PDA

View Full Version : தாயுள்ளம்meera
21-07-2009, 05:24 PM
தாயுள்ளம்

மன்ற மக்களே இது நான் முயற்சிக்கும் முதல் கதை முயற்சி. எப்போதும் உங்கள் விமர்சனம் என்னை ஓர் நல்ல சிற்பமாய் செதுக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
கொஞ்சும் கடல் அலைகளை பிரிய மனமின்றி பிரியும் ஆதவன் மஞ்சள் கதிர்களை வீசி வானின் தூரம் கடக்க தீவிரமாம் முயன்று கொண்டிருக்க,

செவ்வந்தி இரவு முழுவது அழுது வீங்கிய கண்களோடு, அந்த அகதிகள் முகாமைவிட்டு வெளியே நடந்தாள்.

தன் வேதனையையும் மீறி உறவென்றிருந்த “தன் தந்தை இந்த அதி காலை வேளையில் எங்கு சென்றிருப்பார்” யோசனையுடன் நடக்கலானாள்.

காலை நேர கடல் இதமாய் தொட்டாலும், செவ்வந்தியின் இதயம் தொட முடியாமல் தோற்று திரும்பியது. கடல் மணலில் யாரோ படுத்திருப்பதாய் தோன்ற கால்கள் ஓட்டமெடுத்தன.அருகே சென்று பார்த்த போது தன் தந்தை மயங்கி விழுந்துகிடப்பதை கண்டு பதறிப்போனாள்.

தன் ஒரே சொந்தம் இழந்துவிடக்கூடாதே என்ற தவிப்பு அங்கே வலை பின்னிக்கொண்டிருந்த மீனவர்களின் உதவியோடு முகாமுக்கு அழைத்து வந்தாள்.

கண்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடிக்க நினைவுகளில் மூழ்கிப்போனாள். முல்லைதீவு பகுதியில் தன் கணவன், தந்தை, மூன்று மாத கைகுழந்தையோடு வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்க, போர் எனும் அரக்கன் குண்டாய் புகுந்து விட்டான்.

அவள் வாழ்க்கையை அழித்துவிட, தன் கணவனையும், கை குழந்தையையும் ஒரே நேரத்தில் பரிகொடுத்துவிட்ட அந்த மரண பூமியில் வாழ பிடிக்காமல் தன் தந்தையுடன் அகதியாய் இந்தியா நோக்கி பயணமான நினைவுகளை கிழித்துக்கொண்டு அந்த குழந்தையின் அழு குரல் கேட்க, அவளின் தாயுள்ளம் பதறிதுடித்து குரல் கேட்ட திசையில் கால்கள் ஓட்டமெடுத்தன.

தாயை இழந்த ஆறு மாதக்குழந்தை தன் உறவினர்களிடம் பசியால் அழுதுகொண்டிருக்க, அந்த குழந்தையை வாரி எடுத்து பாலூட்ட ஆரம்பித்தாள் செவ்வந்தி தன் குழந்தையின் மறைவை மறந்து……….

பாரதி
21-07-2009, 05:57 PM
முதல் முயற்சியிலேயே வெற்றி!

இயற்கையை வர்ணனை செய்யும் முயற்சி நன்றாகவே கைகூடி இருக்கிறது. பிறருக்கு உதவ வேண்டும் என்ற தாயுள்ளம் தன் துன்பத்தை மறந்து விடுகிறது என்பது உண்மையே!

நல்ல கருத்தை வலியுறுத்தும் உங்கள் “கத” முயற்சி நன்றாகவே வந்திருக்கிறது கதாசிரியரே.

ஆங்காங்கே இருக்கும் சில எழுத்துப்பிழைகளையும் களைந்தீர்களெனில் இன்னும் அருமையாக இருக்கும்.

வாழ்த்துகிறேன்; மேலும் படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.

meera
21-07-2009, 06:05 PM
நன்றி அண்ணா, "கதை" என்று திருத்திவிட்டேன். உங்கள் விமர்சம் எனக்கு உற்சாகம் தருகிறது. மிக்க நன்றி அண்ணா.

அறிஞர்
21-07-2009, 08:02 PM
வாழ்த்துக்கள் மீரா..
கவிஞரின் புது முயற்சி சிறப்பு.
கதை எழுதும்பொழுது.. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதலாம்...
இயற்கையாய் நடப்பவைகள் போல.... அனுதின வாழ்வில் காண்பவைகளை சிறிது சிறிதாக எழுதுங்கள்.

கதை உலகில் நல்ல வெற்றிகளை காண வாழ்த்துக்கள்.

நேசம்
22-07-2009, 04:22 AM
தனது துயரத்தை மறக்க செய்யும் சக்தி படைத்ததாக இருக்கிறது தாயுள்ளம்.தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துகள் சKஒதரி

ஆதவா
22-07-2009, 04:22 AM
முன்குறிப்பு: கவனமாகப் படிக்கவும்

தாயன்பு எத்தகைய உயர்வுடையது என்பதை இந்த குறுங்கதையின் மூலம் சொல்ல வந்திருக்கிறீர்கள். வெற்றியும் கூட/// இன்னும் சிறுகதைக்கான கட்டமைப்பு முழுமையாக்கப்பெறவில்லை. நீங்கள் கவிஞர் அல்லவா. அதனால் அடுத்தடுத்த கதைகளில் நன்கு தெரிந்து கொள்வீர்கள்.

முதல் கதையிலேயே என் பெயரை பெருமையாக (?) சேர்த்தமைக்கு நன்றி!!! :D

(மீராவின்) பின்குறிப்பு : கதை படித்து ஆதவா ஆஸ்பத்திரியில் அனுமதி

எச்சரிக்கை : கதைபடித்த பிறகு திட்டுபவர்கள் தனியே தண்டிக்கப்படுவார்கள் :D :D

கா.ரமேஷ்
22-07-2009, 05:27 AM
கதையின் கரு அருமை... அதுதான் தாயுள்ளம்...

கொஞ்சம் கூடுதலாக சிரத்தை எடுங்கள் முழுமை பெரும்... வாழ்த்துக்கள்...

தாமரை
23-07-2009, 10:30 AM
இதுவும் தாயுள்ளம்தானோ?

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=425422#post425422

சிவா.ஜி
23-07-2009, 01:56 PM
யாரோ பெற்ற பிள்ளைக்கு அமுதூட்டி தன், அவல நிலையிலும் தன்னால் வள்ளலாக முடியுமென நிரூபித்த செவ்வந்தியின் தாயுள்ளம் போற்றுதற்குரியது.

முதல் முயற்சி அழகா இருக்கிறது. இன்னும் போகப்போக கதை எழுதுவதன் சூட்சுமத்தை புரிந்துகொள்வீர்கள் தங்கையே.

சின்னதாய் ஒரு திருப்பம், கடைசியில் கனமாய் ஒன்று, நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் கலை எல்லாமே அறிந்துகொள்வீர்கள்.

வாழ்த்துகள் கதாசிரியரே.

அமரன்
24-07-2009, 01:10 PM
கடலிலிருந்து அந்திப்போழுதைக் கண்டுகளித்தடவன் செவ்வந்தியால் கடலிலிருந்து வைகறையைக் கண்டேன்.

கவிஞரின் கதை என்பதால் உரிமையோடு வந்தமர்ந்து விட்டது கவித்துவம்.

இதே போல் எத்தனையோ கறைபடிந்த வைகறைகள் எங்கள் தேசத்தில். அதே அவலம் அடைக்கலம் புகுந்த இடத்திலும்..

விழிக்கடையோரம் திரண்டு உடையும் துளி இதயத்தை ஈரமாக்கி பாரமாக்கி விடுகிறது.

நாங்களும் குழந்தைகள்தான்.. பசியெடுத்துத்தான் அழுகிறோம்.. தாய்மடி திறந்து எங்களைப் பசியாற்றுங்கள்.. பசியாறிய பிறகு என்னவேனும் செய்யுங்கள். இப்படித்தான் கேக்கிறது அங்கிருந்து வரும் காற்று தழுவுகையில்..

முதல் முயற்சிக்குப் பாராட்டுகள். தொடர்ந்து சுரக்கட்டும் கதையூற்று.

meera
24-07-2009, 04:27 PM
கதையின் கரு அருமை... அதுதான் தாயுள்ளம்...

கொஞ்சம் கூடுதலாக சிரத்தை எடுங்கள் முழுமை பெரும்... வாழ்த்துக்கள்...

முன்குறிப்பு: கவனமாகப் படிக்கவும்

தாயன்பு எத்தகைய உயர்வுடையது என்பதை இந்த குறுங்கதையின் மூலம் சொல்ல வந்திருக்கிறீர்கள். வெற்றியும் கூட/// இன்னும் சிறுகதைக்கான கட்டமைப்பு முழுமையாக்கப்பெறவில்லை. நீங்கள் கவிஞர் அல்லவா. அதனால் அடுத்தடுத்த கதைகளில் நன்கு தெரிந்து கொள்வீர்கள்.

முதல் கதையிலேயே என் பெயரை பெருமையாக (?) சேர்த்தமைக்கு நன்றி!!! :D
தனது துயரத்தை மறக்க செய்யும் சக்தி படைத்ததாக இருக்கிறது தாயுள்ளம்.தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துகள் சKஒதரி

வாழ்த்துக்கள் மீரா..
கவிஞரின் புது முயற்சி சிறப்பு.
கதை எழுதும்பொழுது.. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதலாம்...
இயற்கையாய் நடப்பவைகள் போல.... அனுதின வாழ்வில் காண்பவைகளை சிறிது சிறிதாக எழுதுங்கள்.

கதை உலகில் நல்ல வெற்றிகளை காண வாழ்த்துக்கள்.அறிஞர் சார், நேசம், ஆதவா மற்றும் ரமேஷ் உங்கள் விமர்சனத்தால் உள்ளம் மகிழ்ந்தேன். வாழ்த்துக்கும் , விமர்சனத்திற்க்கும் நன்றி.

meera
24-07-2009, 04:36 PM
இதுவும் தாயுள்ளம்தானோ?

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=425422#post425422

அண்ணா, ஓர் உயிரை கொன்று புசிக்கும் கொடூர குணம் கொண்ட மிருகமாய் இருந்தாலும் ஓர் பச்சிலம் குட்டியை புசிக்கவில்லை இதும் தாயுள்ளம் தானே!!

meera
24-07-2009, 04:39 PM
யாரோ பெற்ற பிள்ளைக்கு அமுதூட்டி தன், அவல நிலையிலும் தன்னால் வள்ளலாக முடியுமென நிரூபித்த செவ்வந்தியின் தாயுள்ளம் போற்றுதற்குரியது.

முதல் முயற்சி அழகா இருக்கிறது. இன்னும் போகப்போக கதை எழுதுவதன் சூட்சுமத்தை புரிந்துகொள்வீர்கள் தங்கையே.

சின்னதாய் ஒரு திருப்பம், கடைசியில் கனமாய் ஒன்று, நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் கலை எல்லாமே அறிந்துகொள்வீர்கள்.

வாழ்த்துகள் கதாசிரியரே.

சிவா அண்ணா உங்கள் விமர்சனம் எனக்கு ஒரு புது தெம்பை தந்திருக்கிறது. இனி முயற்சிக்கும் கதைகளில் கவனம் செலுத்துகிறேன். மிக்க நன்றி அண்ணா.

meera
24-07-2009, 04:44 PM
கடலிலிருந்து அந்திப்போழுதைக் கண்டுகளித்தடவன் செவ்வந்தியால் கடலிலிருந்து வைகறையைக் கண்டேன்.

கவிஞரின் கதை என்பதால் உரிமையோடு வந்தமர்ந்து விட்டது கவித்துவம்.

இதே போல் எத்தனையோ கறைபடிந்த வைகறைகள் எங்கள் தேசத்தில். அதே அவலம் அடைக்கலம் புகுந்த இடத்திலும்..

விழிக்கடையோரம் திரண்டு உடையும் துளி இதயத்தை ஈரமாக்கி பாரமாக்கி விடுகிறது.

நாங்களும் குழந்தைகள்தான்.. பசியெடுத்துத்தான் அழுகிறோம்.. தாய்மடி திறந்து எங்களைப் பசியாற்றுங்கள்.. பசியாறிய பிறகு என்னவேனும் செய்யுங்கள். இப்படித்தான் கேக்கிறது அங்கிருந்து வரும் காற்று தழுவுகையில்..

முதல் முயற்சிக்குப் பாராட்டுகள். தொடர்ந்து சுரக்கட்டும் கதையூற்று.

அமரன் அண்ணா, உங்கள் விமர்சனம் என் விழிகளில் நீர் வரவைக்கிறது. என்ன சொல்ல வேண்டும் தெரியவில்லை. வருந்துகிறேன்.

தாமரை
25-07-2009, 08:37 AM
அண்ணா, ஓர் உயிரை கொன்று புசிக்கும் கொடூர குணம் கொண்ட மிருகமாய் இருந்தாலும் ஓர் பச்சிலம் குட்டியை புசிக்கவில்லை இதும் தாயுள்ளம் தானே!!

இன்னும் கொஞ்சம் ஆழமாக..

தன் பசிக்காக ஒரு குரங்கைக் கொன்றது இந்த வேங்கை. ஆனால் அந்தப் பச்சிளங் குழந்தையைக் கண்டவுடன்,... அதைப் பாதுகாக்க்கும் நினைப்பில் தன் பசியைக் கூட மறந்தது...

ஆறறறிவு கொண்டவர்களாய் மார்தட்டிக் கொள்ளும் நாம்?
:icon_rollout::icon_rollout:

செல்வா
27-07-2009, 01:28 PM
முதலில் எனது இனிய வாழ்த்துக்கள் அக்கா.

ஜாம்பவான்கள் எல்லோரும் கருத்து சொல்லியாச்சி புதுசா நான் என்னத்த சொல்ல.

சமையல் சூப்பர்...

சமைத்ததை பக்குவமாய் பரிமாறினால் போதும்.

வாழ்த்துக்கள்...

இளசு
29-07-2009, 08:04 PM
வாழ்த்துகள் தங்கைக்கு...

முதல் முயற்சி வெற்றியே!

சம்பவக்கோர்வையை இன்னும் கொஞ்சம் விவரித்திருந்தால்,
கடைசி முத்தாய்ப்பின் வீச்சு இன்னும் ஆழமாகி இருக்குமோ?

எழுதும் ஆர்வம் பீறிடும்போதெல்லாம், சட்டென தொடர்ந்து எழுதம்மா..

மன்றம் நம் சிலேட்டுப் பலகை...
எழுத எழுத இன்னும் மெருகு ஏறும்..

வாழ்த்துகள்..

சாலைஜெயராமன்
30-07-2009, 06:18 PM
இதமும் மென்மையும் மனிதனை மகானாக்கும் சக்தி படைத்தவை. தாயின் மடி பூலோக சொர்க்கம். பெண்ணாய்ப் பிறந்தவள் பெரும் பேறு பெற்றவள். கதையின் கருவாய் நான் கண்டவை இவை.

பிறர் இன்னல் களைய முற்படும் எவரும் தாய்மைப் பேறைப் பரிசாய் பெற்றவர்களே. கவிதையின் சாயலில் கதை நடை. முதல் முயற்சி முழுமை அடைய வாழ்த்துக்கள் மகளே