சூப்பர் மூன் மட்டுமே என்றுபார்த்தால் இல்லை என்று கூறியுள்ளீர்களே இதில் நிலவு என்பது வேறு மூன் என்பது வேறா ? எனது சந்தேகம் என்னவென்றால் ஒரு கோளானது தன்னைதானே சுற்றிவந்து மற்ற கோள்களையும் சுற்றி வருகிறது அவ்வாறு சுற்றிவரும் போது ஒருகோளானது மற்ற கோள்களின் அருகில் வரும் போது அந்த கோள்களின் ஈர்ப்பு விசையினால் அதன் அருகில் உள்ள கோள்களின் ஈர்ப்பு விசையானது பாதிக்கப்படும் அவ்வாறு பாதிக்கபடுமபோது ஏற்படும் விளைவுகள் எவ்வாறு இருக்கும் ?இது வெறும் கடல் கொந்தளிப்புடன் முடிந்துவிடுமா ?வேறு விளைவுகள் ஏதும் ஏற்படாதா? எதற்காக இந்த கேள்வியை வினவுகிறேன் என்றால் நமது பூமியின் மூலாதாரமே புவிஈர்ப்பு விசை மற்றும் காற்று புவிஈர்ப்பு விசையினால் ஏற்படும் காற்று மாறுபாடுக்கும் புவிஈர்ப்பு விசையில் ஏற்படும் மற்றம் மூலம் ஏற்படும் காற்றின் மாறுபாடுக்கும் வேறுபாடு உண்டல்லவா ?இந்த மாறுப்படினால் ஏற்படும் விளக்கங்கள் நாம் தெளிவுற அறிந்தால் தான் இந்த பதிவின் சாராம்சம் மூலம் நமது சந்தேகங்கள் மீதான தெளிவும் நம்பிக்கையும் உண்டாகும் ....

இதற்கு முதலில் பூமியின் அமைப்பை முழுதாகப் புரிந்து கொள்ள வேண்டும்

http://www.hinckley.com/family/kids/earth/Earth.layers.image.gif

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ee/Earth-crust-cutaway-english.svg/500px-Earth-crust-cutaway-english.svg.png

இதில பார்த்தீங்கன்னா, அதிக அட்ர்த்திக் கொண்ட திட இரும்பு உட்கரு பூமியில் இருக்கிறது.

அதற்கு மேற்புறம் திரவ வடிவிலான மேக்மா எனப்படும் பாறைக் குழம்பு இருக்கிறது. அதற்கு மேர்புறம் இறுகிய மேலோடு எனப்படும் மேலோட்டுத் தகடுகள் மிதந்து கொண்டிருக்கின்றன.

இந்த மேலோடு ஒரே ஒரு உருவமாய் ஆரஞ்சு பழத்தோல் போல் பூமியை மூடிருந்தால் பிரச்சனை அதிகம் இல்லை. ஆனால் இது பல தட்டுகளாக உடைந்து இருக்கிறது.

இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு மிகப் பெரிய விண்கல் மோதலினால் பூமியிலிருந்து நிலா பிரிந்தபொழுது உண்டானதாக நம்பப்படுகிறது.

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 24 மணிநேரம் ஆகிறது என்கிறோம் அல்லவா. ஆனால் பூமியின் உட்கருவின் சுழற்சிவேகம் கொஞ்சமே கொஞ்சம் அதிகம்

Recent evidence has suggested that the inner core of Earth may rotate slightly faster than the rest of the planet. In August 2005 a team of geophysicists announced in the journal Science that, according to their estimates, Earth's inner core rotates approximately 0.3 to 0.5 degrees per year relative to the rotation of the surface.

எனவே பூமியின் உட்கருவுக்கும், மேலோட்டிற்கும் மத்தியில் உள்ள மேக்மா குழம்பு இந்த வேக வித்தியாசங்களினால் தொடர்ச்சியாக சுழல்களை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது.

http://pubs.usgs.gov/gip/dynamic/graphics/Fig32.gif

அதுவுமின்றி, உட்கருவின் வெப்பம் அழுத்தம் மற்றும் மேலோட்டின் கீழே உள்ள வெப்பநிலை இவற்றினால் மேக்மா குழம்பில் இந்தச் சுழற்சி இருந்துகொண்டே இருக்கிறது. உதாரணமாகத் தண்ணீர் கொதிக்கிற நிகழ்ச்சியைப் போல

http://pubs.usgs.gov/gip/dynamic/graphics/Fig33.gif

இந்த மாதிரி ஒழுங்காச் சுத்திகிட்டிருக்கிற பூமியின் மேலொட்டின் மீது பலப் பல விசைகள் செயல்படுகின்றன. அவற்றில் சூரியன், நிலா மற்றும் கிரகங்களின் ஈர்ப்பு விசையும் உண்டு.

ஒவ்வொரு சுழற்சியும் ஒரு ஒழுங்கோடு இருக்கிறது. ஆனால் பல்வேறு சுழற்சிகளுக்கு மத்தியில் இருக்கும் வேறுபாடு காரணமாக பூமியின் சமநிலை இத்தனை வேறுபாடுகளின் காரணமாக சற்றே மாறுகிறது. அதாவது எந்தப் பக்கம் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கிறதோ அந்தப் பக்கத்தில் உண்டாகும் அழுத்தக் குறைவைச் சரி செய்ய மைய விலக்கு விசையின்படி பூமியின் மேக்மா அடர்த்தி அதிகரிக்கிறது.

மேலோடுகள் துண்டுகளாய் இருப்பதினால் இந்த மேக்மா மாற்றம் டெக்டானிக் பிளேட்டுகளை சற்றே நகர்த்துகின்றன. இதனால் டெக்டானிக் பிளேட்டௌகள் உண்டாகும் அழுத்தம் விடுவிக்கப்படும்பொழுது பூமி அதிர்ச்சி உண்டாகிறது.

நிலா மட்டுமே இருந்திருந்தால் இந்த அசைவு ஒரே மாதிரியாக இருந்திருக்கும் அதனால் அனைத்து பிளேட்டுகளும் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு போயிருக்கும்.

ஆனால், சூரியன், புதன், வெள்ளி, செவ்வாய், குரு, சனி ஆகிய பல கோள்களின் ஒரு ஒழுங்கான ஒழுங்கற்ற ஈர்ப்பு விசைகளைத் தோற்றுவிப்பதால், மேல்தட்டுகளின் வேகமாறுபாடு உண்டாகி தட்டுகளுக்கிடையில் அழுத்தங்களை உண்டாக்கி விடுகிறது.

எனவே நில நடுக்கங்களுக்கும் நிலாவிற்கும் சம்பந்தம் உண்டு. ஆனால் நிலா மட்டுமே காரணமில்லை.

உடைந்த வேறு வேறு அளவிலான மொத்தமுள்ள மேலோட்டுத் தகடுகள்.
மேக்மாவின் உட்சுழற்சி, மற்ற ஈர்ப்புவிசைகள் ஆகியவை பெரும்பங்கு ஆற்றுகின்றன.

சூப்பர்மூன் என்பது பௌர்ணமி அன்று நிலா பூமிக்கு அருகில் வரும் நிகழ்வு என்று ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன்,

நிலவின் நேரடி பாதிப்பு கடல் ஓதங்கள். இவை கப்பல் போக்குவரத்தில் மிகவும் உதவுகின்றன. ஆனால் சிறிதளவு நில நடுக்கங்கள் உண்டாக நிலா காரணம். உதாரணமாக நிலவு இல்லாவிட்டால் 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு இடத்தில் நிலநடுக்கம் உண்டாகும் எனக் கொண்டால் அது 250 ஆகவோ 180 ஆகவோ நிலவின் ஈர்ப்பு விசையினால் மாறுகிறது. அதாவது அது கூட்டவும் செய்யலாம் குறைக்கவும் செய்யலாம். காரணம் அது அழுத்த வேறுபாட்டை கூட்டுகிறதா குறைக்கிறதா என்பது மற்ற கிரகங்கள் சூரியன் போன்றவற்றின் நிலையைப் பொறுத்து அமைகிறது.

எனவே சூப்பர் மூன் / சாதாரண நிலா எல்லாமும் சரிசம பங்களிப்பையே அளிக்கின்றன. சூப்பர் மூன் வர்ரதால திடீர்னு எதுவும் நடந்திடாது.

நாஞ்சில் த.க.ஜெய்
21-03-2011, 01:15 PM
அப்படியெனில் ஈர்ப்பு புறவிசையின் மூலம் ஏற்படும் தாக்கத்தினால் புவியின் மேற்பரப்பில் மட்டுமே மாற்றங்கள் நிகழும் ...அதாவது காற்று மாறுபாடு (வேகமான புயல் காற்று ) இதன் மூலம் கடல் கொந்தளிப்பு ,....புறவிசையின் காரண மாக நிகழும் தாக்கத்தினால் மேக்மா வில் எவ்வித தாக்கமும் நிகழாது அப்படிதானே ..

தாமரை
21-03-2011, 02:31 PM
அப்படியெனில் ஈர்ப்பு புறவிசையின் மூலம் ஏற்படும் தாக்கத்தினால் புவியின் மேற்பரப்பில் மட்டுமே மாற்றங்கள் நிகழும் ...அதாவது காற்று மாறுபாடு (வேகமான புயல் காற்று ) இதன் மூலம் கடல் கொந்தளிப்பு ,....புறவிசையின் காரண மாக நிகழும் தாக்கத்தினால் மேக்மா வில் எவ்வித தாக்கமும் நிகழாது அப்படிதானே ..

வளிமண்டலம் பூமியின் ஒரு பகுதிதான். வளிமண்டலத்தில் வெப்ப மாறுபாடுகளால் உண்டாகும் அழுத்த மாறுபாடுகளால் உண்டாகும் புயல் போன்றவை நேரடியாக மேக்மாவில் தாக்கம் நிகழ்வதில்லை. ஏனென்றால் புயல் உண்டாவது அழுத்தங்களைச் சமன் செய்யத்தான்.


இது கடலில் பெரிய அலைகளைத் தோற்றுவித்தாலும் மேலோடு பகுதியைத் தாண்டி இதன் வீச்சு இருப்பதில்லை. ஏனென்றால் இது வாயுக்களின் இடமாற்றம். இதனால் மேலோடு தாண்டி ஒன்றும் ஏற்படுவதில்லை.

ஆனால்

மறைமுகமாக மணலரிப்பு போன்றவை மூலம் நிலச் சரிவுகள் பூமியின் மேலடுக்கில் உண்டாகிவிட்ட வெற்றிடங்களில் நீர் நிரப்பி திடீரென நிலம் உள்வாங்குதல் இப்படியாகப் பட்ட விளைவுகளையும்,

ஏற்கன்வே உள்ள டெக்டானிக் பிளவுகளில் நீரை நிரப்புவதால் நில நடுக்கம் சற்றே முன்னதாக உண்டாகவும் காரணமாகின்றன, அதாவது உண்டாகப் போகிற நில நடுக்கத்தை சற்று முன்னதாகவே வர வைக்கின்றன. இதனால்.. சில சமயம் நில நடுக்கத்தின் வலிமை குறையலாம். ஆனால் இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

நாஞ்சில் த.க.ஜெய்
22-03-2011, 10:19 AM
கேள்விகளுக்கு சிரமேற்கொண்டு அனைவரும் உண்மை உணரவேண்டும் எனும் சிந்தையில் பதிலிட்ட நண்பருக்கு ...
இறுதியாக நீங்கள் கூறும் தகவல்களின் படி பார்த்தால் மற்றவர்கள் கூறுவது போல் பெரியஅளவில் இயற்கை சீற்றங்கள் ஏதும் உடனடியாக நிகழ போவதில்லை ஆனால் இதனால் ஏற்படும் சிறு விளைவுகள் பின்னாளில் நிகழும் சீற்றங்களுக்கு இதுவும் ஒரு முன்னோடியாக இருக்கும் அப்படிதானே ...(என் சிந்தையில் எட்டியவரை உணர்ந்து பதிலிட்டுள்ளேன்..)

தாமரை
22-03-2011, 10:24 AM
கேள்விகளுக்கு சிரமேற்கொண்டு அனைவரும் உண்மை உணரவேண்டும் எனும் சிந்தையில் பதிலிட்ட நண்பருக்கு ...
இறுதியாக நீங்கள் கூறும் தகவல்களின் படி பார்த்தால் மற்றவர்கள் கூறுவது போல் பெரியஅளவில் இயற்கை சீற்றங்கள் ஏதும் உடனடியாக நிகழ போவதில்லை ஆனால் இதனால் ஏற்படும் சிறு விளைவுகள் பின்னாளில் நிகழும் சீற்றங்களுக்கு இதுவும் ஒரு முன்னோடியாக இருக்கும் அப்படிதானே ...(என் சிந்தையில் எட்டியவரை உணர்ந்து பதிலிட்டுள்ளேன்..)

அதுதான் உண்மை. சில சமயம் இது நன்மையாகலாம்.. அதாவது சிறு இயற்கைச் சீற்றம் உண்டாகி பெரிய சீற்றம் தவிர்க்கப் படலாம்.

நாஞ்சில் த.க.ஜெய்
22-03-2011, 11:18 AM
அப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்து ஒரு பெரிய இயற்கை சீற்றம் நிகழாதிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் ...ஆனால் இன்று பலநிகழ்வுகள் வரவிருக்கும் பெரிய சீற்றத்தின் முன்னோடியாகத்தான் இருக்கின்றன..குறிப்பாக ஜப்பான் நிலநடுக்கம் ,சுனாமி நிகழ்வுகள் ...

Ravee
15-05-2011, 05:10 PM
சிவாஜி அண்ணா, அடுத்த டிரிப் வரும்போது இம்மமலைக்கு அனிருத்துட போலாமா?




அது என்ன அழைப்பு அவருக்கு மட்டும் ....நாங்களும் வருவோம் .... பலிக்கு ஆடுகள் தயார் அண்ணா .... :D :D :D

தாமரை
01-06-2011, 05:50 PM
நள்ளிரவுச் சூரிய கிரகணம்..

ஏண்ணா, இவ்வளவு லேட்டாச் சொல்றீங்க என்று கேட்காமல் படிங்க.

இதெப்படி? சூரிய கிரகணம் பகலில் அல்லவா வரும் என்று கேட்பவர்களுக்கு..

வடதுருவத்தில் நம்ம கோடைக் காலத்தில் சூரியன் மறையவே மறையாது அல்லவா? நார்வே நாட்டைக் கூட "நள்ளிரவுச் சூரியன் நாடு" என்போமே ஞாபகம் இருக்கா?

அங்கதான் இந்த நள்ளிரவுச் சூரிய கிரகணம் இன்னும் சில மணி நேரங்களில் தெரியப் போகுது.

வடக்குச் சீனா, மற்றும் சைபீரியா பகுதிகளில் ஜூன் 2 ஆம் தேதி காலையில் ஆரம்பிக்கும் இந்தக் கிரஹணம், மேற்காக நகர்ந்து சர்வதேசத் தேதிக் கோட்டைத் தாண்டி மேற்காக நகர்ந்து அலாஸ்கா, கனடா பகுதிகளைக் க்டந்து ஸ்காண்டிநேவியா, இரஷ்யா பகுதிகளில் நள்ளிரவில் சூரிய கிரஹணம் தெரியும்.


அடுத்து என்னான்னா

ஜூன் 15 ஆம் தேதி.

ஆமாம் ஜூன் 15 ஆம் தேதி இந்தியாவில் முழுச் சந்திர கிரஹணம், மேகராஜன் மோகராஜனாக வான்மகள் மீது பரவிப் பராமல் இருந்தால் காணக் கிடைக்கும்.

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=425883&postcount=24

தாமரை
01-06-2011, 05:52 PM
நள்ளிரவுச் சூரிய கிரகணம்..

ஏண்ணா, இவ்வளவு லேட்டாச் சொல்றீங்க என்று கேட்காமல் படிங்க.

இதெப்படி? சூரிய கிரகணம் பகலில் அல்லவா வரும் என்று கேட்பவர்களுக்கு..

வடதுருவத்தில் நம்ம கோடைக் காலத்தில் சூரியன் மறையவே மறையாது அல்லவா? நார்வே நாட்டைக் கூட "நள்ளிரவுச் சூரியன் நாடு" என்போமே ஞாபகம் இருக்கா?

அங்கதான் இந்த நள்ளிரவுச் சூரிய கிரகணம் இன்னும் சில மணி நேரங்களில் தெரியப் போகுது.

வடக்குச் சீனா, மற்றும் சைபீரியா பகுதிகளில் ஜூன் 2 ஆம் தேதி காலையில் ஆரம்பிக்கும் இந்தக் கிரஹணம், மேற்காக நகர்ந்து சர்வதேசத் தேதிக் கோட்டைத் தாண்டி மேற்காக நகர்ந்து அலாஸ்கா, கனடா பகுதிகளைக் க்டந்து ஸ்காண்டிநேவியா, இரஷ்யா பகுதிகளில் நள்ளிரவில் சூரிய கிரஹணம் தெரியும்.


அடுத்து என்னான்னா

ஜூன் 15 ஆம் தேதி.

ஆமாம் ஜூன் 15 ஆம் தேதி இந்தியாவில் முழுச் சந்திர கிரஹணம், மேகராஜன் மோகராஜனாக வான்மகள் மீது பரவிப் பராமல் இருந்தால் காணக் கிடைக்கும்.

தாமரை
13-06-2011, 08:40 AM
இன்று இரவு இந்தியாவில் பூர்ண சந்திர கிரஹணம் தெரியும்.

http://www.mreclipse.com/LEphoto/TLE2004Oct/image/TLE2004-139w.JPG

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=425883&postcount=24

பதினைந்தாம் தேதி 11:45 க்கு கிரஹணம் தொடங்கி, 1:40 மணிக்கு பூரண கிரஹணம் தெரியும். அதிகாலை 3:40 க்கு கிரஹணம் முடியும்.

இந்த சந்திரகிரஹணத்தைப் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

http://eclipse.gsfc.nasa.gov/LEplot/LEplot2001/LE2011Jun15T.pdf

ஆதவா
13-06-2011, 09:53 AM
அண்ணே... இன்றா, 15 அன்று இரவா? சரியா சொல்லுங்க.. ஏன்னா, அலாரம் வைக்கணும்!! :)

தாமரை
15-06-2011, 04:27 AM
இன்னிக்கு இன்றிரவு என்று சொன்னால் சரியாக இருக்கும். ஹி ஹி ஹி 15 ஆம் தேதி இரவு என்று சொன்னாலும் சரியா இருக்கும்.

இன்னொரு இரகசியம் சொல்றேன் கேளுங்க. நாளைக்கு அண்ணியைப் பொண்ணு பார்த்த நாளு.. :redface::redface::redface: ஒரு வேளை அந்த நிலாவில் வெட்கத்தில் சிவந்த முகம் தெரியுதான்னு பார்க்கோணும்.

அப்புறம் இன்னொரு விஷேசம். செவ்வாய் கிரகத்தை மார்ஸ் ஆர்பிடர் என்ற செயற்கை கோள் எடுத்த படங்கள் தற்போது உலவுகின்றன. அதில் புகழ்பெற்ற ஒரு படம் இது...


காந்தி உருவம் போல செவ்வாய் கிரகம்

http://i.i.com.com/cnwk.1d/i/tim/2011/06/14/gandhisface_244x183.jpg

ரோம் : செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சிக்காக ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற விண்கலத்தை ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி கடந்த 2003&ம் ஆண்டு அனுப்பியது. 2 நிலைகளாக இது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ‘மார்ஸ் ஆர்பிட்டர்’ என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தை சுற்றிவருகிறது. ‘பீகிள்2’ என்ற தானியங்கி வாகனம், செவ்வாய் கிரகத்தில் இறங்கி ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியாக அது தரையிறங்காததால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது ஆர்பிட்டர் 2012 ம் ஆண்டு டிசம்பர் வரை சிறப்பாக இயங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாயை பல்வேறு கோணங்களில் அது படமெடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த போட்டோக்களை இத்தாலியை சேர்ந்த வானியல் ஆர்வலர் மாட்யூ லேனியோ என்பவர் ஆய்வு செய்தார். செவ்வாய் கிரகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி, மகாத்மா காந்தியின் உருவம் போலவே இருக்கிறது. மொட்டை தலை, பெரிய காது, அடர்ந்த மீசை, பொக்கை வாய் சிரிப்பு என அச்சு அசலாக காந்தி போலவே இருக்கிறது அந்த இடம் என்று அவர் கூறியுள்ளார்.

தகவல் வெளியிடப்பட்ட இடங்கள்

http://www.cbsnews.com/stories/2011/06/14/scitech/main20071013.shtml

http://www.dinakaran.com/worlddetail.aspx?id=38618&id1=7

aren
15-06-2011, 04:52 AM
நானும் தினகரனில் இந்த செய்தியைப் படித்தேன். ஆச்சரியமாக இருக்கிறது.

Ravee
15-06-2011, 07:05 AM
இன்னிக்கு இன்றிரவு என்று சொன்னால் சரியாக இருக்கும். ஹி ஹி ஹி 15 ஆம் தேதி இரவு என்று சொன்னாலும் சரியா இருக்கும்.

இன்னொரு இரகசியம் சொல்றேன் கேளுங்க. நாளைக்கு அண்ணியைப் பொண்ணு பார்த்த நாளு.. :redface::redface::redface: ஒரு வேளை அந்த நிலாவில் வெட்கத்தில் சிவந்த முகம் தெரியுதான்னு பார்க்கோணும்.




அண்ணி வெட்கத்தில் முகம் சிவந்தது அதுதான் கடைசி தடவைன்னு கேள்வி பட்டேன் ............ உண்மையா அண்ணா ...... :fragend005:

aren
15-06-2011, 07:39 AM
அண்ணி வெட்கத்தில் முகம் சிவந்தது அதுதான் கடைசி தடவைன்னு கேள்வி பட்டேன் ............ உண்மையா அண்ணா ...... :fragend005:

உங்களுக்கு தாமரைகிட்டேயிருந்து கூடியவிரைவில் ஆப்பு இருக்குன்னு இதிலிருந்து தெரியுது.

Nivas.T
15-06-2011, 07:43 AM
அண்ணி வெட்கத்தில் முகம் சிவந்தது அதுதான் கடைசி தடவைன்னு கேள்வி பட்டேன் ............ உண்மையா அண்ணா ...... :fragend005:


உங்களுக்கு தாமரைகிட்டேயிருந்து கூடியவிரைவில் ஆப்பு இருக்குன்னு இதிலிருந்து தெரியுது.

இதுக்கு பேர்தான் சொந்த செலவில் சூன்யம் :lachen001::lachen001: