PDA

View Full Version : வெளிநாட்டவர்கள்:

umakarthick
20-07-2009, 01:20 PM
மூணு இட்லி 5 ரூபா... 1 தோசை 4 ரூபா... பால் சப்போட்டா... சின்ன ஆப்பிள் விற்கும் வியாபாரிகளின் சத்ததுக்கு இடையில்,
தாம்பரம் பஸ் ஸ்டாண்ல, கடந்த வாரம் ஒரு நாள் நிற்கும் போது அந்த காட்சியை பாட்த்தனே...

புட்டம் வரை தொங்கும் லக்கேஜ் பேக் கையில் 200 பக்க நாவல்... ஆண் பிள்ளை போடும் பனியன் என ஒரு பொண்ணு, குடுமி வளர்த்து நம்ம சரவணன் சபேசன் மாதிரி ஒரு ஆம்பிள்ளையும் அங்கே நின்னு மகாபலிபுரத்துக்கு வழி கேட்டுட்டு இருந்தாங்க.. இருவருமே வெளி நாட்டவர்கள்... அப்போ அங்கே வந்து நின்ன கல்பாக்கம் போற ஒரு பிரைவேட் பஸ் கண்டக்டர் பஸ்ல இருந்து இறங்கி மெனக்கெட்டு ... Where going னு கேட்டான் அவனுக்கு தெரிஞ்ச இங்லீஸ்ல... அதுக்கு அந்த பொண்ணு மகாபலிபுரம்னு சொல்லவும்.. அவன் இந்த பஸ் அங்கேதான் போகுதுனு ஏற சொன்னான்.. இதை நான் எப்படியாவது தடுத்தே ஆவனும்..அய்யோ இவ என்ன சோப்பு வாங்க போறானு தெரியலயே .. முகப்பரு வருமே.. னு நடந்து பக்கத்துல போறதுக்குள்ளார இன்னொருத்தர் அவங்க கிட்ட போய் கெத்தா இங்லீஸ்ல பேசி அவன் ஏமாத்துறான் ஏறாதிங்கன்னு சொல்லிட்டாரு ( அவரு ரீஸண்டா ஆன் சைட் போய்ட்டு வந்திருப்பாரு போல.. காதுல இயர் ஃபோன்.. ஜிகு ஜிகு சட்டை ..கொடுமை டா)

அந்த கண்டக்டர் பஸ் கிளம்பவும் ஏறிட்டு வாய்ல போட்டிருந்த பாக்கை துப்பிட்டு சிரிச்சுட்டே பஸ்ல போய்ட்டான்

இதை பார்த்த உடனே எனக்கு அமீர் கான் வர விளம்பரம் நியாபகம் வந்தது..
வெளிநாட்டவர்கள் நம்ம விருந்தாளிகள்... நம்ம வருமானமே அவங்க கிட்ட இருந்துதான் வருதுனு.. இதை பத்தி நண்பன் பேசினப்போ.. அவன் சொன்னான்..இது கேவலமான விளம்பரம்..அவிங்க எல்லாரும் நம்ம நாட்டை கொள்ளையடிச்சுதான் இப்படி ஆகியிருக்காங்க.. அவங்களை நம்பி நம்ம வருமானம்னு சொல்லி நம்ம நாட்டை அவமானப் படுத்தறாங்கன்னு..

நானும் யோசிச்சு பார்த்தேன் .. இப்போ சொல்லுங்க நீங்க என்ன சொல்றீங்க?

பாலகன்
20-07-2009, 01:56 PM
அங்கே வெளிநாட்டவருக்கு பதில் நம்நாட்டவர் (வடஇந்தியர்) நின்னுக்கிட்டு இருந்தாலும் அந்த பிரைவேட் பஸ்காரன் அப்படி தான் சொல்லியிருப்பான். அதுக்காக வடஇந்தியர்களும் ஒருகாலத்தில் நம்மை கொள்ளை அடிச்சவனுங்க தான் இப்பவும் அடிச்சிக்கிட்டு இருக்காங்க அப்படின்னு ஒரு தப்பை நியாயப்படுத்த கூடாது.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

அது எந்த நாட்டவராயினும் சரியான தகவல் தான் தரவேன்டும் என்பது என் கருத்து

பரஞ்சோதி
21-07-2009, 08:02 AM
வேதனையான விசயம் தான்.

சுற்றுலா பயணிகள் நம் நாட்டின் விருந்தாளிகள், அவர்களுக்கு உதவுவதே நம் முதற்கடமை என்பதை பலருக்கும் புரிய வைக்க வேண்டும்.

ஒருவரை நாம் ஏமாற்றினால் அவர் மூலமாக பலர் இந்தியா வருவதை தவிர்த்து விடுவார்கள்.

வெளிநாட்டவர் பலரும் நம் நாட்டை தவறாக பேச, நம் நாட்டில் இருக்கும் பிச்சைக்காரர்களும், ஏமாற்று பேர்வழிகளும் தான்.

இது மாற வேண்டும்.

aren
21-07-2009, 11:55 AM
கல்பாக்கம் போகிற மகாப*லிபுரம் போய் பின்னர் கல்பாக்கம் போகலாமே. ஏன் முடியாது.

பாரதி
21-07-2009, 03:23 PM
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் என்பதை மறக்கலாமோ..?
அதே போல் ஆரெனின் சந்தேகமும் கவனத்திற்குரியதே.

அறிஞர்
21-07-2009, 04:27 PM
கல்பாக்கத்திற்கு பைக்கில் மகாபலிபுரம் வழியாக தான் நான் செல்வேன்....

வெளிநாட்டவர்களுக்கு உதவுவதால்.. நம் நாட்டிற்கு தான் நல்லது.

விகடன்
23-07-2009, 01:59 PM
யாராக இருந்தாலும் முதலில் உதவ வேண்டும். வெளிநாட்டவர்களாக இருந்தால் அந்நியச் செலவாணி கிடைக்கும். இந்தியாவில் ஏமாற்றுவோர் இல்லை என்ற நம்பிக்கை வளர்ந்தால் வரும் சுற்றிலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் இந்தியாவில் இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் ஓரளவேனும் அற்றுப் போகும்.

மொத்தத்தில் வெளிநாட்டவர்களிற்கு உதவுங்கள் (நான் அந்தப்பக்கம் வந்தாலும் கூட... :D ).

umakarthick
27-07-2009, 02:08 PM
கல்பாக்கம் போகிற மகாப*லிபுரம் போய் பின்னர் கல்பாக்கம் போகலாமே. ஏன் முடியாது.

நன்றி நண்பரே தாங்கள் சொன்னபடியும் இருக்கலாம்..ஆனால் மறுபடி இன்னொரு பஸ் மாற வேண்டுமே..அதை சில நல்ல கண்டக்டர்கள் தான் சொல்லுவார்கள்

umakarthick
27-07-2009, 02:08 PM
யாராக இருந்தாலும் முதலில் உதவ வேண்டும். வெளிநாட்டவர்களாக இருந்தால் அந்நியச் செலவாணி கிடைக்கும். இந்தியாவில் ஏமாற்றுவோர் இல்லை என்ற நம்பிக்கை வளர்ந்தால் வரும் சுற்றிலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் இந்தியாவில் இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் ஓரளவேனும் அற்றுப் போகும்.

மொத்தத்தில் வெளிநாட்டவர்களிற்கு உதவுங்கள் (நான் அந்தப்பக்கம் வந்தாலும் கூட... :D ).

நன்று :)

umakarthick
27-07-2009, 02:09 PM
வேதனையான விசயம் தான்.

சுற்றுலா பயணிகள் நம் நாட்டின் விருந்தாளிகள், அவர்களுக்கு உதவுவதே நம் முதற்கடமை என்பதை பலருக்கும் புரிய வைக்க வேண்டும்.

ஒருவரை நாம் ஏமாற்றினால் அவர் மூலமாக பலர் இந்தியா வருவதை தவிர்த்து விடுவார்கள்.

வெளிநாட்டவர் பலரும் நம் நாட்டை தவறாக பேச, நம் நாட்டில் இருக்கும் பிச்சைக்காரர்களும், ஏமாற்று பேர்வழிகளும் தான்.

இது மாற வேண்டும்.

சரியா சொன்னீங்க

மன்மதன்
29-07-2009, 02:10 PM
அங்கே வெளிநாட்டவருக்கு பதில் நம்நாட்டவர் (வடஇந்தியர்) நின்னுக்கிட்டு இருந்தாலும் அந்த பிரைவேட் பஸ்காரன் அப்படி தான் சொல்லியிருப்பான்.

சரியா சொன்னீங்க.. அங்கே நாமளே நின்றிருந்தாலும் ஏத்திதான் செல்வாங்க.. தனியார் கண்டக்டர்களுக்கு டிக்கெட் கவுண்டு முக்கியம்..

umakarthick
07-08-2009, 08:03 AM
சரியா சொன்னீங்க.. அங்கே நாமளே நின்றிருந்தாலும் ஏத்திதான் செல்வாங்க.. தனியார் கண்டக்டர்களுக்கு டிக்கெட் கவுண்டு முக்கியம்..

அதே அதே