PDA

View Full Version : கொலை



ஆதவா
22-07-2009, 04:59 PM
நீண்ட நாட்களாக
அவளைக் கொல்லவேண்டுமென
சபதமிட்டிருந்தேன்

இரவெல்லாம் கரைபுரண்டோடும்
காமத்தின் நெடும்புனலால்
கனவைக் கசியவிட்டதினாலா
அல்லது
பெருத்து நீண்டிருக்கும்
ஆயுளை,
திறக்க இயலாததினாலா
என்ன காரணம் என்பது தெரியவில்லை

நன்கு தீட்டிய கொலைவாளொன்று
அவளுக்காகவே வைத்திருந்தேன்
அதன் பசி வன்மத்தில்
ஊர்ந்தவாறு இருந்தது

எடுத்துக் குத்தியதில்
சீர்த்துத் தெறித்தது இரத்தம்
உறுப்புகள் துண்டான பிறகும்
அவள் அலறவேயில்லை.

அடுத்த பக்கத்தில்
இறந்து கிடந்தது
ஒரு ஆடு.

இளசு
07-08-2009, 08:23 PM
மறைபொருள் அறியா மதியிருளில் நான்...

வெளிச்சம் தேவை ஆதவா..

ஆதவா
08-08-2009, 03:19 AM
கசந்து போன பெண்ணொருத்தி
புத்தகத்தின் ஒருபக்கம்

வன்மம் அதிகமாகிவிட்டதால்,
காகிதம் குத்தியும்
அவள் இறந்திருப்பதாகத் தோன்றவில்லை

மறுபக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த ஆடு
இறந்திருக்கிறது

கண்மூடிய காழ்ப்புணர்ச்சி
இரக்கத்தைக் கொல்கிறது!!!

இதுவே என் கருப்பொருள் அண்ணா!!

இளசு
08-08-2009, 08:21 AM
விளக்கத்திற்குப் பின் வாசிக்கையில்
கவிதை உயிர்த்தெழுந்தது மனதில்..

நன்றி ஆதவா.

கீதம்
08-08-2009, 10:53 PM
அது ஒரு தாளின் மறுபக்கம் என்பதை வாசித்த கணத்தில் புரிந்துணர இயலவில்லை.ஆதவா அவர்களின் விளக்கத்திற்குப் பின் அருமையாய்ப் புரிகிறது, கவிதை. பாராட்டுகள்.

சசிதரன்
09-08-2009, 11:46 AM
மிக அருமை நண்பா...:)

தாமரை
01-09-2010, 08:53 AM
பெருத்து நீண்டிருக்கும்
ஆயுளின் திறவுகோலைத்
திறக்க இயலாததினாலா
என்ன காரணம் என்பது தெரியவில்லை



எடுத்துக் குத்தியதில்
சீர்த்துத் தெறித்தது இரத்தம்
உறுப்புகள் துண்டான பிறகும்
அவள் அலறவேயில்லை.

அடுத்த பக்கத்தில்
கதறி இறந்து கிடந்தது
ஒரு ஆடு.

.

நாங்க எல்லாம் பூட்டைத்தான் திறப்போம். நீங்க வித்தியாசமா சாவியைத் திறக்க முயற்சி செய்திருக்கீங்க...

கதறி என்ற ஒரு வார்த்தை அதிகமா இருக்குதுன்னு நினைக்கிறேன் சரிபாருங்க.

ஆதவா
01-09-2010, 09:25 AM
நாங்க எல்லாம் பூட்டைத்தான் திறப்போம். நீங்க வித்தியாசமா சாவியைத் திறக்க முயற்சி செய்திருக்கீங்க...

கதறி என்ற ஒரு வார்த்தை அதிகமா இருக்குதுன்னு நினைக்கிறேன் சரிபாருங்க.
அலறவில்லை என்ற வார்த்தையை கொடுத்திருக்கக் கூடாது. அல்லது கதறி என்ற வார்த்தையை...
சரிதான்!! கவிதையை திருத்தி விடுகிறேன்!!

இப்பொழுது சரியாக இருக்கும்

மிக்க நன்றி அண்ணா!!!

தாமரை
01-09-2010, 09:42 AM
அலறவில்லை என்ற வார்த்தையை கொடுத்திருக்கக் கூடாது. அல்லது கதறி என்ற வார்த்தையை...
சரிதான்!! கவிதையை திருத்தி விடுகிறேன்!!

இப்பொழுது சரியாக இருக்கும்

மிக்க நன்றி அண்ணா!!!

அடுத்த பக்கம் இறந்த ஆடு இருப்பது உனக்கு திருப்பும் வரை தெரியாது.. அதனால் கதறி என்ற வார்த்தையை எடுத்து விடுவது உத்தமம்.

எழுதும் போது மனம் அலறும். எழுதுகோல் முனகும். காகிதமோ குத்துபட்டு அலறவியலாமல் சாகும். ஹி ஹி